Wednesday

தமிழருவி மணியன் சொல்லும் 2016 சாத்தியமா?

தமிழகத்தில் கருணாநிதி போனால் ஜெயலலிதா என்றும் ஜெயலலிதா போனால் கருணாநிதி என்றும் தான் ஒவ்வெரு முறையும் முதல்வர் பதவிக்கான போட்டியும் தர்க்கங்களும் நடந்தது வந்தது. ஆனால் சமீப காலமாக அந்த தர்க்கங்களை உடைக்கும் விதமாக தான் செல்லும் இடங்களில் எல்லாம் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வரும் 2016  ஆண்டில் தமிழகத்தின் முதல்வராக வைகோ அரியணை ஏறுவார் என்று சொல்லி வருகிறார். 

தமிழருவி மணியனின் இந்த பேச்சு முகநூலில் இரண்டு மூன்று தினங்களாக மிக பெரிய தர்க்கங்களை உருவாக்கி இருக்கிறது. முகநூலில் இருக்கும் ஒரு சில திமுகவினரை உசுபேற்றி விட்டிருக்கிறது என்றே சொல்லலாம். 

இதற்கு முன்பும் பல முறை உள்ளத்திலும் பொதுவாழ்விலும் நேர்மையாக இருக்கும் வைகோ தான் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வர வேண்டும் என தமிழருவி மணியன் சொன்ன போது அதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை. ஏனெனில் மதிமுக எப்படியாவது அதிமுக கூட்டணிக்கு சென்று விடும் என்று பலர் நினைத்து வந்தனர். அப்படிஅமைந்ததால் அதிமுக அடுத்து திமுக என்ற நிலையே இருக்கும். அதிமுக மீதான கோபத்தில் நாம் ஆட்சியை பிடித்து விடலாம் என்று கனவு கோட்டை கட்டி வருகிற திமுகவினருக்கு இது மிக பெரிய அதிர்ச்சியை உருவாக்கியது என்றே சொல்ல வேண்டும்.  

வைகோவும்  மதிமுகவும் பல முறை சூசகமாக அதிமுக திமுகவிற்கு மாற்றாக மதிமுக திகழும் என்று சொல்லிய பிறகும் அதிமுகவோடு இணைத்து திமுகவினர் பேசியதே அவர்களின் இருப்பை தக்க வைக்க கூடிய சூழ்ச்சி தான். இவர்களுக்கு தூண் கொடுக்க மஞ்சள் பத்திரிகை நக்கீரன் இருக்கிறது.

இரண்டு நாட்களுக்குமுன்னர் ஜெயலலிதா டில்லியில் 40 தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடும் என்று அறிவித்த பின்னர் மதிமுக அதிமுக கூட்டணிக்கு செல்லும் என்று நாம் செய்யும் பிரச்சாரம் எடுபடாது என்பதை உணர்ந்த திமுக வைகோ தலைமையில் அமையஇருக்கும் மாற்று அணியை விமர்ச்சிக்க துவங்கி இருக்கிறது. அதன் முதல் படியாக வைகோவை விமர்சிக்க துவங்கி இருக்கிறார்கள். 

ஜெயாவை விமர்சிக்க துப்பு இல்லையா என்று கேட்கும் திமுகவினரே ஜெயாவை விமர்சிப்பதை விட்டு விட்டு வைகோவை விமர்சிக்கிறார்கள் என்னும் போது அவர்கள் ஜெயாவை விட வைகோவை கண்டு தான் அதிகம் அஞ்சுகிறார்கள் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கும் வகையில் அவர்களின் விமர்ச்சனங்கள் இருக்கிறது. 

ஏன் அவர்கள் வைகோவை விமர்ச்சிக்கிறார்கள்? 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி தலைவரின் மகன் என்ற முறையில் அடுத்த வாரிசுக்கு அனைத்து அதிகாரங்கள் கொடுத்தும் அனைத்து பயிற்சிகள் கொடுத்தும் இன்றும் தளபதியாகவே அந்த வாரிசு இருப்பதாலும், அந்த வாரிசுக்கென்று கருணாநிதியிடம் இருக்கும் எந்த திறமையும் இல்லாத காரணத்தால், மக்கள் பிரச்னைக்கு போராடும் வைகோ அந்த இடத்தை பறித்து விடுவார் என்ற பயத்தில் திமுகவினர் இருப்பது தெரிகிறது.

தமிழை  சொல்லி ஆட்சியில் இருந்த திமுக, 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடந்து மத்திய அரசில் அங்கம் வகித்து அதிகாரத்தை சுவைத்த திமுக, கலைஞரின் குடும்ப வாரிசுகளின் மூலம் மக்களுக்கு எதுவும் செய்யாமல் வெறுமனே மிக பெரிய ஊழல்களை செய்து வந்தது. அதன் விளைவு தான் கடந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தமிழக மக்கள் திமுகவிற்கு கொடுக்க வில்லை.

திமுக  நடத்திய காட்டு மிராண்டி தனமாக ஆட்சியாலும், கிளை செயலாளர் முதல் அமைச்சர்கள் வரை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஏழை எளிய மக்கள் நிலங்களை அபகரித்து, மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகமே அவர்கள் குடும்ப சொத்தாக மாறி விடும் என்ற அச்சத்தில் மக்கள் திமுகவுக்கு எதிராக அதிமுகவுக்கு வாக்களித்தார்கள்.

அதிமுக வெற்றி பெற வேண்டும் ஜெயலலிதா முதல்வர் ஆக வேண்டும் என்று ஒரு மனதாக மக்கள் வாக்களிக்க வில்லை. கருணாநிதியை வீழ்த்த ஜெயாவை ஒரு ஆயுதமாக மக்கள் பயன் படுத்தினாலும், இவர்கள் இருவருக்கு மாற்றாக ஒருவர் வர வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலானோர் மத்தியில் இருந்து வந்தது.

அந்த மாற்று தலைமை யார்? அதை தான் தமிழருவி மணியன் தமிழகத்திற்கு அடையாளம் காட்டுகிறார். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும், மக்களின் இன்ப துன்பங்களில் மக்களுக்காக அயராது உழைக்கும் தலைவன் யார் என்ற தேடலில் வைகோவே அங்கு தெரிகிறார்.

தமிழருவி மணியன் வைகோவை அடையாளம் காட்டும் காரணங்களை ஆரோக்கிய நேர்மையான அரசியலை விரும்பும் நடுநிலையாளர்கள் ஏற்று கொண்டுள்ளார்கள் என்பதால் தான் வைகோ மீது கொள்கை ரீதியாக விமர்ச்சனம் வைக்காமல் தரம் தாழ்ந்து திமுகவினர் விமர்ச்சிக்கிறார்கள். திமுகவினர் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து செல்லும் காரணம் ஒன்றே தமிழருவி மணியன் சொல்லும் 2016 சாத்தியமாகும் என்றே தோன்றுகிறது.

15 கருத்துக்கள்:

கார்த்திக் சரவணன் said...

தமிழருவி மணியன் அவருடைய விருப்பத்தை சொல்லியிருக்கிறார். இது என்னை போன்ற நடுநிலையாளர்களின் விருப்பமும் தான் ஆனால் மதிமுக அந்த நிலையை அடைய என்ன செய்ய போகிறது?

வைகோவின் நேர்மை, போராட்ட குணம், ஆழுமை இவையனைத்தும் மதிமுகவிற்கு பிளஸ் அதே நேரம் மதிமுகவினர் இந்த கோசத்தை எவ்வளவு தூரம் மக்களிடம் கொண்டு சேர்கிறார்கள் ?

தினகரன் அரசு said...

தமிழருவி மணியன் காமெடியை நீங்க பெருசா நினைக்கிறீங்களா ?

பிரபு போஸ் said...

அருமையான கட்டுரை ...

Vicky said...

Tamilaruvi maniyan yen Vaikovai aatharikkiraar ?

Rajesh Subramaniyan said...

இருபது ஆண்டுகள் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் நாம் பார்த்து விட்டோம் வாய்ப்பு கொடுத்து விட்டோம் .. ஆனால் மீண்டும் இந்த ஆட்சியை தொடர வேண்டும் என்று இருவருமே முயற்சித்து இல்லை.. அப்படி அவர்கள் முயற்சித்து இருந்தால் நல்லாட்சி நடத்தியிருப்பார்கள்.

அப்படி நல்லாட்சி நடத்து முயற்சிக்காத இவர்களை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்? அந்த வகையில் தமிழருவி மணியன் சொல்வதை நான் ஏற்று கொள்கிறேன்..

இப்போதைய தலைவர்களில் வைகோ ஒருவர் தான் தகுதியானவர் . வாழ்த்துக்கள்

Anonymous said...

it does not matter who is going to rule TN...it shud be neither jj nor mk!people shud come forward to teach lesson to BOTH....by voting diff leaders or independent candidates.

Jeevanantham Paramasamy said...

வைகோ இந்த ரெண்டு *.மு.க வை விட நல்லவர் தான். ஆனால் சேர்க்கை சரியில்லை. சென்ற தேர்தலில் அ.தி.மு.கவுதன் கூட்டணி சேர்ந்த போது அவருக்கு இருந்த மரியாதை எல்லாம் மக்களிடம் போயே போச்சு.

தமிழ்ச் செல்வன் said...

ஜீவா பரமசாமி said...

வைகோ இந்த ரெண்டு *.மு.க வை விட நல்லவர் தான். ஆனால் சேர்க்கை சரியில்லை. சென்ற தேர்தலில் அ.தி.மு.கவுதன் கூட்டணி சேர்ந்த போது அவருக்கு இருந்த மரியாதை எல்லாம் மக்களிடம் போயே போச்சு.
///////////////

வைகோ இந்த இரண்டு பேரை விட நல்லவர் என்று நீங்களே சொல்லுகிறீர்கள் ..

அதிமுகவோடு கூட்டணி வைத்தது என்பது தவறு தான் . அதே நேரம் திமுக அப்போது வீழ்த்த பட வேண்டிய ஒன்றாக இருந்தது..

ஏன் திமுகவை வீழ்த்த மக்களே அதிமுகவிற்கு வாக்களிக்க வில்லையா ?

மாற்று அணிக்கான தேவை இப்போது தான் வந்துள்ளது.. இந்த வகையில் தமிழருவி மணியனின் முயற்ச்சியை பாராட்டியாக வேண்டும் ..

நல்லவர்கள் நாட்டை ஆளட்டும்

நாதன் said...

உண்மை

தமிழ் முனி said...

வைகோ தலைமையில் கூட்டணி முதலில் அமையட்டும் அப்புறம் முதல்வர் ஆவதை பற்றி பார்க்கலாம்

knvijayan said...

எல்லாம் சரிதான் டூப் மாஸ்டர் அண்ணாதுரையை தன்னுடைய தலைவர் என்று வைகோ சொல்லுவதை தமிழருவி எவ்வாறு ஜீரணித்து கொள்ளுகிறார் .

Anonymous said...

முதலில் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் வாக்கை அளிக்கக்கூடாது என்று முடிவெடுங்கள் ...நல்லது தானாகவே நடக்கும் ....!உலகத்தின் குழப்பங்கள் ....இந்தியாவின் குழப்பங்கள் ....இதற்கெல்லாம் நாம் ஒன்றும் செய்யமுடியாது.....ஆனால் தமிழ்நாட்டை குட்டிச்சுவர் ஆக்கியது இந்த இருவரும் தான்!இருவரையும் புறக்கணித்தல் என்பதே நமது முடிவாக இருக்கட்டும்.

Anonymous said...

சாத்தியமே.................வைகோவை விட்டால் வேறு யாரை தமிழ் நாட்டின் தலைவனாக நினைத்து பார்க்க முடியும். .....தேமுதிக உதிர ஆரம்பித்து விட்டது ; திமுக குடும்ப கட்சி ; அதிமுக அதிகார போதை ,ஆணவம் மிகுந்த , மக்களை கிள்ளுகீரையாக நினைத்து அச்சுறுதிகர கட்சி ; காங்கரஸ் சீரோ ; "ஆகையால், "புதிய பாதை ; ஒரு புதிய சிந்தனை ; மக்களின் சக்தி ; மாற்று சக்தி ; அது "மக்கள் போராளி" "மக்கள் தலைவன்" வைகோவே. வேறு யாரையும் நினைத்துகூட பார்க்க முடியாது. "தலைமை பண்பு" உள்ள ஒரே தலைவன் வைகோவே..........நன்றி..............பொன்னம்பலம் .....................13.06.2013

முரட்டு பக்தன் said...

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் இலவசம் என்று சொல்லி தேர்தலில் மக்களுக்கு போதையையும், கொள்ளையடித்த காசையும் கொடுத்து வெற்றி பெற்று, இந்த இரு கட்சிகாரர்களும் மக்களின் பணத்தை மாற்றி, மாற்றி கொள்ளையடிக்கிறார்கள் கடந்த இருபது வருடங்களாக. அடுத்த வாய்ப்புள்ள நல்ல தலைவர் யார் என்ற கேள்வி எழும்போது அதற்க்கு தகுதியானவர் ஒருவர் வைகோ. அதைத்தான் அய்யா மணியன் அவர்கள் கூறுகிறார். நல்ல அருமையான கட்டுரை.

villa said...

அப்படீன்னா தமிழ்நாட்டில் எத்தனை (சிம்)ஆசனங்கள் இருக்கின்றன? இதையேதான் ராம்தாஸ், விஜெயகாந், காங்கிரஸ், நடிகர்கள் விஜெ, கார்திக், சீமான், ரஜனி எல்லோரும் சொல்கிறார்கள்.
தற்கால அரசியல் புரியாதவர்கள் மேலைநாடுகளுக்குப் போகாவிட்டாலும் அண்டைநாட்டிலிருந்து (அங்கு ராவணர்கள் ஆட்சி புரிந்தாலும்) கற்றுக்கொள்ளுவது நலம்.

Post a Comment

Send your Status to your Facebook