Tuesday

கிளிநொச்சி நோக்கிய ஐந்து முனை முன்நகர்வு புலிகளால் முறியடிப்பு: 100 படையினர் பலி; 250 பேர் படுகாயம்

கிளிநொச்சியை வல்வளைக்கும் நோக்கில் ஐந்து முனைகளூடாக முன்நகர்வு முயற்சியை மேற்கொண்ட சிறிலங்கா படையினரை வழிமறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு முனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. ஏனைய மூன்று முனைகளிலும் மோதல் தொடர்கின்றது. இதில் இதுவரை 100 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 250 பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளதாவது:
கிளிநொச்சியை வல்வளைப்புச் செய்யும் நோக்கில் உருத்திரபுரம் பகுதி ஊடாகவும், இரணைமடு நோக்கிய மூன்று முனைகளூடாகவும், குஞ்சுப்பரந்தன் பகுதிகளில் இரு முனைகளூடாகவும் இன்று திங்கட்கிழமை காலை 5:30 மணியளவில் ஆட்டிலறி, பல்குழல் பீரங்கித் தாக்குதல் மற்றும் மோட்டார் தாக்குதல்களின் ஆதரவுடன் முன்நகர்வு முயற்சியை பெருந்தொகையான சிறிலங்கா படையினர் மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வு தாக்குதல்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை பிற்பகல் 12.45 மணிவரைக்கும் நடத்தியுள்ளனர்.
கிளிநொச்சிக்கு தெற்காக இரணைமடுப் பகுதி நோக்கியும், அதேபோல் கிளிநொச்சிக்கு மேற்கில் உருத்திரபுரம் பகுதி ஊடாகவும் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட இருமுனை முன்நகர்வு முயற்சிகள் முறியடிக்கப்பட்டு பெரும் இழப்புக்களுடன் படையினர் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.
இவ்விருமுனை முறியடிப்புத் தாக்குதல்களில் படையினர் தரப்பில் இதுவரை 100 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்ட படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் களமுனையில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன என விடுதலைப் புலிகளை மேற்கோள் காட்டி புலித்தேவன் தெரிவித்துள்ளார்.
மேலும் மூன்று முனைகளில் படையினரின் நகர்வுகளை முறியடிக்கும் தாக்குதல்கள் தொடர்ந்து விடுதலைப் புலிகளால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள இராணுவ அணிகளுக்கு ஆதரவாக விமானப்படையினர் வான்வழி தாக்குதல்கள் நடத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விபரங்கள் விரைவில்

நன்றி : தமிழ்வின்

0 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook