• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts

Tuesday

உணமையை மறைத்து பேசும் சுபவீக்கு செந்திலதிபன் கண்டனம்

மாவீரர் திலகம் பிரபாகரன் தாயார் பார்வமதி அம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தது பற்றி சுப.வீ.உண்மைகளை மறைத்து எழுதி இருக்கிறார்.

பக்கவாதம், சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த பார்வதி அம்மாள், முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின் ,முள்வேலி முகாமில் இருந்தார்.பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை அவர்கள் மறைந்த பிறகு அம்மாவின் உடல் நிலை மோசமடைந்தது. இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் முயற்சியால் பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக மலேசிய நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மலேசிய அரசு குறுகியகால விசா வழங்கியதால் ,அம்மாவின் தொடர் சிகிச்சைக்காக தலைவர் பிரபாகரனின் அக்கா வினோதணி கனடாவில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்பினார்.

ஆனால் கனடாவில் மருத்துவ நடைமுறைகளில் சிக்கல் இருப்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. பின்னர் அம்மாவை தமிழ்நாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது என்று சிவாஜிலிங்கம், அதற்கான ஏற்பாடுகளை செய்தார். இந்திய அரசிடம் உரிய அனுமதி பெறப்பட்டது.

தமிழகத்தில் அம்மா எங்கே தங்கி சிகிச்சை எடுக்கப் போகிறார் என்று வெளியுறவுத்துறை கேட்டபோது பழ.நெடுமாறன் இல்லத்தில் தங்குவதாக அவரது வீட்டு முகவரி அளிக்கப்பட்டது.
அதன் பிறகே இந்தியா பார்வதிஅம்மாவுக்கு விசா வழங்கியது.

2010, ஏப்ரல் 16 ஆம் தேதி மாலை விமானத்தில் அம்மாவும்,அவருக்கு த் துணையாக விசயலட்சுமி எனும் செவிலியரும் மலேசியாவிலிருந்து சென்னை வந்து சேர்ந்தனர். பார்வதிஅம்மாள் வந்த செய்தியை முறைப்படி தமிழக அரசுக்கு மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரியப்படுத்தினர்.

அம்மா வருகை பற்றி அய்யா நெடுமாறன் அவர்கள் தலைவர் வைகோவுக்கு மட்டும் தகவல் தந்திருக்கிறார். விமான நிலையத்திற்கு 16.04.2010 இரவில் வைகோ,நெடுமாறன் இருவரும் சென்ற போது,தமிழக காவல்துறையினர் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
விமான நிலையத்தில் தமிழக காவல்துறை குவிக்கப்பட்டது.

இதனிடையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை தமிழகத்தின் ஆட்சியாளர்(???) தொடர்பு கொண்டு தமிழ்நாட்டில் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு தமிழக மக்கள் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு,மாநில தி.மு.க அரசு மீது கோபமாக உள்ளனர். இந்த நிலையில், பிரபாகரன் தாயார் இங்கு வந்து தங்கினால் நி லைமை கட்டுமீறிப் போகும்.எனவே பார்வதி அம்மாள் சென்னையில் தங்கி மருத்துவம் பார்க்க அனுமதிக்க க் கூடாது என்று கூறினர்.

அதற்குப் பிறகு விமானத்திலேயே 5 மணி நேரம் காத்திருந்த பார்வதி அம்மாளை மத்திய அரசு அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால் மீண்டும் மலேசியாவுக்கு போக வேண்டிய சூழல் ஏற்பட்டு, பின்னர் அங்கிருந்து ஈழம் சென்று,உடல்நலன் பாதிக்கப்பட்டு மறைந்தார்கள்.

இதுதான் நடந்த உண்மைகள்.
சுப.வீ.அவர்களுக்கு சில கேள்விகள்.
மத்திய அரசு அம்மா வருகைக்கு அனுமதி அளித்தது தி.மு.க அரசுக்கு த் தெரியாதா?
முதல்வருக்குத் தெரியாமல் ஒரு நிகழ்வு நடந்து விடுமா?மத்திய திமுக அமைச்சர்களுக்கும் தெரியாதா?
முதல்வர் கருணாநிதி சார்பில் மத்திய அரசிடம் பார்வதி அம்மாவுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்ட செய்தி வந்த போது மத்திய அரசு அப்போது மறுப்பு தெரிவிக்கவில்லையே ஏன்?

1990 களில் நாங்கள் பார்த்த பேராசிரியர், தோழர் சுப.வீ.உருவம் மட்டும் மாறவில்லை.
தமிழ் உள்ளமும் அல்லவா மாறி விட்டது! இவ்வாறு மதிமுக அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

Read More

Sunday

செயல் ஜோக்ஸ் வெளி நடப்பு

செயலு : "சார், என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு.."

பேங்க் மேனஜர்: "பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க.."

செயலு : "நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்.." 😎😎😎

---------------------------------------------------------------

செயலு : நான் இந்த இடத்தில இருந்து வெளிநடப்பு செய்கிறேன்

செயலு மனைவி துர்கா : ஒழுங்கா படு சனியன மணி ராத்திரி 12

😜 😜 😜
Read More

Thursday

அதிமுகவுக்கும் திமுகவுக்கும் லோக் ஆயுக்தா விளையாட்டு பொருளா?

மக்கள் நல கூட்டணி வலு பெற்று மக்கள் ஆதரவு பெருகியதும்.  மக்கள் நல கூட்டணி என்ன வாக்குறுதிகளை வைத்ததோ அதெல்லாம் டிரெண்ட் ஆனதையடுத்து அதையே திமுகவும் அதிமுகவும் தேர்தல் அறிக்கையாக வைத்துள்ளது...

அவர்களின் தேர்தல் அறிக்கையை வைத்தே அதிமுகவையும் திமுகவையும் தோற்கடிக்க வேண்டிய தேவை அதிகரிக்கிறது..

1. ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம்...

இதை ஊழல் அதிமுக ஊழல் திமுக செய்யாது.  ஏனெனில் இரண்டு கட்சிகளுமே ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளன..

2. பூரண மதுவிலக்கு

இதையும் இரண்டு கட்சிகளும் செய்யது.  ஏனெனில் அதிமுக ஆட்சியில் திமுக சாராய ஆலையிலிருந்து சாரய கொள்முதலும் திமுக ஆட்சியிலிருந்து அதிமுக சாராய ஆலையிலிருந்து சாராய கொள்முதலும் செய்யும் இவர்கள் இருவரில் எவர் வந்தாலும் சாராய கடைகள் பூட்டாது...

தமிழகத்தின் மிக முக்கிய தேவை இவை இரண்டும்.  இவை நிறைவேற மக்கள் நல கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்...
Read More

Wednesday

என்னவாகும் தமிழகம்?

தப்பி தவறி திமுக ஆட்சி வந்தால் என்னவாகும்?

👉மீண்டும் அரசுடைமையாக்க பட்ட கேபிள் டிவி கருணாநிதி குடும்பத்தினர் கையில் செல்லும்

👉மாவட்டம் தோறும் திமுகவினர் அப்பாவி மக்களின் நிலங்களை மிரட்டி அபகரிப்பு செய்வார்கள்

👉விவசாய நிலங்களை அழிக்கும் மீத்தேன்,  ஷேல் கேஸ் திட்டங்கள் செயல்படுத்த படும்.  அதன் ஒப்பந்ததாரர்களாக கருணாநிதி குடும்பத்தார் இருப்பார்கள்

👉டாஸ்மாக் விரிவுபடுத்த பட்டு மேலும் பல சாராய ஆலைகளை திமுகவினர் திறப்பார்கள்

👉சினிமாதுறை கலாநிதி வசமாகும்.  விஜய்,  அஜீத், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை மிரட்டி வாங்குவார்கள்

👉காவல்துறை ரவுடிகளின் கூடாரமாக மாறும்.  ஊழல் தலைவிரித்தாடும்..

👉அரசு நிர்வாகங்கள் முழுவதும் லஞ்சமயமாக்கபடும்

👹அதிமுக அரசு மீண்டும் அமைந்தால் என்னவாகும்?

👉பஸ் கட்டணம்,  பால் விலையுயர்வு நியாயபடுத்தப் படும்.. மீண்டும் விலையுயரும்

👉பண புழக்கம் அடியோடு நின்று விடும்

👉ஊழல் சர்வ சாதாரணமாக மாறி விடும்.  லஞ்சம் தேசியமயமாகும்

👉கடைசி வரை 7 தமிழர்கள் விடுதலையாக மாட்டார்கள்..

👉முதல்வர் வீட்டிலேயே முடங்கி விடுவார்

👉டாஸ்மாக் மேலும் விரிவு படுத்த படும்..  குடிப்பது கட்டாயமாக்க படும்..

👉வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்..

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

போதும் அதிமுகவும் திமுகவும்...

ஊழலற்ற,  மதுவற்ற நல்லாட்சி அமையட்டும். இதுவரை இல்லாத வகையில் இம்முறை தான் மக்கள் நல கூட்டணி மெகா கூட்டணியாக அமைந்துள்ளது..  ஆதரிப்போம்..

மாற்றத்தை நாம் உருவாக்குவோம்.. ஊழல்வாதிகளுக்கு இனி இடமில்லை என்பதை நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவோம்...  .....

#ThisTime4MNK

அனைவருக்கும் பகிருவோம்...
Read More

Thursday

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை மக்கள் நல கூட்டணி தேர்தல் அறிக்கை



மக்கள் நல கூட்டணி தேர்தல் அறிக்கை இன்று தாயகத்தில் வெளியிடப்பட்டது.  அதில் முக்கிய அம்சங்கள்..

மக்கள் நல👬👬கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு.
👉கூட்டணி ஆட்சி அமைப்போம்
👉 லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும்
👉சேவை வரி உரிமை சட்டம்
👉 பூரண மது விலக்கு
👉தொடக்க கல்வி முதல் கல்லூரி வரை இலவசக் கல்வி
👉வேளான் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரிப்பு
👉கல்வி கடன் ரத்து
👉பால் விலை குறைக்கப்படும்
👉 படித்த பெண்களுக்கு வீட்டுக்கொருவருக்கு அரசு வேலை
👉 நெசவாளர் கடன் தள்ளுபடி
👉 மீனவர்கள் பாதுகாப்பு
👉 இலவச மினரல் குடிநீர்
👉 இஸ்லாமிய அப்பாவி கைதிகள் விடுதலை
👉மீனவர்களுக்கு ஓய்ஊதியம்
👉 சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு தடுக்கப்படும்
👉 மத வன்முறைகளை தடுக்க உருதியான நடவடிக்கை
👉கல்வி மற்றும் வேலைவாய்பில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு
👉 தாழ்த்தப்பட்டவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிப்பு
👉 மகளிர் சுய உதவி குழு கடன் ரத்து
👉குடும்பத்தில் ஒரு இளைஞருக்கு அரசு வேலை உறுதி செய்யப்படும்
👉 திருநங்கைகளுக்கு இலவச குடியிருப்பு.
👉அரசு அனைத்து அலுவலங்களிலும் அம்பேத்கர் புகைப்படம் வைக்கப்படும்.
👉 மணல் கொள்ளைகள் தடுக்கப்படும்.
👉கிராமங்களில் விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்தப்படும்
👉மகாத்மா ஊரக வளர்ச்சி திட்டத்தில் ரூ 250 வழங்கப்படும்.
👉 இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து தமிழர்களும் விடுதலை
👉 வெளிநாட்டு தமிழர் நல அமைச்சகம் தொடங்கப்படும்
👉 மதவெறி சாதிவெறி சக்திகளை எதிர்போம்
👉அனைத்து கனிம வளங்களும் பாதுகாக்கப்படும்
👉 69 % இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும்
👉மருத்துவ காப்பீடு இலவச பேருந்து
👉பதிரிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள்.
👉மக்களை தேடி அரசு என்பது உறுதி செய்யப்படும்
👉சட்டமன்ற தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
👉 அரசு அலுவலங்களில் அனைத்து சான்றிதழ்களும் லஞ்சம் இல்லாமல் வழங்கப்படும்
👉பொது கண்காணிப்பு குழு
👉 ஊழலை ஒழிக்க முதலைமைச்சர் அலுவலகம் வரை கடுமையான சட்டம்.
👉மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கு தலித்துகளுக்கான சலுகைகள் வழங்கப்படும். மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை .
Read More

Saturday

தமிழகம் சிறையிலிருந்து விடுபடுமா ?

தமிழகத்தில் இரண்டு முதல்வர்கள், இருவருமே சிறைக்குள் இருக்கிறார்கள் என்பது போன்று விமர்சனங்கள்,  கிண்டல்கள்  சமூக உடகங்களில் வந்த வண்ணம் உள்ளன.  

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற  நாள் முதலே தமிழக அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. நான்கு ஆண்டுகளும் நூறு கோடி ருபாய் அபராதமாக தண்டனை விதிக்க பட்ட காரணத்தால் அந்த நேரம் முதலே சட்ட மன்ற உறுப்பினர் , முதல்வர் பதவியை ஜெயலலிதா துறக்க வேண்டிய கட்டயாம் ஏற்பட்டது.  

இதையடுத்து புதிய முதல்வர் பொறுப்பேற்க வேண்டிய சூழல் உருவானது. இந்நிலையில் அம்மாவின் நம்பிக்கையான அடிமை தமிழக முதல்வரானார். சினிமாவை மிஞ்சும் அழுகை காட்சிகளோடு பதவியேற்ற முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் தாடியோடு வளம் வந்து கொண்டிருக்கின்றன.  

ஆனால் இன்றும் தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாகி உள்ளது. அரசு நிர்வாகம் செயலிழந்து காணப்படுகிறது. தமிழக முதல்வர்   பதவி பறி போன ஜெயலலிதாவை ஜெயா டிவி மூலமாக மக்களின் முதல்வர் என்று அழைக்க துவங்கினர். அதிமுக அடிமைகள் மட்டுமல்லாது சில்லறை கட்சிகளாக இருக்கும் வேல்முருகன் போன்றோர்கள் கூட இந்த அளவிற்கு ஒரு ஊழல் குற்றவாளிக்கு ஆதரவாக செயல் படுவது அனைவர் முகத்தையும் சுளிக்க செய்தது..  

பன்னீர் செல்வம் முதல்வரானதும் அம்மாவின் ஆணைகினங்க பால் விலை உயர்த்த பட்டது . இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதிமுக சார்பில் வைகோ தலைமையில் ஆவின்  பால் விலையுயர்வை கண்டித்தும் , அப்பாவி தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்ததை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் வைகோ பேசும் போது  "தமிழகத்தில் இரண்டு முதல்வர்கள்; உள்ளனர். ஒருவர் நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்டு  தற்காலிக ஜாமீனில் வீட்டு சிறையில் உள்ளார் . இன்னொருவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிறையில் இருக்கிறார் " என்றார்..  

வைகோவின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் சிறையிலிருந்து விடுபடுமா ? 

Read More

Thursday

சாக்கடையாவது அரசியல் மட்டுமல்ல நம் சமுதாயமும் தான்

தமிழகத்தில் அரசியல் காட்சிகளில் இருப்பவர்கள் வெறுமனே 10 சதவீதம் மக்கள் தான். இந்த 10 சதவீதத்தில் தான் அனைத்து அரசியல் கட்சி தொண்டர்களும் அடங்கி இருக்கிறார்கள். அதை தாண்டி 90 சதவீத மக்கள் அரசியல் சார்பற்று இருக்கிறார்கள். இந்த 90 சதவீத மக்களில் பெரும்பான்மையினர் வெற்றி பெறுபவர்களுக்கு வாக்களித்தால் தான் நம்முடைய வாக்கு பயனுள்ள வாக்காக இருக்கும் என தப்பு கணக்கு போடுகின்றனர்.

மற்றவர்கள் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட யாரை தோற்கடிக்க வேண்டும் என்பதையே பிரதானமாக கொண்டுள்ளார்கள். இப்படி ஒருவர் மீது தீராத பகையை கொண்டிருப்பதால் எளிதாக இன்னொரு வேண்டாத சக்தி திடீர் நல்லவராகி வெற்றி பெற்று விடுகிறார்.

ஒருமுறை இந்த நிலை இருந்தால் ஏற்று கொள்ளலாம் ஆனால் ஒவ்வெரு முறையும் மாறி மாறி இந்த நிலை தானே ஏற்படுகிறது. ஒவ்வெரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை வாக்களித்த நாளில் இருந்தே நம் ஏண்டா வாக்களித்தோம் என கேட்கும் நிலை..

நம் வாழ்வின் ஒவ்வெரு அசைவையும் இன்று அரசியல் தான் தீர்மானிக்கிறது. இது படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை சரியான புரிதல் இல்லை. பெரும்பாண்மை மக்களிடம் அந்த புரிதல் இல்லாத காரணத்தால் தான் சில ஊழல்கள் நடைபெற்றால் கூட பொதுமக்களே இதெல்லாம் சகஜம் என்று சொல்லி கடந்து போகின்றனர்.

இன்னும் சிலர் ஒரு படி மேல் சென்று இவர்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் என்று நம்மிடமே திருப்பு கேட்பார்கள்.. இப்படி திருப்பி கேட்பதால் தானே அதிமுகவும், திமுகவும் ஒருமுறை செய்த அதே தவறை மீண்டும் செய்ய துணிகிறது.

90 சதவீத மக்களின் வாழ்க்கை நிலையை மீதி 10 சதவீதத்தினர் தீர்மானிப்பதை நாம் எப்படி ஏற்று கொள்வது? ஒரு நாடு வளமான நாடாகவும், மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அரசாகவும் அமைய வேண்டும் என்றால் நல்லவர் ஆட்சி நடை பெற வேண்டும்.

மாற்றத்தை தட்டி கழிக்கும் வேறு சிலர் சொல்வது எல்லோரும் வாய்ப்பு கிடைக்கும் வரை தான் நல்லவர்களாக இருப்பார்கள் என்று. ஏன் காமராஜர் வாய்ப்பு கிடைத்த பிறகும் நல்லவராக ஆட்சி செய்ய வில்லையா? அறிஞர் அண்ணா வாய்ப்பு கிடைத்த பிறகும் நல்லவராக ஆட்சி செய்ய வில்லையா ?

கொள்கை ரீதியான ராஜதந்திரம் மாறி குறுக்கு வழி ராஜதந்திரம் எப்போது தமிழகத்தில் வந்ததோ அன்றிலிருந்து தானே கொள்கை மாறி கொள்ளை பிரதானமானது.. கொள்கை ரீதியான ஆரோக்கிய அரசியலுக்கு இருந்த வரவேற்பு போய் ஏமாற்று, பித்தலாட்டம், கொள்ளையடித்தல் இவையனைத்திற்கும் ராஜ தந்திரம் என்று பெயர் போட்டது ஏன்?

ஆட்சி இருக்கும் போது பணம், அதிகாரம் மூலம்   யாரையும் விலைக்கு வாங்கி விடலாம் என்ற ஆணவத்தில் ஒரு தலைமையும், ஆட்சி இல்லாத போது தன் வாரிசுக்கு பதவி வாங்க யார் காலிலும் விழலாம் என்ற ஆரோக்கியமற்ற அரசியல் தமிழகத்தில் நிலவி வருவர்தகு காரணம் அதிமுகவோ, திமுகவோ அல்ல. அவற்றிற்கு தேர்தல் தோறும் அங்கீகாரம் கொடுக்கும் வாக்காளர்களாகிய நாம் தான்.

அரசியல் வேண்டாம் என்கிற நாம் வாக்களிக்காமலா இருக்கிறோம். அரசியல் கட்சிகளால் நடத்த படும் காட்சி ஊடகங்களையும், தினசரிகளையும் நம்பி அவர்கள் வெளியிடும் செய்திகள் மூலம் யாரோ ஒருவருக்கு வாக்களிக்கிறோம். இதனால் சாக்கடையாவது   அரசியல் மட்டுமல்ல நம் சமுதாயமும் கூட.

 அரசியல் என்பது மக்களுக்காக சேவை செய்யும் புனிதமான பணி தானே தவிர தன் குடும்பத்தையும், தன்னையும் வளபடுத்தி கொள்ள கூடிய இடமல்ல என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வில்லை. அவர்களை புரிய வைக்க வேண்டிய பொறுப்பு மக்களாகிய நமக்கு அல்லவா இருக்கிறது..

அரசியல் அறிவோம்! மாற்றம் உருவாக்குவோம்!
Read More

Wednesday

சங்கரன் கோயில் சவால் 26 அமைச்சர்களுக்கு போட்டியாக 38!

சங்கரன்கோவிலுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கடந்த 10-ம் தேதி சென்னையில் கூடியது, ம.தி.மு.க. பொதுக் குழு. கட்சியின் இணையதள நண்பர்கள் 100 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தார்கள். கூட்டம் நிரம்பி வழிந்ததால், அனைவரிடமும் உற்சாகம் பொங்கி வழிந்தது.

கட்சியின் பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து தேர்தல் நிதியளிப்பைத் தொடங்கி வைத்தார். உடனே, பலரும் மேடையை நோக்கி முண்டியடித்தனர். அப்போது, மைக் பிடித்த திருச்சி ஷேக்முகமது, ''என்னுடைய நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒரு நாளைக்கு இரு முறை டயாலிசிஸ் செய்தாக வேண்டும். இதற்காக மட்டும் தினமும் 10 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. நம் இயக்கத்துக்கு இது நெருக்கடியான காலம் என்பதால், எல்லோரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும்'' என்று சொல்லி இரண்டு லட்சம் நிதி கொடுக்க... திடீரெனக் கூட்டம் விக்கித்து நின்றது. அதைத் தொடர்ந்து பொதுக்குழுவில் மொத்தம் 46.75 லட்ச ரூபாய் தேர்தல் நிதியாக சேர்ந்தது.

செந்திலதிபன் பேசியபோது, ''ஓர் ஆண்டுக்கு முன்பு நடந்த 19-வது பொதுக் குழுக் கூட்டம், மிகவும் இறுக்கமாக இருந்தது. கூட்டணியில் நம்முடைய கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்கிற கேள்வி எல்லார் மனதிலும் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால், நாம் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஆனது. ஆனால், தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடி இருக்கிறோம். கடலூர் சேதத்தைப் பார்வையிடப் போனபோது வைகோவிடம் நிறையப் பேர், அவரை எம்.பி-யாகவே நினைத்துக்கொண்டு, 'நாடாளுமன்றத்தில் எங்கள் பிரச்னையை எடுத்துச் சொல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்கள். இந்த நம்பிக்கைதான் நமக்குக் கிடைத்துள்ள வலிமை'' என்று குறிப்பிட்டார்.

அடுத்துப் பேசிய மல்லை சத்யா, ''காகத்துக்குப் பகலில் வலிமை, ஆந்தைக்கு இரவில் வலிமை. நிலத்தில் யானைக்கு வலிமை. நீரில் முதலைக்கு வலிமை. சங்கரன்கோவில் இடைத்தேர்தல், நம்மை வஞ்சித்தவர்களை வீழ்த்துவதற்கான ஒரு வாய்ப்பு. போட்டியாளர்களை வீழ்த்திக்காட்டும் வலிமை நம்மிடம் இருக்கிறது. அதைக் களத்தில் காட்டுவோம்'' என்று சூளுரைத்தார்.

நாஞ்சில் சம்பத் காரசாரமாகவே பேசினார். ''18 ஆண்டு கால ம.தி.மு.க. வரலாற்றில், ஒரு முக்கியமான கட்டத்தை இப்போதுதான் கடக்கப்போகிறோம். வருகிற நாட்கள் நமக்கான வசந்தகாலம். கவிஞர் தாமஸ் கிரே சொன்னதுபோல, 'சந்தர்ப்பங்கள் கிடைக்காவிட்டால், எந்த மனிதனும் சரித்திரம் படைக்க முடியாது’. அந்த சந்தர்ப்பம், நமக்கு இப்போது வாய்த்துள்ளது. மக்கள் இப்போது, வைகோ மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா நாடகம் முடிவுக்கு வருகிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலைச் சந்திக்க 26 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து இருக்கிறார் ஜெயலலிதா. இதன்மூலம், வைகோவின் வெற்றியை ஜெயலலிதா ஒப்புக்கொண்டு விட்டார்'' என்று பேசியவர், திடீரென டிராக் மாறி, ''சிலர் இருட்டடிப்பு செய்வதால், நம்மைத் தோற்கடித்துவிட முடியாது. என் மனைவியின் தாலிக்கொடியை விற்றுப் பணம் தருகிறேன். தலைவா, நீ நமக்கெனத் தனித் தொலைக்காட்சி தொடங்கு'' என்று ஆக்ரோஷத்தோடு சொல்ல, அத்தனை பேரும் கைதட்டி வரவேற்றனர். மேடையில் இருந்த 'இமயம்’ ஜெபராஜ் மட்டும் நெளிந்தார்.

இரவு 7 மணிக்குப் பேசவந்த வைகோ, ''நம் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. ஏழைத் தாய்மார்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். புதிய இளைஞர்கள் தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்றாக ம.தி.மு.க-வை மக்கள் நினைக்கிறார்கள். மத்திய அரசு தமிழகத்தை, தமிழர்களை வஞ்சித்து வருகிறது. தமிழினத்துக்கு எதிரான மத்திய அரசின் துரோகத்தில் தி.மு.க-வுக்கும் பங்கு உண்டு. அதே சமயம், எட்டு மாத கால அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் படும் வேதனைகளும் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. பால் விலை, பஸ் கட்டணம் எல்லாம் விஷம் போல ஏறிக்கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், அ.தி.மு.க-வுக்குத்தான் வெற்றி என்று சொல்லும் ஜெயலலிதா, வரட்டும் சங்கரன்கோவிலுக்கு! இந்தத் தொகுதியின் மூலை, முடுக்கெல்லாம் நமக்கு அத்துப்படி. இப்போதே அதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தொடங்கி விட்டார்கள். ஜெயலலிதாவின் ராசி எண் ஏழு வரும்படியாக, 34 பேர் கொண்ட அ.தி.மு.க. தேர்தல் குழு, 7-ம் தேதி கூட்டம் போடுகிறார்கள். 7-வது வார்டில் 7 நிமிடங்கள் வாக்கு கேட்டார்கள். தலைமைச் செயலகத்தை காலி செய்தது போல 26 அமைச்சர்களை வைத்து உருட்டி மிரட்டி விடலாம் என்று நினைக்கிறார். இவர்கள், திருமங்கலம் இடைத்தேர்தலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடியவர்கள். காசு பணம் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சித்தால், நானே களத்தில் நிற்பேன். திருச்செந்தூர் இடைத்தேர்தல் நடந்தபோது, எம்ஜிஆரின் மந்திரிகளையே கண்ணில் விரலைவிட்டு ஆட்டியவன் நான். அமைதியான முறையில் நியாயமாக வாக்கு கேட்போம். வன்முறை நிகழ்த்தப்பட்டால், உரிய பதிலடி கொடுப்போம். அதற்கான வியூகங்களை இப்போது வெளியில் சொல்ல முடியாது'' என்று சஸ்பென்ஸ் வைத்து, உரையை முடித்தார் வைகோ.

வைகோவின் ஏரியா என்பதால், ம.தி.மு.க-வுக்கு இந்தத் தேர்தல் மானப்பிரச்னை. அதனால், கட்சியின் 38 மாவட்ட அமைப்புகளுக்கும் பகுதி பகுதியாகப் பொறுப்பைப் பிரித்து, செயல் திட்டத்தோடு காத்திருக் கிறார்கள்.

அனல் பறக்கப்போகிறது!

நன்றி  :ஜூனியர் விகடன்
Read More

Friday

முல்லை பெரியாறு அணை போராட்ட களம் காண வாய்ப்பில்லாதவர்களுக்கு ஒரு வாய்ப்பு

தமிழகத்தின் ஐந்து மாவட்ட வாழ்வாதாரத்தை காக்க நாள் தோறும் லட்ச கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி கொண்டிருக்கின்றனர். நம்மில் பலர் இந்த போராட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்க வில்லையே என்ற கவலை இருக்கும்.   முல்லை பெரியாறு அணையில் நம் பக்க நியாயங்களை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 

பாராமுகமாய் இருக்கும் மத்திய மன்மோகன் அரசுக்கு ஓட்டு மொத்த தமிழர்களும் அணையை காக்க உணர்வுடன் போராடுகிறார்கள் என்பதை காட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். தமிழகத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் கொண்ட காள்புணர்வே கேரளா ஆட்சியாளர்களின் மன நிலை முல்லை பெரியாறு அணையை மட்டும் கைப்பற்றி விட்டால் ஐந்து மாவட்ட மக்களின் எதிர் காலத்தையும் தலைமுறையையும் வறுமைக்கு கொண்டு செல்ல சிறிது சிறிதாக திர்ட்டமிடுகிறது கேரளம். 

மக்கள் மத்தியில் நாளை வரும் ஆபத்துக்களை அயராது தளராது விளக்கி வைகோ, அப்பாஸ்   , நெடுமாறன் போன்றோர்களின் பிரச்சாரங்கள் தான் இன்று மக்களை தன்னெழுச்சியாக போராட வைத்திருக்கிறது. இன்று இளைஞர்கள் முதல் எல்லா தரப்பும் முல்லை பெரியாறு அணையை காக்க உறுதி எடுத்திருப்பதை நினைக்கும் போது தமிழகம் உணர்வினை இழந்து போகவில்லை என்ற நிம்மதி கிடைக்கிறது. 

முல்லை பெரியாறு அணையை காக்க என் பங்கிற்கு என்ன செய்யலாம் என நினைத்தது கொண்டிருக்கும் தமிழகத்தின் மீது அக்கறை கொண்ட நல்லோர்களுக்கு போராட்டத்தில் பங்கு பெற ஒரு வாய்ப்பு . கீழ் வரும் அலைபேசி எண்ணில் உங்களுடைய அலைபேசி மூலம் ஒரு தவறிய அழைப்பு (Missed Call )கொடுங்கள் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரிடம் சொல்லி தவறிய அழைப்பை கொடுக்க வையுங்கள் . நம் எதிர் பார்ப்பு ஒரு கோடி அழைப்புகள் இதன் மூலம் ஓட்டு மொத்த தமிழகமும் அணையை காக்க உறுதியாக இருக்கிறது என்பதை உணர்ச்சியற்ற மத்திய அரசுக்கு நம் உணர்வுகளால் தெரிவிக்க முடியும். 

செயல் படுங்கள் தோழர்களே தவறிய அழைப்பு விடுங்கள் மறந்தும் தவறிய அழைப்பு(Missed Call) விட தவறி விடாதீர்கள். காலம் தாழ்த்த வேண்டாம் இன்றே செய்வோம் இப்போதே செய்வோம் . Missed Call கொடுக்க வேண்டிய அலை பேசி எண் -  928    1000 152. 
Read More

Wednesday

முதலமைச்சராக முன்னிறுத்தப்பட வேண்டியவர் வைகோ:தமிழருவி மணியன்

தமிழகத்தில் புதிய அரசியல் பாதைக்கு அடித்தளம் அமைக்கும் காரியங்களை தமிழருவி மணியன் தொடங்கி இருக்கிறார். காந்திய மக்கள் இயக்கத் தலைவரான மணியன், 'அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அணியை உருவாக்கப் போகிறேன்’ என்று களம் இறங்கி உள்ளார். அதற்கான முதல் கூட்டம் இன்னும் இரண்டு வாரங்களில் திருப்பூரில் கூட இருக்கிறது.

ஜனவரி 7-ம் தேதி கூடும் அந்தக் கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்

ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரை ஒரே மேடையில் பேசவைக்க இருக்கிறார். இந்த நிலையில் தமிழருவி மணியனை சந்தித்தோம்.

''ஜெயலலிதா ஆட்சி அமைந்து ஆறு மாதங்களே கடந்துள்ள நிலையில், மாற்றாக ஓர் அணியை உருவாக்க வேண்டிய அவசர அவசியம் என்ன?''

''தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, என் எழுத்தையும் பேச்சையும் பயன்படுத்தினேன் என்பதைவிட... மக்கள் விரோத ஊழல் நிறைந்த தி.மு.க. ஆட்சியை, எந்த அரசியல் நெறிமுறைக்கும் உட்படாத தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம். அதற்கு 30 சதவிகிதம் வாக்கு வங்கி உள்ள அ.தி.மு.க-வை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தம். பெரிய தீமையை அகற்ற சிறிய தீமையுடன் சமரசம் செய்ய வேண்டி இருக்கிறது. ஜெயலலிதா எவ்வித மாற்றத்துக்கும் உட்படாதவர் என்பதைத் தேர்தலுக்கு முன்பே நான் சொல்லி இருக்கிறேன். சிறுத்தையின் உடம்பில் உள்ள புள்ளிகள், சாகும் வரை எப்படி மறையாதோ, அதைப் போல ஜெயலலிதாவின் பண்பு நலன்கள் இறுதிவரை மறையாது. 'சசிகலா என்கிற இரும்புக் குண்டைக் காலில் கட்டிக்கொண்டு இருக்கும் ஜெயலலிதாவால் நேர்மையாகவும் உண்மையாகவும் வேகமாகவும் செயல்பட முடியாது’ என்று முன்பு எழுதினேன். இப்போது சசிகலா வட்டாரம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க விஷயம்தான். ஆனால், தமிழகத்தின் ஆரோக்கியமான அரசியலுக்கு இது மட்டுமே போதாது என்பதால், இந்த மாற்று அணிக்கான முயற்சியில் இறங்கி உள்ளேன்!''

''அது எப்படி சாத்தியம் ஆகும் என்று நினைக்கிறீர்கள்?''

''அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கின்றன. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்வைத்தும், அரசின் தவறான நடவடிக்கைகளை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தியும், ஒரே மேடையில் தொடர்ந்து ஓர் அணியில் நின்று போராட, அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத கட்சிகள் முன்வர வேண்டும். என்னைப் பொறுத்த வரையில், முதலமைச்சராக முன்னிறுத்தப்பட வேண்டியவர் வைகோ. முதலில், ம.தி.மு.க., இடதுசாரி இயக்கங்கள் பொதுத்திட்டத்தின் அடிப்படையில் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து போராட வேண்டும். இந்த அணி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகாத அணி. ஊழல் மலிந்த கட்சிகளுக்கு மாற்றாக இவர்களால் இருக்க முடியும். மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.

ஜனவரி 7-ம் தேதி எங்கள் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா, தமிழக அரசியலில் மாற்று அணியை உருவாக்கும் கால்கோள் விழாவாக நடத்தப்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உட்பட்ட கட்சிகள் இந்த மாற்று அணியை இரு கரம் கூப்பி வரவேற்க வேண்டும்.''

''உங்களுக்கு முன்பே பா.ம.க. மாற்று அணி கருத்தைச் சொல்லி இருக்கிறதே?''

''பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் இயக்கமாக வளர்ந்து ஒரு குடும்பத்தின் நலன் காக்கும் சாதாரணக் கட்சித் தலைமையாக அது சரிந்து விட்டது.

மருத்துவர் ராமதாஸின் அறிக்கைகளில் உள்ள சமுதாய உணர்வு, அவரின் கட்சியில் அவர் காட்டும் அணுகுமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் அரங்கில் நம்பகத்தன்மையை இழந்து விட்டவர் ராமதாஸ். எனவே, பா.ம.க. தலைமையில் அணி அமைந்து ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது பார்வையற்றவர் தடியை ஊன்றி, எவரெஸ்ட் சிகரம் ஏறிவிட முடியும் என்பதைப் போலத்தான்.''

''மாற்று அணியில் விஜயகாந்துக்கு இடம் இருக்கிறதா?''

''இரண்டு பெரிய கட்சிகளிலும் இடம் இல்லாதவர்கள் எல்லாம் முக்கியத்துவம் தேடி வந்து சேர்ந்த இடம்தான் தே.மு.தி.க. விஜயகாந்தின் மனைவியும் மைத்துனரும்தான் அந்தக் கட்சியின் விதியை நிர்ணயிக்கிறார்கள். போஸ்டர், கட் அவுட் வைப்பதில் இருந்து, துதி பாடுவது வரை இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் இவர்கள், எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை. அது, எந்த சித்தாந்தத்தாலும் கட்டப்பட்ட கட்சி அல்ல. விஜயகாந்த் எனும் மனிதரின் விளம்பரத்தில் மட்டும் குளிர் காயும் அந்தக் கட்சி, இதுவரை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் இயங்கவில்லை. ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் பாதிக்கக்கூடிய முல்லைப் பெரியாறு பிரச்னையில் சட்டமன்றத் தீர்மானம் இயற்றும் கூட்டத்துக்குக்கூட, மிகத்தாமதமாக வந்த ஒரே தலைவர் விஜயகாந்த். இந்த ஒரு சம்பவமே அவருடைய பொறுப்பு உணர்வை வெளிப்படுத்துகிறது. தே.மு.தி.க. என்பது மின்னலைப் போல் தோன்றி புயலைப் போல மறையக்கூடிய ஓர் அரசியல் கட்சி.''

''வைகோவை அதிகப்படியாக முன்னிறுத்துகிறீர்களே?''

''அகத்திலும் புறத்திலும் தூய்மையான ஒரு மனிதனே ஆட்சித் தலைவராக வர வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அந்த இடத்தில் வைகோவைத் தவிர வேறு ஒருவரையும் வைத்துப் பார்க்க முடியவில்லை. அதற்காகத்தான் அவரை மாற்றுத் தலைவராக முன்னிறுத்துகிறேனே தவிர, நான் ம.தி.மு.க-வின் கொள்கைப் பிரச்சாரகனும் இல்லை. எந்தத் தனிமனிதனையும் துதிபாடி வயிறு வளர்க்க வேண்டிய நிலையிலும் நான் இல்லை!''

- இரா. தமிழ்க்கனல்,

படம்: வி.செந்தில்குமார்
Read More

Sunday

ஜெயலலிதாவின் அராஜகம் எல்லை மீறுகிறது .

இன்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தி.நகரில் நடக்க இருந்த மாவீரர் நாள் பொதுக் கூட்டம் அதிமுக அரசின் அராஜகத்தால் நிறுத்தப் பட்டுள்ளது. காவல் துறை அனுமதியோடு நடக்கவிருந்த பொதுக்கூட்டத்தை ஆதிமுக அரசு தடை செய்திருக்கிறது.  இந்த மாவீரர் நிகழ்வில் வைகோ சிறப்புரை வழங்க இருந்தார்.  

இந்நிலையில் மதியம் முதலே கூட்ட ஏற்பாடுகளை செய்து வந்த மதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோரை கைது செய்திருக்கிறது காவல் துறை. மக்களாட்சியில் அவரவர் கருத்தை சொல்ல உரிமை இருக்கும் போது ஜனநாயக ரீதியாக பொதுக் கூட்டம் நடத்த ஜெயலலிதா தலைமையிலான அரசு அனுமதிக்கவில்லை என்றால் இதை விட காட்டு மிராண்டி தனம் வேறு என்ன இருக்க முடியும். 


பூனை கண்ணை மூடி கொண்டு பால் குடிக்குமாம் அப்படி குடிக்கும் பூனை நினைக்கும் நம்மை யாரும் பார்க்க வில்லை என்று. அப்படி தான் இருக்கிறது அதிமுக அரசின் நடவடிக்கைகள் மாவீரர் நிகழ்வை நடத்த விடாமல் இருந்தால் மாவீரர்களை யாரும் நினைவு கூற மாட்டார்கள் என்று ஒரு வேளை ஜெயா நினைக்கலாம். 

ஆண்டுதோறும் உலக தமிழர்களின் ஒப்பற்ற தினமான நவம்பர் 27 யார் தடுத்தாலும் தமிழ் ஈழ விடுதலைக்காக உயிரை கொடுத்த எங்கள் உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் மாவீரர்களை நினைக்காமல் இருக்க முடியாது. 

ஒவ்வெரு முறை ஆட்சிக்கு மாறி மாறி வரும் கட்சிகளால் தமிழினத்திற்கு எதிராக தான் செயல் படுகிறார்கள். கடந்த முறை தமிழ் ஈழத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தியா துணையோடு கொலை செய்ய பட்ட பொது தமிழின தலைவர் என்று சொல்லும் கருணாநிதியால் கொலைக்கு துணை போக தான் முடிந்தது.          தமிழ் உணர்வாளர்களை சிறையில் அடிப்பதை கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி செய்து வருகின்றனர்.  

தமிழகத்தை கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி ஆட்சி அமைப்பது தான் தமிழகத்திற்கு சாபக்கேடு. தமிழர்களின் உரிமைக்கு பேச முடியவில்லை . ஜெயலலிதா இதையெல்லாம் ஜெயித்து வந்தால் செய்வார் என்பது வைகோவை எப்போது கூட்டணியிலிருந்து நீக்கினாரோ அப்போதே தெரிந்து விட்டது தான். அன்றிலிருந்தே இதே ஜெயா திருந்த வில்லை என்பதை சொல்லியிருக்கிறோம். ஆனால் என்ன செய்வது கருணாநிதி என்னும் விச பாம்பை விரட்ட இன்னொரு விச பாம்பிற்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் பாம்பின் விஷம் இப்போது வெளியேறுகிறது. 


மாற்றம் ஓன்று உருவாக வேண்டும் கருணாநிதி ஜெயலலிதாவுக்கு எதிராக ஓட்டு மொத்த தமிழ் உணர்வாளர்கள் ஒரே கொள்கை கொண்ட கட்சியினர் ஓன்று பட்டு நிற்க வேண்டும். மாற்று அணிக்கான தலைமை நேர்மையாகவும் கொள்கை உறுதி கொண்டவராகவும் இருக்க வேண்டும். 

தமிழருவி மணியன் சொன்னதை போல் மாற்று அரசியலுக்கான துவக்கம் இன்றே துவங்கட்டும். இந்த மாவீரர் நாளில் தமிழின விடுதலைக்காக உயிரை விட்ட மாவீரர்களுக்கு நாம் செய்யும் கடமையாக மாற்று அரசியல் துவங்கட்டும். 

ஓன்று பட்டு ஜெயாவின் அராஜக ஆட்சியை எதிர்ப்போம்.......

தமிழ் விடுதலைக்கு தங்கள் உயிரை கொடுத்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !           
Read More

சங்கரன்கோயில் இடைத்தேர்தல் யாருக்கு வாய்ப்பு ?

தமிழக அமைச்சர் கருப்பசாமி மறைந்ததை அடுத்து சங்கரன் கோயில் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது . இன்னும் தேதி அறிவிக்காமலே சங்கரன்கோயில் இடைத்தேர்தல் களம சூடு பிடிக்க துவங்கியிருக்கிறது .   

பத்திரிக்கைகளிலும் விவாதங்களிலும் சங்கரன்கோயில் இடைத்தேர்தல் சூடு பிடிக்க துவங்கியிருக்கிறது . அதற்கான காரணம் கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிடாத மதிமுக சங்கரன்கோயில்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இடைத்தேர்தலுக்கு புதிய இலக்கணத்தை வகுத்து தமிழகத்தில் மோசமான முன்னுதாரணத்தை காட்டியது .  "திருமங்கலம் பார்முலா" என்று மோசடி வெற்றிக்கே முன்னுதாரணம் திமுக என்பதை இடைத்தேர்தல்கள் வரும் போது  நினைவு படுத்தாமல் இருக்க முடியாது . 

திமுகவிற்கு சிறிதும் சளைத்தது அதிமுக அல்ல என்பதை காட்டும் விதமாக வெற்றி பெற்றவுடன் தன்னுடைய பழைய அதே குணாதிசயங்களை கொண்டு அதே ஆணவத்தோடு ஆட்சி நடத்தி வரும் அதிமுக இந்த தேர்தலில் திமுகவின் "திருமங்கலம் பார்முலாவை " கடை பிடிக்க கூடும்.   
இந்த தொகுதிக்கு அதிமுக தன்னை தயார் படுத்தும் விதமாக இலவச மிக்சி , கிரைன்டர்கள்  அமைச்சர்கள் முன்னிலையில் இந்த தொகுதியில் கொடுக்க துவங்கி விட்டார்கள். இடைத்தேர்தலுக்கு முன்பு அணைத்து வீடுகளுக்கும் கொடுத்து முடிக்க வேண்டும் என்பது மேலிட உத்தரவாம் . 

இந்த நிலையில் நேரடியாக அதிமுகவோடு களத்தில் குதிக்கிறது மதிமுக. இந்த தொகுதியின் ஒரு சிறப்பு என்னவென்றால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த தொகுதி. இப்போதே இடைத்தேர்தலை சந்திக்க மதிமுக களத்தில் இறங்கி விட்டது. ஒன்றிய வாரியாக செயல் வீரர்கள் கூட்டம் கூட்டி தேர்தல் பற்றிய ஆலோசனைகள் நடந்து வருகிறது. 

கடந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக போட்டியிடாமல் இருந்ததால் நடுநிலையாளர்கள் மத்தியில் மதிமுவிற்கு நல்ல வரவேற்பு இருந்ததை காண முடிந்தது . அதே போல் உள்ளாட்சி தேர்தலில் மதிமுக தனித்து போட்டியிட்டு எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியை பெற்று அதிமுக திமுகவிற்கு அடுத்த படியான இடங்களை போட்டியிட்ட இடங்களில் பெற்றிருக்கிறது. 

சங்கரன்கோயில் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கட்சிகள் வாங்கிய ஓட்டுகளை அடிப்படையாக வைக்கும் போது ஓரளவிற்கு போட்டியில் யார் இருக்கிறார்கள் என்பதை கணிக்க முடியும். சங்கரன்கோயில் தொகுதியில் ஒரு நகராட்சி இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் ஒரு பேரூராட்சி உள்ளன . இதில் அதிக வாக்குகளை கொண்ட குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மதிமுக தான் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது . இன்னொரு ஊராட்சி ஒன்றியமான  மேலி நிலித நல்லூர்      ஒன்றியத்தில் அதிமுகவிற்கு அடுத்த இடத்தில் மதிமுக வாக்கு சதவீதங்கள் பெற்றிருக்கிறது. மதிமுகவிற்கு அடுத்து தான் திமுக தேமுதிக போன்ற கட்சிகள் வருகின்றன.  

மேலும் ஒரு பேரூராட்சி இந்த தொகுதியில் இருக்கிறது அந்த பேரூராட்சியில் மதிமுக வெற்றி பெற்றிருக்கிறது . மற்றும் சங்கரன்கோயில் நகராட்சியும் இந்த தொகுதியில் தான் வருகிறது. சங்கரன்கோயில் நகராட்சியில் இந்த தேர்தலில் மதிமுக சொல்லும்படியான வாக்குகள் வாங்க வில்லை . அங்கு போட்டியிட்ட வேட்பாளர் சரியில்லாததால் வாக்குகள் பெரிய அளவில் விழ வில்லை என சொல்லப்படுகிறது .
உள்ளாட்சி தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்கு சதவீதங்களை பார்க்கும்  போது அதிமுக முதல் இடத்திலும் மதிமுக இரண்டாவது இடத்திலும் திமுக மூன்றாவது இடத்தில் வருகிறது. இது தான் மதிமுகவினருக்கு உற்சாகம் கொடுத்திருக்கிறது. ஒரு சில சதவீதங்கள் மாறி மதிமுகவிற்கு வந்தாலே மதிமுக வெற்றி பெற்று விடும் என்று கணக்கு போடுகின்றனர்  மதிமுகவினர்.  

இப்போதைய சூழ்நிலையில் அதிமுக அரசு மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். மக்கள் நல பணியாளர்கள் நீக்கம், பஸ் கட்டணம் , மின் கட்டண உயர்வு , பால் விலை உயர்வு போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளின் அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்கலாம். மக்கள் எதிர்ப்பை காட்ட இந்த தேர்தலை பயன் படுத்தினால் மதிமுக வெல்வது உறுதி.      
Read More

Wednesday

உரிமைக்காக மதுரை நிரம்பி வருகிறது - நேரடி ரிப்போர்ட்

மதுரை காளவாசல் இதுதான் இன்றைய மதுரை மக்களின் பேச்சாக இருக்கிறது . ஆம் உரிமைக்காக மதுரை மக்களால் நிரம்பி வருகிறது . முல்லை பெரியாறு அணையை உடைக்க நினைக்கும் கேரளா அரசை கண்டித்தும் தமிழகத்திற்கு துரோகம் செய்யும் மத்திய அரசை கண்டித்தும் , முல்லை பெரியாறில் உரிமை காக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வலியுறுத்தியும் வைகோ தலைமையில் மதுரை காளவாசல் பகுதியில் பிரமாண்டமான உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது .
இங்கிலாந்து பொறியாளர் பென்னிகுயக் அவர்களால் தமிழர்களுக்காக தமிழர்களின் வியர்வையும் ரத்தமும் சிந்தி கட்ட பட்டது. 999 ஆண்டுகளுக்கு உரிமை பட்ட அணையை கேரள அரசு சதி செய்து உடைக்க முற்படுகிறது . கடந்த திமுக ஆட்சி தமிழர்களுக்கு எதிராக செயல் பட்ட காரணத்தால் தமிழர்களுக்கு சாதகமாக இருந்த நிலை இன்று கேரளாவிற்கு சாதகமாக ஆகி இருக்கிறது . 

கேரளா அரசு இந்திய இறையாண்மைக்கு எதிராக போட்ட தீர்மானத்தை ஆதரித்து மத்திய அரசும் அதே போல் ஒரு தீர்மானத்தை போட முற்படுகிறது . இந்த நிலையில் இதுவரை காலமும் முல்லை பெரியாறில் தமிழர் உரிமைக்காக போராடி வருகிற வைகோ இன்று மீண்டும் உண்ணாவிரதம் இருக்கிறார் . முன்னர் நடந்த போராட்டங்கள் போல் அல்லாமல் இன்று மிக பெரிய எழுச்சி மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது . 

மக்கள் வெள்ளம போல் திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள் . இதுவரை நேரம் வரை பதினையாயிரம் பேர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர் . பேரணி போன்று கட்சி கொடிகளை ஏந்தி வந்து கொண்டிருக்கிறார்கள் . இந்த போராட்டத்தை கொளத்தூர் மணி துவங்கி வைத்தார் . கத்தோலிக்க அமைப்புகள் இந்திய கம்முனிஸ்ட் கட்சி தலைவர்கள் விவசாய அமைப்புகள் வைகோவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அப்பாஸ் அவர்கள் முன்னிலை வகித்து வருகிறார்கள் .

Read More

Sunday

ஏன் மாற்றம் வேண்டும் அரசியல் தொடர் -பகுதி 1

தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க துவங்கியிருக்கிறது. ஆட்சி செய்தவர்களால் ஏமாற்ற பட்ட தமிழர்களும் ஆட்சி செய்பவர்களால் ஏமாற்ற பட்டு கொண்டிருக்கும் தமிழர்களால் இன்று மாற்றம் வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க துவங்கியிருக்கிறது. 

மாணவர்கள் , இளைஞர்கள் , கல்வியாளர்கள் , பாமரர்கள் என்று எங்கும் குறைவில்லாதவாறு சிந்திக்கும் மக்கள் மத்தியில் ஒரு வித விரக்தி தெரிகிறது. ஒவ்வெரு ஐந்து ஆண்டுகளுக்கும் கடமையை செய்யும் விதமாக ஒரு சடங்காக தேர்தல் வந்து முடிகிறது. வாக்களித்து வாக்குகள் எண்ணி முடிந்து தாங்கள் வாக்களித்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் ஒரு வித ஏமாற்றம் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது . இந்த நிலை கடந்த மூன்று நான்கு தேர்தல்களில் தொடர்கிறது. 

இரண்டு தாசாப்தங்களாக ஜெயலலிதா , கருணாநிதி இருவரும் தான் மாறி மாறி ஆட்சி செய்கின்றான, இதனால் தமிழகத்தில் ஏற்பட்ட ஆக்கபூர்வ வளர்ச்சிகள் தான் என்ன ? இவர்களை தவிர்த்து வேறு யாரும் ஆட்சிக்கு வர முடியாதா ? ஒரு தமிழக முதல்வரால் தமிழகத்திற்கான தொலைநோக்கு திட்டங்களை தீட்ட முடியாதா ? என்று பல கேள்விகள் எழுகின்றன. இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும் வகையில் என் அறிவுக்கும் என சிந்தனைக்கும் எட்டிய அளவில் இந்த தொடர் கட்டுரையை எழுதலாம் என நினைக்கிறேன். 

தமிழகத்தில் நடுநிலையான ஊடகங்கள் இல்லாதது கூட மக்களின் சிந்தனைகளை தூண்டாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம் . ஒவ்வெரு ஊடகங்களும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் சாதகமாகவும் , பாதகமாகவும் நடந்து கொள்கின்றன . மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை மறைத்தும், மக்களுக்கு தேவையற்ற செய்திகளை எழுதியும், தங்கள் ஆதரவு கட்சிகளின் கருத்துக்களை திணித்தும் வருகின்றன .   

இதுவரை நடந்த இரண்டு கட்சிகளின் ஆட்சிகளும் மக்களின் நன்மதிப்பை பெற்றதில்லை. ஒவ்வெரு முறை தேர்தலின் போதும் ஆட்சி செய்யும் கட்சிகள் செய்யும் தவறுகளால் இன்னொரு கட்சி தேர்ந்தெடுக்கப் படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இதே நிலைமை தான் நீடித்து வருகிறது. 

இந்த இருவரில் யாருமே இதுவரை தோல்வியிலிருந்து பாடம் கற்பித்ததாக தெரியவில்லை . எதற்காக கடந்த முறை தோற்கடிக்கப் பட்டார்களோ அதே தவறை மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் செய்கின்றனர். குற்றம் செய்யும் ஒருவருக்கு கொடுக்கிற தண்டனை காலம் என்பது "திருந்தி வாழ்வதற்காகவே அன்றி தவறு செய்வதற்கான இடைவெளி அல்ல". 

தமிழக அரசியலில் நாகரிகம் என்பது இல்லமால் போய் விட்டது . ஆக்கபூர்வ அரசியல் மலையேறி பல காலம் ஆகி விட்டது. "அரசியல்" என்பது மக்களுக்கு சேவை செய்யும் வகையில் புனிதமாக கருத வேண்டிய வார்த்தை.   ஆனால் இன்று அரசியல் என்றாலே அலறி அடித்து ஓடும அளவிற்கு தரம் கேட்டு காணப்படுகிறது. அரசியலின் புனித தன்மையையும் தரத்தையும் மீட்க இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். 

அரசியல் பற்றி ஆழ்ந்த சிந்தனை இளைய சமுதாயத்தில் உருவாக வேண்டும். அரசியலை ஆக்க பூர்வமாக மாற்ற வேண்டிய காலம் நெருங்கி விட்டது. இக்காலகட்டம் என்பது மாற்றம் உருவாக வேண்டிய காலகட்டம். மனதில் மாற்றம் வேண்டும் என்ற சிந்தனை இப்போதே உருவாகி செயல் படுத்த வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம் . 

அடுத்து வரும் நாட்களில் "ஏன் மாற்றம் வேண்டும்" என்பதை மேலும் பல செய்திகளோடு தொடருகிறேன் மாற்றம் குறித்த உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகிறது.             
Read More

Wednesday

இலங்கை உள்ளாட்சி தேர்தலும் தமிழக மார்க்சிஸ்ட் கட்சியும்

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழ் ஈழ மக்கள் சிங்கள இனவெறியன் ராஜ பக்ஷேவுக்கும் , தமிழின துரோகிகள் டக்லஸ் , கருணா போன்றவர்களுக்கும் , சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்த வரையில் அந்த செய்தி தமிழக மார்க்சிஸ்ட்களுக்கும் தமிழ் ஈழ மக்களால் சொல்ல பட்ட செய்தி. 

 பொதுவுடைமை கட்சி என்று தங்களை அடையாளம் காட்டி கொள்வதும் , புரட்சி மூலம் தான் நல்லாட்சி கொடுக்க முடியும் போராட்டத்தின் மூலமாக தான் உரிமைகளை பெற முடியும் என்று சொல்லும் மார்க்சிஸ்ட் தோழர்கள் ஏனோ தெரியவில்லை தமிழ் ஈழ மக்கள் விசயத்தில் நேர் எதிராக  இருக்கிறார்கள்.


சிறுபான்மையினருக்கு ஆதரவாக போராட வேண்டும் என்று இங்கே சொல்லும் மார்க்சிஸ்ட்கள் இலங்கையில் மட்டும் பெரும்பான்மையினரோடு ஒத்து போங்கள் என்று சொல்லுகிறார்கள்.  கியூபா, ரசியா , சைனா போன்ற நாடுகளில் ஏற்பட்ட ஆயுத புரட்சியை ஆதரிப்பார்கள். அதே போல் பாலஸ்தீனத்தில் நடைபெறுகிற ஆயுத புரட்சியை ஆதரித்து இங்கே போராட்டம் செய்வார்கள். ஆனால் தொப்பிள் கோடி உறவு கொண்ட தமிழ் ஈழ மக்கள் போராடினால் மட்டும் கொச்சை படுத்துவார்கள்.

மிக தீவிரமாக ஈழ போர் நடைபெற்ற நேரத்தில் போரை நிறுத்த வேண்டும் என்று தமிழகத்தில் குரல் ஓங்கி ஒலித்த பொது மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் சொல்வார் மக்கள் வேறு புலிகள் வேறு என்று . நாம் கேட்டதோ போரை நிறுத்த வேண்டும் என்று அதை தானே அவர்களும் வலியுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தார்கள். துருக்கியில் இருவர் கொல்ல பட்டால் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தும் இவர்கள் தமிழ் ஈழத்தில் ஒரு லட்சத்தி நாற்பதாயிரம் மக்கள் கொல்ல பட்ட போது பெயருக்காவது போராட்டம் நடத்தினார்களா ? 

ஐக்கிய நாடுகள் மூவர் குழு அறிக்கை வந்தவுடன் தீர்மானம் நிறைவேற்றினார்கள். இலங்கையில் நடைபெற்ற ஆயுத மோதலில் போர்குற்றம் விளைவைத்தவர்களை குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டும் என்பதாக. அவர்களின் தீர்மானத்தில் இனபடுகொலை என்றோ சுதந்திரத்திற்காக ஆயுதமேந்தி போராடுபவர்கள் என்றோ குறிப்பிடவில்லை.  அதே விட ஓன்று பட்ட இலங்கை என்று ராஜ பக்ஷே போட வேண்டிய தீர்மானத்தை இவர்கள் போட்டார்கள். 

ஓன்று பட்ட இலங்கையா இல்லையா என்பதை அங்கு வாழும் தமிழ் மக்கள் முடிவு செய்வார்கள் அதை முடிவு செய்ய இவர்கள் யார் ? இது தான் நமது கேள்வி .....  

தமிழக சட்டமன்றத்தில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் போசும் போது கூட அங்கு வாழும் தமிழ் மக்கள் பாதிக்க படுவார்கள் என்று பேசிய மார்க்சிஸ்ட் கட்சிக்கு தமிழ் ஈழ மக்கள் சாட்டையடி கொடுத்திருக்கிறார்கள். மாக்சிஸ்ட் கட்சியினரோ தமிழர்கள் சிங்களர்களோடு கையேந்தி வாழ வேண்டும் என்று சொல்லுகிறார்கள் . வர்க்க போராட்டம் கூட ஒரு உரிமைக்கான போராட்டம் தான் அந்த போராட்டங்களை நடத்தும் மார்க்சிஸ்ட்களுக்கு ஏனோ தமிழர்களின் உரிமை போராட்டம் கசக்கிறது. 

நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தமிழர்களின் உரிமை முக்கியமா இல்லை தமிழர்களின் பொறாதார முன்னேற்றம் முக்கியமா என்ற நிலையில் தான் தேர்தல் நடைபெற்றது. விடுதலை புலிகளால் ஒன்றிணைக்க பட்ட பல்வேறு கட்சிகளை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் உரிமைக்கான குரலாகவும், மகிந்தா அணியோ  தமிழின துரோகிகளின் ஆதரவோடு பல ஆசைகளை காட்டி தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து போட்டியிட்டது. ஆனால் தமிழ் மக்களோ தங்களுக்கு உரிமை சுதந்திரம் தான் முக்கியம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றி பெற செய்துள்ளனர்.     
       
இந்த தேர்தல் முடிவில் நாம் ஒன்றை முக்கியமாக பார்க்க வேண்டும் . சிங்களர்கள் பகுதியில் மகிந்தா ராஜ பக்ஷேவின் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது ஏன் ? சிங்களர்கள் தமிழர்கள் அடிமையாவதை விரும்புகிறார்கள் அடிமை படுத்த வேண்டும் என்று துடிக்கிறார்கள். ........ இது ஒன்றே போதும் தமிழர்களும் சிங்களர்களும் சேர்ந்து வாழ முடியாது என்று.

கடைசியாக ஓன்று பட்ட இலங்கை என்று சொல்லும் அனைவருக்கும் ஒன்றை சொல்லி கொள்கிறேன் தமிழ் ஈழ மக்களுக்கு தேவை சுதந்திரம். அது கிடைத்தால் அவர்களின் அடிப்படை தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்து விடுவார்கள்.    இனியாவது மார்சிஸ்ட்கள் திருந்துவார்களா? 

புலிகள் வேறு மக்கள் வேறு அல்ல தமிழர்கள் அனைவரும் புலிகள் தான் , எங்களுக்கு தேவை சுதந்திரம் என்று உலகிற்கு காட்டிய தமிழ் ஈழ மக்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ......  

Read More

Monday

நாம் விரும்பியோ விரும்பாமலோ அரசியல் நம் மீது திணிக்க பட்டு விட்டது

ஒவ்வெரு நாளும் புது புது வரலாறுகளை காலம் உருவாக்கி கொண்டிருக்கிறது. ஆனால் சிலவற்றை தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருகிறோம்.  வரலாறுகளை நாம் உருவாக்குவதில்லை வரலாறு நம்மை உருவாக்குகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி இன்றுவரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. 



தமிழகத்தில் சமீப காலமாக மக்களால் விரும்பி ஏற்று கொள்ள முடியாத அளவிற்கு அரசியல் மாற்றங்கள் வேறு வழியின்றி மக்களால் தீர்மானிக்க படுகிறது. மக்கள் மத்தியில் புதிய சிந்தனைகள் உருவாகாததின் விளைவு தான் மக்களாலேயே நல்ல அரசை அமைக்க முடியவில்லை. மக்கள் மத்தியில் சிந்திக்கும் தன்மையை உருவாக்க வேண்டும் என்றால் மக்கள் அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தை பற்றியோ இந்தியாவை பற்றியோ கட்சிகளை பற்றியோ பேசினாலே சிலர் அரசியல் எனக்கு பிடிக்காது எனவே அரசியலை பற்றி நாம் பேச வேண்டாம் என்று ஒதுங்கி விடுவர். 

விரல் விட்டு எண்ண கூடிய அளவில் தான் அரசியல் குறித்த ஆர்வம்  மக்களிடம் இருக்கிறது.   அரசியல் பற்றி பேச வேண்டாம் என்று நினைப்பவர்கள் மத்தியில் அரசியல் குறித்து தவறான எண்ணங்கள் இருக்கிறது. அரசியல் என்றாலே அடி பிடி என்றும் , அரசியல் என்றாலே ஏமாற்று என்றும் , அரசியல் என்றாலே கட்சிக்குள்ளே போட்டி பொறாமைகள் என்ற ஊரு எண்ணமும் இருக்கிறது . 

பொதுவாக என்னை போன்ற இளைஞர்களிடம் பேசும் போது கூட அவர்கள் இப்படி பேசுகிறார்கள்.  சமூக தளங்களில் அரசியல் குறித்து பதிவு செய்யாதீர்கள் என என்னிடமே சிலர் தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பதிவுகளை பதிவுகளை பார்த்தால் எந்த ஒரு நோக்கமோ லட்சியமோ அவர்களிடம் தெரியவில்லை. ஏதோ பொழுதை போக்க நண்பர்களோடு அரட்டை அடிக்க தான் இணையம் பயன் படுத்துவதாக தெரிகிறது. 

இணையம் என்பது இன்றைய சூழ்நிலையில் மிக முக்கியமான வர பிரசாதம் என்றே சொல்லலாம். பொழுது போக்கிற்கும் அரட்டைக்கும் பயன் படுத்தலாம் தவறில்லை. ஆனால் சிறிதளவேனும் சமூக சிந்தனைகள் நமக்கு இருக்க வேண்டும் சமூகத்தின் வளர்ச்சி எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை கணக்கிடுபவராகவும் நாம் இருக்க வேண்டும். 

 மக்களாட்சி தத்துவத்தில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அரசியல் நம் மீது திணிக்கபட்டுள்ளது.                  

ஒவ்வெரு நாள் நம் வாழ்க்கை முறை முதல் நாம் சாப்பிடும் உணவு வரை அரசியல் தான் தீர்மானிக்கிறது.  அரசியலே பிடிக்காது, என்று ஒதுங்கி கொண்டாலும் ஏதோ ஒரு வகையில் நாம் அரசியலுக்கு உள்ளாக்க படுகிறோம். அரசியல் பிடிக்காது என்று சொல்லுபவர்கள் பெரும்பாலும் சொல்லும் கருத்தாக அரசியல் நேர்மையாக இல்லை என்று தான்.  அரசியலில் நேர்மையை எதிர் பார்க்கும் நாம் அரசியலை விட்டு தூரத்தில் நிற்கும் போது அது எப்படி இருக்கும்.  

ஒரு புறம் இணையத்தை பயன் படுத்துவோர் சரியாக பயன் படுத்த வில்லை என்றாலும் கடந்த நாட்களில் அரபு நாடுகளை புரட்டி போட்ட புரட்சிகள் எல்லாம் இணையம் வாயிலாக நடத்த பட்டன. அந்த நாடுகளின் இளைஞர்கள் சரியாக இணையத்தை பயன் படுத்தியதால் தான் புரட்சிக்கு பயன் பட்டது. எகிப்து , துனிசியா போன்ற நாடுகளில் நடைபெற்ற புரட்சிகள் முழுக்க முழுக்க இளைஞர்களால் நடத்த பட்டது. இளைஞர்கள் புரட்சிக்கு வித்திட்ட போது அடக்கி கொண்டிருந்த ஆதங்களை மக்கள் கொட்டி புதிய மாற்றத்தை உருவாக்கினர் . இது வரலாற்றில் முக்கிய துவம் பெற்றது. 

சிங்கள கடற்படையால் கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் கொல்ல படுவது வழக்கமாகி கொண்டிருந்தன. வட இந்தியாவில் பாட்டி கால் தவறி விழுந்தாலே பெரிய செய்தியாகும் வட இந்திய ஊடகங்கள் தமிழக மீனவர்களை கண்டு கொள்ள வில்லை. அதே நேரம் தமிழ் இணைய பயனர்கள் Twitter  மூலம் இடைவிடாது தமிழக மீனவர்கள் இந்திய அளவில் பேசும் பொருளாக செய்தார்கள். இரவு பகலென்று பாராமல் தங்களுடைய ஒவ்வெரு tweet  - டும் தமிழக மீனவர்கள் குறித்ததாக இருந்ததன் விளைவு ஓரளவிற்கு வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட காரணமாக இருந்தது. 

இணையம் மூலம் இன்று பல நன்மைகள் உருவாக்க முடியும். அரசியலில் நேர்மையை விரும்புவோர் கவனத்திற்கு என்ற பதிவின் மூலம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இணைய தள நண்பர்கள் சந்திக்க இருப்பதையும் மேலும் விரும்புவோர் சந்திக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தோம்.  Facebook மற்றும் Orkut போன்ற சமூக வலை தளங்கள் மூலமாக ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு இந்த கலந்துரையாடல் நிகழ்வினை ஏற்பாடு செய்தார்கள்.  

தமிழக அரசியலை பொறுத்தவரையில் நேர்மையான அரசியல் வாதி யார் என்றால் வைகோ பக்கம் தான் அனைவரின் கைகளும் திரும்பும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்த வகையில் கட்சி சார்பற்ற அரசியலை நேர் வழியில் கொண்டு செல்ல நினைக்கும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்துரையாடலில் பங்கு பெற்றார்கள்.    எதிர் பார்த்ததை விட அதிகமாக இளைஞர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் ஒவ்வெரு பகுதியிலிருந்தும் இளைஞர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.   

தாங்கள் கலந்து கொண்டதை குறித்து சொல்லும் பொது ஒரு நல்ல தலைவரை என் வாழ்நாளில் சந்தித்திருக்கிறேன் என்று பெருமிதம் கொள்கிறார்கள்.  ஆரோக்கிய அரசியலை மதிமுகவால் மட்டும் தான் முன்னெடுக்க முடியும் . தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று தங்கள் சொந்த பிரச்சனைகளுக்காக தொண்டர்களை ஏவி விட்டு பொது சொத்துக்களை சேத படுத்தும் தலைவர்கள் மத்தியில் பதினெட்டு ஆண்டுகள் லட்சகணக்கான தொண்டர்களோடு கட்சி நடத்தி கொண்டிருக்கும் வைகோவின் மதிமுகவால் ஒரு குண்டூசி அளவில் கூட பொது சொத்திற்கு சேதம் விளைவித்ததில்லை. 

அதே நேரம் மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்த தயங்கியதும் இல்லை . இது தானே ஆரோக்கிய அரசியல். மக்களை ஏமாற்றினால் தான் பதவி கிடைக்கும் வெற்றி பெற முடியும் என்றால் அந்த பதவி கூட வேண்டாம் என்பது தானே ஆரோக்கிய நேர்மையான அரசியல்.    நேர்மையான் அரசியல் கட்சிக்கும் நேர்மையான அரசியல் தலைவருக்கும் இன்னொரு கட்சியையும் இன்னொரு தலைவரையும் அடையாளம் காட்ட முடியாது. அப்படிஎன்றால் நேர்மையான தலைவர் வைகோ தமிழகத்தின் ஆட்சி பொறுப்பில் வர வேண்டும். நேர்மையானவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அதனடிப்படையில் ஜூலை 24 இளைஞர்கள் வைகோவை சந்தித்து கலந்துரையாடியிருக்கிரார்கள். இளைஞர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. 

கலந்து கொண்ட இளைஞர்கள் அடுத்த நிகழ்வில் மேலும் பல இளைஞர்கள் மத்தியில் இந்த செய்தியை கொண்டு சென்று இணையம் மூலம் தமிழகத்தை வளமாக்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்குவோம் என உறுதியளித்துள்ளனர். இது வரலாற்று மாற்றத்தை உருவாக்கும் புதிய வழிகோலாக அமைந்துள்ளது.     

நாம் விரும்பியோ விரும்பாமலோ அரசியல் நம் மீது திணிக்க பட்டு விட்டது . அதை நாம் தான் சுத்த படுத்த வேண்டும்.  மாற்றம் நம் கையில்      
Read More

Friday

அரசியலில் நேர்மையை விரும்புவோர் கவனத்திற்கு

அரசியல் சாக்கடை என்றுஒதுங்கி கொள்வோர் ஏராளம். இதனால் தானே மேலும் மேலும் சாக்கடையாகி வருகிறது என்று சிந்திப்பவர்கள் ஒரு சிலரே. ஒவ்வேருவருக்கு ஒவ்வெரு பாதை இருக்கும், நேரமையான அரசியல் மூலம் வளமான தமிழகத்தை கட்டியமைக்க வேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்கள் ஏங்கி கொண்டிருக்கிறார்கள். சமீப காலமாக சமூக வலை தளங்கள் மூலமாக அவற்றை வெளி காட்டி வருகிறார்கள். 


அரசியல் பற்றிய தெளிவு பெற வேண்டுமெனில் ஆழ்ந்து படிக்க வேண்டும். எல்லோரையும் படிக்க வேண்டும். எல்லா கொள்கைகளையும் படிக்க வேண்டும். மாறி மாறி வரும் அரசுகளால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை. யாருக்கு யாரும் சளைத்தவர்கள் அல்ல என்று இலவசங்களை ஒரு புறம் அள்ளி கொடுக்கும் அரசு தான் வரிகள் மூலம் மக்களை வாட்டி வதைக்கிறது. 


தமிழர்களின் இன உணர்வுகள் மங்கி போகும் அளவிற்கு ஆட்சியாளர்கள் அதிகாரத்தின் மூலம் அடக்குகிரார்கள் இதில் இரண்டு ஆட்சிகளுக்கு வேறு பாடு இல்லை. 


மக்கள் உணர்வுகளுக்கு மரியாதை கொடுப்பதிலும் சரி மக்கள் பிரச்சனைகளாக இருந்தாலும் சரி இரண்டு கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இந்த விசயங்களில் இவர்களே கூட்டணி அமைத்து கொள்கிறார்கள்.  

பல ஆண்டுகளாக தமிழர்களின் உணர்வு பூர்வமான செயல்களில் அலட்சியம் காட்டிய அரசுகள் தான் இந்த அரசுகள். அதில் முக்கியமாக 


ஈழ தமிழர் உரிமை மற்றும் இன படுகொலை , 

சிங்கள கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்ல படுவது 

இதுவரை தீர்வு கிடைக்காத காவிரி ஆறு 

தென் மாவட்டங்களை பாலைவனமாக்க நினைக்கும் கேரளா அரசின் முல்லை பெரியாறு அணை விவகாரம். 

பக்கத்து மாநிலங்களுடனான நதி நீர் பிரச்சனைகள் 

தொலை நோக்கு பார்வையற்ற ஆட்சி நிர்வாகம் 

மாணவர்களின் கல்வியோடு விளையாடும் அரசுகள் 

சாய பட்டறைகள் மூலம் எதிர்கால சந்ததிகள் பாதிக்க படுவதை குறித்து அலட்சியம் கொள்வது. 

சாய பட்டறை ஆலை நிர்வாகிகளுக்கு ஆதரவாக அரசு செயல் படுவது,      

காற்றில் நச்சு தன்மையை பரவ விட்டு அதன் மூலம் மக்களின் வாழ்க்கையை அழிக்க இருக்கும் தூத்துக்குடி நச்சு ஆலை (ஸ்டெர்லைட் )

மது  கடைகளை மேலும் விரிவாக்கி இளையோர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லுதல் 

இன்னும் எண்ணற்ற விசயங்கள் தமிழகத்தின் எதிர்காலத்தை அழிக்க கூடியதாக இருக்கிறது. திமுக , அதிமுக இரண்டு கட்சிகளும் பெரிய அரசியல் விரோதியாக காட்டி கொண்டாலும் இருவருக்குமே எண்ணங்கள் ஒன்றக தான் இருக்கிறது. காமராஜர் , அண்ணாவிற்கு பிறகு தொலை நோக்கு பார்வை கொண்ட அரசுகள் அமையாதது கூட தமிழகம் பின் தங்கியிருப்பதற்கான ஒரு காரணம். 


கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை லஞ்சமே பிரதானமாக காண படுகிறது. 


இப்படி பல விசயங்களை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் தமிழகம் இருக்கிறது . புதிய சிந்தனைகள் மூலம் தான் இவற்றை மாற்றம் முடியும் . மாணவர்கள் இளைஞர்கள் நினைத்தால் மாற்றம் உருவாக்கலாம் . மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் . 

நல்ல தொலை நோக்கு பார்வை கொண்ட நிர்வாகம் தான் தேவையே ஒழிய இலவசங்களை கொடுத்து ஏமாற்றும் நிர்வாகம் தேவையில்லை என்று மக்கள் மத்தியில் எண்ணங்களை உருவாக்க கூடிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 

ஆளுகிறவர்கள் நேர்மையாக இருந்தால் மட்டுமே மக்கள் நேர்மையாக இருப்பார்கள் என்பது முன்னோர்களின் வாக்கு. அப்படியென்றால் நேர்மையான்வர்களால் தமிழகம் ஆழ பட வேண்டும் . நேர்மையானவர்கள் அரசியலில் வர வேண்டும். 

ஆம் நேர்மையான் அரசியலை எதிர் நோக்கும் நடுநிலையாளர்கள் , இளைஞர்கள் , மாணவர்கள் , பல துறைகளை சார்ந்தவர்கள் அரசியலில் நேர்மையை கடை பிடித்து வரும் வைகோ அவர்களுடன் கலைந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 

நேர்மையை விரும்புவோர் ஆக்கபூர்வ அரசியலை விரும்புவோர் கலந்து கொள்ள்ளலாம் . விபரங்களுக்கு படத்தை பாருங்கள் .     
    
Read More

Saturday

உங்கள் மேல் எதற்கு இத்தனை கரிசனை என்கிறீர்களா?

உங்கள் மேல் எதற்கு இத்தனை கரிசனை என்கிறீர்களா? ஒரு நல்ல தலைவர் வெற்றி பெற வேண்டும் என்பது முக்கியம். அதைவிட ஒரு நல்ல தலைவர் தோற்றுப் போய் அதன்மூலம் நல்லதும் தோற்றுவிடக் கூடாதென்ற ஆதங்கம்தான் - தமிழக மக்களுக்கும் ................. 
                                                                                       >>>>>>>>>>
இலட்சியத்தில் உறுதி
பொதுவாழ்வில் தூய்மை
அரசியலில் நேர்மை

இவைதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிவிக்கப்பட்ட கொள்கைகள். அரசியல் கட்சிகளுக்கு கொள்கை என்பது கொடிபோன்ற ஒரு அடையாளம்தான். இதற்கு மேல் கட்சியின் நடவடிக்கைகளுக்கும், ஏன் கட்சித் தலைவரின் நடவடிக்கைக்கும் சம்பந்தம் இருக்கது என்பது இன்றைய நியதி.

ஆனால், வைகோவைப் பொறுத்தவைர இந்தக் கொள்கைகளை கட்சியிலும் சரி, தனது தனிமனித வாழ்விலும் சரி கடைபிடித்து வருகிறார். அதெல்லாம் சரி. இத்தனை இருந்தும் 'இப்ப வெளுத்தியா?; என்று கேட்கலாம். தமிழ்நாட்டு அரசியலில் புதிரான பல விசயங்களில் வைகோ போன்ற உறுதியும் நேர்மையும் கொண்ட தலைவர் ஏன் பெரிதாக ஜெயிக்க முடியவில்லை என்பதும் ஒன்று. இதற்குப் பதில் சற்று கொச்சையாக இருந்தாலும் நிர்வாண ஊரில் கோவணம் கட்டியவன் பித்தன் என்பதாகத்தான் இருக்க முடியும்.


தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் சினிமாக்காரர்கள் - விஜயகாந்த, சரத்குமார் உட்பட. சினிமா தொடர்பில்லாத தலைவர்கள் என்றால் அநேகமாக சாதிகட்சித் தலைவர்களாகத்தான் இருக்க முடியும். இந்த இரண்டு வகையிலும் சேராத ஒரே இயக்கத் தலைவர் வைகோதான். அவரது பிளஸ் பாயிண்ட் இதுவென்று சொன்னாலும், அதுவே மைனஸ் பாயிண்டோ என்று சந்தேகப்பட வைக்கிறது. சுதந்திர இந்தியாவில் பாரம்பரியமாக இருந்துவரும் கம்யூனிஸ்டுகள் நீங்கலாக, சினிமா-சாதி சாராத முதல் முறை அரசியவாதி வேறு எவரும் இவரளவிற்கு மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே ஒரு தாக்கத்தை உண்டு பண்ணவில்லை.

1993இல் திமுகவிலிருந்து பிரிந்தபோது அங்கே இவர் இரண்டாம் நிலைத் தலைவர். உள்ளபடியே இவர்தான் திமுகவின் ஒரிஜினல் தளபதி. வாரிசு அரசியலை விமர்சனம் செய்யப்போய் விலகவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். கருணாநிதியைப் பொறுத்தவரை அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, இரண்டாம் நிலையில் இருந்த நெடுஞ்செழியனை எம்ஜிஆர் உதவியுடன் புறம்தள்ளி சிம்மாசனம் ஏறியவர். ஏறிய பின்னால் எம்ஜிஆரையும் அவர் கணக்கு கேட்டு பிணக்கு செய்தபோது, லாவகமாக கழட்டிவிடத் தெரிந்தவர். தானாடுவதைவிட சதை அதிகமாக ஆடுமே - கட்சியில் ஸ்டாலின் வளர்ச்சிக்கு வைகோ முட்டுக்கட்டையாகி விடுவாரோ என்ற கவலையில் வைகோவை உதறத் துணிந்தார் கலைஞர். அதிலிருந்து 18 ஆண்டுகள் படாதபாடுபட்டுக் கட்சியை நடத்தி வரும் வைகோவிற்கும் 18 என்ற எண்ணுக்கும் சிறப்புத் தொடர்புண்டு. 18 ஆண்டுகள் தொடர்ந்து ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தவர். 18 மாதங்கள் விடுதலைப் புலிகள் ஆதரவிற்காக பொடாவில் சிறைவாசம் அனுபவித்தவர். பாரபட்சமில்லாமல் வெவ்வேறு காலகட்டத்தில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுடனும் கூட்டணியில் இருந்திருக்கிறார். இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் ஈழத்திற்காக சிறையிலிருந்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் tiger of parliament என்று பெயர் வாங்கியதுடன் இரா. செழியனுக்குப் பிறகு best parliamentarian என்று தேசிய அளவில் கட்சி வித்தியாசமின்றி பாராட்டப்பட்டவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த பேச்சாளர் - இலக்கியவாதி. இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகதவர். இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்து கட்சிகள் தங்கள் சுயநலத்திற்காக அவ்வப்போது தங்கள் நிலைப்பாட்டை சட்டை கழற்றுவதப்போல் மாற்றிக் கொண்டாலும் அன்றிலிருந்து இன்றுவரை ஈழத் தமிழனுக்குத் தமிழ்நாட்டில் தொடர்ந்து தைரியமாக ஒலிக்கும் உறுதியான குரல் வைகோவினுடையது. இவருடைய அரசியல் முடிவுகளை விமர்சிப்பவர்கள்கூட இவரை- இந்தத் தனிமனிதரைப் பெரிதாக விமர்சிப்பது கடினம்.

மத்தியில் ஆளும் எந்தக் கட்சியுடனும் கண்ணியமான rapport வைத்திருந்ததுடன், மத்திய அமைச்சரவையில் பங்கேற்கும் வாய்ப்பைத் தன் பிரதிநிகளுக்கு கொடுத்தவர்.

வாரிசு அரசியலை விமர்சனம் செய்த பிற கட்சித் தலைவர்கள் பலர் தங்கள் வாரிசுகளை தங்கள் கட்சியில் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இவரது குடும்பத்தினர் யாரையும் இவர் பெரிதாக அரசியலுக்குள் நுழைக்கவில்லை. பின் எங்குதான் தவறுசெய்தார் வைகோ? இவருடைய குறைபாடுகளாக மூன்று விசயங்களைச் சொல்லலாம்.

ஒன்று இவருக்குச் சரியான இரண்டாம் கட்டத் தலைவர்கள் அமையவில்லை. அப்படியே அமைந்தவர்களையும் இவர் சரியாக அனுசரித்து அவர்களைத் தக்க வைத்துக் கொள்ளத் தவறிவிட்டார் என்றே சொல்லவேண்டும். தவறு எந்தப் பக்கம் என்பதல்ல முக்கியம். அதை ஒரு தலைவர் எப்படிக் கையாண்டு சமாளிக்கிறார் என்பதுதான் சாமார்த்தியம். தமிழகம் முழுக்க அரசியல் கட்சித் தலைவர்களைப் பொறுத்தவரை, கட்சித் தலைவருக்கும் அடுத்த நிலைத் தலைவருக்கும் அதிகார இடைவெளி சற்று அதிகமிருப்பதுதான் தலைமைக்குப் பாதுகாப்பு (!) என்பது பாரம்பரியம். இவரைவிட அரசியலிலும் வயதிலும் மூத்தவர்களை இரண்டாமிடத்தில் வைத்த முடிவு எதிர்மறை விளைவுகளை உண்டாக்கியிருக்கலாம்.

இரண்டாவது இவர் மேல் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த தமிழக இளைஞர் பட்டாளத்தைச் சரியாகக் கையாளத் தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது

மூன்றாவது குறை - இவர் ஏளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர் என்று விமர்சிக்கும் அளவு இவரது அரசியல் முடிவுகளை அவரது உணர்ச்சிகள் பாதித்திருக்கின்றன. நமக்கெதிரே அநியாயம் இழைக்கப்படுக்போது பொங்கி எழுவது இயல்புதான். அதே சமயம் எங்கே பொங்க வேண்டும், எங்கே பதுங்க வேண்டும் என்கிற உபாயத்தை வைகோ தன் முன்னாள் தலைவரிடம் கற்றுக்கொண்டால் நல்லது. சுருக்கமாகச் சொன்னால் அவர் இன்னும் மகாத்மா காந்தி பாணியில் பாதயாத்திரை சென்று பல விசயங்களைச் சாதிக்க நினைக்கும் ட்ரெண்டிலிருந்து விலகி இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன் ஸ்டைலை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நேர்மையும், உறுதியும் கொண்ட ஒருவரை இப்படி மாறச் சொல்வது நியாயமா என்று கேட்கலாம். என்ன செய்வது மினி-மிடி நாகரிகம் வந்த பிறகு மடிசார் புடவை கட்டுபவர்கள் நிலைதான் வைகோவுக்கும். நல்ல கொள்கைகளை விடச் சொல்லவில்லை. நடையை மாற்றுங்கள் அவ்வளவுதான். இந்தத் தேர்தலில் எத்தனையோ தொகுதிகளில் நின்று தோற்றுப்போன கட்சிகளைவிட தேர்தலில் நிற்காமலே இருந்துவிட்டது பெரிய தோல்வி அல்ல.

ஏமாற்றமும், விரக்தியும் இயல்பாக இருக்கும்தான். ஆனால் உங்களுக்குள் ஒரு மாற்றம் கண்டால், உங்களால் மீண்டு வரமுடியும். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இல்லாவிட்டால் என்ன? மக்கள் மன்றத்தில் எதிர்க்கட்சியாகச் செயல்படுங்கள். உங்களைச் சுற்றியிருக்கும் இளைஞர்களை இரண்டாம் தலைவர்களாக்கி தோள் கொடுக்கச் செய்யுங்கள். அரசியல் வானில் எப்பொழுது வேண்டுமானாலும் காட்சிகள் மாறும்

உங்கள் மேல் எதற்கு இத்தனை கரிசனை என்கிறீர்களா? ஒரு நல்ல தலைவர் வெற்றி பெற வேண்டும் என்பது முக்கியம். அதைவிட ஒரு நல்ல தலைவர் தோற்றுப் போய் அதன்மூலம் நல்லதும் தோற்றுவிடக் கூடாதென்ற ஆதங்கம்தான் - தமிழக மக்களுக்கும்

- தமிழக அரசியல், ஜூன் 19-22, 2011     
நன்றி : கார்கோடன்                                       
Read More

Friday

தமிழ்நாடு விஜயகாந்த் போல் ஒரு விசித்திரமான அரசியல்வாதியை கண்டதில்லை


இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது'' என்கிற இச்சொற்றோடர் அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட பழைய திரைப்பட வசனம் ஆகும். ஆனால், இப்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் வசனம் எழுத வேண்டுமானால் பின்வருமாறுதான் எழுதவேண்டும்.

“தமிழ்நாடு எத்தனையோ விசித்திரமான அரசியல்வாதிகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால் விஜயகாந்த் போல் ஒரு விசித்திரமான அரசியல்வாதியை கண்டதில்லை''. இதுவரை நம் நாட்டில் மற்ற அரசியல்வாதிகள் செய்யாத எந்தத் தவறை அவர் புதிதாகச் செய்துவிட்டார்? அவருக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாமே என்று நமது தமிழக வாக்காளர்கள் சிலர் கருதுகின்றனர். பகுத்தறிந்து கேட்க வேண்டி எத்தனையோ கேள்விகளைக் கேட்கவேண்டிய தருணங்களில் நமது மக்கள் கேட்டிருந்தால் நமக்கு விஜயகாந்தைப் பற்றியெல்லாம் எழுதுகின்ற அவலநிலை வந்திருக்காது.
சாதி ஒழிப்பு, தமிழ்த்தேசியம், பெண்ணியம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் எனப் பரந்துபட்டு விவாதித்து வந்த நாம் விஜயகாந்த்துக்காக இருபக்கங்களை ஒதுக்கும் கேடான அரசியல் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நமது முற்போக்குச் சிந்தனை கொண்ட இதழ்களில் எதிர்மறையாக விமர்சிக்கக்கூட தகுதியில்லாத நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்தான் விஜயகாந்த். அந்த திரைப்படங்களின் மூலம் தனக்குக் கிடைத்த விளம்பரத்தைத் தமிழ்நாட்டு மக்களிடம் அரசியலாக்க முயற்சிக்கிறார் இந்தப் புரட்சிக் கலைஞர்(!)

யார் இந்த விஜயகாந்த்? முப்பது வருடங்களுக்கு முன் மதுரை வீதிகளில் ரஜினிகாந்தைப் போல் தானும் ஒரு பெரிய நடிகனாக வேண்டும் என்று இலட்சிய வெறியோடு கனவு கண்டவர்தான் விஜயராஜுலு என்று அழைக்கப்பட்ட இந்த விஜயகாந்த், எப்பேர்ப்பட்ட உயர்ந்த லட்சியம்(!) பார்த்தீர்களா தோழர்களே. (ரஜினிகாந்த் எப்பேர்பட்ட பகுத்தறிவு சிந்தனையாளர்(?) என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்). ரஜினிகாந்த் மீது தான் கொண்ட மோகத்தின் காரணமாகத்தான் விஜயராஜுலு என்கிற தன்னுடைய பெயரை விஜயகாந்த் என்று மாற்றி வைத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர். மற்றும் கலைஞரைப் போல் பெயர் மாற வேண்டும் என்பதற்காக “புரட்சித் தலைவர்'' பட்டத்திலிருந்து புரட்சியையும், கலைஞர் என்ற பட்டத்தையும் சேர்த்து “புரட்சிக் கலைஞர்'' என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டார். தன்னுடைய பெயரிலிருந்து, அடைமொழி வரை சுயமாகச் சிந்திக்க எதுவும் இல்லாத ஒரு தனித்தன்மை மிக்க நபர்தான் விஜயகாந்த்.

மதுரையில் அவரது நெருங்கிய நண்பர்களாக இருந்த லியாகத் அலிகான், இப்ராகிம் ராவுத்தர் ஆகிய இருவரும் இவரது சினிமா வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்தவர்கள். லியாகத் அலிகானுடைய அரசியல் அனல் பறக்கும் வசனங்களைப் பேசி மக்களிடம் கைத்தட்டு வாங்கினார். பின்னர் அந்த இரு இசுலாமிய நண்பர்களுடன் மோதல் ஏற்பட்டு விஜயகாந்த் தனித்து விடப்பட்டார்.

அதற்குப் பிறகு அவர் நடித்த (வல்லரசு, நரசிம்மா, வாஞ்சிநாதன்) பல படங்களில் இசுலாமியர் எதிர்ப்பு அரசியலை முன் வைத்தார். இந்தியாவில் பல மசூதிகள் இருக்கு. ஆனால், பாகிஸ்தானில் ஒரு இந்துக் கோயில் இருக்காடா? என்று “நரசிம்மா'' படத்தில் வெளிப்படையாகவே “இந்துத்துவ'' ஆதரவு வசனங்களைப் பேசியிருப்பார். தொழுகை செய்யும் இசுலாமியர்களை வில்லன்களாக அறிமுகப்படுத்தும் அருவடைய பல படங்கள் “தேசப்பற்று'' மிக்க படங்களாக அடையாளப்படுத்தப்பட்டன.

80களில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார் விஜயகாந்த், பெண்கள் மீதான பாலியல் வன்புணர்ச்சிக் காட்சிகளை அதிக நேரம் காண்பித்தவர்கள் என்கிற பட்டம் கொடுப்பதாக இருந்தால் விஜயகாந்த்க்கும் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் கண்டிப்பாக கொடுக்கலாம். சிவப்பு மல்லி, சட்டம் ஒரு இருட்டறை தொடங்கி பல படங்களை நாம் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். கதாநாயகனின் தங்கை மற்றும் மனைவியைப் பாலியல் வன்புணர்ச்சி கொள்ளும் காட்சிகளின் மூலம் ஆண்களின் வக்கிர உணர்ச்சிகளைக் காசாக்கிப் பார்த்தார்கள் இருவரும். தொடர்ச்சியாக இது போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அடித்தட்டு மக்களின் நாயகனாக, வர்க்கப் போராளியாக இவர் அடையாளம் காட்டப்பட்டார்.

சிவப்புச் சிந்தனையாளராகவும், தி.மு.க. அனுதாபியாகவும், சில காலம் காலத்தை ஓட்டினார் விஜயகாந்த். ரஜினிகாந்த் இனிமேல் அரசியலுக்கு வரமாட்டார் என்று திட்டவட்டமாக தெரிந்துகொண்ட பிறகு, அந்த இடத்தை நிரப்புவதற்கு, அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஊழல் கட்சிகள் என்று இவர் விமர்சித்த இருகட்சிகளில் உரிய அங்கீகாரம் கிடைக்காத பல பேர் இவர் கட்சியில் இணைந்தனர்.

இந்த லட்சியத் தொண்டர்களை வைத்துக்கொண்டும், தனது கறுப்புப் பணத்தை வைத்துக் கொண்டும் “ஊழலை ஒழிப்போம்" என்று நகைச்சுவையாகப் பேசிவருகிறார் விஜயகாந்த். திராவிட இயக்க அரசியல், தமிழ்தேசிய அரசியல், இந்துத்துவ அரசியல் என்று தனக்கென்று எந்தக் கருத்தியலும் இல்லாதவர், இன்னும் சொல்லப்போனால் இது குறித்த எந்தப் புரிதலும் இல்லாதர் படங்களின் மூலம் தனக்குக் கிடைத்த அறிமுகமே தனது அரசியல் வாழ்விற்கான மாபெரும் தகுதியாக நினைத்துக் கொள்பவர்,

வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பது பௌதீக விதி. விஜயகாந்திடம் வெற்றிடமாக இருக்கும் அரசியல் அறிவை “இந்துத்துவ சக்திகள்'' (சோ, சுப்பிரமணியசுவாமி, சங்கரமடம்) நிரப்பிக் கொள்ளும் கட்சி ஆரம்பிக்கும் போதே கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட சங்கரமடாதிபதி வாழ்த்து தெரிவித்தார் என்றால் அதன் உள் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் “தேசியம்'', "முற்போக்கு'', “திராவிடர்'', “கழகம்'' இந்த நான்கு வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்குக் கூட அர்த்தம் சொல்லத் தெரியாத விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும் தலைவரும் ஆவார். இந்துத்துவ அமைப்புகள், ரஜினி ரசிகர் மன்றம், அஜித் ரசிகர் மன்றம் மற்றும் பிற்போக்கு அமைப்புகளையும் தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் நமது தாழ்த்தப்பட்ட தோழர்கள் இந்த அரசியல் காமெடியர் விஜயகாந்த்தையும் தாங்கி கொண்டிருக்கின்றனர்.

வடமாவட்டங்களில் வன்னியர் வகுப்பைச் சார்ந்தவர்களும், “பறையர்'' என்று அடையாளப்படுத்துகின்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் விஜயகாந்த்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் “அருந்ததியர்கள்'' என அழைக்கப்படுபவர்களும் விஜயகாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக உள்ளனர். சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு என்ற எந்தச் சமூகநீதி அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத இந்த அரைவேக்காட்டுத் தலைவன் பின்னால் தாழ்த்தப்பட்ட மக்கள் அணி வகுத்து நிற்பது முற்போக்குச் சிந்தனையாளர்களை வேதனையடையச் செய்கிறது. விஜயகாந்த் பொதுமேடையில் தனது வேட்பாளரை அடிப்பதைக் கூட, அக்கட்சி தொண்டர்கள் நியாயப்படுத்தவே செய்கின்றனர். ஏனெனில் ஒரு முதலாளிக்கு தனது தொழிலாளியை அடிக்கும் உரிமை இருக்கிறது என்ற நிலவுடைமைச் சமூக மனப்பான்மையே விஜயகாந்த் தொண்டர்களிடம் காணப்படுகிறது.

விஜயகாந்த்தின் வெற்றி என்பது நிலவுடைமைச் சமூக மனநிலைக்குக் கிடைக்கும் வெற்றியாகும். விஜயகாந்த்தின் அரசியல் இருத்தல் என்பது, சமூகம் வளர்ச்சி நிலையில் பின்னோக்கிப் பயணிக்கிறது என்பதைப் பட்டவர்த்தமாகக் காட்டுகிறது. 

பெரியாரியம், அம்பேத்கரியம், பெண்ணியம், பின்நவீனத்துவம், மற்றும் மார்க்சியம் எனப் பல்வேறு பரிமாணங்களில் பயணித்துக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், விஜயகாந்த் போன்ற கோமாளி ஆளுமையின் பின்னால் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் இருப்பது வருத்தப்பட வைக்கிறது. நம்முடைய அரசியல் எதிரி என்று அடையாளப்படுத்தும் அளவிற்குக் கூட தகுதியில்லாத விஜயகாந்த் பற்றி இக்கட்டுரைக்கு என்ன பெயர் சூட்டலாம்? என்பதில் எனக்கு குழப்பம் இருப்பதால், இக்கட்டுரைக்கு பெயர் வைக்கும் வேலையை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

விஜயகாந்த் என்றொரு.....?
தமிழகத்திலிருந்து  இன்போ தமிழுக்காய் ஜீவசகாப்தன் 


நன்றி :இன்போ தமிழ் இணையம்
Read More

Sunday

தமிழச்சிக்கு சீமான் மேல என்ன கடுப்போ ?

இணையதளத்தில் பெரியாரின் கருத்துக்களை பரப்புரை செய்வதில் முன்னணியில் இருப்பவர் தான் தமிழச்சி. முகநூலில் பெரியாரின் கருத்துக்களை பார்க்க வேண்டும் என்றால் தமிழச்சியின் பக்கம் சென்றால் போதும் . தமிழச்சியின் பக்கத்திலிருந்து பெரியாரின் சில கருத்துக்களை நானும் தெரிந்து கொண்டவன் என்ற முறையில் தமிழச்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .  பெரியாரின்  கருத்துக்களை மேலும் மேலும் பரப்பி இளைய சமுதாயமும் இனி வரும் தலைமுறைக்கும் பயன் படும்   வகையில் நீங்கள் மேலும் மேலும் சமூக சேவைகள் செய்ய வேண்டும் என் மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன். 

சில நாட்களாக தமிழச்சியை  கவனித்து வருகிறேன் அவரின் கருத்துக்கள் அருவெறுக்க தக்கதாக இருக்கிறது . ஒரு பெண் இந்த ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் துணிச்சலாக தன் கருத்துக்களை எடுத்து வைக்கிறார் என்று சில நேரங்களில் தமிழச்சியை  நினைத்து பெருமை பட்டிருக்கிறேன் . ஆனால் பெரியாரில் கருத்துக்கள் மட்டும் இல்லைஎன்றால் நீங்கள் சீரோ என்பது மட்டும் தெரிகிறது.  ஏன் தமிழச்சிக்கு சீமானின் மீது இவ்வளவு கடுப்பு என்பது தான் எனக்கு புரியவில்லை . சினிமா காரர் தான் சீமான் ஆனால் அந்த சினிமாகாரர்களில் துணிந்து தன் கருத்தை சொல்லி சிறைக்கு சென்றவர்கள் வேறு யாரும் இல்லை . சீமானிடம் தமிழ் தேசியம் என்ற கொள்கை இருக்கிறது அதே நேரம் தமிழச்சியிடம் என்ன கொள்கை இருக்கிறது .  

சீமான் இருந்தால் தப்பு நின்னால் தப்பு அப்படியே சொல்லி சொல்லி அத கேக்குற எங்களுக்கும் ஒரு சலிப்பு வருது . சும்மா இருக்க சங்க ஊதி பெருசாக்குவது போல சீமானை பெரிய தலைவராக வேண்டும் என ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா ? இல்லை சீமானை திட்டியே நிறைய எதிர் கமெண்ட் வாங்கி நீங்க பிரபலம் ஆகணும்னு நினைக்கிறீங்களா? எதுவுமே புரியல இல்லை உங்களுக்கும் சீமானுக்கும் ஏதாவது தனிப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறதா? 

இதெல்லாம் ஏன் கேக்குறேனா? நீங்கள் ஒரு ஈழத்து பெண் வெளிநாட்டில் இப்போது இருக்கிறீர்கள் சீமான் முதல் மற்ற தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஈழ தமிழர்களுக்காக தான் பேசுகிறார்கள் அவர்கள் எடுக்கும் முடிவுகளும் ஈழ தமிழர்கள் நலனோடு சேர்ந்த முடிவாக தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது எதன் அடிப்படையில் விமர்சிக்கிறீர்கள்.  இலங்கையிலும் அரசியல் நடக்கிறது இதுவரை இலங்கை அரசியலை விமர்சிப்பதை விட அதிகமாக தமிழக அரசியலை விமர்சிக்கிறீர்கள் . அதில் ஒன்றும் தப்பு இல்லை யார் யாரோ விமர்சிக்க வேண்டிய அளவிற்கு தமிழக அரசியல் மாறி விட்டது அது வேறு கதை . தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்கள் அல்லாத பல தலைவர்கள் இருக்கிராக்றல் அவர்களுக்கு எதிராக உங்கள் கருத்துக்கள் பலமாக வந்ததை பார்த்ததில்லை. 

பிரபலமாக இருக்கும் ஒரு நபாரால் ஒரு சமூகத்திக்கு வேண்டிய பரப்புரையை செய்தால் அந்த சமூகத்திற்கு அது பயனாக இருக்கும் அப்படி இந்த தமிழ் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால் இலங்கையின் இனபடுகொலையை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லலாம் . ஈழ விடுதலை பற்றியும் அதற்கான தேவை பற்றியும் உங்கள் விஸ்ரிகளிடம் எடுத்து சொல்லி அதற்கான ஆதரவை பெறலாம் . இப்படி எவ்வளவோ செய்யலாம் ஆனால் ஒன்றும் செய்ய வில்லை . எனக்கு தெரிந்து தமிழச்சி நீங்கள் ஏதோ உங்களுக்கு பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக பெரியாரின் கருத்துக்களையும் காலத்தை கடத்த வேண்டும் என்பதற்காக சில விமர்சனங்களை வைக்கிறீர்கள் என நினைக்கிறேன் . ஏனெனில் உங்களிடம் இதுவரை தெளிவான நிகழ் காலத்திற்கு ஏற்ற கொள்கைகள் எதுவும் இல்லை . 

சரி விடுங்க கேக்க மறந்துட்டேன் உங்களுக்கு சீமான் மேல என்ன கடுப்பு ? சும்மா சொல்லுங்க அப்புறம் ஈழ விடுதலையை பற்றி உங்ககிட்ட ஏதாவது கருத்துக்கள் இருந்தாலும் சொல்லுங்க .       
 
Read More

Send your Status to your Facebook