இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Friday
அரசனை நம்பி புருசனை கைவிட்ட திமுக
பதவி சுகங்களை தவிர மக்கள் நலனில் சிறிதும் அக்கறையற்ற ஒரு ஆட்சி இன்று மக்களால் புறக்கணிக்க கூடியதாக இருக்கிறது . ராஜாவின் ஊழலால் ஓட்டு மொத்த தமிழகமே தலை குனிய வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசோ இத்தனை நாளும் கலைஞரால் என்ன சாதிக்க முடியுமோ அதை சத்தமின்றி நாய்க்கு பிஸ்கட் கொடுத்தது மாதிரி மந்திரி பதவிகளை கொடுத்து விட்டு காரியத்தை சாதித்து விட்டார் . எல்லாம் முடிந்த பின்னர் ராஜாவையும் கழற்றி விட்டு விட்டார் . இன்று கலைஞரின் ஒரே நினைவுகள் காங்கிரஸ் நம்மை விட்டு பிரிந்து விடுமோ ? என்பது தான் அதை தான் செல்லுமிடமெல்லாம் தன் ஏக்கங்களை பதிவு செய்து கொள்கிறார் . மக்கள் மீது அக்கறையின்றி நடக்கும் இந்த அரசு அரசனை நம்பி புருசனை கை விட்ட கதை போலாகி விட்டது .
நாடகமாடியே கல்லறைக்கு அனுப்பினாயே தமிழினத்தை

- ஒரு புறம் இலவசங்களை கொடுத்து ஏழை மக்களை பிச்சை காரர்காளாக்கி தமிழினத்தின் தன்மானத்தை இழக்க செய்தாய் .
- நான்கு மணிநேரம்உண்ணாவிரதமிருந்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொலை செய்தாய் .
- தேர்தல் முடியட்டும் பார்க்கலாம் என்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தையே குடி கானல் நீர் திட்டமாக்கினாய்
- நிர்வாக திறமையின்மையால் முல்லை பெரியாறில் தமிழன் உரிமையை அடகு வைத்தாய்
- மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை அப்புறம் எதற்கு வழக்கு என்றாய் , மத்திய அமைச்சரே உன் கன்னத்தில் அறைந்தது போல் அனுமதி கொடுத்திருக்கிறோம் என்ற பின்பு உச்சநீதி மன்றம் சென்று வழக்கு நடத்த தெரியாமல் தோல்வி கொண்டாயே .
- பதவியே வேண்டாம் என்று சமூக சீர்திருத்தங்களை உருவாகிய ஈவேரா பெரியார் வழி வந்தவன் என்று சொல்லியே பாக்கியே இல்லாமல் கட்சி முதல் ஆட்சி வரை குடும்பத்திற்கு பிரித்து கொடுத்திருக்கிறாயே .
- தானே விருதுகள் அறிவித்து தானே வாங்கி கொள்வது என்ன நியாயமோ ?
- அது மட்டுமா தமிழக அரசு விருது மாற்ற ஒருவருக்கு போக விடாமல் எடுத்து கொள்ள மனம் தான் எப்படி வருகிறதோ ?
கலைஞரின் அயராத உழைப்பிற்கு மீண்டும் ஒரு விருது
கோவில் படத்தில் வடிவேல் ஊரில் நானும் ரவுடி தான் என்று சொல்லி ஒவ்வெரு போட்டியாக பங்கு பெற்று அதில் தோற்று போய் விடுவார் . பின்னர் கடைக்கு சென்று நல்ல வெற்றி கோப்பையாக வாங்கி நான்கு பேரோடு ஊர்வலம் வருவார் நான் வெற்றி பெற்று விட்டேன் என . ஆனால் கலைஞரோ கொஞ்சம் வித்தியாசம் . ஏற்கனவே பல நூறு டாக்டர் பட்டங்கள் கையில் இருக்கிறது . அதே போல் அவருடைய சகாக்கள் மூலமாக அவர் வாங்கி கொண்ட விருதுகள் பல இருந்தாலும் விருது வாங்குவதில் அவரை போல் மகிழ்ச்சியடைய வேறு யாரும் இருக்க முடியாது .
நல்ல தலைவருக்கு எது அழகு மற்றவர்களை வளர்க்க வேண்டும் . நமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் . வளரும் தலைமுறையினருக்கு விருதுகள் கொடுத்து அவர்களை உற்சாக படுத்த வேண்டும் என தான் நினைப்பார்கள் . ஆனால் இவருக்கு மட்டும் என்ன சந்தோசமோ தானே விருதுகள் எல்லாவற்றையும் வைத்து கொள்வதில் . அண்ணா நூற்றாண்டு விழா துவக்கத்தில் ஒரு அண்ணா விருது , இப்போது ஒரு அண்ணா விருது என இரண்டு அண்ணா விருதுகள் ஆகி விட்டது . இப்படி அவங்களாகவே ஒரு அரக்கட்டலைய துவக்கி அவங்களுக்கே விருது கொடுப்பதை உலகத்திலே முதன் முதலா இங்க தான் பார்கிறேன் .
இந்த அண்ணா விருதை மற்ற்வார்களுக்கு கொடுக்கும் பொது கிடைக்கும் சந்தோசம் தெரியாதவராகவே வாழ்கிறார் கலைஞர் . ஏற்கனவே அண்ணாவிடம் மோதிரத்தை வாங்கி கொடுத்து தன் கையில் போட்டு விட வேண்டும் என்று சொல்லி போட்டு கொண்டவர் தான் என்று சொல்வதை நம்பாமல் இருக்க முடியாது . அதைவிட மிக பெரிய கேவலம் தமிழக அரசு கொடுக்கும் சினிமா விருதுகளை கூட தனக்கே வாங்கி கொண்டார் . அந்த விருதை வேறு ஒரு இளைய தலைமுறைக்கு கொடுத்தால் அந்த தலைமுறை எவ்வளவு உற்சாகமாக இருக்கும் .

மேற் சொன்ன விருதுகள் அனைத்துமே அவராலும் அவர் சகாக்களாலும் கொடுக்க பட்டது இனி அப்படி ஏதும் இல்லாமல் வலையுலகில் கொடுக்க படுகிற அனைத்து விருதுகளிலும் ஓன்று வலைப்பதிவாளர்கள் சார்பாக கொடுக்க பட வேண்டும் என அன்போடு கேட்டு கொள்கிறேன் . அதை துவக்கி வைக்கும் விதமாக சிறந்த வலை பதிவர் விருதை கொடுக்கிறேன் .
குறிப்பு : யாரும் கலைஞர் வலை பதிவு எழுதவில்லையே அப்புறம் எதுக்கு விருது என்று கேட்க கூடாது
பாட்ஷா பட ஸ்டைலில் கருணாநிதி
தமிழக முதலமைச்சர் கருணாநிதி
தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் ( கருணாநிதி மகன் )
மத்திய ஜவுளி துறை அமைச்சர் தயாநிதி மாறன் ( கருணாநிதியின் பேரன் )
மத்திய உரம் மற்றும் ரசாயன துறை அமைச்சர் அழகிரி ( கருணாநிதியின் இன்னொரு மகன் )
மேல்சபை எம்பி கனி மொழி ( கருணாநிதியின் இன்னொரு மனைவியின் மன்னிக்கவும் துணைவியாரின் மகள் )
பாட்ஷா படத்தில ரஜினி தன் தந்தையின் இறுதி ஆசைக்கு இணங்க தம்பி தங்கைகளை நல்ல நிலையில் கொண்டு வந்து ஒவ்வெரு விளக்காக பற்ற வைப்பார் . அது தான் நினைவுக்கு வருகிறது கருணாநிதி குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி கொடுப்பது .
ஆரிய திராவிட போராட்டம் மீண்டும் துவங்க வேண்டும் என்று கருணாநிதி சொன்னது எதற்கு என்பது இப்ப தான் தெரியுது . பழைய காலங்களில் பார்பனர்கள் திராவிடர்களை அடிமையாக்கி வைத்து கொண்டதை போல் இப்போது கருணாநிதி உடன்பிறப்புகளை அடிமையாக்கி கொண்டார் . இனி உடன்பிறப்புகள் காலம் காலமாக கருணாநிதியின் குடும்பத்துக்கு உழைத்து கொடுக்க வேண்டியது தான் .
நாயை கொண்டு நடுகடலில் விட்டாலும் அது நக்கி தான் தண்ணி குடிக்குமாம் அதை சரியாக புரிந்து கொண்டவர் தான் கருணாநிதி .
சோனியாவே கருணாநிதிக்கே அல்வாவா ?
பொதுவாகவே கருணாநிதி தன்னுடைய சுயமரியாதையை இழந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது . . கடந்த முறை வாங்கிய தொகுதிகளை விட இந்த முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெறுகிறோமே என்று வீராப்புடன் நீண்ட விமானத்தில போனவர் ................................................? இப்போ .இத்தாலியில் பிறந்த பெண்மணியால் அவமான பட்டு திரும்பி வந்தது தான் மிச்சம். இலங்கை தீவிலே ஈழ தமிழர்கள் சிங்கள அரசால் இன படுகொலை செய்யப்படும் போது தடுக்க முடியாத ( முயற்சிக்காத ) கருணா . சிங்கள இனவெறி அரசு நடத்தும் இன படுகொலைக்கு துணை போகும் காங்கிரஸ் தலைவி சோனியாவிடம் அதை பற்றி பேச டில்லிக்கு செல்லாத கருணா . தன்னுடைய மகனுக்கும் பேரனுக்கும் மந்திரி பதவி வேண்டுமென்று நடக்க முடியாத வயசிலும் டில்லிக்கு சென்றார் .
கடந்த முறை ஊழலின் மூலம் கிடைத்த கோடிகணக்கான பணத்தின் மூலம் மக்களின் எண்ணங்களுக்கு மாறாக வாக்குகளை பெற்று கொண்டு மீண்டும் கொள்ளையடிக்க பதவி பேரம் பேச சென்றார் . கடந்த முறை ஊழல் மந்திரியாக இருந்த டி ஆர . பாலு , டி . ராசா , மற்றும் மதுரை ரவுடியும் தன்னுடைய மகனுமான அழகிரிக்கும் மந்திரி பதவி தர முடியாது என்று சொன்னவுடன் ஆடி போயிட்டாராம் . அது மட்டுமல்லாது கடந்த முறையை விட நாங்கள் (காங்கிரஸ் )அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம் எனவே இந்த முறை மொத்தம் நான்கு மந்திரி பதவி தான் தர முடியும் என்றும் சொல்லி விட்டார்களாம் . அந்த வெறுப்பில் இப்போது வெளியிலிருந்து ஆதரவளிக்க முடிவு பண்ணி விட்டாராம் . இல்லையென்றால் மாநில முதல்வர் பதவியும் பறிபோய்விடுமாம் .
ஈழ தமிழகளின் ரத்தங்களை பார்த்து மகிழ்ந்த போது கூடவே இருந்து சோனியாவுக்கு விசிறியால் வீசி கொடுத்த கருணாநிதிக்கு சோனியா கொடுத்த பரிசு தான் அல்வா .இருந்தாலும் தமிழக மக்களுக்கே அல்வா கொடுத்த கருணாநிதிக்கே சோனியா அல்வாவா ?
Monday
நேற்றைய கூட்டத்தில் பேசிய கருணாநிதியிடம் ஒரு கேள்வி ?
நமது கேள்வி : அமைதி புறாவாக வலம் வந்த தமிழ் செல்வனை சிங்கள இனவெறி அரசு கொலை செய்த போது சென்னையில் இரங்கல் ஊர்வலம் நடத்திய வைகோ , பழ.நெடுமாறன் மற்றும் தொண்டர்களையும் நீங்கள் எதற்காக கைது செய்தீர்கள்?
மருத்துவமனையில் இருக்கும் போது தமிழ் ஈழம் என்று ஏதோ சொன்ன மாதிரி இருந்திச்சி நேற்று ஏன் அத பற்றி வாய் திறக்கவில்லை சோனியாவ பார்த்து பயமா
Friday
உயிரினும் மேலான உடன் பிறப்பே
இத்தனை நாளும் உடன்பிறப்பாய் இருந்து விட்டோம் ஈழ தமிழர்களுக்காக மட்டும் எப்படி அதிமுகவை ஆதரிப்பது என்பது போல எழுதியும் பேசியும் வருகின்றனர் . அப்படி அவர்கள் எழுதுவதால் இன அழிப்பை ஊக்குவிக்கிறோம் என்பது ஏனோ அவர்களுக்கு தெரியவில்லை . (தெரியவில்லை என்பதை விட தெரியாததை போல் நடிக்கிறார்கள் )
ஜெயலலிதா பல ஆண்டுகளாக விடுதலை புலிகளுக்கு எதிராகவே இருந்தார் உண்மை தான் . ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் இந்த அளவிற்கு ஒரு இனபடுகொலையை இந்தியாவும் சரி காங்கிரஸ் கட்சியும் நடத்தவில்லை . ஆனால் இப்போது நடப்பது என்ன ? தமிழின அழிப்பில் காங்கிரஸ் கட்சி படு வேகமாக செயல் படுகிறது . திமுகவின் சம்மதம் பெறாமல் இந்த அளவிற்கு துணிந்து காங்கிரஸ் கட்சி செயல் படாது .
நீங்கள் சொல்வதை போல் திமுகவின் சம்மதம் பெறாமல் தான் காங்கிரஸ் கட்சி இன அழிப்பில் ஈடுபடுகிறது என்றால் அதை தடுக்க கருணாநிதி எடுத்துக்கொண்ட முயற்சி என்ன ? கலைஞருக்கு தெரியும் ஈழ தமிழர்களுக்காக பதவி போனால் மக்கள் மீண்டும் பதவியை தருவார்கள் என்பது . அப்படி இருந்தும் ஏன் செய்யவில்லை செய்ய மனமில்லை . விடுதலை புலிகளுக்கு எதிரான நிலைப்பாடு காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் உண்டு திமுகவிற்கு (கருணாநிதி மற்றும் கண்மூடித்தனமாக கருணாநிதியை இப்போதும் பின்பற்றுபவர்கள் ) இல்லை என்று நினைப்பீர்களானால் அவர்களை போல் முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது .
கருணாநிதி மற்றும் சோனியாவின் திட்டமிடலில் தான் இந்த இன அழிப்பே நடக்கிறது . கருணாநிதியின் எண்ணம் நாம் மீண்டும் கவிதை கடிதம் எழுதி மக்களை ஏமாற்றி விடலாம் என்பது தான் . ஜெயலலிதா இன்று தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறார் என்பதற்காக மட்டும் ஜெயலலிதாவை தமிழுணர்வாளர்கள் ஆதரிக்கவில்லை . இந்த முடிவை ஜெயலலிதா எடுக்கும் முன்னரே திமுக , காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக அதிமுகவை ஆதரிக்க தமிழுணர்வாளர்கள் முடிவெடுத்து விட்டனர் . ஜெயலலிதா தமிழ் ஈழம் தான் தீர்வு எம்று சொன்னது தமிழுணர்வாளர்களுக்கு ஒரு ஆறுதலும் மக்கள் எழுச்சிக்கு கிடைத்த வெற்றியும் தான் .
இன்றைய திமுக அண்ணா துவங்கிய திமுக அல்ல . அந்த நிலை மாறி பல ஆண்டுகள் கடந்து போயிற்று . திமுக துவங்கிய நோக்கம் சிதைந்து போய் பல நாட்களாயிற்று . அது ஒரு உணர்வற்ற கட்சியாக தான் இப்போது இருக்கிறது . அண்ணா துவங்கிய திமுகவையும் கொள்கைகளையும் இப்போதும் கட்டி காத்து வருவது வைகோவும் மதிமுகவும் தான் . இத்தனை நாளும் தமிழை சொல்லி ஏமாற்றி வந்தார் கருணாநிதி . ஆனால் அடுத்த கட்டத்தில் தமிழ் என்ற வார்த்தை சொன்னாலே என்ன விலை என்று கேட்கும் தலைவர்கள் தான் இருக்கிறார்கள் (மகனாக இருந்தால் கூட ) கருணாநிதியின் திமுகவில் .
இன்றைய ஈழ மக்களின் இத்தனை அவலங்களுக்கு காரணம் திமுகவே . இந்த தேர்தல் தமிழர்களுக்கு எதிராக நாளை எந்த ஒரு அரசியல் கட்சியும் முடிவெடுக்காமல் இருக்க நாம் திமுக கூட்டணியை ஒட்டு மொத்தமாக தோற்கடித்தாக வேண்டும் . சிலர் இப்போதும் கேட்கிறார்கள் திமுக தோற்றால் வெற்றி பெறுவது அதிமுக அல்லவா . ஆம் திமுக காங்கிரஸ் கூட்டணி தோற்க வேண்டுமென்றால் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் . இது காலத்தின் கட்டாயம் .
தேர்தல் தேதி நெருங்கும் வேளையிலும் வைகோ , ராமதாஸ் ஆகியோர் மாற்று கூட்டணி காணாமல் விட்டது தவறு என்று பேசும் உடன்பிறப்புகளும் இருக்கிறார்கள் . அவர்களுக்கு ஓன்று மட்டும் சொல்லி கொள்கிறேன் . அப்படி ஒரு கூட்டணி வந்திருந்தால் கூட அது தமிழர் விரோத கூட்டணிக்கு தான் சாதகமாக போயிருக்கும் . அப்படி ஒரு நிலை ஏற்படவில்லையே என்ற ஆதங்கமும் நடுநிலையான உடன்பிறப்புகளிடம் காணப்படுகிறது .
குழப்பமின்றி வாக்களிப்போம் திமுக காங்கிரஸ் கூட்டணியை வேரறுப்போம் . தமிழினத்தின் வலிமையை காட்டுவோம் .
Thursday
கருணாநிதிக்கு தொற்றிக்கொண்ட தேர்தல் வியாதி
திடீர் பஸ் கட்டணம் குறைப்பு
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் கட்சிகள் அனைத்தும் ராக்கெட் வேகத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றன . ஒவ்வெரு கட்சிகளும் வெற்றி பெற்றால் என்ன செய்வேன் என்றும் முன்னர் என்ன செய்தேன் என்றும் மக்கள் மத்தியில் விளக்கி பிரசாரங்களை ஏற்படுத்தி வருகின்றன .
எல்லா தேர்தலையும் விட இந்த தேர்தலில் முக்கியமான பிரச்சனையாக ஈழ தமிழர்களின் பிரச்னை மாறியுள்ளது இதை கொஞ்சமும் எதிர் பார்த்திராத திமுக ஈழ தமிழர்கள் விசயத்தில் கண்டு கொள்ளாமலே இருந்து வந்தது . ஈழ தமிழர்களுக்காக பல போராட்டங்களை நடத்தியும் மத்திய காங்கிரஸ் அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாறாக சிங்கள அரசுக்கு ஆய்தம் மற்றும் ஆளணி உதவிகளை வழங்கியது . இது தமிழக மக்கள் மத்தியிலே மிக பெரிய கோபத்தை உண்டு பண்ணியது .
தமிழகத்தில் இதுவரை 14 பேர் தங்கள் உடலையே தீயிட்டு ஈழ தமிழர்களுக்காக மடிந்தனர் . முதலில் தீயிட்டு மடிந்த முத்துக்குமார் மாணவர்கள் இளைஞர்கள் உணர்ச்சிகளை தட்டி எழுப்பி தமிழகத்தில் ஒரு மிக பெரிய எழுச்சியை உருவாக்கி வீர காவியமானார் . மக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர் மத்திய மாநில அரசுகளோ மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதை விட்டு விட்டு போராட்டங்களை சட்டத்தின் மூலம் அடக்க பார்த்து . அதன் மூலம் இயக்குனர் சீமான் , கொளத்தூர் மணி , நாஞ்சில் சம்பத் போன்றோர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தது . நீதிமன்றம் அவர்கள் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தது .
பொதுவாகவே திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும் தான் தமிழர்கள் என்பது போல் உரிமை கொண்டாடி வருவார்கள் . சோனியா காந்தியின் காங்கிரஸ் அரசு ஈழ தமிழர் படுகொலையை முன்நின்று நடத்துவதை தடுக்க தவறி விட்டார் கருணாநிதி . இதையடுத்து மக்கள் மத்தியில் எழுந்த கோபத்தை தணிக்க அவருக்கே உரித்தான பாணியில் மூன்று மணி நேர உண்ணாவிரதம் அரை மணி நேர போர் நிறுத்தம் என்று பல நாடகங்கள் நடித்து பார்த்தார் ஆனால் எந்த நாடகமும் பலிக்காமல் போனது . இந்த நிலையில் ஈழ தமிழர்களின் வாழ் நாள் லட்சியமான தமிழ் ஈழத்திற்கு ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தது கருணாநிதிக்கு அடுத்த சாக்.
கடந்த முறை திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை போல் இந்த முறை அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெரும் சூழ்நிலை உருவாகியுள்ளது . தேர்தலில் இலங்கை பிரச்னை முக்கியமான பிரச்னை என்றாலும் மற்றும் விலை வாசி உயர்வு , மின்சார தட்டுபாடு போன்ற பல பிரச்சனைகள் திமுக கூட்டணக்கு எதிராகவே நிற்கிறது .
திமுக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் பேருந்து கட்டணத்தை எந்த ஒரு முன்னறிவிப்பின்றி உயர்த்தியது . முன்னர் இரண்டு ருபாய் என்றால் ஏழு ருபாய் அளவிற்கு உயர்த்தியது . இப்போது தேர்தலும் நெருங்கி விட்டது திமுக கூட்டணியின் தோல்வியும் உறுதி செய்யபட்டிருக்கும் இவ்வேளையில் என்ன செய்தாவது வெற்றி பெற வேண்டும் என்று திமுக நினைக்கிறது .
பொதுவாக தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் எந்த சலுகைகளும் கொடுக்க கூடாது என்பது தேர்தல் விதி . அதையும் மீறி கருனாநித்தி பேருந்து கட்டணித்தை குறைத்திருக்கிறது . இதை போல தான் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தினகரன் பத்திரிகை ஒரு ரூபாய்க்கு கொடுத்தார்கள் மாறன் குடும்பத்தினர் . தேர்தலும் முடிந்தது பத்திரிகை விலையும் கூடியது .
இந்த பேருந்து கட்டணம் கூட அதிகார பூர்வ குறைப்பு இல்லை . இந்த பதிமூன்று நாட்களுக்கும் கட்டண குறைப்பு நடைமுறையில் இருக்கும் என தெரிகிறது . ஆனால் இதையும் கருணாநிதி மக்கள் சிரிக்க வேண்டிய அளவிற்கு தான் செய்கிறார் . பொதுவாகவே நாம் தோற்க போகிறோம் என்று தெரிந்தால் நாம் என்ன செய்கிறோம் என்று தெரியாது . அதே போல தான் கருணாநிதி தோற்க போகிறோம் என்று தெரிந்தவுடன் திகைக்கிறார் என்ன செய்வது என்று தெரியாமல் அலைகிறார் .
இது தான் தேர்தல் வியாதியோ ?
Monday
தமிழினத்தை ஒட்டு மொத்தமாக முட்டாளாக்கிய கருணாநிதி
சன் டிவி , கலைஞர் டிவிகள் தினமும் ஒழிபரப்பும் தொடர்களை ஒழிபரப்பாமல் கலைஞரின் நாடகத்தை ஒழிபரப்பியது . காலையில் சாகும் வரை உண்ணாவிரதத்தை துவங்கினர் கருணாநிதி . இதில் உச்சகட்ட காமெடி என்னவென்றால் சேலத்தில் தங்கபாலு உண்ணாவிரதம் இருந்தது தான் . தமிழகம் முழுவதும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன . அங்கங்கே தொடர் போராட்டங்கள் நடத்தினர் உடன் பிறப்புகள் . யாரை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள் என்பது யாருக்குமே தெரியாது .
சுமார் நான்கு மணி நேரம் கடந்த பின்னர் இலங்கை போர் நிறுத்தம் அறிவித்தது எனவே நான் என்னுடைய உண்ணாவிரதத்தை முடித்து கொள்கிறேன் என அறிவித்து தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் கருணாநிதி . சரி போர் நிறுத்தம் வந்ததா என ஸ்ரீலங்கா செய்திகளை பார்த்தல் எங்கேயும் வரவில்லை . அதற்குள்ளாக கலைஞர் வாழ்க ! போர் நிறுத்தம் ஏற்படுத்திவிட்டார் என பதிவுலக நண்பர்களும் பதிவுகளை போட்டனர் . நானும் முதலில் ஏமாந்து விட்டது என்னவோ உண்மை தான் .
பின்னர் தான் ஸ்ரீலங்கா ராணுவம் அறிவித்தது கனரக ஆயுதங்களை நாங்கள் பயன் படுத்த மாட்டோம் என . சரியாக கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்து கொண்ட நேரத்தில் மக்கள் மீது ராணுவம் விமான தாக்குதலை நடத்தியது . போர் நிறுத்தமும் வரவில்லை கனரக ஆயுதம் பயன் படுத்துவதும் நிறுத்தவில்லை .
- மக்களை முட்டாள் ஆக்கி கருணாநிதியும் சோனியாவும் ராஜ பக்ஷேவுடன் கூட்டு சேர்ந்து மிக பெரிய தாக்குதலை நடத்தி முடிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது . இந்திய மீடியாக்களின் நடிகர் கருணாநதியின் காமெடியை போட்டு . தமிழ் ஈழத்திலே மிக பெரிய தாக்குதலை சோனியாவும் கருணாநிதியும் திட்டமிட்டு நடத்திய நாடகம் என்றே நினைக்க தோன்றுகிறது .
- உலக நாடுகள் அனைத்தும் இலங்கை அரசின் இனஅழிப்பை கண்டித்திருக்கும் வேளையில் உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பவும் இந்த நாடகம் நடைபெற்றிருக்கலாம் என கருத படுகிறது .
- நேற்று தமிழ் ஈழத்திற்கு ஆதரவளிப்பேன் என ஜெயலலிதா சொன்னதையடுத்து கருணாநிதி இந்த நாடகத்தை நடத்தியிருக்கலாம் .
மொத்தத்தில் கருணாநிதியின் நாடகத்தால் பாதிக்கப்படுவது தமிழ் மக்களே . தமிழினத்தை அதிகமாக சொந்தம் கொண்டாடிய காருனாநிதி இப்போது இவ்வளவு கேவலமாக தமிழினத்தின் இன அழிப்பிற்கு காரணமாகிவிட்டார் . மக்கள் விழிப்புடன் இருந்து இந்த துரோகிகளுக்கு தாக்க பாடம் புகட்டுவோம் .
சோனியா காந்தியை கண்டித்து தங்கபாலு உன்ன்னாவிரதம்
இதையடுத்து திமுக ஆதரவிலான மத்திய அரசு தான் இலங்கையில் போரை நடத்தி வருகிறது என தமிழ் இன ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர் . எப்போது தமிழகத்தில் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக எழுச்சி ஏற்படும் போதெல்லாம் அதை தேசிய பாதுகாப்பு சட்டம் , கைது , நாடகம் போன்றவற்றால் தடுத்து வந்தார் கருணாநிதி . இந்த நிலையில் தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக காங்கிரஸ் காட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட தயாராகிவிட்டனர் .
இந்த வேளையில் திடீரென கருணாநிதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை மத்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவை எதிர்த்தும் போர் நிறுத்தம் வலியுறுத்தியும் துவங்கி விட்டார் . இதையடுத்து தமிழகம் முழுவது உடன்பிறப்புகள் பஸ் மறியல் செய்து வருகின்றனர் . தமிழ்நாட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்தது .
திடீரென காங்கிரஸ் மாநில தலைவர் தங்கபாலு சோனியாவை எதிர்த்து சேலத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார் . தமிழகம் முழுவதும் சோனியாவுக்கு எதிராகவும் தமிழ் ஈழத்திற்கு ஆதரவான ஒரு நிலைப்பாடு தமிழக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது .
Thursday
அய்யா கலைஞர் அடுத்து எப்போ எதிர்பார்க்கலாம்
மூன்று நாட்களுக்கு முன்னர் தான் சின்னதா ஒரு காமெடி அடிச்சி அந்த சிரிப்பு அடங்கும் முன்னரே அடுத்த சிரிப்பு . நீங்க முன்னால எல்லாம் பல காமெடி அடிச்சிருந்தாலும் அப்போ உங்க உடன் பிறப்புகள் அத ஒரு சீரியஸ் மேட்டராக்கி கடைசிலா எல்லா படத்துல வடிவேலு அடிவாங்குற நிலைமையில் நீங்க ஆனீங்க அது என்னவோ உண்மை தான் . இப்போ தீடீர்னு வேலை நிறுத்தம் அறிவிச்சீங்க .
அது எப்படி தல நீங்க தான் தமிழகத்தில முதல்வர் காங்கிரஸ் கட்சி தான் மத்தியில ஆட்சி செய்கிறது . உங்ககிட்ட நாங்க போர் நிறுத்தம் கேட்டோம் நீங்க வேலை நிறுத்தம் செய்தீங்க . நீங்க அறிவிச்ச சில மணி நேரத்தில தங்கபாலுவும் ஆதரவு தந்தாரு . போர் நிறுத்தத்தில நடந்த கூத்த ஏற்கனவே பல பதிவர்கள் பதிந்து விட்டார்கள் .
நீங்க ஈழ தமிழர்களுக்காக வேலை நிறுத்தம் என்கிறீர்கள் உங்க மகன் ஸ்டாலின் சொல்றாரு ஈழ பிரச்னை ஒரு பிரச்சனையே இல்லை என்று .
யாருக்கு கோரிக்கை வச்சீங்க ? சிதம்பரம் வேற சொல்லியிருக்கிறார் இது மத்திய அரசுக்கு எதிராக இல்லை சும்மா வருத்தம் தெரிவிக்க தான் . நீங்களே ஆயுதம் கொடுத்து கொலை செய்து விட்டு வருத்தம் தெரிவிக்க விடுமுறை விட்டீங்களா ? எப்படி உங்களால இதெல்லாம் முடியுது . உங்களா மாதிரி ஒரு தலைவர் எங்களுக்கு கிடைக்க நாங்க பல புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் . வேறு எந்த இனத்திற்கும் இப்படி ஒரு தலைவர் கிடைக்க மாட்டாரு .
ஆமா இந்த காமெடிய நீங்க அடிக்கிறீங்களா இல்ல உங்கள வச்சி சோனியா காந்தி தான் காமெடி பண்ணுறாங்களா ? உன்ன்னாவிரதம் இருக்கும் பெண்களை மட்டும் அத்துமீறி உங்க காவல் துறைய வச்சி கைது செய்யும் நேரம் எப்படி உங்களுக்கு சுயநினைவிருக்கிறது . ஈழ போராட்டங்களைஎல்லாம் நல்ல விபரமாவே அடக்குறிங்களே அப்போ எல்லாம் நீங்க நல்லா தானே இருக்கீங்க இப்போ மட்டும் என்ன ஆச்சு .
ஓன்று மட்டும் புரிகிறது நீங்கள் காமெடி அடிக்கவில்லை . ஆனால் துரோகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்கள் அதை நேர்த்தியாக செய்கிறீர்கள் . கட்டபொம்மனுக்கு எட்டப்பன் எப்படியோ அதே போல் நீங்கள் தமிழ் இனத்திற்கும் தமிழ் ஈழ தேசிய தலைவருக்கும் . ஒரே வருத்தம் வரலாற்றில் நீங்கள் துரோகியாய் இடம் பிடிக்க போகிறீர்களே .
எப்படியோ காவல் துறையை வச்சி ஒரு போது வேலை நிறுத்தத்தை நடத்தி விட்டீர்கள் . அடுத்து எப்போ ..................................?
Tuesday
தமிழின விரோதிகளுக்கு கிடைத்த இரண்டாவது தோல்வி
தமிழகத்தில் ஈழ தமிழர்களுக்காக எழுந்த மக்கள் எழுச்சியை தடுக்கும் விதமாக சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சியும் கருணாநிதி தலைமையிலான அரசும் அரசு இயந்திரங்களை பயன் படுத்தி தமிழின உணர்வாளர்களை கைது செய்தது . இதையடுத்து தமிழின உணர்வாளர்கள் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை போராடினர் .

நாஞ்சில்சம்பத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தவுடன் மதிமுக பொதுச்செயலார் வைகோ அவர்கள் நானே நேரடியாக வாதாடுவேன் என சொல்லியிருந்தார் . அதே போல் வைகோவே நேரில் வாதாடினார் . இன்று இறுதி கட்ட விசாரணை நடைபெற்றது அதில் நாஞ்சில் சம்பத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது . அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார் .
ஏற்கனவே இயக்குனர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிட தக்கது .
தொடர்புடைய பதிவுகள்
நாஞ்சில் சம்பத் விடுதலை ஆவாரா ? வாதாடும் வைகோ
நாஞ்சில் சம்பத் சோனியாவை சேலை கட்டிய முசோலினி என்று பேசலாமா ?
Monday
கமெடியனான கருணாநிதி
ஆக மொத்தம் தீவிரவாதி இல்லை என்ற ஒரு நல்ல வார்த்தையை நேற்று சொன்ன மனுஷன் இன்று சொல்லுறாரு நான் அப்படி சொல்லவில்லை அதை திரித்து கூறி விட்டது NDTV . தமிழக மக்களுக்கு தெரியும் இவர் தேர்தலுக்காக சொல்லுறாரு என்று . ஆனால் அவரின் பேச்சு மத்திய காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்தது என்பது மட்டும் உண்மை .
அதுமட்டுமல்ல இவரு பிரபாகரன நண்பர் என்று சொல்ல இலங்கை அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கருணாநிதி என் நண்பர் அவரு எப்படி பிரபாகரனுக்கு நண்பரானார் என கேள்வி எழுப்புகிறார் .
டக்லஸ் சொல்றாரு கருணாநிதி சாணக்கியர் அவரு தேர்தலுக்கு காமெடி அடிக்கிறார் .
இப்படி ஒவ்வெரு ஆளா கலைஞர பிடிச்சி காமெடி அடிக்கிற வேளையில திடீர்னு இன்று ஒரு காமெடி நான் அப்படி சொல்லவில்லை எப்பவுமே NDTV திமுகவிற்கு எதிராதான் இருக்கும் .
இதில பெரிய காமெடி என்னனா கலைஞர் சொன்னத கேட்டு நேற்று பலர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணிலிருந்து கண்ணீரை இழந்தது தான் மிச்சம் .
இனி யாரும் வடிவேல் காமெடி வங்க கடைக்கு போக வேண்டாம் நம்ம ஊருக்கே வந்து கலைஞர் (வடிவேலுக்கு பதிலா )காமெடியடிப்பார் . ஒரே ஜாலி தான் தேர்தல் முடியும் வரை .
நேற்றைய பேட்டி
இன்றைய பேட்டி
Saturday
கருணா நிதிக்கு புலிகள் கொலை மிரட்டலா ?
முதல்வர் கருணாநிதிக்கு விடுதலை புலிகளின் பெயரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு வந்த இந்த கொலைமிரட்டல் கடிதத்தில் விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. | |
எவன் மேலயாவது பழி போட்டு அனுதாப ஒட்டு வாங்கனும் இசட் பிளஸ் பாதுகாப்பும் வாங்கணும் .
Wednesday
திரைக்கதைகளை பத்திரிக்கைகளுக்கு கொடுக்கும் கலைஞர் .
இரண்டு வாரத்திற்குள் போரை நிறுத்த வில்லை என்றால் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்களும் ராஜினமா செய்வோம் என்று முடிவு எடுக்கப்பட்டது . தமிழினத்திற்காக பதவி வெறி பிடித்த கருணாநிதி ராஜினமா செய்கிறாரா ? என அனைவரும் ஆச்சரிய பட்டனர் . என்றும் இல்லாத அளவு தமிழகத்தில் ஈழ அதரவு எழுச்சி ஏற்பட்டது .
இரண்டு வாரம் என்று நாள் கொடுத்து விட்டு மறுநாளே தனது மகளும் மேல்சபை எம்பியுமான கனிமொழி ராஜினமா கடிதம் கொடுத்தார் என பத்திரிகைகளில் செய்தி வந்தது . அனைவரும் மனதார பாராட்டினர் . கலைஞரின் குடும்பமே தமிழின மக்களுக்காக உழைக்கிறதே என்று புகழ்ந்தனர் . பின்னர் தான் தெரிந்தது ராஜினமா கடிதம் கொடுத்தது தன் தந்தையிடமென்று.
புகழ் மழையில் நனைந்த கலைஞர் உணர்ச்சி வசப்பட்டு மனித சங்கலி என்று அறிவித்தார் . அங்கே ஈழ தமிழன் மழை என்றும் பாராமல் சிங்கள இனவெறி அரசின் குண்டுகளுக்கு இரையாகி கொண்டிருக்கும் போது மழை என்பதால் மனித சங்கிலி வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது இங்கே .
இந்த இடைவெளியில் விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்காக தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர் . பின்னர் கொட்டும் மழையில் மனித சங்கிலி நடந்தது . இந்த நிலையில் திமுக எம்பிக்கள் அனைவரும் கருணாநிதியிடம் ராஜினமா கடிதம் கொடுத்தனர் . என்னடா இது ராஜினாமா கடிதம் கொடுத்தா அது சபாநாயகரிடமல்லவா கொடுக்க வேண்டும் கருணாநிதி எப்போது சபாநாயகர் ஆனார் என கேள்விகள் எழுந்தன .
கெடு முடிந்தது பிரணாப் முகர்ஜி கலைஞரை தேடி வந்தார் . மத்திய காங்கிரஸ் அரசுக்கு எந்த பாதிப்புமில்லை என்றார் . என்னடா இது போர் நிறுத்தம் பற்றி பேசுவாருன்னு நினைத்தோம் இவரு ஆட்சிக்கு பாதிப்பில்லை என்கிறார் . கொட்டும் மழையில் முட்டாள் ஆனான் தமிழன் . கொட்டும் மழையில் ஒவ்வெரு தமிழனையும் நனைய வைத்து முட்டாள் ஆக்கினார் கலைஞர் . ராஜினமாவும் இல்லை இன்று வரை போர் நிறுத்தமும் இல்லை .
கருணாநிதியின் ராஜினமா நாடகத்தின் பின்னர் தான் இந்திய இலங்கை ராணுவத்திற்கு அதிகமாக ஆயுதங்களையும் , படையணிகளையும் கொடுத்ததாக தெரிகிறது . தமிழினத்திற்கு துரோகம் செய்து விட்டு அப்போது எழுதிய நாடகத்தின் திரை கதையில் பாதியை தினமும் வாசித்து கொண்டிருக்கிறார் . மக்கள் என்ன மீண்டும் ஏமாறுவார்களா ?
Monday
இலங்கை தமிழர்களுக்காக தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கிறோம்: ஜெ.
சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் ஜெயலலிதா பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் பேசுகையில்,
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த உண்ணாவிரதத்தை நடத்துகிறோம். கடந்த ஆண்டு இந்திய அரசு ராணுவ உதவி செய்வதாகவும், ஆயுதங்கள் வழங்கி வருவதாகவும் செய்திகள் வந்தன. இதை மத்திய அரசு மறுக்கவில்லை. இந்திய பாதுகாப்புதுறை உயர் அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் இலங்கை சென்றதாகவும் கூறப்பட்டது. அதையும் மத்திய அரசு மறுக்கவில்லை, திமுகவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மத்தியில் அங்கம் வகிக்கும் திமுக மந்திரிகள் ராஜினாமா செய்வதாக மிரட்டிக் கூட பார்க்கவில்லை. இதுபற்றி கேள்வி கேட்ட என்னை கருணாநிதி கேலி செய்கிறார். இது முழுக்க முழுக்க மத்திய அரசு சம்பந்தப்பட்டது. இது கூட ஜெயலலிதாவுக்கு தெரியவில்லையே என்றார்.
இலங்கை ராணுவ வீரர்களுக்கு ஹரியானா மாநிலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதிநவீன சாதனங்களை வைத்து இலங்கை வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்திய அரசு ஒப்புதலுடன் தான் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இலங்கை இனப் படுகொலை மத்திய அரசின் முழு ஒத்துழைப்போடு நடக்கிறது. இந்த இனப் படுகொலையில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும் பெரும் பங்குண்டு. சட்டசபையில் தீர்மானம் போட்டதாக மக்களை ஏமாற்றப் பார்க்கிறார் கருணாநிதி. தீர்மானங்களை நாங்கள் ஆதரிக்கவில்லை என்கிறார். கருணாநிதியின் பாசாங்கு தீர்மானங்களை நாங்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்?.
ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு ராணுவ உதவிகள் வழங்குவது வழக்கமான நடைமுறைதான். ஆனால் இந்தியா வழங்கும் ஆயுத உதவியும், பயிற்சியும் யாருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இலங்கைக்கு வழங்கப்படும் முழு ஆயுத பலத்தையும் அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள். இலங்கை ராணுவம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறலாம். ஆனால் அங்கு உயிரிழப்போரின் எண்ணிக்கையைப் பார்த்தால் புலிகள், போராளிகள் தவிர அப்பாவி மக்களும் பலியாவது தெரிய வருகிறது..
இந்தியா வழங்கிய துப்பாக்கிகளும் தோட்டாக்களும் அப்பாவி தமிழர்களை கொலை செய்ய பயன்படுத்தப்படுகிறது.
இலங்கைப் பிரச்சினையில் திமுக அரசும், மத்திய அரசும் செயல்பட்டு வரும் விதத்தைப் பார்த்து மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.
இலங்கையில் அவதிப்பட்டு வரும், அல்லல்பட்டு வரும் அங்குள்ள தமிழர்கள் குறித்து கருணாநிதிக்கு அக்கறை இல்லை. இதுகுறித்து ஏதாவது நடவடிக்கை எடுங்கள் என்று அவரிடம் கேட்டால், மத்திய அரசுதான் இதில் நடவடிக்கை எடுக்க முடியும். ஒரு மாநில முதல்வரால், என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறுகிறார் கருணாநிதி.
தமிழகத்தைச் சேர்ந்த 10 மத்திய மந்திரிகள் உள்ளனர். அவர்கள் இதை ஏன் எதிர்க்கவில்லை. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசுக்கான ஆதரவு வாபஸ் என்ற பிரம்மாஸ்திரத்தை கருணாநிதி பயன்படுத்தமாட்டார். அறிக்கை மட்டும் விடுவார்.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் என்னுடைய நிலைப்பாட்டை அனைவரும் அறிவர். இலங்கையில் உள்ள தமிழர்கள் அங்குள்ள சிங்களவர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற தமிழர்களின் உரிமைக் குரலை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சம உரிமை ஆகிய இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய போராட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.
ஆயுதம் ஏந்திய போராட்டத்தை எதிர்க்கிறோம். ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இறக்க காரணமான திசை மாறிப்போன ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் விளைவாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இலங்கை அதிபருடன் நம் பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்கு இனப் படுகொலையை உடனடியாக நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்று நான் கருணாநிதிக்கு ஆலோசனை கூறினேன். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தமிழக மக்கள் அனைவரும் பிரதமர் அலுவலகத்திற்கு தந்திகள் அனுப்ப வேண்டும் என்றார். பின்னர் பிரதமரை வற்புறுத்த, மத்திய ஆளும் கூட்டணியிலிருந்து விலக வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதையும் செய்யத் தயார் என்று அறிவித்தார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் ராஜினாமா கடிதங்களைப் பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால் நாடாளுமன்ற மக்களவை தலைவருக்கோ, அல்லது மாநிலங்களவைத் தலைவருக்கோ அக்கடிதங்களை அனுப்பவில்லை. அதற்கு பதிலாக அவர் நிர்ணயித்த கெடுவான கடைசி தேதியை முடிவுக்கு வரவிட்டு, பின்னர் அந்த ராஜினாமா கடிதங்களை தானே கிழித்து போட்டு விட்டார்.
இந்திய இறையாண்மைக்கு விரோதமாக பேசியதாக கூறி இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கருணாநிதி தலைமையில் நடத்தப்பட்ட மனித சங்கிலிப் போராட்டத்தில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர்.
எனவே கருணாநிதியின் முழு ஆசி மற்றும் தூண்டுதலின்பேரில்தான் இருவரும் பேசினர். அதுவே அவர்களை சிக்கலில் மாட்டி விட்டு விட்டது.
பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் சீமான் மீண்டும் கைது செய்யப்பட்டார், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
உண்மையி்ல் சீமான் என்ன மாதிரியெல்லாம் பேசினாரோ அதையே கருணாநிதியும் பேசியுள்ளார். அவர் என்னென்ன வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தினாரோ அதையெல்லாம் கருணாநிதியும் பயன்படுத்தியுள்ளார்.
எந்த வார்த்தைகள் அவர்களை இன்று சிக்கலில் மாட்டிவிட்டதோ, அவை யாவும் கருணாநிதியின் ஆசியும் ஒப்புதலும் பெற்றவை தான்.
ஆனால் சீமானுக்கு மட்டும் சிறைத் தண்டனை. ஆனால் கருணாநிதியோ தலைமை பீடத்தில் அமர்ந்து கொண்டு அனைவரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்.
இன்று நாம் உண்ணாவிரதம் இருப்பதினால், பசியினால் வாடும் இலங்கைத் தமிழர்களின் வயிறு நிரம்பப்போவதில்லை. இந்த உண்ணாவிரத அறப்போராட்டம் ஒரு அடையாளமே. இந்த உண்ணாவிரதத்தின் மூலம், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் துயர நிகழ்வுகள் குறித்து, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் கவலை அடைந்து இருக்கிறார்கள் என்பதையும், இது போன்ற சம்பவங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் நடந்து கொள்கிற விதம், தமிழக மக்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது என்பதையும் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தெரியப்படுத்துகிறோம்.
ஒரு அசட்டு தைரியத்தில் திமுகவும், காங்கிரசும் கூட்டணி சேர்ந்துள்ளன. வரும் தேர்தலில் மக்கள் இந்த கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டப் போகிறார்கள் என்றார் ஜெயலலிதா.
தமிழகத்தின் எழுச்சி ஜெயலலிதாவையும் ஆதரவாக பேசவைத்திருக்கிறது . கலைஞர் இனி நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள் ?
Sunday
நாஞ்சில் சம்பத் சோனியாவை சேலை கட்டிய முசோலினி என்று பேசலாமா ?
அவரது பேச்சிலிருந்து
பஞ்சாபில், காலிஸ்தான் கோரிக்கை எழுந்தபோது, ஏஎஸ்எஸ்எப் மாணவர் அமைப்பு நடத்திய போராட்டமே டெல்லி ஏதேச்சதிகாரத்தை தட்டிக் கேட்டது. தமிழக மாணவர்களும் இதற்கு முன்வர வேண்டும்.
இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், டெல்லியில் தமிழகத்தின் தூதரகம் அமைய வேண்டிய நிலை ஏற்படும்.
பாகிஸ்தான் பிரிவினை குறித்து பேச்சு எழுந்த போது, கற்பனை என்று கூறிய நேரு, உண்மையாகவே பிரிந்தபின், வாழ்த்துச்செய்தி அனுப்பினார். இதுவும் கற்பனை அல்ல. டெல்லியில் தமிழக தூதரகம் அமைய நேரிடும். அப்போது, வாழ்த்து அனுப்ப வேண்டிய இடத்தில் நாங்கள் இருப்போம்.
இத்தாலியில், சர்வாதிகாரி முசோலினி இறந்து விட்டான். ஆனால், அவன் சேலை கட்டி சோனியா காந்தி ரூபத்தில் இந்தியா வந்துள்ளான். தன்னைப் பிடிக்காத, தனக்குப் பிடிக்காத மாமியார் இந்திரா காந்தியை கொன்ற சீக்கியர்களுக்கு அவர் பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை கொடுத்துள்ளார்.
கணவன் இறந்து விட்டதற்காக அவர் என்ன கைம்மை நோன்பா இருக்கிறார். கட்டாந்தரையில் படுக்கிறாரா... சுகபோகமாக ராணியாகத்தானே வலம் வருகிறார். மன்மோகன் சிங் வாயில்லாதவர். வெறும் குரங்கு. சோனியா தான் குரங்காட்டி. இந்தியாவின் உள்துறை அமைச்சராக சிதம்பரம் என்ற தமிழர் இருக்கிறார். அதனால் என்ன பயன்?.
நாங்கள் என்ன "ஸ்பெக்ட்ரம்' ஊழலில் பங்கு கேட்டோமா, சொத்தில் பங்கு கேட்டோமா, விருந்துக்கு அழைக்கச் சொன்னோமா, மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு அழைக்கச் சொன்னோமா, ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுக்கத்தானே சொன்னோம்.
வக்கீல்கள், மாணவர்கள் என இலங்கை தமிழர்களுக்கான போராட்டம் சீராக போய் கொண்டிருந்தது. அதை திசை திருப்ப வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தி, போலீசை கட்டவிழ்த்து விட்டு விட்டார்.
தமிழகத்தில் 12 மத்திய அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் தேவையில்லாமல் பிறந்தவர்கள். உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூத்தாண்டவர் கோவிலுக்கு போக வேண்டியவர். இவர்களின் கல்லறைக்கு கூட தமிழகத்தில் இடம் கொடுக்கக் கூடாது.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக திரைப்பட இயக்குனர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள் . அதேபோல் பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணியும் கைது செய்யப்பட்டார் . இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் .
சோனியா காந்தி என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா? கைது செய்வதால் மக்கள் மனதில் நீங்கள் ஏற்படுத்திய காயங்களை அகற்றிவிடமுடியுமா ? கைதுசெய்வதனால் நவீன உலகின் ஹிட்லர் . மகிந்தாவுடன் சேர்ந்து நீங்கள் நடத்தும் இனபடுகொலைகள் இல்லையென்று ஆகிவிடுமா?
Wednesday
சிரிக்கலாம் வாங்க: கருத்து படம்
Tuesday
கலைஞர் பேரணி நடத்த முடிவு . ராஜபக்ஷே பாராட்டு
இன்றைய கூட்டத்தின் தீர்மானங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
இலங்கைத் தமிழர்கள் அனைத்து நல உரிமைகளையும் பெற தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்படும் என திமுக செயற்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளது.
இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று திமுக செயற்குழு கூடியது. இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.
ஓய்வு கட்டாயம் தேவை என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், இன்றை கூட்டத்தில் பங்கேற்க அவர் உறுதியாக இருந்தார்.
இதையடுத்து இன்று காலை அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இதை முடித்துக் கொண்டு அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் அங்கு திமுக செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவித்து முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்து, இலங்கைத் தமிழர்களுக்கு நல உரிமைகளைப் பெற்றுத் தர ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகள், சான்றோர்களைத் திரட்டி பட்டி தொட்டியெங்கும் விளக்கக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகளை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுமையான சுயாட்சி மற்றும் முழுமையான அதிகாரப்பகிர்வு ஆகியவை கிடைக்கும் வகையில் குறிப்பிட்ட காலத்திற்குள், அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 7ம் தேதி சென்னையில் பிரசார கூட்டம் மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறும். பிற மாவட்ட தலைநகரங்களில் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை முதல்வர் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும் என்று சிலர் நினைக்கிறார்கள். அண்ணனும் சாக மாட்டான். திண்ணையும் காலியாகாது.
திமுகவையும், காங்கிரஸையும் பிரிக்க முயற்சிக்கிறார்கள். அந்த சிலரின் சதி பலிக்காது.
அதேபோல பந்த் நடத்தி அரசைக் கலைக்கவும் முயற்சிக்கிறார்கள் என்று முதல்வர் குற்றம் சாட்டினார்.
..............................................................................................................................................
அய்யா கலைஞர் அவர்களே அப்படியே பேரணி நடத்தி உதய சூரியனுக்கு ஓட்டும் கேளுங்க . ஈழ தமிழன் செத்தா நமக்கென்ன . இப்போ எல்லாம் எவன் எவன் கொடிஎல்லாமோ ஈழ தமிழனுக்காக ரோட்டில் பறக்குது அப்போ திமுக கொடி மட்டும் பறக்காதா என்ன . இன்னும் ஒன்ன்னு பண்ணுங்க அந்த இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில உள்ளவங்களையும் , மாணவர்களையும் , அப்படியே போராட்டம் நடத்தும் இலங்கை அகதிகளையும் பிடித்து உள்ள போடுங்க .
அப்போ நீங்க இன்னும் கொஞ்சம் ஜாலியா பேரணி நடத்தலாம் . விளித்து விட்டோம் இனியும் எங்களுக்கு மயக்க மருந்து தர முடியாது கலைஞரே . சரி போய் ஓய்வெடுங்க .
Sunday
கலைஞர் கருணாநிதிக்கு ஈழத் தமிழ்மகனின் உள்ளக்குமுறல் (கடிதம்)
நிற்க, பட்ட கஷ்டமெல்லாம் சற்றும் விலகாமல் ஒட்டியுறைந்து தினமும் மனதை தைத்துக் கொண்டிருக்கின்றன. தாகம் தீர்க்க மழையில்லை. இரத்தம் குடிக்க குண்டு மட்டும் பொழிகிறது. எல்லாரும் ஏமாற்றுகிறார்கள். ஏன் நீங்கள் கூடத்தான். எம்மைப்பற்றி ஆக்ரோஷமாக பேசும் போதெல்லாம் எல்லாவற்றையும் மறந்து மனம் நிறைந்து களிக்கிறேன். காலம் தள்ளிப் போகும்போது உங்கள் வார்த்தைகளும் புளித்துப் போகின்றன. ஆயிரம் நுண் ஈட்டிகள் சேர்ந்து ஆழ்கலங்களை துளையிட்டு நகரும் ஒவ்வொரு நிமிடங்களிலும் மரண வேதனை தருவதுபோன்ற உணர்வுகள்... அதைத் தாங்க முடியாமல்...
உங்களுக்குத் தெரியாது ஐயா. அனுபவித்தால் தான் தெரியும்.
கண்ணீர் வடித்து வடித்து ஒருவேளை தண்ணீருக்கே தாய் தவித்திருக்க வற்றிப்போன அவள் மார்முலையை ஏக்கத்துடன் பார்க்கும் பிஞ்சுக்கு காலம் சொல்லப்போகும் பதில்தான் என்ன?
நாம் யாருக்கு என்ன கொடுமை செய்தோம்? யார் நிலத்தை நாம் பறித்தோம்? யார் உரிமைக்கு இடம் கொடுக்க மறுத்தோம்? சோதனை மாறிமாறி வரும் என்பார்கள். வருவதெல்லாம் இங்கு சோதனையாகத்தான் இருக்கிறது. போகட்டும்
இலங்கை அரசாங்கத்துக்கு நீங்கள் இருவார காலக்கெடு கொடுத்தீர்கள் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் தமிழ் அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என்றும் அறிவித்தீர்கள் ஏன் இப்போது மெளனம் காக்கிறீர்கள்?
இந்தியப் பிரதமரை சந்தித்தீர்கள் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை கூறினீர்கள் ஏன் இப்போது பதில்கேட்க மறுக்கிறீர்கள்? போராட்டத்துக்கு அழைத்தீர்கள் சங்கிலியாய் இணைந்த எம்சொந்தங்களைக் கண்டு அகமகிழ்ந்து ஆனந்தமடைந்தோம். ஏன் இடைநிறுத்தினீர்கள்?
எமது பிரச்சினை பற்றி நீங்கள் ஆற்றிய உரையை நெய்வேலி, அருப்புக்கோட்டை, பாலையப்பட்டி, மேட்டுப்பாளையம், விருதுநகர், சாத்தூர், சிவகாசி, இராசபாளையம், திருவில்லிப்புத்தூர் என எல்லா ஊர்களிலும் பிரசாரம் செய்து அந்த உரையை போட்டுக் காட்டினீர்கள். என்ன பயனாயிற்று?
எமது நாட்டின் தமிழ் அமைச்சர்கள் மீது எனக்கு துளியளவும் நம்பிக்கையும் இல்லை. அதனால் தான் உரிமையோடு உங்களிடம் கேட்கிறேன். நான் மட்டுமல்ல இங்கு இலட்சக்கணக்கானோர் உங்களின் மறுமொழிக்காகவும் அடுத்த அடிக்காகவும் காத்திருக்கிறோம்
காடு எம்மை அடைகாத்துக் கொண்டிருக்கிறது அந்தகாடு அழியும் நிலை என்று வருகிறதோ அன்று இடுகாட்டில்தான் நாம் தூங்கிக் கொண்டிருப்போம். அப்போது எமக்காக ஒரு கவிதை எழுதி தப்பித்து விடாதீர்கள்.
எம்மை ஏமாற்றத் துணிந்து எதிர்பார்ப்புகளை ஏமாற்றங்களாக்கிய ஒவ்வொருவருக்கும் இறந்த பின்னும் எம் ஆன்மா சாபமிடும். இது நிச்சயமான உண்மை.
கலைஞரே, நீங்கள் தூங்கிக் கொண்டிருப்பதாக பலர் சொல்லிக் கொள்கிறார்கள். எமது ஓலக்குரல் உங்களுக்கு தாலாட்டாய் கேட்கும் என நான் நினைக்கவில்லை. எம்மைக் காப்பாற்ற முடியாவிட்டால் சொல்லி விடுங்கள். கறைபடிந்த எமது வாழ்க்கைப் பயணத்தை அந்தக் கறையைக் கொண்டே புள்ளி வைத்து முடித்து விடுகிறோம். கோரத்தின் கைகளில் சிக்குண்டு அகோரமாய் கொடுமைப்படுத்தப்படுவதை விட மரணம் எவ்வளவோ சுகமானது
இந்தக் கடிதத்தை நீங்கள் வாசிக்கும்போது நான் உயிரோடு இல்லாமலிருக்கலாம் ஆனாலும் உயிருள்ள இந்த வரிகள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்
அன்பான நன்றிகள் எங்கள் மண் சார்பிலும் மக்கள் சார்பிலும் உங்களுக்கு! எங்களுர் மாரியம்மன் உங்களுக்கு என்றும் துணைநிற்கட்டும்
இப்படிக்கு,
ஓர் ஈழத்தமிழன்
நன்றி :தமிழ்வின்
உங்கள் ஓட்டுகளை மறக்காமல் தமிழ்மணத்திலும் தமிளிஷிலும் குத்துங்கோ




