• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label வைகோ. Show all posts
Showing posts with label வைகோ. Show all posts

Saturday

தமிழகம் சிறையிலிருந்து விடுபடுமா ?

தமிழகத்தில் இரண்டு முதல்வர்கள், இருவருமே சிறைக்குள் இருக்கிறார்கள் என்பது போன்று விமர்சனங்கள்,  கிண்டல்கள்  சமூக உடகங்களில் வந்த வண்ணம் உள்ளன.  

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற  நாள் முதலே தமிழக அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. நான்கு ஆண்டுகளும் நூறு கோடி ருபாய் அபராதமாக தண்டனை விதிக்க பட்ட காரணத்தால் அந்த நேரம் முதலே சட்ட மன்ற உறுப்பினர் , முதல்வர் பதவியை ஜெயலலிதா துறக்க வேண்டிய கட்டயாம் ஏற்பட்டது.  

இதையடுத்து புதிய முதல்வர் பொறுப்பேற்க வேண்டிய சூழல் உருவானது. இந்நிலையில் அம்மாவின் நம்பிக்கையான அடிமை தமிழக முதல்வரானார். சினிமாவை மிஞ்சும் அழுகை காட்சிகளோடு பதவியேற்ற முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் தாடியோடு வளம் வந்து கொண்டிருக்கின்றன.  

ஆனால் இன்றும் தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாகி உள்ளது. அரசு நிர்வாகம் செயலிழந்து காணப்படுகிறது. தமிழக முதல்வர்   பதவி பறி போன ஜெயலலிதாவை ஜெயா டிவி மூலமாக மக்களின் முதல்வர் என்று அழைக்க துவங்கினர். அதிமுக அடிமைகள் மட்டுமல்லாது சில்லறை கட்சிகளாக இருக்கும் வேல்முருகன் போன்றோர்கள் கூட இந்த அளவிற்கு ஒரு ஊழல் குற்றவாளிக்கு ஆதரவாக செயல் படுவது அனைவர் முகத்தையும் சுளிக்க செய்தது..  

பன்னீர் செல்வம் முதல்வரானதும் அம்மாவின் ஆணைகினங்க பால் விலை உயர்த்த பட்டது . இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதிமுக சார்பில் வைகோ தலைமையில் ஆவின்  பால் விலையுயர்வை கண்டித்தும் , அப்பாவி தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்ததை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் வைகோ பேசும் போது  "தமிழகத்தில் இரண்டு முதல்வர்கள்; உள்ளனர். ஒருவர் நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்டு  தற்காலிக ஜாமீனில் வீட்டு சிறையில் உள்ளார் . இன்னொருவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிறையில் இருக்கிறார் " என்றார்..  

வைகோவின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் சிறையிலிருந்து விடுபடுமா ? 

Read More

Thursday

மாற்றம் விரும்பிய மக்களுக்கு ஏமாற்றம் கொடுத்த ஜெயா

18 ஆம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் ம.தி.மு.க-வின் கொடியை வைகோ ஏற்றிய ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சந்திப்பு இது...

''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து மே 13-ம் தேதியுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இந்த ஓர் ஆண்டு காலத்தை எப்படி மதிப்பிடுவீர்கள்?''

''மாற்றம் விரும்பிய மக்களுக்கு ஏமாற்றத்தையே ஜெயலலிதா தந்து இருக்கிறார் என்று, அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாவது மாதமே சொன்னேன். 'ஜெயலலிதா திருந்திவிட்டார்’ என்று சொல்லி வாக்குக் கேட்டவர்கள் அத்தனை பேர் முகத்திலும் கரியைப் பூசிவிட்டார் ஜெயலலிதா.

பால் விலையை ஏற்றிவிட்டார். பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டார். மின்சாரம் கொடுக்கத் திட்டமிடாமல் மின் கட்டணத்தை மட்டும் எகிறவைத்துவிட்டார். மளிகைப் பொருட்கள் அனைத்தின் விலையும் ஏறிவிட்டன. யாரெல்லாம் ஜெயலலிதாவை ஆட்சிக்குக் கொண்டுவர வாக்குஅளித்தார்களோ, அவர்கள் அனைவரின் பாக்கெட்டில் இருந்தும் பணத்தைப் பகிரங்கமாக அரசாங்கம் எடுத்துவிட்டது. ஏழை, நடுத்தர மக்கள் இதுபற்றிக் கோபப்படுவார்களே என்கிற பயமே ஜெயலலிதாவுக்கு இல்லை. 'இவ்வளவு கட்டணத்தை உயர்த்தியதற்குப் பிறகும் நான்தான் சங்கரன்கோவிலில் வெற்றி பெறுவேன்’ என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் பகிரங்கமாகச் சொன்னார். பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற மமதைதான் இதற்குக் காரணம். திருமங்கலம் ஃபார்முலாவைக் கண்டுபிடித்த கருணாநிதியின் பண பலம்தான் அவரை பாதாளத் துக்குத் தள்ளிவிட்டது என்பதை ஜெயலலிதா உணர வேண்டும்.''

'' 'நான் என்ன தவறு செய்வேன் என்று எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் காத்திருக்கின்றன’ என்கிறாரே ஜெயலலிதா?''

''பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பெயரால் அமைந்த நூற்றாண்டு நூலகத்தை முடக்க நினைத்தது சரியா? செம்மொழி நூலகத்தைப் பகிரங்கமாகவே அப்புறப்படுத்தியதை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்? சமச்சீர்க் கல்வியை முடக்குவதற்காக எத்தனை வக்கீல்களை வைத்து ஜெயலலிதா வாதாடினார்?

தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்திருக்குமானால், கடந்த ஆட்சி மீது விசாரணை நடத்தலாம். அதற்காக மக்களின் வரிப் பணத்தால் கட்டப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான கட்டடத்தை கவனிப்பார் இல்லாமல் போடு வேன் என்பது பாசிச அணுகுமுறை. கடந்த ஆட்சி செய்ததை எல்லாம் மாற்றுவேன் என்று அடுத்து வரும் ஆட்சி முடிவு எடுக்குமானால், ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தும் கேலிக்குரியவையாகி சவக்குழிக்குள் தள்ளப்படும்.''

''ஓர் ஆண்டு காலத்தில் நல்லதே நடக்கவில்லை என்கிறீர்களா?''

''பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்று தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வை வெளிப்படுத்தியது பாராட்டத்தகுந்தது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு சதி செய்ததும், அதற்கு மத்திய காங்கிரஸ் அரசு வாய் மூடி மௌனியாக இருந்தபோது, அறிக்கை வெளியிட்டு தமிழ்நாட்டு உரிமைக்காக ஜெயலலிதா நின்றதை வரவேற்கிறோம். தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் என்கிற பெயரால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படுகிறபோது, தைரியமாக அதனை எதிர்த்து உறுதியாக ஜெயலலிதா நிற்பது கவனிக்கத் தக்கது.''

''இந்த ஓர் ஆண்டு காலப் படிப்பினைகளின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு நீங்கள் ஆலோசனை ஏதேனும் சொல்ல முடியுமா?''

''மூன்று விஷயங்களை ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

ஜெயலலிதாவின் அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும். அரசியல்தலைவர் களால், மக்கள் பிரதிநிதிகளால், பாதிக்கப் பட்ட மக்களால் எளிதில் பார்க்க முடியாத மனிதராக அவர் இருக்கிறார். இப்படி நடந்துகொள்வது மன்னர் ஆட்சிக் காலத் தின் எச்சம். தெருத் தெருவாகச் சென்று மக்களிடம் ஓட்டு போடுங்கள் என்று கேட்டு வாக்கு வாங்கும் மக்கள் ஆட்சிக் காலத்தில், அனைத்துத் தலைவர்களும் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தப் பட்டபோது தமிழகத்தின் எத்தனையோ குடும்பங்கள் அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று பிரார்த்தித்தன. அலெக்ஸின் அப்பாவும் அலெக்ஸ் மனைவியின் அப்பா வும் தலைமைச் செயலகத்துக்குச் சென்று முதல்வரைப் பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டபோது கிடைக்கவில்லை. அவர்களை தமிழக முதல்வர் சந்திப்பது என்பது, அந்தக் குடும்பத்தின் பின்னால் மொத்தத் தமிழ்நாடும் இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு சமிக்ஞை. அதன் பிறகு, பிரதமருக்குக் கடிதம் எழுதினார் முதல்வர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களை அந்தச் சூழ்நிலையில் சந்திப்பதால், அப்பாயின் மென்ட் இல்லாமலேயே அவர்களைப் பார்க்க அனுமதிப்பதால் முதல்வர் குறைந்து விட மாட்டார். அவருடைய செல்வாக்கு உயரத்தான் செய்யும்.

இரண்டாவது... தமிழ்நாடு முழுவதும் கண்மாய், குளங்களில் மணல் கொள்ளை பகிரங்கமாக ஆளும் கட்சியினரின் ஆசீர்வாதத்துடன் பலமாக நடக்கிறது. ஆளும் கட்சியினருக்கு இன்று வருவாய் ஈட்டும் முக்கியமான தொழில்... மணல் திருட்டுதான். பிரதான ஆற்றுப் படுகைகள் மட்டும் அல்லாமல், சிற்றாறுகள், காட்டாறுகளைத் தேடிக் கண்டுபிடித்து மணல் அள்ளுகிறார்கள். தமிழ்நாட்டின் வளத்தை பட்டப் பகலில் சுரண்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதைத் தடுக்காவிட்டால், தமிழகமே பாலைவனமாகிவிடும்.

மூன்றாவது... சாராயக் கடைகள் மூலமாக வருமானம் அதிகமாவதை ஓர் அரசாங்கம் சாதனையாகச் சொல்வது கேவலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் குற்ற நடவடிக்கைகள் பெருகிப்போய், பண்பாட்டுச் சீர்கேடுகள் அதிகமானதற்கு டாஸ்மாக் கடைகள்தான் காரணம். ஜெயலலிதாவும் கருணாநிதியும் சேர்ந்து தமிழ்ச் சமுதாயத்துக்குச் செய்த பெருங்கேடு இது. இனி மதுக் கடைகளைப் புதிதாகத் திறக்கக் கூடாது; ஏற்கெனவே உள்ள கடைகளைப் படிப்படியாக மூட வேண்டும். எலைட் பார் வரவே கூடாது. தமிழ்நாட்டு ஆண்களின் கல்லீரலைக் கெடுத்த கழகங்கள் என்று வருங்கால சமுதாயம் இவர்கள் இருவரையும் சபிக்கும்!''

''ஈழப் பிரச்னைக்கு வருவோம். மீண்டும் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) தொடங்கி உள்ளாரே கருணாநிதி?''

''கூச்சம் இல்லாமல் பொய்கள் சொல்வதும் வெட்கம் இல்லாமல் வேடிக்கை காட்டுவதும் கலைஞர் கருணாநிதிக்குக் கைவந்த கலை. வசனம் எழுதி வாழ்க்கையைத் தொடங்கியவர் அதே வசனங்கள் இன்னமும் கை கொடுக்கும் என்று நினைக்கிறார். 80-களின் தொடக்கக் காலத்தில் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் எல்லாம் 'ஈழம்’ என்ற சொல்லை விதைத்த 'டெசோ’ அமைப்பின் கழுத்தை நெரித்துக் கொன்றவரே கருணாநிதிதானே! 24 ஆண்டுகளுக்கு முன் அவராலேயே கொன்று புதைக்கப்பட்ட உடலை மீட்டெடுத்து... பாடம் பண்ணி... படம் காட்ட வருகிறார். இது டெசோ அல்ல. வெறும் ஷோ!

யாழ்க் கோட்டையில் புலிக் கொடி பறந்தபோது வேடிக்கை பார்த்த அவர்... வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முக்கால் நிலப் பரப்பில் நிர்வாகத்தைத் தமிழீழ அரசாங்கம் நிர்வகித்தபோது கண்டுகொள்ளாமல் இருந்த அவர்... தரைப் படை, கப்பல் படை, விமானப் படை மூன்றும் பிரபாகரனுக்கு இருந்தபோது வயிற்றெரிச்சல் பட்ட இவர்... ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் களம் நின்ற காலத்தில் கண்டுகொள்ளாதவர்... உலகம் பயன்படுத்தும் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்திப் போரிட்டு நின்ற காலத்தில் அதை ஒரு பொருட்டாகக் கருதாதவர்... இன்றைக்குத் தமிழ் ஈழம் அமையப் பாடுபடுவேன் என்று பேசுவது பச்சை சந்தர்ப்பவாதம். கருணாநிதிக்கு இது இயல்பானது.

நான்காவது கட்ட ஈழப் போர் என்பது 2006-2009 காலகட்டத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷேவால் நடத்தப்பட்ட ரத்த வெறியாட்டம். இன்றைக்கு 'டெசோ’வை உயிர்த்தெழவைத்திருக்கும் கருணாநிதி, அன்று தமிழன் சாகாமல் இருக்கச் செய்த காரியம் என்ன? தமிழ் ஈழத்துக்காகக் குரல் கொடுத்தாரா? கருணாநிதிக்கு தைரியம் இருக்குமானால், நேர்மை இருக்குமானால், 2008 நவம்பர் மாதம் முதல் ஆட்சியைவிட்டு இறங்கியது வரை ஈழப் பிரச்னை குறித்து பேசியது, எழுதியது அனைத் தையும் பகிரங்கமாக வெளியிடட்டும். தமிழனுக்கு எதிராகப் பேசினார். தமிழீழக் கொள்கைக் குத் துரோகம் இழைத்தார். ஈழத் தமிழர்களின் காவல் அரணாக இருந்த விடுதலைப் புலிகளைப் பழித்தார். இலங்கை அரசோடு இணைந்து நாசகாரச் செயல்களுக்கு உடந்தையாக இருந்த மன்மோகன் - சோனியா கூட்டத்துக்கு ஆதரவாக இருந்தார். இந்தப் பாவத்துக்கு கருணாநிதியால் பரிகாரம் காணவே முடியாது.

தமிழர்கள், கருணாநிதியின் டெசோவை சீரியஸாக எடுத்துக்கொள்ளவே இல்லை. அவர் ஆண்டுக்கு ஒரு முறை கதை வசனம் எழுதும் படங்களைப் போலவே ஃப்ளாப் ஆகும் படங்களில் ஒன்று இது.''

''தி.மு.க-வில் ஸ்டாலின் - அழகிரி மோதல் தொடர்ந்து நடப்பதாகச் செய்திகள் வருகின்றனவே?''

''கொள்கைக் கட்சியில் விவாதங்கள் நடக்கும். குடும்பக் கட்சியில் கோஷ்டி மோதல்தானே நடக்கும்?

கருணாநிதியைப் போன்ற திறமையாளர்களைப் பார்ப்பது அரிது. அனைவரையும் ஈர்க்கக்கூடிய பேச்சு, வசீகரம் செய்யக்கூடிய எழுத்து, யாருக்கும் வாய்க்காத ஞாபக சக்தி, எவரையும் மடக்கும் சொற்சிலம்பம், ராஜதந்திரமாகக் காய்கள் நகர்த்துவதில் லாகவம், உலகத் தமிழர்கள் ஒருசேர வைத்திருக்கும் நம்பிக்கை - இத்தனையும் ஒருசேர இருந்தது கருணாநிதிக்கு. திறமையான அவருக்கு காலம் தங்கத் தாம்பாளத்தில் தலைவர், முதல்வர் என இரண்டு பதவிகளையும் ஒருசேர வழங்கியது. திறமையும் வாய்ப்பும் ஒருசேர ஒரு மனிதனுக்குக் கிடைத்தன. ஆனால், அத்தனை திறமைகளையும் சுயநலம், குடும்பப் பாசம் என்ற இரண்டின் காலடியிலும் கருணாநிதி கொண்டுபோய்ப் புதைத்துவிட்டதால் வரலாற்றின் முன் 'தமிழினக் குற்றவாளி’ என்ற பதற்றத்துடன் அவமானமாகத் தலைகுனிந்து நிற்க வேண் டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். இதைப் பார்த்து நான் சந்தோஷப்படவில்லை. பரிதாபப்படுகிறேன்.

எந்த இயக்கத்துக்காக என் இளமையின் பெரும் பகுதியை உழைப்பாக வழங்கினேனோ... எந்தத் தலைவனுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்து நின்றேனோ... அந்தத் தலைவன்... இப்படிப்பட்ட பழிச் சொல்லுக்கு ஆளாகிவிட்டாரே என்ற கவலையிலேயே பேசுகிறேன்!''

''அ.தி.மு.க., தி.மு.க. இரண்டையும் முழுமையாக நிராகரிக்கிறீர்கள். ஆனால், தமிழகத்தை இவர்கள் இருவரும் மட்டும்தானே மாறிமாறி ஆள முடிகிறது?''

''இரண்டு கட்சிகளுக்குமே வலிமையான வாக்கு வங்கி தமிழகத்தில் இருக்கிறது. இதுவே ஆட்சி அமைக்க சாதகமாக உள்ளது. அவர்களுக்கு இதுவே தைரியமும் கொடுக்கிறது. இந்த முறை தோற்றால்... அடுத்த முறை வந்துவிடுவோம் என்ற தைரியத்தில் இருக்கிறார்கள். இதனால் தவறை திருத்திக்கொள்ள முன்வருவது இல்லை.

இதைத் தமிழக மக்கள் உணர்ந்துவிட்டார்கள். தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கி வலிமை குறைந்துவருகிறது. புதிய, இளைய வாக்காளர்கள் இந்த இரண்டு கட்சிகளையும் நிராகரிக்கும் மனோபாவத்துக்கு வந்து உள்ளார்கள். மாற்றம் உடனடியாக வந்து விடும் என்று சொல்ல முடியாது. ஆனால், பல ஆண்டுகளுக்கு இது நீடிக்காது.''

''குறிப்பிட்ட அளவு செல்வாக்கு இருந்த, உங்க ளுடைய சொந்தத் தொகுதியான சங்கரன்கோவில் கூட ம.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பைத் தரவில்லையே?''

''எங்களை எதிர்த்து நின்ற மூன்று கட்சிகளுமே வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தன. ஓட்டுக்கு ஒரு பைசாவும் தர மாட்டோம் என்று சபதம் எடுத்து நாங்கள் நின்றோம். இத்தகைய சூழ்நிலையில் 21 ஆயிரம் பேர் வாக்களித்ததே வெற்றிக்குச் சமம்தான்!''


''புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நிற்பீர்களா?''

''இல்லை. பகிரங்கமாகப் பண வேட்டை நடத்தும் ஆளும் கட்சியும், அதைக் கை கட்டி வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையமும் இருக்கும் நாட்டில் இடைத் தேர்தலில் போட்டி என்பது தவறான முடிவாகிவிடும். பணத்துக்கு ஓட்டை விற்பது ஜனநாயகத்தில் விழுந்துள்ள ஓட்டை. இதை சங்கரன்கோவிலில் சரிசெய்ய முடியவில்லை. புதுக்கோட்டை மக்களாவது பணத்துக்கு விற்கும் பாவத்துக்குப் பலியாகிவிடக் கூடாது என்பதே என்னுடைய வேண்டுகோள்.''

- கை கூப்பி முடிக்கிறார் வைகோ
 
நன்றி :ஆனந்த விகடன்
Read More

Wednesday

உரிமைக்காக மதுரை நிரம்பி வருகிறது - நேரடி ரிப்போர்ட்

மதுரை காளவாசல் இதுதான் இன்றைய மதுரை மக்களின் பேச்சாக இருக்கிறது . ஆம் உரிமைக்காக மதுரை மக்களால் நிரம்பி வருகிறது . முல்லை பெரியாறு அணையை உடைக்க நினைக்கும் கேரளா அரசை கண்டித்தும் தமிழகத்திற்கு துரோகம் செய்யும் மத்திய அரசை கண்டித்தும் , முல்லை பெரியாறில் உரிமை காக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வலியுறுத்தியும் வைகோ தலைமையில் மதுரை காளவாசல் பகுதியில் பிரமாண்டமான உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது .
இங்கிலாந்து பொறியாளர் பென்னிகுயக் அவர்களால் தமிழர்களுக்காக தமிழர்களின் வியர்வையும் ரத்தமும் சிந்தி கட்ட பட்டது. 999 ஆண்டுகளுக்கு உரிமை பட்ட அணையை கேரள அரசு சதி செய்து உடைக்க முற்படுகிறது . கடந்த திமுக ஆட்சி தமிழர்களுக்கு எதிராக செயல் பட்ட காரணத்தால் தமிழர்களுக்கு சாதகமாக இருந்த நிலை இன்று கேரளாவிற்கு சாதகமாக ஆகி இருக்கிறது . 

கேரளா அரசு இந்திய இறையாண்மைக்கு எதிராக போட்ட தீர்மானத்தை ஆதரித்து மத்திய அரசும் அதே போல் ஒரு தீர்மானத்தை போட முற்படுகிறது . இந்த நிலையில் இதுவரை காலமும் முல்லை பெரியாறில் தமிழர் உரிமைக்காக போராடி வருகிற வைகோ இன்று மீண்டும் உண்ணாவிரதம் இருக்கிறார் . முன்னர் நடந்த போராட்டங்கள் போல் அல்லாமல் இன்று மிக பெரிய எழுச்சி மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது . 

மக்கள் வெள்ளம போல் திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள் . இதுவரை நேரம் வரை பதினையாயிரம் பேர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர் . பேரணி போன்று கட்சி கொடிகளை ஏந்தி வந்து கொண்டிருக்கிறார்கள் . இந்த போராட்டத்தை கொளத்தூர் மணி துவங்கி வைத்தார் . கத்தோலிக்க அமைப்புகள் இந்திய கம்முனிஸ்ட் கட்சி தலைவர்கள் விவசாய அமைப்புகள் வைகோவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அப்பாஸ் அவர்கள் முன்னிலை வகித்து வருகிறார்கள் .

Read More

Saturday

நீங்கள் தான் தமிழீழத்தின் இந்திய அம்பாசிடர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாடாளுமன்றக் கட்டடத்துக்குள், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காகவே வந்தார் வைகோ . 

நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் வந்த வைகோவைப் பார்த்த மத்திய அமைச்சர் சரத் பவார், 'எப்ப நீங்க உள்ளே வரப்போறீங்க?' என்று அரவணைத்தார். இதே மாதிரி , மத்திய அமைச்சர்கள் பலரும் தங்கள் பாசத்தைத் தெரிவிக்க ... பூரித்த மனோநிலையில் பிரதமரது அலுவலகத்துக்குள் நுழைந்தார் வைகோ!

"நான் உங்களைக் குற்றம்சாட்டிக் கடிதங்கள் கொடுப்பதற்காகவே உங்களை சந்திக்கிறேன். நீங்களும் நான் நேரம் கேட்டதும், உடனடியாக நேரம் ஒதுக்குகிறீர்கள். அதற்காக எனது நன்றிகள்!" என்று வைகோ சொல்ல ... "உங்கள் உயர்ந்த கொள்கைக்காகவே நீங்கள் என்னை சந்திக்கிறீர்கள். அதை நான் மதிப்பதால், உங்களை சந்திக்கிறேன்! என்று பதில் சொன்னாராம் பிரதமர். 

மூன்று கோரிக்கை மனுக்களை பிரதமரிடம் வைகோ கொடுத்தார். "முல்லை பெரியாறு அணையை உடைத்துவிட்டு புதிய அணை ஒன்றைக் கட்ட கேரள அரசு முயற்சித்து வருவது, தமிழக மக்களுக்கு எதிரானது. தமிழர்களுக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே, அந்த அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரள அரசு பொய் சொல்கிறது!" என்று வைகோ சொன்ன போது, அந்த அணை கட்டி ௧௦௦ ஆண்டுகள் ஆகி விட்டதே. அது பலவீனம் அடைந்து இருக்காதா?" என்று பிரதமர் கேட்டாராம். 

"௧௦௦௦ ஆண்டுகள் ஆனாலும் அந்த அணை வலுவாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு அணையை வலுப்படுத்துவதற்கான பணிகளை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தமிழகம் செய்து வருகிறது. மத்திய அரசின் நீர் வள ஆணையம் நியமித்த வல்லுநர் குழுவும், முல்லை பெரியாறு அணை வலுவாக இருப்பதாகவே சொல்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வலு இழக்கச் செய்வதற்காகவே கேரள அரசு ஒரு சட்டத்தை இயற்றி உள்ளது. சட்டத் திருத்தவும் கொண்டுவந்து உங்களுக்கு அனுப்பி உள்ளது. இப்படி ஒவ்வெரு மாநிலமும், 'அணைகள் எல்லாம் தங்களுக்குத்தான் சொந்தம்' என்று சொன்னால் என்ன ஆகும்? எங்கள் மாநில முதலமைச்சர் உங்களுக்கு இதுபற்றி விரிவாக ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறாரே.." என்று ஜெயலலிதாவின் கடிதத்தையும் வைகோ ஞாபகபடுத்தினாராம். "இவை அனைத்துமே எனக்கு தெரியும். நான் இதில் கவனம் செலுத்துகிறேன்!" என்றாராம் பிரதமர். 

இரண்டாவதாக வைகோ சொன்ன பிரச்சனை, ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளனைப் பற்றியது. "கொலை சதியைப்பற்றி பேரறிவாளனுக்கு எதுவுமே தெரியாது. அவர் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிரிஷ்னையரே சொல்லி இருக்கிறார். பேரறிவாளனைக் கடுமையாக துன்பபடுத்தித் தான் வாக்குமூலம் வாங்கி இருக்கிறார்கள். இளம் வயதில் கைதான அவர், ௨௦ ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார். அவரது வாழ்க்கையே அழிந்துவிட்டது. ஏற்கனவே நளினிக்கு மரண தண்டனையை ரத்து செய்துவிட்டீர்கள்.  அதுபோல, பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும்." என்று வைகோ சொன்னது அனைத்தையும் உற்றுக் கவனித்த பிரதமர், "உங்கள் கோரிக்கையை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கிறேன்!" என்றாராம் " நானே இதுபற்றி அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சந்திக்க இருக்கிறேன்.." என்று சொல்லி விட்டு மூன்றாவதாக ஈழப் பிரச்சினைபற்றி பேசி இருக்கிறார். 

"தொடர்ந்து உங்களுக்கு நான் எழுதிய கடிதங்கள் அனைத்திலும் 'இலங்கைப் படுகொலைக்கு பொறுப்பாளியாகி பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்படும்' என்று சொல்லி இருந்தேன். ஆனால், அதைத்தான் இந்தியா தொடர்ந்து செய்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, ஜெனீவா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கையை ஆதரித்து கியூபா கொண்டு வந்த தீர்மானத்தை, இந்தியா ஆதரித்துள்ளது. உலகமே இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று சொல்லும் சூழலில் இந்தியா மட்டும் இப்படி நடப்பது சரியா? இந்தியா இனியாவது இலங்கைக்குத் தரும் உதவிகளை நிறுத்தி, தனது கறையை கழுவ வேண்டும். அனைத்துப் பொருளாதார, நிதி உடன்படிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும்..." என்று வைகோ சொன்னபோது, "இலங்கைக்கு நாம் உதவி செய்யவில்லை என்றால், சீனா இலங்கைக்குள் வந்துவிடும்!" என்றாராம் பிரதமர். "சீனா வந்துவிட்டது இலங்கைக் கடற்படை படகுளில் வந்து தமிழக மீனவர்களைத் தாக்குவது சீனக் கப்பற்படை வீரர்கள் தான். இந்தியா எத்தகைய உதவிகளைச் செய்தாலும் இலங்கை நாடு, சீனாவுக்குத்தான் நண்பனாக இருக்கும். சீனாவையும் பாகிஸ்தானையும்தான் நட்பு நாடாக அவர்கள் நினைப்பார்கள். நம்மை சேர்க்க மாட்டார்கள்!" என்று வைகோ சொன்ன போது சீரியஸாகக் கேட்டார் பிரதமர். இந்த சந்திப்புக்குப் பிறகு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேரறிவாளன் விடுதலை குறித்து வைகோ பேசினாராம். 

ஈழத்தமிழர் படுகொலை குறித்து, தமிழில் தான் வெளியுட்டுள்ள சி.டி-களின் ஆங்கிலப் பிரதியை டெல்லி பத்திரிக்கையாளர்களுக்குப் பிரத்தியோகமாகப் போட்டுக் காண்பித்தார் வைகோ. அந்த உருக்கமான சி.டி-யை பார்த்த பல பத்திரிக்கையாளர்கள், "கொழும்புவில் இவ்வளவு கொடுமைகள் நடந்துள்ளது எங்களுக்கே தெரியாது!" என்று பகிரங்கமாகப் பேசிக்கொண்டனர். வைகோவை சந்தித்த டெல்லி வாழ் தமிழ் மாணவர்கள், "நீங்கள் தான் தமிழீழத்தின் இந்திய அம்பாசிடர்! என்று சொன்னதை நெகிழ்வுடன் கேட்டார் வைகோ! 

-சரோஜ் கண்பத் 
   
இந்த வார ஜூனியர் விகடனில் வெளிவந்தது. நன்றி ஜூனியர் விகடன். 

                                 
Read More

Monday

திராவிட இயக்கத்தை காக்க வைகோ பின்னால் அணி திரள வேண்டும்

திராவிட இயக்கம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு எதிராக உருவாக்க பட்ட இயக்கம். அடிமை தனம் ஒழியவும் சுயமரியாதையை காக்கவும்  உருவான இயக்கம். இன்று மீண்டும் ஆதிக்க சக்திகளுக்கு இரையாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட துவங்கியிருக்கிறது.  பெரியார்  பகுத்தறிவு சிந்தனைகளை வளர்ப்பதிலும் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதிலும் மக்கள் மத்தியில் மிக பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சாதி ஒழிப்பின் மூலம் மேல் சாதி கீழ் சாதி என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் ஒரே சாதி என்ற நிலையை உருவாக்கவும் மேல் சாதியினரால் அடிமையாக்க படும் கீழ் சாதி மக்களின் விடுதலைக்காவும் திராவிட இயக்கம் வாயிலாக போராடினார்.


அடிமை தனமும்  ஆதிக்க சக்திகளும் காங்கிரஸ் கட்சியின் மூலதனமே காங்கிரஸ் கட்சி தான் என்பதால் காங்கிரஸ் கட்சியை தீவிரமாக எதிர்த்தார் பெரியார். காங்கிரஸ் கட்சியை தமிழகத் திலிருந்தே ஒழிக்க வேண்டும். திராவிடர்கள் கையில் ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்று திராவிட முன்னேற்ற கழகம் துவங்கினார் அண்ணா.    இடையறாத பிரச்சாரம் விழிப்புணர்வு மூலம் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்றது அண்ணா முதல்வரானார். இந்திய வரலாற்றிலேயே ஒரு மாநில கட்சி ஆட்சியை பிடித்தது முதலில் தமிழகத்தில் தான். இந்த வரலாற்று பெருமைக்கு காரணம் தமிழக மக்கள் மத்தியில் உருவாகியிருந்த திராவிட இயக்க உணர்வுகள். திராவிட இயக்கத்தின் விடுதலை வேட்கை பல காலமாக அடங்கியிருந்த உணர்வுகள் வெளிப்பட்டது. இந்தி மொழியை கட்டாய படுத்தி தமிழ் நாட்டில் திணிக்க நினைத்த போது மாணவர்கள் கிளர்ந்தெழுந்தது இந்திய வரலாற்றிலேயே மிக பெரிய கிளர்ச்சியாக அமைந்தது.

இப்படி பலரின்   தியாகத்தோடு வளர்ந்த திராவிட இயக்கம் காலத்தின் கோலத்தால் மிக விரைவிலேயே இயற்கை அண்ணாவை எடுத்து விட்டதால் திராவிட இயக்க தலைவர்கள் வரிசையில் 17  வது இடத்தில் இருந்த கருணாநிதி கட்சியை சூழ்ச்சியின் மூலம் கைப்பற்றினார்.    ஆட்சியை கைப்பற்றிய அன்றிலிருந்தே தமிழகத்தை பற்றியோ திராவிட இயக்கத்தை பற்றியோ சிந்திக்காத கருணாநிதி தன்  குடும்பம் பற்றியே சிந்தித்தார். தன் குடும்ப வளர்ச்சிக்காக திராவிட இயக்கத்தையும் தமிழியை பயன் படுத்த துவங்கினார். அதன் விளைவாக தன் மகனுக்கு போட்டியாக எம்ஜிஆர் வந்து விடுவார் என கருதி எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கினார். முதல் முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்ற போதே ஊழல் செய்து சர்க்காரிய கமிசனால் விஞ்ஞான கள்ளன் என்று அழைக்க பட்டார். 

எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரை எம்ஜிஆரின் அண்ணா  திராவிட   முன்னேற்ற கழகம் ஆட்சியை தக்கவைத்து கொண்டது. எந்த காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என அண்ணா கருதி திமுகவை தோற்றுவித்தாரோ அந்த நோக்கத்தை அடியோடு குப்பையில் போட்டு விட்டு பதவி ஆசைக்காக இரு கழகங்களும் மாறி மாறி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தன. 

எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் திராவிட யக்கம் திராவிட கொள்கைகள் அடிபட்டு போயின. எந்த ஆதிக்க சக்தியை எதிர்த்து திராவிட இயக்கம் செயல் பட்டதோ அதே திராவிட இயக்கத்தின் வழியாக ஆதிக்க சக்திகள் புகுந்தன. அன்று முதல் இன்றுவரை தமிழக அரசியலை ஆதிக்க சக்திகள் ஆட்டி படைக்கின்றன. தமிழ் திராவிடம் என்று எந்நேரமும் சொல்லும் கருணாநிதி மீண்டும் குடும்ப கட்டுபாட்டுக்குள் கட்சியை கொண்டு வர வைகோவை இல்லாத ஒரு பழியை சொல்லி கட்சியை விட்டு நீக்கினார்.        

அந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க ஆதிக்க சக்திகளின் உதவியை நாடியும் காங்கிரஸ் கட்சி தலைவர் மூப்பனாரால் துவங்க பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியை பிடித்தார். ஒவ்வெரு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் கட்சியை வளர்த்து விட்டும் தானும் பலனடைந்து கொண்டன இரண்டு கழகங்களும். கருனாநிதியாலோ ஜெயலளிதாவாலோ  திராவிட இயக்க  கொள்கைகளை தூக்கி பிடிக்க முடியவில்லை . அண்ணா துவங்கிய திமுகவை இந்திய அளவில் கெட்ட பெயரை   உருவாக்கும் விதமாக தன் பிள்ளைகள் மூலம் ஊழல் செய்தார். திமுகவின் ஐம்பெரும் தலைவர்களாக கருணாநிதி , கருணாநிதியின் பிள்ளைகள் , பேரன் ஆகியோர் விஸ்வரூபம் எடுத்தனர். அதன் விளைவாக இன்று இரண்டு லட்சம் கோடி ஊழல் ஊழலுக்கு பரியாகரமாக ஈழ தமிழர்களை கொல்ல காங்கிரஸ் கட்சிக்கு செய்த உதவிகள் ஏராளம். ஆனால் இன்று தமிழகத்தில் யாருமே அனுதாப பட முடியாத அளவிற்கு கனிமொழி ஜெயிலில் இருக்கிறார். 

இந்த நிலையில் கருணாநிதி மற்றும் குடும்ப உறுப்பினர்களால் லட்சோப லட்சம் உறுதி மிக்க தொண்டர்கள் கொண்ட திராவிட இயக்கத்தையும்  திமுகவையும் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இன்றும் திமுக என்ற பெயருக்காக உறுதிமிக்க தொண்டர்கள் திமுகவில் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களின் ஒரே கவலை திமுக அழிந்து விடுமோ என்பது தான். இந்த நிலையில் திராவிட இயக்கத்தில் மாற்றம் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். பெரியாரின் பகுத்தறிவு கொள்கையில் அண்ணாவின் வழியில் இன்றுவரை பயணித்து வரும் வைகோ பின்னால் ஒவ்வெருவரும் அணி திரள வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. திமுகவின் தற்போதைய தலைவரால் தன் மகளை எப்படி வெளியே எடுப்பது என்ற கவலை தானே தவிர தமிழகம் பற்றியோ திராவிட இயக்கம் பற்றா எந்த கவலையும் இல்லை. இந்த நிலையில் அதிமுகவிற்கு மாற்று சக்தியாக செயல்படும் தகுதியை திமுக இழந்ததால் அந்த பணியை வைகோ தலைமையில் மதிமுக செய்யும். சுயரியாதையை இழந்து கருணாநிதி இருக்கும் வேளையில் சுயமரியாதை தான் முக்கியம் என்று தேர்தலையை துணிந்து புறக்கணித்த தலைவன் வைகோ தலைமையில் கீழ் திராவிட இயக்கத்தை காக்கவும் தமிழினத்தை காக்கவும்  திராவிட இயக்கம் பயணிக்க வேண்டும்! செயல் படுவோம்.             
Read More

Friday

இரு கழகங்களுக்கும் மாற்றான சக்தி மதிமுக என்பதை நிருபிக்கும் தேர்தல்

பக்கத்து ஊரை சேர்ந்த சென்னையில் பணிபுரியும் நண்பர் ஒருவரை நேற்று தொடர்பு கொண்டு கேட்டேன் வாக்களிக்க ஊருக்கு எப்போது வருகிறாய் என்று? நண்பர் சொன்னார் நான் 13 ஆம் தேதி மாலை திரும்பி 14 ஆம் தேதி காலை வந்து சேருவேன். வாக்கு பதிவு 13 ஆம் தேதி வாக்களிப்பது என்றால் 13 ஆம் தேதி இங்கு வர வேண்டும் அல்லவா என்றேன். அதற்கு அவர் எனக்கு யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை.   

என்னை விட வயதில் இளையவர் தான் இது இவருக்கு இரண்டாவது தேர்தல் என்று நினைக்கிறேன். எந்த கட்சியையும் சாராதவர் தமிழ் உணர்வு மிக்கவர். மேலும் அவரிடம் பேசும் போது வாக்களிப்பது நமது உரிமை அதை நாம் விட்டு கொடுக்க கூடாது என்று வாதிட்டேன். எதற்குமே அசராத அவர் கடைசியாக ஒன்றை சொன்னார். "சிறு வயது முதலே அதிமுக மீது ஒரு வித வெறுப்பை கொண்டவன் ஆனால் ஈழ போராட்டம் இறுதி கட்டம் அடைந்த போது அந்த மக்களை காப்பாற்ற முடிந்தும் காப்பாற்றாமல் கைவிட்ட திமுக மீதான கோபத்தில் என்னுடைய முதல் தேர்தலிலேயே அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தேன்." 

"அதே போல் இந்த தேர்தலிலும் வாக்களிக்க வர வேண்டும் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். என்னை போல் தான் ஒவ்வெரு தமிழ் உணர்வாளர்களும் நினைத்திருந்தார்கள். மதிமுகவை கூட்டணியை விட்டு வெளியேற்ற அதிமுகவிற்கு ஏற்பட்ட காரணங்களை நினைக்கும் போது ஒரு விசத்தை கீழிறக்க இன்னொரு விசத்தை அல்லவா மேல் ஏற்ற வேண்டியிருக்கிறது என்று நினைக்கும் போது யாருக்கு வாக்களித்தாலும் தமிழர்களுக்கு செய்யும் துரோகம் எனவே நான் யாருக்கும் வாக்களிக்க விரும்ப வில்லை என்று சொல்லி முடித்தார். " 

இவ்வளவு தெளிவாக பேசிய அவரிடம் வேறு எதுவும் சொல்ல முடியாமல் ஒன்றை மட்டும் சொன்னேன். வாக்களிக்கும் உங்கள் உரிமையை விட்டு கொடுக்காமல் தொகுதியில் போட்டியிடும் கட்சியை பார்க்காமல் வேட்பாளரை பார்த்து வாக்களிக்கலாமே".

தமிழக அரசியலை மிகவும் தெளிவாக புரிந்து வைத்திருக்கும் இவர் எந்த கட்சியையும் சாராதவர். இவரிடம் பேசிய பின்னர் தான் மதிமுக தேர்தலில் போட்டியிட வேண்டாம் என எடுத்த முடிவு எவ்வளவு நல்ல முடிவு என்பது தெரிந்தது. ஒருவேளை அதிமுக கூட்டணியில் மேலும் சில தொகுதிகளை கொடுத்து மதிமுக அந்த கூட்டணியில் தொடர்ந்து தேர்தலை சந்தித்திருந்தால் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் ஆனால் பலனை பெறுவது மதிமுகவோ தமிழர்களோ அல்ல அதிமுகவும் ஆதிக்க சக்திக்களுமாக தான் இருந்திருக்கும். 

ஒரு வேளை அதிமுக மீதான வெறுப்பில் உணர்ச்சி வசப்பட்டு தனித்து போட்டியிட்டால் திமுக எளிதில் வெற்றி பெற்றிருக்கும் அதனாலும் பலனை பெறுவது மதிமுகவோ தமிழர்களோ அல்ல மாறாக கருணாநிதியும் அவர் குடும்பமும் தான்.  

தேர்தல் முடிந்த பின்னர் விலை போய் மதிமுகவை கழற்றி விடுவதுக்கு பதிலாக முன்னரே விலை போய் மக்கள் மத்தியில் தன்னை பற்றி நிருபித்த ஜெயலலிதாவிற்கு மக்கள் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளார்கள். இப்போது மக்கள் மத்தியில் இரண்டு வாய்ப்புகள் ஓன்று சேலை கட்டிய கருணாநிதி இன்னொன்று வேட்டி கட்டிய ஜெயலலிதா . இவர்கள் இருவருக்குள்ளும் ஒரே எண்ணங்கள் தான் ஓடி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மதிமுக போட்டியிடாமல் ஒதுங்கி கொண்டதால் இரு அணிகளுக்கிடையே எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற நிலை மாறி யாருக்கும் எளிதில் வெற்றி கிடைக்காது என்ற நிலை தான் ஏற்பட்டுள்ளது. 

அதனால் தான் மதிமுக எங்கே இருக்கிறது என்று கெட்ட கருணாநிதி ஒவ்வெரு நாள் அறிக்கையிலும் மதிமுக எங்களை ஆதரிக்கிறது இதனால் எங்கள் வெற்றி உறுதி செய்ய பட்டுள்ளது என்று சொல்லி மதிமுகவின் ஆதரவை எதிர் பார்த்து கொண்டிருக்கிறார். 

அதே போல் ஜெயலலிதாவோ வைகோ மீது அன்பும் மரியாதையும் இருக்கும் என்று பேசுகிறார். இருவருமே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறார்கள் இவர்களுக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது யார் காலில் விழுந்தாவது வெற்றி பெற வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம். 

ஒவ்வெரு தேர்தல் முடிவுகளில் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணுவது மதிமுகவின் முடிவுகள் என்பது இந்த தேர்தலிலும் நிருபிக்க பட்டு வருகிறது. மதிமுகவின் சக்தியை தெரிந்து தான் இரு கழகங்களும் மதிமுகவை அழிக்க நினைக்கிறது. அவர்கள் நினைத்த திட்டத்திற்கு மதிமுக எடுத்த தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு மிக பெரிய அடி. மதிமுகவின் இந்த முடிவின் மூலம் மதிமுக தமிழகத்தில் இரு ஊழல் கட்சிகளுக்கு மாற்றான மாபெரும் சக்தியாக உருவெடுக்க துவங்கியிருக்கிறது. 

இந்த தேர்தல் முடிவுகள் என்பது யார் வெற்றி பெற்றாலும் தமிழகத்திற்கு பயன் பட போவதில்லை. ஆனால் தமிழகத்திகு ஒரு மாற்று சக்தி தேவை அது மதிமுக என்பதை நிருபிக்கும் தேர்தலாக இது அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

வைகோவின் தேர்தல் புறகணிப்பு முடிவு பற்றி கவிஞர் தாமரை ஜூனியர் விகடனில் 
வரவேற்கத்தக்க முடிவு நான் மனமார ஆதரிக்கிறேன். வைகோ எந்த கூட்டணியில் இருந்தாலும், மக்களுக்கான போராட்டங்களில் அவர் பின்வான்கியதே இல்லை. அவர் உண்மையான, நேர்மையான தலைவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஒரு நல்ல தலைவர் தப்பான இடத்தில் இருந்தது வேதனை. நமக்கான மாற்று அரசியலை முன்னெடுக்கும் திறன் அவரிடம் இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன்.                

                
Read More

Tuesday

வரலாற்றை மாற்றி பதிவு செய்யும் தமிழ் லீடர்

தமிழ் லீடர் என்ற இணையத்தில்  ஒரு கவர்ச்சிகரமாக பெயரிட பட்ட ஒரு கட்டுரையை பார்த்தேன். அந்த தலைப்பிற்கும் கட்டுரைக்கும் எந்தவொரு ஒற்றுமையும் இல்லாமல் எழுத பட்டிருக்கிறது.  கட்டுரையின் தலைப்பு "ஈழம் அழிந்து போனதுக்கு வைகோ காரணம்!" ஆனால் கட்டுரை வைகோவின் வாழ்க்கை வரலாறாக வருகிறது. 

ஏதோ கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத பட்ட கட்டுரையாகவும் இருக்கலாம் . அல்லது தமிழ் உணர்வாளர்களிடையே குழப்பங்களை உருவாக்கும் நோக்கத்திலும் இப்படி தலைப்பு வைத்திருக்கலாம் . பொதுவாக இல்லத்திற்கு எதிரானவர்கள் முதலில் கை வைப்பது யார் ஈழம் விடுதலை புலிகள் இந்த கொள்கைகளில் உறுதியாக இருக்கிறார்களோ அவர்களுக்கு கேட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் . அதன் மூலம் அவர்களை செல்வாக்கற்றவர்களாக மாற்ற வேண்டும் . அந்த நோக்கத்தில் கூட சில இணையங்கள் கட்டுரைகள் எழுதுகின்றன. 

அதில் தெரிவிக்க பட்டுள்ள சில பகுதிகள் "1989ம் ஆண்டு வரை வைகோவுக்கு எல்லாமே ஏறுமுகம்தான். ஆனால், யாருக்கும் தெரியாமல், ஏன் கலைஞருக்கே தெரியாமல் தமிழ் ஈழத்துக்கு ரகசியமாக பாஸ்போர்ட் இல்லாமல், கள்ளத்தோணி மூலம் சென்றார். 23 நாட்கள் அவர் அங்கே தங்கி இருந்தார். அவர் சென்ற பிறகே, கலைஞருக்கு தகவல் கிடைக்கச் செய்தார். அதுதான் கலைஞருக்கு வைகோ மீது ஏற்பட்ட முதல் கசப்பு. வைகோ ஈழத்திலிருந்து வெளியே வரும் வரை கலைஞரும், வைகோ பயணத்தை வெளியிடாமல் இருந்தார்."

 இவ்வாறு கட்டுரையாளர் தெரிவித்துள்ளார் . இதில் பல உண்மைகள் மறைக்க பட்டுள்ளது. வைகோ கலைஞருக்கு தெரியாமல் கள்ள தோணி மூலம் ஈழம் சென்றது உண்மை தான் . வைகோ செல்லும் முன்னர் தன்னுடைய நண்பரிடம் ஈழம் செல்லும் பயணம் குறித்த பல பக்கங்கள் அடங்கிய கடிதத்தை கொடுத்து கலைஞரிடம் நான் போன பின்னர் கொடுத்து விடுங்கள் என்று தெரிவித்து விட்டு சென்றார் . அதை அந்த நண்பரும் கொடுத்தார் .

கலைஞர் வைகோ வரும் வரை பயணத்தை வெளியிடாமல் இருந்தார் என குறிப்பிட பட்டுள்ளது தவறான தகவல். வைகோ கடிதத்தில் நான் ஈழம் செல்கிறேன் , அங்கு செல்வதால் என் உயிருக்கு ஏதாவது நிகழ்ந்து கட்சிக்கு என்னால் கெட்ட பெயர் உருவாகிற சூழ்நிலை வந்தால் இந்த கடிதத்தை வெளியிடுங்கள் . அப்போது கட்சிக்கும் என்னுடைய பயணத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது நாட்டிற்கு தெரியும் இவ்வாறு வைகோ கடிதத்தில் எழுதியிருந்தார் . ஆனால்  வைகோ திரும்பி வரும் முன்னால் கடிதம் கலைஞர் கையில் கிடைத்தவுடன் வெளியிட்டு கட்சிக்கும் வைகோ சென்றதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிவித்து கொண்டவர் தான் .

அவரை நீக்க வேண்டும் என்று குரல்களும் எழுந்தன. இந்த நிலையில், எல்லா பிரச்னைக்கும் மன்னிப்பு கேட்கிறேன் என்று கருணாநிதியிடம் விழுந்தார் வைகோ.

இந்த பகுதியிலும் வரலாறு திரிக்க பட்டுள்ளது . திமுக தலைவர் கருணாநிதியால் வைகோவை கட்சியிலிருந்து மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வர பட்டத்து . ஆனால் பொதுக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களால் அந்த தீர்மானம் தோற்கடிக்க பட்டது இது தான் உண்மை . பின்னர் வைராக்கியத்தோடு போலியாக ஒரு உளவு துறை தகவலை காட்டி செயற்குழு மூலமாக வைகோவை கட்சியை விட்டு நீக்கினார் கலைஞர் . அந்த தருணம் என்பது வைகோவை கட்சியை விட்டு நீக்கியது மட்டுமல்ல . கருணாநிதியை விடுதலை புலிகள் மூலமாக வைகோ கொலை செய்ய பார்கிறார் என்ற பொய்யால் விடுதலை புலிகள் மீதான தடையை உறுதி படுத்தும் விதமாக கருணாநிதி செயல் பட்டார் என்பது தான் உண்மை .

இந்த கட்டுரை எதற்காக எழுத பட்டுள்ளது என்பதன் நோக்கம் கடைசியில் நமக்கு சரியாக தெரிய வருகிறது . தமிழின துரோகியாக வலம் வந்து கொண்டிருக்கும் கருணாநிதிக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்க முடியுமா என நினைப்பது தெரிகிறது ..... அந்த வரிகள் .......

காங்கிரஸின் காலில் விழுந்து கருணாநிதி, “நீங்கள் கவலையேபடாதீர்கள். தமிழர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சோனியாவுக்கு கருணாநிதி தைரியம் சொல்லும் அளவுக்கு கருணாநிதி மாறியது ஏன்?

"ஒரே ஒரு காரணம்.

தி.மு.க. மைனாரிட்டி அரசாக தமிழ்நாட்டில் ஆண்டுக் கொண்டிருப்பதுதான்.

ஒருவேளை, தி.மு.க. மெஜாரிட்டியாக இருந்தால், ஆளும் மத்திய காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறி இருப்பார். இல்லையென்றால், கூட்டணியில் இருந்து கொண்டே மிரட்டிக்கூட இருப்பார்."

திமுக மைனாரிட்டி அரசாக இருந்த காரணத்தால் தான் காங்கிரஸ் கட்சியை கருணாநிதியால் மிரட்ட முடியவில்லையாம் . இதை சின்ன பிள்ளைகளிடம் கேட்டால் கூட சொல்லுமே 1 ,76 ,௦௦௦௦ கோடி பணத்திற்காக ஒரு இனத்தையே கருவறுத்தார் கருணாநிதி என்று .  இதே திமுக மைனாரிட்டியாக இருந்த போது தான் மத்தியில் காங்கிரஸ் கட்சியும் மைனாரிட்டியாக இருந்தது . அந்த 40  நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினமா செய்வார்கள் என்று தீர்மானம் போட்டது என்ன வாயிற்று . அந்த தீர்மானம் போட்டவுடன் எல்லோருமே கருணாநிதியை புகழ்ந்தோமே (இப்போ திருமாவளவன் , வீரமணி நம்பி புகழ்ந்த மாதிரி ) ஆனால் எட்டு கோடி மக்களுக்கும் அல்வா தந்தாரே .

அன்று மட்டும் கலைஞர் பதவியை விட தமிழ் இனம் முக்கியம் என்று நினைத்திருந்தால் தமிழ் இனம் கலைஞர் வாழும் வரை கலைஞரை மெஜாரிட்டி அரசாக வைத்திருக்குமே . ஏன் செய்யவில்லை? முடிந்தும் செய்யாமல் ஏன் விட்டார் . பதவிக்காகவும் ஸ்பெக்ட்ரம் பணத்திற்காகவும் தமிழ் இனத்தை அளிக்க துணை போன கருணாநிதியை நீங்கள் எத்தனை வடிவில் திரித்து எழுதினாலும் இந்த வரலாறு மாறாது .

Read More

Sunday

மெய் சிலிர்க்க வைத்த மதிமுகவின் முடிவு

யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அனைவரையும் சிந்திக்க வைத்து அரசியலில் ஒரு  வித்தியாசத்தை காட்டி இன்று அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது மதிமுகவின் தேர்தல் புறகணிப்பு. இது பற்றிய ஒரு ஆய்வு.   


கடந்த மூன்று நான்கு நாட்களாக மதிமுகவின் முடிவு என்ன என்று தெரிவதிலேயே அனைத்து கட்சிகளும் பத்திரிக்கையாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் எதிர்பார்த்து கொண்டிருந்த முடிவு இன்று காலை அறிவிக்க பட்டது . நேற்று காலை துவங்கிய மதிமுக உயர்நிலை குழு கூட்டத்தில் வருகின்ற சட்ட சபை தேர்தல் பற்றியும் கூட்டணி தொகுதி இழுபறி பற்றியும் மதிமுக எடுக்க வேண்டிய முடிவுகள் பற்றியும் பல கட்ட விவாதங்கள் நடந்து பின்னர் மாவட்ட செயலார்கள் கூட்டத்திலும் இது பற்றி விவாதித்து எடுக்க பட்ட முடிவு . நேற்று காலை துவங்கிய விவாத களம் இன்று அதிகாலை 4  மணிக்கு முடிந்திருக்கிறது .

மதிமுகவிற்கு கூட்டணியில் குழப்பம் என்ற செய்திகள் வந்தவுடன் மதிமுக தனித்து போட்டியிடும் நாம் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என நினைத்தவர்களின் நினைப்புகளுக்கு கிடைத்த முதல் அடி. கடந்த சட்ட மன்ற தேர்தலிலிருந்து அதிமுகவோடு கூட்டணியாக இருந்து வரும் மதிமுகவை அதிமுக தலைமை அவமான படுத்தியது. தன்னுடைய ஆணவத்தையும் தன்னுடைய திமிர் தனத்தையும் மதிமுகவோடு காட்டி மதிமுக கூட்டணியிலிருந்து தானாக விலக வேண்டிய எல்லா காரியங்களையும் செய்தது. 

திமுக தரப்போ மதிமுக உணர்ச்சிவசப்பட்டு தனித்து போட்டியிடும் அதிமுக தங்களை அவமான படுத்தியதையடுத்து அதிமுக தோற்க வேண்டும் என்று மதிமுகவினர் வேலை செய்வார்கள் அப்போது நாமும் எளிதில் வென்று விடலாம் அதே நேரம் மதிமுகவும் காணாமல் போயிருக்கும் என நினைத்து இரண்டு மூன்று நாட்கள் மகிழ்ந்தது என்னவோ உண்மை.     

ஒரு தலைவன் உணர்ச்சி வசப்பட கூடாது என்பது வைகோவின் முடிவில் தெரிகிறது . மதிமுகவின் ஒவ்வெரு தொண்டர்களும் திமுகவினர் நினைத்ததை போல் உணர்ச்சிவசப்பட்டு அதிமுகவை தோற்கடிக்க வேண்டும். மதிமுக தனித்து போட்டியிட வேண்டும் என தான் நினைத்தார்கள்.  ஆனால் வைகோ எதையுமே சிந்தித்து உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் அதே நேரம் சுயமரியாதைக்கும் இழுக்கு ஏற்படாமல் அனைவரது புருவங்களும் உயரும் விதமாக முடிவெடுத்திருக்கிறார். 

வைகோவின் இந்த முடிவு கட்டாயம் திமுக தரப்புக்கு மகிழ்ச்சியை தராது . அதே நேரம் அதிமுக தரப்புக்கு தலைவலியை கொடுக்காது. மக்கள் மத்தியில் அதிமுக மீதான நன்மதிப்பு வைகோவின் மோனத்தால் கேட்டு போனது என்னவோ உண்மை .

மதிமுக தீர்மானத்தில் குறிப்பிட பட்டுள்ள படி "கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை, ம.தி.மு.க.வுக்கு இல்லை" "தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் உருவாக்கி வளர்த்த தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாக போற்றும் ம.தி. மு.க. 2011-இல் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு, புதுவை சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மட்டும் போட்டியிடுவது இல்லை என்றும், திராவிட இயக்கத்தின் இலட்சியங்களையும், தாய்த் தமிழகத்தின் உரிமைகளையும் வென்றெடுக்கவும், தமிழ் இனத்தின் நலனைக் காக்கவும் தொடர்ந்து உறுதியோடு பயணத்தை மேற்கொள்வது" என தீர்மானத்தில் தெரிவிக்க பட்டுள்ளது .   மதிமுகவில் பதவிக்கு ஆசைபட்ட்வர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டவர்கள் ஏற்கனவே எதிர் முகாமிற்கு சென்று காணாமல் போய் விட்டார்கள் . ஆனால் இப்போது இருப்பவர்களோ ஒரு லட்சியத்தோடு வைகோ பின்னால் அணி வகுத்திருப்பவர்கள் .  

தனித்து போட்டியிட வேண்டும் என உணர்ச்சிவசப்பட்ட மதிமுக தொண்டர்கள் வைகோவின் இந்த முடிவால் வைகோ மீதும் மதிமுக மீதும் ஏற்பட்டுள்ள நன்மதிப்பால் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். பதவிக்காக கட்சி விட்டு கட்சி மாறும் கட்சிகளுக்கு மத்தியில் கொண்ட கொள்கைக்காக பதவியே வேண்டாம் என துறந்த மதிமுகவின் முடிவு நிச்சயம் மதிமுகவிற்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கும் . 

அதிமுக திமுகவிற்கு எதிராக ஒரு கட்சி அரசியலை முன்னெடுக்க வில்லை என்ற குறைபாடு மதிமுகவின் இந்த நிலைப்பாட்டால் போய் விட்டது . தேர்தல் கமிசனின் அங்கீகாரத்திற்காக தான் ஒவ்வெரு கட்சிகளும் கூட்டணி வைத்து சில தொகுதிகளை பெற்று கொள்கின்றன . இந்த தேர்தலில் மதிமுக போட்டியிடாததால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற முடியாமல் போகலாம் . ஆனால் மதிமுகவின் இந்த முடிவால் வைகோ மீதும் மதிமுக மீதும் மக்கள் அங்கீகாரம் கொடுத்து விட்டார்கள் . மக்கள் அங்கீகாரம் பெற்று விட்ட பின்னர் தேர்தல் ஆணைய அங்கீகாரம் என்பது ஒரு பொருட்டே அல்ல .  

சுயமரியாதை இழக்க முடியாது என சொல்லி பின்னர் சுயமரியாதையை இழந்து கேவல பட்டு கட்சி நடத்துகிற தலைவர்கள் மத்தியில் வைகோ உயர்ந்து நிற்கிறார் . ஜெயலலிதாவின் அகங்காரம் மதிமுகவிற்கு புதிய வாசலை திறந்து விட்டிருக்கிறது . இனி வரும் காலம் வைகோவின் காலம் .  நேர்மையானவர்கள் அரசியலில் வெற்றி பெற முடியாது என்பது தவறான வாதம் வெற்றி தள்ளி போகலாமே தவிர தோல்வி என்பது நிரந்தரம் அல்ல ........................   
Read More

Saturday

முள் செடியை வீழ்த்தும் ஆயுதம் வைகோ! படபடக்கிறார் முத்துக்குமாரின் தந்தை- ஜூனியர் விகடன்-20.3.11

வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழி தள்​ளாடும் நிலை என்பார்​களே... வைகோவின் அரசி​யல் வாழ்க்கையில் இத்தகைய துயரங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன!
கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக அ.தி.மு.க-​வின் கூட்டணியில் சிறிதளவும் மனக்கசப்பின்றி, ஆளும் கட்சியின் அத்தனை நெருக்கடிகளையும் சமாளித்து நின்ற வைகோ, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அல்லாட்டத்துக்கு ஆளாகினார். கடந்த தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்ட ம.தி.மு.க-வுக்கு இந்த முறை மிகக் குறைவான இடங்களே பேசப்பட... மாநிலம் முழுக்க இருக்கும் வைகோவின் ஆதரவாளர்கள் முகம் வாடிப்போனார்கள்.
 
வாய் திறந்து பேசாவிட்டாலும் வைகோவுக்கும் இதில் சொல்லிக்கொள்ள முடியாத வேதனைதான். இந்த நிலையில் நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று நடக்க... முகம் மலர நிமிர்ந்து இருக்கிறார் வைகோ.
 
ஈழப் போராட்டத்துக்காகத் தீக்குளித்து இறந்த கொலுவைநல்லூர் கு.முத்துக்குமாரின் குடும்பம் வைகோவை நேரில் சந்தித்து ம.தி.மு.க-வில் தங்களை இணைத்துக்கொண்ட சம்பவம்தான் அது.
 
ஈழ ஆதரவுக் கட்சியினர் பலரும் முத்துக்குமாரின் தந்தை குமரேசனைத் தங்கள் பக்கம் இழுக்க எவ்வளவோ முயன்று பார்த்தார்கள். பண உதவிகளும் பதவி குறித்த உத்தரவாதங்களும்கூட அவரிடம் நடத்தப்பட்டன. ஆனால், 'கட்சிகளில் சேரும் விருப்பமே இல்லை. என் மகனின் தியாகத்தைத் தயவுசெய்து விலை பேசாதீர்கள்’ என மறுத்துவிட்டார் குமரேசன். இந்த நிலையில்தான் திடீரென ம.தி.மு.க-வில் ஐக்கியமாகி இருக்கிறார் குமரேசன்.
 
''காங்கிரஸ் - தி.மு.க. என்கிற முட்செடிகளை வெட்டி வீச, நம் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ம.தி.மு.க. தமிழகத்தின் அத்தனை பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கும் ஒரே தலைவர் வைகோ மட்டுமே. இனத் துரோகிகளை வீழ்த்துவதற்கு வைகோவின் கரத்தை வலுப்படுத்துவதே சரியான வழி!'' என குமரேசன் ஆவேசமாக அறிவிக்க... நெஞ்சம் சிலிர்த்தார் வைகோ.
 
இணைப்பு விழாவில் பேசிய குமரேசன், ''எங்​களுடைய குடும்பம் ஒரு​போதும் அரசியலில் ஈடுபட்டது இல்லை. ஆனால், இந்தக் காலகட்டத்தில் முத்துக்குமாரின் தியாகத்தைப் போற்றுகின்ற, உண்மையாக ஈழ விடிவுக்குப் பாடுபடுகின்ற ஒரு இயக்கம் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாங்கள் ம.தி.மு.க-வில் இணைந்து இருக்கிறோம்.
 
என் மகன் முத்துக்குமாருக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்தவர் பழனி என்பவர்தான். அவர்கள் இருவரும் சேர்ந்துதான் அரசியல் கூட்டங்களுக்குப் போய் நாட்டு நடப்புகள் குறித்துப் பேசுவார்கள். இறப்பதற்கு முதல் நாள்கூட முத்துக்குமார், பழனியிடம்தான் ஈழக் கோரங்கள் குறித்து குமுறி இருக்கிறார். அதனால், யாரை நம்பிக்கை மிகுந்த தமிழர் தலைவராக முத்துக்குமார் போற்றினார் என்பது பழனிக்குத்தான் தெரியும். பழனியும் எனது மருமகன் கருக்கவேலும் கலந்து பேசித்தான் ம.தி.மு.க-வில் இணையும் முடிவை எடுத்தார்கள்.
 
எனக்கும் அதுதான் மிகச் சரியான முடிவாகப்பட்டது!'' என நெகிழ்ந்த குமரேசன் சற்றே ஆவேசமாகி, ''ஈழத்தையே இழவுக்காடாக்கிய காங்கிரஸும், அதற்குத் துணைபோன தி.மு.க-வும் இந்த மண்ணில் அடியோடு வீழ்த்தப்பட வேண்டும். ஈழக் கோரத்தைத் தடுக்க நினைத்து உடலையே கரிக்கட்டையாக்கிய என் மகனைப்போல், எத்தனையோ இளைஞர்கள் இன்றைக்கும் கொந்தளிப்போடு இருக்கிறார்கள். இனியும் அரசியலுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என ஒதுங்கி இருந்தால், அநியாயம் புரிபவர்களின் ஆட்டம் அதிகமாகிவிடும் என்பதால்தான், அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறோம். குடும்பத்துக்காக சொத்துகளைக் குவிக்கிற தலைவர்களுக்கு மத்தியில், தமிழர் நலனை மட்டுமே தாரக மந்திரமாகக்கொண்டு இயங்கும் வைகோதான் உணர்வாளர்களின் உண்மையான தலைவர்!'' என்றார் சிலிர்ப்பு அடங்காமல்.
 
முத்துக்குமாரின் நண்பர் பழனிராசன், ''முத்துக்குமாரின் தியாகத்தை உலகறியச் செய்தவர் வைகோ. உண்மையான உணர்வோடு முத்துக்குமாரின் இழப்புக்கு வருந்திய தலைவர் வைகோவுக்கு நாங்கள் அனைவருமே நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். 'ஈழத் தமிழர்களுக்கான விடுதலையைப் பெற்றுத் தர தலைவர் வைகோவால் மட்டுமே முடியும்!’ என முத்துக்குமார் என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறார். தலைவர் வைகோவின் பொதுக் கூட்டங்கள் எங்கு நடந்தாலும், நானும் முத்துக்குமாரும் சைக்கிளில் போய் அவருடைய பேச்சைக் கேட்போம்.
 
ஒருமுறை தலைவரின் பேச்சில் மெய் மறந்து, அது குறித்துப் பேசிக்கொண்டே இருந்தோம். அதன் பின் பார்த்தபோது சைக்கிள் காணாமல் போனது தெரிந்தது. அந்த அளவுக்கு தலைவர் வைகோவின் பேச்சில் வசப்பட்டுக்கிடந்தவன் முத்துக்குமார். அதனால்தான் அவனுடைய தியாகத்தைப் போற்றும் விதமாக ம.தி.மு.க-வில் இணைய வேண்டும் என முத்துக்குமாரின் மைத்துனர் கருக்கவேல் சொல்லிக்கொண்டே இருந்தார். முத்துக்குமார் ஊட்டிய உணர்வால்தான், இன்றைக்கு வைகோவின் தலைமையில் இந்த இயக்கத்தில் இணைகிறோம். எந்த சுயநலமும் இல்லாமல் வைகோவின் கரத்தை வலுப்படுத்த உறுதி ஏற்போம்!'' என்று சொல்ல வைகோவின் முகம் பரவசமானது.
 
இறுதியில் பேசிய வைகோ, முத்துக்குமாரின் நினைவுகளை அடுக்கிவிட்டு, முத்துக்குமாரின் தியாகத்தை இனத்தின் எழுச்சிக்காகப் பயன்படுத்து​வோமே தவிர, சுயநலத்துக்காக அல்ல!'' என்றார் உணர்ச்சிப்பெருக்கோடு!
 
- இரா.சரவணன்
 

 நன்றி ஜூனியர் விகடன் 
Read More

Friday

மூன்றாவது அணி அமைந்தால் வைகோ தலைமையேற்க வேண்டும்

கூட்டணியில் இருந்து விலக்கியதன் மூலம் மதிமுகவுக்கு புதிய வாசலைத் திறந்து வைத்துள்ளார் ஜெயலலிதா என்றார் மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத்.  


திருச்சியில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:  "அதிமுக கூட்டணியில் இருந்து விலக்கியதன் மூலம் மதிமுகவுக்கு புதிய வாசலைத் திறந்து வைத்த அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இல்லாத அரசாக வருவதற்கு மதிமுகதான் காரணம்.

வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் மதிமுக உள்ளது. நாங்கள் ஜாதி கட்சி அல்ல. கட்டுமானத்தில் திமுக, அதிமுகவைவிட பலமாகவே உள்ளோம். கூட்டணியில் இருந்தாலும், தனித்து இருந்தாலும் தனித்தன்மையை நாங்கள் இழக்கவில்லை.

எதிர்காலத்தில் தமிழக முதல்வராக வைகோ வருவார். அவரை முதல்வராக முன்னிறுத்தும் வாய்ப்பு எங்களுக்கு இப்போது கிடைத்துள்ளது. மதிமுகவை வெளியேற்றியதன் மூலம் அதிமுக தொண்டர்கள் சோர்வுக்கு ஆளாகியுள்ளனர்.

கூட்டணியில் பல கட்சிகளை வைத்துக் கொண்டு அவர்களை கலந்தாலோசிக்காமல் வேட்பாளர் பட்டியலை அறிவித்தன் மூலம் தன்னுடைய முடிவை தானே தேடிக்கொண்டுள்ளார்.  இதனால், மதிமுக களைத்துப் போகாது. நாங்கள் வெண்கலப் பானை. கீழே விழும் சப்தம் கேட்கும்; ஆனால், உடையாது. வைகோவின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்கக் கூடாது என்பதற்காகவே, எங்களை கூட்டணியில் இருந்து விலக்கியுள்ளார் ஜெயலலிதா.  திமுக ஆட்சியை அகற்றவும், அதிமுக ஆட்சி வராமல் தடுக்கவும் நாங்கள் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வோம். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம்.

மூன்றாவது அணி அமைந்தால் நாங்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது. ஆனால், அந்த அணிக்கு வைகோவை தலைமையேற்ற வைக்க வேண்டும். மற்றவர்கள் தலைமையில் நாங்கள் கூட்டணியில் இடம் பெற முடியாது.

மதிமுகவின் பயணம் எந்தத் திசையை நோக்கி இருக்க வேண்டும் என்பது குறித்து சனிக்கிழமை (மார்ச் 19) சென்னையில் நடைபெறும் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுப்போம்' என்றார் அவர்.
Read More

Sunday

ஒபாமா வருகையை எதிர்ப்பதா? இடதுசாரிகளுக்கு வைகோ கேள்வி!

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நவம்பர் 8 ஆம் தேதியன்று, நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகச் செய்துள்ள அறிவிப்பு அதிர்ச்சியையும், மிக்க வேதனையையும் தருகிறது.

பலநுhறு ஆண்டுகளாக ஆப்பிரிக்கக் கண்டத்துக் கருப்பு இன மக்கள் மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்டு, அமெரிக்க நாட்டிலும், உலகின் வேறு சில பகுதிகளிலும் கொடூரமாக வதைக்கப்பட்டதை ஆய்வு செய்தால் ரத்தக்கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது.

அமெரிக்க நாட்டில் கொடும் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு, மனிதர்கள் என்ற பட்டியலிலேயே இடம் பெறாமல் இருநத கருப்பர்கள், போராடிப்போராடி, சிறுகச்சிறுக உரிமைகள் பெற்று, 1863 ஜனவரி 1 இல் ஆப்ரகாம் லிங்கன் கருப்பர்களுக்கு வெளிச்சத்தைக் காட்டி, அதைத்தொடர்ந்தும் அவர்கள் போராடி, மகத்தான தியாகங்களைச் செய்து, 1963 இல் பல லட்சம் மக்களிடையே மார்ட்டின் லுhதர் கிங் ‘நான் கனவு காணும் உலகம்’ என அறிவித்து, அவரும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டு, கருப்பர்கள் நடத்திய போராட்டப் பயணத்தில் உலகம் போற்றும் திருப்புமுனையாக ஒரு கருப்பு இனத்துத் தந்தையின் மகனாகப் பிறந்த பாரக் ஒபாமா அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவர் ஆகி உள்ளார்.

இந்திய தேசப்பிதா என்று போற்றப்படும் அண்ணல் காந்தியாரை மனிதகுலத்தின் ஒளிவிளக்காகப் போற்றுகின்ற பாரக் ஒபாமா, தன் அலுவலக அறையில் காந்தியாரின் படத்தையும் வைத்து உள்ளார்.

ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து வந்துள்ள பாரக் ஒபாமாவை, இந்திய மக்கள் வாழ்த்தி வரவேற்கக் கடமைப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இடதுசாரிக் கட்சிகள், அமெரிக்காவின் கொள்கைகள் இந்திய மக்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதால், பாரக் ஒபாமாவை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் எனக் கூறி உள்ளன.

பாரக் ஒபாமா, தனது தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி, ஈராக்கில் இருந்து பெருமளவு அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற ஆணை பிறப்பித்து உள்ளார். மீதம் உள்ள ஐம்பதாயிரம் பேரும், அடுத்த ஆண்டு இறுதிக்கு உள்ளாகத் திரும்ப அழைக்கப்படுவர் என்று உறுதி அளித்து உள்ளார்.

குவான்டனமோ வளைகுடா சிறைச்சாலையில் சித்திரவதை நிறுத்தப்பட்டு, அந்தச் சிறைச்சாலையையும் மூடுவதற்கு ஒபாமா உத்தரவிட்டார்.

அமெரிக்க நாட்டின் பொருளாதாரம், ஜார்ஜ் புஷ்ஷின் எட்டு ஆண்டுக்கால தவறான நிர்வாகத்தாலும், ஈராக் மீதான படையெடுப்பாலும் நொறுங்கிப் போய், மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவில் ஏற்பட்டு, பதினைந்து சதவீதம் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய், பல லட்சம் அமெரிக்க மக்கள் மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் இன்றிப் பட்டினியோடு போராட வேண்டிய அவலமும் ஏற்பட்டு, அனைத்து பாரங்களையும் சுமக்க வேண்டிய நெருக்கடிக்கு ஒபாமா ஆளாகி உள்ளார்.

உலகம் போற்றும் புரட்சியாளரான கியூபாவின் ஃபிடல் கேஸ்ட்ரோ அவர்கள், ‘பாரக் ஒபாமாவை, குறிக்கோளில் நேர்மையாளராகவே பார்க்கிறேன்’ என்று பாராட்டி உள்ளார்.

அமெரிக்காவையும், அதன் அதிபரையும் கடுமையாகச் சாடுகின்ற வெனிசூலா அதிபர் ஊஹோ சாவேஸ் அவர்கள்கூட, பாரக் ஒபாமா மீது கடுமையாக சவுக்கை வீசவில்லை.

அமெரிக்க அதிபருக்கு ஆவேசமான எதிர்ப்பைக் காட்டும் இடதுசாரிகளுக்கு ஒரு கேள்வி.

போபால் விஷவாயுக் கசிவால் எண்ணற்ற மக்கள் உயிர் இழந்தபின், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிறப்பு விமானம் மூலம் போபாலில் இருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அமெரிக்காவுக்கே பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட உண்மை அண்மையில் வெளியானதே, அதற்குக் காரணமான காங்கிரஸ் அரசைக் கண்டித்து, இடதுசாரிகள் நாடு தழுவிய போராட்டம் நடத்தினார்களா? இல்லை.

ஆப்கானிஸ்தானத்தில் அங்கிருந்த அரசுகளைக் கவிழ்த்து, ஒரு பொம்மை அரசாங்கத்தை உருவாக்கி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சோவியத் படைகளை ஆப்கானிஸ்தானத்தில் கொண்டு போய் சோவியத் ரஷ்யா நிறுத்தியதற்கு, இடதுசாரிகள் கண்டனம் தெரிவித்தது உண்டா?

இந்தியாவின் ஒரு பகுதியான அருணாசலப் பிரதேசத்தை, இந்தியப் பகுதியாக ஏற்றுக் கொள்ளாமல், தங்கள் பகுதி என்று வரைபடம் வெளியிடுகின்ற சீன அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியது உண்டா?

ஜம்மு காஷ்மீரில் இருந்து சீனாவுக்கு வருகின்றவர்களுக்கு, கடவுச்சீட்டில் முத்திரை இடாமல், தனித்தாளில் விசா கொடுப்பதும், பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ள இந்தியப் பகுதியை, பாகிஸ்தானுக்கு உரியது என்றும் சீனா அதிகாரபூர்வமாகச் சொல்லி வருவது குறித்து சீனாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, சீனப் பிரதமர் வென்ஜியாபோ, அடுத்து இந்தியா வருகின்றபோது, அவரை எதிர்த்து இடதுசாரிகள் நாடெங்கும் கண்டனப் போராட்டம் நடத்த முன்வருவார்களா?

இலங்கைத் தீவில் இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவிக்க இந்திய அரசு செய்ததைப் போல, சீன அரசும் ஆயுதங்கள் வழங்கியதே, அதை இடதுசாரிகள் கண்டித்தார்களா?

இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் கொடூரப் படுகொலைக்கு ஆளானபோது, தனது நாடு விடுதலைப்புலிகளைத் தடை செய்து இருந்தபோதிலும், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா, போரை நிறுத்தச் சொல்லி மூன்று முறை குரல் கொடுத்தார்.

முள்ளிவாய்க்கால் கொடூரம் நிகழ இருந்த நேரத்தில், 2009 மே 13 ஆம் தேதி, வெள்ளை மாளிகையில் ஒரு அவசர பத்திரிகையாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதில் வேறு பிரச்சினைகளில் பலர் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கும்போது, இலங்கைத் தீவில் தமிழர்களுக்குப் பெரும் அவலம் நேருகிறது என்று வேதனையோடு ஒபாமா அறிவித்ததையும், தமிழர்கள் மறந்துவிட மாட்டார்கள்.

கருப்பு இனத்தில் இருந்து, வெள்ளை மாளிகை அதிபராகி உள்ள பாரக் ஒபாமா அவர்களை, இந்திய நாட்டின் கோடானுகோடி மக்களும் கட்சி, மத எல்லைகளைக் கடந்து வாழ்த்தி வரவேற்க வேண்டுகிறேன்.

இடதுசாரிகள், தங்கள் போராட்ட அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்

தாயகம், வைகோ,
சென்னை -8 பொதுச் செயலாளர்,
31.10.2010 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
Read More

Friday

முல்லை பெரியாறில் தமிழர் உரிமை காக்க வைகோ தலைமையில் உண்ணாவிரதம்

முல்லை பெரியாறில் தமிழக மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் புதிய ஆணை கட்ட முதற் கட்ட பணிகளை துவக்கிய கேரள அரசையும் , ஆய்வு பணிக்கு அனுமதி வழங்கிய மத்திய தமிழர் விரோத காங்கிரஸ் அரசையும் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் மதுரையில் நாளை மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

ஏற்கனவே மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேசை கண்டித்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த திமுக பின்னர் ராஜாவின் ஷ்பெக்ட்ராம் ஊழலை மத்திய காங்கிரஸ் அரசு சிபிஐ மூலமாக விரைவு படுத்தி திமுக மத்திய அமைச்சர் ராஜாவின் அலுவலகம் முழுவதும் அதிரடி சோதனை செய்தார்கள் . இதையடுத்து கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துவதிலிருந்து விலகி கொண்டது திமுக. இப்படி ஊழல் விவகாரங்களுக்காக மக்கள் நலனை காற்றில் பறக்க விடும் திமுக அரசையும் கண்டித்து நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் மிகவும் முக்கியமானதாக கருத படுகிறது .

தென் மாவட்டங்களில் உள்ள ஐந்து மாவட்டங்கள் முல்ல்லை பெரியாறை நம்பி தான் விவசாயங்கள் இருக்கிறது . கேரளா அரசு திட்டமிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என வீண் புரளிகளை கிளப்பி விடுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காமல் , இந்திய இறையாண்மையை பற்றியும் கவலை படாமல் செயல் பட்டு வருகிறது . கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு சாதகமாக இருந்த வழக்கு தற்போது தமிழக அரசின் திறமையற்ற வாதத்தினால் கேரளத்திற்கு சாதகமாக செல்லும் நிலைமை ஏற்பட்டு உள்ளது . இதன் ஒரு பகுதி தான் வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றியது.

இந்த சூழ்நிலையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது . மாற்றங்களை உருவாக்குமா ? உண்ணாவிரத போராட்டம் .
Read More

Saturday

திருச்சி மண்டல மாநாடு வைகோவின் வெற்றி

திருச்சியில் நடைபெற்ற மதிமுக மண்டல மாநாடு பற்றி துக்ளக் வார ஏட்டில் வந்த செய்தி .


கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு விழா தொடக்கத்தை மதுரை மண்டல மாநாடாக நடத்திய மதிமுக இந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு விழாவை திருச்சி மண்டல மாநாடாக நடத்தியது .

கடந்த ஆண்டு மதுரை மாநாட்டில் ஊர் முழுக்க அண்ணாவின் படம் மற்றும் அண்ணாவின் பொன் மொழிகள் மட்டுமே கொண்ட பிளெக்ஸ் போர்டுகள் வைத்து பலரையும் கவர்ந்த மதிமுக இந்த முறையும் திருச்சியிலும் அண்ணாவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பேனர்கள் மற்றும் போர்டுகளை வைத்திருந்தது .

மாலையில் துவங்கி , இரவில் முடிந்த பொதுக்கூட்டம் தான் என்றாலும் கொடியேற்றம் , படங்கள் திறப்பு , புகைப்படக் கண்காட்சி , மலர் வெளியீடு , தீர்மானங்கள் போன்றவை மூலம் அது மாநாடாக அடையாளம் காட்டப்பட்டது . அரங்கத்திற்கு மறைந்த திருமங்கலம் எம் எல் ஏ வீர இளவரசனின் பெயர் சூட்டப்பட்டிருந்தது . கப்பல் வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்த கோடி மேடையும் மலைக்கோட்டை வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடை முகப்பும் கண்ணை கவரும் விதத்தில் இருந்ததன .

திறக்கப்பட்ட பாடங்களில் அன்பில் தர்மலிங்கம் படமும் ஓன்று , திமுக வை சேர்ந்த அன்பில் தர்மலிங்கம் படத்தை மதிமுக திறப்பது குறித்து சிறிய சர்ச்சை எழுந்த போதும் , அவரது படம் மாநாட்டில் திறக்கப்பட்டு , அவரது புகழும் அதிகம் பேசப்பட்டது . வைகோவை கருணாநிதி கட்சியிலிருந்து ஓரம்கட்ட முனைந்த போதெல்லாம் , அன்பில் தர்மலிங்கம் வைகோவிற்கு உறுதுணையாக இருந்த சம்பவங்கள் விவரிக்கப்பட்டன .



நாஞ்சில் சம்பத் மாநாட்டு தீர்மானங்களை வாசிக்க தொடங்கியதுமே மழை தூர ஆரம்பித்தது . தூறல் படிப்படியாகப் பெருமழையாக மாறிய போதும் தொண்டர்கள் பெரிதாக கலையாமல் நாற்காலியை குடையாக பிடித்தபடி அங்கேயே நின்றது ஆச்சரியம் தான் . மற்றவர்கள் பேச்சை நிறுத்தி விட்டு வைகோவை பேசும் படி சிலர் ஆலோசனை கூறினார்கள் . ஆனால் வைகோ அதற்கு மறுத்து எல்லோரும் பேசட்டும் என்று கூறி விட்டார் . மாநாட்டுக்கு வந்திருந்த வைகோவின் தாயார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரும் மலையில் நனைந்தபடி அமர்ந்திருந்தனர் .

அதிமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளரும் முன்னால் அமைச்சருமான ஒ . பன்னீர் செல்வம் கலந்து கொண்டார் . அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா , மதிமுக மாநாடு வெற்றிபெற அனுப்பிய வாழ்த்து செய்தியை வாசித்து விட்டு தனது பேச்சை தொடங்கினார் பன்னீர் செல்வம் .

" வைகோ நாடாளுமன்றத்தில் ஈழ தமிழர்குறித்து உரையாற்றிக் கொண்டிருந்த போது , அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி ஏதோ வேலையாக வெளியேற முற்பட்டார் . அதை பார்த்த வைகோ , பேச்சை நிறுத்தி விட்டு , மிஸ்டர் ராஜிவ் , நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இதை பேசுகிறேன் . முழுமையாக கேட்டு விட்டு செல்லுங்கள் ' என்றால் அதிரடியாக . அந்தளவிற்கு தைரியம் மிக்கவர் வைகோ . இப்படி ஒரு நபர் இருந்தால் தனது வாரிசுகளை மேலே கொண்டு வர முடியாது என்ற பயத்தில் தான் கருணாநிதி இவரை வெளியேற்றி விட்டார் . " என்று பன்னீர் செல்வம் குறிப்பிட்டார் .

மணி 10:30 ஐ தாண்டிய பிறகு தான் வைகோ பேச வந்தார் . காத்திருந்த தொண்டர்கள் மத்தியில் லேசான சலிப்பு ஏற்பட்டு போனது உண்மை .

வைகோவின் பேச்சில் முதலமைச்சர் நடத்தும் குடும்ப அரசியல் மற்றும் தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனைகள் விச்திரமாக இடம் பெற்றதோடு , ஈழ விவகாரமும் முக்கிய பங்கு வகித்தது . பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் . புலிகளின் போராட்டம் தொடரும் . தமிழ் ஈழம் மலரும் ' என்று தனது பேச்சில் குறிப்பிட்டார் வைகோ . வந்திருந்த மதிமுக தொண்டர்கள் பலர் , வழக்கம் போல் விடுதலை புலி பிரபாகரனின் படங்களை சட்டையில் குத்திக் கொண்டும் , கைகளில் ஏந்திக் கொண்டும் வந்திருந்தனர் . " மதிமுக கூடாரம் காலியாகி விட்டது " என்று திமுகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் வேளையில் , நல்ல கூட்டத்தை கூட்டி , நல்ல மழையிலும் , நள்ளிரவு வரையிலும் அந்தக் கூட்டத்தை காப்பாற்றிக் கொண்டது வைகோவின் வெற்றி என்றே கூறலாம் .




Read More

Sunday

குடியரசு குடும்பத்துக்கு வீடு கட்டி கொடுத்த வைகோ

திமுகவிலிருந்து வைகோவை கொலை பழி  சுமத்தி வெளியேற்றிய போது வைகோவுடன் வெளியேறி மதிமுகவில் இணைந்து கட்சியின் துணை போதுச்செயலாராக இருந்த மறிந்த கவிஞர் குடியரசு அவர்களின் குடும்பத்துக்கும் 50 லட்ச ருபாய் செலவில் வீடுகள் கட்டி இன்று  (12  July  2009) கொடுக்கபட்டிருக்கிறது .

தங்கள் கட்சிக்கு இரத்தமும், வியர்வையும் சிந்தும் தொண்டர்களையே சில அரசியல் தலைவர்கள் மறந்து விடுவார்கள். மரணத்துக்குப் பிறகோ, அவர்களது நினைப்பே இருக்காது. ஆனால், ம.தி.மு.க.வை இந்த விஷயத்தில் ஒரு முன்மாதிரி இயக்கமாக நிலை நிறுத்தி இருக்கிறார், வைகோ.


ம.தி.மு.க.வில் அங்கம் வகித்தவர் கவிஞர் குடியரசு. இவருக்கு ‘ஜனநாயகம்’ என பெயர் சூட்டியவர், தந்தை பெரியார். அதை அறிஞர் அண்ணா தமிழ்ப்படுத்தி ‘குடியரசு’ என்று ஆக்கினார். நல்ல கவிஞராக வலம் வந்த குடியரசு, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். உடல் நலம் குன்றி இறந்தார். ஆனால், அவர் குடிசையில் வாழ்ந்து இருக்கிறார். ‘அவருக்குத்தான் உதவ முடியவில்லை.

அவரது குடும்பத்துக்காவது உதவ வேண்டும்’ என்று வைகோ நினைத்தார். அதன்படி குடியரசுவின் மனைவி, பிள்ளைகள் என 8 பேருக்கு சென்னை அசோக் நகரில் ம.தி.மு.க. சார்பில் வீடுகள் (குடியரசு இல்லம்) கட்டிக் கொடுக்கப்பட்டது .

முன்னர் அடிக்கல் நாட்டும் விழாவில் வைகோ பேசியது .

“வறுமையின் பிடியில் வாடிய கவிஞர்கள் ஏராளம். ‘என் வாழ்நாளில் பொன் மோதிரம் போட்டுக் கொண்டது இல்லை’ என்றானே கவிஞன் பாரதி. அவனும் வறுமையில் போராடி இருக்கிறான். குடியரசு அவர்கள், வடசென்னையில் புறாக்கூடு போன்ற இல்லத்தில் வசித்தபோது, அங்கே பலமுறை சென்று நான் சந்தித்து இருக்கிறேன். அதற்கு உள்ளேயும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள். அதை அடுக்கி வைப்பதற்கு இடம் கிடையாது. பாதுகாப்பதற்கு வசதிகள் கிடையாது.

‘இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் இருக்கிறாரே?’ என்று நான் நினைத்தேன். அதன்பின்னர் அவர் அசோக் நகரில் இருந்தார் என்பது சில காலம் எனக்குத் தெரியாமலே இருந்தது. ஒருநாள் காலை வேளையில் கடலூரில் நான் இருந்தபோது, ‘குடியரசு மறைந்தார்’ என்ற செய்தி இடியென வந்து தாக்கியது. நாங்கள் ஓடோடி வந்தோம். ஓலைக்குடிசைக்கு முன்னால் அவரது உடல். அப்பொழுது அந்தக் குடிசையின் தோற்றத்தைப் பார்த்து, ‘இந்தக் குடிசையில்தான் கடைசிக் காலத்தில் பல மாதங்களைக் குடியரசு கழித்தாரா?’ என்று நான் அதிர்ச்சி அடைந்தேன். என் மனத்தில் வேதனை நிறைந்தது.

அப்பொழுது குடியரசு அவர்களின் பிள்ளைகள் இசைவாணனும், பாரதிதாசனும் சொன்னார்கள். “ஒருநாள் அப்பாவிடம், ‘குடிசைக்கு உள்ளே மழைத் தண்ணீர் ஒழுகுகிறது. கீழே மண் தரை சேறாக மோசமான நிலையில் இருக்கிறது. இந்தக் கூரையையாவது மாற்றித் தரச்சொல்லி பொதுச் செயலாளரிடம் நாங்கள் உதவி கேட்கிறோம்’ என்றோம்.

அதற்கு அப்பா ‘அந்தத் தம்பியே ரொம்ப கஷ்டப்படுகிறது இதை எல்லாம் அவரிடம் சொல்லாதே, எங்காவது பழைய ‘பிளா°டிக்’ விரிப்பு கிடைத்தால் அதை வாங்கி வந்து குடிசையின் ஓட்டையை மறைக்குமாறு மேலே போடு. மழைக் காலத்தைக் கொஞ்சம் தாக்குப் பிடிக்கலாம்’ என்று பதில் சொன்னார்” என்று கூறியபோது, மழைத் துளிகளைப் போல எங்கள் விழிகளிலும் மழை பெய்தது.

குடியரசின் உடலை பூமியில் புதைக்கிறபோது “இந்தக் கவிஞரின் பிள்ளைகள் வாழ்வதற்கு ம.தி.மு.க. வீடுகள் கட்டிக் கொடுக்கும்” என்று சொன்னோம். அந்த விதத்தில், குடியரசின் துணைவியாரும், அவரது வாரிசுகளும் வாழ்வதற்கு எட்டு இல்லங்கள் - எளிய சிறிய இல்லங்களை நாங்கள் கட்டிக் கொடுக்க இருக்கிறோம்” என்றார், வைகோ.

குடிசையில் வசித்த ஜீவாவின் மனைவிக்கு அன்று அரசு வேலை கொடுத்தார், காமராஜர். இன்று குடிசையில் வசிக்கும் கட்சி நிர்வாகியின் குடும்பத்துக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கிறது ம.தி.மு.க. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு இது ஒரு நல்ல முன் உதாரணச் செயல் என்றால் மிகை இல்லை.
Read More

Send your Status to your Facebook