ஒரு தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் சாதி கட்சிகள் இரு கூட்டணிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. வருணாசிரம சித்தாந்தங்களால் சாதி ஒடுக்குமுறைகள் உயர் சாதியினரால் கீழ் சாதியினரின் மீது ஏவ பட்டது. காலங்கள் மாற மாற ஒரே சாதியால் அனைத்து மக்களும் தீண்டதகாதவர்களாக பார்க்க பட்டு பின்னர் படிப்படியாக தீண்டாமை கொடுமையிலிருந்து ஒவ்வெரு சாதியாக மீண்டு வந்த பின்னர் தனக்கு அடுத்தபடியாக இருப்பவர்களை தான் அனுபவித்த அதே கொடுமைகளை அனுபவிக்க வைத்து கொண்டிருப்பது தான் மிக பெரிய கொடுமை .
தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும் ஒடுக்க பட்ட மக்கள் முன்னேற வேண்டும் என்று சாதிகள் பெயரால் யாரும் ஒடுக்க படகூடாது என்று பெரியார் பிரசாரங்களை முன்னெடுத்து சாதிகளுக்கு எதிராக கடுமையாக போராடினார் . பெரியாரால் உருவாக்க பட்ட திராவிடர் கழகம் தான் இன்று தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்யும் திராவிட கட்சிகளின் தாய் கழகம் .
திராவிட கழகத்தின் வழி தோன்றல்களான அதிமுக , திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் தலைமையில் மிக பெரிய கூட்டணி கட்சிகள் இந்த சட்ட மன்ற தேர்தலை சந்திக்கின்றன. ஏற்கனவே ஒவ்வெரு தொகுதி வாரியாக எந்த சாதியினர் எந்த மதத்தினர் அதிகம் இருக்கின்றனரோ அவர்களுக்கு தான் இந்த கட்சிகள் போட்டியிட அனுமதிக்கின்றன. ஆனால் இந்த தேர்தலில் அந்த இடங்களை நிரப்ப முதன் முதலாக சாதி கட்சிகளுக்கு போட்டியிட இரு கூட்டணியும் இடம் கொடுத்திருக்கிறது.
எந்த கட்சியும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்ற நிலையில் இரு கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு சாதி கட்சிகளை கூட்டணிக்குள் சேர்த்து கொள்கின்றன. முதன் முதலில் சாதி கட்சியாக தமிழகத்தில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி எந்தவொரு கொள்கையோ லட்சியமோ இல்லாமல் யார் அதிகம் தொகுதி தருவார்கள் என்று அந்த கூட்டணியில் ஒவ்வெரு தேர்தலிலும் சேர்ந்து கொள்வது வாடிக்கையாகி வருகிறது . அதே போல் விடுதலை சிறுத்தைகள் .
இந்த தேர்தல்களில் புதிதாக கொங்கு நாடு முன்னேற்ற கழகம் இது கோவை பகுதியை மையமாக கொண்ட ஒரு குறிப்பிட்ட சாதி கட்சி இது திமுகவுடன் கூட்டணியில் போட்டியிடுகிறது . அதே பகுதியை சேர்ந்து கொங்கு இளைஞர் பேரவை அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. மூவேந்தர் முன்னேற்ற கழகம் , வாண்டையார் கட்சி , குடியரசு கட்சி , புதிய தமிழகம் போன்ற சாதியை மையமாக கொண்ட கட்சிகள் பல திமுக அதிமுக கூட்டணிகளில் மாறி மாறி போட்டியிடுகின்றன மேலும் பல சாதி சங்கங்கள் இந்த கட்சிகளுக்கு அதரவு கொடுத்திருக்கின்றன. மேலும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறது . இதில் பெரிய கூத்து என்னவென்றால் அதிமுக கூட்டணியுடன் தொகுதி பங்கீடு முடிய ஒரு நாளுக்கு முன்னர் தான் நாடார் சங்கங்கள் சேர்ந்து சரத்குமாரை தலைவராக கொண்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி ஒன்றை ஆரம்பித்தார்கள் . ஆரம்பித்த மறுநாளே சரத்குமாரை கட்சியிலிருந்து நீக்கி விட்டார்கள் .
பெருந்தலைவர் மக்கள் கட்சி திமுக கூட்டன்னியில் ஒரு தொகுதி வாங்கி போட்டியிட போகிறது. தன்னை ஒரு சாதியின் பெயரால் முன்னிலை படுத்தாமல் அனைத்து மக்களுக்காகவும் உழைத்த பெருந்தலைவரை சாதி கட்சிக்கு சூட்டியதே மிக பெரிய கொடுமை . இன்னும் சில நாட்களில் பெரியார் பெயரில் கூட சாதி கட்சிகள் தோன்றலாம் . இதே நிலை நீடித்தால் சாதிகளுக்குள்ளான உள் அமைப்புகளுக்கென கட்சிகள் உருவாகும் . இன்னும் பல சாதி கட்சிகள் உருவாகும் . இந்த சாதி கட்சிகளுக்கெல்லாம் தொகுதி ஒதுக்கி விட்டால் திராவிட கட்சிகள் போட்டியிட தொகுதிகளே இருக்காது.
சாதி கட்சிகள் வளருவதால் மக்கள் மத்தியில் சாதி வேற்றுமைகள் உருவாகும் . வழியில் காணும் நபர்களிடம் உன் சாதி என்ன என்று மாறி மாறி விசாரிக்க தோன்றும். மக்கள் மத்தில் சாதி வெறி உருவாகும் . சில சாதி சங்க பண பட்டுவாடாக்களிலேயே ஊழல் இல்லாத நிர்வாகம் கொடுக்க முடியாத சாதி சங்கங்களால் நல்ல மக்கள் பிரதிநிதியாக செயல் பட முடியுமா?
நாளை சாதி கட்சிகளின் மூலம் தேர்ந்தெடுக்க படும் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு உண்மையாக பணியாற்றுவார்களா ? சாதி என்ன என்று கேட்டு மக்கள் நலனில் செயல்பட மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் .
எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைத்து சாதி சங்கங்களையும் சாதி கட்சிகளையும் இணைத்து கொள்ளும் திராவிட கட்சிகளே இந்த தேர்தல் உங்கள் முடிவுக்கு நீங்கள் எழுதும் முன்னுரை என்பதை மறந்து விடாதீர்கள் .
8 கருத்துக்கள்:
தமிழகத்தில் இது ஒரு தவறான முன்னுதாரணம் . சாதி கட்சிகள் வளர்ந்து பாமக கேட்பது போல் ஒவ்வெரு சாதிக்கும் தனி தனி மாநிலம் கேட்பார்கள் .
அருமை, மிகத்துள்ளியமான அலசல். என்ன சொல்ல சுரேஷ்குமார்பார்க்கிற கேட்கிற சங்கதிகள் நெஞ்சைப்பதற வைக்கின்றன.சாதி என்கிற ஒன்று இந்த தேசத்திலே இல்லாதது போலப்பாசாங்கு செய்கிற பதிவுகள் நிறைந்த இந்த வலையில் வருகிற அரிதான பதிவு இது. இதில் என்ன கொடுமையென்றால் அப்படியே அரை வட்டமடித்து கடந்து போய்விடுவார்கள். உண்மை சுடும்.
ஆமாம் இது ஒரு மோசமான துவக்கம் . திராவிட கட்சிகளே அழிந்து போகிற சூழ்நிலைகள் உருவாகலாம்
skaamaraj said...
அருமை, மிகத்துள்ளியமான அலசல். /////////////
நன்றி காமராஜ்
என்ன சொல்ல சுரேஷ்குமார்பார்க்கிற கேட்கிற சங்கதிகள் நெஞ்சைப்பதற வைக்கின்றன.சாதி என்கிற ஒன்று இந்த தேசத்திலே இல்லாதது போலப்பாசாங்கு செய்கிற பதிவுகள் நிறைந்த இந்த வலையில் வருகிற அரிதான பதிவு இது.////////////////
இப்படி சாதிகள் பெயரால் கட்சி துவங்கும் இவர்களால் நல்லது செய்ய முடியுமா ? ஒவ்வருவரும் அவரவர் பங்கிற்கு கொள்ளையடிக்க தான் பார்ப்பார்களே தவிர நல்ல நிர்வாகத்தை செயல் படுத்த மாட்டார்கள் .
இதில் என்ன கொடுமையென்றால் அப்படியே அரை வட்டமடித்து கடந்து போய்விடுவார்கள். உண்மை சுடும்.
///////////////////
சாதி சங்கங்களிலேயே ஊழல் செய்து அதிலேயே பல அடி தடிகளை நடத்துகிரவர்களுக்கு உண்மை சுட தான் செய்யும் .
சாதி கட்சிகளால் சாதிக்கு முன்னேற்றம் இருக்கோ இல்லையோ அதிமுகவிற்கும் அதிமுகர்விற்கும் முன்னேற்றம் இருக்கும் .
Anonymous said...
சாதி கட்சிகளால் சாதிக்கு முன்னேற்றம் இருக்கோ இல்லையோ அதிமுகவிற்கும் அதிமுகர்விற்கும் முன்னேற்றம் இருக்கும் /////////////////////
நிரந்தர முன்னேற்றமாக இருக்க வாய்ப்பு இல்லை
Thanks Ram
சாதிக்கட்சிகளால் சாதி வளர்கிறதா இல்லை சாதியால் சாதிக்கட்சிகள் வளர்கின்றனவா?
Post a Comment