இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts
Wednesday
இலங்கை உள்ளாட்சி தேர்தலும் தமிழக மார்க்சிஸ்ட் கட்சியும்
எழுதியது
Suresh Kumar
Labels:
இலங்கை,
தமிழகம்,
தமிழ் ஈழம்,
மார்க்சிஸ்ட்
எழுதிய நேரம்
Wednesday, July 27, 2011
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழ் ஈழ மக்கள் சிங்கள இனவெறியன் ராஜ பக்ஷேவுக்கும் , தமிழின துரோகிகள் டக்லஸ் , கருணா போன்றவர்களுக்கும் , சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்த வரையில் அந்த செய்தி தமிழக மார்க்சிஸ்ட்களுக்கும் தமிழ் ஈழ மக்களால் சொல்ல பட்ட செய்தி.
பொதுவுடைமை கட்சி என்று தங்களை அடையாளம் காட்டி கொள்வதும் , புரட்சி மூலம் தான் நல்லாட்சி கொடுக்க முடியும் போராட்டத்தின் மூலமாக தான் உரிமைகளை பெற முடியும் என்று சொல்லும் மார்க்சிஸ்ட் தோழர்கள் ஏனோ தெரியவில்லை தமிழ் ஈழ மக்கள் விசயத்தில் நேர் எதிராக இருக்கிறார்கள்.
சிறுபான்மையினருக்கு ஆதரவாக போராட வேண்டும் என்று இங்கே சொல்லும் மார்க்சிஸ்ட்கள் இலங்கையில் மட்டும் பெரும்பான்மையினரோடு ஒத்து போங்கள் என்று சொல்லுகிறார்கள். கியூபா, ரசியா , சைனா போன்ற நாடுகளில் ஏற்பட்ட ஆயுத புரட்சியை ஆதரிப்பார்கள். அதே போல் பாலஸ்தீனத்தில் நடைபெறுகிற ஆயுத புரட்சியை ஆதரித்து இங்கே போராட்டம் செய்வார்கள். ஆனால் தொப்பிள் கோடி உறவு கொண்ட தமிழ் ஈழ மக்கள் போராடினால் மட்டும் கொச்சை படுத்துவார்கள்.
மிக தீவிரமாக ஈழ போர் நடைபெற்ற நேரத்தில் போரை நிறுத்த வேண்டும் என்று தமிழகத்தில் குரல் ஓங்கி ஒலித்த பொது மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் சொல்வார் மக்கள் வேறு புலிகள் வேறு என்று . நாம் கேட்டதோ போரை நிறுத்த வேண்டும் என்று அதை தானே அவர்களும் வலியுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தார்கள். துருக்கியில் இருவர் கொல்ல பட்டால் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தும் இவர்கள் தமிழ் ஈழத்தில் ஒரு லட்சத்தி நாற்பதாயிரம் மக்கள் கொல்ல பட்ட போது பெயருக்காவது போராட்டம் நடத்தினார்களா ?
ஐக்கிய நாடுகள் மூவர் குழு அறிக்கை வந்தவுடன் தீர்மானம் நிறைவேற்றினார்கள். இலங்கையில் நடைபெற்ற ஆயுத மோதலில் போர்குற்றம் விளைவைத்தவர்களை குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டும் என்பதாக. அவர்களின் தீர்மானத்தில் இனபடுகொலை என்றோ சுதந்திரத்திற்காக ஆயுதமேந்தி போராடுபவர்கள் என்றோ குறிப்பிடவில்லை. அதே விட ஓன்று பட்ட இலங்கை என்று ராஜ பக்ஷே போட வேண்டிய தீர்மானத்தை இவர்கள் போட்டார்கள்.
ஓன்று பட்ட இலங்கையா இல்லையா என்பதை அங்கு வாழும் தமிழ் மக்கள் முடிவு செய்வார்கள் அதை முடிவு செய்ய இவர்கள் யார் ? இது தான் நமது கேள்வி .....
தமிழக சட்டமன்றத்தில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் போசும் போது கூட அங்கு வாழும் தமிழ் மக்கள் பாதிக்க படுவார்கள் என்று பேசிய மார்க்சிஸ்ட் கட்சிக்கு தமிழ் ஈழ மக்கள் சாட்டையடி கொடுத்திருக்கிறார்கள். மாக்சிஸ்ட் கட்சியினரோ தமிழர்கள் சிங்களர்களோடு கையேந்தி வாழ வேண்டும் என்று சொல்லுகிறார்கள் . வர்க்க போராட்டம் கூட ஒரு உரிமைக்கான போராட்டம் தான் அந்த போராட்டங்களை நடத்தும் மார்க்சிஸ்ட்களுக்கு ஏனோ தமிழர்களின் உரிமை போராட்டம் கசக்கிறது.
நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தமிழர்களின் உரிமை முக்கியமா இல்லை தமிழர்களின் பொறாதார முன்னேற்றம் முக்கியமா என்ற நிலையில் தான் தேர்தல் நடைபெற்றது. விடுதலை புலிகளால் ஒன்றிணைக்க பட்ட பல்வேறு கட்சிகளை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் உரிமைக்கான குரலாகவும், மகிந்தா அணியோ தமிழின துரோகிகளின் ஆதரவோடு பல ஆசைகளை காட்டி தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து போட்டியிட்டது. ஆனால் தமிழ் மக்களோ தங்களுக்கு உரிமை சுதந்திரம் தான் முக்கியம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றி பெற செய்துள்ளனர்.
இந்த தேர்தல் முடிவில் நாம் ஒன்றை முக்கியமாக பார்க்க வேண்டும் . சிங்களர்கள் பகுதியில் மகிந்தா ராஜ பக்ஷேவின் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது ஏன் ? சிங்களர்கள் தமிழர்கள் அடிமையாவதை விரும்புகிறார்கள் அடிமை படுத்த வேண்டும் என்று துடிக்கிறார்கள். ........ இது ஒன்றே போதும் தமிழர்களும் சிங்களர்களும் சேர்ந்து வாழ முடியாது என்று.
கடைசியாக ஓன்று பட்ட இலங்கை என்று சொல்லும் அனைவருக்கும் ஒன்றை சொல்லி கொள்கிறேன் தமிழ் ஈழ மக்களுக்கு தேவை சுதந்திரம். அது கிடைத்தால் அவர்களின் அடிப்படை தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்து விடுவார்கள். இனியாவது மார்சிஸ்ட்கள் திருந்துவார்களா?
புலிகள் வேறு மக்கள் வேறு அல்ல தமிழர்கள் அனைவரும் புலிகள் தான் , எங்களுக்கு தேவை சுதந்திரம் என்று உலகிற்கு காட்டிய தமிழ் ஈழ மக்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ......
Friday
சோனியாவிற்கு வேண்டுமென்றால் மகிழ்ச்சியாக இருக்கலாம்
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
இந்தியா,
இலங்கை,
சோனியா,
தமிழ் ஈழம்,
தமிழ்நாடு
எழுதிய நேரம்
Friday, December 03, 2010
மனசாட்சினா என்ன விலை எந்த கடையில கிடைக்கும் என்று கேட்கும் அளவிற்கு இன்றைய சமூக சூழ்நிலை மனிதர்களை மாற்றி இருக்கிறது. நான் நன்றாக இருந்தால் போதும் என் குடும்பம் நன்றாக இருந்தால் போதும் என்ற மனநிலையே இன்று எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது . மற்றவர்களை கடவுள் பார்த்து கொள்வார் என்று அந்த இடத்திலிருந்து கடவுள் மீது பழியை போட்டு தப்பித்து கொள்கிறார்கள் .
அரசன் ஏழையாக இருந்தால் தான் மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று சொல்வார்கள் ஆனால் இன்று மக்களை ஆளுகிறவர்கள் கோடீஸ்வரராக இருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது மக்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் . அறிவியல் வளர வளர மனித குலமும் தங்கள் அறிவில் வளர்ந்து தன்னம்பிக்கையோடு மற்றவர்களை கையேந்தாமல் சுய உழைப்பில் வாழ வேண்டும் ஆனால் இன்றோ சூழ்நிலை மாறி விட்டது . ஏதோ ஒன்றுக்கு அடிமையாவது போல் தமிழக மக்கள் இலவசங்களுக்கு அடிமையாகி விட்டனர் . அரசும் மக்களை கவுரவ பிச்சைகாரர்கள் ஆக்கி விட்டது . பிச்சைக்காரனுக்கு பிச்சை போட்டால் அவன் எப்படி நமக்கு அடிமையாக இருப்பானோ அதே நிலை போல் ஓட்டு மொத்த தமிழகமும் மாறி விட்டதோ என தோன்றுகிறது .
ஜனநாயகத்தின் ஒரு தூணாக விளங்குகின்ற பத்திரிகைகள் இன்று நடிகைகளின் கவர்ச்சி படங்களோடு தங்கள் வருமானத்தை ஈட்டி கொள்கின்றனர் . தமிழக பத்திரிகைகள் கள்ள காதலனால் காதலி கொலை என்ற சம்பவங்கள் இருந்தால் முதல் பக்கத்தில் போட்டு ஐந்து பத்தி வரை அவன் அவளை முதலில் சந்தித்த போது அப்படி உறவு நடந்தது , பின்னர் அங்கெ உறவு நடந்தது என்று பலனா புத்தகங்களுக்கு ஈடாக கதை எழுதுவார்கள் . அதை படிப்பவர்களுக்கோ கொலை செய்த குற்றம் தெரிவதை விட எப்படி அவன் அவளோடு தொடர்பு கொண்டான் என்ற சிந்தனை தான் இருக்கும் . உரிமை மீறல்கள் போர் குற்றங்கள் இவற்றை பதிவு செய்து மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை உண்டாக்கும் எண்ணம சற்றும் இல்லாமல் இருக்கின்றன .
இப்போது சானல் 4 தொலைக்காட்சியில் இலங்கை ராணுவத்தால் கற்பழித்து கொலை செய்த காணொளிகள் ஒளிபரப்ப பட்டன . கற்பிற்கு மரியாதை கொடுக்கும் தமிழ் சமூகத்தில் இப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கிறது என்றால் அதை செய்தவர்கள் மனித பிறவிகளாக இருக்க முடியுமா . கோவையில் இளம் பெண்ணை கடத்தி கற்பழித்து கொலை செய்த கொடூரன் மீது ஏற்பட்ட கோபம் ஏழு தமிழ் பெண்களை உடம்பில் ஒரு துணி இல்லாமல் கொடூரமான முறையில் கொலை செய்த சிங்கள இனவெறியர்கள் மீது ஏன் வர வில்லை . காசுக்க்காகவும் பதவிக்காகவும் தமிழ் இனத்தையே காட்டி கொடுத்து என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என காட்டும் அரசியல் தலைவர்களும் தமிழ் சமுதாயத்தில் மட்டும் தான் இருக்க முடியும் .
உலகத்திலே மிக பெரிய அரக்கனாகவும் போர் குற்றவாளியாகவும் திகழும் மனித குலத்திலே சேர்க்க முடியாத சிங்கள இனவெறியன் ராஜபட்சே செல்லும் இடமெல்லாம் விரட்ட புலம் பெயர் தமிழர்கள் தயாராகி விட்டனர் . அதன் எதிரொலி தான் எதற்காக லண்டனுக்கு இந்த அரக்கன் சென்றானோ அதை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . இங்கிலாந்தில் புலி கொடியேந்தி போராட அந்நாட்டு காவல் துறை அனுமதி கொடுக்கிறது . ஆனால் தமிழர் பிரச்சனைக்காக தமிழர்கள் போராடினால் கைது செய்கிறது தமிழக அரசு மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசு என்ன அரசு .
உலக மக்கள் பார்வையில் தூக்கிலிட பட வேண்டியவன் தான் இந்த ராஜ பட்சே . ஆனால் இந்திய அரசோ அவனை கவுரவ படுத்துகிறது . இங்கிலாந்து காவல் துறை ராஜ பக்சேவை கைது செய்யலாமா என ஆராய்ந்து வருகிறது . ஹிட்லர் , முசோலினி , இடி அமின் போன்ற சர்வாதிகாரிகளுக்கு அடுத்த படியாக அதை விட பல மடங்கு போர் குற்றங்கள் புரிந்த போர் குற்றவாளியை இந்தியாவில் கவுரவ படுத்தியது இந்தியாவிற்கே அவமானம் . சோனியாவிற்கு சோனியாவிற்கு வேண்டுமென்றால் மகிழ்ச்சியாக இருக்கலாம் . ஏனெனில் முசோலினி பிறந்த மண்ணில் பிறந்தவள் தானே. தமிழர்களின் கலாசாரம் கற்பு பற்றி என்ன தெரியும் .
புலம் பெயர் தமிழர்களோடு தமிழக தமிழர்களும் ஓன்று பட்டு போராடினால் இன்னும் சில காலங்களில் தமிழ் பெண்களை கற்பழித்தும் போர் குற்றங்கள் புரிந்த சிங்கள இனவெறியர்களை தண்டிக்க முடியும் அதற்கான உதாரணம் தான் ராஜபட்சேவிற்கு தமிழர்களால் லண்டனில் ஏற்பட்ட அவமானம் . ஓடாத மானும போராடாத இனமும் நிம்மதியாய் வாழ முடியாது . இதே நிலை நாளை நமக்கும் வரலாம் . ஏன் காங்கிரஸ் தோழர்களுக்கு கூட வரலாம் .....
கைது செய்ய கூடும் என்ற அச்சத்தால் லண்டன் பயணம் ரத்து செய்த ராஜபக்சே
எழுதியது
Suresh Kumar
Labels:
இலங்கை,
இனபடுகொலை,
உலக தமிழர்கள்,
ஐக்கிய நாடுகள்,
தமிழ் ஈழம்
எழுதிய நேரம்
Friday, November 05, 2010
லண்டன் பயணத்தின் போது கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தால் லண்டன் பயணத்தை ரத்து செய்துள்ளதாக தெரிகிறது. இலங்கையில் சிங்கள இனவெறியர்களால் நடத்தப்பட்ட இன படுகொலையில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். இதில் ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பலர் ஈவு இரக்கமின்றி சர்வதேச போர் விதிகளை மீறி ஒரு மிக பெரிய இன படுகொலையை திட்டமிட்டு நடத்தியது.
உலகம் முழுவதும் இலங்கை ராணுவத்தின் போர் விதி மீறலுக்கு எதிராகவும் இனபடுகொலைக்கு எதிராகவும் புலம் பெயர் தமிழர்களால் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சிங்கள இனவெறியன் ராஜபக்சே வை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் அமைப்புகள் முன்னெடுத்து போராடுகின்றனர் .

இந்த நிலையில் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபை தலைவர் பாண் கீ மூன் அவர்களால் இலங்கை மீதான போர் குற்றங்கள் விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது . தமிழ் அமைப்புகளாலும் ராஜபக்ஷேவை கைது செய்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என தமிழர் அமைப்புகளால் வழக்கு தொடர பட்டிருக்கிறது. தமிழர் அமைப்புகள் ராஜபக்சே லண்டன் வந்தால் நீதிமன்றத்தை அணுகவும் தீர்மானித்துள்ளதாக உளவு துறை தகவல் கொடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் லண்டன் சென்றால் லண்டன் காவல் துறை மூலம் கைது செய்ய கூடும் என்ற அச்சத்தால் லண்டன் பயணத்தை ரத்து செய்துள்ளதாக தெரிகிறது. தப்பு செய்தவன் தண்டனை பெற்று தான் தீர வேண்டும் . இது தான் நியதி காலம் தாண்டினாலும் தண்டனை தாண்டாது . உலக தமிழர்கள் ஒற்றுமையுடன் ஒரே பாதையில் இலங்கை இனவெறியனுக்கு எதிராக போராடும் பட்சத்தில் சிங்கள இனவெறியர்களுக்கு தண்டனையும் கிடைக்கும். தமிழர்களின் உரிமையும் வெற்றி பெறும் . நம்பிக்கையோடு போராடுவோம் .

நாடகமாடியே கல்லறைக்கு அனுப்பினாயே தமிழினத்தை

- ஒரு புறம் இலவசங்களை கொடுத்து ஏழை மக்களை பிச்சை காரர்காளாக்கி தமிழினத்தின் தன்மானத்தை இழக்க செய்தாய் .
- நான்கு மணிநேரம்உண்ணாவிரதமிருந்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொலை செய்தாய் .
- தேர்தல் முடியட்டும் பார்க்கலாம் என்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தையே குடி கானல் நீர் திட்டமாக்கினாய்
- நிர்வாக திறமையின்மையால் முல்லை பெரியாறில் தமிழன் உரிமையை அடகு வைத்தாய்
- மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை அப்புறம் எதற்கு வழக்கு என்றாய் , மத்திய அமைச்சரே உன் கன்னத்தில் அறைந்தது போல் அனுமதி கொடுத்திருக்கிறோம் என்ற பின்பு உச்சநீதி மன்றம் சென்று வழக்கு நடத்த தெரியாமல் தோல்வி கொண்டாயே .
- பதவியே வேண்டாம் என்று சமூக சீர்திருத்தங்களை உருவாகிய ஈவேரா பெரியார் வழி வந்தவன் என்று சொல்லியே பாக்கியே இல்லாமல் கட்சி முதல் ஆட்சி வரை குடும்பத்திற்கு பிரித்து கொடுத்திருக்கிறாயே .
- தானே விருதுகள் அறிவித்து தானே வாங்கி கொள்வது என்ன நியாயமோ ?
- அது மட்டுமா தமிழக அரசு விருது மாற்ற ஒருவருக்கு போக விடாமல் எடுத்து கொள்ள மனம் தான் எப்படி வருகிறதோ ?
எல்லாவற்றையும் பொறுத்திருக்கிறோம் ஆனால் இப்போது எம்பிக்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி வந்தவுடன் வாய் கூசாமல் மீள் குடியேற்றம் நடக்கிறது என்று ராஜ பக்ஷே சொல்லாத பொய்யை எப்படி சொல்ல முடிகிறது ? நான்கு மணிநேர உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என சொன்ன பொய்யால் முப்பதாயிரம் மக்களின் உயிரை எடுத்து கொண்டது போதாதா ?
Wednesday
தமிழர்களை கொன்று குவித்த இனவெறியனுக்கு பொன்னாடையா ?
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
இந்தியா,
இலங்கை,
இனபடுகொலை,
தமிழகம்,
தமிழ் ஈழம்
எழுதிய நேரம்
Wednesday, October 14, 2009
இலங்கையில் தமிழ் ஈழ மக்கள் சுமார் ஒரு லட்சம் பேரை கொன்று குவிக்க உறுதுணையாக இருந்து விட்டு இப்போது சுற்றுலா சென்றிருக்கிற தமிழக திமுக கூட்டணி நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் தமிழர்களை கொன்று குவித்த நவீன கிட்லர் ராஜ பக்ஷேவுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டியிருக்கிறார்கள் .
உலக நாடுகள் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச நீதி மன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என குரல் கொடுத்து வரும் இந்த வேளையில் தமிழக குழு இலங்கை சென்று பிணம் தின்னி மகிந்தாவுக்கு பொன்னாடை போர்த்தியது தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது .

திமுக , காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே உருவாக்கி கொண்டு சென்ற அறிக்கையை தமிழகத்தில் சமர்பிக்க இருக்கின்றனர் . இதுவரை முகாம்களை சென்று பார்த்த அனைத்து வெளி நாட்டவர்களும் மக்களுக்கான அடிப்படி தேவைகள் இல்லை , இது ஒரு திறந்த வெளி சிறைச்சாலை என்று சொல்லியிருக்கிற வேளையில் காங்கிரஸ் எம்பி சுதர்சன நாச்சியப்பன் முகாம்கள் சர்வதேச அளவில் தரம் வாய்ந்ததாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் . சர்வதேச தரம் என்பது என்ன என்று தெரியுமா என்பது தெரியவில்லை .
தங்களுடைய சொந்த நாட்டை சிங்கள அரசு ஆக்கிரமித்து சொந்த நாட்டிலேயே சிங்கள இனவெறி அரசால் சிறை பிடிக்க பட்டுள்ளனர் . எந்த தவறுமே செய்யாத மக்களை சிறை பிடித்து அந்த மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள இனவெறி அரசு சர்வதேச தரத்திற்கு முகாம் அமைத்திருக்கிறது என்றால் எப்படி இருக்கும் . தப்பு செய்யாத ஒருவனை சிறையில் அடைத்து சிறையில் வசதிகள் செய்து கொடுத்தால் அது சுதந்திரமா ?

வேலியே பயிரை மேய்ந்த கதையை கேள்வி பட்டிருப்போம் . இங்கே பயிரை மேய்ந்தவனையே விட்டு பாதிப்பு எவ்வளவு என பார்க்க சொல்கிறார்கள் . அங்கெ இன்று சிறையில் அடைபட்டிருக்கும் ஈழ தமிழனாக இருந்தாலும் சரி சிங்கள இனவெறி அரசால் கொல்லப்பட்ட ஈழ தமிழனாக இருந்தாலும் சரி அவனின் இத்தனை நிலைமைக்கும் காரணம் மத்திய மாநில அரசுகள் தானே . சிங்கள இனவெறி தலைவனை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டிய நேரத்தில் நீங்கள் பொன்னாடை அணிவித்தது நியாயமா ? நீங்கள் பொன்னாடை அணிவித்து இனபடுகொலையை அங்கீகரிக்க தான் சென்றீர்களா ?
பசில் ராஜ பக்சேவை டி ஆர் பாலு ஆற தழுவி கொண்டார்
உலக நாடுகள் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச நீதி மன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என குரல் கொடுத்து வரும் இந்த வேளையில் தமிழக குழு இலங்கை சென்று பிணம் தின்னி மகிந்தாவுக்கு பொன்னாடை போர்த்தியது தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது .

தங்களுடைய சொந்த நாட்டை சிங்கள அரசு ஆக்கிரமித்து சொந்த நாட்டிலேயே சிங்கள இனவெறி அரசால் சிறை பிடிக்க பட்டுள்ளனர் . எந்த தவறுமே செய்யாத மக்களை சிறை பிடித்து அந்த மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள இனவெறி அரசு சர்வதேச தரத்திற்கு முகாம் அமைத்திருக்கிறது என்றால் எப்படி இருக்கும் . தப்பு செய்யாத ஒருவனை சிறையில் அடைத்து சிறையில் வசதிகள் செய்து கொடுத்தால் அது சுதந்திரமா ?

வேலியே பயிரை மேய்ந்த கதையை கேள்வி பட்டிருப்போம் . இங்கே பயிரை மேய்ந்தவனையே விட்டு பாதிப்பு எவ்வளவு என பார்க்க சொல்கிறார்கள் . அங்கெ இன்று சிறையில் அடைபட்டிருக்கும் ஈழ தமிழனாக இருந்தாலும் சரி சிங்கள இனவெறி அரசால் கொல்லப்பட்ட ஈழ தமிழனாக இருந்தாலும் சரி அவனின் இத்தனை நிலைமைக்கும் காரணம் மத்திய மாநில அரசுகள் தானே . சிங்கள இனவெறி தலைவனை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டிய நேரத்தில் நீங்கள் பொன்னாடை அணிவித்தது நியாயமா ? நீங்கள் பொன்னாடை அணிவித்து இனபடுகொலையை அங்கீகரிக்க தான் சென்றீர்களா ?
பசில் ராஜ பக்சேவை டி ஆர் பாலு ஆற தழுவி கொண்டார்
Saturday
இலங்கை செல்லும் குழுவால் தமிழர்களுக்கு நன்மையா ?
எழுதியது
Suresh Kumar
Labels:
இலங்கை,
தமிழகம்,
தமிழ் ஈழம்,
வதை முகாம்கள்
எழுதிய நேரம்
Saturday, October 10, 2009
இன்று திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் குழு இலங்கை சென்று முகாம்களில் சிறை படுத்த பட்டுள்ள மக்களை பார்வையிட செல்கிறது . சிங்கள இனவெறி அதிபர் ராஜ பக்ஷேவையும் சந்திக்கும் நிகழ்ச்சி நிரல் தயாரிக்க பட்டுள்ளது .
ஐந்து நாட்கள் சுற்று பயணம் செல்லும் இந்த எம்பிக்கள் குழு வதை முகாம்களில் உள்ள மக்களை நேரில் பார்வையிடுகிறது . இதன் மூலம் தமிழர்களுக்கு நன்மை ஏற்படுமா ? ஏற்கனவே காங்கிரஸ் ,திமுக கட்சிகளால் அங்கே அமைதி நிலவி விட்டது மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என பிரசாரங்கள் முன்னெடுக்க பட்ட நிலையில் இந்த பயணம் தமிழர்களுக்கு சாதகமாக இருக்குமா ?

புலம் பெயர் தமிழர்களால் அனுப்பப்பட்ட வணக்காமன் கப்பல் பொருட்கள் பல மாதங்களாக கொழும்பிலே நிற்கிறது . அதையும் எங்கள் முயற்சியால் தமிழர்களுக்கு அனுப்பி விட்டோம் என பிரச்சாரம் செய்த தமிழக அரசு அது உரியவர்களிடம் போய் சேர்ந்ததா என்பதை பற்றி கவலை பட வில்லை . ஆனால் இன்று வரை அந்த பொருட்கள் உரிய மக்களுக்கு இன்னும் சென்று சேரவில்லை .
அதிகமான உலக நாடுகள் இலங்கை முகாம்களை பற்றிய தவறான செய்திகளை தெரிவித்து இலங்கை அரசுக்கு கண்டனம் செய்த போதும் இந்தியாவோ தமிழக அரசோ இலங்கையை புகழ்வதிலேயே குறியாக இருந்தது . தமிழகத்தில் உள்ள எம்பிக்கள் குழு செல்வதில் எதிர் கட்சிகளை சேர்ந்த ஒரு எம்பிக்கள் கூட இல்லை. இவர்கள் அங்கே நடை பெறுகின்ற உண்மை நிலையை மக்களுக்கும் இந்திய அரசுக்கும் தெரிவித்து மக்களின் மீள் குடியேற்றம் , தமிழர்களின் சுய நிர்ணய உரிமை போன்றவற்றிற்கு நடவடிக்கை எடுப்பார்களா ? இல்லை இலங்கையை சுற்றி பார்த்தோம் வந்தோம் என்று இருந்து விடுவார்களா ?
ஏற்கனவே போர் நடந்து கொண்டிருக்கும் போது மழை நின்றும் துவானம் விடவில்லை என சொன்னதை போல் தான் சொல்வார்களா ? சட்ட மன்றத்திலே நிறைவேற்றிய தீர்மானங்களை போல் செல்லாத காசாக்குவார்களா ? என்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் வருகின்றன .

Thursday
கையாலாகாதவன் கையிலெடுப்பது பாசிசமா ?
எழுதியது
Suresh Kumar
Labels:
இலங்கை,
தமிழ் ஈழம்,
பாசிசம்,
பிரபாகரன்,
விடுதலை புலிகள்
எழுதிய நேரம்
Thursday, July 09, 2009
பாசிசம் என்ற வார்த்தையை கேட்டாலே கையாலாகாதவன் சொல்லும் வார்த்தை போலாகி விட்டது . திடீரென ஒரு இணைய பக்கத்திற்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அங்க பொய் பார்த்தல் இரயாகரன் - சமர் என்று ஒரு பிரிவு காணப்படுகிறது . நான் அதை பார்த்தவுடனே இராயகவன் இலங்கை சிங்கள இனவெறிக்கு எதிராக களமாடிய சமர் என நினைத்து அதை கிளிக் பண்ணி பார்த்தல் தான் தெரிகிறது தமிழ் மொழியாலே தமிழர்களுக்கு எதிராக இணையத்தில் களமாடிவருகிறார் என்பது .
சிங்கள இனவெறி அரசால் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டு அடுத்த கட்ட போராட்டத்திற்கு எழுந்து விட்ட தமிழர்களுக்கு எழாத சந்தேகங்கள் இவர்களுக்கு எழுகிறது . அவங்க இணையதளத்தை ஓட்ட வேண்டுமென்றால் தினம் ஒரு செய்தி தேசிய தலைவரை பற்றி வெளியிட்டாக வேண்டும் . சிங்கள இனவெறி அரசு இனவெறியோடு நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்தும் சிங்கள இனவெறி அரசை கண்டிப்பதை விட தமிழ் ஈழ தாயகத்திற்காக களம் கண்டு மாண்ட ஆயிரக்கான தமிழர்களை கொண்ட பிரபாகரன் தலைமையிலான விடுதலை புலிகள் அமைப்பை குறித்து தவறான பிரச்சாரம் செய்ய வேண்டும் இது தான் இவர்கள் வேலை .
ராணுவரீதியில் விடுதலை புலிகள் தோற்கடிக்கபட்டார்கள் என்று சிங்கள இனவேறியர்களோடு ஆட்டம் போட்ட இராயகன் கும்பலுக்கு கிடைத்த மிக பெரிய அடி தமிழ் ஈழ விடுதலை புலிகளால் அறிவிக்கப்பட்ட நாடு கடந்த தமிழ் ஈழம் . விடுதலை புலிகளின் அனைத்துலக தொடர்புகள் துறையால் தலைவர் வீரமரணம் அடைந்து விட்டார் என அறிவித்தும் ஈழ ஆதரவாளர்களும் தமிழர்களும் நம்ப மறுக்கின்றனர் . இதையே வாய்ப்பாக பயன்படுத்தி ஒரு வேளை பிரபாகரன் உயிருடன் இருப்பாரோ என்ற பயத்தின் மூலம் தவறான நம்பக தன்மையற்ற தகவல்களை கட்டுரையாக பாவித்து தமிழர்களுக்கு எதிராக மகிந்தாவுடன் கூட்டு சேர்ந்து சமராடுகிரார் .
இராயகவன் கும்பலின் செய்திகளை படித்தாலே தெரிகிறது கையாலாகதவர்கள் என்பது எந்த லட்சியத்திற்காக பிரபாகரன் அவர்களால் விடுதலை புலிகள் இயக்கம் துவக்கபட்டதோ அதில் எந்த விட்டு கொடுப்பிற்கும் இடமளிக்காமல் அந்த லட்சியம் இன்றும் உயிரோடிருக்க செய்த தலைவனை விமர்சிக்க கையாலாகாத இராயகவன் கும்பல்களுக்கு தகுதியிலை என்பதை என்னால் சொல்லமுடியும் . போர் முடிந்தது உங்கள் விருப்பம் போல் விடுதலை புலிகளை இல்லாமல் ஆக்கிவிட்டாச்சு இனி தமிழர்களுக்காக உரிமைகளை பெற்று தருவது தானே உங்கள் நோக்கமாக இருக்கவேண்டும் . அதை விட்டு விட்டு கீழ்த்தரமான வேலைகளில் ஏன் ஈடுபடுகிறார்கள் .
தேசிய தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதமும் தேவையில்லை எப்படி இறந்தார் என்ற ஆராச்சியும் தேவையில்லை மக்கள் உள்ளங்களில் குடிகொண்ட தமிழ் ஈழம் இன்னும் உயிருடனே இருக்கிறது . தமிழ் ஈழம் உயிருடன் இருக்கும் வரை பிரபாகரன் வாழ்ந்து கொண்டிருப்பார் . பிரபாகரன் ஒரு வரலாற்று நாயகன் .
Tuesday
தமிழருக்கு உணவு,உடை தவிர வேறெதுவும் தேவையில்லை
தமிழர்களுக்கு உணவு, உடையை தவிர வேறெதுவும் தேவையில்லை என்று சிங்கள இனவெறி அரசில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது . சிங்கள இனவெறிக்கு துணை போன துரோகிகள் இதற்கு என்ன சொல்வார்களோ . விடுதலை புலிகளை எதிர்த்த தமிழர்களே இதற்கு என்ன சொல்ல வருகிறீர்கள் .
செய்தி
செய்தி
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அரசுமுழுமையாக நடைமுறைப்படுத்த முயன்றால், அரசிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.
தமிழ் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சுயகௌரவத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித் துள்ளார்.
அரசமைப்பின் 17ஆவது திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவதையும் கடுமையாக எதிர்த்துள்ள அவர், இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அரசு இதனை செய்தால் அரசிலிருந்து நாங்கள் வெளியேற வேண்டிவரும்.
13 ஆவது திருத்தச் சட்டம் நாட்டிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அது முழுமையாக அமுல்படுத்தப்படாமல் உள்ளதால் தான் நாடு இதுவரை மோசமான பாதிப்புகளிலிருந்து தப்பியுள்ளது. இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதையும் எதிர்க்கிறோம்.
தமிழ் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சமூக கௌரவத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை.
இலங்கை போன்ற சிறிய நாடு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் தேவையற்ற பொருளாதாரச் செலவுகளையே எதிர்கொள்ள வேண்டிவரும் என்றார்.
ஐநாவும் டீக்கடை பெஞ்சும்
எழுதியது
Suresh Kumar
Labels:
இலங்கை,
இனபடுகொலை,
உலக நாடுகள்,
ஐக்கிய நாடுகள்,
தமிழ் ஈழம்
எழுதிய நேரம்
Tuesday, June 30, 2009
இரண்டாம் உலக போரையடுத்து 1945 ஆம் ஆண்டு உலக நாடுகள் சேர்ந்து உலக நாடுகளை கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டது ஐக்கிய நாடுகள் சபை . இதில் உலகின் அனைத்து நாடுகளும் உறுப்பினராக உள்ளன . ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமே சர்வதேச சட்ட திட்டங்கள் , சர்வதேச பாதுகாப்பு , சர்வதேச பொருளாதார மேம்பாடு , சமூக சேவைகள் , மனித உரிமைகளை நிலை நாட்டுவது , மனித உரிமை மீறல்களை தடுப்பது , உலகத்தில் அமைதியை ஏற்படுத்துவது போன்ற காரணங்களுக்காக தொலை நோக்கு பார்வையோடு உருவாக்கப்பட்டது . உலக நாடுகளால் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு செயலாளர் தேர்ந்தெடுக்க படுவார் .இதில் பொதுச்சபை( General Assembly ) , பாதுகாப்பு சபை(Security Council), பொருளாதார மற்றும் சமூக சபை( Economic and Social council) ,அனைத்துலக நீதிமன்றம்(International Court of Justice ) போன்ற உள் அமைப்புகள் காணபடுகின்றன . பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்க படுகின்றன ஆனால் அமெரிக்க , சைனா , ரசியா , இங்கிலாந்து ,பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கின்றன . அது மட்டுமல்லாது இந்த ஐந்து நாடுகளுக்கும் பாதுகாப்பு சபையில் தனி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .
உலகத்தில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் பாதுகாப்பு சபையில் விவாதம் நடைபெற்று முடிவுகள் எடுக்க படும் . ஒரு சிறுபான்மை இனம் தாக்கபட்டாலோ அத்துமீறி இன்னொரு நாட்டின் மீது ஒரு நாடு படைஎடுத்தாலோ விவாதங்கள் நடத்தி குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க படும் . ஆனால் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் நினைத்தால் சிறுபான்மையினரை ஒடுக்கலாம் மனித பேரவலம் ஏற்படுத்தலாம் .
ஐக்கிய நாடுகள் சபையின் நிலையை பார்த்தால் ஐக்கிய நாடுகள் சபை மூலம் ஒவ்வெரு மனிதன் ஒவ்வெரு இனம் இவைகளின் உரிமைகள் நிலை நாட்ட படும் என்று மேலோட்டமாக இருக்கும் . ஆனால் ஐக்கிய நாடுகள் சபை ஒரு டீக்கடை பெஞ்சு ரேஞ்சிக்கு தான் இருக்கிறது . உலகத்தின் கண்களுக்கு முன்னாலே லட்சகணக்கான மக்கள் இனவெறி அரசால் கொல்ல பட்ட போது ஐக்கிய நாடுகளும் அதன் செயலாளரும் அறிக்கை மட்டுமே கொடுத்து கொண்டிருந்தனர் . ஆனால் கண் முன்னே இறந்து கொண்டிருக்கும் உயிர்களை காப்ப்பாற்ற காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க வில்லை .
இலங்கையில் பெரும்பான்மை மக்களால் பறிக்க பட்ட தமிழர்களின் உரிமைகளை பெற்று கொடுக்கவும் இல்லை . உலகத்திலே மிக பெரிய மனித பேரவலம் இலங்கை தீவிலே நடைபெற்ற போதும் , நடைபெற்றிருக்கின்ற போதும் ஐக்கியி நாடுகள் சபையால் ஒன்றுமே செய்ய முடியவில்லை . ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் இலங்கை பேரவலத்தை நீங்கள் ஏன் தடுக்க வில்லை என்பதற்கு நான் இருபதுக்கு மேற்பட்ட கண்டன அறிக்கையை கொடுத்து விட்டேன் ஒரு ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளராக என்னால் இதைதான் செய்ய முடியும் என்கிறார் .( இதைதான் நம்மூரு முதல்வரும் சொல்லுகிறார் )
இப்படி எதுவுமே செய்ய முடியாத ஐக்கிய நாடுகள் சபையினால் மனிதர்களுக்கு என்ன பயன் . டீக்கடையில் டீ குடித்து கொண்டிருக்கும் போது நடைபெறும் விவாதம் போன்றது தான ஐக்கியாய நாடுகள் சபையா ? உலகத்திற்கு தெரிந்தே ஒரு இனவெறி நாடு இன்னொரு இனத்தின் மீது படுகொலை நடத்தும் போது தடுக்க முடிய வில்லையெனில் ஐக்கிய நாடுகள் சபையே தேவையில்லை தானே .
Sunday
புத்தர் உயிரோடிருந்தால் சிங்கள இனவெறிக்கு எதிராக ஆயுதமேந்தியிருப்பார்
எழுதியது
Suresh Kumar
Labels:
இலங்கை,
இனபடுகொலை,
உலக நாடுகள்,
தமிழ் ஈழம்,
புத்தர்
எழுதிய நேரம்
Sunday, June 21, 2009
புத்த நாடுகள் அனைத்தும் சேர்ந்து இலங்கையை காப்பாற்ற வேண்டுமாம் சிங்கள இனவெறி அரசின் தலைவர் மகிந்தா கோருகிறார் . ஒரு புறம் தமிழர்கள் பூமியை ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றங்களை அரங்கேற்றிவரும் சிங்கள இனவெறி அரசு இப்போது புத்த நாடுகள் சேர்ந்து இலங்கையை மேற்குலக நாடுகளின் சதியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என அறிக்கை விட்டிருக்கிறார் .
முதலில் விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என மேற்குலக நாடுகளின் துணையுடன் சேர்ந்து போர் நடத்திய சிங்கள இனவெறி அரசு 50,000 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை கொலை செய்தது . மற்ற தமிழர்களை திறந்த வெளி சிறைகளில் அடைத்து சொந்த நிலத்திலே அகதியாகவும் ராணுவத்தின் கண் காணிப்பிலும் சிறை வைக்க பட்டனர் . போர் முடிவடைந்தது என்று உலக நாடுகளுக்கு அறிவித்த சிங்கள அரசு மக்களை தங்கள் சொந்த நிலத்தில் குடியேற்ற தயங்குகிறது . மாறாக சிங்கள மக்களை தமிழர்கள் பூமியில் குடியேற்றி வருகிறது .
யாழ் பாணம் தொன்று தொட்டு வரலாற்று சிறப்புமிக்க தமிழர் பூமி . இங்கே சிங்கள இனவெறி அரச தலைவரின் மனைவி மகன் சமீபத்தில் வந்து புத்த கோயிலுக்கு அடிக்கல் நாட்டி சென்றது குறிப்பிட தக்கது . கடைசி இரண்டு நாட்களில் முள்ளி வாய்க்கால் பகுதியில் நடைபெற்ற இன படுகொலையை போல் நிகழ் காலத்தில் உலகில் எங்கேயும் நடக்கவில்லை . நம் கண் முன்னே ஆயிர கணக்கான உறவுகளை சிங்கள இன வெறி அரசு கொலை செய்து வெளியுலகத்திற்கு தெரியாதவாறு எரித்து சாம்பலை நந்தி கடலிலே கலந்து விட்டது .
அகதி முகாம்கள் எல்லாம் வதை முகாம்கள் ஆக்க பட்டது . ஒரு இன படுகொலைகளை சர்வதேசத்தின் ஒத்துழைப்போடு நடத்தியது . புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்கள் அவர்கள் வாழும் நாடுகளை அசைக்கிறது . இதையடுத்து சில நாடுகள் மனிதாபி மான அடிப்படையில் போர் குற்றங்கள் விசாரிக்க பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன . ஏற்கனவே ரத்த கறை படிந்த இந்தியா உட்பட சில நாடுகளின் ஒத்துழைப்போடு ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்ற பட விருந்த தீர்மானத்தை தோற்கடிக்க செய்தது . இப்போது அடுத்த கட்டமாக தான் இலங்கை ஒரு சிங்கள நாடு இலங்கை ஒரு புத்த தேசம் என உலகிற்கு உரக்க சொல்வது போல் புத்த நாடுகள் காப்பாற்ற வேண்டும் என அரச தலைவர் வேண்டுகிறார் .
புத்த நாடுகள் புத்தனின் கொள்கைகளிலிருந்து மாறுபட்டு விட்டது . புத்தர் உயிரோடிருந்திருந்தால் சிங்கள இனவெறிக்கு எதிராக ஆயுதமேந்தியிருப்பார் .
Monday
ஜெயா டிவியில் ஈழ தமிழர்கள் மீதான இன படுகொலை பற்றிய டாக்டர் சுரேஷ் அவர்களின் நேர் காணல்
எழுதியது
Suresh Kumar
Labels:
இலங்கை,
இனபடுகொலை,
தமிழ் ஈழம்,
வீடியோ,
ஜெயா டிவி
எழுதிய நேரம்
Monday, June 15, 2009
மக்கள் சிவில் உரிமை கழக தலைவர் டாக்டர் சுரேஷ் அவர்கள் ஜெயா டிவியில் நடை பெற்ற நேர்காணலின் போது ஈழ இன படுகொலை ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தை தோற்கடித்ததை பற்றி விளக்கமாக கூறுகிறார் .
Saturday
இனி என்ன செய்ய போகிறது இந்தியா ?
எழுதியது
Suresh Kumar
Labels:
அவமானம்,
இந்தியா,
இலங்கை,
இனபடுகொலை,
தமிழ் ஈழம்,
விடுதலை புலிகள்
எழுதிய நேரம்
Saturday, June 06, 2009
சிங்கள இனவெறி அரசின் இனவெறிக்கு விடுதலை புலிகள் மீதான கோபத்தால் தீனி போட்ட இந்திய அரசானது தமிழர்கள் மீதான இனபடுகொலையை கண்டித்து மக்கள் போராட்டங்களை நடத்திய போது நாங்கள் அங்கே வாழும் தமிழ் மக்கள் மீது மட்டும் தான் அக்கறை காட்ட முடியும் என்று பதிலளித்தது .
இன்று விடுதலை புலிகளையும் ஒழித்து விட்டாச்சு கூடவே இந்தியா உட்பட ஏழு நாடுகள் உதவியோடு 35000 மேற்பட்ட அப்பாவி மக்களையும் இன படுகொலை செய்து விட்டார்கள் . அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் இலங்கை அரசின் மீதான போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கையில் நடைபெறுவது உள் நாட்டு பிரச்சனை என்று சொல்லி தோற்கடித்துமாயிற்று .
இப்போது சிங்கள நாடு எந்த நாடும் கேள்வி கேட்க முடியாது என்று திமிரோடு இருக்கிறது . சொந்த மக்கள் என்று சொல்லி அந்த மக்களையே கொலை செய்து அதற்காக விழா எடுக்கும் ஒரே நாடு உலகத்திலே சிறிலங்காவாக தான் இருக்க முடியும் . இப்படி மக்களை கொலை செய்ததற்காக விழா எடுக்கிறது என்றால் அந்த மக்கள் எப்படி அந்த நாட்டின் குடிமகன்களாக இருக்க முடியும் . வரலாற்றில் ஒரு அரசன் இன்னொரு நாட்டில் படையெடுத்து சென்று அந்த மக்களை சிறை பிடிப்பது போல் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இரும்பு வேலிகளின் உள்ளே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் .
உலகத்தில் எந்த நாடுமே இந்த மனித அவலத்தை பற்றி உண்மையாக பேசவில்லை . விடுதலை புலிகள் அழிந்த பின்னர் மக்களுக்கு தீர்வை முன் வைப்போம் என்று சொன்ன இந்திய அரசையும் கேவல படுத்தி விட்டது சிங்களம் . இந்திய வெளியுறவு துறை மந்திரியை யார் உனக்கு இங்கே என்ன வேலை என்று கேட்குமளவிற்கு இருக்கிறது . ராஜிவ் காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட 13 வது சட்ட திருத்தமே மக்கள் உரிமையை முழுமையாக பெற்று தராததாலும் , அந்த சட்ட திருத்தத்தையே சிங்களம் நடைமுறை படுத்த தவறியதாலுமே அன்று விடுதலை புலிகளுக்கும் இந்திய ராணுவதிற்குமிடையில் போர் வெடித்தது .
இன்று சிங்களம் அந்த சிறிய உரிமைகளை கூட தமிழர்களுக்கு கொடுக்க தயாரில்லை . இந்தியாவை சிங்களம் எச்சரித்தாயிற்று . இலங்கை தலைமை நீதிபதியும் 13 வது சட்ட திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்த முடியாது என்று சொல்லுகிறார் . யார் தான் அப்படிஎன்றல் தமிழர்களின் உரிமையை பெற்று தருவார்கள் . இந்தியா இனி என்ன செய்ய போகிறது .
Friday
முகாம்களில் இருக்கும் தமிழர்களையும் கொலை செய்யும் சிங்கள இனவெறி அரசு .
சிங்கள இனவெறி அரசு நடத்தும் தமிழர்கள் மீதான இனபடுகொலை எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது . ஒரே நாளில் 25000 தமிழர்களை கொலை செய்த சிங்கள அரசு இப்போது முகாம்களில் வாழும் தமிழர்களில் இளைஞர்களை தேடி தேடி கொலை செய்து வருகிறது .
போரை நிறுத்தி விட்டோம் என்று சிங்கள அரசு உலக நாடுகளுக்கு அறிவித்து விட்டு இனி தமிழ் சமுதாயம் எழுந்து விட முடியாத அளவிற்கு இன படுகொலையை செய்கிறது சிங்கள அரசு . தமிழர்களை உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கைவிட்ட நிலையில் சத்தமின்றி தமிழினத்தை கருவறுக்கும் பணியை சிங்களம் செய்து வருகிறது .
இந்த நிலையில் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள 13000 மக்களை காணவில்லை என ஐ நா தகவல்கள் தெரிவிக்கின்றன . அந்த மக்கள் அனைவரும் படுகொலை செய்ய பட்டிருக்கலாமோ என சந்தேகம் வெளியிட்டிருக்கிறது . ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரப் பிரிவு ஒருங்கிணைப்பு அலுவலகம், இந்த காணாமல் போன தமிழர்கள் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. வெளியுலகிற்கு தெரியாமல் சிங்கள அதிகார வர்க்கம் இதை மறைத்து வருவதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளது .
மனிதாபிமான ஆணையங்களுக்கே மனிதாபிமானமற்று போன பின்னர் சிங்கள அரசிற்கு மட்டும் மனிதாபிமானம் இருக்குமா . ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு வெற்றி கிடைத்த பின்னர் துணிந்து இனபடுகொலையை மீண்டும் மீண்டும் சிங்கள அரசு நடத்தி வருகிறது . தமிழர்களின் ரத்த கறைகள் இந்திய அரசியல்வாதிகளின் கையில் படிந்துள்ளது தான் மிக பெரிய வேதனை .

உலகத்திலே கேவலமான இனமா தமிழினம் ?
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
இலங்கை,
இனபடுகொலை,
உலக நாடுகள்,
தமிழ் ஈழம்
எழுதிய நேரம்
Monday, June 01, 2009
இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பார்க்கும் போது தமிழன் உலகத்திலே கேவலமானவனா என நினைக்க தோன்றுகிறது . கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்ற பெருமைக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் என்று நாம் படிக்கும் பாடங்களின் மூலமாகவும் .பெரியோர்களின் மூலமாகவும் நமது பெருமைகளை சொல்லியே நாம் வளர்ந்தோம் .
மிக பெரிய வரலாற்று சிறப்பு மிக்க ஒரு இனம் என்று சொல்லியே வளர்ந்த நாம் நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருப்பவைகளை பார்க்கும் போது வரலாறு தவறாகஎழுதப்பட்டதா ? என சிந்திக்க தூண்டுகிறது . வீரத்தில் தமிழன் கலாச்சாரத்தில் தமிழன் கண்டுபிடிப்புகளில் தமிழன் இப்படி அதில் தமிழன் இதில் தமிழன் என்று சொல்லி நமக்கு நாமே பெருமையடித்து நிகழ் காலத்தை தவறவிட்டோம் . நிகழ் காலத்தில் தமிழன் என்று சொன்னாலே கேட்க யாருமற்று காணப்படுகிறது . ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து ஸ்ரீலங்கா விடுபட்ட நாளிலிருந்து ஈழ தமிழர்கள் சிங்கள ஆதிக்கத்தின் கீழ் கொடுமைபடுத்த பட்டனர்.
இருபது ஆண்டு காலம் சாத்வீக வழியில் சுதந்திரம் பெற்றுவிடலாம் என போராடிய மக்கள் மீது சிங்கள ஆதிக்கம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது .இளைஞர்கள் கொல்லப்பட்டனர் பெண்கள் ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டனர் .ஒவ்வெரு நாளும் ஒவ்வெரு நொடியும் ஆதிக்க வர்க்கத்தினால் படும் தொல்லைகளுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் துப்பாக்கி தூக்கினர் . ராணுவ அடக்கு முறையைக்கு எதிராக ஆயுத போராட்டங்களை துவக்கினர் . ராணுவ அடக்குமுறைக்கு எதிராக உருவான அமைப்பு தான் பிரபாகரன் தலைமையிலான தமிழ் ஈழ விடுதலை புலிகள் .
எத்தனை குழுக்கள் தோன்றினாலும் தான் கொண்ட லட்சியத்திலும் சமரசம் செய்யாமல் இருந்ததால் மக்கள் ஆதரவு பெற்று ஈழ தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் ஆனார்கள் விடுதலை புலிகள் . சிங்கள அரசிற்கு எதிராக மக்களும் விடுதலை புலிகள் பின்னால் அணி திரன்டதின் விளைவாக தமிழ் ஈழ நில பரப்பில் 85 சதவீத நில பரப்புகள் விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் வந்தது . அங்கு வாழும் மக்களுக்கு நல்ல ஒரு நிர்வாகத்தை கொடுத்தனர் விடுதலை புலிகள் .
இலங்கை தீவு என்பது ஒரு நாடு அல்ல இரண்டு நாடுகள் ஓன்று தமிழ் ஈழம் மற்றொன்று சிங்களம் ஆனால் சிங்கள தேசமோ தமிழர்களை சிங்களத்துடன் வைத்து கொண்டு கொத்தடிமை வாழ்க்கையை நடத்த நினைத்து தான் தமிழர் பூமி மீது ஆக்கிரமிப்பு போரை தொடுத்தது . அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற மோசமான முன்னுதாரணம் மூலம் போரை நிகழ்த்தியது . ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருப்புகள் மீது முப்படைகளாலும் தாக்குதலை தொடுத்தனர் .
முதலில் மக்களின் சாவு எண்ணிக்கை தினம் நூறாக இருந்தது . பின்னர் படிப்படியாக ஆயிரத்தை தொட்டது . உலக நாடுகளின் கண்கள் குருடாகி போயின . காதுகள் செவிடாகி போயின . தமிழன் தினம் தினம் இறந்து கொண்டேயிருந்தான் . பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்த போது கண்டித்த உலக நாடுகள் தமிழர்கள் சாகும் போது கண்டிக்க மறந்து விட்டனர் . அதன் உச்ச கட்டமாக முல்லிவைக்கால் பகுதியில் 25000 பேரை ஒரே நாளில் ரசாயன் ஆயுதம் மூலமாகவும் கனரக ஆயுதம் மூலமாகவும் கொன்றொழித்தது சிங்கள இனவெறி அரசு .
நிகழ் காலத்தில் எந்த ஒரு இனமும் இப்படி ஒட்டு மொத்தமாக கொல்லப்படவில்லை . சாட்சியே இல்லாமல் மக்கள் கொல்லப்பட்டதை விசாரிக்க வேண்டும் என மக்கள் இறந்த பின்னர் மேற்குலக நாடுகள் வந்தன ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானத்தை முன்மொழிந்த போது மனிதாபிமானமற்ற என் நாடு ( இந்தியா ) உட்பட பல நாடுகள் அந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது . இதன் மூலம் இனி உள் நாட்டில் எந்த இனத்தையும் பெரும்பான்மை மக்களால் உருவாக்கப்பட்ட அரசு கொலை செய்தாலும் இனி எந்த நாடுகளும் கேட்க முடியாதாம் .

ஒரு சீக்கிய மத குருவுக்காக பற்றி எரியும் பஞ்சாப் 30,000 தமிழர்களுக்காக ...........?தமிழா
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
இலங்கை,
இனபடுகொலை,
தமிழ் ஈழம்,
பஞ்சாப் கலவரம்
எழுதிய நேரம்
Monday, May 25, 2009
ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் இரு சீக்கிய குழுவினருக்கிடையில் நடைபெற்ற மோதலில் ஒரு சீக்கிய மத குரு கொல்லப்பட்டார் . இதையடுத்து இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் கலவரம் மூண்டது பஞ்சாப் மாநிலமே பற்றி எரிகிறது .
எட்டி கால் வைக்கும் தூரத்தில் மேற்பட்ட தமிழர்கள் ஈவு இரக்கமின்றி ரசாயன ஆயுதங்களினாலும் கனரக ஆயுதங்களினாலும் கொள்ள பட்ட பொது அதை நியாயபடுத்திய பல துரோகிகள் உண்டு . பதவிக்காக இளைஞர்கள் மத்தியில் எழுந்த போராட்டங்களை மழுங்கடித்த அரசியல் சுயநல வாதிகளும் அடக்குமுறையை ஏவிய துரோக கூட்டங்களுக்கு மத்தியில் தமிழினத்தை மிக சுலபமாக கொலை செய்தான் சிங்கள அரக்கன் . தமிழன் உணர்வற்று போனான் .
இன்று உலக தமிழர்களுக்காக தன வாழ்நாளை அர்பணித்து தமிழர்களின் தலைவராக இருந்த தேசிய தலைவரை கொலை செய்து விட்டோம் ( தேசிய தலைவர் உயிரோடிருக்கிறார் என தமிழுணர்வாளர்களால் உறுதி படுத்த பட்டுள்ளது ) சிங்கள வெறியர்கள் சொல்லுகிறார்கள் அப்போது தமிழினம் வேடிக்கை பார்க்கிறது .
சீக்கியர்களின் இன இனர்வுகளுக்கு முன்னால் தலை வணங்குகிறேன் .
Wednesday
வதந்திகள் வலம் வரும் உலகமடா ?
எழுதியது
Suresh Kumar
Labels:
இலங்கை,
இனபடுகொலை,
தமிழ் ஈழம்,
பிரபாகரன்,
வதந்தி
எழுதிய நேரம்
Wednesday, May 20, 2009
இன்று இரவு தொலை காட்சிகளில் தேசிய தலைவர் பிரபாகரன் பேசுகிறார் என்று குறுஞ்செய்தி மூலமாகவும் இணைய தளம் மூலமாகவும் ஒரு செய்தி பரவி கொண்டிருக்கிறது . இது எந்த அளவிற்கு உண்மை என்றே தெரியாத நிலையில் சிலர் தளராமல் பரப்பி வருகின்றனர் .
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தேசிய தலைவர் இறந்து விட்டார் என்றும் . அவருடைய உடல் கருகி விட்டது என்றும் சிங்கள அரசுகள் சொல்லி வந்தன . இதை விடுதலை புலிகள் மறுத்த நிலையில் தேசிய தலைவரை போன்ற உடலை காட்டினார்கள் . இதில் காட்ட பட்ட உடல் தலைவரின் உடல் இல்லை என்பதும் இது சிங்களத்தின் போலியான நாடகம் எனவும் ஆதாரபூர்வமான சந்தேகங்களால் வெளிக்காட்டினார்கள் தமிழ் உணர்வாளர்கள் .
சிங்கள ராணுவம் திட்டமிட்டே மனித உயிர்களின் இன படுகொலையை மறைக்கவே தலைவர் பிரபாகரன் இறந்ததாக பொய் செய்திகளை பரப்பியது . சிங்கள அரசின் நாடகத்திற்கு பலியாகி மனம் தளர்ந்து தங்களின் போராட்ட வலிமையை குறைக்க செய்ய சிங்களம் இப்படியான ஜோடிக்கப்பட்ட பொய் கதைகளை கட்டவிழ்த்து விடுகிறது .
அந்த நிலையில் தான் சிலர் இன்று இரவு தேசிய தலைவர் தொலை காட்சிகளில் தோன்றி பேசுகிறார் என ஒரு செய்தியை பரப்புகிறார்கள் . எதற்கு அந்த குறிப்பிட்ட தொலை காட்சிகளுக்கு விளம்பரமா இல்லை சிங்கள அரசின் மற்றொரு உளவியல் போரா என சிந்திக்க தோன்றுகிறது ? அப்படியே தேசிய தலைவர் பிரபாகரன் பேசுவதாக இருந்தாலும் பேசிய பின்னர் நாம் இதை பற்றி எழுதலாமே . ஒரு செய்தி உறுதியாக தெரியும் முன்னால் நாம் அதை பரப்புவதை நிறுத்துவோம் .
வதந்திகள் வதந்திகளாகவே இருக்கட்டும் சிங்கள அரசின் இனபடுகொலைக்கு எதிராகவும் தமிழர்களின் உரிமையை பெறவும் மனம் தளராமல் போராடுவோம் தேவையான நேரத்தில் தலைவர் பிரபாகரன் மக்கள் முன் வருவார்

7 கோடி மக்கள் நாம் இருந்தும் என்ன பயன்
சிங்கள இனவெறி ராஜ பக்ஷே அரசு ஒரே நாளில் 30,000 மக்களை கொலை செய்து கொலை களமாக மாற்றியிருக்கிறான் . தமிழகத்தில் 7 கோடி மக்கள் நாம் இருந்தும் என்ன பயன் . உலகத்தில் எங்கும் நடைபெறாத ஒரு இனபடுகொலையை ராஜ பக்ஷே சகோதரர்கள் எட்டி கால் வைக்கும் இலங்கை தீவில் நடத்தி கொண்டிருக்கிறேன் .
கடந்த ஆண்டு துவங்கிய இனபடுகொலை இன்று உச்ச கட்டத்தை அடைந்திருக்கிறது ஒரே நாள் இரவில் இவ்வளவு பெரிய படுகொலையை சிங்கள அரசு நடத்தியிருக்கிறது . உலகம் முழுவதும் தமிழர்கள் போராடி வருகின்றனர் . உலக நாடுகள் அனைத்தும் தமிழர்கள் மீதான இன படுகொலையில் பாரபட்சத்தை காட்டி வருகின்றன . தமிழகத்திலோ நாம் பணத்திற்காக விலைபோகும் தமிழர்களாக மாறி விட்டோம் .
நம் பாக்கத்து நாட்டில் நம் உறவுகள் தினம் தினம் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்ய படும் போது நாம் எதை பற்றியும் கவலை படாமல் சுயனால் தமிழர்களாக மாறி விட்ட கொடுமை தான் என்ன . மனிதாபிமானம் என்றால் என்ன விலை என்று கேட்க கூடிய நிலையில் ஏன் நாம் இருக்கிறோம் . விடுதலை புலிகள் தலைவர் இறந்து விட்டார் என பொய் பிரசாரங்களை அவிழ்த்து விடும் இந்திய இலங்கை மீடியாக்களே அங்கே மக்கள் படுகொலை செய்ய பட்டிருக்கிறார்களே அதை பற்றி ஏன் வாய் திறக்கவில்லை .
பொய் பிரசாரங்களின் மூலம் ஒட்டு மொத்த மாநாடு வாழ்ந்த தமிழர்களை கொலை செய்து விட்டு மீதமிருக்கிற தமிழர்களை ஆட்டு மாந்தைகளாககும் சிங்கள இனவெறியர்களின் சூழ்ச்சியை கண்டு நம் மனம் பதறாது ஏனோ ? நாம் ஏற்கனவே ஆட்டு மந்தைகள் ஆகிவிட்டோம் என்பதாலா ? தமிழக இந்திய அரசியல் வாதிகளின் கைகள் முழுவதும் தமிழனின் ரத்தங்கள் . புராணங்களில் அரக்கர்கள் தான் ரத்தத்தால் தங்கள் உடல் முழுவதையும் நனைப்பார்கள் . அதே போல் இன்று தமிழர்கள் ரத்தங்களால் உடல் நனைத்து கொண்ட சோனியா , மகிந்தா , மண் மோகன் சிங்கே புராண அரக்கர்களாக நீங்கள் நிகழ காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் .
தமிழக மக்களே பக்கத்து வீடு தானே தீ பிடிக்கிறது என்று நாம் இருந்து விட்டால் நாளை நம் விட்டாய் இந்த அரசியல் வாதிகள் கொழுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் . தமிழனாய் பிறந்ததற்கு வெட்க பட்டு கொள்ளுங்கள் நாளைய வரலாறு நம்மை காறி துப்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . இத்தனை நாளும் தமிழன் என்றால் சிறு மரியாதையாவது இருக்கும் நாளைய சமூகத்தில் தமிழன் தலை நிமிர்ந்து வாழ முடியாது .
இவண்
தமிழனாய் பிறந்ததால் வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் கையாலாகாத ஒரு தமிழன்
Sunday
தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் தொடர்பான செய்திகளை நம்ப வேண்டாம்: வைகோ
எழுதியது
Suresh Kumar
Labels:
இலங்கை,
தமிழ் ஈழம்,
பிரபாகரன்,
விடுதலை புலிகள்,
வைகோ
எழுதிய நேரம்
Sunday, May 17, 2009
பிரபாகரன் தொடர்பாக வெளிவரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நடைபெற்ற லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட வைகோ தோல்வியடைந்தார். இவரது தோல்வியால் மனமுடைந்த அக்கட்சியின் தொண்டர் அய்யனார் தீக்குளித்தார். சிகிச்சைக்காக அவர் மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அய்யனாரை அப்போலோ மருத்துவனையில் பார்த்து அவரிடம் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ ஓட்டுபதிவு அன்று ஓட்டுசாவடிகளில் நான் சென்று பார்த்த போது மக்கள் என்னை பார்க்க தயங்கினர். அப்போதே அவர்கள் விலைக்கு வாங்கப்பட்டுவிட்டனர் என்று யூகித்தேன். தேர்தல் தோல்வியால் என் மனம் வருத்தம் அடையவில்லை, முன்பைவிட இனி கட்சி வேலையில் அதிகம் ஈடுபடுவேன். விருதுநகர் தொகுதியில் பதிவான ஓட்டுக்களை விட கூடுதலாக 24,000 ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது பிரபாகரன் குறித்து வெளிவரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்திய அரசும், இலங்கை அரசும் சேர்ந்து இலங்�யில் போரை நிறுத்த முயற்சிக்கவில்லை, இதனால் ஏராளமான பேர் கொல்லப்பட்டனர், மீதமுள்ள 60,000 பேரயும் கொல்ல முயற்சிக்கின்றனர். அவர்களை காப்பாற்ற அமெரிக்கா போன்ற நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்
Source : Dinamalar
Read More

வன்னியில் இருந்து கிடைத்த இறுதிக் குரல்(AUDIO)
வன்னியில் உள்ள தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டுமாயின் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் இது தங்களது கடைசி வேண்டுகோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஆடியோ கேட்க இந்த இணைப்பில் செல்லவும் '
மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் இன்று வெள்ளிக்கிழமை மிகச்செறிவான ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களையும் வெள்ளைப் பொஸ்பரஸ் அடங்கிய இரசாயன ஆயுதங்களையும் கொண்டு தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது. இதனால் 'மக்கள் பாதுகாப்பு வலய'ப் பகுதி தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கிறது.
உயிரிழந்த மக்களின் உடலங்கள் வீதிகளில் சிதறிக் கிடக்கின்றன. படுகாயமடைந்தவர்களை காப்பாற்றுவதற்கான எந்தவித வசதியும் இங்கு இல்லை. மருத்துவமனைகள் அற்ற நிலையிலும் மருத்துவ வசதிகள் அற்ற நிலையிலும் படுகாயமடைந்த மக்கள் வீதிகளில் கிடந்தவாறு கெஞ்சி அழுதவண்ணம் உள்ளனர். ஆனால் எந்த வசதியும் அற்ற நிலையில் அவர்களுக்கு எதுவுமே செய்யமுடியாத நிலை காணப்படுகிறது.
இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் கொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இங்குள்ள ஒரு லட்சத்து 65 பேரை காப்பாற்ற வேண்டுமாயின் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இதனை எமது கடைசி வேண்டுகோளாகக் கேட்டுக்கொள்கிறோம் என்றார் அவர்.
இதேவேளையில் வன்னி முள்ளிவாய்க்கால் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறீலங்கா படையினர் மேற்கொள்ளும் கடுமையான தாக்குலால் அங்கிருந்து வெளியேறி படையினரிடம் அடைக்கலம் கோர முற்பட்ட மக்களையும் படையினர் சுட்டுக்கொலை செய்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆடியோ கேட்க இந்த இணைப்பில் செல்லவும்
Subscribe to:
Posts (Atom)