இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label கருத்து கணிப்பு. Show all posts
Showing posts with label கருத்து கணிப்பு. Show all posts
Sunday
கடைசி கட்ட கருத்து கணிப்பு
அன்பார்ந்த தமிழக மக்களே இன்னும் இரண்டு நாட்களில் தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவு பெறுகிறது. 13 தேதி மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள் இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுக்கான தமிழகத்தின் தலைவிதியை மக்கள் தீர்மானிக்க இருக்கிறார்கள். இது குறித்து ஜூனியர் விகடனின் வந்த கருத்து கணிப்பு உங்களுக்காக.
திமுக கூட்டணி - 92
திமுக - 67
காங்கிரஸ் - 15
பாமக - 7
விடுதலை சிறுத்தைகள்
கொங்கு நாடு முன்னேற்ற கழகம்
அதிமுக கூட்டணி - 141
அதிமுக - 105
தேமுதிக - 17
சிபிஎம் - 11
சிபிஐ - 4
மனித நேய மக்கள் கட்சி - 3
கொங்கு இளைஞர் பேரவை - 1
மேலும் கடைசி நேரத்தில் இந்த நிலவரங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தும் சக்தி படைத்தவையாக மூன்று காரணங்களை ஜூனியர் விகடன் கணித்துள்ளது .
1. தேர்தல் கமிசனின் கெடுபிடிகளையும் மீறி (அல்லது அவர்கள் தங்களை தாங்களே இறுக்கம் தளர்த்தி கொண்டால் ) நினைத்த தொகுதிகளில் எண்ணி வைத்த பணத்தை விநியோகிக்க முடிந்தாலோ
2. மன சாட்சி படி வாக்களியுங்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தது. தமிழகத்தில் பரவலாக 48 தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி மதிமுகவிற்கு இருப்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டது. இந்த கட்சிக்கு கருணாநிதி என்றால் எட்டிக் காய் தான். ஆனால் சமீபத்திய கடுப்பு ஜெயலலிதா மீதே அதிகமாக இருக்கிறது. மனவேதனை ஜெயலலிதா மீதான கோபமாக மாறினாலோ ...
3. கருணாநிதியும் ஜெயலலிதாவும் தங்களது கடைசி அஸ்திரமாகப் பயன்படுத்த போகும் லாஸ்ட் புல்லட் தாக்குதலைப் பொறுத்தோ ..
இந்த முன்னணி நிலவரத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும் .
டிஸ்கி : இனி நீங்க முடிவு பண்ணுங்க யார் ஆட்சிக்கு வருவாங்கன்னு ....
Thursday
தேர்தல் முடிவுகள் தெரிய இரண்டு நாட்களே உள்ள நிலையில் எக்சிட் போல் கருத்து கணிப்பு தேவையா?
எக்சிட் போல் கருத்து கணிப்புகளில் கலங்கி போயிருக்கின்றன பெரிய கட்சிகள் . சனிகிழமை வாக்குகள் எண்ண படும் அன்றே முடிவுகள் தெரிந்து விடும் அதுக்கு முன்னால எதுக்கு ஒரு கருத்து கணிப்பு என்று நாம் நினைத்தால் தவறு .
ஜனநாயகத்தில் தூண் போன்று விளங்கும் பத்திரிகைகள் இப்போது நடுநிலை என்ற தன்மைகளை இழந்து ஏதோ ஒரு கட்சிக்கோ அல்லது ஏதோ ஒரு அமைப்புக்கோ துணை போகின்ற வகையிலே கருத்துக்களை வெளியிடுகின்றன . சில பத்திரிகைகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் சில எதிர் கட்சிக்கு ஆதரவாகவும் செயல் படுகின்றன .
ஐந்து கட்ட தேர்தல் முடியும் முன்னால் ஒட்டு போட்ட பின்னர் எடுக்கப்படும் கருத்து கணிப்புகளை வெளியிட கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது . நேற்று கடைசி கட்ட தேர்தல் முடிவடைந்து விட்டது . கருத்து கணிப்புகளும் வெளியிடப்பட்டன . அதில் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவும் பாஜகவிற்கு சாதகமாகவும் கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது . அதில் முக்கியமாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள வித்தியாசங்கள் 20 முதல் 30 வரை இருக்கிறது .
பத்திரிகைகள் கருத்து கணிப்புகளை சொன்னாலும் , தேர்தல் முடிவுகள் சனி கிழமை தெரிந்தாலும் இந்த இரண்டு நாட்கள் கூட காட்சிகளுக்கு ஒரு மினி தேர்தல் தான் . தேசிய அளவில் தெரிந்து விட்டது எந்த கூட்டணிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது . காங்கிரஸ் அல்லது பாஜக காட்சிகளுக்கு தான் ஆட்சியமைக்க அதிக வாய்ப்புகள் இருக்கறது .
இந்த இரண்டு நாட்களும் இந்த கூட்டணி தலைவர்கள் யாரை மடக்கலாம் . அடுத்து அந்த கட்சிய கூப்பிடலாமா இல்ல இந்த கட்சிய கூப்பிடலாமா என்று தங்கள் அடுத்த கட்ட பிரச்சாரத்தை ஆரம்பிப்பார்கள் ( ஆரம்பித்திருப்பார்கள் ) . இப்போ தான் எக்சிட் போலில் நிறைய சீட் கிடைக்கும் என்று சொன்ன கட்சிக்கு பூஸ்ட் குடிக்கிறமாதிரி இருக்கும் . மற்ற கட்சிக்கு .................................
அதனால தான் பாஜக தனியா எக்சிட் போல் நடத்தியிருக்கு .

Subscribe to:
Comments (Atom)