Sunday

கார்த்திகை பூ தமிழ் ஈழ தேசிய மலர்

மாலத்தீவில் நான் தங்கியிருந்த அறையிலிருந்து வெளியே செல்லலாம் என கிளம்பிய நேரத்தில் திடீரென என்னுடைய கண்ணில் பட்டது அழகிய மலர். இந்த மலர் என்னை கவர்ந்தது உடனடியாக என்னுடைய கைபேசியில் படம் எடுத்து கொண்டேன் . படம் எடுத்து கொண்ட பின்னர் எனக்கு ஒரே குழப்பம் இந்த பூவை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்பது தான். ஆனால் நான் இதற்கு முன்னர் நேரடியாக இந்த பூவை பார்த்ததில்லை. ஆனால் பார்த்த நியாபகம். பின்னர் நினைவுக்கு வந்தது இணையத்தில் பார்த்ததாக. பின்னர் தான் தெரிந்தது இது தான் தமிழ் ஈழ தேசிய மலர் என்று.


அந்த மலரை பார்த்ததும் தமிழ் ஈழத்தில் இன ஒடுக்குமுறைக்கு எதிராக, இன விடுதலைக்காக களத்தில் மடிந்த ஆயிரகணக்கான மாவீரர்களை நினைவு கூறும் மாவீரர் நாள் அடுத்த மாதம் என்பதும் நினைவில் வந்தது. ஈழ தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நினைவு கூற வேண்டிய நாள் தான் நவம்பர் 27 .

நினைவு கூர்ந்து அதை ஒரு தமிழர்களின் எழுச்சி நாளாக கடை பிடிக்க வேண்டும் . எந்த இலட்சியத்திற்காக ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் மடிந்தார்களோ அந்த லட்சியத்தை அடைய நாம் உறுதி கூற வேண்டும்.

1 கருத்துக்கள்:

Anonymous said...

நினைவுகள் இன்றும் வலிக்கிறது நண்பரே!

Post a Comment

Send your Status to your Facebook