இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts
Saturday
பேயும் நானும்
நடு இரவு வேளை ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. ஆங்காங்கே கடைகளில் வெளியே தொங்கவிடப்பட்ட சீரோ வால்ட் பலப் வெளிச்சம். தெரு விளக்குகள் வெளிச்சம் ஆங்காங்கே கொஞ்சமாக . நகரின் மைய பகுதியாக இருந்தாலும் சாலைகளில் எந்தவொரு அசைவுகளும் இல்லை .
நடுஇரவு தாண்டி விட்டது வீட்டிற்கும் செல்ல வேண்டும். காலை ஐந்து மணிக்கு மேல் தான் ஊருக்கு செல்லும் பஸ் வரும் அதுவரை என்ன செய்வது என்று நினைத்து கொண்டே நானும் இன்னும் இரண்டு நண்பர்களாக பேருந்து நிலையம் நோக்கி நடந்தோம்.
மேல்நிலை கல்வி கற்று கொண்டிருந்த நேரம். நாகர் கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் ஆண்டு தோறும் இதோ உங்கள் ராஜா என்று இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றி நாடகம் நடத்தப்படும் . நாங்கள் மூவரும் அதில் நாடக நடிகர்கள். நாடகம் ஒவ்வெரு ஆண்டும் இயேசு சிலுவையில் அறையப்பட்ட அந்த வெள்ளி கிழமை முதல் ஈஸ்டர் பண்டிகை அன்று நிறைவு பெரும் . ஒரு மாதத்திற்கு முன்பே அதற்கான பயிற்சிகள் நடைபெறும் . இதே போல் ஒரு நாள் அந்த பயிற்சி முடிய 12 மணியாகிவிட்டது. அங்கே தூங்குவதற்கு வசதி செய்ய பட்டது . இருந்தாலும் நாங்கள் தூங்காமல் பஸ் நிலையம் சென்று விடலாம் என நினைத்து நடந்தோம்.
நடக்கும் போதே பேசிக்கொண்டே சென்றோம் . அப்போது பேய் பற்றிய கதைகள் பேசினோம் . ராத்திரி பன்னிரண்டு மணிக்கு முத்து ஆத்தங்கரை வழியாக நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் . தெரு விளக்குகள் எதுவும் இல்லை . நிலா வெளிச்சம் ஓரளவிற்கு இருந்தது . திடீரென்று சிறுநீர் கழிக்க ஆத்தங்கரை ஓரமாக சென்றிருக்கிறார். அவர் சிறுநீர் கழித்து கொண்டிருந்த போது பக்கத்தில் இன்னொருவர் சிறுநீர் கழித்து கொண்டிருக்கிறார். கொஞ்சம் திரும்பி பார்க்கும் போது யாரோ ஒருவர் நிற்பது போல் தெரிகிறது . நாம் நடந்து வரும் போது முன்னாடியோ பின்னாடியோ யாரும் வந்தது போல் இல்லையே என மனசுக்குள் நினைத்து மீண்டும் திரும்பி பார்க்கும் போது பக்கத்தில் யாரும் இல்லை .
பாதியில் சிறுநீர் கழித்து விட்டு வீட்டை நோக்கி ஓடியிருக்கிறார் . ஓடி வந்த வழியில் அந்த மனிதர் மீண்டும் முத்துவின் முன் தோன்றி முத்துவை தூக்கி ஆற்றிலே வீசியிருக்கிறார். இந்த கதையை சொல்லி முடிந்ததும் மனதிற்குள் ஏதோ ஒரு பதட்டம் . பஸ் நிலையமும் வந்து விட்டது .
மனதில் முத்து பற்றிய கதை ஒரு புறம் ஓடி கொண்டிருக்க பஸ் நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது . நாங்கள் வந்ததோ டவுன் பஸ் நிலையம் கடைகள் எதுவும் திறக்க படவில்லை. எங்களை தவிர வேறு யாரும் இல்லை . நான் பஸ்நிலையத்தில் இருக்கும் சிறுநீர் கழிக்கும் இடத்திற்கு சிறு நீர் கழிக்க சென்றேன். பக்கத்தில் இன்னொருவர் சிறு நீர் கழித்து கொண்டிருந்தார் . சிறுநீர் கழிக்க தயாராகி கொண்டிருந்த போது அவர் என்னிடம் ஏதோ கேட்டார் . என்னுடைய உடல் முழுவதும் வியர்த்து. அவர் என்ன கேட்டார் என்பது எனக்கு சரியாக கேட்கவில்லை ( கேட்க மனம் இடம் கொடுக்கவில்லை ) அப்படியே மெதுவாக வியர்த்த உடம்போடு சிறுநீர் கழிக்காமலே வெளியே வந்து விட்டேன் .
நண்பர்கள் பக்கத்தில் சென்ற போது முகத்தை துடைத்து கொண்டு அங்கே யாரோ நிற்பது போல் இருக்கிறது யார் என்று பாப்போம் என அவர்களையும் அழைத்து கொண்டு மீண்டும் சென்றேன் . அந்த நபர் வெளியே வந்து மதுரைக்கு பஸ் வருமா என எங்களிடம் கேட்டார் . அந்த கணம் பயம் நீங்கி அது இந்த பஸ் நிலையத்தில் வராது என்று அவருக்கு செல்ல வேண்டிய பாதையை காட்டி கொடுத்தோம் .
Sunday
அந்த நாள் நினைவுகள் மறந்து போகுமோ?
நாளைக்கு காதலர் தினமாமே என்ன செய்யலாம்னே தெரியல கையும் ஓடல காலும் ஓடல. நின்னா நிக்க முடியல இருந்தா இருக்க முடியல நடந்தா நடக்க முடியல என்ன செய்றது. இப்படி தான் என்னை போன்ற பலரும் நினைக்க முடிகிறது. ஆசைகள் உணர்வுகள் என்பது ஏனோ மறுக்கவோ மறக்கவோ முடியாததாகிறது. அதனால் தானோ என்னவோ காதலித்த நேரம் காதலர் தினத்தை சரியாக கொண்டாடவில்லையோ என்ற ஒரு ஏக்கம் காதலர் தினம் வரும் போதெல்லாம் வந்து கொண்டே இருக்கிறது.
இருந்தாலும் மகிழ்வான நினைவுகள் நெஞ்சில் ஊஞ்சலாடி கொண்டிருக்கிறது. எத்தனை நாட்கள் காதலியை பார்த்தாலும் அந்த நாள் பார்க்க வில்லையென்றால் ஏதோ ஒரு ஏமாற்றம் சுழன்று கொண்டே தான் இருக்கும். அப்படி ஒரு ஏமாற்றம் வர கூடாது என்பதற்காக தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் முந்திய நாளே முன்னேற்பாடோடு காதலியை பார்க்க வேண்டும் என்ற முடிவோடு படுத்தேன். அதனால் தானோ என்னவோ இன்று வரை அந்த தூக்கத்தை ஈடு கட்டவே முடியவில்லை. நாளைக்கு தான் காதலர் தினம் நாளை கட்டாயம் காதலியை பார்த்தாக வேண்டும் என்பதற்காகவே இன்றே மதியம் கல்லூரியிலிருந்து வெளியேறி விட்டேன்.
எப்படியும் பார்த்தாக வேண்டும் அதற்காக என்ன செய்யலாம் எப்படி பார்க்கிறது? பார்த்தா மட்டும் போதாது இன்னைக்காவது பேசியாக வேண்டும். அந்த நேரம் இதை தவிர வேறு எந்த சிந்தனையும் வந்ததில்லை. எதுக்கு கல்லூரியை விட்டு வந்தேன் என்பதே மறந்து போய்விட்டது. ஒரு வழியா நாகர் கோவில் பார்க்கில் சென்று உட்கார்ந்து யோசித்தேன். நல்ல வேளை ரூம் போட்டு யோசிக்க தோணல. அவள் ஸ்கூல் போற வழியில காலையிலேயே போய் நிக்கலாமோ ? ஊகூம் .......... எல்லா பிள்ளேங்களும் சேர்ந்து வருவாங்க பேச முடியாது. பஸ்ஸில வரும் போது பேசலாமே? ......... ஊரில உள்ளவங்க நிறைய பேரு இருப்பாங்க அப்புறம் பிரச்னை ஆகிடும்.
என்னெல்லாமோ யோசித்து ஒண்ணுமே ஒர்கவுட் ஆகல ... சரி எப்படியும் பார்த்து விடலாம் அப்போ ஏதாவது கொடுத்தா நல்லா இருக்குமே. சரி கடைக்கு போலாம்னு நடைய கட்டிட்டு சும்மா போகல போற வழியெல்லாம் யோசித்துகிட்டே கிபிட் கடை பக்கமா போயிட்டு இருந்தேன் ,சரி கிப்ட் பார்க்கலாம்னு கடைக்கு உள்ள ஏறியாச்சு . அந்த வழியில பாக்கத்து கடைக்கு வந்த ஒரு நபர் ஏதோ சொல்லி கொண்டிருந்தார். என்ன தான்னு காதை கொஞ்சமா நீட்டினா........... மனுசங்க போலவா இருக்காங்க படிக்க போன்னு வீட்டிலேருந்து அனுப்பினா இவனுங்க கார்டு வாங்க வந்திருக்காங்க. பெண்ணுங்க என்ன பெண்ணு போலையா வளருதுக அப்படி திட்டுறாரு. அப்படியே அக்கம் பக்கம் பார்த்தேன் நிறைய ஆட்கள் நின்னாங்க மகளிரும் கார்டு பாக்க நின்னாங்க . சரி விடு விடு ...... எல்லோரையும் சேர்த்து தானே திட்டுறாரு அப்படி மனசுக்குள்ள நினைத்து கொண்டே கார்டு பார்க்க கடைக்கு உள்ளே சென்றேன்.
எனக்கு பிடித்த மாதிரி பளிச்சினு ஒரு கார்டு பார்த்தேன். அதை எடுத்து விட்டு காசு கொடுத்து வெளியில் வந்தேன். திடீர்னு மீண்டும் ஒரு ஞானோதயம் வந்தது அது தாங்க பைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கலாம்னு. சரின்னு கடைக்கு போய் பெரிய சக்லேட்டா தாங்கன்னு கேட்டு ஒரு முக்கால் அடி நீளத்தில ஒரு பைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கிட்டேன். இரண்டையும் பைக்குள்ளே போட்டு வீட்டுக்கு பஸ்ஸில ஏறி போயிட்டேன். பஸ்ஸில இருந்த ஒவ்வெரு நிமிடமும் கண்களுக்கு முன்னால் காதலியும் மனதிற்குள்ளே நாளைய தினத்தையும் பற்றிய எண்ணங்களும் தான் வந்து கொண்டிருந்தது. என்னவோ தெரிய வில்லை ஒரு வித பதட்டம் எனக்குள்ளே இருந்தது.
வீட்டிற்கு வந்ததும் பையை திறந்து சாக்லேட் பத்திரமாக இருக்கிறதா என பார்த்து கொண்டேன் . இதே போல் ஒவ்வெரு அரை மணி நேரத்திற்கும் பார்த்து கொண்டேன். கிப்ட் கார்டை எடுத்து என் பெயரோடு அவள் பெயரும் எழுதி என் இதயத்தோடு கலந்த காதல் வார்த்தைகளையும் எழுதினேன் . என்னதான் எழுதி சாக்லேட் வாங்கினாலும் தூங்க படுத்தால் தூக்கம் வரவில்லை. நாளை எப்படி இதையெல்லாம் கொடுப்பது ..? எப்படி அவளிடம் பேசுவது ..? குறைந்த பட்சம் ஐ லவ் யு ஆவது சொல்லியாக வேண்டுமே என்று நினைத்தே தூக்கம் வரவில்லை.
தினமும் கல்லூரிக்கு செல்வதை போல் காலையில் சென்று விட்டேன். நான் செல்லும் பஸ்ஸில் தான் அவளும் வருவாள். நான் பஸ்ஸில் ஏறி முன் பக்க கதவில் தொங்கி கொண்டிருந்தேன். அவள் ஏறும் இடம் பஸ்வந்தது. ஓ ............. மிஸ்ஸிங் தினமும் அதே பஸ்ஸில் வருபவள் இன்று காணவில்லையே சொல்ல முடியாத பதட்டம் ........ ஏன் ? எதனால ? இது தான் என் முன்னால் வந்து கொண்டே இருந்தது. ஒரு புறம் பதட்டம் ஒரு புறம் ஏமாற்றம் வகுப்பிற்கு போக மனம் வரவில்லை. அப்புறம் என்ன பண்றது இனி சாயங்காலம் வந்தா தான் உண்டு. அது வரை நேரத்தை கடத்த சினிமா பார்க்க சென்றிருந்தேன் . என்ன சினிமா பார்த்தேன் என்பதே தெரிய வில்லை. தினமும் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பாஸ் ஸ்டான்ட் வந்து விட்டேன்.
பெரிய ஆச்சரியம் எல்லா நாளும் காவல் துறையினர் நான்கு ஐந்து பேராவது நிற்பாங்க இன்னைக்கு யாருமே இல்லை. மனசுக்குள் ஒரு வித மகிழ்ச்சி பயப்படாம காதலை சொல்லலாம் . தினமும் வரும் நேரத்திற்கு அவள் வந்து விட்டாள். எனக்கு உடம்பெல்லாம் வியர்த்து. மனசுக்குள் இருந்த பதட்டம் வெளியே தெரிய தொடங்கியது. அவளை பார்த்தேன் அவளும் பார்த்தாள் ஆனால் எந்த வித மாற்றமும் இல்லை. கையில் கார்டும் சகேல்ட்டுமாக எளிதாக எடுத்து கொடுக்கும் வண்ணம் வைத்திருந்தேன். அவளை பார்த்து கொண்டே இருந்தேன் , அவள் வேறு பக்கம் பார்க்கும் போது நானும் அந்த பக்கம் சென்று விடுவேன் . வீட்டிற்கு செல்ல வேண்டிய பஸ் வந்தது. கையில் இருந்த பையால் எனக்கு ஒரு இருக்கையும் அவளுக்கு பாட புத்தகத்தால் முன் பக்கம் ஒரு இருக்கையும் சேர்த்து புக் பண்ணி விட்டேன். இல்லைஎன்றால் நிற்க வேண்டியது தான்.
நான் ஏறி விட்டு அவள் என் முன்னால் வந்து உட்காருவாள் என நினைத்தேன் ஆனால் அவள் முன் வாசல் பக்கம் உள்ள இருக்கையில் உட்கார்ந்தாள். எல்லாமே போச்சி வாங்கின சாக்லேட், கார்டு எதுவும் கொடுக்க முடியாது ...... இருந்தாலும் மனசு தளரல இருக்கையை விட்டு சாக்லேட்டை எடுத்து முன் பக்க வாசல் சென்று அவளின் இருக்கை பக்கம் சாக்லேட்டை வைத்து விட்டேன். அதை கவனித்து கொண்டே இருந்தேன் எடுகிறாளா...என்று . அவள் இறங்க வேண்டிய இடம் வந்தது உற்று பார்த்தேன் ..................................... நான் எந்த இடத்தில் வைத்தேனோ அதே இடத்தில சாக்லேட் எந்த சேதாரமும் இல்லாமல் இருந்தது .... அந்த நேரம் ............?
அவள் இறங்கிய பின்னர் வைத்த இடத்திலிருந்து சாக்லேட்டை எடுத்து விட்டு ஒரு வித ஏமாற்றத்தோடு வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தேன் ...
அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் !
Saturday
பழைய Widget களை இழக்காமல் டெம்பிளேட் மாற்றுவது எப்படி ?
எழுதியது
Suresh Kumar
Labels:
அனுபவம்,
தொழில் நுட்பம்,
பிளாகர் டெம்பிளேட்
எழுதிய நேரம்
Saturday, July 25, 2009
பிளாக்கர் டேம்பிலேட்டுகளில் மேலும் மேலும் அழகு படுத்தும் வண்ணமாக நாம் பல side bar widget கள் வைத்திருப்போம் . இப்படி நாம் நமது டேம்பிலேட்டுகளை அழகு படுத்தி வரும் போது புதிய பிளாக்கர் டேம்பிலேட்டு மாற்ற தோன்றும் . அப்படி மற்ற தோன்றும் போது புதிய டெம்பிளேட்டை தரவிறக்கி நமது பிளாக்கில் தரவேற்றும் போது நாம் ஏற்கனவே வைத்திருந்த Side bar widget கள் HTMl codes போன்றவற்றை இழக்க வேண்டியது வரும் . இதை இழக்காமல் நாம் எப்படி டெம்பிளேட்டை மாற்றுவது என்பதை பாப்போம் .
Read More
- முதலில் உங்களுக்கு பிடித்த டெம்பிளேட்டை அந்த தளத்திலிருந்து தரவிறக்கி கொள்ளுங்கள் .
- பின்னர் உங்கள் பிளாக்கர் கணக்கின் உள் நுழைந்து Layout ----> Edit HTML பகுதிக்கு சென்று Download Full Template என்ற இணைப்பை கிளிக் செய்து ஏற்கனவே இருக்கும் உங்கள் டெம்பிளேட்டை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் .
- புதிதாக தரவிறக்கிய டேம்பிலேட்டையும் , ஏற்கனவே இருக்கும் உங்கள் டேம்பிலேட்டையும் நோட் பதில் Open செய்து கொள்ளுங்கள் .
- பின்னர் ஏற்கனவே நீங்கள் பயன் படுத்தி வரும் டெம்பிளேட்டில் இருக்கும் Side bar HTML codes எது எல்லாம் உங்களுக்கு தேவையோ அதை வெட்டி புதிய டேம்பிலேட்டு பைலில் அதில் வருகிற Side bar Widget -க்கு கீழே ஒட்டி விடுங்கள் .
- பின்னர் அதை XML file ஆக Save கொள்ளுங்கள் .
- மீண்டும் உங்கள் பிளாக்கர் கணக்கிற்கு சென்று Edit HTML பகுதியில் சென்று Upload a template from a file on your hard drive என்று இருக்கும் அதன் மூலம் நீங்கள் Save செய்து வைத்துள்ள டெம்பிளேட் Upload செய்து கொள்ளுங்கள் .
- Conform and Save என்று கேட்கும் நீங்கள் அதை கிளிக்கி Save செய்து கொள்ளுங்கள் . புதிய நீங்கள் விரும்பிய டெம்பிளேட் கிடைக்கும் .
- இவ்வாறு செய்ய கடினமாக இருந்தால் நீங்கள் புதிய டெம்பிளேட் தரவேற்றுவதர்கு முன்னர் உங்கள் Side bar இல் உள்ள HTML Code -களை Note pad -இல் Save செய்து கொள்ளுங்கள் . மற்றும் தேவையான அனைத்து கோடுகளையும் save செய்து விட்டு புதிய டெம்பிளேட்டை தரவேற்றுங்கள் .\
- தரவேற்றிய பின்னர் ஏற்கனவே save செய்து வைத்துள்ள HTML code களை தேவையான இடங்களில் ஒட்டி விடுங்கள் . இது மிகவும் இலகுவானது .
யூத் புல் விகடனில் என் பதிவு
யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் நெற்றி எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் அந்த பதிவை யூத் புல் விகடன் Good .. Blogs பகுதியில் சேர்த்திருக்கிறார்கள் .

மற்றும் என்னுடைய பழைய பதிவான Blogger Template மாற்றம் செய்ய சிறந்ததளம் எது ? என்ற பதிவும் விகடனில் வந்ததாக இன்று ஒரு வாசகர் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார் . அதை தொடர்ந்து நான் விகடனில் பார்த்த போது தான் மேற்கண்ட பதிவு விகடனில் வெளிவந்ததை தெரிந்து கொண்டேன் . மேலும் தகவல் கொடுத்த நண்பருக்கும் என்னுடைய பதிவை விகடனில் வெளியிட்ட விகடன் நிர்வாகிகளுக்கும் எனக்கு ஆதரவு வழங்கி கொண்டிருக்கிற சக பதிவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

Friday
கும்மிக்கு பஞ்சமில்லாத இவ்வார பதிவுலகம்
எழுதியது
Suresh Kumar
Labels:
அனுபவம்,
பதிவர் வட்டம்,
பதிவுலகம்,
மொக்கை
எழுதிய நேரம்
Friday, July 24, 2009
இந்த வாரா துவக்க முதலே பதிவுலகம் மிகவும் சுவராஸ்யமாக இருந்தது . இந்த வாரத்தில் ஸ்பெசல் என்னவென்றால் பிடிக்காத பத்து பிடித்த பத்து என நகர்ந்தது . அதிலும் குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கிடையிலும் விஜய் ரசிகர்களுக்குமிடையிலான போட்டி மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. மொத்தத்தில் கும்மிக்கு பஞ்சமில்லாமல் இருந்தது .

விஜய் அஜித் ரசிகர்கள் மாறி மாறி தங்கள் மேலான ஆதரவினை அந்த நடிகர்களுக்கு வழங்கினர் . முதலில் சாளரம் கார்க்கி அவர்களால் பெண்ரசிகர்கள் ரசிக்கும் விஜயின் 10 என துவங்கி போட்டிக்கு அடித்தளமிட பட்டது . இதையடுத்து அதற்கு எதிர் பதிவாக அன்பு அவர்களால் விஜயிடம்ஆண் ரசிகர்களுக்கு பிடிக்காத 11 விசயங்கள் என தொடர்ந்தது . அதுவும் அமோக வரவேற்ப்பை பெற பிரியமுடன் வசந்த் அவர்களால் அஜித்ரசிகர்களிடம் பிடிக்காத 10 என தலைப்பிட்டு அஜித ரசிகர்களை பற்றி எழுத பொன்னியின் செல்வன் அவர்கள் அதிரடியாக விஜய் ரசிகர்களிடம்பிடிக்காத 10 பதிவிட்டார் .
ஒரு புறம் அஜித் விஜய் பற்றி பதிவு போட்டிருக்க மற்றொரு பக்கம் பத்து பத்த்களாக பதிவுகள் தொடர்ந்த வண்ணம் வந்தன . வால்பையனின்குடிகாரர்களிடம் பிடிக்காத பத்து , கேபிள் சங்கரின் ரசிகர்கள்விரும்பும் தமிழ் சினிமாவின் பத்து கலையரசனின் என் பிளாக்கில்எனக்கு பிடிக்காத 10 என்று தொடர்ந்து பத்து பத்துகளாக பதிவுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன . ( என்னவோ எல்லாம் சினிமா பட கதை சீசன் போல தான் ).

இந்த வாரத்தில் எல்லோருடைய பார்வையை திருப்பிய சக்திவேலை சொல்ல மறந்துட்டேன் . ஆம் அவர் ஒருவர் தான் நியாயமாக குறைகளையும் உரிமைகளையும் தட்டி கேட்டு அனைவருடையை பார்வையையும் தன் பக்கம் திருப்பினார் . அவரின் பதிவியை இந்த வாரம் பதிவர்கள் கும்மிக்கு பயன் படுத்தினார்கள் என்றால் பாருங்கள் . கும்மி சென்று ஒரு கட்டத்தில் சக்திவேலின் மனதை காய படுத்த திடீரென பதிவுலகத்தை விட்டுவெளியேறுவதாக அறிவித்தார் . அதுவும் அவரின் முழு பேட்டியும் சஞ்சய்காந்தி அவர்களால் வெளியிடப்பட்ட அன்று . என்பது குறிப்பிட தக்கது . இதையறிந்து பதிவுலகம் ஆடி போய் சக்திவேலிடம் நீங்கள் மீண்டும் எழுத வேண்டும் என கோரிக்கை வைத்தனர் . கோரிக்கைகளை ஏற்ற சக்திவேல் மீண்டும் பதிவுலகத்திற்கு சென்ற வேகத்தில் வந்தார் . நிம்மதி பேரு மூச்சு விட்டது பதிவுலகம் ( உண்மையாக ) .
இடையிடையே நையாண்டி நைனாவின் நக்கலுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது .
ஆகா சிங்கபூரா பற்றி சொல்லாம விட முடியுமா ? சிங்கை பதிவர்கள் தினம் நயன் தாரா , நமீதா , சிங்கபூர் அப்படி இருக்கு இப்படி இருக்கு என சிங்க போரை பார்க்க ஆசையை தூண்டி வருகிறார்கள் . அது தான் தமிழ் வெளி மற்றும் சிங்கை பதிவர்கள் இணைந்து நடத்தும் கட்டுரை போட்டி அதில் வெற்றி பெரும் மூன்று பேரை சிங்கபூருக்கு ஒரு வார சுற்றுலாவாக அழைத்து செல்கிறார்களாம் . சிங்கை பதிவர்கள் இடைவிடாமல் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றால் பாருங்களேன் . அவர்களின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது .

Wednesday
பயமா பக்தியா ?
தினமும் காலையில் சரியாக 9 மணிக்கு வீட்டிலிருந்து வேலைக்கு புறப்பட்டு விடுவான் ராஜன் . அன்று சனிக்கிழமை வழக்கம் போல் அன்றும் வேலைக்கு மணிக்கே கிளம்பி விட்டான் .
ஓரிடத்தில் வேலை பார்த்து கொண்டே இன்னொரு இடத்தில் வேலை தேடும் சாதாரண இளைஞன் தான் ராஜன் . தினமும் பத்திரிக்கைகளை பார்த்து வேலைக்கு விண்ணப்பம் செய்து கொண்டிருப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தான் .
காலையில் 9 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறுகிற ராஜன் இரவு 9 மணிக்கு தான் வீட்டிற்கு வருவான் . அதே போலவே அன்றும் 9 மணிக்கே வீட்டிற்கு வந்தான் வீட்டில் பத்திரிக்கைகையில் இருந்த வேலை வாய்ப்பு செய்தி கண்ணில் பட்டது .
படித்திருந்தும் ஒரு மாதம் வேலை செய்தால் 1500 ருபாய் தான் மாத சம்பளமாக கிடைக்கிறது . ஆனால் இந்த கம்பெனியிலோ குறைந்த பட்சம் 10,000 ருபாய் தருவதாக போட்டிருக்கிறார்கள் . இவனும் மிகுந்த மகிழ்ச்சியோடு அங்கும் இங்குமாக நடந்து அதை பற்றிய சிந்தனையில் மூழ்கினான் .
நேர்முக தேர்வோ நாளை அதுவும் ஞாயிற்று கிழமை
தன்னுடைய மதிப்பெண் பட்டியல் அனைத்தையும் சரி பார்த்தான் எல்லாம் சரியாக இருந்தது ஆனால் பயோ டேட்டா மட்டும் இல்லை அலுவலகத்தில் மாட்டி கொண்டது . நேரமும் கடந்து விட்டது
காலையில் 6 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டால் தான் நேர்முக தேர்வு நடைபெறும் இடத்திற்கு 10 மணிக்கு போய் சேர முடியும் . பயோ டேட்டா வேறு இல்லை இருந்தாலும் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது . கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட வேலைகளை கொடுக்கும் ஜோ கடையில் காலையில் சென்று அந்த வேலையை முடிக்கலாம் என நினைத்தான் .
காலையில் 5.30 மணிக்கே எழுந்து ஜோவின் வீட்டிற்கு சென்றான் . கதவோரத்தில் நின்று ஜோ ........ ஜோ என்று அழைத்தான் . ஜோவும் வெளியே வந்தான் .
இன்று எனக்கு ஒரு இன்டர்வியு இருக்கிறது என்னுடைய பயோ டேட்டா தயார் செய்ய வேண்டும் . இது எனக்கு முக்கியமான இன்டர்வியு என்று விளக்கினான் .
எல்லாவற்றையும் கேட்ட ஜோ சொன்னான் என்னால் சர்ச் போகாமல் கடையை திறக்க முடியாது என்றான் . இதை கேட்டு அதிர்ந்த ராஜன் நானும் உன்னை போல் சார்சிக்கு போகிறவன் தான் இன்று எனக்கு இந்த இன்டர்வியு மிக முக்கியம் என்றான் நீ தான் எப்படியாவது எனக்கு உதவ வேண்டும் என அழாத குறையாய் கேட்டான் .
மீண்டும் முடியாது என்றே சொல்லி விட்டான் . மனமுடைந்து இனி என்ன செய்வது இன்று ஞாயிற்றுகிழமையாக இருப்பதால் கடைகள் திறக்காதே இவனுக்கு நான் எவ்வளவு வேலை கொடுத்திருப்பேன் இருந்தாலும் இவன் இப்படி சொல்லி விட்டானே என்று மனதிற்குள் வருந்தி விட்டு ஜோவை பார்த்து உன்னுடைய ரத்த உறவுகளுக்கு இன்று திடீரென ஏதாவது நேர்ந்தால் சார்சிக்கு போன பின்னர் தான் பார்ப்பாயா? என்று கேட்டு விட்டு ஓய்வு நாளில் நன்மை செய்வதா ? தீமை செய்வதா என்ற பைபிளில் இருக்கும் வாசகத்தையும் நினைத்து நடக்க ஆரம்பித்தான் ..................................................
இது என்னுடைய சிறு முயற்சி மனதில் பாதித்த செயல்களை சிறு கதையாக்கி உள்ளேன் உங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்கள் .
Monday
காதலிக்கும் முன்னும் காதலித்த பின்னும்
வாழ்கையில் காதல் ஒரு இனிமையானது சோகங்களும் சுமைகளும் சுகமாவது காதலில் மட்டுமாகத்தான் இருக்க முடியும் . ஒரு வயதை தாண்டி விட்டால் தானாகவே காதல் ஏற்பட்டு விடுகிறது மனிதர்களுக்கு . எந்த ஒரு ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காதலித்திருக்க வேண்டும் அல்லது காதலிக்கப்பட்டிருக்க வேண்டும் .
காதல் தோல்வியில் முடிந்தவர்களும் உண்டு வெற்றியில் முடிந்தவர்களும் உண்டு . காதல் குடும்ப உறவுக்கு வந்த பின்னர் தோல்வியடைந்தவர்களும் உண்டு .பொதுவாகவே காதல் வெற்றியில் செல்கிறதா இல்லை தோல்வியில் செல்கிறதா என்பது ஒரு சாராரை பொறுத்ததில்லை இரு சாராரையும் பொறுத்தது . காதலிக்கும் முன் இவர்களின் மனநிலை எப்படி இருக்கும் காதலித்த பின் எப்படி இருக்கும் என்று பார்த்தல் மிகவும் சுவராஸ்யமாக இருக்கும் .
காதலிக்கும் முன் ஆண் பெண்ணை துரத்தி துரத்தி காதலிப்பார் . ஆனால் பெண்ணோ காதலித்த பின்னர் அந்த ஆணை துரத்தி துரத்தி காதலிப்பார் . ஆணின் மனநிலை எப்போதுமே அந்த பெண்ணை காதலிக்க வேண்டும் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருப்பார் . ஆனால் பெண்ணிற்கோ காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தாலும் வெளியில் காட்டாமல் ஆணை ஓட விட்டு கொண்டேயிருப்பார் . பெண்ணை காதலிக்க வைக்கும் வரை எவ்வளவு ஓட விட்டாலும் சலிக்கவே செய்யாது.
அந்த பெண் காதலை சொன்ன பின்னர் தான் பெண் அந்த ஆணை அதிகமாக காதலிக்க தொடங்குகிறார் . அதை விட முன்னர் எதையெல்லாம் தூரத்தில் இருந்த போது ரசித்தாளோ அதையெல்லாம் பக்கத்தில் இருந்து ரசிக்க நினைப்பாள். தன் காதலன் காதலிக்க துரத்திய போது எப்படி இருந்தாரோ அதே போல் இருக்க வேண்டும் என நினைப்பாள் . காதலனோ காதலியிடம் முன்னர் ரசித்த கோபம் குறும்புகளை பார்த்தல் கோபம் வரும் .
காதலிக்க முன்னர் இருந்தது காதலித்த பின்னர் தலைகீழாக மாறிவிடும் . இந்த நேரத்தை அவர்கள் தவறவிடும் போது காதல் தோல்வியில் கூட முடியும் . இருவருக்குமே அவர்கள் பக்கம் நியாயமாக இருக்கும் . பெண்ணுக்கு அவன் மாறிவிட்டான் அவன் என்னை இப்போது காதலிக்கவில்லை என எண்ண தோன்றும் . ஆணுக்கோ இப்பவும் அவள் நான் சொல்வதை கேட்க மாட்டேங்கிறா பழைய போலவே இருக்கிறாள் என எண்ண தோன்றும் . இந்த நேரத்தில் தான் காதலர்கள் விட்டு கொடுத்து யதார்த்தத்தை புரிந்து செயல் பட்டால் தான் காதல் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்லும் .
Saturday
தூக்கத்தில் பேசுபவரா நீங்கள் கட்டாயம் படியுங்கள்
வேலை செய்து உடலுக்கும் மனதிற்கும் ஓய்வெடுக்க வேண்டும் என தூங்கினால் தூக்கம் வருகிற நேரம் பார்த்து பக்கத்தில் படுத்திருக்கும் நண்பரின் பேச்சுக்கள் நம்முடைய தூக்கத்தை கெடுத்து விடும் . நாம் தூக்கத்தில் பேசுகிறவராக நம்மால் நம்முடைய நண்பரின் தூக்கம் கேட்டு விடும் .
காலை விடிந்ததும் ஏய் மச்சி நேற்று ராத்த்ரி ராஜாவோட பாட்டு கச்சேரி தாண்டா . அவன் பாட்டு கச்சேரியில என்னோட தூக்கம் போச்சுடா . அப்படியே மற்ற நண்பர்களிடம் சொல்லி கொண்டிருக்கும் போதே நம்மை கிண்டலடிப்பார்கள் . இது பலருடைய வாழ்கையில் நடை பெற்றிருக்கலாம் .
பொதுவாகவே இப்படி தூக்கத்தில் நாம் பேசுகிறது நம்மை தெரியாமலே நாம் பேசுவதாகும் . இது நம்முடைய மனது சம்பந்த பட்டதாகும் . நம்முடைய மனதை பாதித்த விசயங்கள் தூக்கத்தில் நம்மை தாண்டி பேச வேண்டியது வருகிறது . தூக்கத்தில் பேசுகிறவர்களை பார்த்தல் பெரும்பாலானோர் மனதில் ஏற்படும் எண்ணங்களை மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என இருப்பவர்கள் . மற்றொரு பிரிவு சின்ன விசயங்களாக இருந்தாலும் அதன் மீது அதிக கவனம் செலுத்துவது .
நம் மனதை பொறுத்தவரையில் ஒரு நாள் வாழ்கையில் பல நிகழ்வுகள் வந்து செல்லும் . எந்த நிகழ்வுகளையுமே பாதியில் முடிக்க மனம் விரும்பாது . சிலர் தங்களுக்கு ஏற்படும் கவலையாக இருந்தாலும் சரி சந்தோசமாக இருந்தாலும் சரி இவைகளை உடனடியாக வெளிப்படுத்தி விடுவார்கள் . ஆனால் சிலர் சோகமானாலும் துக்கமானாலும் வெளிக்காட்டாமல் மனதிற்குள்ளே இறுக்கி கொள்வார்கள் . இப்படி மனதிற்குள்ளே இறுக்கி கொள்வதால் எல்லாம் ஓன்று சேர்ந்து நமக்கு தெரியாமலே வெளியில் வந்து விடுகிறது . இவ்வாறு நம்மை அறியாமலே நாம் இரவில் பேசுகிறோம் .
மற்றொரு பிரிவினர் சின்ன செயல்களாக இருந்தாலும் அந்த ஒரு செயலையே காலையிலிருந்து மாலை வரை சிந்தித்து கொண்டே இருப்பார்கள் . இப்படி ஒரே செயலை சிந்தித்து கொண்டிருப்பவர்களும் வழக்கம் போல் தூங்கும் போதும் அதை பற்றிய சிந்தனையால் தூக்கத்தில் பேசி விடுகின்றனர் .
எப்படி நாம் தூக்கத்தில் பேசாமல் இருப்பது ? இப்படி பேசுவதால் பொதுவான ஒரு இடத்தில நம்மால் தூங்கவே முடியவில்லை என்ற கவலை உள்ளவர்கள் செய்ய வேண்டியது எந்த ஒரு செயலிலும் துக்கமானாலும் சந்தோசமானாலும் உடனடியாக வெளிப்படுத்துங்கள் . வெளிப்படுத்தி அப்படியே அதை விட்டு விடுங்கள் மனதிலே போட்டு இறுக்கி கொள்ளாதீர்கள் . ஒரே செயலை எந்த நேரமும் நினைத்து கொண்டே இருக்காதீர்கள் . அழ வேண்டிய இடத்தில அழுங்கள் சிரிக்க வேண்டிய இடத்தில சிரியுங்கள் . .................................

Subscribe to:
Posts (Atom)