இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label பேய். Show all posts

Saturday
பேயும் நானும்
நடு இரவு வேளை ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. ஆங்காங்கே கடைகளில் வெளியே தொங்கவிடப்பட்ட சீரோ வால்ட் பலப் வெளிச்சம். தெரு விளக்குகள் வெளிச்சம் ஆங்காங்கே கொஞ்சமாக . நகரின் மைய பகுதியாக இருந்தாலும் சாலைகளில் எந்தவொரு அசைவுகளும் இல்லை .
நடுஇரவு தாண்டி விட்டது வீட்டிற்கும் செல்ல வேண்டும். காலை ஐந்து மணிக்கு மேல் தான் ஊருக்கு செல்லும் பஸ் வரும் அதுவரை என்ன செய்வது என்று நினைத்து கொண்டே நானும் இன்னும் இரண்டு நண்பர்களாக பேருந்து நிலையம் நோக்கி நடந்தோம்.
மேல்நிலை கல்வி கற்று கொண்டிருந்த நேரம். நாகர் கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் ஆண்டு தோறும் இதோ உங்கள் ராஜா என்று இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றி நாடகம் நடத்தப்படும் . நாங்கள் மூவரும் அதில் நாடக நடிகர்கள். நாடகம் ஒவ்வெரு ஆண்டும் இயேசு சிலுவையில் அறையப்பட்ட அந்த வெள்ளி கிழமை முதல் ஈஸ்டர் பண்டிகை அன்று நிறைவு பெரும் . ஒரு மாதத்திற்கு முன்பே அதற்கான பயிற்சிகள் நடைபெறும் . இதே போல் ஒரு நாள் அந்த பயிற்சி முடிய 12 மணியாகிவிட்டது. அங்கே தூங்குவதற்கு வசதி செய்ய பட்டது . இருந்தாலும் நாங்கள் தூங்காமல் பஸ் நிலையம் சென்று விடலாம் என நினைத்து நடந்தோம்.
நடக்கும் போதே பேசிக்கொண்டே சென்றோம் . அப்போது பேய் பற்றிய கதைகள் பேசினோம் . ராத்திரி பன்னிரண்டு மணிக்கு முத்து ஆத்தங்கரை வழியாக நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் . தெரு விளக்குகள் எதுவும் இல்லை . நிலா வெளிச்சம் ஓரளவிற்கு இருந்தது . திடீரென்று சிறுநீர் கழிக்க ஆத்தங்கரை ஓரமாக சென்றிருக்கிறார். அவர் சிறுநீர் கழித்து கொண்டிருந்த போது பக்கத்தில் இன்னொருவர் சிறுநீர் கழித்து கொண்டிருக்கிறார். கொஞ்சம் திரும்பி பார்க்கும் போது யாரோ ஒருவர் நிற்பது போல் தெரிகிறது . நாம் நடந்து வரும் போது முன்னாடியோ பின்னாடியோ யாரும் வந்தது போல் இல்லையே என மனசுக்குள் நினைத்து மீண்டும் திரும்பி பார்க்கும் போது பக்கத்தில் யாரும் இல்லை .
பாதியில் சிறுநீர் கழித்து விட்டு வீட்டை நோக்கி ஓடியிருக்கிறார் . ஓடி வந்த வழியில் அந்த மனிதர் மீண்டும் முத்துவின் முன் தோன்றி முத்துவை தூக்கி ஆற்றிலே வீசியிருக்கிறார். இந்த கதையை சொல்லி முடிந்ததும் மனதிற்குள் ஏதோ ஒரு பதட்டம் . பஸ் நிலையமும் வந்து விட்டது .
மனதில் முத்து பற்றிய கதை ஒரு புறம் ஓடி கொண்டிருக்க பஸ் நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது . நாங்கள் வந்ததோ டவுன் பஸ் நிலையம் கடைகள் எதுவும் திறக்க படவில்லை. எங்களை தவிர வேறு யாரும் இல்லை . நான் பஸ்நிலையத்தில் இருக்கும் சிறுநீர் கழிக்கும் இடத்திற்கு சிறு நீர் கழிக்க சென்றேன். பக்கத்தில் இன்னொருவர் சிறு நீர் கழித்து கொண்டிருந்தார் . சிறுநீர் கழிக்க தயாராகி கொண்டிருந்த போது அவர் என்னிடம் ஏதோ கேட்டார் . என்னுடைய உடல் முழுவதும் வியர்த்து. அவர் என்ன கேட்டார் என்பது எனக்கு சரியாக கேட்கவில்லை ( கேட்க மனம் இடம் கொடுக்கவில்லை ) அப்படியே மெதுவாக வியர்த்த உடம்போடு சிறுநீர் கழிக்காமலே வெளியே வந்து விட்டேன் .
நண்பர்கள் பக்கத்தில் சென்ற போது முகத்தை துடைத்து கொண்டு அங்கே யாரோ நிற்பது போல் இருக்கிறது யார் என்று பாப்போம் என அவர்களையும் அழைத்து கொண்டு மீண்டும் சென்றேன் . அந்த நபர் வெளியே வந்து மதுரைக்கு பஸ் வருமா என எங்களிடம் கேட்டார் . அந்த கணம் பயம் நீங்கி அது இந்த பஸ் நிலையத்தில் வராது என்று அவருக்கு செல்ல வேண்டிய பாதையை காட்டி கொடுத்தோம் .
Monday
பேய், பிசாசு உடம்பினுள் புகுவது எப்படி?
சமீபத்தில் நண்பர் ஒருவரை பற்றி விசாரித்த போது இன்னொருவர் சொன்னார் அவனுக்கு பேய் பிடிச்சிருக்கு அதனால அங்க கோயிலிலே இருக்கான். என்னடா இது பல நாட்களா பேய் கதைகளை கேட்டிருக்கிறேன் சினிமாக்களில் படித்திருக்கிறேன். ஆனால் நண்பனுக்கு பேய் வந்தது பற்றி அறிந்ததும் ஒரு வித ஆச்சரியமும் அதை பார்க்க வேண்டிய ஆவலும் எனக்கு ஏற்பட்டது . கிராமங்களில் பேய் அடிச்சி முத்து இறந்துட்டான் சண்முகம் இறந்துட்டான் என சொல்வது கேட்டிருக்கேன்.
வெள்ளை சேலை கட்டீட்டு பேய் வந்துடா நான் இன்னைக்கு பார்த்தேன் என சொல்வதையும் கேட்டிருக்கிறேன். பிசாசு கல் எடுத்து ஏறிந்ததுடா என சொல்வதையும் கேட்டிருக்கிறேன். எனக்கும் பல நாட்களாக எப்படியாவது ஒரு நாள் பிசாசை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது ஆனால் என் கண்களுக்கு இதுவரை தெரியவில்லை.

இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர். இதில் பொதுவாக இறந்து போனவர்கள் தான் வருகின்றனர். வேறு பல பிசாசுகளும் வருகின்றன.
இன்று குடும்ப பெண்களையும் இளகிய மனது கொண்ட ஆண்களையும்இந்த பிசாசுகள் ஆட்டி படைக்கிறது அவர்களின் வாழ்கையே சீரழியும்அளவிற்கு கொண்டு விடுகிறது.
வாழ்க்கையில் தன்னம்பிக்கை இழந்த மக்கள், கணவனின் பொறுப்பின்மை தனத்தால் செல்லும் மனைவிமார்கள், உழைக்க தெரியாத ஆண்கள், தவறான பாதையில் செல்லுபவர்கள் இப்படி பட்ட ஆண்களும் பெண்களும் தான் பெரிதும் ஏமாறுகிறார்கள். இவர்களுக்கு தான் பேயும் பிசாசும் வருகிறது. இவர்கள் தங்கள் உடம்பிற்குள் வந்து புகுந்து விடுகிறது என நம்புகிறார்கள், இப்படி தான் அந்த நண்பனை பார்க்க வேண்டும் என நானும் இன்னொரு நண்பனுமாக சென்றிருந்தோம். என்னடா ஆச்சு என விசாரித்தேன் . ஆமாடா என்னுடைய உடம்பில ஒருத்தன் இருக்கான்டா. நேற்றைக்கு பாஸ்டர் ஜெபம் பண்ணி போயிடிச்சி . வயிற்றுக்குள்ள இருந்தான் வாந்தி எடுத்த பிறகு தான் போச்சு அப்படி சொன்னான் . சரி போயிடிச்சி தானே அப்பா வீட்டுக்கு வரலாமில்ல என வினவினேன் , இல்ல இன்னும் ஒரு வாரத்திற்கு வருமாம் அதனால இங்கேயே இருக்க சொல்லியிருக்கார். அப்படி சொன்ன நண்பன் ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியது இன்னும் வரவில்லை.
எனக்கு இது என்னவோ வித்தியாசமாக தான் இருந்தது. பேய் ஆடியிருக்கிறதா கேள்வி பட்டிருக்கிறேன் வாந்தியில வெளிய வந்தத இப்ப தான் கேள்வி படுறேன் . நான் அந்த கோவிலில தான் அவன சந்தித்தேன். திரும்ப திரும்ப கேட்டேன் டேய் என்னடா சொல்ற? உண்மை தாண்டா நம்புடா எப்படிடா நம்புறது அப்படி கேட்டுட்டு வந்துட்டேன் .
இவன் மட்டுமில்லாது இவன போல பல ஆண்களும் பெண்களும் இப்படி போலி மத வியாபாரிகளிடம் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கின்றனர். இது மனிதர்களுக்கு ஏற்படும் ஒரு வித மன நோய் யார் மதங்களை முட்டாள் தனமாகவும் பயத்தின் பேராலும் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு இந்த நிலை ஏற்படுகிறது . இன்று மதம் மிக பெரிய தொழிலாகி விட்டது . யார் புதிய மாடல் கார் பைக் வாங்குகிறார்களோ இல்லையோ ஆனால் மத ஊழியக்காரர்கள் வாங்குகிறார்கள்.
புனித நூல்களில் இருக்கும் பிசாசு என்பது எது என்பது என்ற தெளிவின்மை கூட இதற்கு ஒரு காரணமாகி போகிறது. ஒரு மனிதனை யார் கெட்ட பாதைக்கு அழைத்து செல்கிறார்களோ அவர்கள் தான் அந்த மனிதனுக்கு பிசாசு இது தான் புனித நூலின் சாராம்சம். ஆனால் அதை விட்டு விட்டு தன உடம்பிற்குள் ஏதோ புகுந்தது போன்று எண்ணுகிறார்கள். அப்படி தான் இந்த ஊழிய காரர்களும் சொல்லி கொடுக்கிறார்கள். உண்மையில் அவர்கள் உடம்பில் அல்ல பிரச்னை மனதில் தான் பிரச்னை . சிந்திக்கும் அறிவு இல்லாமையாலும் வேத நூல்களை சரியாக பொருள் பட வாசிக்காமலும் இருப்பதால் தான் இந்த நிலை.
இப்படி மனதளவில் பாதிக்க பட்டவர்கள் வரும் போது இந்த போலி வியாபாரிகள் அவர்கள் மனதில் மீண்டும் பேய் பிசாசு போன்றவைகளை புகுத்தி கடவுளின் பெயரால் இதை நான் சரிபடுத்துகிறேன் என்று சொல்லி அந்த நபரின் சொத்துக்கள் முழுவதையும் அபகரித்து விடுகிறார்கள். இந்த போலிகளிடமிருந்தும் பேய் பிசாசுகளிடமிருந்தும் மக்கள் விடுதலை பெற வேண்டுமெனில் தன்னம்பிக்கை வளர வேண்டும். பேய் பிசாசு என்பது இல்லாத ஓன்று என்ற புரிதல் வேண்டும் . நல்லது எது கேட்டது எது என்ற பகுத்தறிவு வர வேண்டும் . மத நூல்களில் இருக்கும் நல்ல செயல்களை மட்டும் பின்பற்றி யதார்த்தத்திற்கு ஒத்து வராத செயல்களை ஒதுக்கி நல்ல வாழ்வை வாழ வேண்டும் . வீட்டிலோ மனதளவிலோ ஏதாவது பிரச்சனை ஏற்படின் நல்ல மனநல மருத்துவரை அணுகி கவுன்சிலிங் எடுத்து கொண்டால் எல்லாம் குணமாகி விடும் . நம் மன தைரியமின்மை மற்றவர்கள் நம்மை ஏமாற்ற ஏதுவாகிறது .

- உண்மையில் பிசாசு ஓன்று இருக்கிறதா?

Subscribe to:
Posts (Atom)