• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Tuesday

கனிமொழி சாரு காதலர்களா?

எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் கனிமொழியும் காதலர்களாம்.  சாரு தான்னுடைய வாசகியாக இணைந்து 21  நிரம்பிய பெண்ணிடம் காம உணர்வுகளோடு தவறாக பேசியிருக்கிறார்.  சாரு அந்த பெண்ணிடம் சாட்டில் பேசிய வசனங்கள் இப்போது காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது.  


அந்த வாசகியிடம் பேசும் போது கனிமொழி! கனிமொழி நாங்க இருவரும் காலதலர்களாக இருந்தாம். கனிமொழி அரசியலுக்கு வரும் வரை" என்றும் கனிமொழி அரசியலுக்கு வருவதற்கு நான் நிறைய உதவிகள் செய்ததாகவும் சொல்லியிருக்கிறார். 

" I never kissed a women except kani"  கனியை தவிர வேறு யாரையும் சாரு முத்தமிட்டது கிடையாதாம்.  இது ஒரு பகுதியாக இருந்தாலும் ஒரு இளம் வாசகியிடம் இப்படியா பேசுவார் ஒரு எழுத்தாளர் என முகம் சுளிக்கும் அளவிற்கு வர்ணிப்புகள் படு காம உணர்வோடு இருக்கிறது. 


இந்த சாருவின் நடவடிக்கையால் பல இளம் பெண்கள் இணையத்தை ஒரு வித பயத்தோடு பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகும். இந்த நேரத்தில் இந்த செயலை துணிச்சலோடு எதிர்கொண்ட அந்த பெண் பதிவருக்கு பாராட்டுக்கள். யாரும் யோக்கியர்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டு பெண்கள் தங்கள் நோக்கம் நல்ல கருத்துக்களை யாருக்கும் பயப்படாமல் பதிவு செய்ய வேண்டும்.  
துணிச்சலோடு சாருவின் இன்னொரு முகத்தை வெளியுலகிற்கு காட்டிய பெரியார் கருத்துக்களை பரப்பும் தமிழச்சிக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்வோம்.  இது சம்மந்தமான தமிழச்சியின் பதிவு சாரு ஆன்லைன் பெண்கள் ஜாக்கிரதை .

இந்த பதிவின் முழு உண்மை தன்மையை சாரு வெளிபடுத்தியாக வேண்டும். ஏனெனில் கனிமொழி ஜெயிலில் இருப்பதால் அவரால் உடனடியாக இதற்கு விளக்கம் கொடுக்க முடியாது.        
Read More

Sunday

அந்த நாள் நினைவுகள் மறந்து போகுமோ?

நாளைக்கு காதலர் தினமாமே என்ன  செய்யலாம்னே தெரியல  கையும் ஓடல காலும் ஓடல. நின்னா நிக்க முடியல இருந்தா இருக்க முடியல நடந்தா நடக்க முடியல என்ன செய்றது.  இப்படி தான் என்னை போன்ற பலரும் நினைக்க முடிகிறது.  ஆசைகள் உணர்வுகள் என்பது ஏனோ மறுக்கவோ மறக்கவோ முடியாததாகிறது. அதனால் தானோ என்னவோ காதலித்த நேரம் காதலர் தினத்தை சரியாக கொண்டாடவில்லையோ என்ற ஒரு ஏக்கம் காதலர் தினம் வரும் போதெல்லாம் வந்து கொண்டே இருக்கிறது. 

இருந்தாலும் மகிழ்வான நினைவுகள் நெஞ்சில் ஊஞ்சலாடி கொண்டிருக்கிறது. எத்தனை நாட்கள் காதலியை பார்த்தாலும் அந்த நாள் பார்க்க வில்லையென்றால் ஏதோ ஒரு ஏமாற்றம் சுழன்று கொண்டே தான் இருக்கும். அப்படி ஒரு ஏமாற்றம் வர கூடாது என்பதற்காக தான் சில  ஆண்டுகளுக்கு முன்னர் முந்திய நாளே முன்னேற்பாடோடு காதலியை பார்க்க வேண்டும் என்ற முடிவோடு படுத்தேன். அதனால் தானோ என்னவோ இன்று வரை அந்த தூக்கத்தை ஈடு கட்டவே முடியவில்லை. நாளைக்கு தான் காதலர் தினம் நாளை கட்டாயம் காதலியை பார்த்தாக வேண்டும் என்பதற்காகவே இன்றே மதியம் கல்லூரியிலிருந்து வெளியேறி விட்டேன்.

எப்படியும் பார்த்தாக வேண்டும் அதற்காக என்ன செய்யலாம் எப்படி பார்க்கிறது? பார்த்தா மட்டும் போதாது இன்னைக்காவது பேசியாக வேண்டும். அந்த நேரம் இதை தவிர வேறு எந்த சிந்தனையும் வந்ததில்லை. எதுக்கு கல்லூரியை விட்டு வந்தேன் என்பதே மறந்து போய்விட்டது. ஒரு வழியா நாகர் கோவில் பார்க்கில் சென்று உட்கார்ந்து யோசித்தேன். நல்ல வேளை  ரூம் போட்டு யோசிக்க தோணல. அவள் ஸ்கூல் போற வழியில காலையிலேயே போய் நிக்கலாமோ ?  ஊகூம் ..........  எல்லா பிள்ளேங்களும் சேர்ந்து  வருவாங்க  பேச முடியாது.  பஸ்ஸில வரும் போது பேசலாமே?  ......... ஊரில உள்ளவங்க நிறைய பேரு இருப்பாங்க அப்புறம் பிரச்னை ஆகிடும். 

என்னெல்லாமோ யோசித்து ஒண்ணுமே ஒர்கவுட் ஆகல ... சரி எப்படியும் பார்த்து விடலாம் அப்போ ஏதாவது கொடுத்தா நல்லா இருக்குமே. சரி கடைக்கு போலாம்னு நடைய கட்டிட்டு சும்மா போகல  போற வழியெல்லாம் யோசித்துகிட்டே  கிபிட் கடை பக்கமா  போயிட்டு இருந்தேன் ,சரி கிப்ட் பார்க்கலாம்னு கடைக்கு உள்ள ஏறியாச்சு . அந்த வழியில பாக்கத்து கடைக்கு வந்த ஒரு நபர் ஏதோ சொல்லி கொண்டிருந்தார். என்ன தான்னு காதை கொஞ்சமா நீட்டினா........... மனுசங்க போலவா இருக்காங்க படிக்க போன்னு வீட்டிலேருந்து அனுப்பினா இவனுங்க கார்டு வாங்க வந்திருக்காங்க. பெண்ணுங்க என்ன பெண்ணு போலையா வளருதுக அப்படி திட்டுறாரு.  அப்படியே அக்கம் பக்கம் பார்த்தேன் நிறைய ஆட்கள் நின்னாங்க மகளிரும் கார்டு பாக்க நின்னாங்க . சரி விடு   விடு ...... எல்லோரையும் சேர்த்து தானே திட்டுறாரு அப்படி மனசுக்குள்ள நினைத்து கொண்டே கார்டு பார்க்க கடைக்கு உள்ளே சென்றேன்.  

எனக்கு பிடித்த மாதிரி பளிச்சினு ஒரு கார்டு பார்த்தேன். அதை எடுத்து விட்டு காசு கொடுத்து வெளியில் வந்தேன். திடீர்னு மீண்டும் ஒரு ஞானோதயம் வந்தது அது தாங்க பைவ்  ஸ்டார் சாக்லேட் வாங்கலாம்னு.  சரின்னு கடைக்கு போய் பெரிய சக்லேட்டா தாங்கன்னு கேட்டு ஒரு முக்கால் அடி நீளத்தில  ஒரு பைவ்  ஸ்டார் சாக்லேட் வாங்கிட்டேன்.   இரண்டையும் பைக்குள்ளே போட்டு வீட்டுக்கு பஸ்ஸில ஏறி போயிட்டேன்.  பஸ்ஸில இருந்த ஒவ்வெரு நிமிடமும் கண்களுக்கு முன்னால் காதலியும் மனதிற்குள்ளே நாளைய தினத்தையும் பற்றிய எண்ணங்களும் தான் வந்து கொண்டிருந்தது. என்னவோ தெரிய வில்லை ஒரு வித பதட்டம் எனக்குள்ளே இருந்தது. 

வீட்டிற்கு வந்ததும் பையை திறந்து சாக்லேட் பத்திரமாக இருக்கிறதா என பார்த்து கொண்டேன் . இதே போல் ஒவ்வெரு அரை மணி நேரத்திற்கும் பார்த்து கொண்டேன். கிப்ட் கார்டை எடுத்து என் பெயரோடு அவள் பெயரும் எழுதி என் இதயத்தோடு கலந்த காதல் வார்த்தைகளையும் எழுதினேன் . என்னதான் எழுதி சாக்லேட் வாங்கினாலும் தூங்க படுத்தால் தூக்கம் வரவில்லை. நாளை எப்படி இதையெல்லாம் கொடுப்பது ..? எப்படி அவளிடம் பேசுவது ..? குறைந்த பட்சம் ஐ லவ் யு ஆவது சொல்லியாக வேண்டுமே என்று நினைத்தே தூக்கம் வரவில்லை. 

தினமும் கல்லூரிக்கு செல்வதை போல் காலையில் சென்று விட்டேன். நான் செல்லும் பஸ்ஸில் தான் அவளும் வருவாள். நான் பஸ்ஸில் ஏறி முன் பக்க கதவில் தொங்கி கொண்டிருந்தேன். அவள் ஏறும் இடம் பஸ்வந்தது. ஓ ............. மிஸ்ஸிங் தினமும் அதே பஸ்ஸில் வருபவள் இன்று காணவில்லையே சொல்ல முடியாத பதட்டம் ........ ஏன் ? எதனால ? இது தான் என் முன்னால் வந்து கொண்டே இருந்தது.  ஒரு புறம் பதட்டம் ஒரு புறம் ஏமாற்றம் வகுப்பிற்கு போக மனம் வரவில்லை. அப்புறம் என்ன பண்றது இனி சாயங்காலம் வந்தா தான் உண்டு. அது வரை நேரத்தை கடத்த சினிமா பார்க்க சென்றிருந்தேன் . என்ன சினிமா பார்த்தேன் என்பதே தெரிய வில்லை. தினமும் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பாஸ் ஸ்டான்ட் வந்து விட்டேன். 

பெரிய ஆச்சரியம் எல்லா நாளும் காவல் துறையினர் நான்கு ஐந்து பேராவது நிற்பாங்க இன்னைக்கு யாருமே இல்லை. மனசுக்குள் ஒரு வித மகிழ்ச்சி பயப்படாம காதலை சொல்லலாம் .  தினமும் வரும் நேரத்திற்கு அவள் வந்து விட்டாள். எனக்கு உடம்பெல்லாம் வியர்த்து. மனசுக்குள் இருந்த பதட்டம் வெளியே தெரிய தொடங்கியது. அவளை பார்த்தேன் அவளும் பார்த்தாள் ஆனால் எந்த வித மாற்றமும் இல்லை. கையில் கார்டும் சகேல்ட்டுமாக எளிதாக எடுத்து கொடுக்கும் வண்ணம் வைத்திருந்தேன். அவளை பார்த்து கொண்டே இருந்தேன் , அவள் வேறு பக்கம் பார்க்கும் போது நானும் அந்த பக்கம் சென்று விடுவேன் . வீட்டிற்கு செல்ல வேண்டிய பஸ் வந்தது.  கையில் இருந்த பையால் எனக்கு ஒரு இருக்கையும் அவளுக்கு பாட புத்தகத்தால் முன் பக்கம் ஒரு இருக்கையும் சேர்த்து புக் பண்ணி விட்டேன். இல்லைஎன்றால் நிற்க வேண்டியது தான்.     

நான் ஏறி விட்டு அவள் என் முன்னால் வந்து உட்காருவாள் என நினைத்தேன் ஆனால் அவள் முன் வாசல் பக்கம் உள்ள இருக்கையில் உட்கார்ந்தாள். எல்லாமே போச்சி வாங்கின சாக்லேட், கார்டு    எதுவும் கொடுக்க முடியாது ...... இருந்தாலும் மனசு தளரல இருக்கையை விட்டு சாக்லேட்டை எடுத்து முன் பக்க வாசல் சென்று அவளின் இருக்கை  பக்கம் சாக்லேட்டை வைத்து விட்டேன். அதை கவனித்து கொண்டே இருந்தேன் எடுகிறாளா...என்று . அவள் இறங்க வேண்டிய இடம் வந்தது உற்று பார்த்தேன் ..................................... நான் எந்த இடத்தில் வைத்தேனோ அதே இடத்தில சாக்லேட் எந்த சேதாரமும் இல்லாமல் இருந்தது ....  அந்த நேரம் ............?  

அவள் இறங்கிய பின்னர் வைத்த இடத்திலிருந்து சாக்லேட்டை எடுத்து விட்டு ஒரு வித ஏமாற்றத்தோடு வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தேன் ...

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் !  
  
Read More

Friday

காதல் என்ன மனசுக்குள் பூட்டி வைக்கும் பூச்செடியா?

இருதலை காதல் , ஒரு தலை காதல் ,கள்ள காதல் என காதல் வரிசை நீண்டு கொண்டே செல்கிறது. சிலர் காதலை மனசுக்குள் பூட்டி வைக்கின்றனர் சிலர் காதலை வெளிப்படையாக சொல்லி விடுகின்றனர் . ஆண்கள் பொதுவாகவே காதலை மறைப்பதில்லை. பெண்கள் காதலில் காதலிக்கும் வரை வெளிப்படையாக இருப்பதில்லை. 
 
காதலிப்பவர்கள் தங்களுக்குள் சொல்லி கொள்வதெல்லாம் காதல் ஒரு மனசு சம்மந்த பட்டது . மனசும் மனசும் உரசும் போது காதல் ஏற்படுகிறது. பொய்யாக ஒரு மனசை ஏற்படுத்தி தங்கள் எதிர்பார்ப்பை தீர்த்து கொள்வது தான் காதல். இந்த காதல் எந்த வயசிலும் எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வரும் . ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் எந்த காதலும் உருவாவதில்லை. 
சிறு வயதில் காதலிக்கிறார்கள் என்றால் ஒரு வித ஏக்கம் நாமும் காதலிக்க வேண்டும் என்ற தவிப்பு . இவைகள் புற சூழ்நிலைகளை பொறுத்து ஏற்படுகிறது . குறிப்பாக அன்றாடம் தங்களை சுற்றி நடைபெறும்  செயல் பாடுகள் இவர்களுக்குள்ளும் ஒரு எதிர் பார்ப்பை ஏற்படுத்தி விடலாம் . ஒரு வயது தாண்டி வாழ்க்கையை பற்றி சிந்திக்க துவங்குகிறவர்கள்   இவன் அல்லது இவள் தங்கள் வாழ்க்கைக்கு துணையாக இருந்தால் நம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற ஒரு வித எதிர்பார்ப்பு.

இவை அனைத்திலும் மனித உணர்சிகள முக்கியமாக இடத்தை வகிக்கிறது காமம் என்ற உணர்ச்சி மட்டும் இல்லைஎன்றால் கணவன் மனைவி என்ற உறவே இருந்திருக்காது. கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிக பட இந்த உணர்சிகள் பயன் படுகிறது . காதலன் காதலிக்குள் அன்பு பெருகிடவும் இந்த உணர்சிகள் பயன் படுகிறது. உடலில் உரைக்கும் ஹார்மோன்களின் அளவை பொறுத்து உணர்சிகளும் வேறு படுகிறது. மனசு என்பது நம்மை கட்டு படுத்தவும் நம் உணர்சிகளை தூண்டவும் சில நேரங்களில் பயன் படும் . ஆனால் காதல் ஏற்படுவதற்கு மனசு தேவையில்லை. 

சில நேரங்களில் திருமணம் ஆனவர்களுக்கு கூட மற்றவர்கள் மீது ஒரு வித காதல் ஏற்படும். இதை சமூக பார்வையில் கள்ள காதல் என்றே சொல்லுகிறோம் . பண்பாடு கலாசாரம் இவற்றில் சிறந்தவர்களாக நம்மை சொல்லி கொள்ளும் நம் நாட்டில் தான் இந்த வகையான கள்ள காதல்கள் அதிகமாக இருக்கின்றன. கள்ள காதல்கள் கடைசியில் விபரீதங்களில் முடிந்தும் இருக்கிறது.      

இங்கே காதல் தோல்வி வெற்றி என்பது திருமணத்தில் மட்டுமல்லாது எந்த எதிர்பார்ப்போடு காதலிப்பார்களோ அந்த எதிர்பார்ப்புகளில் அடங்கி இருக்கிறது. காதலித்த பின்னர் காதலை தொடருவதற்கு மனம் பயன் படலாம். காதலிக்கும் முன்னர் எதிர்பார்ப்புகள் தான் முன்னணியில் நிற்கின்றன. ஒரு தலை காதலில் சிலர் தங்கள் காதலை சொல்லாமல் மனசுக்குள்ளே வைத்திருப்பார்கள். சொன்னால் காதலை ஏற்று கொள்வார்களோ இல்லையோ என்பதாலும் சொல்லி விட்டால் மேற்கொண்டு எதாவது பிரச்சனைகள் வந்து விடுமோ என்ற எண்ணங்களாலும் சொல்லாமல் ஒரு தலை காதலில் இருக்கலாம். காதலை மனசுக்குள் பூட்டி வைத்தால் அது பூச்செடி ஆகாது மாறாக அரளி செடியாக ஆகி விடும். சொல்ல வேண்டியதை சொல்லி விட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறலாம் இல்லை எதிர்பார்ப்புகள் குறையலாம் எதிர்பார்ப்புகள குறைந்து விட்டால் காதலும் குறையலாம். 

காதலர்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ் : காதலிக்கும் முன்னர் எதிர்பார்ப்புகளை கூட்டுங்கள் காதலித்த பின்னர் எதிர்பார்ப்புகளை குறையுங்கள் வாழ்க்கை வசந்த மாகும் .     
Read More

Monday

காதலிக்கும் முன்னும் காதலித்த பின்னும்

வாழ்கையில் காதல் ஒரு இனிமையானது சோகங்களும் சுமைகளும் சுகமாவது காதலில் மட்டுமாகத்தான் இருக்க முடியும் . ஒரு வயதை தாண்டி விட்டால் தானாகவே காதல் ஏற்பட்டு விடுகிறது மனிதர்களுக்கு . எந்த ஒரு ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காதலித்திருக்க வேண்டும் அல்லது காதலிக்கப்பட்டிருக்க வேண்டும் .

காதல் தோல்வியில் முடிந்தவர்களும் உண்டு வெற்றியில் முடிந்தவர்களும் உண்டு . காதல் குடும்ப உறவுக்கு வந்த பின்னர் தோல்வியடைந்தவர்களும் உண்டு .பொதுவாகவே காதல் வெற்றியில் செல்கிறதா இல்லை தோல்வியில் செல்கிறதா என்பது ஒரு சாராரை பொறுத்ததில்லை இரு சாராரையும் பொறுத்தது . காதலிக்கும் முன் இவர்களின் மனநிலை எப்படி இருக்கும் காதலித்த பின் எப்படி இருக்கும் என்று பார்த்தல் மிகவும் சுவராஸ்யமாக இருக்கும் .

காதலிக்கும் முன் ஆண் பெண்ணை துரத்தி துரத்தி காதலிப்பார் . ஆனால் பெண்ணோ காதலித்த பின்னர் அந்த ஆணை துரத்தி துரத்தி காதலிப்பார் . ஆணின் மனநிலை எப்போதுமே அந்த பெண்ணை காதலிக்க வேண்டும் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருப்பார் . ஆனால் பெண்ணிற்கோ காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தாலும் வெளியில் காட்டாமல் ஆணை ஓட விட்டு கொண்டேயிருப்பார் . பெண்ணை காதலிக்க வைக்கும் வரை எவ்வளவு ஓட விட்டாலும் சலிக்கவே செய்யாது.

அந்த பெண் காதலை சொன்ன பின்னர் தான் பெண் அந்த ஆணை அதிகமாக காதலிக்க தொடங்குகிறார் . அதை விட முன்னர் எதையெல்லாம் தூரத்தில் இருந்த போது ரசித்தாளோ  அதையெல்லாம் பக்கத்தில் இருந்து ரசிக்க நினைப்பாள். தன்  காதலன் காதலிக்க துரத்திய போது எப்படி இருந்தாரோ அதே போல் இருக்க வேண்டும் என நினைப்பாள் . காதலனோ காதலியிடம் முன்னர் ரசித்த கோபம் குறும்புகளை பார்த்தல் கோபம் வரும் .

காதலிக்க முன்னர் இருந்தது காதலித்த பின்னர் தலைகீழாக மாறிவிடும் . இந்த நேரத்தை அவர்கள் தவறவிடும் போது காதல் தோல்வியில் கூட முடியும் . இருவருக்குமே அவர்கள் பக்கம் நியாயமாக இருக்கும் . பெண்ணுக்கு அவன் மாறிவிட்டான் அவன் என்னை இப்போது காதலிக்கவில்லை என எண்ண தோன்றும் . ஆணுக்கோ இப்பவும் அவள் நான் சொல்வதை கேட்க மாட்டேங்கிறா பழைய போலவே இருக்கிறாள் என எண்ண தோன்றும் . இந்த நேரத்தில் தான் காதலர்கள் விட்டு கொடுத்து யதார்த்தத்தை புரிந்து செயல் பட்டால் தான் காதல் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்லும் .
Read More

Send your Status to your Facebook