• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label ஜெயலலிதா. Show all posts
Showing posts with label ஜெயலலிதா. Show all posts

Saturday

தமிழகம் சிறையிலிருந்து விடுபடுமா ?

தமிழகத்தில் இரண்டு முதல்வர்கள், இருவருமே சிறைக்குள் இருக்கிறார்கள் என்பது போன்று விமர்சனங்கள்,  கிண்டல்கள்  சமூக உடகங்களில் வந்த வண்ணம் உள்ளன.  

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற  நாள் முதலே தமிழக அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. நான்கு ஆண்டுகளும் நூறு கோடி ருபாய் அபராதமாக தண்டனை விதிக்க பட்ட காரணத்தால் அந்த நேரம் முதலே சட்ட மன்ற உறுப்பினர் , முதல்வர் பதவியை ஜெயலலிதா துறக்க வேண்டிய கட்டயாம் ஏற்பட்டது.  

இதையடுத்து புதிய முதல்வர் பொறுப்பேற்க வேண்டிய சூழல் உருவானது. இந்நிலையில் அம்மாவின் நம்பிக்கையான அடிமை தமிழக முதல்வரானார். சினிமாவை மிஞ்சும் அழுகை காட்சிகளோடு பதவியேற்ற முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் தாடியோடு வளம் வந்து கொண்டிருக்கின்றன.  

ஆனால் இன்றும் தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாகி உள்ளது. அரசு நிர்வாகம் செயலிழந்து காணப்படுகிறது. தமிழக முதல்வர்   பதவி பறி போன ஜெயலலிதாவை ஜெயா டிவி மூலமாக மக்களின் முதல்வர் என்று அழைக்க துவங்கினர். அதிமுக அடிமைகள் மட்டுமல்லாது சில்லறை கட்சிகளாக இருக்கும் வேல்முருகன் போன்றோர்கள் கூட இந்த அளவிற்கு ஒரு ஊழல் குற்றவாளிக்கு ஆதரவாக செயல் படுவது அனைவர் முகத்தையும் சுளிக்க செய்தது..  

பன்னீர் செல்வம் முதல்வரானதும் அம்மாவின் ஆணைகினங்க பால் விலை உயர்த்த பட்டது . இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதிமுக சார்பில் வைகோ தலைமையில் ஆவின்  பால் விலையுயர்வை கண்டித்தும் , அப்பாவி தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்ததை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் வைகோ பேசும் போது  "தமிழகத்தில் இரண்டு முதல்வர்கள்; உள்ளனர். ஒருவர் நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்டு  தற்காலிக ஜாமீனில் வீட்டு சிறையில் உள்ளார் . இன்னொருவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிறையில் இருக்கிறார் " என்றார்..  

வைகோவின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் சிறையிலிருந்து விடுபடுமா ? 

Read More

Thursday

மாற்றம் விரும்பிய மக்களுக்கு ஏமாற்றம் கொடுத்த ஜெயா

18 ஆம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் ம.தி.மு.க-வின் கொடியை வைகோ ஏற்றிய ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சந்திப்பு இது...

''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து மே 13-ம் தேதியுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இந்த ஓர் ஆண்டு காலத்தை எப்படி மதிப்பிடுவீர்கள்?''

''மாற்றம் விரும்பிய மக்களுக்கு ஏமாற்றத்தையே ஜெயலலிதா தந்து இருக்கிறார் என்று, அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாவது மாதமே சொன்னேன். 'ஜெயலலிதா திருந்திவிட்டார்’ என்று சொல்லி வாக்குக் கேட்டவர்கள் அத்தனை பேர் முகத்திலும் கரியைப் பூசிவிட்டார் ஜெயலலிதா.

பால் விலையை ஏற்றிவிட்டார். பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டார். மின்சாரம் கொடுக்கத் திட்டமிடாமல் மின் கட்டணத்தை மட்டும் எகிறவைத்துவிட்டார். மளிகைப் பொருட்கள் அனைத்தின் விலையும் ஏறிவிட்டன. யாரெல்லாம் ஜெயலலிதாவை ஆட்சிக்குக் கொண்டுவர வாக்குஅளித்தார்களோ, அவர்கள் அனைவரின் பாக்கெட்டில் இருந்தும் பணத்தைப் பகிரங்கமாக அரசாங்கம் எடுத்துவிட்டது. ஏழை, நடுத்தர மக்கள் இதுபற்றிக் கோபப்படுவார்களே என்கிற பயமே ஜெயலலிதாவுக்கு இல்லை. 'இவ்வளவு கட்டணத்தை உயர்த்தியதற்குப் பிறகும் நான்தான் சங்கரன்கோவிலில் வெற்றி பெறுவேன்’ என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் பகிரங்கமாகச் சொன்னார். பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற மமதைதான் இதற்குக் காரணம். திருமங்கலம் ஃபார்முலாவைக் கண்டுபிடித்த கருணாநிதியின் பண பலம்தான் அவரை பாதாளத் துக்குத் தள்ளிவிட்டது என்பதை ஜெயலலிதா உணர வேண்டும்.''

'' 'நான் என்ன தவறு செய்வேன் என்று எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் காத்திருக்கின்றன’ என்கிறாரே ஜெயலலிதா?''

''பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பெயரால் அமைந்த நூற்றாண்டு நூலகத்தை முடக்க நினைத்தது சரியா? செம்மொழி நூலகத்தைப் பகிரங்கமாகவே அப்புறப்படுத்தியதை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்? சமச்சீர்க் கல்வியை முடக்குவதற்காக எத்தனை வக்கீல்களை வைத்து ஜெயலலிதா வாதாடினார்?

தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்திருக்குமானால், கடந்த ஆட்சி மீது விசாரணை நடத்தலாம். அதற்காக மக்களின் வரிப் பணத்தால் கட்டப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான கட்டடத்தை கவனிப்பார் இல்லாமல் போடு வேன் என்பது பாசிச அணுகுமுறை. கடந்த ஆட்சி செய்ததை எல்லாம் மாற்றுவேன் என்று அடுத்து வரும் ஆட்சி முடிவு எடுக்குமானால், ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தும் கேலிக்குரியவையாகி சவக்குழிக்குள் தள்ளப்படும்.''

''ஓர் ஆண்டு காலத்தில் நல்லதே நடக்கவில்லை என்கிறீர்களா?''

''பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்று தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வை வெளிப்படுத்தியது பாராட்டத்தகுந்தது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு சதி செய்ததும், அதற்கு மத்திய காங்கிரஸ் அரசு வாய் மூடி மௌனியாக இருந்தபோது, அறிக்கை வெளியிட்டு தமிழ்நாட்டு உரிமைக்காக ஜெயலலிதா நின்றதை வரவேற்கிறோம். தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் என்கிற பெயரால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படுகிறபோது, தைரியமாக அதனை எதிர்த்து உறுதியாக ஜெயலலிதா நிற்பது கவனிக்கத் தக்கது.''

''இந்த ஓர் ஆண்டு காலப் படிப்பினைகளின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு நீங்கள் ஆலோசனை ஏதேனும் சொல்ல முடியுமா?''

''மூன்று விஷயங்களை ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

ஜெயலலிதாவின் அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும். அரசியல்தலைவர் களால், மக்கள் பிரதிநிதிகளால், பாதிக்கப் பட்ட மக்களால் எளிதில் பார்க்க முடியாத மனிதராக அவர் இருக்கிறார். இப்படி நடந்துகொள்வது மன்னர் ஆட்சிக் காலத் தின் எச்சம். தெருத் தெருவாகச் சென்று மக்களிடம் ஓட்டு போடுங்கள் என்று கேட்டு வாக்கு வாங்கும் மக்கள் ஆட்சிக் காலத்தில், அனைத்துத் தலைவர்களும் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தப் பட்டபோது தமிழகத்தின் எத்தனையோ குடும்பங்கள் அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று பிரார்த்தித்தன. அலெக்ஸின் அப்பாவும் அலெக்ஸ் மனைவியின் அப்பா வும் தலைமைச் செயலகத்துக்குச் சென்று முதல்வரைப் பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டபோது கிடைக்கவில்லை. அவர்களை தமிழக முதல்வர் சந்திப்பது என்பது, அந்தக் குடும்பத்தின் பின்னால் மொத்தத் தமிழ்நாடும் இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு சமிக்ஞை. அதன் பிறகு, பிரதமருக்குக் கடிதம் எழுதினார் முதல்வர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களை அந்தச் சூழ்நிலையில் சந்திப்பதால், அப்பாயின் மென்ட் இல்லாமலேயே அவர்களைப் பார்க்க அனுமதிப்பதால் முதல்வர் குறைந்து விட மாட்டார். அவருடைய செல்வாக்கு உயரத்தான் செய்யும்.

இரண்டாவது... தமிழ்நாடு முழுவதும் கண்மாய், குளங்களில் மணல் கொள்ளை பகிரங்கமாக ஆளும் கட்சியினரின் ஆசீர்வாதத்துடன் பலமாக நடக்கிறது. ஆளும் கட்சியினருக்கு இன்று வருவாய் ஈட்டும் முக்கியமான தொழில்... மணல் திருட்டுதான். பிரதான ஆற்றுப் படுகைகள் மட்டும் அல்லாமல், சிற்றாறுகள், காட்டாறுகளைத் தேடிக் கண்டுபிடித்து மணல் அள்ளுகிறார்கள். தமிழ்நாட்டின் வளத்தை பட்டப் பகலில் சுரண்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதைத் தடுக்காவிட்டால், தமிழகமே பாலைவனமாகிவிடும்.

மூன்றாவது... சாராயக் கடைகள் மூலமாக வருமானம் அதிகமாவதை ஓர் அரசாங்கம் சாதனையாகச் சொல்வது கேவலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் குற்ற நடவடிக்கைகள் பெருகிப்போய், பண்பாட்டுச் சீர்கேடுகள் அதிகமானதற்கு டாஸ்மாக் கடைகள்தான் காரணம். ஜெயலலிதாவும் கருணாநிதியும் சேர்ந்து தமிழ்ச் சமுதாயத்துக்குச் செய்த பெருங்கேடு இது. இனி மதுக் கடைகளைப் புதிதாகத் திறக்கக் கூடாது; ஏற்கெனவே உள்ள கடைகளைப் படிப்படியாக மூட வேண்டும். எலைட் பார் வரவே கூடாது. தமிழ்நாட்டு ஆண்களின் கல்லீரலைக் கெடுத்த கழகங்கள் என்று வருங்கால சமுதாயம் இவர்கள் இருவரையும் சபிக்கும்!''

''ஈழப் பிரச்னைக்கு வருவோம். மீண்டும் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) தொடங்கி உள்ளாரே கருணாநிதி?''

''கூச்சம் இல்லாமல் பொய்கள் சொல்வதும் வெட்கம் இல்லாமல் வேடிக்கை காட்டுவதும் கலைஞர் கருணாநிதிக்குக் கைவந்த கலை. வசனம் எழுதி வாழ்க்கையைத் தொடங்கியவர் அதே வசனங்கள் இன்னமும் கை கொடுக்கும் என்று நினைக்கிறார். 80-களின் தொடக்கக் காலத்தில் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் எல்லாம் 'ஈழம்’ என்ற சொல்லை விதைத்த 'டெசோ’ அமைப்பின் கழுத்தை நெரித்துக் கொன்றவரே கருணாநிதிதானே! 24 ஆண்டுகளுக்கு முன் அவராலேயே கொன்று புதைக்கப்பட்ட உடலை மீட்டெடுத்து... பாடம் பண்ணி... படம் காட்ட வருகிறார். இது டெசோ அல்ல. வெறும் ஷோ!

யாழ்க் கோட்டையில் புலிக் கொடி பறந்தபோது வேடிக்கை பார்த்த அவர்... வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முக்கால் நிலப் பரப்பில் நிர்வாகத்தைத் தமிழீழ அரசாங்கம் நிர்வகித்தபோது கண்டுகொள்ளாமல் இருந்த அவர்... தரைப் படை, கப்பல் படை, விமானப் படை மூன்றும் பிரபாகரனுக்கு இருந்தபோது வயிற்றெரிச்சல் பட்ட இவர்... ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் களம் நின்ற காலத்தில் கண்டுகொள்ளாதவர்... உலகம் பயன்படுத்தும் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்திப் போரிட்டு நின்ற காலத்தில் அதை ஒரு பொருட்டாகக் கருதாதவர்... இன்றைக்குத் தமிழ் ஈழம் அமையப் பாடுபடுவேன் என்று பேசுவது பச்சை சந்தர்ப்பவாதம். கருணாநிதிக்கு இது இயல்பானது.

நான்காவது கட்ட ஈழப் போர் என்பது 2006-2009 காலகட்டத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷேவால் நடத்தப்பட்ட ரத்த வெறியாட்டம். இன்றைக்கு 'டெசோ’வை உயிர்த்தெழவைத்திருக்கும் கருணாநிதி, அன்று தமிழன் சாகாமல் இருக்கச் செய்த காரியம் என்ன? தமிழ் ஈழத்துக்காகக் குரல் கொடுத்தாரா? கருணாநிதிக்கு தைரியம் இருக்குமானால், நேர்மை இருக்குமானால், 2008 நவம்பர் மாதம் முதல் ஆட்சியைவிட்டு இறங்கியது வரை ஈழப் பிரச்னை குறித்து பேசியது, எழுதியது அனைத் தையும் பகிரங்கமாக வெளியிடட்டும். தமிழனுக்கு எதிராகப் பேசினார். தமிழீழக் கொள்கைக் குத் துரோகம் இழைத்தார். ஈழத் தமிழர்களின் காவல் அரணாக இருந்த விடுதலைப் புலிகளைப் பழித்தார். இலங்கை அரசோடு இணைந்து நாசகாரச் செயல்களுக்கு உடந்தையாக இருந்த மன்மோகன் - சோனியா கூட்டத்துக்கு ஆதரவாக இருந்தார். இந்தப் பாவத்துக்கு கருணாநிதியால் பரிகாரம் காணவே முடியாது.

தமிழர்கள், கருணாநிதியின் டெசோவை சீரியஸாக எடுத்துக்கொள்ளவே இல்லை. அவர் ஆண்டுக்கு ஒரு முறை கதை வசனம் எழுதும் படங்களைப் போலவே ஃப்ளாப் ஆகும் படங்களில் ஒன்று இது.''

''தி.மு.க-வில் ஸ்டாலின் - அழகிரி மோதல் தொடர்ந்து நடப்பதாகச் செய்திகள் வருகின்றனவே?''

''கொள்கைக் கட்சியில் விவாதங்கள் நடக்கும். குடும்பக் கட்சியில் கோஷ்டி மோதல்தானே நடக்கும்?

கருணாநிதியைப் போன்ற திறமையாளர்களைப் பார்ப்பது அரிது. அனைவரையும் ஈர்க்கக்கூடிய பேச்சு, வசீகரம் செய்யக்கூடிய எழுத்து, யாருக்கும் வாய்க்காத ஞாபக சக்தி, எவரையும் மடக்கும் சொற்சிலம்பம், ராஜதந்திரமாகக் காய்கள் நகர்த்துவதில் லாகவம், உலகத் தமிழர்கள் ஒருசேர வைத்திருக்கும் நம்பிக்கை - இத்தனையும் ஒருசேர இருந்தது கருணாநிதிக்கு. திறமையான அவருக்கு காலம் தங்கத் தாம்பாளத்தில் தலைவர், முதல்வர் என இரண்டு பதவிகளையும் ஒருசேர வழங்கியது. திறமையும் வாய்ப்பும் ஒருசேர ஒரு மனிதனுக்குக் கிடைத்தன. ஆனால், அத்தனை திறமைகளையும் சுயநலம், குடும்பப் பாசம் என்ற இரண்டின் காலடியிலும் கருணாநிதி கொண்டுபோய்ப் புதைத்துவிட்டதால் வரலாற்றின் முன் 'தமிழினக் குற்றவாளி’ என்ற பதற்றத்துடன் அவமானமாகத் தலைகுனிந்து நிற்க வேண் டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். இதைப் பார்த்து நான் சந்தோஷப்படவில்லை. பரிதாபப்படுகிறேன்.

எந்த இயக்கத்துக்காக என் இளமையின் பெரும் பகுதியை உழைப்பாக வழங்கினேனோ... எந்தத் தலைவனுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்து நின்றேனோ... அந்தத் தலைவன்... இப்படிப்பட்ட பழிச் சொல்லுக்கு ஆளாகிவிட்டாரே என்ற கவலையிலேயே பேசுகிறேன்!''

''அ.தி.மு.க., தி.மு.க. இரண்டையும் முழுமையாக நிராகரிக்கிறீர்கள். ஆனால், தமிழகத்தை இவர்கள் இருவரும் மட்டும்தானே மாறிமாறி ஆள முடிகிறது?''

''இரண்டு கட்சிகளுக்குமே வலிமையான வாக்கு வங்கி தமிழகத்தில் இருக்கிறது. இதுவே ஆட்சி அமைக்க சாதகமாக உள்ளது. அவர்களுக்கு இதுவே தைரியமும் கொடுக்கிறது. இந்த முறை தோற்றால்... அடுத்த முறை வந்துவிடுவோம் என்ற தைரியத்தில் இருக்கிறார்கள். இதனால் தவறை திருத்திக்கொள்ள முன்வருவது இல்லை.

இதைத் தமிழக மக்கள் உணர்ந்துவிட்டார்கள். தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கி வலிமை குறைந்துவருகிறது. புதிய, இளைய வாக்காளர்கள் இந்த இரண்டு கட்சிகளையும் நிராகரிக்கும் மனோபாவத்துக்கு வந்து உள்ளார்கள். மாற்றம் உடனடியாக வந்து விடும் என்று சொல்ல முடியாது. ஆனால், பல ஆண்டுகளுக்கு இது நீடிக்காது.''

''குறிப்பிட்ட அளவு செல்வாக்கு இருந்த, உங்க ளுடைய சொந்தத் தொகுதியான சங்கரன்கோவில் கூட ம.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பைத் தரவில்லையே?''

''எங்களை எதிர்த்து நின்ற மூன்று கட்சிகளுமே வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தன. ஓட்டுக்கு ஒரு பைசாவும் தர மாட்டோம் என்று சபதம் எடுத்து நாங்கள் நின்றோம். இத்தகைய சூழ்நிலையில் 21 ஆயிரம் பேர் வாக்களித்ததே வெற்றிக்குச் சமம்தான்!''


''புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நிற்பீர்களா?''

''இல்லை. பகிரங்கமாகப் பண வேட்டை நடத்தும் ஆளும் கட்சியும், அதைக் கை கட்டி வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையமும் இருக்கும் நாட்டில் இடைத் தேர்தலில் போட்டி என்பது தவறான முடிவாகிவிடும். பணத்துக்கு ஓட்டை விற்பது ஜனநாயகத்தில் விழுந்துள்ள ஓட்டை. இதை சங்கரன்கோவிலில் சரிசெய்ய முடியவில்லை. புதுக்கோட்டை மக்களாவது பணத்துக்கு விற்கும் பாவத்துக்குப் பலியாகிவிடக் கூடாது என்பதே என்னுடைய வேண்டுகோள்.''

- கை கூப்பி முடிக்கிறார் வைகோ
 
நன்றி :ஆனந்த விகடன்
Read More

ஜெயிலுக்கு தயாராகும் கொடநாட்டு இளவரசி

கருணாநிதியும் குடும்பமும் சேர்ந்து தமிழ் நாட்டை கூறு போட்டு வரும் வேளையில் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டும் என்று அனைவரும் ஓரணியில் திரண்டு கருணாநிதிக்கு எதிராக வருகின்ற தேர்தலை பயன் படுத்த நினைத்தார்கள். கருணாநிதிக்கு மாற்றாக ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்து விட கூடிய சூழல் உருவாக்கி வந்த வேளையில் யானை தன் தலையில் மண்ணை அள்ளி கொட்டுவது போல் ஜெயலலிதாவால் மதிமுக அலட்சியம் செய்ய பட்டது இன்று மக்கள் மத்தியில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.   

ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத போது ஜெயலலிதாவின் ஆணவம் அகங்காரம் குறைந்து மக்கள் நலனில் அக்கறை கொண்டவராகியிருப்பார் என நினைத்து கருணாநிதிக்கு மாற்றாக ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்தலாம் என பெரும்பான்மையானோர் நினைத்து உண்மை. அதற்கேற்றாற்போல் தான் முதலில் கள நிலவரங்களும் இருந்தன. ஆனால் இன்று நேர்மாறாக கள நிலவரங்கள் இருப்பது மட்டும் தெரிகிறது. 

தற்போதைய கள நிலவரங்களில் வேடிக்கை பார்ப்பவராக இருப்பதால் ஓரளவேனும் உண்மை நிலவரத்தை கணித்து சொல்ல முடியும். அதன் அடிப்படையில் ஒவ்வெரு கட்சி தொண்டர்கள், பொதுமக்களிடம் தேர்தல் நிலவரங்கள் குறித்து தெரிந்து கொண்டோம். அதனடிப்படையில் முன்னரை விட திமுகவினர் மிகவும் உற்சாகத்தோடு தேர்தல் பணியாற்றுகின்றனர். அதிமுக அணியில் ஒரு வித தொய்வு ஏற்பட்டுள்ளது. 

சிந்திக்கும் மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என விரும்புகின்றனர் ஆனால் அதே நேரம் கருணாநிதிக்கு பதிலாக ஜெயலலிதா என்பதை ஏற்று கொள்ள வில்லை. யார் இலவசங்கள் அதிகம் கொடுக்கிறார்கள் என்று பார்த்து வாக்களிக்கும் வாக்காளர்கள் பெருகி விட்டார்கள். இரண்டு கட்சி வாக்குறுதிகளையும் ஆராய்ந்து பார்க்கும் மக்கள் ஜெயலலிதா சொன்னதை செய்வார் என்பதை நம்ப தயாரில்லை. 

குமரி மாவட்ட நிலவரத்தை பார்த்தால் ஒரு தொகுதியில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதே கடினம். அப்படியே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் கூட அது கூட்டணி கட்சியின் வெற்றியாக தான் இருக்கும். அதிமுக போட்டியிடும் 4 தொகுதிகளில் 2 தொகுதிகளில் அதிமுக போட்டியிலே இல்லை என்பது தான் உண்மை. இதே போல் தென் மாவட்டங்களில் பெரும்பான்மை தொகுதிகளில் அதிமுகவின் தோல்வி உறுதி செய்ய பட்டுள்ளது.

கருணாநிதிக்கு மாற்றாக மக்கள் ஜெயலலிதாவை நம்ப தயாரில்லை. மதிமுகவை கூட்டணியிலிருந்து வெளியேற்றியவுடன் ஜெயலலிதா மீது மக்களுக்கு இருந்த கொஞ்ச நம்பிக்கையும் தகர்ந்து விட்டது என்பது மக்களிடம் பேசும் போது தெரிகிறது. மாற்றம் வேண்டும் என நினைத்தவர்கள் மத்தியில் யார் வந்தாலும் மக்களுக்கு பயன் இல்லை. ஆட்சிக்கு வரும் முன்னரே நச்சு ஆளை அதிபரிடமும் , சிங்கள இனவெறியன் ராஜபக்ஷேவிடமும் விலை போன ஜெயலலிதாவால் மக்களுக்கு எப்படி நல்லாட்சி தரமுடியும் என்பது தான் நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி. 

மேலும் தேர்தலுக்கு பின்னர் அதிமுகவோடு காங்கிரஸ் கூட்டணிக்கு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு எதிரான அலை மாறி ஜெயலலிதாவின் திமிர்தனத்திற்கும் மக்கள் விரோத கொள்கைக்கும் எதிரான தேர்தலாக மாறி விட்டது. இதிலிருந்தே அதிமுகவின் தோல்வி குறிக்க பட்டு விட்டது. 

கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதான எதிர் கட்சி ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து பின் வாங்கி கொட நாட்டில் ஓய்வெடுத்தது.  சிறந்த எதிர் கட்சியாக மதிமுக செயல் பட்டதன் விளைவாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட திமுகவிற்கு எதிரான அலையை பயன் படுத்த தெரியாமல் தோல்விக்கு தயாராகி கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. இவ்வளவு நாட்களும் வாய்தா வாங்கி காலம் கடத்திய சொத்து குவிப்பு வழக்கும் முடியும் தருவாயில் வந்து கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் ஜெயலலிதாவிற்கு ஜெயிலுக்கு போகும் வாய்ப்புகள் பிரகாசமாக அமையலாம். 

மீண்டும் ஒருமுறை எதிர்கட்சியாக அதிமுகவை ஜெயலலிதாவால் வழி நடத்த முடியுமா ?........                            
Read More

Monday

நேற்றைய கூட்டத்தில் பேசிய கருணாநிதியிடம் ஒரு கேள்வி ?

நேற்று நடந்த திமுக காங்கிரஸ் தேர்தல் பிரசார பொது கூட்டத்தில் தமிழனின் ரத்த கறையோடு வந்திருந்த சோனியா முன்னிலையில் பேசிய கருணாநிதி தமிழ் செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதிய போது எதிர்ப்பு தெரிவித்தவர் தான் ஜெயலலிதா இப்போது தமிழ் ஈழம் அமைப்பேன் என பேசியது வேடிக்கையாக இருக்கிறது என்றார் .

நமது கேள்வி :  அமைதி புறாவாக வலம் வந்த தமிழ் செல்வனை சிங்கள இனவெறி அரசு கொலை செய்த போது சென்னையில் இரங்கல் ஊர்வலம் நடத்திய வைகோ , பழ.நெடுமாறன் மற்றும் தொண்டர்களையும் நீங்கள் எதற்காக கைது செய்தீர்கள்? 

மருத்துவமனையில் இருக்கும் போது தமிழ் ஈழம் என்று ஏதோ சொன்ன மாதிரி இருந்திச்சி நேற்று ஏன் அத பற்றி வாய் திறக்கவில்லை சோனியாவ பார்த்து பயமா
Read More

Sunday

ஜெயலலிதாவின் தமிழ் ஈழ ஆதரவில் நாம் சிந்திக்க வேண்டியது என்ன ?

அதிமுக பொது செயலார் ஜெயலலிதா நேற்று சேலம் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் பொது ஈழ தமிழர்களின் வாழ்வுக்கு தமிழ்  ஈழம் ஒன்றே தீர்வு என உரையாற்றினார் .

அந்த உரையை நீங்கள் கேட்டிருக்கலாம் கேக்க வில்லையென்றால் இந்த இணைப்பில் செல்லவும் .

http://www.youtube.com/watch?v=BLa8EkxGz4c




சிங்கள இனவெறி அரசும் இந்திய காங்கிரஸ் அரசும் சேர்ந்து ஈழ தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட ஒரு இனபடுகொலையை நடத்தி வருகிறது . உலக தமிழர்கள் அனைவரும் இலங்கையில் இனபடுகொலைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள் .

மேற்குலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்க போன்ற நாடுகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்வதாக இல்லை . மேற்குலக நாடுகள் எச்சரிக்கும் போது இந்தியா நாடகமாடி அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி இலங்கை ராணுவத்திற்கு உற்சாகமூட்டி வருவது தான் வழக்கமாக இருக்கிறது .

தமிழகத்தில் ஈழ தமிழர்களுஉகு ஆதரவான போராட்டங்களை அரசியல் கட்சிகளும் அரசியல் காட்சிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கங்களும் நடத்தி வந்தன . இதன் மூலம் தமிழகத்தில் ஈழ தமிழர்களுக்காக ஆதரவும் தமிழர்களுக்காக தனி நாடு வேண்டும் என்ற அவசியம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது . இந்த நாடாளுமன்ற தேர்தல் ஈழ தமிழர்களுக்காக வாழ்வுரிமைக்கான தேர்தலாக மாறிவிட்டது . காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியான திமுக மீது ஒரு எதிர்ப்பலை தமிழகத்தில் ஏற்பட்டு விட்டது .

இந்த நிலையில் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என்று உறுதியுடன் ஜெயலலிதா நேற்று பேசியிருக்கிறார் . ஜெயலலிதா பேசியதின் பின்னணி என்ன இது வரை காலமும் விடுதலை புலிகளுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்து வந்த ஜெயலலிதா மற்றும் ஈழ தமிழர்கள் என்று அழைக்க கூடாது இலங்கை தமிழர்கள் என்றே நாம் அழைக்க வேண்டும் என சொன்ன ஜெயலலிதா முதன் முதலாக ஈழ தமிழர்களுக்காக தமிழ் ஈழம் போராடி நான் பெற்று தருவேன் என கூறி இருக்கிறார் .

வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்ஜி சமீபத்தில் இலங்கை சென்று இடம்பெயர்ந்த மக்களை பார்த்து வந்தார் . அதில் அவர் கூறியிருந்தார் பிச்சைகாரர்களையே காணாத இனம் இன்று யாரை கண்டாலும் கையேந்து நிலைக்கு ஆகியிருக்கிறது என்றார் . அவர் ஜெயலலிதாவையும் சந்தித்து அங்கு நடைபெற்ற முழுவிபரத்தையும் சொல்லியிருக்கிறார் மற்றும் ஒளிபடங்கள் வாயிலாக தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை விளக்கியிருக்கிறார் . இதை பார்த்த பின்னர் தான் மனமிரங்கி தமிழ் ஈழ மக்களுக்கு முழுமையாக உதவ ஜெயலலிதா முன்வந்திருக்கிறார் .

இது ஒரு நல்ல முன்னேற்றம் தேர்தல் நேரத்தில் இதை சொல்லியிருந்தாலும் தமிழ் ஈழம் தான் தீர்வு என்பது அங்கே தமிழ் ஈழத்திற்காக போராடும் போராளிகளுக்கும் உலக தமிழர்களுக்கும் ஒரு உற்சாகத்தையும் நம்பிக்கையும் கொடுத்திருக்கிறது . அது மட்டுமல்லாமல் தமிழகத்திலும் இந்தியாவிலும் ஊடகங்கள் தமிழர்களுக்கு எதிராகவே இருக்கிறது . ஈழத்திலே தமிழர்கள் படும் நெருக்கடிகளை சரியாக எந்த ஊடகங்களும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை .

இந்த நிலையில் ஜெயலலிதா அங்கே தமிழர்கள் படும் துயரங்களை விளக்கி பேசியிருக்கிறார் . இப்படி மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பேசுகின்ற வார்த்தைகள் நேரடியாகவும் விரைவாகவும்  மக்களை சென்றடைந்து விடும் . அந்த வகையில் தமிழக மக்களும் இந்திய மக்களும் தமிழர்கள் படும் துயரங்களை தெரிந்து கொள்ள ஜெயலலிதா உதவியிருக்கிறார் . ஜெயலிதாவை பொறுத்தவரையில் தான் நினைக்கும் காரியத்தில் உறுதியாக நிற்பார் .

இது ஒரு வகையில் போராளிகளுக்கும்   ஈழ தமிழர்களின் எண்ணங்களுக்கும்  கிடைத்த அங்கீகாரம் . தமிழக மக்கள் தமிழர் விரோத கூட்டணியான திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்போம் . தமிழனின் ஒற்றுமையை காட்டுவோம் . இனி எந்த அரசியல் வாதியும் தமிழனுக்கு எதிராக செயல்பட பயப்பட வேண்டிய சூழலை உருவாக்குவோம் .  தமிழ் ஈழம் வெல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை . 

"தமிழர்களின் தாகம் தமிழ் ஈழ தாயகம்"
Read More

Monday

இலங்கை தமிழர்களுக்காக தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கிறோம்: ஜெ.

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற 'தமிழர் நாடு' வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் ஜெயலலிதா பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் பேசுகையில்,

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த உண்ணாவிரதத்தை நடத்துகிறோம். கடந்த ஆண்டு இந்திய அரசு ராணுவ உதவி செய்வதாகவும், ஆயுதங்கள் வழங்கி வருவதாகவும் செய்திகள் வந்தன. இதை மத்திய அரசு மறுக்கவில்லை. இந்திய பாதுகாப்புதுறை உயர் அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் இலங்கை சென்றதாகவும் கூறப்பட்டது. அதையும் மத்திய அரசு மறுக்கவில்லை, திமுகவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மத்தியில் அங்கம் வகிக்கும் திமுக மந்திரிகள் ராஜினாமா செய்வதாக மிரட்டிக் கூட பார்க்கவில்லை. இதுபற்றி கேள்வி கேட்ட என்னை கருணாநிதி கேலி செய்கிறார். இது முழுக்க முழுக்க மத்திய அரசு சம்பந்தப்பட்டது. இது கூட ஜெயலலிதாவுக்கு தெரியவில்லையே என்றார்.

இலங்கை ராணுவ வீரர்களுக்கு ஹரியானா மாநிலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதிநவீன சாதனங்களை வைத்து இலங்கை வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்திய அரசு ஒப்புதலுடன் தான் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இலங்கை இனப் படுகொலை மத்திய அரசின் முழு ஒத்துழைப்போடு நடக்கிறது. இந்த இனப் படுகொலையில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும் பெரும் பங்குண்டு. சட்டசபையில் தீர்மானம் போட்டதாக மக்களை ஏமாற்றப் பார்க்கிறார் கருணாநிதி. தீர்மானங்களை நாங்கள் ஆதரிக்கவில்லை என்கிறார். கருணாநிதியின் பாசாங்கு தீர்மானங்களை நாங்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்?.

ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு ராணுவ உதவிகள் வழங்குவது வழக்கமான நடைமுறைதான். ஆனால் இந்தியா வழங்கும் ஆயுத உதவியும், பயிற்சியும் யாருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இலங்கைக்கு வழங்கப்படும் முழு ஆயுத பலத்தையும் அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள். இலங்கை ராணுவம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறலாம். ஆனால் அங்கு உயிரிழப்போரின் எண்ணிக்கையைப் பார்த்தால் புலிகள், போராளிகள் தவிர அப்பாவி மக்களும் பலியாவது தெரிய வருகிறது..

இந்தியா வழங்கிய துப்பாக்கிகளும் தோட்டாக்களும் அப்பாவி தமிழர்களை கொலை செய்ய பயன்படுத்தப்படுகிறது.

இலங்கைப் பிரச்சினையில் திமுக அரசும், மத்திய அரசும் செயல்பட்டு வரும் விதத்தைப் பார்த்து மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.

இலங்கையில் அவதிப்பட்டு வரும், அல்லல்பட்டு வரும் அங்குள்ள தமிழர்கள் குறித்து கருணாநிதிக்கு அக்கறை இல்லை. இதுகுறித்து ஏதாவது நடவடிக்கை எடுங்கள் என்று அவரிடம் கேட்டால், மத்திய அரசுதான் இதில் நடவடிக்கை எடுக்க முடியும். ஒரு மாநில முதல்வரால், என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறுகிறார் கருணாநிதி.

தமிழகத்தைச் சேர்ந்த 10 மத்திய மந்திரிகள் உள்ளனர். அவர்கள் இதை ஏன் எதிர்க்கவில்லை. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசுக்கான ஆதரவு வாபஸ் என்ற பிரம்மாஸ்திரத்தை கருணாநிதி பயன்படுத்தமாட்டார். அறிக்கை மட்டும் விடுவார்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் என்னுடைய நிலைப்பாட்டை அனைவரும் அறிவர். இலங்கையில் உள்ள தமிழர்கள் அங்குள்ள சிங்களவர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற தமிழர்களின் உரிமைக் குரலை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சம உரிமை ஆகிய இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய போராட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

ஆயுதம் ஏந்திய போராட்டத்தை எதிர்க்கிறோம். ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இறக்க காரணமான திசை மாறிப்போன ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் விளைவாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இலங்கை அதிபருடன் நம் பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்கு இனப் படுகொலையை உடனடியாக நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்று நான் கருணாநிதிக்கு ஆலோசனை கூறினேன். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தமிழக மக்கள் அனைவரும் பிரதமர் அலுவலகத்திற்கு தந்திகள் அனுப்ப வேண்டும் என்றார். பின்னர் பிரதமரை வற்புறுத்த, மத்திய ஆளும் கூட்டணியிலிருந்து விலக வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதையும் செய்யத் தயார் என்று அறிவித்தார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் ராஜினாமா கடிதங்களைப் பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால் நாடாளுமன்ற மக்களவை தலைவருக்கோ, அல்லது மாநிலங்களவைத் தலைவருக்கோ அக்கடிதங்களை அனுப்பவில்லை. அதற்கு பதிலாக அவர் நிர்ணயித்த கெடுவான கடைசி தேதியை முடிவுக்கு வரவிட்டு, பின்னர் அந்த ராஜினாமா கடிதங்களை தானே கிழித்து போட்டு விட்டார்.

இந்திய இறையாண்மைக்கு விரோதமாக பேசியதாக கூறி இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கருணாநிதி தலைமையில் நடத்தப்பட்ட மனித சங்கிலிப் போராட்டத்தில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர்.

எனவே கருணாநிதியின் முழு ஆசி மற்றும் தூண்டுதலின்பேரில்தான் இருவரும் பேசினர். அதுவே அவர்களை சிக்கலில் மாட்டி விட்டு விட்டது.

பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் சீமான் மீண்டும் கைது செய்யப்பட்டார், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

உண்மையி்ல் சீமான் என்ன மாதிரியெல்லாம் பேசினாரோ அதையே கருணாநிதியும் பேசியுள்ளார். அவர் என்னென்ன வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தினாரோ அதையெல்லாம் கருணாநிதியும் பயன்படுத்தியுள்ளார்.

எந்த வார்த்தைகள் அவர்களை இன்று சிக்கலில் மாட்டிவிட்டதோ, அவை யாவும் கருணாநிதியின் ஆசியும் ஒப்புதலும் பெற்றவை தான்.

ஆனால் சீமானுக்கு மட்டும் சிறைத் தண்டனை. ஆனால் கருணாநிதியோ தலைமை பீடத்தில் அமர்ந்து கொண்டு அனைவரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்.

இன்று நாம் உண்ணாவிரதம் இருப்பதினால், பசியினால் வாடும் இலங்கைத் தமிழர்களின் வயிறு நிரம்பப்போவதில்லை. இந்த உண்ணாவிரத அறப்போராட்டம் ஒரு அடையாளமே. இந்த உண்ணாவிரதத்தின் மூலம், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் துயர நிகழ்வுகள் குறித்து, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் கவலை அடைந்து இருக்கிறார்கள் என்பதையும், இது போன்ற சம்பவங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் நடந்து கொள்கிற விதம், தமிழக மக்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது என்பதையும் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தெரியப்படுத்துகிறோம்.

ஒரு அசட்டு தைரியத்தில் திமுகவும், காங்கிரசும் கூட்டணி சேர்ந்துள்ளன. வரும் தேர்தலில் மக்கள் இந்த கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டப் போகிறார்கள் என்றார் ஜெயலலிதா.

தமிழகத்தின் எழுச்சி ஜெயலலிதாவையும் ஆதரவாக பேசவைத்திருக்கிறது . கலைஞர் இனி நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள் ?
Read More

Send your Status to your Facebook