Thursday

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை தொடரில் இன்று தூக்கமின்மை

இன்று பெரும்பாலானோர் தூக்கமின்மையால் அவதி படுகின்றனர் .

தூக்கமின்மை எதனால் இதன் காரணம் என்ன ? நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிய ஆய்வு கட்டுரை .

  • தூக்கமின்மையின் காரணம்
ஒரு மனிதன் படுத்த உடனே அவனுக்கு தூக்கம் வந்ததென்றால் மறுநாள் அவனுக்கு சோர்வு இருக்காது , மனதில் ஒரு புதிய மகிழ்ச்சி காணப்படும் .
இதன் முக்கிய சில காரணங்களை எழுதியிருக்கிறேன் .முதலாவதாக மனதில் ஏற்படும் மாற்றங்கள் ,அந்த நாளில் நம்மில் ஏற்படும் அதிக படியான மகிழ்ச்சி ,நம்மில் ஏற்படும் அதிகபடியான கவலைகள் ,நாளை மிக பெரிய பிரச்னையை நாம் சந்திக்க இருக்கிறோம் எப்படி என்னால் இதை சந்திக்க முடியும் என்ற கவலை ,நாளை நான் ஒரு புதிய மாற்றத்தை எதிர் நோக்கி இருக்கிறேன் இது என் வாழ்வின் திருப்பு முனை சூரியன் விரைவில் வந்தால் தானே என்னால் சாதிக்க முடியும் எப்போது காலை வரும் என்ற ஏக்கம் ,உடலில் ஏற்படும் மாற்றங்கள் இவைகளினால் தூக்கம் தடை படுகிறது .

  • தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள்
தூக்கமின்மையால் இன்றைய வேலை தடைபடுகிறது மனதில் ஒரு சோர்வு
மகிழ்ச்சியின்மை ,தலை சுற்றுதல் , இரத்த அழுத்தம் அதிகமாதல் ,மற்றவர்களை பார்த்தல் எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது .இவற்றால் நமக்கு தானே இழப்பு
நம் நினைவாற்றல் கூட நின்று விடுகிறது .எனவே இதை நிறுத்தியாக வேண்டும் தூக்கம் நம் வாசலை தட்டியாக வேண்டும் .குறைந்த பட்சம் ஆறு மணி நேரமாவது தூங்கவேண்டும் .நல்லா எட்டு மணி நேரம் தூங்கிறவங்க இதை பற்றி கவலை படவேண்டாம் .

  • எப்படி தூக்கத்தை வர வைப்பது
தூக்கத்தை வர வைப்பது ரெம்ப சுலபம் நீங்கள் செய்ய வேண்டியது இரவில் தூங்கும் முன்னால் நல்ல அறிவு பூர்வமான புத்தகங்களை படிக்க வேண்டும் .
மனதில் எதை பற்றிய கவலையும் இருக்க கூடாது .உதாரணமாக நமக்கு தோல்வி ஏற்பட்டு விட்டது ,நமக்கு இழப்பு ஏற்பட்டு விட்டது ,நமக்கு வேண்டியவர்களை மரணம் விழுங்கிவிட்டது நீங்கள் எதற்கும் கவலை படாதிற்கள் நீங்கள் இருக்கிறீர்கள் ,ஆம் நான் இருக்கிறேன் எனக்கு தன்னம்பிக்கை இருக்கிறது என்னால் முடியும் , என்னை எதுவும் அசைக்காது
என் இழப்புகள் எனக்கு இழப்பு அல்ல ஏனென்றால் நான் இருக்கிறேன் என்ற எண்ணம் உங்கழுக்கு வர வேண்டும் .நேற்று என்பது முடிந்து விட்டது ,
நாளை என்பது எப்படியோ இன்று நான் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் .
உங்களால் முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு உதவுங்கள் . உழைத்து வாழ பழகுங்கள் வாழ்க்கை உங்கள் கையில் .

இந்த கட்டுரையானது பல தன்னம்பிக்கையற்ற மனிதர்களை பார்த்து

அவர்களுடன் பழகி அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டி மற்றவர்களும்தன்னம்பிக்கையோடு வாழவேண்டும் என்பதற்காய் இதை பதிவு செய்கிறேன் .
உங்கள் கருத்துகள் வரவேற்க படுகிறது .

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா .......





0 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook