Friday

கடையில ஒரு ருபாய் வெளிய பத்து ருபாய்

இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்க்கும் போது சாதாரண மனிதர்கள் இனி கனவு கூட காண முடியாது போலிருக்கிறது. ஏழைகளுக்கு மாடி வீடு என்பது கானல் நீராகி கொண்டிருக்கிறது கட்டுமான பொருட்களின் விலையுயர்வு. சரி வீடு தான் இல்ல ஒரு ரூபாய்க்கு அரசு அரிசி போடுதே அதன் மூலமா சாப்பாட்டு தேவையாவது பூர்த்தியாகும் என பார்த்தால் அது கூட இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 10 - 15 ரூபாய்க்கு நல்ல அரிசி கடைகளில் கிடைத்து வந்தது இப்போ என்னவோ தெரியவில்லை குறைந்த பட்சம் கடைகளில் 28 ரூபாய்க்கு தான் அரிசி கிடைக்குது.

என்னவோ விலைவாசி உயர்வு என்பது நாளுக்கு நாள் ஏறி கொண்டே தான் இருக்கும் என வைத்து கொண்டாலும் அது சில சதவீதங்கள் தான் ஏறும். ஆனால் இன்றைய சூழ்நிலை பல மடங்குகள் ஏறியிருக்கிறது. அதே போல் மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை . மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு லட்சத்திற்கு நிலம் வாங்கலாம் என்று பணம் சேர்த்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு லட்சத்திற்கு பதிலாக ஐந்து லட்சம் பணம் சம்பாதித்து சொத்துக்கள் வாங்கலாம் என்று பார்த்தால் இப்போதைய விலை நிலவரம் ஐந்து லட்சத்திற்கு பதிலாக ஐம்பது லட்சமாக மாறியிருக்கிறது . இப்படிப்பட்ட நிலையில் நடுத்தர மக்களின் வாழ்வாதாரமே உடைந்து போயிருக்கிறது. அப்படிஎன்றால் ஏழை மக்களின் நிலை என்ன?

வசதியோடு வாழ்ந்தவன் இப்போதும் வசதியோடு தான் வாழ்கிறான் ஏழை இப்போதும் ஏழையாகவே தான் இருக்கிறான். மூன்று ரூபாய்க்கு ரேசனில் அரிசி விலை இருந்த போது கள்ள மார்கெட்டில் நான்கு ருபாய் ஐம்பது காசுக்கு விற்றார்கள் . இப்போது ரேசனில் ஒரு ருபாய் ஆனால் கள்ள மார்கெட்டில் எட்டு ருபாய் முதல் பன்னிரண்டு ருபாய் வரை இருக்கிறது.

இதே போல தான் ஒவ்வெரு பொருட்களும் பல மடங்குகள் விலை உயர்ந்துள்ளது . நாளை நாம் நல்ல சாப்பாடுடன் நல்ல உடைகளுடன் கனவு கண்ட நடுத்தர ஏழை குடும்பங்கள் இன்றும் கனவுகளோடு வாழ்வது தான் கொடுமை. பத்து ருபாய் சம்பளம் கூடினால் இருபது ருபாய் அடிப்படி தேவைக்கான செலவு கூடுகிறது.

மத்திய அரசாக இருந்தாலும் சரி மாநில அரசாக இருந்தாலும் சரி விலைவாசி உயர்வை கட்டு படுத்த உருப்படியாக எந்த கொள்கை முடிவுகளும் எடுக்க வில்லை. மக்கள் இப்போதும் ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்ற பட்டு வருகிறார்கள் .


4 கருத்துக்கள்:

கலையரசன் said...

கரைக்டா சொன்னீங்க தலைவா! இது என்னதான் தீர்வு???

S.A. நவாஸுதீன் said...

வருமானம் எல்லோருக்குமே கூடியிருக்கிறது சுரேஷ். ஆனால் செலவு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

வரவு அதிகரித்ததின் சதவிகிதம் மிகக்குறைவு. செலவு அதிகரித்ததின் சதவிகிதம் மிக அதிகம். அதுதான் இன்றைய உண்மையான ஏழ்மைக்கு காரணம்.

vasu balaji said...

இதையும் தாண்டி ஏதோ சேர்த்து வைக்க முடிகிற காசையும் பேராசையால் இழப்பதை என்ன சொல்ல:(

Unknown said...

ஒரு நாட்டின் உயர்வு என்பது ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கை தரம்உயர்வது ....... ஆனால் இந்தியாவில் மட்டும் பணக்காரர்களின் விகிதத்தை மட்டுமே வளர்ச்சி என கருதுகிறார்கள் ... இந்த நிலை மாறினால் தான் இந்தியா உருப்படும்

Post a Comment

Send your Status to your Facebook