Tuesday

உணமையை மறைத்து பேசும் சுபவீக்கு செந்திலதிபன் கண்டனம்

மாவீரர் திலகம் பிரபாகரன் தாயார் பார்வமதி அம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தது பற்றி சுப.வீ.உண்மைகளை மறைத்து எழுதி இருக்கிறார்.

பக்கவாதம், சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த பார்வதி அம்மாள், முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின் ,முள்வேலி முகாமில் இருந்தார்.பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை அவர்கள் மறைந்த பிறகு அம்மாவின் உடல் நிலை மோசமடைந்தது. இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் முயற்சியால் பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக மலேசிய நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மலேசிய அரசு குறுகியகால விசா வழங்கியதால் ,அம்மாவின் தொடர் சிகிச்சைக்காக தலைவர் பிரபாகரனின் அக்கா வினோதணி கனடாவில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்பினார்.

ஆனால் கனடாவில் மருத்துவ நடைமுறைகளில் சிக்கல் இருப்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. பின்னர் அம்மாவை தமிழ்நாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது என்று சிவாஜிலிங்கம், அதற்கான ஏற்பாடுகளை செய்தார். இந்திய அரசிடம் உரிய அனுமதி பெறப்பட்டது.

தமிழகத்தில் அம்மா எங்கே தங்கி சிகிச்சை எடுக்கப் போகிறார் என்று வெளியுறவுத்துறை கேட்டபோது பழ.நெடுமாறன் இல்லத்தில் தங்குவதாக அவரது வீட்டு முகவரி அளிக்கப்பட்டது.
அதன் பிறகே இந்தியா பார்வதிஅம்மாவுக்கு விசா வழங்கியது.

2010, ஏப்ரல் 16 ஆம் தேதி மாலை விமானத்தில் அம்மாவும்,அவருக்கு த் துணையாக விசயலட்சுமி எனும் செவிலியரும் மலேசியாவிலிருந்து சென்னை வந்து சேர்ந்தனர். பார்வதிஅம்மாள் வந்த செய்தியை முறைப்படி தமிழக அரசுக்கு மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரியப்படுத்தினர்.

அம்மா வருகை பற்றி அய்யா நெடுமாறன் அவர்கள் தலைவர் வைகோவுக்கு மட்டும் தகவல் தந்திருக்கிறார். விமான நிலையத்திற்கு 16.04.2010 இரவில் வைகோ,நெடுமாறன் இருவரும் சென்ற போது,தமிழக காவல்துறையினர் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
விமான நிலையத்தில் தமிழக காவல்துறை குவிக்கப்பட்டது.

இதனிடையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை தமிழகத்தின் ஆட்சியாளர்(???) தொடர்பு கொண்டு தமிழ்நாட்டில் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு தமிழக மக்கள் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு,மாநில தி.மு.க அரசு மீது கோபமாக உள்ளனர். இந்த நிலையில், பிரபாகரன் தாயார் இங்கு வந்து தங்கினால் நி லைமை கட்டுமீறிப் போகும்.எனவே பார்வதி அம்மாள் சென்னையில் தங்கி மருத்துவம் பார்க்க அனுமதிக்க க் கூடாது என்று கூறினர்.

அதற்குப் பிறகு விமானத்திலேயே 5 மணி நேரம் காத்திருந்த பார்வதி அம்மாளை மத்திய அரசு அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால் மீண்டும் மலேசியாவுக்கு போக வேண்டிய சூழல் ஏற்பட்டு, பின்னர் அங்கிருந்து ஈழம் சென்று,உடல்நலன் பாதிக்கப்பட்டு மறைந்தார்கள்.

இதுதான் நடந்த உண்மைகள்.
சுப.வீ.அவர்களுக்கு சில கேள்விகள்.
மத்திய அரசு அம்மா வருகைக்கு அனுமதி அளித்தது தி.மு.க அரசுக்கு த் தெரியாதா?
முதல்வருக்குத் தெரியாமல் ஒரு நிகழ்வு நடந்து விடுமா?மத்திய திமுக அமைச்சர்களுக்கும் தெரியாதா?
முதல்வர் கருணாநிதி சார்பில் மத்திய அரசிடம் பார்வதி அம்மாவுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்ட செய்தி வந்த போது மத்திய அரசு அப்போது மறுப்பு தெரிவிக்கவில்லையே ஏன்?

1990 களில் நாங்கள் பார்த்த பேராசிரியர், தோழர் சுப.வீ.உருவம் மட்டும் மாறவில்லை.
தமிழ் உள்ளமும் அல்லவா மாறி விட்டது! இவ்வாறு மதிமுக அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

2 கருத்துக்கள்:

Anonymous said...

அருமை அண்ணா

Anonymous said...

SU BA VEE ELLAM PAKKA DUBAKKUR PAYA SIR

Post a Comment

Send your Status to your Facebook