இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
Tuesday
உணமையை மறைத்து பேசும் சுபவீக்கு செந்திலதிபன் கண்டனம்
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
தமிழகம்,
திமுக,
மதிமுக,
மாவீரன் பிரபாகரன்
எழுதிய நேரம்
Tuesday, May 23, 2017
மாவீரர் திலகம் பிரபாகரன் தாயார் பார்வமதி அம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தது பற்றி சுப.வீ.உண்மைகளை மறைத்து எழுதி இருக்கிறார்.
பக்கவாதம், சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த பார்வதி அம்மாள், முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின் ,முள்வேலி முகாமில் இருந்தார்.பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை அவர்கள் மறைந்த பிறகு அம்மாவின் உடல் நிலை மோசமடைந்தது. இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் முயற்சியால் பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக மலேசிய நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மலேசிய அரசு குறுகியகால விசா வழங்கியதால் ,அம்மாவின் தொடர் சிகிச்சைக்காக தலைவர் பிரபாகரனின் அக்கா வினோதணி கனடாவில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்பினார்.
ஆனால் கனடாவில் மருத்துவ நடைமுறைகளில் சிக்கல் இருப்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. பின்னர் அம்மாவை தமிழ்நாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது என்று சிவாஜிலிங்கம், அதற்கான ஏற்பாடுகளை செய்தார். இந்திய அரசிடம் உரிய அனுமதி பெறப்பட்டது.
தமிழகத்தில் அம்மா எங்கே தங்கி சிகிச்சை எடுக்கப் போகிறார் என்று வெளியுறவுத்துறை கேட்டபோது பழ.நெடுமாறன் இல்லத்தில் தங்குவதாக அவரது வீட்டு முகவரி அளிக்கப்பட்டது.
அதன் பிறகே இந்தியா பார்வதிஅம்மாவுக்கு விசா வழங்கியது.
2010, ஏப்ரல் 16 ஆம் தேதி மாலை விமானத்தில் அம்மாவும்,அவருக்கு த் துணையாக விசயலட்சுமி எனும் செவிலியரும் மலேசியாவிலிருந்து சென்னை வந்து சேர்ந்தனர். பார்வதிஅம்மாள் வந்த செய்தியை முறைப்படி தமிழக அரசுக்கு மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரியப்படுத்தினர்.
அம்மா வருகை பற்றி அய்யா நெடுமாறன் அவர்கள் தலைவர் வைகோவுக்கு மட்டும் தகவல் தந்திருக்கிறார். விமான நிலையத்திற்கு 16.04.2010 இரவில் வைகோ,நெடுமாறன் இருவரும் சென்ற போது,தமிழக காவல்துறையினர் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
விமான நிலையத்தில் தமிழக காவல்துறை குவிக்கப்பட்டது.
இதனிடையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை தமிழகத்தின் ஆட்சியாளர்(???) தொடர்பு கொண்டு தமிழ்நாட்டில் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு தமிழக மக்கள் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு,மாநில தி.மு.க அரசு மீது கோபமாக உள்ளனர். இந்த நிலையில், பிரபாகரன் தாயார் இங்கு வந்து தங்கினால் நி லைமை கட்டுமீறிப் போகும்.எனவே பார்வதி அம்மாள் சென்னையில் தங்கி மருத்துவம் பார்க்க அனுமதிக்க க் கூடாது என்று கூறினர்.
அதற்குப் பிறகு விமானத்திலேயே 5 மணி நேரம் காத்திருந்த பார்வதி அம்மாளை மத்திய அரசு அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால் மீண்டும் மலேசியாவுக்கு போக வேண்டிய சூழல் ஏற்பட்டு, பின்னர் அங்கிருந்து ஈழம் சென்று,உடல்நலன் பாதிக்கப்பட்டு மறைந்தார்கள்.
இதுதான் நடந்த உண்மைகள்.
சுப.வீ.அவர்களுக்கு சில கேள்விகள்.
மத்திய அரசு அம்மா வருகைக்கு அனுமதி அளித்தது தி.மு.க அரசுக்கு த் தெரியாதா?
முதல்வருக்குத் தெரியாமல் ஒரு நிகழ்வு நடந்து விடுமா?மத்திய திமுக அமைச்சர்களுக்கும் தெரியாதா?
முதல்வர் கருணாநிதி சார்பில் மத்திய அரசிடம் பார்வதி அம்மாவுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்ட செய்தி வந்த போது மத்திய அரசு அப்போது மறுப்பு தெரிவிக்கவில்லையே ஏன்?
1990 களில் நாங்கள் பார்த்த பேராசிரியர், தோழர் சுப.வீ.உருவம் மட்டும் மாறவில்லை.
தமிழ் உள்ளமும் அல்லவா மாறி விட்டது! இவ்வாறு மதிமுக அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
பக்கவாதம், சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த பார்வதி அம்மாள், முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின் ,முள்வேலி முகாமில் இருந்தார்.பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை அவர்கள் மறைந்த பிறகு அம்மாவின் உடல் நிலை மோசமடைந்தது. இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் முயற்சியால் பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக மலேசிய நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மலேசிய அரசு குறுகியகால விசா வழங்கியதால் ,அம்மாவின் தொடர் சிகிச்சைக்காக தலைவர் பிரபாகரனின் அக்கா வினோதணி கனடாவில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்பினார்.
ஆனால் கனடாவில் மருத்துவ நடைமுறைகளில் சிக்கல் இருப்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. பின்னர் அம்மாவை தமிழ்நாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது என்று சிவாஜிலிங்கம், அதற்கான ஏற்பாடுகளை செய்தார். இந்திய அரசிடம் உரிய அனுமதி பெறப்பட்டது.
தமிழகத்தில் அம்மா எங்கே தங்கி சிகிச்சை எடுக்கப் போகிறார் என்று வெளியுறவுத்துறை கேட்டபோது பழ.நெடுமாறன் இல்லத்தில் தங்குவதாக அவரது வீட்டு முகவரி அளிக்கப்பட்டது.
அதன் பிறகே இந்தியா பார்வதிஅம்மாவுக்கு விசா வழங்கியது.
2010, ஏப்ரல் 16 ஆம் தேதி மாலை விமானத்தில் அம்மாவும்,அவருக்கு த் துணையாக விசயலட்சுமி எனும் செவிலியரும் மலேசியாவிலிருந்து சென்னை வந்து சேர்ந்தனர். பார்வதிஅம்மாள் வந்த செய்தியை முறைப்படி தமிழக அரசுக்கு மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரியப்படுத்தினர்.
அம்மா வருகை பற்றி அய்யா நெடுமாறன் அவர்கள் தலைவர் வைகோவுக்கு மட்டும் தகவல் தந்திருக்கிறார். விமான நிலையத்திற்கு 16.04.2010 இரவில் வைகோ,நெடுமாறன் இருவரும் சென்ற போது,தமிழக காவல்துறையினர் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
விமான நிலையத்தில் தமிழக காவல்துறை குவிக்கப்பட்டது.
இதனிடையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை தமிழகத்தின் ஆட்சியாளர்(???) தொடர்பு கொண்டு தமிழ்நாட்டில் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு தமிழக மக்கள் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு,மாநில தி.மு.க அரசு மீது கோபமாக உள்ளனர். இந்த நிலையில், பிரபாகரன் தாயார் இங்கு வந்து தங்கினால் நி லைமை கட்டுமீறிப் போகும்.எனவே பார்வதி அம்மாள் சென்னையில் தங்கி மருத்துவம் பார்க்க அனுமதிக்க க் கூடாது என்று கூறினர்.
அதற்குப் பிறகு விமானத்திலேயே 5 மணி நேரம் காத்திருந்த பார்வதி அம்மாளை மத்திய அரசு அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால் மீண்டும் மலேசியாவுக்கு போக வேண்டிய சூழல் ஏற்பட்டு, பின்னர் அங்கிருந்து ஈழம் சென்று,உடல்நலன் பாதிக்கப்பட்டு மறைந்தார்கள்.
இதுதான் நடந்த உண்மைகள்.
சுப.வீ.அவர்களுக்கு சில கேள்விகள்.
மத்திய அரசு அம்மா வருகைக்கு அனுமதி அளித்தது தி.மு.க அரசுக்கு த் தெரியாதா?
முதல்வருக்குத் தெரியாமல் ஒரு நிகழ்வு நடந்து விடுமா?மத்திய திமுக அமைச்சர்களுக்கும் தெரியாதா?
முதல்வர் கருணாநிதி சார்பில் மத்திய அரசிடம் பார்வதி அம்மாவுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்ட செய்தி வந்த போது மத்திய அரசு அப்போது மறுப்பு தெரிவிக்கவில்லையே ஏன்?
1990 களில் நாங்கள் பார்த்த பேராசிரியர், தோழர் சுப.வீ.உருவம் மட்டும் மாறவில்லை.
தமிழ் உள்ளமும் அல்லவா மாறி விட்டது! இவ்வாறு மதிமுக அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
Sunday
செயல் ஜோக்ஸ் வெளி நடப்பு
செயலு : "சார், என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு.."
பேங்க் மேனஜர்: "பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க.."
செயலு : "நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்.." 😎😎😎
---------------------------------------------------------------
செயலு : நான் இந்த இடத்தில இருந்து வெளிநடப்பு செய்கிறேன்
செயலு மனைவி துர்கா : ஒழுங்கா படு சனியன மணி ராத்திரி 12
😜 😜 😜
பேங்க் மேனஜர்: "பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க.."
செயலு : "நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்.." 😎😎😎
---------------------------------------------------------------
செயலு : நான் இந்த இடத்தில இருந்து வெளிநடப்பு செய்கிறேன்
செயலு மனைவி துர்கா : ஒழுங்கா படு சனியன மணி ராத்திரி 12
😜 😜 😜
Wednesday
கட்டுமான விலையுயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டம்
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
சுரேஷ் குமார்,
மதிமுக
எழுதிய நேரம்
Wednesday, August 31, 2016
மதிமுக குமரி மாவட்ட பொறியாளரணி அமைப்பாளர் சுரேஷ் குமார் தலைமையில் நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கட்டுமான பொருட்களின் விலையுயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 26 ம் தேதி 2014 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இதில் மதிமுக குமாரி மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
![]() |
| தினகரன் செய்தி |
![]() |
| தினத்தந்தி செய்தி |
![]() |
| தி இந்து செய்தி |
மதிமுக குமரி மாவட்ட பொறியாளரணி அமைப்பாளர் நியமனம்
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
சுரேஷ் குமார்,
மதிமுக
எழுதிய நேரம்
Wednesday, August 31, 2016
Thursday
அதிமுகவுக்கும் திமுகவுக்கும் லோக் ஆயுக்தா விளையாட்டு பொருளா?
மக்கள் நல கூட்டணி வலு பெற்று மக்கள் ஆதரவு பெருகியதும். மக்கள் நல கூட்டணி என்ன வாக்குறுதிகளை வைத்ததோ அதெல்லாம் டிரெண்ட் ஆனதையடுத்து அதையே திமுகவும் அதிமுகவும் தேர்தல் அறிக்கையாக வைத்துள்ளது...
அவர்களின் தேர்தல் அறிக்கையை வைத்தே அதிமுகவையும் திமுகவையும் தோற்கடிக்க வேண்டிய தேவை அதிகரிக்கிறது..
1. ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம்...
இதை ஊழல் அதிமுக ஊழல் திமுக செய்யாது. ஏனெனில் இரண்டு கட்சிகளுமே ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளன..
2. பூரண மதுவிலக்கு
இதையும் இரண்டு கட்சிகளும் செய்யது. ஏனெனில் அதிமுக ஆட்சியில் திமுக சாராய ஆலையிலிருந்து சாரய கொள்முதலும் திமுக ஆட்சியிலிருந்து அதிமுக சாராய ஆலையிலிருந்து சாராய கொள்முதலும் செய்யும் இவர்கள் இருவரில் எவர் வந்தாலும் சாராய கடைகள் பூட்டாது...
தமிழகத்தின் மிக முக்கிய தேவை இவை இரண்டும். இவை நிறைவேற மக்கள் நல கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்...
அவர்களின் தேர்தல் அறிக்கையை வைத்தே அதிமுகவையும் திமுகவையும் தோற்கடிக்க வேண்டிய தேவை அதிகரிக்கிறது..
1. ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம்...
இதை ஊழல் அதிமுக ஊழல் திமுக செய்யாது. ஏனெனில் இரண்டு கட்சிகளுமே ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளன..
2. பூரண மதுவிலக்கு
இதையும் இரண்டு கட்சிகளும் செய்யது. ஏனெனில் அதிமுக ஆட்சியில் திமுக சாராய ஆலையிலிருந்து சாரய கொள்முதலும் திமுக ஆட்சியிலிருந்து அதிமுக சாராய ஆலையிலிருந்து சாராய கொள்முதலும் செய்யும் இவர்கள் இருவரில் எவர் வந்தாலும் சாராய கடைகள் பூட்டாது...
தமிழகத்தின் மிக முக்கிய தேவை இவை இரண்டும். இவை நிறைவேற மக்கள் நல கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்...
Wednesday
என்னவாகும் தமிழகம்?
தப்பி தவறி திமுக ஆட்சி வந்தால் என்னவாகும்?
👉மீண்டும் அரசுடைமையாக்க பட்ட கேபிள் டிவி கருணாநிதி குடும்பத்தினர் கையில் செல்லும்
👉மாவட்டம் தோறும் திமுகவினர் அப்பாவி மக்களின் நிலங்களை மிரட்டி அபகரிப்பு செய்வார்கள்
👉விவசாய நிலங்களை அழிக்கும் மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்கள் செயல்படுத்த படும். அதன் ஒப்பந்ததாரர்களாக கருணாநிதி குடும்பத்தார் இருப்பார்கள்
👉டாஸ்மாக் விரிவுபடுத்த பட்டு மேலும் பல சாராய ஆலைகளை திமுகவினர் திறப்பார்கள்
👉சினிமாதுறை கலாநிதி வசமாகும். விஜய், அஜீத், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை மிரட்டி வாங்குவார்கள்
👉காவல்துறை ரவுடிகளின் கூடாரமாக மாறும். ஊழல் தலைவிரித்தாடும்..
👉அரசு நிர்வாகங்கள் முழுவதும் லஞ்சமயமாக்கபடும்
👹அதிமுக அரசு மீண்டும் அமைந்தால் என்னவாகும்?
👉பஸ் கட்டணம், பால் விலையுயர்வு நியாயபடுத்தப் படும்.. மீண்டும் விலையுயரும்
👉பண புழக்கம் அடியோடு நின்று விடும்
👉ஊழல் சர்வ சாதாரணமாக மாறி விடும். லஞ்சம் தேசியமயமாகும்
👉கடைசி வரை 7 தமிழர்கள் விடுதலையாக மாட்டார்கள்..
👉முதல்வர் வீட்டிலேயே முடங்கி விடுவார்
👉டாஸ்மாக் மேலும் விரிவு படுத்த படும்.. குடிப்பது கட்டாயமாக்க படும்..
👉வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
போதும் அதிமுகவும் திமுகவும்...
ஊழலற்ற, மதுவற்ற நல்லாட்சி அமையட்டும். இதுவரை இல்லாத வகையில் இம்முறை தான் மக்கள் நல கூட்டணி மெகா கூட்டணியாக அமைந்துள்ளது.. ஆதரிப்போம்..
மாற்றத்தை நாம் உருவாக்குவோம்.. ஊழல்வாதிகளுக்கு இனி இடமில்லை என்பதை நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவோம்... .....
#ThisTime4MNK
அனைவருக்கும் பகிருவோம்...
👉மீண்டும் அரசுடைமையாக்க பட்ட கேபிள் டிவி கருணாநிதி குடும்பத்தினர் கையில் செல்லும்
👉மாவட்டம் தோறும் திமுகவினர் அப்பாவி மக்களின் நிலங்களை மிரட்டி அபகரிப்பு செய்வார்கள்
👉விவசாய நிலங்களை அழிக்கும் மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்கள் செயல்படுத்த படும். அதன் ஒப்பந்ததாரர்களாக கருணாநிதி குடும்பத்தார் இருப்பார்கள்
👉டாஸ்மாக் விரிவுபடுத்த பட்டு மேலும் பல சாராய ஆலைகளை திமுகவினர் திறப்பார்கள்
👉சினிமாதுறை கலாநிதி வசமாகும். விஜய், அஜீத், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை மிரட்டி வாங்குவார்கள்
👉காவல்துறை ரவுடிகளின் கூடாரமாக மாறும். ஊழல் தலைவிரித்தாடும்..
👉அரசு நிர்வாகங்கள் முழுவதும் லஞ்சமயமாக்கபடும்
👹அதிமுக அரசு மீண்டும் அமைந்தால் என்னவாகும்?
👉பஸ் கட்டணம், பால் விலையுயர்வு நியாயபடுத்தப் படும்.. மீண்டும் விலையுயரும்
👉பண புழக்கம் அடியோடு நின்று விடும்
👉ஊழல் சர்வ சாதாரணமாக மாறி விடும். லஞ்சம் தேசியமயமாகும்
👉கடைசி வரை 7 தமிழர்கள் விடுதலையாக மாட்டார்கள்..
👉முதல்வர் வீட்டிலேயே முடங்கி விடுவார்
👉டாஸ்மாக் மேலும் விரிவு படுத்த படும்.. குடிப்பது கட்டாயமாக்க படும்..
👉வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
போதும் அதிமுகவும் திமுகவும்...
ஊழலற்ற, மதுவற்ற நல்லாட்சி அமையட்டும். இதுவரை இல்லாத வகையில் இம்முறை தான் மக்கள் நல கூட்டணி மெகா கூட்டணியாக அமைந்துள்ளது.. ஆதரிப்போம்..
மாற்றத்தை நாம் உருவாக்குவோம்.. ஊழல்வாதிகளுக்கு இனி இடமில்லை என்பதை நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவோம்... .....
#ThisTime4MNK
அனைவருக்கும் பகிருவோம்...
Thursday
சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கை
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
தேர்தல் அறிக்கை,
மக்கள் நல கூட்டணி
எழுதிய நேரம்
Thursday, April 28, 2016
தேர்தல் என்றாலே தேர்தல் அறிக்கை மிக முக்கியம். மக்கள் நல கூட்டு இயக்கம் கூட்டணியாக பரிணமித்த போது குறைந்த பட்ச செயல்திட்டத்தை வெளியிட்டது. அதன்பிறகு இன்று மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட பட்டது..
தேர்தல் அறிக்கையில் மிக முக்கிய அம்சமாக மது விலக்கு அமுல்படுத்துவதும். மதுவினால் ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்வதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை இலவச கல்விக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளதோடு. வீட்டுக்கு ஒருவருக்கு கட்டாய வேலையையும் உறுதி அளித்துள்ளனர்.
மேலும் 5 ஆண்டுகளில் 1 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும்.
இதுவரை உள்ள கல்வி கடன் அனைத்தையும் அரசே ஏற்கும் என்பது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
விவசாய கடன்கள் கூட்டுறவு வங்கி மட்டுமல்லாது தேசிய வங்கி கடன்களும் தள்ளுபடி செய்ய படும்.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு உள்ள கடன்களும் தள்ளுபடி செய்ய படும்..
சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டு வரப்படும்..
உயர்மட்ட ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படும்..
அரசு பணிகளை கண்காணிக்க மக்கள் கண்காணிப்பு குழு, மக்கள் தணிக்கை குழு உருவாக்க படும்..
5 வயது உள்ள குழந்தைகளுக்கு தினமும் அரை லிட்டர் பால் இலவசம்..
சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டர் இலவசமாக வழங்கப்படும்...
பட்டா மாறுதல் முறை எளிதாக்க பட்டு பத்திரம் பதிவு செய்யும் அன்றே கிடைக்க நடவடிக்கை..
தமிழ் மொழி முதல் மொழியாக்க படும்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்..
மீத்தேன், கெயில் போன்றவை தடை செய்யப்படும்..
இப்படி மக்கள் நல கூட்டணி தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டாராக திகழ்கிறது..
வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை மக்கள் நல கூட்டணி தேர்தல் அறிக்கை
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
தமிழகம்,
மக்கள் நல கூட்டணி
எழுதிய நேரம்
Thursday, April 28, 2016
மக்கள் நல கூட்டணி தேர்தல் அறிக்கை இன்று தாயகத்தில் வெளியிடப்பட்டது. அதில் முக்கிய அம்சங்கள்..
மக்கள் நல👬👬கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு.
👉கூட்டணி ஆட்சி அமைப்போம்
👉 லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும்
👉சேவை வரி உரிமை சட்டம்
👉 பூரண மது விலக்கு
👉தொடக்க கல்வி முதல் கல்லூரி வரை இலவசக் கல்வி
👉வேளான் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரிப்பு
👉கல்வி கடன் ரத்து
👉பால் விலை குறைக்கப்படும்
👉 படித்த பெண்களுக்கு வீட்டுக்கொருவருக்கு அரசு வேலை
👉 நெசவாளர் கடன் தள்ளுபடி
👉 மீனவர்கள் பாதுகாப்பு
👉 இலவச மினரல் குடிநீர்
👉 இஸ்லாமிய அப்பாவி கைதிகள் விடுதலை
👉மீனவர்களுக்கு ஓய்ஊதியம்
👉 சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு தடுக்கப்படும்
👉 மத வன்முறைகளை தடுக்க உருதியான நடவடிக்கை
👉கல்வி மற்றும் வேலைவாய்பில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு
👉 தாழ்த்தப்பட்டவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிப்பு
👉 மகளிர் சுய உதவி குழு கடன் ரத்து
👉குடும்பத்தில் ஒரு இளைஞருக்கு அரசு வேலை உறுதி செய்யப்படும்
👉 திருநங்கைகளுக்கு இலவச குடியிருப்பு.
👉அரசு அனைத்து அலுவலங்களிலும் அம்பேத்கர் புகைப்படம் வைக்கப்படும்.
👉 மணல் கொள்ளைகள் தடுக்கப்படும்.
👉கிராமங்களில் விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்தப்படும்
👉மகாத்மா ஊரக வளர்ச்சி திட்டத்தில் ரூ 250 வழங்கப்படும்.
👉 இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து தமிழர்களும் விடுதலை
👉 வெளிநாட்டு தமிழர் நல அமைச்சகம் தொடங்கப்படும்
👉 மதவெறி சாதிவெறி சக்திகளை எதிர்போம்
👉அனைத்து கனிம வளங்களும் பாதுகாக்கப்படும்
👉 69 % இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும்
👉மருத்துவ காப்பீடு இலவச பேருந்து
👉பதிரிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள்.
👉மக்களை தேடி அரசு என்பது உறுதி செய்யப்படும்
👉சட்டமன்ற தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
👉 அரசு அலுவலங்களில் அனைத்து சான்றிதழ்களும் லஞ்சம் இல்லாமல் வழங்கப்படும்
👉பொது கண்காணிப்பு குழு
👉 ஊழலை ஒழிக்க முதலைமைச்சர் அலுவலகம் வரை கடுமையான சட்டம்.
👉மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கு தலித்துகளுக்கான சலுகைகள் வழங்கப்படும். மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை .
Saturday
தமிழகம் சிறையிலிருந்து விடுபடுமா ?
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
தமிழகம்,
வைகோ,
ஜெயலலிதா
எழுதிய நேரம்
Saturday, November 08, 2014
தமிழகத்தில் இரண்டு முதல்வர்கள், இருவருமே சிறைக்குள் இருக்கிறார்கள் என்பது போன்று விமர்சனங்கள், கிண்டல்கள் சமூக உடகங்களில் வந்த வண்ணம் உள்ளன.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற நாள் முதலே தமிழக அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. நான்கு ஆண்டுகளும் நூறு கோடி ருபாய் அபராதமாக தண்டனை விதிக்க பட்ட காரணத்தால் அந்த நேரம் முதலே சட்ட மன்ற உறுப்பினர் , முதல்வர் பதவியை ஜெயலலிதா துறக்க வேண்டிய கட்டயாம் ஏற்பட்டது.
இதையடுத்து புதிய முதல்வர் பொறுப்பேற்க வேண்டிய சூழல் உருவானது. இந்நிலையில் அம்மாவின் நம்பிக்கையான அடிமை தமிழக முதல்வரானார். சினிமாவை மிஞ்சும் அழுகை காட்சிகளோடு பதவியேற்ற முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் தாடியோடு வளம் வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இன்றும் தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாகி உள்ளது. அரசு நிர்வாகம் செயலிழந்து காணப்படுகிறது. தமிழக முதல்வர் பதவி பறி போன ஜெயலலிதாவை ஜெயா டிவி மூலமாக மக்களின் முதல்வர் என்று அழைக்க துவங்கினர். அதிமுக அடிமைகள் மட்டுமல்லாது சில்லறை கட்சிகளாக இருக்கும் வேல்முருகன் போன்றோர்கள் கூட இந்த அளவிற்கு ஒரு ஊழல் குற்றவாளிக்கு ஆதரவாக செயல் படுவது அனைவர் முகத்தையும் சுளிக்க செய்தது..
பன்னீர் செல்வம் முதல்வரானதும் அம்மாவின் ஆணைகினங்க பால் விலை உயர்த்த பட்டது . இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதிமுக சார்பில் வைகோ தலைமையில் ஆவின் பால் விலையுயர்வை கண்டித்தும் , அப்பாவி தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்ததை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் வைகோ பேசும் போது "தமிழகத்தில் இரண்டு முதல்வர்கள்; உள்ளனர். ஒருவர் நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்காலிக ஜாமீனில் வீட்டு சிறையில் உள்ளார் . இன்னொருவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிறையில் இருக்கிறார் " என்றார்..
வைகோவின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் சிறையிலிருந்து விடுபடுமா ?
Thursday
சாக்கடையாவது அரசியல் மட்டுமல்ல நம் சமுதாயமும் தான்
தமிழகத்தில் அரசியல் காட்சிகளில் இருப்பவர்கள் வெறுமனே 10 சதவீதம் மக்கள் தான். இந்த 10 சதவீதத்தில் தான் அனைத்து அரசியல் கட்சி தொண்டர்களும் அடங்கி இருக்கிறார்கள். அதை தாண்டி 90 சதவீத மக்கள் அரசியல் சார்பற்று இருக்கிறார்கள். இந்த 90 சதவீத மக்களில் பெரும்பான்மையினர் வெற்றி பெறுபவர்களுக்கு வாக்களித்தால் தான் நம்முடைய வாக்கு பயனுள்ள வாக்காக இருக்கும் என தப்பு கணக்கு போடுகின்றனர்.
மற்றவர்கள் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட யாரை தோற்கடிக்க வேண்டும் என்பதையே பிரதானமாக கொண்டுள்ளார்கள். இப்படி ஒருவர் மீது தீராத பகையை கொண்டிருப்பதால் எளிதாக இன்னொரு வேண்டாத சக்தி திடீர் நல்லவராகி வெற்றி பெற்று விடுகிறார்.
ஒருமுறை இந்த நிலை இருந்தால் ஏற்று கொள்ளலாம் ஆனால் ஒவ்வெரு முறையும் மாறி மாறி இந்த நிலை தானே ஏற்படுகிறது. ஒவ்வெரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை வாக்களித்த நாளில் இருந்தே நம் ஏண்டா வாக்களித்தோம் என கேட்கும் நிலை..
மற்றவர்கள் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட யாரை தோற்கடிக்க வேண்டும் என்பதையே பிரதானமாக கொண்டுள்ளார்கள். இப்படி ஒருவர் மீது தீராத பகையை கொண்டிருப்பதால் எளிதாக இன்னொரு வேண்டாத சக்தி திடீர் நல்லவராகி வெற்றி பெற்று விடுகிறார்.
ஒருமுறை இந்த நிலை இருந்தால் ஏற்று கொள்ளலாம் ஆனால் ஒவ்வெரு முறையும் மாறி மாறி இந்த நிலை தானே ஏற்படுகிறது. ஒவ்வெரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை வாக்களித்த நாளில் இருந்தே நம் ஏண்டா வாக்களித்தோம் என கேட்கும் நிலை..
நம் வாழ்வின் ஒவ்வெரு அசைவையும் இன்று அரசியல் தான் தீர்மானிக்கிறது. இது படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை சரியான புரிதல் இல்லை. பெரும்பாண்மை மக்களிடம் அந்த புரிதல் இல்லாத காரணத்தால் தான் சில ஊழல்கள் நடைபெற்றால் கூட பொதுமக்களே இதெல்லாம் சகஜம் என்று சொல்லி கடந்து போகின்றனர்.
இன்னும் சிலர் ஒரு படி மேல் சென்று இவர்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் என்று நம்மிடமே திருப்பு கேட்பார்கள்.. இப்படி திருப்பி கேட்பதால் தானே அதிமுகவும், திமுகவும் ஒருமுறை செய்த அதே தவறை மீண்டும் செய்ய துணிகிறது.
90 சதவீத மக்களின் வாழ்க்கை நிலையை மீதி 10 சதவீதத்தினர் தீர்மானிப்பதை நாம் எப்படி ஏற்று கொள்வது? ஒரு நாடு வளமான நாடாகவும், மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அரசாகவும் அமைய வேண்டும் என்றால் நல்லவர் ஆட்சி நடை பெற வேண்டும்.
மாற்றத்தை தட்டி கழிக்கும் வேறு சிலர் சொல்வது எல்லோரும் வாய்ப்பு கிடைக்கும் வரை தான் நல்லவர்களாக இருப்பார்கள் என்று. ஏன் காமராஜர் வாய்ப்பு கிடைத்த பிறகும் நல்லவராக ஆட்சி செய்ய வில்லையா? அறிஞர் அண்ணா வாய்ப்பு கிடைத்த பிறகும் நல்லவராக ஆட்சி செய்ய வில்லையா ?
கொள்கை ரீதியான ராஜதந்திரம் மாறி குறுக்கு வழி ராஜதந்திரம் எப்போது தமிழகத்தில் வந்ததோ அன்றிலிருந்து தானே கொள்கை மாறி கொள்ளை பிரதானமானது.. கொள்கை ரீதியான ஆரோக்கிய அரசியலுக்கு இருந்த வரவேற்பு போய் ஏமாற்று, பித்தலாட்டம், கொள்ளையடித்தல் இவையனைத்திற்கும் ராஜ தந்திரம் என்று பெயர் போட்டது ஏன்?
ஆட்சி இருக்கும் போது பணம், அதிகாரம் மூலம் யாரையும் விலைக்கு வாங்கி விடலாம் என்ற ஆணவத்தில் ஒரு தலைமையும், ஆட்சி இல்லாத போது தன் வாரிசுக்கு பதவி வாங்க யார் காலிலும் விழலாம் என்ற ஆரோக்கியமற்ற அரசியல் தமிழகத்தில் நிலவி வருவர்தகு காரணம் அதிமுகவோ, திமுகவோ அல்ல. அவற்றிற்கு தேர்தல் தோறும் அங்கீகாரம் கொடுக்கும் வாக்காளர்களாகிய நாம் தான்.
அரசியல் வேண்டாம் என்கிற நாம் வாக்களிக்காமலா இருக்கிறோம். அரசியல் கட்சிகளால் நடத்த படும் காட்சி ஊடகங்களையும், தினசரிகளையும் நம்பி அவர்கள் வெளியிடும் செய்திகள் மூலம் யாரோ ஒருவருக்கு வாக்களிக்கிறோம். இதனால் சாக்கடையாவது அரசியல் மட்டுமல்ல நம் சமுதாயமும் கூட.
அரசியல் என்பது மக்களுக்காக சேவை செய்யும் புனிதமான பணி தானே தவிர தன் குடும்பத்தையும், தன்னையும் வளபடுத்தி கொள்ள கூடிய இடமல்ல என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வில்லை. அவர்களை புரிய வைக்க வேண்டிய பொறுப்பு மக்களாகிய நமக்கு அல்லவா இருக்கிறது..
அரசியல் அறிவோம்! மாற்றம் உருவாக்குவோம்!
Wednesday
கருணாநிதியின் மட்டமான அரசியலுக்கு இன்னும் ஒரு உதாரணம்
தமிழகத்தில் மேல்சபை நாடாளுமன்ற உறுப்பினருக்கான தேர்தல்களம் சூடு பிடித்துள்ளது. 6 பேரை தேர்ந்தெடுக்க வேண்டிய தேர்தலில் 7 பேர் களத்தில் உள்ளனர்.
சட்ட மன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டிய தேர்தல் என்பதால் ஒவ்வெரு கட்சியின் பலத்தை பொறுத்து வேட்பாளர்கள நிறுத்தப் படுவார்கள். தமியால்கத்தில் அதிமுகவின் சட்ட மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை பார்க்கும் போது 4 பேர் வெற்றி பெற்று விடுவார்கள். ஆனால் அதிமுக 5 வேட்பாளர்களை அறிவித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி. ராஜா அவர்கள் ஆதிமுகவிடம் ஆதரவு கேட்ட பிறகும் 5 வேட்பாளர்களை அறிவித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதே போல் திமுக சார்பில் கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேமுதிகவிலிருந்து வரிசையாக எம் எல் ஏக்கள் அதிமுகவிற்கு விலை போய் கொண்டிருந்த காரணத்தால் தேமுதிக போட்டியிடாது என்று நினைத்த வேலையில் தேமுதிகவும் தன் பங்கிற்கு வேட்பாளரை அறிவித்தது. அதன் பின்னர் டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு என்றும் தான் அறிவித்த ஐந்து வேட்பாளர்களில் ஒருவரை திரும்ப பெறுவதாகவும் ஜெயலலிதா அறிவித்ததை அடுத்து ஆறு இடங்களுக்கான போட்டியில் ஏழு பேர் போட்டியிடுகிறார்கள்.
இப்போதைய நிலவரப்படி அதிமுக சார்புவேட்பாளர்கள் 4 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜாவும் வெற்றி பெறுவது உறுதியாகி விட்ட நிலையில் கனிமொழிக்கும், தேமுதிகவிற்கு போட்டி நிலவுகிறது. இங்கே தான் கருணாநிதியின் மட்டமான அரசியல் நடைபெறுகிறது. ஈழத்தில் தமிழர்கள படுகொலை செய்ய பட்ட போதும் அதை தொடர்ந்து நான்கு ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டி இருந்து பதவி சுகத்தை அனுபவித்து, இன்னும் காங்கிரஸ் கட்சியுடன் இருந்தால் தெருவில் கால் வைக்க முடியாது என்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஈழ நிலைப்பாட்டை குற்றம் சாட்டி திமுக வெளியே வந்தந்து.
திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதே திமுக இன்று காங்கிரஸ் காலடியில் சரணாகதி அடைந்துள்ளது. கனிமொழியை வெற்றி பெற வைக்க காங்கிரஸ் கட்சியின் வாக்கை கேட்டு திமுக சார்பில் டி.ஆர்.பாலு இன்று சோனியாவை சந்தித்துள்ளார். இதை விட மட்டமான அரசியல் எங்கேனும் உண்டுமா? ஏற்கனவே கனிமொழி ஊழல் செய்தார் என்று கனிமொழியை திகார் சிறையில் அடைக்க பெரிதும் காரணமாக இருந்தது இதே காங்கிரஸ் கட்சி தான். சுயமரியாதைக்காக காதலை இழந்தேன் என்று சொன்ன கருணாநிதியால் பதவியை இழக்க முடியாமல் சுயமரியாதை சந்தி சிரிக்கிறது.
அடுத்த காட்சி திருமாவளவனை பக்கத்தில் வைத்து கொண்டு ராமதாசை கடுமையாக தாக்கி விட்ட, பின்னர் தமிழக அரசு ராமதாஸ் மீது நடவடிக்கை எடுத்த பிறகு ராமதாசை கூட்டணியில் சேர்த்து விடலாம் என்று கணக்கு போட்டு மருத்துவமனை வரை சென்று சந்தித்தார் ஸ்டாலின். ஆனால் அப்போதே அன்புமணி திமுகவுடன் நாங்கள் கூட்டணி சேர மாட்டோம் என்று முகத்தில் அடித்தது போல் சொல்லி விட்டார். பதிலுக்கு ஸ்டாலின் நாங்கள் கூட்டணிக்காக எங்கள் கதவுகளை திறந்து வைக்க வில்லை என்று சொல்லி ஒரு மாதத்திற்குள் அதே அன்புமணியின் வாசலில் காத்து நிற்கிறார் ஸ்டாலின்.
பதவிக்காக யார் காலிலும் விழும் இவர்களால் எப்படி சுயமரியாதையை காக்க முடியும்? திராவிட இயக்க வழி வந்த திமுக பெரியார், அண்ணா வழி தோன்றலான திமுக இன்று கருணாநிதியின் குடும்பத்தில் சிக்கி சின்னா பின்னமாவதொடு எந்த திராவிட இயக்கத்தால் நாம் எழுந்தொமோ அதனாலேயே தமிழர்கள் தரம் தாழ்த்தப்படும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.
எந்த காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வீழ்த்த வேண்டும் என்று துவங்க பட்ட திமுகஇன்று கருணாநிதி தலைமையில் அதே காங்கிரஸ் கட்சியிடம் காலில் விழுவது வேதனை.
தமிழருவி மணியன் சொல்லும் 2016 சாத்தியமா?
தமிழகத்தில் கருணாநிதி போனால் ஜெயலலிதா என்றும் ஜெயலலிதா போனால் கருணாநிதி என்றும் தான் ஒவ்வெரு முறையும் முதல்வர் பதவிக்கான போட்டியும் தர்க்கங்களும் நடந்தது வந்தது. ஆனால் சமீப காலமாக அந்த தர்க்கங்களை உடைக்கும் விதமாக தான் செல்லும் இடங்களில் எல்லாம் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வரும் 2016 ஆண்டில் தமிழகத்தின் முதல்வராக வைகோ அரியணை ஏறுவார் என்று சொல்லி வருகிறார்.
தமிழருவி மணியனின் இந்த பேச்சு முகநூலில் இரண்டு மூன்று தினங்களாக மிக பெரிய தர்க்கங்களை உருவாக்கி இருக்கிறது. முகநூலில் இருக்கும் ஒரு சில திமுகவினரை உசுபேற்றி விட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.
இதற்கு முன்பும் பல முறை உள்ளத்திலும் பொதுவாழ்விலும் நேர்மையாக இருக்கும் வைகோ தான் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வர வேண்டும் என தமிழருவி மணியன் சொன்ன போது அதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை. ஏனெனில் மதிமுக எப்படியாவது அதிமுக கூட்டணிக்கு சென்று விடும் என்று பலர் நினைத்து வந்தனர். அப்படிஅமைந்ததால் அதிமுக அடுத்து திமுக என்ற நிலையே இருக்கும். அதிமுக மீதான கோபத்தில் நாம் ஆட்சியை பிடித்து விடலாம் என்று கனவு கோட்டை கட்டி வருகிற திமுகவினருக்கு இது மிக பெரிய அதிர்ச்சியை உருவாக்கியது என்றே சொல்ல வேண்டும்.
வைகோவும் மதிமுகவும் பல முறை சூசகமாக அதிமுக திமுகவிற்கு மாற்றாக மதிமுக திகழும் என்று சொல்லிய பிறகும் அதிமுகவோடு இணைத்து திமுகவினர் பேசியதே அவர்களின் இருப்பை தக்க வைக்க கூடிய சூழ்ச்சி தான். இவர்களுக்கு தூண் கொடுக்க மஞ்சள் பத்திரிகை நக்கீரன் இருக்கிறது.
இரண்டு நாட்களுக்குமுன்னர் ஜெயலலிதா டில்லியில் 40 தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடும் என்று அறிவித்த பின்னர் மதிமுக அதிமுக கூட்டணிக்கு செல்லும் என்று நாம் செய்யும் பிரச்சாரம் எடுபடாது என்பதை உணர்ந்த திமுக வைகோ தலைமையில் அமையஇருக்கும் மாற்று அணியை விமர்ச்சிக்க துவங்கி இருக்கிறது. அதன் முதல் படியாக வைகோவை விமர்சிக்க துவங்கி இருக்கிறார்கள்.
ஜெயாவை விமர்சிக்க துப்பு இல்லையா என்று கேட்கும் திமுகவினரே ஜெயாவை விமர்சிப்பதை விட்டு விட்டு வைகோவை விமர்சிக்கிறார்கள் என்னும் போது அவர்கள் ஜெயாவை விட வைகோவை கண்டு தான் அதிகம் அஞ்சுகிறார்கள் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கும் வகையில் அவர்களின் விமர்ச்சனங்கள் இருக்கிறது.
ஏன் அவர்கள் வைகோவை விமர்ச்சிக்கிறார்கள்? 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி தலைவரின் மகன் என்ற முறையில் அடுத்த வாரிசுக்கு அனைத்து அதிகாரங்கள் கொடுத்தும் அனைத்து பயிற்சிகள் கொடுத்தும் இன்றும் தளபதியாகவே அந்த வாரிசு இருப்பதாலும், அந்த வாரிசுக்கென்று கருணாநிதியிடம் இருக்கும் எந்த திறமையும் இல்லாத காரணத்தால், மக்கள் பிரச்னைக்கு போராடும் வைகோ அந்த இடத்தை பறித்து விடுவார் என்ற பயத்தில் திமுகவினர் இருப்பது தெரிகிறது.
தமிழை சொல்லி ஆட்சியில் இருந்த திமுக, 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடந்து மத்திய அரசில் அங்கம் வகித்து அதிகாரத்தை சுவைத்த திமுக, கலைஞரின் குடும்ப வாரிசுகளின் மூலம் மக்களுக்கு எதுவும் செய்யாமல் வெறுமனே மிக பெரிய ஊழல்களை செய்து வந்தது. அதன் விளைவு தான் கடந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தமிழக மக்கள் திமுகவிற்கு கொடுக்க வில்லை.
திமுக நடத்திய காட்டு மிராண்டி தனமாக ஆட்சியாலும், கிளை செயலாளர் முதல் அமைச்சர்கள் வரை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஏழை எளிய மக்கள் நிலங்களை அபகரித்து, மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகமே அவர்கள் குடும்ப சொத்தாக மாறி விடும் என்ற அச்சத்தில் மக்கள் திமுகவுக்கு எதிராக அதிமுகவுக்கு வாக்களித்தார்கள்.
அதிமுக வெற்றி பெற வேண்டும் ஜெயலலிதா முதல்வர் ஆக வேண்டும் என்று ஒரு மனதாக மக்கள் வாக்களிக்க வில்லை. கருணாநிதியை வீழ்த்த ஜெயாவை ஒரு ஆயுதமாக மக்கள் பயன் படுத்தினாலும், இவர்கள் இருவருக்கு மாற்றாக ஒருவர் வர வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலானோர் மத்தியில் இருந்து வந்தது.
அந்த மாற்று தலைமை யார்? அதை தான் தமிழருவி மணியன் தமிழகத்திற்கு அடையாளம் காட்டுகிறார். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும், மக்களின் இன்ப துன்பங்களில் மக்களுக்காக அயராது உழைக்கும் தலைவன் யார் என்ற தேடலில் வைகோவே அங்கு தெரிகிறார்.
தமிழருவி மணியன் வைகோவை அடையாளம் காட்டும் காரணங்களை ஆரோக்கிய நேர்மையான அரசியலை விரும்பும் நடுநிலையாளர்கள் ஏற்று கொண்டுள்ளார்கள் என்பதால் தான் வைகோ மீது கொள்கை ரீதியாக விமர்ச்சனம் வைக்காமல் தரம் தாழ்ந்து திமுகவினர் விமர்ச்சிக்கிறார்கள். திமுகவினர் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து செல்லும் காரணம் ஒன்றே தமிழருவி மணியன் சொல்லும் 2016 சாத்தியமாகும் என்றே தோன்றுகிறது.
தமிழை சொல்லி ஆட்சியில் இருந்த திமுக, 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடந்து மத்திய அரசில் அங்கம் வகித்து அதிகாரத்தை சுவைத்த திமுக, கலைஞரின் குடும்ப வாரிசுகளின் மூலம் மக்களுக்கு எதுவும் செய்யாமல் வெறுமனே மிக பெரிய ஊழல்களை செய்து வந்தது. அதன் விளைவு தான் கடந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தமிழக மக்கள் திமுகவிற்கு கொடுக்க வில்லை.
திமுக நடத்திய காட்டு மிராண்டி தனமாக ஆட்சியாலும், கிளை செயலாளர் முதல் அமைச்சர்கள் வரை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஏழை எளிய மக்கள் நிலங்களை அபகரித்து, மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகமே அவர்கள் குடும்ப சொத்தாக மாறி விடும் என்ற அச்சத்தில் மக்கள் திமுகவுக்கு எதிராக அதிமுகவுக்கு வாக்களித்தார்கள்.
அதிமுக வெற்றி பெற வேண்டும் ஜெயலலிதா முதல்வர் ஆக வேண்டும் என்று ஒரு மனதாக மக்கள் வாக்களிக்க வில்லை. கருணாநிதியை வீழ்த்த ஜெயாவை ஒரு ஆயுதமாக மக்கள் பயன் படுத்தினாலும், இவர்கள் இருவருக்கு மாற்றாக ஒருவர் வர வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலானோர் மத்தியில் இருந்து வந்தது.
அந்த மாற்று தலைமை யார்? அதை தான் தமிழருவி மணியன் தமிழகத்திற்கு அடையாளம் காட்டுகிறார். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும், மக்களின் இன்ப துன்பங்களில் மக்களுக்காக அயராது உழைக்கும் தலைவன் யார் என்ற தேடலில் வைகோவே அங்கு தெரிகிறார்.
தமிழருவி மணியன் வைகோவை அடையாளம் காட்டும் காரணங்களை ஆரோக்கிய நேர்மையான அரசியலை விரும்பும் நடுநிலையாளர்கள் ஏற்று கொண்டுள்ளார்கள் என்பதால் தான் வைகோ மீது கொள்கை ரீதியாக விமர்ச்சனம் வைக்காமல் தரம் தாழ்ந்து திமுகவினர் விமர்ச்சிக்கிறார்கள். திமுகவினர் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து செல்லும் காரணம் ஒன்றே தமிழருவி மணியன் சொல்லும் 2016 சாத்தியமாகும் என்றே தோன்றுகிறது.
Thursday
மாற்றம் விரும்பிய மக்களுக்கு ஏமாற்றம் கொடுத்த ஜெயா
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
கருணாநிதி,
வைகோ,
ஜெயலலிதா
எழுதிய நேரம்
Thursday, May 10, 2012
18 ஆம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் ம.தி.மு.க-வின் கொடியை வைகோ ஏற்றிய ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சந்திப்பு இது...
''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து மே 13-ம் தேதியுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இந்த ஓர் ஆண்டு காலத்தை எப்படி மதிப்பிடுவீர்கள்?''
''மாற்றம் விரும்பிய மக்களுக்கு ஏமாற்றத்தையே ஜெயலலிதா தந்து இருக்கிறார்
என்று, அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாவது மாதமே சொன்னேன். 'ஜெயலலிதா
திருந்திவிட்டார்’ என்று சொல்லி வாக்குக் கேட்டவர்கள் அத்தனை பேர்
முகத்திலும் கரியைப் பூசிவிட்டார் ஜெயலலிதா.
பால் விலையை
ஏற்றிவிட்டார். பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டார். மின்சாரம் கொடுக்கத்
திட்டமிடாமல் மின் கட்டணத்தை மட்டும் எகிறவைத்துவிட்டார். மளிகைப்
பொருட்கள் அனைத்தின் விலையும் ஏறிவிட்டன. யாரெல்லாம் ஜெயலலிதாவை
ஆட்சிக்குக் கொண்டுவர வாக்குஅளித்தார்களோ, அவர்கள் அனைவரின் பாக்கெட்டில்
இருந்தும் பணத்தைப் பகிரங்கமாக அரசாங்கம் எடுத்துவிட்டது. ஏழை, நடுத்தர
மக்கள் இதுபற்றிக் கோபப்படுவார்களே என்கிற பயமே ஜெயலலிதாவுக்கு இல்லை.
'இவ்வளவு கட்டணத்தை உயர்த்தியதற்குப் பிறகும் நான்தான் சங்கரன்கோவிலில்
வெற்றி பெறுவேன்’ என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் பகிரங்கமாகச் சொன்னார்.
பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற மமதைதான் இதற்குக் காரணம்.
திருமங்கலம் ஃபார்முலாவைக் கண்டுபிடித்த கருணாநிதியின் பண பலம்தான் அவரை
பாதாளத் துக்குத் தள்ளிவிட்டது என்பதை ஜெயலலிதா உணர வேண்டும்.''
'' 'நான் என்ன தவறு செய்வேன் என்று எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் காத்திருக்கின்றன’ என்கிறாரே ஜெயலலிதா?''
''பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பெயரால் அமைந்த நூற்றாண்டு நூலகத்தை
முடக்க நினைத்தது சரியா? செம்மொழி நூலகத்தைப் பகிரங்கமாகவே
அப்புறப்படுத்தியதை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்? சமச்சீர்க் கல்வியை
முடக்குவதற்காக எத்தனை வக்கீல்களை வைத்து ஜெயலலிதா வாதாடினார்?
தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்திருக்குமானால், கடந்த ஆட்சி மீது
விசாரணை நடத்தலாம். அதற்காக மக்களின் வரிப் பணத்தால் கட்டப்பட்ட
கோடிக்கணக்கான மதிப்பிலான கட்டடத்தை கவனிப்பார் இல்லாமல் போடு வேன் என்பது
பாசிச அணுகுமுறை. கடந்த ஆட்சி செய்ததை எல்லாம் மாற்றுவேன் என்று அடுத்து
வரும் ஆட்சி முடிவு எடுக்குமானால், ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தும்
கேலிக்குரியவையாகி சவக்குழிக்குள் தள்ளப்படும்.''
''ஓர் ஆண்டு காலத்தில் நல்லதே நடக்கவில்லை என்கிறீர்களா?''
''பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்’
என்று தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வை வெளிப்படுத்தியது
பாராட்டத்தகுந்தது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு சதி
செய்ததும், அதற்கு மத்திய காங்கிரஸ் அரசு வாய் மூடி மௌனியாக இருந்தபோது,
அறிக்கை வெளியிட்டு தமிழ்நாட்டு உரிமைக்காக ஜெயலலிதா நின்றதை வரவேற்கிறோம்.
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் என்கிற பெயரால் மாநிலத்தின் உரிமைகள்
பறிக்கப்படுகிறபோது, தைரியமாக அதனை எதிர்த்து உறுதியாக ஜெயலலிதா நிற்பது
கவனிக்கத் தக்கது.''
''இந்த ஓர் ஆண்டு காலப் படிப்பினைகளின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு நீங்கள் ஆலோசனை ஏதேனும் சொல்ல முடியுமா?''
''மூன்று விஷயங்களை ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.
ஜெயலலிதாவின் அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும். அரசியல்தலைவர் களால்,
மக்கள் பிரதிநிதிகளால், பாதிக்கப் பட்ட மக்களால் எளிதில் பார்க்க முடியாத
மனிதராக அவர் இருக்கிறார். இப்படி நடந்துகொள்வது மன்னர் ஆட்சிக் காலத் தின்
எச்சம். தெருத் தெருவாகச் சென்று மக்களிடம் ஓட்டு போடுங்கள் என்று கேட்டு
வாக்கு வாங்கும் மக்கள் ஆட்சிக் காலத்தில், அனைத்துத் தலைவர்களும்
மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். சட்டீஸ்கர் மாநிலத்தைச்
சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தப் பட்டபோது தமிழகத்தின்
எத்தனையோ குடும்பங்கள் அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று
பிரார்த்தித்தன. அலெக்ஸின் அப்பாவும் அலெக்ஸ் மனைவியின் அப்பா வும் தலைமைச்
செயலகத்துக்குச் சென்று முதல்வரைப் பார்க்க வேண்டும் என்று அனுமதி
கேட்டபோது கிடைக்கவில்லை. அவர்களை தமிழக முதல்வர் சந்திப்பது என்பது,
அந்தக் குடும்பத்தின் பின்னால் மொத்தத் தமிழ்நாடும் இருக்கிறது என்பதை
உணர்த்தும் ஒரு சமிக்ஞை. அதன் பிறகு, பிரதமருக்குக் கடிதம் எழுதினார்
முதல்வர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களை அந்தச் சூழ்நிலையில் சந்திப்பதால்,
அப்பாயின் மென்ட் இல்லாமலேயே அவர்களைப் பார்க்க அனுமதிப்பதால் முதல்வர்
குறைந்து விட மாட்டார். அவருடைய செல்வாக்கு உயரத்தான் செய்யும்.
இரண்டாவது... தமிழ்நாடு முழுவதும் கண்மாய், குளங்களில் மணல் கொள்ளை
பகிரங்கமாக ஆளும் கட்சியினரின் ஆசீர்வாதத்துடன் பலமாக நடக்கிறது. ஆளும்
கட்சியினருக்கு இன்று வருவாய் ஈட்டும் முக்கியமான தொழில்... மணல்
திருட்டுதான். பிரதான ஆற்றுப் படுகைகள் மட்டும் அல்லாமல், சிற்றாறுகள்,
காட்டாறுகளைத் தேடிக் கண்டுபிடித்து மணல் அள்ளுகிறார்கள். தமிழ்நாட்டின்
வளத்தை பட்டப் பகலில் சுரண்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதைத்
தடுக்காவிட்டால், தமிழகமே பாலைவனமாகிவிடும்.
மூன்றாவது... சாராயக்
கடைகள் மூலமாக வருமானம் அதிகமாவதை ஓர் அரசாங்கம் சாதனையாகச் சொல்வது
கேவலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் குற்ற நடவடிக்கைகள் பெருகிப்போய்,
பண்பாட்டுச் சீர்கேடுகள் அதிகமானதற்கு டாஸ்மாக் கடைகள்தான் காரணம்.
ஜெயலலிதாவும் கருணாநிதியும் சேர்ந்து தமிழ்ச் சமுதாயத்துக்குச் செய்த
பெருங்கேடு இது. இனி மதுக் கடைகளைப் புதிதாகத் திறக்கக் கூடாது; ஏற்கெனவே
உள்ள கடைகளைப் படிப்படியாக மூட வேண்டும். எலைட் பார் வரவே கூடாது.
தமிழ்நாட்டு ஆண்களின் கல்லீரலைக் கெடுத்த கழகங்கள் என்று வருங்கால சமுதாயம்
இவர்கள் இருவரையும் சபிக்கும்!''
''ஈழப் பிரச்னைக்கு வருவோம். மீண்டும் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) தொடங்கி உள்ளாரே கருணாநிதி?''
''கூச்சம் இல்லாமல் பொய்கள் சொல்வதும் வெட்கம் இல்லாமல் வேடிக்கை
காட்டுவதும் கலைஞர் கருணாநிதிக்குக் கைவந்த கலை. வசனம் எழுதி வாழ்க்கையைத்
தொடங்கியவர் அதே வசனங்கள் இன்னமும் கை கொடுக்கும் என்று நினைக்கிறார்.
80-களின் தொடக்கக் காலத்தில் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் எல்லாம்
'ஈழம்’ என்ற சொல்லை விதைத்த 'டெசோ’ அமைப்பின் கழுத்தை நெரித்துக் கொன்றவரே
கருணாநிதிதானே! 24 ஆண்டுகளுக்கு முன் அவராலேயே கொன்று புதைக்கப்பட்ட உடலை
மீட்டெடுத்து... பாடம் பண்ணி... படம் காட்ட வருகிறார். இது டெசோ அல்ல.
வெறும் ஷோ!
யாழ்க் கோட்டையில் புலிக் கொடி பறந்தபோது வேடிக்கை
பார்த்த அவர்... வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முக்கால்
நிலப் பரப்பில் நிர்வாகத்தைத் தமிழீழ அரசாங்கம் நிர்வகித்தபோது
கண்டுகொள்ளாமல் இருந்த அவர்... தரைப் படை, கப்பல் படை, விமானப் படை
மூன்றும் பிரபாகரனுக்கு இருந்தபோது வயிற்றெரிச்சல் பட்ட இவர்... ஆண்களுக்கு
இணையாகப் பெண்களும் களம் நின்ற காலத்தில் கண்டுகொள்ளாதவர்... உலகம்
பயன்படுத்தும் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்திப் போரிட்டு நின்ற காலத்தில்
அதை ஒரு பொருட்டாகக் கருதாதவர்... இன்றைக்குத் தமிழ் ஈழம் அமையப்
பாடுபடுவேன் என்று பேசுவது பச்சை சந்தர்ப்பவாதம். கருணாநிதிக்கு இது
இயல்பானது.
நான்காவது கட்ட ஈழப் போர் என்பது 2006-2009
காலகட்டத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷேவால் நடத்தப்பட்ட ரத்த வெறியாட்டம்.
இன்றைக்கு 'டெசோ’வை உயிர்த்தெழவைத்திருக்கும் கருணாநிதி, அன்று தமிழன்
சாகாமல் இருக்கச் செய்த காரியம் என்ன? தமிழ் ஈழத்துக்காகக் குரல்
கொடுத்தாரா? கருணாநிதிக்கு தைரியம் இருக்குமானால், நேர்மை இருக்குமானால்,
2008 நவம்பர் மாதம் முதல் ஆட்சியைவிட்டு இறங்கியது வரை ஈழப் பிரச்னை
குறித்து பேசியது, எழுதியது அனைத் தையும் பகிரங்கமாக வெளியிடட்டும்.
தமிழனுக்கு எதிராகப் பேசினார். தமிழீழக் கொள்கைக் குத் துரோகம் இழைத்தார்.
ஈழத் தமிழர்களின் காவல் அரணாக இருந்த விடுதலைப் புலிகளைப் பழித்தார்.
இலங்கை அரசோடு இணைந்து நாசகாரச் செயல்களுக்கு உடந்தையாக இருந்த மன்மோகன் -
சோனியா கூட்டத்துக்கு ஆதரவாக இருந்தார். இந்தப் பாவத்துக்கு கருணாநிதியால்
பரிகாரம் காணவே முடியாது.
தமிழர்கள், கருணாநிதியின் டெசோவை
சீரியஸாக எடுத்துக்கொள்ளவே இல்லை. அவர் ஆண்டுக்கு ஒரு முறை கதை வசனம்
எழுதும் படங்களைப் போலவே ஃப்ளாப் ஆகும் படங்களில் ஒன்று இது.''
''தி.மு.க-வில் ஸ்டாலின் - அழகிரி மோதல் தொடர்ந்து நடப்பதாகச் செய்திகள் வருகின்றனவே?''
''கொள்கைக் கட்சியில் விவாதங்கள் நடக்கும். குடும்பக் கட்சியில் கோஷ்டி மோதல்தானே நடக்கும்?
கருணாநிதியைப் போன்ற திறமையாளர்களைப் பார்ப்பது அரிது. அனைவரையும்
ஈர்க்கக்கூடிய பேச்சு, வசீகரம் செய்யக்கூடிய எழுத்து, யாருக்கும் வாய்க்காத
ஞாபக சக்தி, எவரையும் மடக்கும் சொற்சிலம்பம், ராஜதந்திரமாகக் காய்கள்
நகர்த்துவதில் லாகவம், உலகத் தமிழர்கள் ஒருசேர வைத்திருக்கும் நம்பிக்கை -
இத்தனையும் ஒருசேர இருந்தது கருணாநிதிக்கு. திறமையான அவருக்கு காலம் தங்கத்
தாம்பாளத்தில் தலைவர், முதல்வர் என இரண்டு பதவிகளையும் ஒருசேர வழங்கியது.
திறமையும் வாய்ப்பும் ஒருசேர ஒரு மனிதனுக்குக் கிடைத்தன. ஆனால், அத்தனை
திறமைகளையும் சுயநலம், குடும்பப் பாசம் என்ற இரண்டின் காலடியிலும்
கருணாநிதி கொண்டுபோய்ப் புதைத்துவிட்டதால் வரலாற்றின் முன் 'தமிழினக்
குற்றவாளி’ என்ற பதற்றத்துடன் அவமானமாகத் தலைகுனிந்து நிற்க வேண் டிய
நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். இதைப் பார்த்து நான் சந்தோஷப்படவில்லை.
பரிதாபப்படுகிறேன்.
எந்த இயக்கத்துக்காக என் இளமையின் பெரும்
பகுதியை உழைப்பாக வழங்கினேனோ... எந்தத் தலைவனுக்காக என் வாழ்க்கையை
அர்ப்பணித்து நின்றேனோ... அந்தத் தலைவன்... இப்படிப்பட்ட பழிச் சொல்லுக்கு
ஆளாகிவிட்டாரே என்ற கவலையிலேயே பேசுகிறேன்!''
''அ.தி.மு.க.,
தி.மு.க. இரண்டையும் முழுமையாக நிராகரிக்கிறீர்கள். ஆனால், தமிழகத்தை
இவர்கள் இருவரும் மட்டும்தானே மாறிமாறி ஆள முடிகிறது?''
''இரண்டு
கட்சிகளுக்குமே வலிமையான வாக்கு வங்கி தமிழகத்தில் இருக்கிறது. இதுவே ஆட்சி
அமைக்க சாதகமாக உள்ளது. அவர்களுக்கு இதுவே தைரியமும் கொடுக்கிறது. இந்த
முறை தோற்றால்... அடுத்த முறை வந்துவிடுவோம் என்ற தைரியத்தில்
இருக்கிறார்கள். இதனால் தவறை திருத்திக்கொள்ள முன்வருவது இல்லை.
இதைத் தமிழக மக்கள் உணர்ந்துவிட்டார்கள். தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய
இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கி வலிமை குறைந்துவருகிறது. புதிய, இளைய
வாக்காளர்கள் இந்த இரண்டு கட்சிகளையும் நிராகரிக்கும் மனோபாவத்துக்கு வந்து
உள்ளார்கள். மாற்றம் உடனடியாக வந்து விடும் என்று சொல்ல முடியாது. ஆனால்,
பல ஆண்டுகளுக்கு இது நீடிக்காது.''
''குறிப்பிட்ட அளவு செல்வாக்கு
இருந்த, உங்க ளுடைய சொந்தத் தொகுதியான சங்கரன்கோவில் கூட ம.தி.மு.க-வுக்கு
வெற்றி வாய்ப்பைத் தரவில்லையே?''
''எங்களை எதிர்த்து நின்ற
மூன்று கட்சிகளுமே வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தன. ஓட்டுக்கு ஒரு
பைசாவும் தர மாட்டோம் என்று சபதம் எடுத்து நாங்கள் நின்றோம். இத்தகைய
சூழ்நிலையில் 21 ஆயிரம் பேர் வாக்களித்ததே வெற்றிக்குச் சமம்தான்!''
''புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நிற்பீர்களா?''
''இல்லை. பகிரங்கமாகப் பண வேட்டை நடத்தும் ஆளும் கட்சியும், அதைக் கை
கட்டி வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையமும் இருக்கும் நாட்டில் இடைத்
தேர்தலில் போட்டி என்பது தவறான முடிவாகிவிடும். பணத்துக்கு ஓட்டை விற்பது
ஜனநாயகத்தில் விழுந்துள்ள ஓட்டை. இதை சங்கரன்கோவிலில் சரிசெய்ய
முடியவில்லை. புதுக்கோட்டை மக்களாவது பணத்துக்கு விற்கும் பாவத்துக்குப்
பலியாகிவிடக் கூடாது என்பதே என்னுடைய வேண்டுகோள்.''
- கை கூப்பி முடிக்கிறார் வைகோ
நன்றி :ஆனந்த விகடன்
Tuesday
ஒரு பெரிய மனிதரின் புதிய நாடகம்! வைகோ:
தமிழ் ஈழ முகமூடியை மறுபடியும் தாங்கி வலம் வரத் தொடங்கி விட்டார் கருணாநிதி. நேரத்துக்கும் ஆளுக்கும் தகுந்த மாதிரி வேடம் தாங்குவது அவருக்கு வழக்கமானதுதான். ஆனால், அதற்குத் தமிழ் இனத்தையும் தமிழ் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட உடல்களையும் பணயம் வைக்க அவர் முடிவு எடுத்திருப்பதுதான் வேதனையானது.
இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு ஈவு இரக்கம் இன்றி, தமிழ் இனப்படுகொலையை நடத்தியதற்கும், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளைப் போர்க்களத்தில் முறியடிப்பதற்கும், இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ராடார்களும், ஆயுதங்களும் தந்ததுதான் அடிப்படைக் காரணம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாயும் வழங்கி, இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் அவ்வப்போது அனுப்பிவைத்து, சிங்களவன் நடத்திய இனக்கொலை யுத்தத்தை இயக்கியதற்கு அசைக்க முடியாத ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன. இந்த மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்த இந்திய அரசின் அமைச்சரவையில் பங்கு ஏற்று உடந்தையாகச் செயல்பட்டார் கலைஞர் கருணாநிதி.
![]() |
| நடித்தே ஈழ தமிழர்கள் ஒரு லட்சம் பேரை கொன்ன கருணாநிதியின் நாடகத்தில் ஒரு பகுதி கால் பக்கம் மனைவியும் தலை பக்கம் துணைவியும் துணைக்கு இருக்கிறார்கள் |
'தமிழ் இனப்படுகொலைக்கு இவரும் ஒரு காரணம்’ என்று உலகத் தமிழர்கள் உள்ளங்களில் ஏற்பட்டுள்ள பழியில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவும், தடுமாறித் தத்தளிக்கும் தி.மு.கழகத்தின் தொண்டர்களை ஏமாற்றுவதற்காகவும், தமிழ் ஈழ விடுதலை முகமூடியை அணிந்துகொண்டு, தமிழர் தரணியில் இப்போது பவனி வரத் துடிக்கிறார்.
2004-ம் ஆண்டு, சோனியாவின் ஆளுமையில், டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தவுடன், இலங்கையோடு இந்தியா ராணுவ ஒப்பந்தம் செய்ய இருக்கிறது என்ற செய்திகள் வெளியானபோது, அதைத் தடுப்பதற்குக் கருணாநிதி, ஒரு துரும்பையாவது தூக்கிப் போட்டாரா? ஆட்சேபணை தெரிவித்தாரா? எடுத்ததற்கெல்லாம் கடிதங்கள் எழுதினேன் என்று பட்டியல் போடுகிறவர், இதுகுறித்து ஏதாவது ஒரு கடிதம் எழுதியதாகச் சொல்ல முடியுமா?
சிங்கள அரசுக்கு, இந்திய அரசு ராடார்கள் கொடுக்க இருக்கின்ற செய்தி வந்தபோது, அது தமிழர்களைக் குண்டு வீசிக் கொல்வதற்குத்தான் பயன்படும் என்று பதறித் தடுக்க முனைந்தாரா? 2007-ல் இந்தியா இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்தபோது, இவர் அதைக் கண்டித்தது உண்டா?
இந்திய அரசு, ஈழத் தமிழர்களை அழிக்க, சிங்கள அரசுக்குச் செய்து வந்த உதவிகளை, மேற்கொண்ட நடவடிக்கைகளை, எழுத்து மூலமாகக் குறிப்பிட்டு, இந்திய அரசைக் கண்டித்து, இந்தத் துரோகத்தைத் தமிழ் இனமும், வருங்காலத் தலைமுறையும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று எச்சரித்தும், பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை, நேரடியாகப் பலமுறை சந்தித்துத் தந்த கடிதங்களைத் தொகுத்து, குற்றம் சாட்டுகிறேன் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும், நூலாக நான் வெளியிட்டதற்காக என் மீது, கருணாநிதி அரசு தேசத்துரோக வழக்கைத்தானே பதிவு செய்தது.
தமிழ் ஈழம் என்ற உயிர் மூச்சான லட்சியத்துக்காக, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், 'ஈழத்தில் நடப்பது என்ன?’ என்று நான் பேசியதற்காக, அதே தேசத் துரோகக் குற்றச்சாட்டைத் தொடுத்து என்னைக் கைது செய்து புழல் மத்தியச் சிறையில் அடைத்தவர் அவர்.
1993-ம் ஆண்டு தி.மு.கழகத்தில் இருந்து என்னை நீக்க வேண்டும் என்று அவர் முடிவு எடுத்தபோது, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீதுதான் பழியைச் சுமத்தினார். எனது அரசியல் முன்னேற்றத்துக்காக, கலைஞர் கருணாநிதியை விடுதலைப் புலிகள் கொலை செய்யத் திட்டமிட்டார்கள் என்ற ஊர்ஜிதமாகாத, மத்திய அரசின் உளவுப்பிரிவுத் தகவலைக் குற்றச்சாட்டாக ஆக்கி, என்னைத் தி.மு.கழகத்தில் இருந்து நீக்கினார்.
விடுதலைப்புலிகள் மீது அல்லவோ அன்று கொடும் பழியைச் சுமத்தினார்?
எதற்கெடுத்தாலும், சகோதர யுத்தம்தான் ஈழத் தமிழர் வீழ்ச்சிக்குக் காரணம் என்று, ஒரு நாடக ஒப்பாரி வைக்கிறாரே, கோடிக்கணக்கான மக்கள் நெஞ்சில், அண்ணாவின் இயக்கத்தைச் சுடராக ஏற்றிய, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை இவர் சகித்தாரா? விளக்க அறிக்கைக்கான கெடு முடிவதற்கு உள்ளாகவே, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அல்லவா அவரை நீக்கச் செய்தார்?
கட்சியை, தலைமையை, உயிருக்கும் மேலாக நேசித்து, சர்வபரித் தியாகத்துக்கும் சித்தமாக இருந்த என் மீது கொலைப் பழி சுமத்தியபோது, அதை உண்மை என்று தொண்டர்கள் நம்பி இருந்தால் என்ன ஆகும்? 'எத்தகைய துன்பத்துக்கு அவன் ஆளாவான்? எத்தனைத் தலைமுறைகளுக்கு, அவனும் அவனது குடும்பமும் இந்தப் பழியைச் சுமக்க நேரும்?’ என்று கடுகு அளவேனும் கருதியது உண்டா? மனிதாபிமானமோ, மனிதநேயமோ, அவர் மனதில் நிழலாடியது உண்டா?
புரட்சி அமைப்புகளில் விடுதலை இயக்கங்களில் எதிர்ப் புரட்சியாளரை, ஊடுருவல் துரோகிகளை எப்படி நடத்தினார்கள் என்பதற்கு, சரிதத்தில் ஏராளமான சாட்சியங்கள் உண்டு. மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களின் உயிர் குடிக்கச் சதி செய்த மாத்தையாவை, மாவீரன் என்றும், கிழக்கு மாகாணத்தில் சிங்களவர் கைக்கூலியான கருணாவை, வீரத் தளபதி என்றும் இவர்களையெல்லாம் பிரபாகரன் அழித்துவிட்டார் என்றும் வசை பாடியது யார்? அதைவிடக் கொடுமை என்னவென்றால், 'லட்சியத்துக்காகப் போராடும் வேளையில், களத்தில் இறந்த வீரர்களுக்குக் கல்லறைகள், துயிலகங்கள், கட்டுவதில் சக்தியையும் நேரத்தையும் வீணாக்கினார்கள்’ என்று புலிகளை ஏகடியம் செய்தவர் யார்?
தமிழ் இனத்தின் ஒளி விளக்காம் பிரபாகரனைத் தன் மணிவயிற்றில் சுமந்த அன்னை பார்வதி அம்மையார், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறத் தமிழகம் வந்தபோது, தமிழ்நாட்டு மண்ணில் அவர் கால் எடுத்துவைக்கவும் அனுமதிக்காமல், வந்த விமானத்திலேயே, மேலும் நான்கு மணி நேரம் திரும்பிப் பயணிக்கின்றபோது, அந்தத் தாயின் உயிருக்கே ஆபத்து விளையக்கூடுமே என்ற அபாயத்தைப் பற்றியும் எள் அளவும் எண்ணிப் பார்க்காமல் விரட்டி அடித்த குற்றவாளி கலைஞர் கருணாநிதி.
உலகில் எங்கும் நடைபெற்று இராத இக்கொடுமையைக் கண்டித்து, இலங்கைத் தூதரகத்துக்கு முன்னால் போராட்டம் நடத்த முனைந்த என்னையும், அண்ணன் பழ.நெடுமாறன், விடுதலை இராசேந்திரன், ஆவடி மனோகரன், பாவலர் இராமச்சந்திரன், எம்.நடராசன் உள்ளிட்ட அனைவரையும், கைது செய்தது மட்டும் அல்ல, தனித்தனியாக நான்கு மத்தியச் சிறைகளுக்குப் பிரித்து அனுப்ப உத்தரவிட்டவரும் இந்தப் பெரிய மனிதர்தான்.
தமிழர் மனமெல்லாம் அணையாத சுடராக ஒளி வீசிக்கொண்டு இருக்கின்ற தியாக தீபங்களாம் முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர், ஈழத் தமிழரைக் காக்க, யுத்தத்தை நிறுத்த, இந்திய அரசின் துரோகத்தைத் தடுக்க, தீக்குளித்து மடிந்தபோது இவர் இரங்கல் தெரிவித்தது உண்டா? தனது மகன் பிறந்த நாளை, பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, பட்டுப் பீதாம்பரத்துடன் இவர் கொண்டாடிக்கொண்டு இருந்தபோது தியாகச்சுடர் முத்துக்குமாரின் உயிர் அற்ற சடலம், கொளத்தூரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் வீர வணக்கத்தை ஏற்றுக்கொண்டு இருந்தது. ஈழத் தமிழருக்காகப் பள்ளப்பட்டி ரவி தீக்குளித்தபோது, 'குடும்பச் சண்டையால் செத்தான்’ என்று கொச்சைப்படுத்தி அறிக்கை வெளியிட வைத்தவரும் இவர்தான். ஈழத் தமிழர்க்காகப் போராடிய வழக்கறிஞர்களுக்கு எதிராக லத்தியைத் தூக்கியதும் இவரே.
சென்னைக் கடற்கரையில், அண்ணா சதுக்கத்தில் சாக முடிவு எடுத்து உண்ணாவிரதம் இருந்தேன் என்று, எந்தக் கூச்சமும் இல்லாமல் இன்றைக்கு எழுதுகிறார்.
முதல் நாள் இரவு, வெளிநாடுகளில் இருந்து வந்த தொலைபேசிகளில், ஈழத் தமிழர்கள் பதற்றத்தோடு, விம்மலும், புலம்பலுமாக, ''நாளை மாலைக்குள் தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிரை முடித்துவிடுவார்கள் என்று செய்தி வருகிறதே? தமிழ்நாடு முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதியிடமும் இதுபற்றி நாங்கள் முறையிட்டு உள்ளோம்'' என்று என்னிடம் சொன்னார்கள். அப்படி ஒன்று நடந்தால், பழிக்கும் வெறுப்புக்கும் தானும் ஆளாக நேரும் என்று கருதித்தான் இவர் கடற்கரை உண்ணாவிரத நாடகத்தைப் போட்டார்.
ஆனால், தில்லி ஜன்பத் சாலை, 10-ம் எண் வீட்டில் இருந்து, மிரட்டல் தொனியில் எதிர்ப்பு முக்கிய நபர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டதால், உண்ணாவிரதத்தை மூன்று மணி நேரத்திலேயே முடித்துக்கொண்டு, மதிய உணவுக்கு வீட்டுக்குப் போய்விட்டார். இவரது சாகும் வரை உண்ணாவிரதம் அன்று சந்தி சிரித்தது.
'இனி பலத்த தாக்குதல் எதுவும் நடக்காது’ என்று கருணாநிதி சொன்னதால், அன்று மாலையில் பதுங்கு குழிகளில் இருந்து தமிழர்கள் வெளியே வந்தார்கள். அவர்கள் மீதும் ராஜபக்ஷே குண்டு வீசினான்.
அதுபற்றிக் கேட்டதற்கு, 'மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்று அலட்சியமாகச் சொன்னவர் கருணாநிதி.
தமிழகத்திலும், தரணியெங்கும் தமிழர்கள் வேதனையில் துடித்தபோது, 'இலங்கைத் தமிழர் பிரச்னையில், மத்திய அரசின் கொள்கைதான் என் கொள்கை’ என்று திட்டவட்டமாக அல்லவோ சொன்னார்? அப்படியானால், இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தில், நடத்தப்பட்ட இனப் படுகொலையிலும், தானும் கூட்டுக் குற்றவாளி என்பதுதானே இவரது ஒப்புதல் வாக்குமூலம். 'ராஜபக்சேவை விமர்சிப்பது, அவருக்கு ஆத்திரத்தை மூட்டிவிடும். அதனால், தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடும். எனவே, அவரைக் குறை சொல்லக் கூடாது’ என்று கீதோபதேசம் செய்தவர்.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்குப் பொருளாதாரத் தடை விரித்தபோது, அதை உடைப்பதற்காக டெல்லிக்கு வந்தார் ராஜபக்சே. அவருக்கு, இவர் முட்டுக்கொடுக்கும் மத்திய அரசுதான் கோலாகல வரவேற்புக் கொடுத்தது. அதை கருணாநிதி விமர்சித்தது உண்டா? திருப்பதி கோயிலில் கொலைகாரன் ராஜபக்சேவை வரவேற்றுப் பூரண கும்ப மரியாதை செய்ததை, இவர் விமர்சித்தது உண்டா?
2008-ம் ஆண்டில், ஈழத் தமிழ் இளைஞர்கள் எட்டுப் பேரை, அம்மணமாக்கி கண்களைக் கட்டி, கைகளைப் பின்புறமாகக் கட்டி, மிருகங்களான சிங்களச் சிப்பாய்கள் காலால் எட்டி மிதித்து, மண்டியிடச் செய்து, பிடறியில் சுட்டு, ரத்த வெள்ளத்தில் அவர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை, லண்டனின் சேனல் 4 தொலைக்காட்சி, ஆவணப் படமாகவே வெளியிட்டது. அதைக் கண்டு, அகிலமே அதிர்ச்சியுற்றது. ஆனால், இது போலிப் படம் என்று சொன்னார்கள் இருவர். ஒருவர், மகிந்த ராஜபக்சே. ''இது ஏதோ பழைய படம் போலத் தெரிகிறது'' என்று ஏளனமாகப் பரிகசித்தவர் கலைஞர் கருணாநிதி.
ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் பான் கி மூன், மார்சுகி தாருஸ்மன் தலைமையில் மூவர் குழுவை அமைத்தார். அந்த மூவர் குழு, இலங்கைத் தீவில், தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை, இதயத்தைப் பிளக்கும் வகையில் ஆதாரங்களோடு அறிக்கையாகத் தந்தார்களே. அந்த அறிக்கையைப் படிக்கும்போதே நெஞ்சம் நடுங்கும், கண்ணீர் கொட்டுமே. பக்கம் பக்கமாக எதற்கெல்லாமோ அறிக்கைகளும் மடல்களும் தீட்டுகின்ற கலைஞர் கருணாநிதி, இந்த மூவர் குழு அறிக்கையைப் பற்றி இதுவரை ஏதாவது எழுதியது உண்டா? கிடையாது.
ஈழத் தமிழ் இனத்தைக் கருஅறுக்க, சிங்களவனுக்கு இந்திய அரசு செய்த உதவிக்கு, முழுக்க முழுக்கத் துணையாக இருந்து, தமிழகம் கொந்தளித்து எழாமல் தடுக்கின்ற மாய்மால வேலைகள் செய்து, அவ்வப்போது நீலிக்கண்ணீர் அறிக்கைகளையும் வழங்கி ஏமாற்றியதைத் தவிர இவர், இதுவரை உருப்படியாக எதையும் செய்யவில்லை.
தந்தை செல்வா வெற்றி பெற்ற காங்கேசன் துறை இடைத்தேர்தல், 1975-ல் சுதந்திரத் தமிழ் ஈழத்துக்குக் கட்டியம் கூறிற்று. 1976 மே 16-ல், வட்டுக்கோட்டை பண்ணாகத்தில், தந்தை செல்வா தலைமையில், தமிழர் அமைப்புகள் கூடி, சுதந்திரத் தமிழ் ஈழப் பிரகடனம் செய்தன. ''இனி, இளந்தலைமுறை இதை முன்னெடுத்துச் செல்லட்டும்'' என்றார் தந்தை செல்வா. ஈவு இரக்கம் அற்ற கொலை வெறியுடன், தமிழ் இனத்தை அழிக்க முப்படைத் தாக்குதல் நடத்திய சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்து, பிரபாகரன், ஆயுதம் தாங்கிய போர் நடத்தினார். உலகம் இதுவரை கண்டும் கேட்டுமிராத வீர சாகசங்களை, யுத்தக் களத்தில் செய்து, வெற்றி மேல் வெற்றியும் குவித்தார்.
ஓர் அரசுக்கான அனைத்துத் துறைகளையும் அமைத்தார். தரைப் படை, கடற் படை, வான் படை நிறுவினார். மலரும் தமிழ் ஈழத்துக்கு இனி உலகம் ஒப்புதல் அளிக்க வேண்டிய சூழலில்தான், இந்தியா முழு ஆயுதப் பலத்தையும் தந்து, பல வல்லரசுகளின் ஆயுத உதவிகளையும் சிங்களவன் பெறுவதற்கு உடன்பட்டு, யுத்தக் களத்தில் விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவையும் சரிவையும் ஏற்படுத்தியது.
'இந்த யுத்தத்தை நடத்தியதும் இயக்கியதும் இந்திய அரசுதான்’ என்று, இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகச் சொன்னார் ராஜபக்சே. அவரது அமைச்சர்களும் சொன்னார்கள். இதைக் கருணாநிதியால் மறுக்க முடியுமா?
கடந்த ஆண்டு ஜூன் 1-ம் நாள், பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்சில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற அரங்கத்தில், ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்னை மாநாட்டில் நான் உரையாற்றியபோது, அந்த அமர்வில் அதிக நேரம் எனக்கு ஒதுக்கப்பட்டது. ஈழப்பிரச்னைக்கு ஒரே ஒரு தீர்வு. அதுதான், சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் என்றேன்.
தமிழர் தாயகமான, தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்து, சிங்கள ராணுவமும், போலீஸும் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும். சிங்களக் குடியேற்றங்கள் அடியோடு அகற்றப்பட வேண்டும். சிறையில் உள்ள தமிழர்களை விடுவிக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக சுதந்திரத் தமிழ் ஈழம் அமைக்க, தமிழர் தாயகத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதில் உலகத்தின் பல நாடுகளில் வாழுகின்ற ஈழத் தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே பொது வாக்கெடுப்பில் பங்கேற்க ஐ.நா.மன்றமும், அனைத்துலக நாடுகளும் தக்க வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். பொது வாக்கெடுப்பு என்பதையும், உலகம் முழுவதையும் பல நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் அதில் பங்கேற்க வழி செய்ய வேண்டும் என்பதையும், ஈழத் தமிழர் பிரச்னையில் நான் முதன்முதலாகப் பதிவு செய்தேன்.
இப்படி நான் முன்வைத்த கருத்தை, உலகெங்கும் உள்ள தமிழ் ஈழச் சொந்தங்கள், எல்லையற்ற மகிழ்ச்சியோடு வரவேற்று மனதாரப் பாராட்டியதோடு, ''இதுதான் நமது இலக்கு, இந்த இலக்கை நோக்கி முன்னெடுத்துச் செல்வோம்'' என்றனர். என் வாழ்நாளில், மன நிறைவாக ஆற்றிய கடமைகளுள் இதுவும் ஒன்று என எண்ணி, அந்த இரவில் நான் நிம்மதியுற்றேன். ஆனால், திடீரென்று கலைஞர் கருணாநிதி, பொதுவாக்கெடுப்பு, சுதந்திரத் தமிழ் ஈழம் என்கிறார். இவரது மாய்மாலத்தை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்.
தமிழர்கள் சிந்திய செங்குருதியும், தரப்பட்ட உயிர்ப் பலிகளும், தமிழ் இனத்துக்கு எவரெல்லாம் துரோகம் இழைத்தார்களோ, அவர்களுக்குச் சவுக்கடி கொடுத்துக் கொண்டே இருக்கும். தமிழர்களின் மறதியை முதலீடாக நினைத்து கருணாநிதி தனது புதிய அறுவடையைத் தொடங்குகிறார். அதை முளையிலேயே முறிக்க வேண்டும்!
கொடுந்துயரில் தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு உரிமை வாழ்வு கிடைக்க... சுதந்திரத் தமிழ் ஈழம் மலரட்டும்!
Wednesday
சங்கரன் கோயில் சவால் 26 அமைச்சர்களுக்கு போட்டியாக 38!
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
இடைதேர்தல்,
தமிழகம்,
மதிமுக
எழுதிய நேரம்
Wednesday, February 15, 2012
சங்கரன்கோவிலுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கடந்த 10-ம் தேதி சென்னையில் கூடியது, ம.தி.மு.க. பொதுக் குழு. கட்சியின் இணையதள நண்பர்கள் 100 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தார்கள். கூட்டம் நிரம்பி வழிந்ததால், அனைவரிடமும் உற்சாகம் பொங்கி வழிந்தது.
கட்சியின் பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து தேர்தல் நிதியளிப்பைத் தொடங்கி வைத்தார். உடனே, பலரும் மேடையை நோக்கி முண்டியடித்தனர். அப்போது, மைக் பிடித்த திருச்சி ஷேக்முகமது, ''என்னுடைய நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒரு நாளைக்கு இரு முறை டயாலிசிஸ் செய்தாக வேண்டும். இதற்காக மட்டும் தினமும் 10 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. நம் இயக்கத்துக்கு இது நெருக்கடியான காலம் என்பதால், எல்லோரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும்'' என்று சொல்லி இரண்டு லட்சம் நிதி கொடுக்க... திடீரெனக் கூட்டம் விக்கித்து நின்றது. அதைத் தொடர்ந்து பொதுக்குழுவில் மொத்தம் 46.75 லட்ச ரூபாய் தேர்தல் நிதியாக சேர்ந்தது.
செந்திலதிபன் பேசியபோது, ''ஓர் ஆண்டுக்கு முன்பு நடந்த 19-வது பொதுக் குழுக் கூட்டம், மிகவும் இறுக்கமாக இருந்தது. கூட்டணியில் நம்முடைய கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்கிற கேள்வி எல்லார் மனதிலும் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால், நாம் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஆனது. ஆனால், தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடி இருக்கிறோம். கடலூர் சேதத்தைப் பார்வையிடப் போனபோது வைகோவிடம் நிறையப் பேர், அவரை எம்.பி-யாகவே நினைத்துக்கொண்டு, 'நாடாளுமன்றத்தில் எங்கள் பிரச்னையை எடுத்துச் சொல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்கள். இந்த நம்பிக்கைதான் நமக்குக் கிடைத்துள்ள வலிமை'' என்று குறிப்பிட்டார்.
அடுத்துப் பேசிய மல்லை சத்யா, ''காகத்துக்குப் பகலில் வலிமை, ஆந்தைக்கு இரவில் வலிமை. நிலத்தில் யானைக்கு வலிமை. நீரில் முதலைக்கு வலிமை. சங்கரன்கோவில் இடைத்தேர்தல், நம்மை வஞ்சித்தவர்களை வீழ்த்துவதற்கான ஒரு வாய்ப்பு. போட்டியாளர்களை வீழ்த்திக்காட்டும் வலிமை நம்மிடம் இருக்கிறது. அதைக் களத்தில் காட்டுவோம்'' என்று சூளுரைத்தார்.
நாஞ்சில் சம்பத் காரசாரமாகவே பேசினார். ''18 ஆண்டு கால ம.தி.மு.க. வரலாற்றில், ஒரு முக்கியமான கட்டத்தை இப்போதுதான் கடக்கப்போகிறோம். வருகிற நாட்கள் நமக்கான வசந்தகாலம். கவிஞர் தாமஸ் கிரே சொன்னதுபோல, 'சந்தர்ப்பங்கள் கிடைக்காவிட்டால், எந்த மனிதனும் சரித்திரம் படைக்க முடியாது’. அந்த சந்தர்ப்பம், நமக்கு இப்போது வாய்த்துள்ளது. மக்கள் இப்போது, வைகோ மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா நாடகம் முடிவுக்கு வருகிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலைச் சந்திக்க 26 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து இருக்கிறார் ஜெயலலிதா. இதன்மூலம், வைகோவின் வெற்றியை ஜெயலலிதா ஒப்புக்கொண்டு விட்டார்'' என்று பேசியவர், திடீரென டிராக் மாறி, ''சிலர் இருட்டடிப்பு செய்வதால், நம்மைத் தோற்கடித்துவிட முடியாது. என் மனைவியின் தாலிக்கொடியை விற்றுப் பணம் தருகிறேன். தலைவா, நீ நமக்கெனத் தனித் தொலைக்காட்சி தொடங்கு'' என்று ஆக்ரோஷத்தோடு சொல்ல, அத்தனை பேரும் கைதட்டி வரவேற்றனர். மேடையில் இருந்த 'இமயம்’ ஜெபராஜ் மட்டும் நெளிந்தார்.
இரவு 7 மணிக்குப் பேசவந்த வைகோ, ''நம் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. ஏழைத் தாய்மார்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். புதிய இளைஞர்கள் தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்றாக ம.தி.மு.க-வை மக்கள் நினைக்கிறார்கள். மத்திய அரசு தமிழகத்தை, தமிழர்களை வஞ்சித்து வருகிறது. தமிழினத்துக்கு எதிரான மத்திய அரசின் துரோகத்தில் தி.மு.க-வுக்கும் பங்கு உண்டு. அதே சமயம், எட்டு மாத கால அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் படும் வேதனைகளும் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. பால் விலை, பஸ் கட்டணம் எல்லாம் விஷம் போல ஏறிக்கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், அ.தி.மு.க-வுக்குத்தான் வெற்றி என்று சொல்லும் ஜெயலலிதா, வரட்டும் சங்கரன்கோவிலுக்கு! இந்தத் தொகுதியின் மூலை, முடுக்கெல்லாம் நமக்கு அத்துப்படி. இப்போதே அதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தொடங்கி விட்டார்கள். ஜெயலலிதாவின் ராசி எண் ஏழு வரும்படியாக, 34 பேர் கொண்ட அ.தி.மு.க. தேர்தல் குழு, 7-ம் தேதி கூட்டம் போடுகிறார்கள். 7-வது வார்டில் 7 நிமிடங்கள் வாக்கு கேட்டார்கள். தலைமைச் செயலகத்தை காலி செய்தது போல 26 அமைச்சர்களை வைத்து உருட்டி மிரட்டி விடலாம் என்று நினைக்கிறார். இவர்கள், திருமங்கலம் இடைத்தேர்தலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடியவர்கள். காசு பணம் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சித்தால், நானே களத்தில் நிற்பேன். திருச்செந்தூர் இடைத்தேர்தல் நடந்தபோது, எம்ஜிஆரின் மந்திரிகளையே கண்ணில் விரலைவிட்டு ஆட்டியவன் நான். அமைதியான முறையில் நியாயமாக வாக்கு கேட்போம். வன்முறை நிகழ்த்தப்பட்டால், உரிய பதிலடி கொடுப்போம். அதற்கான வியூகங்களை இப்போது வெளியில் சொல்ல முடியாது'' என்று சஸ்பென்ஸ் வைத்து, உரையை முடித்தார் வைகோ.
வைகோவின் ஏரியா என்பதால், ம.தி.மு.க-வுக்கு இந்தத் தேர்தல் மானப்பிரச்னை. அதனால், கட்சியின் 38 மாவட்ட அமைப்புகளுக்கும் பகுதி பகுதியாகப் பொறுப்பைப் பிரித்து, செயல் திட்டத்தோடு காத்திருக் கிறார்கள்.
அனல் பறக்கப்போகிறது!
நன்றி :ஜூனியர் விகடன்
முதலமைச்சராக முன்னிறுத்தப்பட வேண்டியவர் வைகோ:தமிழருவி மணியன்
தமிழகத்தில் புதிய அரசியல் பாதைக்கு அடித்தளம் அமைக்கும் காரியங்களை தமிழருவி மணியன் தொடங்கி இருக்கிறார். காந்திய மக்கள் இயக்கத் தலைவரான மணியன், 'அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அணியை உருவாக்கப் போகிறேன்’ என்று களம் இறங்கி உள்ளார். அதற்கான முதல் கூட்டம் இன்னும் இரண்டு வாரங்களில் திருப்பூரில் கூட இருக்கிறது.
ஜனவரி 7-ம் தேதி கூடும் அந்தக் கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்
ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரை ஒரே மேடையில் பேசவைக்க இருக்கிறார். இந்த நிலையில் தமிழருவி மணியனை சந்தித்தோம்.
''ஜெயலலிதா ஆட்சி அமைந்து ஆறு மாதங்களே கடந்துள்ள நிலையில், மாற்றாக ஓர் அணியை உருவாக்க வேண்டிய அவசர அவசியம் என்ன?''
''தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, என் எழுத்தையும் பேச்சையும் பயன்படுத்தினேன் என்பதைவிட... மக்கள் விரோத ஊழல் நிறைந்த தி.மு.க. ஆட்சியை, எந்த அரசியல் நெறிமுறைக்கும் உட்படாத தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம். அதற்கு 30 சதவிகிதம் வாக்கு வங்கி உள்ள அ.தி.மு.க-வை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தம். பெரிய தீமையை அகற்ற சிறிய தீமையுடன் சமரசம் செய்ய வேண்டி இருக்கிறது. ஜெயலலிதா எவ்வித மாற்றத்துக்கும் உட்படாதவர் என்பதைத் தேர்தலுக்கு முன்பே நான் சொல்லி இருக்கிறேன். சிறுத்தையின் உடம்பில் உள்ள புள்ளிகள், சாகும் வரை எப்படி மறையாதோ, அதைப் போல ஜெயலலிதாவின் பண்பு நலன்கள் இறுதிவரை மறையாது. 'சசிகலா என்கிற இரும்புக் குண்டைக் காலில் கட்டிக்கொண்டு இருக்கும் ஜெயலலிதாவால் நேர்மையாகவும் உண்மையாகவும் வேகமாகவும் செயல்பட முடியாது’ என்று முன்பு எழுதினேன். இப்போது சசிகலா வட்டாரம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க விஷயம்தான். ஆனால், தமிழகத்தின் ஆரோக்கியமான அரசியலுக்கு இது மட்டுமே போதாது என்பதால், இந்த மாற்று அணிக்கான முயற்சியில் இறங்கி உள்ளேன்!''
''அது எப்படி சாத்தியம் ஆகும் என்று நினைக்கிறீர்கள்?''
''அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கின்றன. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்வைத்தும், அரசின் தவறான நடவடிக்கைகளை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தியும், ஒரே மேடையில் தொடர்ந்து ஓர் அணியில் நின்று போராட, அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத கட்சிகள் முன்வர வேண்டும். என்னைப் பொறுத்த வரையில், முதலமைச்சராக முன்னிறுத்தப்பட வேண்டியவர் வைகோ. முதலில், ம.தி.மு.க., இடதுசாரி இயக்கங்கள் பொதுத்திட்டத்தின் அடிப்படையில் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து போராட வேண்டும். இந்த அணி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகாத அணி. ஊழல் மலிந்த கட்சிகளுக்கு மாற்றாக இவர்களால் இருக்க முடியும். மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.
ஜனவரி 7-ம் தேதி எங்கள் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா, தமிழக அரசியலில் மாற்று அணியை உருவாக்கும் கால்கோள் விழாவாக நடத்தப்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உட்பட்ட கட்சிகள் இந்த மாற்று அணியை இரு கரம் கூப்பி வரவேற்க வேண்டும்.''
''உங்களுக்கு முன்பே பா.ம.க. மாற்று அணி கருத்தைச் சொல்லி இருக்கிறதே?''
''பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் இயக்கமாக வளர்ந்து ஒரு குடும்பத்தின் நலன் காக்கும் சாதாரணக் கட்சித் தலைமையாக அது சரிந்து விட்டது.
மருத்துவர் ராமதாஸின் அறிக்கைகளில் உள்ள சமுதாய உணர்வு, அவரின் கட்சியில் அவர் காட்டும் அணுகுமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் அரங்கில் நம்பகத்தன்மையை இழந்து விட்டவர் ராமதாஸ். எனவே, பா.ம.க. தலைமையில் அணி அமைந்து ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது பார்வையற்றவர் தடியை ஊன்றி, எவரெஸ்ட் சிகரம் ஏறிவிட முடியும் என்பதைப் போலத்தான்.''
''மாற்று அணியில் விஜயகாந்துக்கு இடம் இருக்கிறதா?''
''இரண்டு பெரிய கட்சிகளிலும் இடம் இல்லாதவர்கள் எல்லாம் முக்கியத்துவம் தேடி வந்து சேர்ந்த இடம்தான் தே.மு.தி.க. விஜயகாந்தின் மனைவியும் மைத்துனரும்தான் அந்தக் கட்சியின் விதியை நிர்ணயிக்கிறார்கள். போஸ்டர், கட் அவுட் வைப்பதில் இருந்து, துதி பாடுவது வரை இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் இவர்கள், எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை. அது, எந்த சித்தாந்தத்தாலும் கட்டப்பட்ட கட்சி அல்ல. விஜயகாந்த் எனும் மனிதரின் விளம்பரத்தில் மட்டும் குளிர் காயும் அந்தக் கட்சி, இதுவரை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் இயங்கவில்லை. ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் பாதிக்கக்கூடிய முல்லைப் பெரியாறு பிரச்னையில் சட்டமன்றத் தீர்மானம் இயற்றும் கூட்டத்துக்குக்கூட, மிகத்தாமதமாக வந்த ஒரே தலைவர் விஜயகாந்த். இந்த ஒரு சம்பவமே அவருடைய பொறுப்பு உணர்வை வெளிப்படுத்துகிறது. தே.மு.தி.க. என்பது மின்னலைப் போல் தோன்றி புயலைப் போல மறையக்கூடிய ஓர் அரசியல் கட்சி.''
''வைகோவை அதிகப்படியாக முன்னிறுத்துகிறீர்களே?''
''அகத்திலும் புறத்திலும் தூய்மையான ஒரு மனிதனே ஆட்சித் தலைவராக வர வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அந்த இடத்தில் வைகோவைத் தவிர வேறு ஒருவரையும் வைத்துப் பார்க்க முடியவில்லை. அதற்காகத்தான் அவரை மாற்றுத் தலைவராக முன்னிறுத்துகிறேனே தவிர, நான் ம.தி.மு.க-வின் கொள்கைப் பிரச்சாரகனும் இல்லை. எந்தத் தனிமனிதனையும் துதிபாடி வயிறு வளர்க்க வேண்டிய நிலையிலும் நான் இல்லை!''
- இரா. தமிழ்க்கனல்,
படம்: வி.செந்தில்குமார்
Sunday
ஜெயலலிதாவின் அராஜகம் எல்லை மீறுகிறது .
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
சர்வாதிகாரம்,
தமிழகம்,
தமிழ் ஈழம்,
மாவீரர் நாள்
எழுதிய நேரம்
Sunday, November 27, 2011
இன்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தி.நகரில் நடக்க இருந்த மாவீரர் நாள் பொதுக் கூட்டம் அதிமுக அரசின் அராஜகத்தால் நிறுத்தப் பட்டுள்ளது. காவல் துறை அனுமதியோடு நடக்கவிருந்த பொதுக்கூட்டத்தை ஆதிமுக அரசு தடை செய்திருக்கிறது. இந்த மாவீரர் நிகழ்வில் வைகோ சிறப்புரை வழங்க இருந்தார்.
இந்நிலையில் மதியம் முதலே கூட்ட ஏற்பாடுகளை செய்து வந்த மதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோரை கைது செய்திருக்கிறது காவல் துறை. மக்களாட்சியில் அவரவர் கருத்தை சொல்ல உரிமை இருக்கும் போது ஜனநாயக ரீதியாக பொதுக் கூட்டம் நடத்த ஜெயலலிதா தலைமையிலான அரசு அனுமதிக்கவில்லை என்றால் இதை விட காட்டு மிராண்டி தனம் வேறு என்ன இருக்க முடியும்.
பூனை கண்ணை மூடி கொண்டு பால் குடிக்குமாம் அப்படி குடிக்கும் பூனை நினைக்கும் நம்மை யாரும் பார்க்க வில்லை என்று. அப்படி தான் இருக்கிறது அதிமுக அரசின் நடவடிக்கைகள் மாவீரர் நிகழ்வை நடத்த விடாமல் இருந்தால் மாவீரர்களை யாரும் நினைவு கூற மாட்டார்கள் என்று ஒரு வேளை ஜெயா நினைக்கலாம்.
ஆண்டுதோறும் உலக தமிழர்களின் ஒப்பற்ற தினமான நவம்பர் 27 யார் தடுத்தாலும் தமிழ் ஈழ விடுதலைக்காக உயிரை கொடுத்த எங்கள் உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் மாவீரர்களை நினைக்காமல் இருக்க முடியாது.
ஒவ்வெரு முறை ஆட்சிக்கு மாறி மாறி வரும் கட்சிகளால் தமிழினத்திற்கு எதிராக தான் செயல் படுகிறார்கள். கடந்த முறை தமிழ் ஈழத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தியா துணையோடு கொலை செய்ய பட்ட பொது தமிழின தலைவர் என்று சொல்லும் கருணாநிதியால் கொலைக்கு துணை போக தான் முடிந்தது. தமிழ் உணர்வாளர்களை சிறையில் அடிப்பதை கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி செய்து வருகின்றனர்.
தமிழகத்தை கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி ஆட்சி அமைப்பது தான் தமிழகத்திற்கு சாபக்கேடு. தமிழர்களின் உரிமைக்கு பேச முடியவில்லை . ஜெயலலிதா இதையெல்லாம் ஜெயித்து வந்தால் செய்வார் என்பது வைகோவை எப்போது கூட்டணியிலிருந்து நீக்கினாரோ அப்போதே தெரிந்து விட்டது தான். அன்றிலிருந்தே இதே ஜெயா திருந்த வில்லை என்பதை சொல்லியிருக்கிறோம். ஆனால் என்ன செய்வது கருணாநிதி என்னும் விச பாம்பை விரட்ட இன்னொரு விச பாம்பிற்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் பாம்பின் விஷம் இப்போது வெளியேறுகிறது.
மாற்றம் ஓன்று உருவாக வேண்டும் கருணாநிதி ஜெயலலிதாவுக்கு எதிராக ஓட்டு மொத்த தமிழ் உணர்வாளர்கள் ஒரே கொள்கை கொண்ட கட்சியினர் ஓன்று பட்டு நிற்க வேண்டும். மாற்று அணிக்கான தலைமை நேர்மையாகவும் கொள்கை உறுதி கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
தமிழருவி மணியன் சொன்னதை போல் மாற்று அரசியலுக்கான துவக்கம் இன்றே துவங்கட்டும். இந்த மாவீரர் நாளில் தமிழின விடுதலைக்காக உயிரை விட்ட மாவீரர்களுக்கு நாம் செய்யும் கடமையாக மாற்று அரசியல் துவங்கட்டும்.
ஓன்று பட்டு ஜெயாவின் அராஜக ஆட்சியை எதிர்ப்போம்.......
தமிழ் விடுதலைக்கு தங்கள் உயிரை கொடுத்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !
சங்கரன்கோயில் இடைத்தேர்தல் யாருக்கு வாய்ப்பு ?
தமிழக அமைச்சர் கருப்பசாமி மறைந்ததை அடுத்து சங்கரன் கோயில் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது . இன்னும் தேதி அறிவிக்காமலே சங்கரன்கோயில் இடைத்தேர்தல் களம சூடு பிடிக்க துவங்கியிருக்கிறது .
பத்திரிக்கைகளிலும் விவாதங்களிலும் சங்கரன்கோயில் இடைத்தேர்தல் சூடு பிடிக்க துவங்கியிருக்கிறது . அதற்கான காரணம் கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிடாத மதிமுக சங்கரன்கோயில்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இடைத்தேர்தலுக்கு புதிய இலக்கணத்தை வகுத்து தமிழகத்தில் மோசமான முன்னுதாரணத்தை காட்டியது . "திருமங்கலம் பார்முலா" என்று மோசடி வெற்றிக்கே முன்னுதாரணம் திமுக என்பதை இடைத்தேர்தல்கள் வரும் போது நினைவு படுத்தாமல் இருக்க முடியாது .
திமுகவிற்கு சிறிதும் சளைத்தது அதிமுக அல்ல என்பதை காட்டும் விதமாக வெற்றி பெற்றவுடன் தன்னுடைய பழைய அதே குணாதிசயங்களை கொண்டு அதே ஆணவத்தோடு ஆட்சி நடத்தி வரும் அதிமுக இந்த தேர்தலில் திமுகவின் "திருமங்கலம் பார்முலாவை " கடை பிடிக்க கூடும்.
இந்த தொகுதிக்கு அதிமுக தன்னை தயார் படுத்தும் விதமாக இலவச மிக்சி , கிரைன்டர்கள் அமைச்சர்கள் முன்னிலையில் இந்த தொகுதியில் கொடுக்க துவங்கி விட்டார்கள். இடைத்தேர்தலுக்கு முன்பு அணைத்து வீடுகளுக்கும் கொடுத்து முடிக்க வேண்டும் என்பது மேலிட உத்தரவாம் .
இந்த நிலையில் நேரடியாக அதிமுகவோடு களத்தில் குதிக்கிறது மதிமுக. இந்த தொகுதியின் ஒரு சிறப்பு என்னவென்றால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த தொகுதி. இப்போதே இடைத்தேர்தலை சந்திக்க மதிமுக களத்தில் இறங்கி விட்டது. ஒன்றிய வாரியாக செயல் வீரர்கள் கூட்டம் கூட்டி தேர்தல் பற்றிய ஆலோசனைகள் நடந்து வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக போட்டியிடாமல் இருந்ததால் நடுநிலையாளர்கள் மத்தியில் மதிமுவிற்கு நல்ல வரவேற்பு இருந்ததை காண முடிந்தது . அதே போல் உள்ளாட்சி தேர்தலில் மதிமுக தனித்து போட்டியிட்டு எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியை பெற்று அதிமுக திமுகவிற்கு அடுத்த படியான இடங்களை போட்டியிட்ட இடங்களில் பெற்றிருக்கிறது.
சங்கரன்கோயில் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கட்சிகள் வாங்கிய ஓட்டுகளை அடிப்படையாக வைக்கும் போது ஓரளவிற்கு போட்டியில் யார் இருக்கிறார்கள் என்பதை கணிக்க முடியும். சங்கரன்கோயில் தொகுதியில் ஒரு நகராட்சி இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் ஒரு பேரூராட்சி உள்ளன . இதில் அதிக வாக்குகளை கொண்ட குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மதிமுக தான் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது . இன்னொரு ஊராட்சி ஒன்றியமான மேலி நிலித நல்லூர் ஒன்றியத்தில் அதிமுகவிற்கு அடுத்த இடத்தில் மதிமுக வாக்கு சதவீதங்கள் பெற்றிருக்கிறது. மதிமுகவிற்கு அடுத்து தான் திமுக தேமுதிக போன்ற கட்சிகள் வருகின்றன.
மேலும் ஒரு பேரூராட்சி இந்த தொகுதியில் இருக்கிறது அந்த பேரூராட்சியில் மதிமுக வெற்றி பெற்றிருக்கிறது . மற்றும் சங்கரன்கோயில் நகராட்சியும் இந்த தொகுதியில் தான் வருகிறது. சங்கரன்கோயில் நகராட்சியில் இந்த தேர்தலில் மதிமுக சொல்லும்படியான வாக்குகள் வாங்க வில்லை . அங்கு போட்டியிட்ட வேட்பாளர் சரியில்லாததால் வாக்குகள் பெரிய அளவில் விழ வில்லை என சொல்லப்படுகிறது .
உள்ளாட்சி தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்கு சதவீதங்களை பார்க்கும் போது அதிமுக முதல் இடத்திலும் மதிமுக இரண்டாவது இடத்திலும் திமுக மூன்றாவது இடத்தில் வருகிறது. இது தான் மதிமுகவினருக்கு உற்சாகம் கொடுத்திருக்கிறது. ஒரு சில சதவீதங்கள் மாறி மதிமுகவிற்கு வந்தாலே மதிமுக வெற்றி பெற்று விடும் என்று கணக்கு போடுகின்றனர் மதிமுகவினர்.
இப்போதைய சூழ்நிலையில் அதிமுக அரசு மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். மக்கள் நல பணியாளர்கள் நீக்கம், பஸ் கட்டணம் , மின் கட்டண உயர்வு , பால் விலை உயர்வு போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளின் அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்கலாம். மக்கள் எதிர்ப்பை காட்ட இந்த தேர்தலை பயன் படுத்தினால் மதிமுக வெல்வது உறுதி.
Tuesday
மாற்று அரசியலுக்கான துவக்கம்
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
உள்ளாட்சி தேர்தல்,
சமூகம்,
தமிழருவி மணியன்
எழுதிய நேரம்
Tuesday, October 11, 2011
மாற்று அரசியலின் துவக்கம் குறித்தும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் தமிழருவி மணியன் அவர்களின் சிறப்பு காணொளி .
இன்றைய அரசியல் சூழலில் என் கண் முன்னால் நெறி சார்ந்த ஒரு நேர்மையாளராக லட்சிய பிடிப்பு மிக்க கொள்கை வீரராக தன்னலமுற்று தமிழ் சமுதாயத்திற்கு இனப்பற்றும், மொழிப்பற்றும், கொண்டு போராடும் போராளியாக, இருப்பவர் வைகோ என் மிக மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் நம்புகிறேன் .எனவே வைகோ.
அவர்கள் இன்றைக்கு களத்தில் தனியாக நிற்கிறார் . அவர் தனியாக நிற்கிறார் என்று நாம் நினைக்காமல் தமிழர்கள் தம் துணையோடு நிற்கிறார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும் .இனப்பற்று உடைய மக்கள், மொழிப்பற்று உடைய மக்கள், தமிழகத்தின் உரிமைகளை போராடி பெற வேண்டும் என தாகத்தோடு தவிக்க கூடிய மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண் முன்னால் இயற்கையாக வந்து நிற்க கூடிய மனிதனாக தான் இன்றைக்கு வைகோவை என்னால் பார்க்க முடிகிறது.
எனவே ஒவ்வெரு இடத்திலும் மதிமுக நிறுத்தியிருக்கிற வேட்பாளரை அவரின் தகுதியறிந்து அந்த வேட்பாளரை நிறுத்தியிருக்க கூடிய தலைவர் வைகோ அவர்களுடைய வாழ்வின் திறன் அறிந்து நீங்கள் வாக்களிக்கக் வேண்டும். இன்றைக்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது ஆட்சி மாற்றம் என்பது வெறும் காட்சி மாற்றமாக முடிந்து விடல் ஆகாது.
அடுத்தது நாம் அரசியல் மாற்றம் நோக்கி நகர்ந்தாக வேண்டும் . அரசியல் மாற்றம் நோக்கி நகர வேண்டும் என்றால் லட்சியம் சார்ந்த ஒரு தலைவர் வேண்டும் அதற்கு ஒரு கூட்டு சூழல் வேண்டும் என்பது தான் இன்றைக்கு முக்கியம் . இன்று இடது சாரி இயக்கங்கள் வெவ்வேறு திசையில் பிரிந்து கிடந்தாலும் கூட இன்னும் வரும் ஐந்து ஆண்டுகளில் மிக பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்க கூடிய மிக பெரிய அணி உருவாக கூடும் என நான் நம்புகிறேன் . அந்த அணியில் மிக முக்கியமான இடத்தை மதிமுகவும் அதன் தலைமை பொறுப்பில் இருக்கும் வைகோ அவர்களும் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
எனவே நல்ல அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் என்பதற்காகவே சமூக பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருக்கும் காந்திய இயக்கம் அரசியல் மாற்றம் நிகழும் என்றும் நம்புகிறது . இன்றைக்கு திமுகழகம் அண்ணா திமுகழகம் இரண்டுக்கும் மாற்றாக இருக்க கூடிய வேட்பாளர்களை மனதில் நிறுத்துங்கள் மாற்று அரசியலை உருவாகக் முயலுங்கள் . அப்படி மாற்று அரசியலை உருவாக்க முனைகிற போது மதிமுகவில் நிற்க கூடியவர்களுக்கு வைகோவை நெஞ்சில் நிறுத்தி முன்னுரிமை வழங்குங்கள் என்று என்னுடைய காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் கேட்டு கொள்கிறேன் .
-- தமிழருவி மணியன்
![]() |
| நன்றி இமயம் தொலைக்காட்சி |
Subscribe to:
Posts (Atom)





























