Monday

எதனால் இப்படி ?

கிழிந்த சட்டையும் எக்கி போன வயிறுமாய் நான்கு அடி உயரம் கூட எட்டாமல் ஆனால் வயது மட்டும் இருபதை தாண்டிய ஒரு வாலிபன் இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் மைதானத்தின் எல்லையில் நின்றிருந்தான் . கண்களில் சாதாரணமாக இருக்கும் கருமை தாண்டி பார்த்தல் இது தான் சிவப்பா என கேட்க தூண்டும் . கைகளில் ஒரு சோர்வு , கால்கள் இவன் கட்டுபாட்டை தாண்டி நடனமாடி கொண்டிருக்கிறது . உள்ளே நாளைய ராணுவ வீரன் என்ற கனவுகளோடு தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். சிலர் தேர்வுக்கு பங்கு பெற சென்று கொண்டிருக்கிறார்கள் இவன் நிற்கும் இடத்தை கடந்து . இவனை கடக்கும் போது முறைத்தே பார்த்தான் அவர்களை. உடலுக்குள் இனி ஏதாவது தண்ணீர் இருக்குமா ? என்று தெரியாத அளவுக்கு உடல் முழுவதும் வழிந்த வியர்வை அவன் அந்த ஆடையையும் நனைத்தது ................
இந்த நேரம் அனைவருமே தான்தேர்ச்சி பெறுவேனா என்ற மன ஓட்டத்தில் இருப்பார்கள் . இவனுக்கு என்ன ? இவனின் உயரத்தை பார்த்தல் இவன் அதில் கலந்து கொள்ள தகுதியில்லை . ஏன்? ..........ஏன்? இத்தனை கலக்கம் இவனுக்குள் . எதனால் இப்படி ?...............................
இன்று எந்த மனிதனாக இருந்தாலும் சில நேரங்களில் தன்னுடைய தகுதியை நினைத்து வருத்த படுகிறார்கள் . நான் அவனை போல் வர முடியவில்லையே. அவனுக்கு தெரிந்தது எனக்கு தெரியவில்லையே . அவன் என்னை விட உயர்ந்தவனாக இருக்கிறானே . நான் எப்படி அவனுடன் சரி சமமாக இருப்பது என்ற தாழ்வு மனப்பான்மை நம்மை சில நேரங்களில் புரட்டி போடுகிறது . என்னால் முடியுமா என்ற கேள்விகள் நம் மனதில் எழும் போது முயற்சிப்போம் என்பதை விட்டு விட்டு முடியாது என ஒதுங்கி போவது உண்டு .தாழ்வு மனப்பான்மையை நம் மனதிலிருந்து மாற்றுவது மிகவும் இன்றியமையான ஓன்று ............
தாழ்வு மனப்பான்மை எந்த சூழ்நிலைகளில் வருகிறது என்பதை தெரிந்து கொள்வோம் . நாம் சிறுவர்களாக இருந்தாலும் சரி நாம் பெரியவர்களாக இருந்தாலும் சரி ,நாம் ஏழையாக இருந்தாலும் சரி நாம் பணக்காரர்களாக இருந்தாலும் சரி, நாம் படித்தவர்களாக இருந்தாலும் சரி நாம் படிக்காதவர்களாக இருந்தாலும் சரி எந்த வித்தியாசமும் இல்லாமல் சில நேரங்களில் நம்மில் தோன்றும் . நம்மை விட பேச்சு திறமை கூடியவர்களுடன் பழகும் போதும் , நம்மை விட உடையலங்காரம் செய்திருப்பவர்களுடன் பயணிக்கும் போதும் , மற்றவர்கள் செய்யும் கேலி கிண்டல்களை பொறுத்துக்கொள்ள முடியாத போதும், நம் திறமை நமக்கு தெரியாத போதும் , நம்மில் நமக்கு நம்பிக்கை குறையும் போதும் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது .
தாழ்வு மனப்பான்மை இருந்தால் நமக்கு என்ன என்று ஒதுங்கி போக முடியாது . ஏனெனில் இந்த தாழ்வுமனபான்மை சில நேரங்களில் நமக்கு வரவேண்டிய வாய்ப்புகள் மற்றவர்கள் கைக்கு செல்ல நேரும். நமது லட்சியங்களுக்கு தடையாகவும் இருக்கும் . மற்றவர்களின் மீது கோபம் அதிகரிக்கும் . திறமை தாழ்ந்து போகும் . மற்றவர்களின் முன்னால் சென்று நிற்க முடியாத சூழ்நிலைகள் ஏற்படும் . நமது திறமையை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்படும் . மற்றவர்களிடம் நம்மை பற்றிய தவறான எண்ணங்கள் உருவாகும் . உலகத்தின் மீதான நம்பக தன்மை நமக்கு ஏற்படும் .எதற்கு நாம் வாழ்கிறோம் என்ற நிலை கூட சில நேரம் ஏற்படும்.
தாழ்வுமனபான்மை ஏற்படாமல் இருக்க என்ன வழி ?........... உங்களுக்கு நீங்கள் எவ்வளவு மதிப்பெண் கொடுத்திருக்கிறீர்கள் ? மற்றவர்களையும் உங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது எப்படி பார்க்கிறீர்கள் ? இதற்கு உங்களின் பதில் உங்களுக்கு சாதகமாக இருக்கும் படியாக அமைத்து கொள்ளுங்கள் . நமக்கு தகுதி இருக்கிறதா என்ற கேள்வி அந்த பணியை வெற்றியாக்கும் முயற்சிக்கு மட்டும் பயன் படுத்துங்கள் . எந்த செயல் துவங்கும் முன்னாலும் மற்றவர்களை ஒப்பிடுவதை விட்டு விட்டு உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் . (அவன் வெற்றி பெற்றுவிடுவானா அல்லது அவன் தோற்று விடுவானா என்பதை விட்டு விட்டு நான் வெற்றி பெற வேண்டும் என முயன்று பாருங்கள் ) அவர்கள் ஏதாவது தவறாக நினைத்து விடுவார்களோ என பேச வந்ததை பேசாமல் விடாதீர்கள் பேசாமல் இருந்தால் தான் தவறாக நினைப்பார்கள் . தன்னம்பிக்கை உனக்கிருந்தால் தவிடுபொடியாக்கும் தாழ்வு மனப்பான்மையை ......

2 கருத்துக்கள்:

RAMASUBRAMANIA SHARMA said...

EXCELLENT ARTICLE....BY CONSTANT PRACTICE, WE MAY IMPROVE OUR SELF CONFIDENCE IN DUE COURSE OF TIME....REQUIRES LITTLE EXPERIENCE....

Suresh Kumar said...

உங்கள் வருகைக்கு நன்றி

Post a Comment

Send your Status to your Facebook