இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label மொக்கை. Show all posts

Tuesday
திமுகவிற்கு 121 தொகுதிகளை ஒதுக்கி சுயமரியாதையை காத்த சோனியாவுக்கு கலைஞர் பாராட்டு
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
திமுக கூட்டணி,
தேர்தல் 2011,
நகைச்சுவை,
மொக்கை
எழுதிய நேரம்
Tuesday, March 08, 2011
ஒரு வழியாக ராஜினமா செய்வேன் என மிரட்டிய திமுகவிற்கு அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக தொகுதிகளாக 121 தொகுதிகளை கொடுத்து திமுகவின் சுயமரியாதைக்கு இழுக்கு வராமல் பார்த்து கொண்ட சோனியாவிற்கு திமுக தொண்டர்கள் சார்பாகவும் , கலைஞரின் குடும்பம் சார்பாகவும் பாராட்டுகளை கலைஞர் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்லாது குட்ட குட்ட குனிய கூடாது என சொல்லி உறங்கி கிடந்த திமுகவின் சுயமரியாதையை தட்டி எழுப்பி 121 தொகுதிகள் கிடைக்க காரணமான திராவிடர் கழக பொதுச்செயலாளர் கீ . வீரமணியும் சோனியாவை பாராட்டி சுயமரியாதை காத்த வீராங்கனை என்ற பட்டம் கொடுத்திருக்கிறார் .
தெருவெங்கும் திமுக தொண்டர்கள் கூடி தலைவரின் ராஜ தந்திரத்திற்கு கிடைத்த வெற்றி தான் 121 தொகுதிகள் என தலைவர் கருணாநிதியை பாராட்டி இனிப்பு வழங்கியும் பட்டாசு கொளுத்தியும் வெற்றியை கொண்டாடி வருகின்றானர் . தமிழகம் முழுவதும் விழாகோலம் பூண்டிருக்கிறது . விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் அறிவாலயத்திற்கே சென்று கலைஞருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் . இவர் தான் காங்கிரஸ் கட்சியை விளக்கியவுடன் ராஜதந்திர ரீதியில் காய் நகர்த்தி கம்யூனிஸ்ட் கட்சிகளை அழைத்து கலைஞரின் சுயமரியாதை காக்க உதவி செய்தவர் .
இதில் முக்கியமாக கலைஞரின் சுயமரியாதை மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழரின் சுயமரியாதையை இத்தாலி சோனியா காந்தி காத்திருப்பதை நினைத்து ஒட்டு மொத்த தமிழக மக்களும் மகிழ்ச்சி கடலில் மூழ்கியிருக்கின்றனர் . திமுக தொண்டர்கள் அனைவரும் சட்டை காலரை தொக்கி விட்டு இத்தாலி ராஜதந்திரம் எங்ககிட்ட பலிக்க நாங்க என்ன டீனா......... டூனாவா என கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . அதே நேரம் காங்கிரஸ் தொண்டர்கள் கருணாநிதியிடம் இத்தாலி ராஜதந்திரம் பலிக்கவில்லையே என சோகத்தில் ட்ஸாமாக் கடையிலிருந்து குவார்டர் போட்டு குப்புற படுத்து விட்டார்கள் .
நாமும் மகிழ்ச்சியை கொண்டாட வேண்டாமா ? ................ திமுகாவின் சுயமரியாதையை காத்த சோனியா வாழ்க!
தமிழகத்தின் சுயமரியாதையை ராஜதந்திர ராஜினாமாவால் காத்த கலைஞர் வாழ்க!
இத கூட சொல்லலைனா நாளைய வரலாறு நம்மை மன்னிக்காது
Sunday
Orkut சர்வர் என்னமா காமெடி அடிக்குது
எழுதியது
Suresh Kumar
Labels:
Orkut,
காமெடி,
தொழில்நுட்பம்,
நகைச்சுவை,
மொக்கை,
ஜோக்
எழுதிய நேரம்
Sunday, December 19, 2010
என்னுடைய அலை பேசியில் ஆர்குட் பக்கத்தை திறந்ததும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் எனக்கு கிடைத்து . இப்படியெல்லாம் இருக்குமோ இல்ல என்னோட அலைபேசியில் தான் பிரச்சனையோ என்று யோசித்தேன் . இல்ல அலைபேசி இணையதள உலாவியில் பிரச்னை இருக்குமோ என் நினைத்தேன் . பின்னர் உலாவியை துண்டித்து மீண்டும் திறந்தேன் அதே அதிர்ச்சிகரமான செய்தி தான் .
ரூம் போட்டு யோசிக்கிறது இது தானோ ? சர்வர் தகராறு செய்கிறது பக்கத்து கடையில் டீ சாப்பிட்டு விட்டு வாருங்கள் . அதிர்ச்சி இருக்காதா பின்ன .பின்னர் அப்படியே கீழ் பக்கம் துரதிர்ஷ்டவசமாக orkut.com எதிர்பாராத விதமாக நடந்து கொள்கிறது . சில நிமிடங்கள் கழித்து நீங்கள் முயற்சி செய்தால் உதவிகரமான நிலைக்கு வரலாம் . அப்படின்னு இருக்கு .
முடிவெட்டும் சலூன் கடைக்கு செல்லும் போது வாடிக்கையாளர் அதிகமாக இருந்தால் சலூன் கடை உரிமையாளர் வாடிக்கையாளரை கவரும் விதமாக டீ ஏதாவது சாப்பிட வேண்டியது இருந்தா சாப்பிட்டு வாங்க அதற்குள்ளால உங்க வரிசை வந்து விடும் என சொல்லுகிறமாதிரியே இப்போ ஆர்குட்லேயும் சொல்ல தொடங்கீட்டாங்க .......... ஐயோ சாமி தாங்கல யாருப்பா ஆர்குட் தமிழ் மொழி சர்வர கவனிக்கிறது . உங்களுக்கு எதாவது தரனும் போல இருக்கு சாமியோ ........... உடனே தொடர்பு கொள்ளுங்க .....
Friday
கலைஞரின் அயராத உழைப்பிற்கு மீண்டும் ஒரு விருது
எழுதியது
Suresh Kumar
Labels:
அண்ணா விருது,
அரசியல்,
கலைஞர்,
மொக்கை
எழுதிய நேரம்
Friday, October 02, 2009
தன்னுடைய தள்ளாத வயதிலும் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் உழைக்க கூடிய ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது கலைஞர் மட்டும் தான் . சிறு வயது முதலே தமிழ் மீது கொண்ட காதலால் தொடர் வண்டி ஏறி சென்னைக்கு வந்து தமிழ் வளர்த்த பெருமை கலைஞரையே சாரும் . அப்படி பட்ட பெரும் தலைவருக்கு எத்தனை விருதுகள் கொடுத்தாலும் தமிழுலகம் கொண்ட கடனை தீர்க்க முடியாது .
கோவில் படத்தில் வடிவேல் ஊரில் நானும் ரவுடி தான் என்று சொல்லி ஒவ்வெரு போட்டியாக பங்கு பெற்று அதில் தோற்று போய் விடுவார் . பின்னர் கடைக்கு சென்று நல்ல வெற்றி கோப்பையாக வாங்கி நான்கு பேரோடு ஊர்வலம் வருவார் நான் வெற்றி பெற்று விட்டேன் என . ஆனால் கலைஞரோ கொஞ்சம் வித்தியாசம் . ஏற்கனவே பல நூறு டாக்டர் பட்டங்கள் கையில் இருக்கிறது . அதே போல் அவருடைய சகாக்கள் மூலமாக அவர் வாங்கி கொண்ட விருதுகள் பல இருந்தாலும் விருது வாங்குவதில் அவரை போல் மகிழ்ச்சியடைய வேறு யாரும் இருக்க முடியாது .

நல்ல தலைவருக்கு எது அழகு மற்றவர்களை வளர்க்க வேண்டும் . நமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் . வளரும் தலைமுறையினருக்கு விருதுகள் கொடுத்து அவர்களை உற்சாக படுத்த வேண்டும் என தான் நினைப்பார்கள் . ஆனால் இவருக்கு மட்டும் என்ன சந்தோசமோ தானே விருதுகள் எல்லாவற்றையும் வைத்து கொள்வதில் . அண்ணா நூற்றாண்டு விழா துவக்கத்தில் ஒரு அண்ணா விருது , இப்போது ஒரு அண்ணா விருது என இரண்டு அண்ணா விருதுகள் ஆகி விட்டது . இப்படி அவங்களாகவே ஒரு அரக்கட்டலைய துவக்கி அவங்களுக்கே விருது கொடுப்பதை உலகத்திலே முதன் முதலா இங்க தான் பார்கிறேன் .
இந்த அண்ணா விருதை மற்ற்வார்களுக்கு கொடுக்கும் பொது கிடைக்கும் சந்தோசம் தெரியாதவராகவே வாழ்கிறார் கலைஞர் . ஏற்கனவே அண்ணாவிடம் மோதிரத்தை வாங்கி கொடுத்து தன் கையில் போட்டு விட வேண்டும் என்று சொல்லி போட்டு கொண்டவர் தான் என்று சொல்வதை நம்பாமல் இருக்க முடியாது . அதைவிட மிக பெரிய கேவலம் தமிழக அரசு கொடுக்கும் சினிமா விருதுகளை கூட தனக்கே வாங்கி கொண்டார் . அந்த விருதை வேறு ஒரு இளைய தலைமுறைக்கு கொடுத்தால் அந்த தலைமுறை எவ்வளவு உற்சாகமாக இருக்கும் .

மேற் சொன்ன விருதுகள் அனைத்துமே அவராலும் அவர் சகாக்களாலும் கொடுக்க பட்டது இனி அப்படி ஏதும் இல்லாமல் வலையுலகில் கொடுக்க படுகிற அனைத்து விருதுகளிலும் ஓன்று வலைப்பதிவாளர்கள் சார்பாக கொடுக்க பட வேண்டும் என அன்போடு கேட்டு கொள்கிறேன் . அதை துவக்கி வைக்கும் விதமாக சிறந்த வலை பதிவர் விருதை கொடுக்கிறேன் .
குறிப்பு : யாரும் கலைஞர் வலை பதிவு எழுதவில்லையே அப்புறம் எதுக்கு விருது என்று கேட்க கூடாது

இது உன்னை போல் ஒருவன் விமர்ச்சனமில்லை
எழுதியது
Suresh Kumar
Labels:
உன்னை போல் ஒருவன்,
பதிவர்கள் வட்டம்,
மொக்கை
எழுதிய நேரம்
Tuesday, September 22, 2009
கமல் தயாரித்து நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் உன்னை போல் ஒருவன் . இந்த படத்திற்கு ஏறக்குறைய ஐம்பத்து பேருக்கு மேல் பதிவுலகத்திலே விமர்ச்சனங்கள் எழுதியாயிற்று அதில போய் நானும் விமர்ச்சனம் எழுதி ஐம்பதில ஒண்ணா ஆக விரும்பல .அதன் தொகுப்பை பார்க்க விரும்புவர்கள்இங்கே செல்லுங்கள் .
மிகவும் அருமையாக படம் வந்திருக்கிறது என்று ஒரு சாரார் வழக்கம் போல் சொல்லுகின்றனர் . கமலின் நடிப்பு பிரமாதம் , இது தமிழ் சினிமாவுலகிர்ற்கு கிடைத்த மிக பெரிய வரம் , இது ஒரு இந்திய பார்பனியர்களுக்கு ஆதரவு திரட்டும் படம் , முஸ்லிம்களுக்கு எதிரான படம் இப்படியெல்லாம் பல வகைகளில் விமர்ச்சனங்கள் வருகிறது . கிராமத்தில ஒரு பழமொழி சொல்லுவாங்க காய்க்கிற மாவில தான் கல்லெறி படும் என்று . அதே போல படம் நல்லா இருப்பதால் தான் இத்தனை விமர்சனங்கள் என புரிந்து கொள்ள முடிகிறது .

கமல் சினிமா உலகத்திற்கு கிடைத்த நல்ல ஒரு நடிகன் நல்ல கலைஞன் . சிலர் நடிக்கவே தெரியாமல் சும்மா நான்கு துள்ளியே படத்தை ஓட்ட பார்கிறவர்கள் மத்தியில் கமல் உழைப்பையும் சேர்த்து மூலதனமாக்குவதில் வல்லவர் என்பதை நான் சொல்லி தெரிந்து கொள்ளும் நிலையில் இல்லை . எல்லா தயாரிப்பாளர்களும் நினைக்கிறது போல இந்த தயாரிப்பாளர் கமலும் படத்துக்கு நல்ல வசூல் வர வேண்டும் என்று தான் நினைப்பார் . கமலை பொறுத்த வரையில் இது ஒரு தொழில் . நல்லா படம் ஓடினால் போட்ட முதலையும் எடுத்து கொஞ்சம் லாபமும் பார்க்கலாம் அவரின் எண்ணம் அப்படி தான் இருக்கும் .
ஆனால் நம் மக்களின் எண்ணங்களை பார்க்கும் பொது தான் .............................
அதாவது சின்ன திரை சீரியலை பார்த்து அழுது கொண்டிருப்பதும் அந்த நாள் முழுவது அதை பற்றிய சிந்தனையில் நாட்களை ஒட்டுவதுமாக இருப்பது போல இங்கே கமல் படத்தை எடுத்த நோக்கம் என்ன கமல் இதன் மூலம் என்ன செய்தியை சொல்ல வருகிறார் என்று ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள் . ஒவ்வேருவரின் விமர்சனங்களை பார்க்கும் போது ஏதோ சினிமாவ பார்த்து விமர்சனம் செய்தது போல் இல்லாமல் ஏதோ கொள்கைக்காக படம் எடுக்கும் கமலின் படங்களை விமர்சிப்பது போல் இருக்கிறது .
பொதுவாக சினிமாவில் காட்டப்படும் நிகழ்வுகள் அல்லது சொல்லப்படும் செய்திகள் நிஜ வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை தான் .அதற்காக ஒரு லட்சியத்தோடு வாழும் மகான்களிடமும் , கொள்கைவாதிகளிடமும் எதிர்பார்க்கும் கருத்துக்களை கமலிடம் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் . கமலுக்கு சினிமா ஒன்றும் பொழுது போக்கு அம்சமுமில்லை , தன் கொள்கைகளை வெளிக்காட்டும் ஊடகமும் இல்லை . கமலுக்கு சினிமா ஒரு தொழில் அவ்வளவு தான் . சினிமாவ பார்த்தமா குடுத்த காசுக்கு பராயில்லாம டைம் பாஸ் ஆச்சா அப்படின்னு போறத விட்டுட்டு ஆராய்ச்சியெல்லாம் .... தேவையில்லை தானே ................
நான் இன்னும் படம் பார்க்கலீங்கோ .....

கும்மிக்கு பஞ்சமில்லாத இவ்வார பதிவுலகம்
எழுதியது
Suresh Kumar
Labels:
அனுபவம்,
பதிவர் வட்டம்,
பதிவுலகம்,
மொக்கை
எழுதிய நேரம்
Friday, July 24, 2009
இந்த வாரா துவக்க முதலே பதிவுலகம் மிகவும் சுவராஸ்யமாக இருந்தது . இந்த வாரத்தில் ஸ்பெசல் என்னவென்றால் பிடிக்காத பத்து பிடித்த பத்து என நகர்ந்தது . அதிலும் குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கிடையிலும் விஜய் ரசிகர்களுக்குமிடையிலான போட்டி மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. மொத்தத்தில் கும்மிக்கு பஞ்சமில்லாமல் இருந்தது .

விஜய் அஜித் ரசிகர்கள் மாறி மாறி தங்கள் மேலான ஆதரவினை அந்த நடிகர்களுக்கு வழங்கினர் . முதலில் சாளரம் கார்க்கி அவர்களால் பெண்ரசிகர்கள் ரசிக்கும் விஜயின் 10 என துவங்கி போட்டிக்கு அடித்தளமிட பட்டது . இதையடுத்து அதற்கு எதிர் பதிவாக அன்பு அவர்களால் விஜயிடம்ஆண் ரசிகர்களுக்கு பிடிக்காத 11 விசயங்கள் என தொடர்ந்தது . அதுவும் அமோக வரவேற்ப்பை பெற பிரியமுடன் வசந்த் அவர்களால் அஜித்ரசிகர்களிடம் பிடிக்காத 10 என தலைப்பிட்டு அஜித ரசிகர்களை பற்றி எழுத பொன்னியின் செல்வன் அவர்கள் அதிரடியாக விஜய் ரசிகர்களிடம்பிடிக்காத 10 பதிவிட்டார் .
ஒரு புறம் அஜித் விஜய் பற்றி பதிவு போட்டிருக்க மற்றொரு பக்கம் பத்து பத்த்களாக பதிவுகள் தொடர்ந்த வண்ணம் வந்தன . வால்பையனின்குடிகாரர்களிடம் பிடிக்காத பத்து , கேபிள் சங்கரின் ரசிகர்கள்விரும்பும் தமிழ் சினிமாவின் பத்து கலையரசனின் என் பிளாக்கில்எனக்கு பிடிக்காத 10 என்று தொடர்ந்து பத்து பத்துகளாக பதிவுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன . ( என்னவோ எல்லாம் சினிமா பட கதை சீசன் போல தான் ).

இந்த வாரத்தில் எல்லோருடைய பார்வையை திருப்பிய சக்திவேலை சொல்ல மறந்துட்டேன் . ஆம் அவர் ஒருவர் தான் நியாயமாக குறைகளையும் உரிமைகளையும் தட்டி கேட்டு அனைவருடையை பார்வையையும் தன் பக்கம் திருப்பினார் . அவரின் பதிவியை இந்த வாரம் பதிவர்கள் கும்மிக்கு பயன் படுத்தினார்கள் என்றால் பாருங்கள் . கும்மி சென்று ஒரு கட்டத்தில் சக்திவேலின் மனதை காய படுத்த திடீரென பதிவுலகத்தை விட்டுவெளியேறுவதாக அறிவித்தார் . அதுவும் அவரின் முழு பேட்டியும் சஞ்சய்காந்தி அவர்களால் வெளியிடப்பட்ட அன்று . என்பது குறிப்பிட தக்கது . இதையறிந்து பதிவுலகம் ஆடி போய் சக்திவேலிடம் நீங்கள் மீண்டும் எழுத வேண்டும் என கோரிக்கை வைத்தனர் . கோரிக்கைகளை ஏற்ற சக்திவேல் மீண்டும் பதிவுலகத்திற்கு சென்ற வேகத்தில் வந்தார் . நிம்மதி பேரு மூச்சு விட்டது பதிவுலகம் ( உண்மையாக ) .
இடையிடையே நையாண்டி நைனாவின் நக்கலுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது .
ஆகா சிங்கபூரா பற்றி சொல்லாம விட முடியுமா ? சிங்கை பதிவர்கள் தினம் நயன் தாரா , நமீதா , சிங்கபூர் அப்படி இருக்கு இப்படி இருக்கு என சிங்க போரை பார்க்க ஆசையை தூண்டி வருகிறார்கள் . அது தான் தமிழ் வெளி மற்றும் சிங்கை பதிவர்கள் இணைந்து நடத்தும் கட்டுரை போட்டி அதில் வெற்றி பெரும் மூன்று பேரை சிங்கபூருக்கு ஒரு வார சுற்றுலாவாக அழைத்து செல்கிறார்களாம் . சிங்கை பதிவர்கள் இடைவிடாமல் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றால் பாருங்களேன் . அவர்களின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது .

Thursday
இது எப்படியிருக்கு சும்மா ஜாலிக்கு
Google தேடல் கருவியில் funny படங்கள் தேடிய போது கிடைத்தது தான் . சும்மா நீங்களும் பார்த்து ரசியுங்கள்
Monday
காதலிக்கும் முன்னும் காதலித்த பின்னும்
வாழ்கையில் காதல் ஒரு இனிமையானது சோகங்களும் சுமைகளும் சுகமாவது காதலில் மட்டுமாகத்தான் இருக்க முடியும் . ஒரு வயதை தாண்டி விட்டால் தானாகவே காதல் ஏற்பட்டு விடுகிறது மனிதர்களுக்கு . எந்த ஒரு ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காதலித்திருக்க வேண்டும் அல்லது காதலிக்கப்பட்டிருக்க வேண்டும் .
காதல் தோல்வியில் முடிந்தவர்களும் உண்டு வெற்றியில் முடிந்தவர்களும் உண்டு . காதல் குடும்ப உறவுக்கு வந்த பின்னர் தோல்வியடைந்தவர்களும் உண்டு .பொதுவாகவே காதல் வெற்றியில் செல்கிறதா இல்லை தோல்வியில் செல்கிறதா என்பது ஒரு சாராரை பொறுத்ததில்லை இரு சாராரையும் பொறுத்தது . காதலிக்கும் முன் இவர்களின் மனநிலை எப்படி இருக்கும் காதலித்த பின் எப்படி இருக்கும் என்று பார்த்தல் மிகவும் சுவராஸ்யமாக இருக்கும் .
காதலிக்கும் முன் ஆண் பெண்ணை துரத்தி துரத்தி காதலிப்பார் . ஆனால் பெண்ணோ காதலித்த பின்னர் அந்த ஆணை துரத்தி துரத்தி காதலிப்பார் . ஆணின் மனநிலை எப்போதுமே அந்த பெண்ணை காதலிக்க வேண்டும் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருப்பார் . ஆனால் பெண்ணிற்கோ காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தாலும் வெளியில் காட்டாமல் ஆணை ஓட விட்டு கொண்டேயிருப்பார் . பெண்ணை காதலிக்க வைக்கும் வரை எவ்வளவு ஓட விட்டாலும் சலிக்கவே செய்யாது.
அந்த பெண் காதலை சொன்ன பின்னர் தான் பெண் அந்த ஆணை அதிகமாக காதலிக்க தொடங்குகிறார் . அதை விட முன்னர் எதையெல்லாம் தூரத்தில் இருந்த போது ரசித்தாளோ அதையெல்லாம் பக்கத்தில் இருந்து ரசிக்க நினைப்பாள். தன் காதலன் காதலிக்க துரத்திய போது எப்படி இருந்தாரோ அதே போல் இருக்க வேண்டும் என நினைப்பாள் . காதலனோ காதலியிடம் முன்னர் ரசித்த கோபம் குறும்புகளை பார்த்தல் கோபம் வரும் .
காதலிக்க முன்னர் இருந்தது காதலித்த பின்னர் தலைகீழாக மாறிவிடும் . இந்த நேரத்தை அவர்கள் தவறவிடும் போது காதல் தோல்வியில் கூட முடியும் . இருவருக்குமே அவர்கள் பக்கம் நியாயமாக இருக்கும் . பெண்ணுக்கு அவன் மாறிவிட்டான் அவன் என்னை இப்போது காதலிக்கவில்லை என எண்ண தோன்றும் . ஆணுக்கோ இப்பவும் அவள் நான் சொல்வதை கேட்க மாட்டேங்கிறா பழைய போலவே இருக்கிறாள் என எண்ண தோன்றும் . இந்த நேரத்தில் தான் காதலர்கள் விட்டு கொடுத்து யதார்த்தத்தை புரிந்து செயல் பட்டால் தான் காதல் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்லும் .
Wednesday
நாங்களும் fans வச்சிருக்கோமில்ல
கத்திரி வெயில் முடிந்தாலும் வெயிலின் கோரதன்மை குறைய இன்னும் சில நாட்கள் எடுக்கலாம் . தமிழ் சினிமாவில வடிவேலு இல்லைனாலே அது ஒரு மிக பெரிய வெற்றிடம் தான் .
நான் சென்னையில வேலை செய்த நேரத்தில் தான் காத்தவராயன் சினிமா திரைக்கு வந்தது . தினமும் போகிற போல அன்றும் வேலைக்கு சென்று கொண்டிருந்த பொது தான் . அதை பார்க்கவேண்டியதிருந்து . அதுதாங்க காத்தவராயன் பட போஸ்டர் . ஒரு பக்கம் சின்னதா படத்தின் நாயகன் கரண் . இன்னொரு பக்கம் சட்டையில் இரண்டு பட்டன்கள் திறந்த வண்ணம் வேட்டி ஒரு பக்கம் உயர்ந்தும் . சட்டை காற்றில் அசைவது போலவும் வடிவேல் போஸ் குடுத்திருப்பார் . பேக் ரவுண்டில டேபிள் பேன் சுத்திக்கிட்டே இருக்கிற மாதிரி இருக்கும் .
அந்த போஸ்டர்ல கொட்டை எழுத்தில போட்டிருந்த வாசகம் தான் நாங்களும் fans வச்சிருக்கோமில்ல . அது எதுக்குடா இவன் சொல்றான் என நினைக்காதீங்கோ . இது வரை நான் பயன்படுத்தி வந்த http://kotticodu.blogspot.com முகவரியானது இதற்கு http://www.sureshkumar.info மாறுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் .

Subscribe to:
Posts (Atom)