ஓர் ஆண்டுக்கு முன்னர் ஈழத்திலே சிங்கள வெறியர்களால் தமிழினம் அழிக்க பட்ட போது கொதித்தெழுந்து தன்னுடைய தேக்கு மர தேகத்தை தீக்கு தின்ன கொடுத்த மாவீரன் முத்துக்குமார் உட்பட 19 வீர தியாகிகளுக்கு வீர வணக்க நிகழ்வுகள் மிகவும் எழுச்சியோடு நடை பெற்றது.
குமரி மாவட்டம் தக்கலை ஒன்றியத்தில் தக்கலை பேருந்து நிலையத்திற்கு முன்புறம் தக்கலை ஒன்றிய மதிமுக செயலாளர் அழகை J.P . சிங் தலைமையில் முத்துக்குமார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தமிழ் ஈழம் மலரும் வரை போராட உறுதி எடுத்து கொண்டனர். ஏராளமான மதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழ் இன ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் .
இதை தொடர்ந்து மதிமுக இளைஞர் அணி சார்பாக குமார புரம் சந்திப்பில் முத்துக்குமார் படத்திற்கு இளைஞர் அணியினர் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் வீரவணக்க நிகழ்வு பொதுக்கூட்டம் நடை பெற்றது . இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் குமார் தலைமை தாங்கினார் . கூட்ட்டத்திற்கு தக்கலை ஒன்றிய செயலாளர் , குருந்தன் கொடு ஒன்றிய செயலார் , குளச்சல் நகர செயலாளர் மற்றும் நிவாகிகள் கலந்து கொண்டனர் . தலைமை கழக பேச்சாளர் சிலம்பை டென்னிசன் சிறப்புரையாற்றினார் .
0 கருத்துக்கள்:
Post a Comment