இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts
Monday
மாலத்தீவில் கடலுக்கடியில் நடந்த மந்திரி சபை கூட்ட காணொளி
எழுதியது
Suresh Kumar
Labels:
உலகம்,
மந்திரி சபை கூட்டம்,
மாலைதீவு,
வெப்பமயமாதல்
எழுதிய நேரம்
Monday, October 19, 2009
புவி வெப்பமயமாவதை தடுக்கும் பொருட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்த மாலத்தீவு அரசால் கடலுக்கடியில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது . கடல் மட்டத்திலிருந்து 3.5 மீட்டர் ஆழத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாற்காலிகள் , மேஜைகள் போடப்பட்டிருந்தன .

இந்த கூட்டத்தில் புவி வெப்பமயமாதல் குறித்து விவாதிக்க்க பட்டது . புவி வெப்பமாவதைத் தடுக்க உலக நாடுகளின் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது . மாலத்தீவு கடல் மட்டத்திலிருந்து 3 முதல் 4 அடி உயரத்தில் இருப்பது குறிப்பிட தக்கது .

Tuesday
இரக்கமற்ற சோனியாவே இன்னும் எத்தனை தமிழ் பிணங்கள் வேண்டும்
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
இலங்கை,
உலகம்,
சோனியா,
தமிழ் ஈழம்,
விடுதலை புலிகள்
எழுதிய நேரம்
Tuesday, April 21, 2009
சிங்கள இனவெறி தலைவன் நவீன ஹிட்லர் மஹிந்த கொடுத்த 24மணி நேர கேடு இன்னும் சில மணி நேரங்களில் முடியும் தருவாயில் வன்னியில் ரத்த ஆறு இன்னும் சில மணி நேரத்தில் ஓடும் என உலக மனித உரிமை கழகங்கள் எச்சரித்தும் மௌனமாக நாடகமாடும் உலக நாடுகள் ஒரு புறம் . (சிங்கள இனவெறி அரசுக்கு எச்சரிக்கையாவது சில நாடுகள் விடுகின்றன ).
சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசோ சிங்கள இனவெறி அரசுக்கு தேவையான ஆயதங்களை கொடுத்தும் தேர்தலுக்கு முன்னர் தமிழினத்தை கொலை செய்ய முனைப்பு காட்டி வருகின்றன . இன்னும் சில மணி நேரத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் நிலை என்ன என்பதே தெரியாமல் . ஆறு கோடி தமிழர்கள் நாம் இருந்தும் எதுவுமே செய்ய முடியவில்லையே என நினைக்கும் போது சோனியா காந்தியோ இரக்கமே இல்லாமல் இருக்கிறார் .
கடந்த தேர்தலில் வெளிநாட்டுகாரி இந்திய பிரதமர் ஆக கூடாது என்று சிலர் சொன்ன போது ஒட்டு மொத்த தமிழகமும் சோனியாவை ஆதரித்தது . அதன் பலன் தான் ஆயிரக்கணக்கான மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது . இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்ல பட்டது கொல்ல பட்டு கொண்டிருப்பது . கற்பை மேல் என்று நினைக்கும் தமிழ் பெண்கள் சிங்கள இனவெறியர்களால் கற்பழிக்க படுவது . இதெல்லாம் உனக்கு எங்கே தெரியும் இத்தாலி பெண்ணுக்கு கற்பு என்றால் என்ன என்று தெரியாமலிருக்கலாம் .
சோனியாவே நீயும் ஒரு பெண் தானே பெண் என்றால் பெண்ணின் வலி தெரியுமே ஈழத்து உறவுகளை காக்க நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்களே அவர்களின் உணர்வுக்காவது மதிப்பு கொடுக்கலாமே . எட்டு நாட்கள் கடந்த பின்னரும் மௌனியாக இருப்பது என்ன . சோனியாவே நீ இந்தியாவுக்கு வந்த ஒரு சாப கேடு . சாகும் ஒவ்வெரு தமிழனுக்கும் பதில் சொல்ல வேண்டும்.இரக்கமற்ற சோனியாவே தமிழின சாபம் உன்னை துரத்தும் .

பிந்திய செய்தி
போர்நிறுத்தம் வலியுறுத்தி சேலம் சட்ட கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம் .
எட்ட்டாவது நாளை கடக்கும் பெண்கள் போராட்டம் தீவிரமடைகிறது . பல பெண்களின் உடல்நிலை கவலைக்கிடம்
போர்நிறுத்தம் வலியுறுத்தி சேலம் சட்ட கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம் .
எட்ட்டாவது நாளை கடக்கும் பெண்கள் போராட்டம் தீவிரமடைகிறது . பல பெண்களின் உடல்நிலை கவலைக்கிடம்
Monday
மாலைதீவில் வெளி நாட்டவர்கள் மீறும் விதிமுறைகள்
Male Map
இந்திய பெருங்கடலில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட தீவுகள் சேர்ந்தது தான் மாலைதீவு . வெள்ளை மணல் கடற்கரையை கொண்ட அழகிய தீவு கூட்டங்கள் தான் இந்த நாட்டின் சிறப்பு அம்சங்கள் . சுமார் மூன்று லட்சம் மக்கள் தொகையை கொண்டது . இந்த நாட்டில் நகரம் என்று சொன்னால் ஒரே ஒரு நகரம் தான் காணப்படுகிறது . அது தான் மாலைதீவின் தலைநகரம் மலே .இங்கு இந்த நாட்டின் மொத மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வாழ்கின்றனர் .
நான் முதன் முதலாக இங்கு வந்த போது என்னை ஆச்சரியபட வைத்தது இந்த நாட்டின் போக்குவரத்து விதிமுறைகள் . அதே நேரம் வருத்தபட வைத்ததும் அதை மீறுபவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் அதில் பெரும்பான்மையோர் இந்தியர்களே .
Male City
இந்த மலே நகரமானது மூன்றரை சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது . இங்கு அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து சிக்னல்கள் பொருத்தபட்டிருக்கும் . இது என்னவோ இந்தியாவில் இல்லாததா என நினைக்க வேண்டாம் . அதில் நடந்து செல்பவர்களுக்கான சிக்னல்களும் இருக்கும் . இந்த நாட்டின் குடிகள் வாகனத்தில் வருபவர்களாக இருந்தாலும் சரி நடந்து போகிறவர்களாக இருந்தாலும் பச்சை விளக்கு எரிந்த பின்னர் தான் செல்வார்கள் .
இரவு எத்தனை மணி நேரமானாலும் சிக்னல்கள் இயங்கி கொண்டே இருக்கும் . இரவு பதினொன்று மணிக்கு மேல் யாரும் அதிகமாக சாலையில் செல்ல மாட்டார்கள் . எப்போதாவது யாராவது செல்வார்கள் அவர்கள் கூட பச்சை விளக்கு எரிந்த பின்னர் தான் சிக்னலை கடந்து செல்வார்கள் . நடந்து செல்பவர்கள் கூட சிக்னலை பார்த்து தான் செல்வார்கள் .
ஆனால் இங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் வெளிநாட்டினர் , பெரும்பாலும் இந்தியர்களும், வங்காள தேசத்தவரும் தான் . இவர்கள் எப்போது சென்றாலும் விளக்குகளை பார்ப்பதில்லை வாகனம் ஏதாவது வருகிறதா இல்லையென்றால் கடந்து விடுவார்கள் . சில நேரங்களில் இப்படி செல்லும் போது சிறிய மோதல்கள் வரை நடந்திருக்கிறது . (பெரிய மோதல்கள் நடைபெற வாய்ப்புகள் இல்லை ஏனெனில் வாகனங்கள் செல்லும் வேகம் மிகவும் குறைவாக தான் இருக்கும் )
இந்தியாவில் தான் நாம் போக்குவரத்து விதிமுறைகளை மதிக்க வில்லை நாம் இன்னொரு நாட்டிற்கு சென்றுமா எங்களோடு கூடவே பிறந்தது இதுவென்று காட்ட வேண்டும் . நாம் செல்லும் நாட்டின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றாலும் அந்த நாட்டு மக்கள் கடைப்பிடிக்கும் நல்ல பழக்கங்களை நாமும் கடைபிடிக்கலாமே .
நம்மால் அந்த நாட்டின் விதிமுறைகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்கலாமே .
இதை பற்றிய உங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்கலாம் . உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கும் உங்கள் தோழன் .
Friday
செருப்படி உணர்த்தும் உண்மை

சமீபத்தில் ஈராக்கிற்கு சுற்று பயணம் செய்த அமெரிக்காவின் தற்போதைய அதிபர் புஷிற்கு அந்த நாட்டில் நடந்த மிக பெரிய அவமானம் தான் செருப்படி வீச்சு. இந்த செருப்படியின் பின்னால் உலகத்திற்கு ஒரு செய்தி தெரிகிறது. ஈராக்கின் மீது தன் தந்தை (அதாவது தற்போதைய அதிபரின் தந்தை புஷ் ) ஒரு முறை படை எடுத்து தோல்வியுடன் திரும்பினார். அந்த மாறாத வடு மகனுக்கு பற்றி தன் தந்தை செய்த தவறையே திரும்பவும் செய்தார். தன் தந்தையால் முடியாததை தான் சாதிக்க வேண்டுமென்று விதி மீறி படை எடுத்தார் . நிலங்களை கைப்பற்றினார் அந்த நாட்டின் அதிபரையும் தூக்கில் இட்டார் . அவரால் முடிந்தது அவ்வளவுதான் . ஆனால் அந்த நாட்டு மக்களின் மனதை வெல்ல முடியவில்லை . ஒரு வெற்றி என்பது ஆயுத வெற்றியோடு நின்று விடுவதில்லை . மாறாக அந்த பகுதி மக்களின் மனங்களில் தான் இருக்கிறது.
ஆயுதத்தால் வென்ற மகிழ்ச்சியில் ஈராக்கிற்கு சென்ற புஷின் மீது தான் ஒரு நிருபர் தன்னுடைய இரண்டு கால்களில் இருந்த சூக்களை கழற்றி வீசினார் . இந்த செயல் அத்துமீறி ஒரு நாட்டின் மீதோ ஒரு இனத்தின் மீதோ படையெடுக்கும் ஒவ்வெரு அதிபருக்கும் கிடைத்த கிடைக்கின்ற அவமானம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .
அமெரிகாவில் அடுத்த மாதம் புதிய அதிபர் பதவியேற்க இருக்கின்றார் . அதுவும் காலம் காலமாக ஒடுக்க பட்ட ஒரு இனத்திலிருந்து வந்திருக்கிறார் . இவர் வருகையும் புஷின் பிரிவையும் ஒடுக்க பட்ட மக்கள் எதிர் நோக்கி இருக்குகிறார்கள். இதற்கு புதிய அதிபர் என்ன செய்ய போகிறார் . அமெரிக்கா அதிபர் அவமான பட்டு விட்டார் என நினைக்கிறாரா ? இல்லை இதன் காரணம் என்ன என்பதை நினைத்து நீதி வழங்க போகிறாரா ?
Subscribe to:
Posts (Atom)