நாளைக்கு வாக்கு எண்ணிக்கை என்றால் இன்று முதலே முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடி அந்த இரவு தூக்கமே வராது. அதே போல தான் 19 தேதி என்ன முடிவு வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து விட்டு , இப்போது 19 தேதியும் வந்து விட்டது . ஆனால் முடிவு மட்டும் எப்போ வரும் எப்போ வரும் என்ற எதிர்பார்ப்பு தான் கூடி கொண்டிருக்கிறது.
இன்றைய முடிவுக்காக ஆளுங்கட்சி முதல் எதிர்கட்சிகள் வரை எனைவருமே எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்கள் . இவ்வளவு நேரமும் காத்திருந்து முடிவு தெரிய இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்ற பின்னர் தான் இந்த பதிவை எழுதுகிறேன் .
யார் யாரோ கற்பனையில் என்னெல்லாமோ அவர்கள் பங்கிற்கு எழுதினாலும் யாராலும் கணிக்க முடியாத அளவிற்கு எதிர் பார்ப்பை கூட்டியிருக்கிறது . பத்திரிகைகள் தொலைகாட்சிகள் முடிவை பற்றிய செய்திக்காக காத்திருக்கிறது . எப்போது முடிவு வரும் .............. காத்திருக்கிறோம் நல்ல முடிவாக வரட்டும்.
இன்றைய முடிவு தெரிந்தால் தேர்தல் முடிவையும் தெரிந்து விடலாம் என்ற ஆதங்கம் தான் .
2 கருத்துக்கள்:
எதை சொல்கிறீர்கள் என்பது புரியவில்லையே?
அதிமுக கூட்டணி நிலவரமா?
அதன் பேச்சு வார்த்தைகள் தான் நேற்றும் இன்றும் விடிய விடிய நடக்கிறதே? ( பகல்-ல தூங்கப்போயிடுவாங்க)
கிடைக்கும் தொகுதிகள் எட்டு / ஏழு என்றாலும் அதிமுக கூட்டணியில் மதிமுக இருப்பதே அனைவர்க்கும் நல்லது
இல்லாவிடில் சுப்ரமணிய சாமி நிலை வைகோ விற்கு வந்து விடும்
Post a Comment