இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label தியாகி முத்துக்குமார். Show all posts

Saturday
முள் செடியை வீழ்த்தும் ஆயுதம் வைகோ! படபடக்கிறார் முத்துக்குமாரின் தந்தை- ஜூனியர் விகடன்-20.3.11
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
தியாகி முத்துக்குமார்,
மதிமுக,
வைகோ
எழுதிய நேரம்
Saturday, March 19, 2011
வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழி தள்ளாடும் நிலை என்பார்களே... வைகோவின் அரசியல் வாழ்க்கையில் இத்தகைய துயரங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன!
கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக அ.தி.மு.க-வின் கூட்டணியில் சிறிதளவும் மனக்கசப்பின்றி, ஆளும் கட்சியின் அத்தனை நெருக்கடிகளையும் சமாளித்து நின்ற வைகோ, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அல்லாட்டத்துக்கு ஆளாகினார். கடந்த தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்ட ம.தி.மு.க-வுக்கு இந்த முறை மிகக் குறைவான இடங்களே பேசப்பட... மாநிலம் முழுக்க இருக்கும் வைகோவின் ஆதரவாளர்கள் முகம் வாடிப்போனார்கள்.
நன்றி ஜூனியர் விகடன்
முத்துக்குமார் வீர வணக்க நிகழ்வுகள் எமது ஊரில் மிகவும் எழுச்சியோடு நடை பெற்றது
எழுதியது
Suresh Kumar
Labels:
தியாகி முத்துக்குமார்,
தீக்குளிப்பு,
வீரவணக்கம்
எழுதிய நேரம்
Saturday, January 30, 2010
ஓர் ஆண்டுக்கு முன்னர் ஈழத்திலே சிங்கள வெறியர்களால் தமிழினம் அழிக்க பட்ட போது கொதித்தெழுந்து தன்னுடைய தேக்கு மர தேகத்தை தீக்கு தின்ன கொடுத்த மாவீரன் முத்துக்குமார் உட்பட 19 வீர தியாகிகளுக்கு வீர வணக்க நிகழ்வுகள் மிகவும் எழுச்சியோடு நடை பெற்றது.
குமரி மாவட்டம் தக்கலை ஒன்றியத்தில் தக்கலை பேருந்து நிலையத்திற்கு முன்புறம் தக்கலை ஒன்றிய மதிமுக செயலாளர் அழகை J.P . சிங் தலைமையில் முத்துக்குமார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தமிழ் ஈழம் மலரும் வரை போராட உறுதி எடுத்து கொண்டனர். ஏராளமான மதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழ் இன ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் .
இதை தொடர்ந்து மதிமுக இளைஞர் அணி சார்பாக குமார புரம் சந்திப்பில் முத்துக்குமார் படத்திற்கு இளைஞர் அணியினர் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் வீரவணக்க நிகழ்வு பொதுக்கூட்டம் நடை பெற்றது . இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் குமார் தலைமை தாங்கினார் . கூட்ட்டத்திற்கு தக்கலை ஒன்றிய செயலாளர் , குருந்தன் கொடு ஒன்றிய செயலார் , குளச்சல் நகர செயலாளர் மற்றும் நிவாகிகள் கலந்து கொண்டனர் . தலைமை கழக பேச்சாளர் சிலம்பை டென்னிசன் சிறப்புரையாற்றினார் .
அரசியல் தலைவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
தமிழ் ஈழம்,
தியாகி முத்துக்குமார்,
மாணவர்கள்
எழுதிய நேரம்
Saturday, January 31, 2009
தமிழீழ மக்களுக்காக தன் இன்னுயிரை அர்ப்பணம் செய்த அன்புச் சகோதரன் முத்துக்குமரன் அவர்களின் இறுதி ஆசையை நிறைவேற்ற துடிக்கும் மாணவர்களை சில அரசியல்வாதிகள் தமது அரசியல் அபிலாசைகளிற்காக பயமுறுத்துவதாக தெரியவருகிறது.
தனது உடலை வைத்து போராட்டத்தை கூர்மைப்படுத்தும் படி மாணவர்களுக்கு அன்பு வேண்டுகோள் விட்டுச் சென்ற தன் தோழமையின் பணி தொடர துடிக்கும் மாணவர்களை அந்த பணியை தொடராது தடுப்பதற்காக இந்த சதி திட்டம் நடாத்தப்படுகிறது.
உலகிலேயே மாணவ சக்தியால் சாதிக்க முடியாதது ஒன்றுமே கிடையாது. அந்த மாணவ சக்தி கிளர்ச்சி கொண்டால் தமிழீழத்தில் பாதி உரிமை கிடைத்துவிடும். இவ்வளவு காலமாக தமிழீழம் என்றால் என்ன? ஏன் அந்த மக்கள் போராடுகிறார்கள்? என்று தெரியாத மக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அது எப்படி என்றால் தமிழக மக்களுக்கு தமிழீழத்தின் உண்மை செய்திகள் செல்வதில்லை என்பது தான் உண்மை. அரசியல்வாதிகள் தாம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்காக மக்களையும் மாணவர்களையும் பயன்படுத்துகிறார்களே தவிர மக்களுக்காக என்பது அரைக்கரை வாசியாகவே இருக்கிறது.
அந்தவகையிலே இன்று நம் முத்துக்குமாரின் வீரமரணம் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்று தமிழீழப் பிரச்சனையை உணர்த்திக் கொண்டிருக்கிறது. அந்த வீரமரணத்தை அறிந்து மக்கள் கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அவரின் தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள். தமிழீழ தற்கொலைப்படையான கரும்புலிப்படைக்கு நிகரான ஒரு மரணத்தை இன்று தமிழகத்தில் நிகழ்த்தியிருக்கிறார் முத்துக்குமரன்.
அரசியல் வாதிகளே! மாணவ சக்தியை பயன்படுத்துங்கள். இந்த சந்தர்ப்பத்தை நீங்கள் தவறவிட்டீர்கள் என்றால் நீங்கள் தமிழினத்திற்கு செய்யும் துரோகமாக மாணவர்களாலும் அவர்களால் உருவாகும் எதிர்கால சமூகத்தாலும் சித்தரிக்கப்படுவீர்கள்.
கட்சி, அரசியல் என்ற பாகுபாட்டை தூக்கியெறிந்து நாம் எல்லோரும் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒன்றுபடுங்கள். முத்துக்குமாரின் அஞ்சலி நடக்கும் நிகழ்விடத்தில் மாணவர்கள் கூறுகிறார்கள் தன் உடலை வைத்து போராட்டத்தை கூர்மைப்படுத்த எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
அவரின் இறுதி ஆசையை நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்குள்ளதால் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் தலையிடாமல் மாணவர்களாகிய எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
அதற்கு குறுக்கிட்ட அரசியல்வாதிகள் "நீங்களெல்லாம் என்ன செய்து கிழித்தீர்கள் ஈழப்பிரச்சனை பற்றி பேசுவதற்கு" என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதனால் மாணவர்கள் செய்வதறியாது திகைத்து போய் இருக்கிறார்கள்.
என்ன தோன்றுகின்றது என்றால் அரசியலால் சாதிக்க கூடியவற்றை அரசியலால் சாதியுங்கள். மாணவர்களால் சாதிக்க கூடியவற்றை மாணவர்களால் சாதியுங்கள். எல்லோருடைய நோக்கமும் தமிழீழம் கிடைக்க வேண்டும்.
தமிழீழ மக்கள் நிம்மதியுடன் வாழவேண்டும் என்றிருந்தால் போட்டி போடாதீர்கள். நெல்லை எந்த இயந்திரத்தில் குத்தினோம் என்கிறது நமக்கு முக்கியம் கிடையாது நமக்கு தேவை பயன் தரக்கூடிய அரிசி.
ஆகவே, தமிழர்களாகிய நாம் நமக்குள்ளேயே பிரிவினையை வளர்க்காமல் அன்பு சகோதரன் முத்துக்குமரனின் கனவு நனவாக பாடுபடுவோம்.
நன்றி : தமிழ் வின்
Read More

தியாகி முத்துக்குமாருக்கு அஞ்சலி:குமரி மாவட்ட விசைபட்கு மீனவர்கள் வேலைநிறுத்தம்
எழுதியது
Suresh Kumar
Labels:
தமிழகம்,
தமிழ் ஈழம்,
தியாகி முத்துக்குமார்,
முக்கிய செய்தி
எழுதிய நேரம்
Saturday, January 31, 2009
ஈழ தமிழர்களுக்காக தன் உடலை தீயால் கொளுத்தி மாய்த்து கொண்ட தியாகி தூத்துக்குடி முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படவும் வலியுறுத்தி கன்யா குமரி சின்ன முட்டத்தை சேர்ந்த விசை படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர் .
வேலை நிறுத்தம் காரணமாக இங்குள்ள350 க்கும் மேற்பட்ட விசை படுகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வில்லை .
இன்று தியாகி முத்துக்குமாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கிறது . இதில் பெரும்பாலான தமிழின உணர்வாளர்களும் , மாணவ, மாணவிகளும் ,அரசியல் கட்சி தலைவர்களும் , இளைஞர்கள் , வழக்கறிஞ்சர்கள்பெரியோர்கள் , சிறியோர்கள் என பெரும்பாலான தமிழ் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .
முத்துக்குமார் தன் உடலில் கொளுத்திய தீயானது இன்று ஒவ்வெரு தமிழனின் மனதிலும் கொழுந்து விட்டு எரிகிறது . தமிழகம் இன்று ஓன்று சேர்ந்து இந்தியாவையும் இலங்கையையும் எதிர்த்து வருகிறது .
இலங்கை பாதுக்காப்பு இயக்கத்தின் சார்பாக பெப்ருவரி 4 ஆம் தேதி ( இலங்கையின் சுதந்திர தினம் ) தமிழகத்தில் முழு வேலை நிறுத்தம் அறிவிக்க பட்டுள்ளது . இதில் அனைத்து தமிழர்களும் கலந்து கொண்டு நம் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்த வேண்டிய நேரம் .
வெல்லட்டும் தமிழ் ஈழம். முத்துக்குமாரின் எண்ணம் ஈடேறட்டும்.

Subscribe to:
Posts (Atom)