• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label பிரபாகரன். Show all posts
Showing posts with label பிரபாகரன். Show all posts

Sunday

உயிரோடில்லாத பிரபாகரனை கண்டு ஏன் பயப்படவேண்டும் ?

தமிழ் ஈழத்தை உருவாக்கியெடுத்த தேசிய தலைவர் பிரபாகரனின் படங்களை தமிழகத்தில் வைக்க கூடாது என்றும் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேச கூடாது என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது .

விடுதலை புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டோம் , விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனையும் கொன்று விட்டோம் என சிங்கள இனவெறி அரசு கொக்கரித்து கொண்டிருக்கிறது . அதை நினைத்து பெருமை பட்டு கொண்டது இந்திய காங்கிரஸ் அரசு . தமிழக காங்கிரஸ் கட்சியினரோ பிரபாகரனை கொன்ற சோனியாவிற்கு நன்றி என சுவரொட்டிகள் அடித்து மகிழ்ச்சி கண்டனர் . இல்லாத பிரபாகரனுக்காகவும் இல்லாத விடுதலை புலிகளுக்காகவும் எதற்கு பயப்பட வேண்டும் .

இலங்கை அரசோ மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை முள் வெளி கம்பிகளில் அடைத்து வைத்திருக்கிறது போர் முடிவுற்றதாக அறிவித்து பல மாதங்கள் ஆன பின்னரும் விடுவிப்பதாக இல்லை . சிங்கள அரசால் கொண்டுவரப்பட்ட அவசர கால சட்டம் போர் முடிந்த பின்னரும் கைவிட படுவதாக இல்லை . அதே நிலை தான் இங்கே தமிழக அரசும் செய்கிறது . தீவிர போர் நடைபெற்ற காலகட்டங்களில் ஈழ தமிழர்களுக்காக எழுந்த எழுச்சியை அரச இயந்திரங்களை கொண்டு காட்டு மிராண்டி தனமாக ஒடுக்கியது . கடைசி கட்ட ஈழ போரில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் சாவதற்கு கருணாநிதி தலைமையிலான திமுக அரசும் ஒரு காரணமாக ஆகி போனது .

இந்நிலையில் தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு நம்பிக்கையிழந்த தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக தமிழகத்தில் எழுச்சி கூட்டங்கள் நடைபெறுவதை பொறுக்க முடியாத தமிழக அரசு மீண்டும் தமிழ் உணர்வாளர்களையும் தமிழ் ஈழ ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முனைகிறது . மக்கள் மனதிலிருந்து மாவீரன் பிரபாகரனை மற்ற முடியாது என நினைத்த தமிழக அரசு பொது இடங்களில் படங்கள் வைக்க கூடாது என எச்சரிக்கிறது .

பிரபாகரனோ விடுதலை புலிகளோ இனி வரமுடியாது என தினமும் தமிழர்களுக்கு எதிராகவே எழுதிவரும் தின மலர் கூட தமிழக அரசுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் செயல் படுகிறார்கள் என காட்டி கொடுக்கிறது . தினமலருக்கு என்ன பயம் உயிரோடில்லாத பிரபாகரனை கண்டு ஏன் பய பட வேண்டும் .

எழும் தமிழ் ஈழம் என தட்டி வைத்தால் காவல் துறையினர் அதில் உள்ள ஈழத்தை அழித்து விடுகிறார்கள் . தமிழ் ஈழத்திற்கான உலக தமிழர் பிரகடனம் வெளியிட்டால் வழக்கு போடுகிறார்கள் . விடுதலை புலிகள் இயக்கம் அழிக்க பட்ட பின்னரும் எதற்காக இந்த பயம் . தமிழ் ஈழம் என்பது விடுதலை புலிகளின் லட்சியம் மட்டுமில்லை தமிழர்களின் லட்சியமும் கூட . இங்கே விடுதலை புலிகளின் பெயர்களையோ பிரபாகரனின் படத்தையோ பயன் படுத்தினால் நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு அங்கே முள் வேலிக்குள் சிறைபிடிக்க பட்ட தமிழர்களை விடுவிக்க ஆக்க பூர்வமான நடவடிக்கையை மேற கொள்ளுங்கள் .

Read More

Thursday

கையாலாகாதவன் கையிலெடுப்பது பாசிசமா ?

பாசிசம் என்ற வார்த்தையை கேட்டாலே கையாலாகாதவன் சொல்லும் வார்த்தை போலாகி விட்டது . திடீரென ஒரு இணைய பக்கத்திற்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அங்க பொய் பார்த்தல் இரயாகரன் - சமர் என்று ஒரு பிரிவு காணப்படுகிறது . நான் அதை பார்த்தவுடனே இராயகவன் இலங்கை சிங்கள இனவெறிக்கு எதிராக களமாடிய சமர் என நினைத்து அதை கிளிக் பண்ணி பார்த்தல் தான் தெரிகிறது தமிழ் மொழியாலே தமிழர்களுக்கு எதிராக இணையத்தில் களமாடிவருகிறார் என்பது .

சிங்கள இனவெறி அரசால் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டு அடுத்த கட்ட போராட்டத்திற்கு எழுந்து விட்ட தமிழர்களுக்கு எழாத  சந்தேகங்கள் இவர்களுக்கு எழுகிறது .  அவங்க இணையதளத்தை ஓட்ட வேண்டுமென்றால் தினம் ஒரு செய்தி தேசிய தலைவரை பற்றி வெளியிட்டாக வேண்டும் . சிங்கள இனவெறி அரசு இனவெறியோடு நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்தும் சிங்கள இனவெறி அரசை கண்டிப்பதை விட தமிழ் ஈழ தாயகத்திற்காக களம் கண்டு மாண்ட ஆயிரக்கான தமிழர்களை கொண்ட பிரபாகரன் தலைமையிலான விடுதலை புலிகள் அமைப்பை குறித்து  தவறான பிரச்சாரம் செய்ய வேண்டும் இது தான் இவர்கள் வேலை .

ராணுவரீதியில் விடுதலை புலிகள் தோற்கடிக்கபட்டார்கள் என்று சிங்கள இனவேறியர்களோடு ஆட்டம் போட்ட இராயகன் கும்பலுக்கு கிடைத்த மிக பெரிய அடி  தமிழ் ஈழ விடுதலை புலிகளால் அறிவிக்கப்பட்ட நாடு கடந்த தமிழ் ஈழம் . விடுதலை புலிகளின் அனைத்துலக தொடர்புகள் துறையால் தலைவர் வீரமரணம் அடைந்து விட்டார் என அறிவித்தும் ஈழ ஆதரவாளர்களும் தமிழர்களும் நம்ப மறுக்கின்றனர் . இதையே வாய்ப்பாக பயன்படுத்தி ஒரு வேளை பிரபாகரன் உயிருடன் இருப்பாரோ என்ற பயத்தின் மூலம் தவறான நம்பக தன்மையற்ற தகவல்களை கட்டுரையாக பாவித்து தமிழர்களுக்கு எதிராக மகிந்தாவுடன் கூட்டு சேர்ந்து சமராடுகிரார் .

இராயகவன் கும்பலின்  செய்திகளை படித்தாலே தெரிகிறது கையாலாகதவர்கள் என்பது எந்த லட்சியத்திற்காக பிரபாகரன் அவர்களால் விடுதலை புலிகள் இயக்கம் துவக்கபட்டதோ அதில் எந்த விட்டு கொடுப்பிற்கும் இடமளிக்காமல் அந்த லட்சியம் இன்றும் உயிரோடிருக்க செய்த தலைவனை விமர்சிக்க கையாலாகாத இராயகவன் கும்பல்களுக்கு  தகுதியிலை என்பதை என்னால் சொல்லமுடியும் . போர் முடிந்தது உங்கள் விருப்பம் போல் விடுதலை புலிகளை இல்லாமல் ஆக்கிவிட்டாச்சு இனி தமிழர்களுக்காக உரிமைகளை பெற்று தருவது தானே உங்கள் நோக்கமாக இருக்கவேண்டும் . அதை விட்டு விட்டு கீழ்த்தரமான வேலைகளில் ஏன் ஈடுபடுகிறார்கள் .

தேசிய தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதமும் தேவையில்லை எப்படி இறந்தார் என்ற ஆராச்சியும் தேவையில்லை மக்கள் உள்ளங்களில் குடிகொண்ட தமிழ் ஈழம் இன்னும்  உயிருடனே இருக்கிறது . தமிழ் ஈழம் உயிருடன் இருக்கும் வரை பிரபாகரன் வாழ்ந்து கொண்டிருப்பார் . பிரபாகரன் ஒரு வரலாற்று நாயகன் .
Read More

Saturday

தேசிய தலைவரின் படமின்றி அனைத்துலக தொடர்பு இணையதளம்

விடுதலை புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் செல்வா ராஜா பத்ம நாதன் அவர்களால் அனைத்துலக தொடர்புகளுக்கான இணைய தளம் www.ltteir.org திறக்கப்பட்டுள்ளது . விடுதலை புலிகள் ராணுவ ரீதியில் தோற்கடிக்க பட்ட போது ராணுவத்தால் தேசிய தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்று சொன்ன போது முதலில் அதை மறுத்தார் . பின்னர் சில நாட்கள் தாண்டி தலைவர் வீரமரணம் அடைந்து விட்டார் என சொன்னார் . அதோடு விடுதலை புலிகள் ராணுவ ரீதியில் தான் தோற்கடிக்க பட்டனர் அரசியல் ரீதியில் அல்ல என நாடு கடந்த தமிழ் ஈழம் உருவாக்குவோம் என புலம் பெயர் வாழ் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தார் .


ஈழ தமிழர்களில் பெரும்பாலோர் மற்றும் தமிழுணர்வாளர்கள் இப்போதும் தேசிய தலைவர் உயிரோடு இருக்கிறார் என சொல்லுகிறார்கள் . மேலும் ஈழ முரசு செய்தியை படியுங்கள் http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=991&cntnt01origid=52&cntnt01returnid=51மற்றும் ராணுவத்தால் அடையாள படுத்தப்பட்ட உடல் தலைவரின் உடல் அல்ல என்று ஆணித்தரமாக கூறி வரும் வேளையில் . முதலில் பதமனாதனின் அறிக்கையை வெளியிடாத புதினம் வழுதி என்ற கட்டுரையாளர் வழியாக தலைவர் வீரமரணம் அடைந்து விட்டார் என அறிவித்தது . அதில் கட்டுரையாளர் தேசிய தலைவரை பற்றி தவறாகவும் எழுதியிருந்தது குறிப்பிட தக்கது .


தமிழர்கள் இப்போது யார் சொல்வதை நம்புவது என்ற ஒரு குழப்பமான சூழ்நிலையில் தள்ள பட்டுள்ளது . விடுதலை புலிகளின் அதிகார பூர்வமான தமிழ் நெட் இணையதளம் இதுவரை தலைவர் வீர மரணம் அடிந்தார் என தெரிவிக்கவில்லை . இந்நிலையில் தான் இன்று பத்மநாதன் அவர்களால் அனைத்துலக தொடர்பகதிற்கான இணையதளம் திறக்கப்பட்டுள்ளது . அந்த இணைய தளத்தை பார்த்தல் தேசிய தலைவரின் படம் எங்கேயுமே தென்படவில்லை . மாறாக அனைத்துலக தொடர்பாளர் பத்மநாதன் அவர்களின் படம் மட்டுமே காணப்படுகிறது .


தேசிய தலைவர் வீரமரணம் அடைந்திருந்தால் கூட தமிழ் ஈழ விடுதலை புலிகள் அமைப்பை துவக்கியவர் தமிழர்களின் தேசிய தலைவராக திகழ்ந்தவர் இன்றும் திகழ்ந்து கொண்டிருப்பவர் . விடுதலை புலிகளின் தலைவர் என்ற முறையில் அவரின் புகைப்படம் காண படவேண்டும் . பத்மநாதனை அந்த பதவிக்கும் நியமித்தவர் என்றமுறையில் அனைத்துலக தொடர்பகதிற்காக இணையதளத்தில் தேசிய தலைவரின் படம் இல்லாதது தமிழர்களுக்கு ஏமாற்றத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது .
Read More

Sunday

தலைவரின் போராட்டங்களுக்கு என்னை அர்பணிக்கிறேன் - வைகோ



Read More

Tuesday

வரலாறு படைத்த பிரபாகரன் - அருட் தந்தை ஜெகத் காஸ்பெர்

றப்பேனோவேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை? 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. ""உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?'' அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்: ""என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!''

வலியது வாழும். நியாயம், நீதி, உணர்வுகள், ஒழுக் கம், விழுமியங்கள் எவை பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத இயற்கையின் நியதி இது. ஆம், வலியது வாழும். போரின் கொடுமையோ அதனிலும் பெரிது. வெற்றி பெற்றவன் அனைத்தையும் எடுத்துக் கொள்வான், வரலாறு உட்பட. தோற்றுப் போனவன் தலைகுனிந்து குறுகி நிற்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனும், தமிழீழ விடுதலைப்புலிகளும் விட்ட பிழைகளையும், செய்த தவறுகளையும்தான் இனி பலரும் அதிகமாகப் பேசப்புறப்படுவார்கள்.


தமிழீழ விடுதலைப் புலிகள் தவறிழைக்காத தேவ தூதர்கள் இல்லைதான். அவர்கள் செய்த குற்றங்களை, குற்றமென்று உரைக்கும் ஒழுக்க நிலை நமக்கு இருந்தால் மட்டுமே அவர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட் டத்தை போற்றி, தொடர்ந்து அப்போராட்டத்தின் அரசியல் இலக்குகளை அம்மக்களுக்கு உறுதி செய்யும் செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள முடியும்.

மாற்றுக் கருத்துடைய பலரை அரசியல் களத்திலிருந்து அகற்றியது, உலக அளவிலான அரசியல் தலைமைத் துவங்களை உருவாக்காதது, "போர் வெற்றி' தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளை மக்களிடையே உருவாக்கி தங்களை மக்களின் "பந்தயக் குதிரைகளாக' நிறுத்தி -மக்களை அரசியல்மயப்படுத்த தவறியது, ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தப் பட்டது -அல்லது சம்பந்தப்படவில்லை யென்றால் அதனை சரிவர விளக்காதது... என தமிழீழ விடுதலைப்புலிகள் விட்ட பிழைகள் பல உண்டு.

எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லாத தமிழ் வரலாறும், அவர்தம் வரலாற்றோடு தொடர்பற்ற தமிழர் எதிர்கால எழுச்சியும் இல்லை என்பதே நிதர்சனம். தமிழர் வரலாற்றின் அகற்றமுடியா ஆதர்ச மாகவும் வரலாற்றுப் பிரமாண்டமாகவும் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிலைபெற்று விட்டார் என்பதுதான் உண்மை. எனவேதான் அவரைப் பற்றின சரியான புரிதல் தமிழ் நாட்டுத் தமிழர்களாகிய நமக்கும் முக்கியமானதாகிறது. தமிழர்களாகிய நமது எதிர்கால எழுச்சிக்கும் அது முக்கியம்.

உலகின் ஒரு மூலையில் மிகச்சிறியதோர் தமிழ்க் கூட்டத்திலிருந்து முன்னுதாரணமான தோர் விடுதலைப் போராட்டத்தை கட்டி யெழுப்பியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அந்தப் போராட்டம் நமது இனத்தில் பிறந்த தென்பது, உணர்வுகளைத் தவிர வேறெதுவும் பெரிதாகப் பங்களிக்காத நமக்கும் பெருமையே.

நாற்புறமும் நீர்சூழ்ந்த சிறியதோர் நிலப்பரப்பில், இலங்கையோடு சுற்றியிருக்கும் பெரிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா நாடுகளினது நெருக்குவாரங்களுக்கு ஈடுகொடுத்து, மரபுவழித் தாக்குதல் படை யணிகள், சிறப்புப் படை பிரிவுகள், பீரங்கிப் பிரிவு, கடற்படை, உலக உளவு அமைப்புகள் மெச்சும் மிகத்திறன் கொண்ட புலனாய்வுத் துறை, 70-க்கும் மேலான கப்பல்களை கொண்ட அனைத்துலக ஆயுத கொள்வனவுப் பிரிவு, அரை உரிமை கொண்ட ஒரு செயற்கைக்கோள் -இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் 2002-முதல் ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய துறைசார் அலகுகளுடன் கூடியதோர் நடை முறை அரசை உருவாக்கி பல உலக நாடுகளை விடவும் நேர்த்தியான முறையில் அதனை நிர்வகிக்கும் திறனும், கண்ணியமும், ஒழுக்கமும் கொண்ட நிர்வாக ஏற்பாட்டையும் உருவாக்கி சாதனை செய்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். உலகெங்கும் யூதர்கள் இருந்தாலும் இஸ்ரேல் அவர்களது உரிமை பூமியாய் இருப்பதுபோல் உலகெங்குமுள்ள எட்டு கோடித் தமிழர்கள் தம் இனத்திற்கும் ஒரு நாடு இருக்கிறது என்று பெருமையுடன் பேசும் நிலைக்கு வெகு அருகில் தமிழினத்தை கொண்டு வந்தவர் அவர்.

அவற்றிற்கெல்லாம் மேலாய் இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை, இலக்கு நோக்கிய விடாப் பிடியான உறுதியின்மை, அதிகாரவர்க்கத்தை கண்டு அஞ்சுதல் போன்ற குணாதியங்களைக் கொண்ட தமிழ் இனத்தினது மனவெளியில் கண்ணுக்குப் புலப்படாத போராட்டமொன்று நடத்தி, நம்பிக்கை ஊட்டி, துணிவுடன் நிமிர வைத்து, பிறர் வாழ தம் உயிரை மனமுவந்து ஈகம் செய்யும் தலைமுறை ஒன்றினை புடமிட்டு, நானும் பிறந்து பாக்கியம் பெற்ற இத்தமிழினத்தின் சிந்தனை இயக்கத்தையும் போக்கையும் மாற்றியமைத்ததுதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த உண்மையான வரலாறு.

முல்லைத்தீவில் பல்லாயிரம் போராளிகளையும், பலநூறு கோடி ரூபாய் பெறுமதியுடைய ஆயுதங்களை யும் முற்றாக இழந்து ராணுவரீதியாய் நிர்மூலமாகி விட்டாலும்கூட -வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த இந்த மகத்தான வரலாற்றையும், கால் நூற்றாண்டிற்கு முன் தமிழர்கள் கற்பனைகூட செய்து பார்த்திராத அரசியல் உச்சநிலைக்கு தமிழினத்தை அவர் அழைத்து வந்துவிட்டதையும் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். ராஜீவ்காந்தி படுகொலையில் அவர் குற்றவாளியென்றால் அவ்வாறே இருக்கட்டும். தீர்ப்பு எழுதப்படட்டும், தண்டனையும் தரப்படட்டும். அதேவேளை சில குற்றங்களையும், சில தவறுகளையும் கடந்து அவர் படைத்த இவ்வரலாற்றி னை பெருமையுடன் சுவீகரித்துக் கொள்ளும் உரிமை தமிழராகிய நமக்கு இல்லையென்று சொல்ல எந்த அரசுக்கும், அதிகார அமைப்புக்கும் உரிமை யில்லை.

தனிப்பட்ட மனிதனாகவும், தன் வாழ்விலும் ஒரு இனத்தின் மாபெரும் நாயகனாகப் போற்றப்படும் இயல்புகள், ஒழுக்கங்கள் கொண்டிருந்தார் அவர் என்பதும் முக்கியமானது. ""தலையை குனியும் நிலையில் இங்கே புலிகள் இல்லையடா, எவனும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா'' என அவர்கள் பாடும் பாடல் மிகவும் தகுதி யானதே. ""உலகத் தமிழ் மக்கள் உங்களை தேசியத் தலைவர் எனப் போற்றுகிறார்கள். இத்தகுதியை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?'' என்று 2002-ல் நான் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில் இவரைப் போலொரு நேர்மை யான தலைவரை நாமறிந்த தமிழர் வரலாறு பெற்றிருக்கவில்லை என்ற உணர்வினை அன்றே என்னுள் உருவாக்கியது.

இதோ அவர் சொன்ன அதே வார்த்தைகள்: ""என்னை நானே மிகைப்படுத்திக்கொள் ளும் எண்ணம் எனக்குக் குறைவு. இப்படி தகுதியையெல் லாம் அடைய வேண்டு மென நான் உழைத்ததை விட என் இனத்திற்கான கடமையை செய்ய வேண்டும், எனது மக்களின் விடுதலைக்காக நான் அர்ப்பணிப்போடு போராட வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி யிருந்தது. கடமை உணர்வுதான் எனக்கு அதிகம். அதற்கு அப்பால் என்னை நானே பெரிதாக சிந்திக்கிற பழக்கம் எனக்கு இல்லை. என்னோடு கூட நிற்கும் தளபதியர், போராளிகள், அவர்களோடு போராட்ட சவால்களுக்கெல் லாம் ஈடுகொடுக்கும் எமது மக்கள் -எல்லோராலும்தான் போராட்ட சாதனைகள் உருவாக்கப்படுகின்றன''.

தொடர்ந்து நான் கேட்டேன், ""தமிழ் மக்கள் உங்களை அசாதாரணமான ஆற்றல்கள் கொண்ட ஒருவராகப் பார்க்கிறார்களே?'' -இக்கேள்விக்கு அவர் தந்த பதில் எனது வாழ்வில் பெற்ற நேர்காணல் பதில்களிலெல்லாம் அற்புதமானது. ""எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்''. என்னே தெளிவு. என்னே நேர்மை! என்னே தன்னம்பிக்கை!

முல்லைத்தீவு பேரழிவிலிருந்து தங்களையும் விடுதலைப் போராட்டத்தையும் தற்காத்துக்கொள்ள ஒரே ஒரு வாய்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இருந்தது. கடந்த ஜனவரி 24 அன்று வன்னிப்பரப்பிலுள்ள கல்மடு குளத்தை புலிகள் உடைத்துவிட நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் பலியான செய்தியை நக்கீரன் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். கல்மடு குளத்தைவிட பன்மடங்கு பெரியது இரனைமடு ஏரி. இரனைமடு ஏரியை உடைத்திருந்தால் ஊழிப்பெருக்குபோல் பெருவெள்ளம் புறப்பட்டு வன்னிப் பரப்பு முழுதையும் விழுங்கி பூநகரி வரையுள்ள மரம், செடி, உயிர் அனைத் தையும் அழித்துத் தீர்த்திருக்கும். மிகக் குறைந்தபட்சம் 40,000 சிங்கள ராணுவத் தினர் செத்து மிதந்திருப்பர். அவர்தம் பல்லாயிரம் கோடி பெறுமதியுடைய ஆயுதங்கள், ராணுவ கட்டுமானங்களும் புதையுண்டு போயிருக்கும். இந்த மரண அடியிலிருந்து அடுத்த பத்து ஆண்டு களுக்கு சிங்கள ராணுவம் எழும்பியிருக் காது.

ராஜபக்சே சகோதரர்களின் அரசிய லும் முடிந்திருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தளபதிகள் இறுதி அஸ்திர மாக இரனைமடு ஏரியை உடைக்கும் ஆலோசனையை முன்வைத்தபோது யோசனைகளுக்கு இடம் கொடுக்காம லேயே பிரபாகரன் சொன்னாராம், ""நீங்க சொல்றது சரிதான். இரனை மடுவெ உடைச்சா சிங்கள ஆர்மிகாரனுக்கு மரண அடி கொடுக்கலாம். ஆனால் வன்னியின்றெ பொருளாதாரமும் அதோட போகும். அடுத்த நூறு ஆண்டுக்கு அந்த மண்வளத் தையும் விவசாய பொருளாதாரத்தையும் ஒருத்தராலயும் மீட்டெடுக்க முடியாது.

நம் வன்னி சனம் எத்தனையோ கஷ் டங்கள்பட்டு விடுதலைப்போராட்டத் தோடு நிக்கிறாங்கள். அந்த சனத்துக்கு நாம் இப்படியொரு துரோகம் செய்ய ஏலாது.'' பேரழிவு நெருங்கிவந்த பொழுதில்கூட தனது மக்களின் வாழ்வுக்கான ஆதார வளங்களை அழித்து தன்னையும் இயக்கத்தையும் பாதுகாக்க மறுத்த இந்த மாமனிதனா பயங்கரவாதி? ஐயப்படும் அன்பர் களுக்கும், ஆங்கில ஊடகத்து அந்நியர்களுக்கும் இவற்றையெல் லாம் எடுத்துரையுங்கள். அவர்கள் வனைவு செய்த பயங்கரவாத வர்ணஜாலங்களுக்கு அப்பால் இதயம் கொண்டதொரு மனி தன் பிரபாகரன் என்பதை உரத்துச் சொல்லுங்கள். 


நன்றி : நக்கீரன் 
Read More

Monday

தேசிய தலைவர் வீர மரணம் அடைந்தாரா இல்லையா ?

சிங்கள இனவெறி ராணுவத்துடன் தேசிய தலைவர் பிரபாகரன் நேரடியாக போரிட்டு 17 ம் தேதி வீர மரணம் அடைந்தார் என அனைத்துலக விடுதலை புலிகளின் தொடர்பாளர் பத்மநாபன் தெரிவித்துள்ளார் .

இதே பத்மநாபன் தான் 19 தேதி தலைவர் நலமுடன் உள்ளார் நான் அவருடைய பாதுகாப்பு தளபதிகளிடம் பேசினேன் என்றார் . இந்த செய்தியையடுத்து தமிழர்கள் தங்கள் சோர்வுகளை மாற்றி எம் தலைவன் உயிரோடிருக்கிறார் என்ற மன நிம்மதியோடு இருந்தனர் . இந்த நிலையில் நேற்றைய செய்தி . முதலில் ராணுவம் அறிவித்த போது நாம் மறுத்தோம் , பின்னர் உடலை காட்டினார்கள் அப்போதும் மறுத்தோம் , இப்போது பத்மநாபன் சொல்லுகிறார் இப்போதும் மறுக்கிறோம் .
                                 தேசிய தலைவர் பிரபாகரன்
உண்மையில் தேசிய தலைவர் உயிரோடிருக்கிறாரா இல்லையா என்பது ஒவ்வெரு தமிழர்களுக்கும் தெரிய வேண்டிய ஓன்று . தேசிய தலைவர் அவர்கள் ஒவ்வெரு தமிழர்கள் நெஞ்சிலும் இருக்கும் மாவீரன் . களத்தில் போரிடும் போது வீர மரணம் நடந்தே தீரும் . அது தான் தமிழனுக்கு பெருமை . தலைவரின் வீர மரணத்தை மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது தேசிய தலைவர் உயிரோடில்லை என்ற போது சிங்களர்களின் ஆட்டம் கொஞ்ச நஞ்சமில்லை .

தேசிய தலைவர் உயிரோடிருக்கிறார் என பத்மநாபன் அறிக்கையை மறுக்கும் அய்யா பழ. நெடுமாறன் மற்றும் மதிப்பிற்குரிய வைகோ அவர்களே உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா தேசிய தலைவர் உயிரோடிருக்கிறார் என்பது . இல்லை வேறு யாராவது தலைவருடன் தொடபில் இருப்பவர்கள் தகவல்கள் தந்தார்களா உறுதியாக தெரிந்தால் சொல்லுங்கள் எங்களை போன்ற நம்பிக்கை மட்டும் தான் உங்களுக்கு இருந்தால் நம்புகிறோம் என்று சொல்லி முடியுங்கள் . ஒவ்வெரு தமிழ் ஆதரவு இணைய தளங்கள் ஒவ்வெரு விதமாக செய்திகள் போடுகின்றன .யார் சொல்வதை நம்புவது என்ற குழப்பமே மேலோங்கி உள்ளது விடுதலை புலிகளின் அனைத்துலக உளவு துறை தலைவர்  அறிவழகன் தலைவர் உயிரோடிருக்கிறார் என இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அறிக்கை விட்டார் . இப்போது பத்மநாபன் முன்னுக்கு பின் முரணாக அறிக்கை விடுகிறார் .

மனம் நம்ப மறுத்தாலும் தலைவர் உண்மையிலேயே வீர மரணம் அடைந்தால் நாம் அவருக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டும் . எதையுமே அந்த காலங்களிலே நிறை வேற்ற வேண்டும் . எம் தலைவனுக்கு வீர வணக்கம் செலுத்த நாதியில்லை என  நினைக்க தோன்றும் .  

கவலையோடு உண்மை நிலையை தெரிந்து கொள்ள ஆசைப்படும் ஒரு தமிழன்
Read More

Thursday

முல்லை காட்டுக்குள் தளபதிகளுடன் தலைவர் பிரபாகரன் - புதிய தகவல்கள்

முல்லை வன பகுதியில் தளபதிகளுடன் தலைவர் பிரபாகரன் தப்பிச் சென்றுள்ளதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

Read More

எம் போராட்டம் தொடரும் - காணொளி

Read More

Wednesday

வதந்திகள் வலம் வரும் உலகமடா ?

இன்று இரவு தொலை காட்சிகளில் தேசிய தலைவர் பிரபாகரன் பேசுகிறார் என்று குறுஞ்செய்தி மூலமாகவும் இணைய தளம் மூலமாகவும் ஒரு செய்தி பரவி கொண்டிருக்கிறது . இது எந்த அளவிற்கு உண்மை என்றே தெரியாத நிலையில் சிலர் தளராமல் பரப்பி வருகின்றனர் .

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு  தேசிய தலைவர் இறந்து விட்டார் என்றும் . அவருடைய உடல் கருகி விட்டது என்றும் சிங்கள அரசுகள் சொல்லி வந்தன . இதை விடுதலை புலிகள் மறுத்த நிலையில் தேசிய தலைவரை போன்ற உடலை காட்டினார்கள் . இதில் காட்ட பட்ட உடல் தலைவரின் உடல் இல்லை என்பதும் இது சிங்களத்தின் போலியான நாடகம் எனவும் ஆதாரபூர்வமான சந்தேகங்களால் வெளிக்காட்டினார்கள் தமிழ் உணர்வாளர்கள் .


சிங்கள ராணுவம் திட்டமிட்டே மனித உயிர்களின் இன படுகொலையை மறைக்கவே தலைவர் பிரபாகரன் இறந்ததாக பொய் செய்திகளை பரப்பியது . சிங்கள அரசின் நாடகத்திற்கு பலியாகி மனம் தளர்ந்து தங்களின் போராட்ட வலிமையை குறைக்க செய்ய சிங்களம் இப்படியான ஜோடிக்கப்பட்ட பொய் கதைகளை கட்டவிழ்த்து விடுகிறது .

அந்த நிலையில் தான் சிலர் இன்று இரவு தேசிய தலைவர் தொலை காட்சிகளில் தோன்றி பேசுகிறார் என ஒரு செய்தியை பரப்புகிறார்கள் . எதற்கு அந்த குறிப்பிட்ட தொலை காட்சிகளுக்கு விளம்பரமா இல்லை சிங்கள அரசின் மற்றொரு உளவியல் போரா என சிந்திக்க தோன்றுகிறது ? அப்படியே தேசிய தலைவர் பிரபாகரன் பேசுவதாக இருந்தாலும் பேசிய பின்னர் நாம் இதை பற்றி எழுதலாமே . ஒரு செய்தி உறுதியாக தெரியும் முன்னால் நாம் அதை பரப்புவதை நிறுத்துவோம் .

வதந்திகள் வதந்திகளாகவே இருக்கட்டும் சிங்கள அரசின் இனபடுகொலைக்கு எதிராகவும் தமிழர்களின் உரிமையை பெறவும் மனம் தளராமல் போராடுவோம் தேவையான நேரத்தில் தலைவர் பிரபாகரன் மக்கள் முன் வருவார்
Read More

Sunday

தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் தொடர்பான செய்திகளை நம்ப வேண்டாம்: வைகோ

பிரபாகரன் தொடர்பாக வெளிவரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நடைபெற்ற லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட வைகோ தோல்வியடைந்தார். இவரது தோல்வியால் மனமுடைந்த அக்கட்சியின் தொண்டர் அய்யனார் தீக்குளித்தார். சிகிச்சைக்காக அவர் மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அய்யனாரை அப்போலோ மருத்துவனையில் பார்த்து அவரிடம் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ ஓட்டுபதிவு அன்று ஓட்டுசாவடிகளில் நான் சென்று பார்த்த போது மக்கள் என்னை பார்க்க தயங்கினர். அப்போதே அவர்கள் விலைக்கு வாங்கப்பட்டுவிட்டனர் என்று யூகித்தேன். தேர்தல் தோல்வியால் என் மனம் வருத்தம் அடையவில்லை, முன்பைவிட இனி கட்சி வேலையில் அதிகம் ஈடுபடுவேன். விருதுநகர் தொகுதியில் பதிவான ஓட்டுக்களை விட கூடுதலாக 24,000 ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.


தற்போது பிரபாகரன் குறித்து வெளிவரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்திய அரசும், இலங்கை அரசும் சேர்ந்து இலங்�யில் போரை நிறுத்த முயற்சிக்கவில்லை, இதனால் ஏராளமான பேர் கொல்லப்பட்டனர், மீதமுள்ள 60,000 பேரயும் கொல்ல முயற்சிக்கின்றனர். அவர்களை காப்பாற்ற அமெரிக்கா போன்ற நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்

Source : Dinamalar
Read More

Saturday

தமிழகத்திற்கு வேண்டும் ஒரு பிரபாகரன்

இன்றைய இளைய சமுதாயத்தில் பிரபாகரன் ஒரு இருபத்தொன்றாம் நூற்றாண்டின் ஹீரோவாகவும் , ஒரு மாவீரமானவனாகவும் தான் தெரிகிறான் .

மேலும் படிக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.தமிழகத்திற்கு வேண்டும் ஒரு பிரபாகரன்
 
Read More

Send your Status to your Facebook