இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label தேர்தல் 2011. Show all posts
Showing posts with label தேர்தல் 2011. Show all posts
Thursday
அம்மையாரை அய்யர்கள் சந்தித்து வாழ்த்து
நேற்றும் இன்றும் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவை அய்யர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. இந்த ஒரு மாதத்தில் என்ன மாற்றங்கள் நடைபெற போகிறதோ?
இன்னும் ஓரிரு நாளில் கட்சி மாறும் காட்சிகள் கூட நடைபெறலாம். யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என சரியாக கணிக்க முடிந்தவர்கள் வெற்றி பெறும் கட்சிக்கு மாறி முன்னுரிமை பெற வாய்ப்பிருக்கிறது.
நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் 77 .4 % வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் கமிசன் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வாக்குகள் பதிவான தேர்தலாக இந்த தேர்தல் அமைந்திருக்கிறது. அதே போல் ஒரு மாதம் காத்திருந்து தேர்தல் முடிவுகளை அறிவது என்பதும் புதிதாக தான் இருக்கிறது.
இந்நிலையில் அய்யர்கள் ஜெயலிதாவை சந்தித்து பூஜை செய்தும் வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் பல பூசாரிகள் அதிமுகவில் இணைத்திருக்கிறார்கள். பூசாரிகள் மூலம் யாகம் எதாவது நடத்தி விழுந்த வாக்குகளை மாற்ற போகிறாரா ? இல்லை தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பாப்பனர்களும் சேர்ந்து வாக்குகளை மாற்றி அதிமுகவை வெற்றி பெற செய்து ஜெயலலிதாவை முதல்வராக்க பார்கிறார்களா ? ........
இடைத்தேர்தல்கள் தான் நினைவுக்கு வருகிறது ........
Monday
ஏன் அதிமுகவினர் சோர்வடைகிறார்கள் ?
எழுதியது
Suresh Kumar
Labels:
அதிமுக கூட்டணி,
அரசியல்,
தேர்தல் 2011,
மதிமுக
எழுதிய நேரம்
Monday, April 11, 2011
கடந்த இரண்டு நாட்களாக வெற்றிக்கான கடைசி கட்ட பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டிய ஜெயலலிதா தொண்டர்கள் சோர்வடைய கூடாது என சொல்லவேண்டிய நிலைக்கு தள்ள பட்டதன் காரணம் என்ன? உண்மையில் தொண்டர்கள் சோர்வடைந்து விட்டார்களா? ஏன் சோர்வடைந்தார்கள் ?
எங்கேயோ சென்ற தேர்தல் இப்போது எங்கேயோ வந்து நிற்கிறது. சோர்வடைய வேண்டிய திமுகவினர் சுறுசுறுப்பாகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய அதிமுகவினர் சோர்வடைந்தும் காணப்படுகின்றனர்.
கடந்த முறை அதிமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது என இருந்த நிலையில் கடைசி நேரத்தில் மதிமுகவோடு கூட்டணி வைத்து கொண்டதால் தமிழக வரலாற்றிலேயே ஒரு மைனாரிட்டி திமுக ஆட்சியையும் அதிக சட்ட மன்ற உறுப்பினர்களையும் கொண்ட எதிர் கட்சியும் அமைந்தது. மதிமுகவோடு கூட்டணி வைத்த காரணத்தால் இன்றுவரை அதிமுக நிலைத்து நிற்க காரணமானது. அந்த தேர்தல் முடிந்து திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றவுடன் தன தொண்டர்களை தக்க வைக்க வேண்டி பேசிய ஜெயலலிதா " நாம் இன்று அறுபதுக்கு மேற்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கிறோம் எனவே பயப்பட வேண்டியது நாம் அல்ல திமுக தான் " என்றார்.
அந்த ஜெயலலிதா இப்போது எங்கே ? தேர்தல் பிரச்சாரம் துவங்கிய போது இதே தெம்போடு பேசிய ஜெயா இப்போது சோர்வடைந்து விடாதீர்கள் என செல்லும் இடம் எல்லாம் பேச வேண்டிய நிலைக்கு மாற காரணம் என்ன ? கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றி கனியை ஈட்டலாம் என காத்திருந்த அதிமுகவினர் ஏன் சோர்வடைந்தார்கள்?
தேர்தல் அறிவிப்பு வெளியான போது அதிமுக தான் வெற்றி பெறும். அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்ற சூழ்நிலை தான் இருந்தது. திமுக ஆட்சிக்கு எதிரான அலை தமிழகமெங்கும் இருந்தது. திமுகவிற்கு எதிரான அலையை வாக்குகளாக ஜெயலலிதா மாற்றுகிறார் என தான் நினைத்தார்கள் விஜயகாந்தை கூட்டணியில் சேர்த்த போது. ராஜ தந்திரத்தில் ஜெயலலிதாவே முன்னிலையில் இருந்தததாக தான் நினைத்தார்கள். ஆனால் அடுத்தடுத்து ஜெயலலிதாவின் ஆணவத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் தான் இன்று அதிமுகவினர் சோர்வுக்கு காரணம்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிமுகவோடு மதிமுக கூட்டணி அமைத்து ஒரு கூட்டணி கட்சி எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தோடு இருந்தது. ஆனால் யார் இல்லைஎன்றாலும் வெற்றி பெற்று விடுவோம் என்ற மிதப்பில் இருந்த ஜெயலலிதாவால் வைகோவும் மதிமுகவும் அலட்சிய படுத்த பட்டது தமிழக மக்கள் மத்தியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
1 .5 சதவீத வாக்குகளே உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 22 தொகுதிகளும் 6 சதவீத வாக்குகள் பெற்ற மதிமுகவிற்கு 6 தொகுதிகளிலிருந்து தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை துவங்க காரணம் என்ன? ஆனால் இத்தனை தூரம் அவமான படுத்த பட்டரும் வைகோ மவுனமாகவே இருந்து எல்லோர் மனதையும் வென்று விட்டார். அவர்களாகவே கூட்டணியை விட்டு வெளியேற்றியது ஜெயலலிதா இன்னும் திருந்த வில்லை என்பதை தமிழகத்திற்கு எடுத்து காட்டியது. அப்போதே அதிமுகவின் தோல்வி குறிக்க பட்டுள்ளது. அதுவரை அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்த கருத்து கணிப்புகள் எல்லாம் தலை கீழாகி விட்டது.
மேலும் அதிமுகவோடு கூட்டணியில் இருந்த போதும் எந்தவிதமான சமரசமும் செய்யாமல் தன் பணியில் தொடர்ந்து, நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதில் முழு மூச்சோடு போராடி வந்த வைகோவை வெளியேற்ற ஆயிரம் கோடி வரை கைமாற பட்டுள்ளது ஸ்டெர்லைட் ஆலை அதிபரிடமிருந்து. அடுத்து விடுதலை புலிகள் மீதாணை தடையை நீக்க வேண்டும் என நீதி மன்றம் வரை சென்று போராடி வருகிறார் வைகோ. விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கூடாது என்பது ராஜ பக்ஷேவின் ஆசை அதுவும் வைகோ கூட்டணியிலிருந்து வெளியேற்ற காரணமாகி விட்டது.
எந்த காரணங்களுக்காக மக்கள் திமுகவிற்கு மாற்றாக அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என நினைத்தார்களோ அத்தனை காரணங்களும் மதிமுக வெளியேற்ற பட்ட நாளே உடைத்து விட்டார் ஜெயலலிதா. இப்படி திருந்தாத ஜெயலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் தவறான பாதையில் செல்லும் என்பதை மக்கள் புரிந்து கொண்டதால் திமுக வெற்றி பெற வேண்டிய சூழல் உருவாக்கி வருகிறது. மக்கள் மத்தியில் ஜெயலலிதா நம்பிக்கை இழந்த காரணத்தால் தான் அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்து காணப்படுகின்றனர் . இந்நிலையில் தான் சோர்வடைந்து விடாதீர்கள் என்று செல்லுமிடமெல்லாம் ஜெயலலிதா சொல்லி வருகிறார்.
யார் வெற்றி பெற்றாலும் தமிழகம் மீண்டும் இருண்ட காலத்திற்கு தான் செல்லும் என்பது மட்டும் தெரிகிறது.
மேலும் அதிமுகவோடு கூட்டணியில் இருந்த போதும் எந்தவிதமான சமரசமும் செய்யாமல் தன் பணியில் தொடர்ந்து, நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதில் முழு மூச்சோடு போராடி வந்த வைகோவை வெளியேற்ற ஆயிரம் கோடி வரை கைமாற பட்டுள்ளது ஸ்டெர்லைட் ஆலை அதிபரிடமிருந்து. அடுத்து விடுதலை புலிகள் மீதாணை தடையை நீக்க வேண்டும் என நீதி மன்றம் வரை சென்று போராடி வருகிறார் வைகோ. விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கூடாது என்பது ராஜ பக்ஷேவின் ஆசை அதுவும் வைகோ கூட்டணியிலிருந்து வெளியேற்ற காரணமாகி விட்டது.
எந்த காரணங்களுக்காக மக்கள் திமுகவிற்கு மாற்றாக அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என நினைத்தார்களோ அத்தனை காரணங்களும் மதிமுக வெளியேற்ற பட்ட நாளே உடைத்து விட்டார் ஜெயலலிதா. இப்படி திருந்தாத ஜெயலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் தவறான பாதையில் செல்லும் என்பதை மக்கள் புரிந்து கொண்டதால் திமுக வெற்றி பெற வேண்டிய சூழல் உருவாக்கி வருகிறது. மக்கள் மத்தியில் ஜெயலலிதா நம்பிக்கை இழந்த காரணத்தால் தான் அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்து காணப்படுகின்றனர் . இந்நிலையில் தான் சோர்வடைந்து விடாதீர்கள் என்று செல்லுமிடமெல்லாம் ஜெயலலிதா சொல்லி வருகிறார்.
யார் வெற்றி பெற்றாலும் தமிழகம் மீண்டும் இருண்ட காலத்திற்கு தான் செல்லும் என்பது மட்டும் தெரிகிறது.
Sunday
கடைசி கட்ட கருத்து கணிப்பு
அன்பார்ந்த தமிழக மக்களே இன்னும் இரண்டு நாட்களில் தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவு பெறுகிறது. 13 தேதி மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள் இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுக்கான தமிழகத்தின் தலைவிதியை மக்கள் தீர்மானிக்க இருக்கிறார்கள். இது குறித்து ஜூனியர் விகடனின் வந்த கருத்து கணிப்பு உங்களுக்காக.
திமுக கூட்டணி - 92
திமுக - 67
காங்கிரஸ் - 15
பாமக - 7
விடுதலை சிறுத்தைகள்
கொங்கு நாடு முன்னேற்ற கழகம்
அதிமுக கூட்டணி - 141
அதிமுக - 105
தேமுதிக - 17
சிபிஎம் - 11
சிபிஐ - 4
மனித நேய மக்கள் கட்சி - 3
கொங்கு இளைஞர் பேரவை - 1
மேலும் கடைசி நேரத்தில் இந்த நிலவரங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தும் சக்தி படைத்தவையாக மூன்று காரணங்களை ஜூனியர் விகடன் கணித்துள்ளது .
1. தேர்தல் கமிசனின் கெடுபிடிகளையும் மீறி (அல்லது அவர்கள் தங்களை தாங்களே இறுக்கம் தளர்த்தி கொண்டால் ) நினைத்த தொகுதிகளில் எண்ணி வைத்த பணத்தை விநியோகிக்க முடிந்தாலோ
2. மன சாட்சி படி வாக்களியுங்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தது. தமிழகத்தில் பரவலாக 48 தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி மதிமுகவிற்கு இருப்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டது. இந்த கட்சிக்கு கருணாநிதி என்றால் எட்டிக் காய் தான். ஆனால் சமீபத்திய கடுப்பு ஜெயலலிதா மீதே அதிகமாக இருக்கிறது. மனவேதனை ஜெயலலிதா மீதான கோபமாக மாறினாலோ ...
3. கருணாநிதியும் ஜெயலலிதாவும் தங்களது கடைசி அஸ்திரமாகப் பயன்படுத்த போகும் லாஸ்ட் புல்லட் தாக்குதலைப் பொறுத்தோ ..
இந்த முன்னணி நிலவரத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும் .
டிஸ்கி : இனி நீங்க முடிவு பண்ணுங்க யார் ஆட்சிக்கு வருவாங்கன்னு ....
Friday
இரு கழகங்களுக்கும் மாற்றான சக்தி மதிமுக என்பதை நிருபிக்கும் தேர்தல்
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
சமூகம்,
தேர்தல் 2011,
வைகோ
எழுதிய நேரம்
Friday, April 08, 2011
பக்கத்து ஊரை சேர்ந்த சென்னையில் பணிபுரியும் நண்பர் ஒருவரை நேற்று தொடர்பு கொண்டு கேட்டேன் வாக்களிக்க ஊருக்கு எப்போது வருகிறாய் என்று? நண்பர் சொன்னார் நான் 13 ஆம் தேதி மாலை திரும்பி 14 ஆம் தேதி காலை வந்து சேருவேன். வாக்கு பதிவு 13 ஆம் தேதி வாக்களிப்பது என்றால் 13 ஆம் தேதி இங்கு வர வேண்டும் அல்லவா என்றேன். அதற்கு அவர் எனக்கு யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை.
என்னை விட வயதில் இளையவர் தான் இது இவருக்கு இரண்டாவது தேர்தல் என்று நினைக்கிறேன். எந்த கட்சியையும் சாராதவர் தமிழ் உணர்வு மிக்கவர். மேலும் அவரிடம் பேசும் போது வாக்களிப்பது நமது உரிமை அதை நாம் விட்டு கொடுக்க கூடாது என்று வாதிட்டேன். எதற்குமே அசராத அவர் கடைசியாக ஒன்றை சொன்னார். "சிறு வயது முதலே அதிமுக மீது ஒரு வித வெறுப்பை கொண்டவன் ஆனால் ஈழ போராட்டம் இறுதி கட்டம் அடைந்த போது அந்த மக்களை காப்பாற்ற முடிந்தும் காப்பாற்றாமல் கைவிட்ட திமுக மீதான கோபத்தில் என்னுடைய முதல் தேர்தலிலேயே அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தேன்."
"அதே போல் இந்த தேர்தலிலும் வாக்களிக்க வர வேண்டும் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். என்னை போல் தான் ஒவ்வெரு தமிழ் உணர்வாளர்களும் நினைத்திருந்தார்கள். மதிமுகவை கூட்டணியை விட்டு வெளியேற்ற அதிமுகவிற்கு ஏற்பட்ட காரணங்களை நினைக்கும் போது ஒரு விசத்தை கீழிறக்க இன்னொரு விசத்தை அல்லவா மேல் ஏற்ற வேண்டியிருக்கிறது என்று நினைக்கும் போது யாருக்கு வாக்களித்தாலும் தமிழர்களுக்கு செய்யும் துரோகம் எனவே நான் யாருக்கும் வாக்களிக்க விரும்ப வில்லை என்று சொல்லி முடித்தார். "
இவ்வளவு தெளிவாக பேசிய அவரிடம் வேறு எதுவும் சொல்ல முடியாமல் ஒன்றை மட்டும் சொன்னேன். வாக்களிக்கும் உங்கள் உரிமையை விட்டு கொடுக்காமல் தொகுதியில் போட்டியிடும் கட்சியை பார்க்காமல் வேட்பாளரை பார்த்து வாக்களிக்கலாமே".
தமிழக அரசியலை மிகவும் தெளிவாக புரிந்து வைத்திருக்கும் இவர் எந்த கட்சியையும் சாராதவர். இவரிடம் பேசிய பின்னர் தான் மதிமுக தேர்தலில் போட்டியிட வேண்டாம் என எடுத்த முடிவு எவ்வளவு நல்ல முடிவு என்பது தெரிந்தது. ஒருவேளை அதிமுக கூட்டணியில் மேலும் சில தொகுதிகளை கொடுத்து மதிமுக அந்த கூட்டணியில் தொடர்ந்து தேர்தலை சந்தித்திருந்தால் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் ஆனால் பலனை பெறுவது மதிமுகவோ தமிழர்களோ அல்ல அதிமுகவும் ஆதிக்க சக்திக்களுமாக தான் இருந்திருக்கும்.
ஒரு வேளை அதிமுக மீதான வெறுப்பில் உணர்ச்சி வசப்பட்டு தனித்து போட்டியிட்டால் திமுக எளிதில் வெற்றி பெற்றிருக்கும் அதனாலும் பலனை பெறுவது மதிமுகவோ தமிழர்களோ அல்ல மாறாக கருணாநிதியும் அவர் குடும்பமும் தான்.
தேர்தல் முடிந்த பின்னர் விலை போய் மதிமுகவை கழற்றி விடுவதுக்கு பதிலாக முன்னரே விலை போய் மக்கள் மத்தியில் தன்னை பற்றி நிருபித்த ஜெயலலிதாவிற்கு மக்கள் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளார்கள். இப்போது மக்கள் மத்தியில் இரண்டு வாய்ப்புகள் ஓன்று சேலை கட்டிய கருணாநிதி இன்னொன்று வேட்டி கட்டிய ஜெயலலிதா . இவர்கள் இருவருக்குள்ளும் ஒரே எண்ணங்கள் தான் ஓடி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மதிமுக போட்டியிடாமல் ஒதுங்கி கொண்டதால் இரு அணிகளுக்கிடையே எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற நிலை மாறி யாருக்கும் எளிதில் வெற்றி கிடைக்காது என்ற நிலை தான் ஏற்பட்டுள்ளது.
அதனால் தான் மதிமுக எங்கே இருக்கிறது என்று கெட்ட கருணாநிதி ஒவ்வெரு நாள் அறிக்கையிலும் மதிமுக எங்களை ஆதரிக்கிறது இதனால் எங்கள் வெற்றி உறுதி செய்ய பட்டுள்ளது என்று சொல்லி மதிமுகவின் ஆதரவை எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்.
அதே போல் ஜெயலலிதாவோ வைகோ மீது அன்பும் மரியாதையும் இருக்கும் என்று பேசுகிறார். இருவருமே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறார்கள் இவர்களுக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது யார் காலில் விழுந்தாவது வெற்றி பெற வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம்.
ஒவ்வெரு தேர்தல் முடிவுகளில் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணுவது மதிமுகவின் முடிவுகள் என்பது இந்த தேர்தலிலும் நிருபிக்க பட்டு வருகிறது. மதிமுகவின் சக்தியை தெரிந்து தான் இரு கழகங்களும் மதிமுகவை அழிக்க நினைக்கிறது. அவர்கள் நினைத்த திட்டத்திற்கு மதிமுக எடுத்த தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு மிக பெரிய அடி. மதிமுகவின் இந்த முடிவின் மூலம் மதிமுக தமிழகத்தில் இரு ஊழல் கட்சிகளுக்கு மாற்றான மாபெரும் சக்தியாக உருவெடுக்க துவங்கியிருக்கிறது.
இந்த தேர்தல் முடிவுகள் என்பது யார் வெற்றி பெற்றாலும் தமிழகத்திற்கு பயன் பட போவதில்லை. ஆனால் தமிழகத்திகு ஒரு மாற்று சக்தி தேவை அது மதிமுக என்பதை நிருபிக்கும் தேர்தலாக இது அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
வைகோவின் தேர்தல் புறகணிப்பு முடிவு பற்றி கவிஞர் தாமரை ஜூனியர் விகடனில்
வரவேற்கத்தக்க முடிவு நான் மனமார ஆதரிக்கிறேன். வைகோ எந்த கூட்டணியில் இருந்தாலும், மக்களுக்கான போராட்டங்களில் அவர் பின்வான்கியதே இல்லை. அவர் உண்மையான, நேர்மையான தலைவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஒரு நல்ல தலைவர் தப்பான இடத்தில் இருந்தது வேதனை. நமக்கான மாற்று அரசியலை முன்னெடுக்கும் திறன் அவரிடம் இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன்.
Thursday
ஜெயிலுக்கு தயாராகும் கொடநாட்டு இளவரசி
எழுதியது
Suresh Kumar
Labels:
அதிமுக கூட்டணி,
சொத்து குவிப்பு வழக்கு,
தேர்தல் 2011,
ஜெயலலிதா
எழுதிய நேரம்
Thursday, April 07, 2011
கருணாநிதியும் குடும்பமும் சேர்ந்து தமிழ் நாட்டை கூறு போட்டு வரும் வேளையில் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டும் என்று அனைவரும் ஓரணியில் திரண்டு கருணாநிதிக்கு எதிராக வருகின்ற தேர்தலை பயன் படுத்த நினைத்தார்கள். கருணாநிதிக்கு மாற்றாக ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்து விட கூடிய சூழல் உருவாக்கி வந்த வேளையில் யானை தன் தலையில் மண்ணை அள்ளி கொட்டுவது போல் ஜெயலலிதாவால் மதிமுக அலட்சியம் செய்ய பட்டது இன்று மக்கள் மத்தியில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத போது ஜெயலலிதாவின் ஆணவம் அகங்காரம் குறைந்து மக்கள் நலனில் அக்கறை கொண்டவராகியிருப்பார் என நினைத்து கருணாநிதிக்கு மாற்றாக ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்தலாம் என பெரும்பான்மையானோர் நினைத்து உண்மை. அதற்கேற்றாற்போல் தான் முதலில் கள நிலவரங்களும் இருந்தன. ஆனால் இன்று நேர்மாறாக கள நிலவரங்கள் இருப்பது மட்டும் தெரிகிறது.
தற்போதைய கள நிலவரங்களில் வேடிக்கை பார்ப்பவராக இருப்பதால் ஓரளவேனும் உண்மை நிலவரத்தை கணித்து சொல்ல முடியும். அதன் அடிப்படையில் ஒவ்வெரு கட்சி தொண்டர்கள், பொதுமக்களிடம் தேர்தல் நிலவரங்கள் குறித்து தெரிந்து கொண்டோம். அதனடிப்படையில் முன்னரை விட திமுகவினர் மிகவும் உற்சாகத்தோடு தேர்தல் பணியாற்றுகின்றனர். அதிமுக அணியில் ஒரு வித தொய்வு ஏற்பட்டுள்ளது.
சிந்திக்கும் மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என விரும்புகின்றனர் ஆனால் அதே நேரம் கருணாநிதிக்கு பதிலாக ஜெயலலிதா என்பதை ஏற்று கொள்ள வில்லை. யார் இலவசங்கள் அதிகம் கொடுக்கிறார்கள் என்று பார்த்து வாக்களிக்கும் வாக்காளர்கள் பெருகி விட்டார்கள். இரண்டு கட்சி வாக்குறுதிகளையும் ஆராய்ந்து பார்க்கும் மக்கள் ஜெயலலிதா சொன்னதை செய்வார் என்பதை நம்ப தயாரில்லை.
குமரி மாவட்ட நிலவரத்தை பார்த்தால் ஒரு தொகுதியில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதே கடினம். அப்படியே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் கூட அது கூட்டணி கட்சியின் வெற்றியாக தான் இருக்கும். அதிமுக போட்டியிடும் 4 தொகுதிகளில் 2 தொகுதிகளில் அதிமுக போட்டியிலே இல்லை என்பது தான் உண்மை. இதே போல் தென் மாவட்டங்களில் பெரும்பான்மை தொகுதிகளில் அதிமுகவின் தோல்வி உறுதி செய்ய பட்டுள்ளது.
கருணாநிதிக்கு மாற்றாக மக்கள் ஜெயலலிதாவை நம்ப தயாரில்லை. மதிமுகவை கூட்டணியிலிருந்து வெளியேற்றியவுடன் ஜெயலலிதா மீது மக்களுக்கு இருந்த கொஞ்ச நம்பிக்கையும் தகர்ந்து விட்டது என்பது மக்களிடம் பேசும் போது தெரிகிறது. மாற்றம் வேண்டும் என நினைத்தவர்கள் மத்தியில் யார் வந்தாலும் மக்களுக்கு பயன் இல்லை. ஆட்சிக்கு வரும் முன்னரே நச்சு ஆளை அதிபரிடமும் , சிங்கள இனவெறியன் ராஜபக்ஷேவிடமும் விலை போன ஜெயலலிதாவால் மக்களுக்கு எப்படி நல்லாட்சி தரமுடியும் என்பது தான் நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி.
மேலும் தேர்தலுக்கு பின்னர் அதிமுகவோடு காங்கிரஸ் கூட்டணிக்கு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு எதிரான அலை மாறி ஜெயலலிதாவின் திமிர்தனத்திற்கும் மக்கள் விரோத கொள்கைக்கும் எதிரான தேர்தலாக மாறி விட்டது. இதிலிருந்தே அதிமுகவின் தோல்வி குறிக்க பட்டு விட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதான எதிர் கட்சி ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து பின் வாங்கி கொட நாட்டில் ஓய்வெடுத்தது. சிறந்த எதிர் கட்சியாக மதிமுக செயல் பட்டதன் விளைவாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட திமுகவிற்கு எதிரான அலையை பயன் படுத்த தெரியாமல் தோல்விக்கு தயாராகி கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. இவ்வளவு நாட்களும் வாய்தா வாங்கி காலம் கடத்திய சொத்து குவிப்பு வழக்கும் முடியும் தருவாயில் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஜெயலலிதாவிற்கு ஜெயிலுக்கு போகும் வாய்ப்புகள் பிரகாசமாக அமையலாம்.
மீண்டும் ஒருமுறை எதிர்கட்சியாக அதிமுகவை ஜெயலலிதாவால் வழி நடத்த முடியுமா ?........
Tuesday
கேப்டனின் அசத்தல் பிரச்சாரத்தால் அதிமுக கூட்டணிக்கு பலமா ?
எழுதியது
Suresh Kumar
Labels:
அதிமுக கூட்டணி,
அரசியல்,
தேர்தல் 2011,
விஜயகாந்த்
எழுதிய நேரம்
Tuesday, April 05, 2011
தேர்தல் பிரச்சாரங்கள் விறு விறுப்பாக நடந்து வரும் சூழலில் திமுக கூட்டணியினர் விஜயகாந்தை போட்டு தாக்குவதில் குறியாக செயல் பட்டு வருகின்றனர். விஜயகாந்த் பெயரை எவ்வளவு நாறடிக்க முடியுமோ அந்த அளவிற்கு நாறடித்து கொண்டிருக்கின்றனர் . இந்த நிலையில் விஜயகாந்த் பேச்சை கேட்க வேண்டும் என நானும் தக்கலை சென்றிருந்தேன் . பத்மநாபபுரம் வேட்பாளர் ஆஸ்டினை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார் .
கேப்டனின் வருகையை எதிர்பார்த்து கொண்டிருந்த தேமுதிக தொண்டர்கள் அந்த வழியாக எந்த பேருந்து சென்றாலும் முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்க மறக்க வில்லை. இதோ வருகிறார் இதோ வருகிறார் என்று சொல்லி கேப்டனும் வந்து விட்டார் .
விஜயகாந்த் வந்தவுடன் தொண்டர்களின் கோசங்கள் விஜயாகந்துக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் . மேலும் விஜயகாந்தை பார்க்கவும் பேச்சை கேட்கவும் கட்சி சார்பற்ற மக்கள் பலரும் வந்திருந்தார்கள். ஆனால் என்னவோ தெரியவில்லை அதிமுக கட்சியினர் மிக குறைவானவர்களே வந்திருந்தனர் . மார்க்சிய பொதுவுடைமை கட்சி தோழர்களும் ஆஜராகியிருந்தனர் . சிந்தியுங்க மக்களே என பேச்சை ஆரம்பித்த கேப்டன் வாயிலிருது வரும் வார்த்தைகளின் தடுமாற்றம் தெரிந்தது . ஏற்கனவே ஆப் அடித்து விட்டு தான் கேப்டன் பேசுவார் என ஊர் முழுக்க தெரிந்திருக்கும் நேரத்தில் கேப்டனின் பேச்சுக்களை பார்க்கும் போது அது உண்மை என்று தான் தெரிகிறது .
ஒரு விஷயத்தை சொல்ல நினைத்து துவங்கும் கேப்டன் மக்களுக்கு புரியும் படியாக சொல்லாமல் பாதியில் விட்டு விட்டு சிந்தியுங்க மக்களே என்று தன் பாணியில் பேசுகிறார்கள். எந்தவொரு கருத்தையும் முழுமையாக சொல்ல முடியவில்லை. விஜயகாந்த் என்ன பேசுகிறார் என்பதை கேட்காமலே கைதட்டும் தொண்டர்கள் தான் விஜயகாந்த் வாகனத்தின் முன்னர் அதிகமாக நின்றனர் . விஜயகாந்தால் தொண்டர்களின் சத்தத்தை மீறி பேச முடியவில்லை. ஒவ்வெரு முறையும் நான் சொல்றத கேளுங்க சத்தம் போடாதீங்க என்று சொல்லி பார்த்தார் . ஒரு கட்டத்தில் யோ நீங்க ஏதாவது பண்ணி என வாயிலிருந்து ஏதாவது வந்து அதை டிவில காட்டிட போறான். அதனால கொஞ்சம் அமைதியா இருங்கன்னு சொல்லும் போது அவருடைய ஸ்டைல பார்த்தே மக்களுக்கு சிரிப்பு அடங்க வில்லை .
சிவப்பு கொடி பிடித்து கொண்டிருந்த தோழர்கள் அவர்களுக்குள் நல்ல நேரம் நம்ம தொகுதியில பேச வரல . இப்படி பேசினால் ஓட்டு போடணும்னு நினைக்கிறவனும் ஓட்டு போடமாட்டான் . நடுநிலையாளர்களாக வந்த அனைவருடைய கருத்தும் அதுவாக தான் இருந்தது.
கருணாநிதியின் குடும்ப ஆட்சி அதன் மூலம் தமிழகத்திற்கு ஏற்பட போகும் கேடுகள் , அலைவரிசை ஊழல் , மின் பற்றாகுறை , விலைவாசி உயர்வு போன்ற போன்ற பல பிரச்சனைகள் இருந்த போதும் அதிமுக கூட்டணியை பொறுத்த வரையில் அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் தலைவர்கள் இல்லை . பிரச்சாரங்களை பொறுத்த வரையில் திமுகவே முன்னிலையில் நிற்கிறது . ஜெயலலிதா குமரி மாவட்டத்திற்கு வந்து சென்றதே பலருக்கு தெரியவில்லை .
மக்கள் மத்தியில் எப்படி பிரச்சாரம் செய்தால் மக்கள் மனதை மாற்ற முடியும் என்கிற அளவில் பிரச்சாரத்தில் அதிமுக மிகவும் பின் தங்கியிருக்கிறது . ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பதை மக்கள் மத்தியில் கேட்டால் ஜெயலலிதா செய்யாத ஊழலா என்று தான் கேட்கிறார்களே தவிர அதனால் ஏற்பட போகும் விளைவுகள் தெரியவில்லை இது தான் நிலவரம் .
அதிமுக கூட்டணி எளிதில் வெற்றி பெற்று விடும் என்ற நிலை மாறி திமுக கூட்டணி வெற்றி பெற்று விடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது . திமுகவிற்கு மாற்றாக ஜெயலலிதாவை மக்கள் நம்ப தயாரில்லை என்பது மட்டும் தெரிகிறது . கருணாநிதிக்கு மாற்றாக தன்னை நிருபிக்காததும் ஜெயலலிதாவின் தவறு . அதே போல் விஜயகாந்தின் பிரச்சாரம் என்பது நடுநிலை வாக்காளர்களை கவரும் விதமாகவும் இல்லை .
கருணாநிதியின் குடும்ப ஆட்சி அதன் மூலம் தமிழகத்திற்கு ஏற்பட போகும் கேடுகள் , அலைவரிசை ஊழல் , மின் பற்றாகுறை , விலைவாசி உயர்வு போன்ற போன்ற பல பிரச்சனைகள் இருந்த போதும் அதிமுக கூட்டணியை பொறுத்த வரையில் அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் தலைவர்கள் இல்லை . பிரச்சாரங்களை பொறுத்த வரையில் திமுகவே முன்னிலையில் நிற்கிறது . ஜெயலலிதா குமரி மாவட்டத்திற்கு வந்து சென்றதே பலருக்கு தெரியவில்லை .
மக்கள் மத்தியில் எப்படி பிரச்சாரம் செய்தால் மக்கள் மனதை மாற்ற முடியும் என்கிற அளவில் பிரச்சாரத்தில் அதிமுக மிகவும் பின் தங்கியிருக்கிறது . ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பதை மக்கள் மத்தியில் கேட்டால் ஜெயலலிதா செய்யாத ஊழலா என்று தான் கேட்கிறார்களே தவிர அதனால் ஏற்பட போகும் விளைவுகள் தெரியவில்லை இது தான் நிலவரம் .
அதிமுக கூட்டணி எளிதில் வெற்றி பெற்று விடும் என்ற நிலை மாறி திமுக கூட்டணி வெற்றி பெற்று விடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது . திமுகவிற்கு மாற்றாக ஜெயலலிதாவை மக்கள் நம்ப தயாரில்லை என்பது மட்டும் தெரிகிறது . கருணாநிதிக்கு மாற்றாக தன்னை நிருபிக்காததும் ஜெயலலிதாவின் தவறு . அதே போல் விஜயகாந்தின் பிரச்சாரம் என்பது நடுநிலை வாக்காளர்களை கவரும் விதமாகவும் இல்லை .
Sunday
மெய் சிலிர்க்க வைத்த மதிமுகவின் முடிவு
எழுதியது
Suresh Kumar
Labels:
தேர்தல் 2011,
தேர்தல் புறகணிப்பு,
மதிமுக,
வைகோ
எழுதிய நேரம்
Sunday, March 20, 2011
யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அனைவரையும் சிந்திக்க வைத்து அரசியலில் ஒரு வித்தியாசத்தை காட்டி இன்று அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது மதிமுகவின் தேர்தல் புறகணிப்பு. இது பற்றிய ஒரு ஆய்வு.
கடந்த மூன்று நான்கு நாட்களாக மதிமுகவின் முடிவு என்ன என்று தெரிவதிலேயே அனைத்து கட்சிகளும் பத்திரிக்கையாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் எதிர்பார்த்து கொண்டிருந்த முடிவு இன்று காலை அறிவிக்க பட்டது . நேற்று காலை துவங்கிய மதிமுக உயர்நிலை குழு கூட்டத்தில் வருகின்ற சட்ட சபை தேர்தல் பற்றியும் கூட்டணி தொகுதி இழுபறி பற்றியும் மதிமுக எடுக்க வேண்டிய முடிவுகள் பற்றியும் பல கட்ட விவாதங்கள் நடந்து பின்னர் மாவட்ட செயலார்கள் கூட்டத்திலும் இது பற்றி விவாதித்து எடுக்க பட்ட முடிவு . நேற்று காலை துவங்கிய விவாத களம் இன்று அதிகாலை 4 மணிக்கு முடிந்திருக்கிறது .
மதிமுகவிற்கு கூட்டணியில் குழப்பம் என்ற செய்திகள் வந்தவுடன் மதிமுக தனித்து போட்டியிடும் நாம் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என நினைத்தவர்களின் நினைப்புகளுக்கு கிடைத்த முதல் அடி. கடந்த சட்ட மன்ற தேர்தலிலிருந்து அதிமுகவோடு கூட்டணியாக இருந்து வரும் மதிமுகவை அதிமுக தலைமை அவமான படுத்தியது. தன்னுடைய ஆணவத்தையும் தன்னுடைய திமிர் தனத்தையும் மதிமுகவோடு காட்டி மதிமுக கூட்டணியிலிருந்து தானாக விலக வேண்டிய எல்லா காரியங்களையும் செய்தது.
திமுக தரப்போ மதிமுக உணர்ச்சிவசப்பட்டு தனித்து போட்டியிடும் அதிமுக தங்களை அவமான படுத்தியதையடுத்து அதிமுக தோற்க வேண்டும் என்று மதிமுகவினர் வேலை செய்வார்கள் அப்போது நாமும் எளிதில் வென்று விடலாம் அதே நேரம் மதிமுகவும் காணாமல் போயிருக்கும் என நினைத்து இரண்டு மூன்று நாட்கள் மகிழ்ந்தது என்னவோ உண்மை.
ஒரு தலைவன் உணர்ச்சி வசப்பட கூடாது என்பது வைகோவின் முடிவில் தெரிகிறது . மதிமுகவின் ஒவ்வெரு தொண்டர்களும் திமுகவினர் நினைத்ததை போல் உணர்ச்சிவசப்பட்டு அதிமுகவை தோற்கடிக்க வேண்டும். மதிமுக தனித்து போட்டியிட வேண்டும் என தான் நினைத்தார்கள். ஆனால் வைகோ எதையுமே சிந்தித்து உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் அதே நேரம் சுயமரியாதைக்கும் இழுக்கு ஏற்படாமல் அனைவரது புருவங்களும் உயரும் விதமாக முடிவெடுத்திருக்கிறார்.
வைகோவின் இந்த முடிவு கட்டாயம் திமுக தரப்புக்கு மகிழ்ச்சியை தராது . அதே நேரம் அதிமுக தரப்புக்கு தலைவலியை கொடுக்காது. மக்கள் மத்தியில் அதிமுக மீதான நன்மதிப்பு வைகோவின் மோனத்தால் கேட்டு போனது என்னவோ உண்மை .
மதிமுக தீர்மானத்தில் குறிப்பிட பட்டுள்ள படி "கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை, ம.தி.மு.க.வுக்கு இல்லை" "தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் உருவாக்கி வளர்த்த தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாக போற்றும் ம.தி. மு.க. 2011-இல் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு, புதுவை சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மட்டும் போட்டியிடுவது இல்லை என்றும், திராவிட இயக்கத்தின் இலட்சியங்களையும், தாய்த் தமிழகத்தின் உரிமைகளையும் வென்றெடுக்கவும், தமிழ் இனத்தின் நலனைக் காக்கவும் தொடர்ந்து உறுதியோடு பயணத்தை மேற்கொள்வது" என தீர்மானத்தில் தெரிவிக்க பட்டுள்ளது . மதிமுகவில் பதவிக்கு ஆசைபட்ட்வர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டவர்கள் ஏற்கனவே எதிர் முகாமிற்கு சென்று காணாமல் போய் விட்டார்கள் . ஆனால் இப்போது இருப்பவர்களோ ஒரு லட்சியத்தோடு வைகோ பின்னால் அணி வகுத்திருப்பவர்கள் .
தனித்து போட்டியிட வேண்டும் என உணர்ச்சிவசப்பட்ட மதிமுக தொண்டர்கள் வைகோவின் இந்த முடிவால் வைகோ மீதும் மதிமுக மீதும் ஏற்பட்டுள்ள நன்மதிப்பால் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். பதவிக்காக கட்சி விட்டு கட்சி மாறும் கட்சிகளுக்கு மத்தியில் கொண்ட கொள்கைக்காக பதவியே வேண்டாம் என துறந்த மதிமுகவின் முடிவு நிச்சயம் மதிமுகவிற்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கும் .
அதிமுக திமுகவிற்கு எதிராக ஒரு கட்சி அரசியலை முன்னெடுக்க வில்லை என்ற குறைபாடு மதிமுகவின் இந்த நிலைப்பாட்டால் போய் விட்டது . தேர்தல் கமிசனின் அங்கீகாரத்திற்காக தான் ஒவ்வெரு கட்சிகளும் கூட்டணி வைத்து சில தொகுதிகளை பெற்று கொள்கின்றன . இந்த தேர்தலில் மதிமுக போட்டியிடாததால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற முடியாமல் போகலாம் . ஆனால் மதிமுகவின் இந்த முடிவால் வைகோ மீதும் மதிமுக மீதும் மக்கள் அங்கீகாரம் கொடுத்து விட்டார்கள் . மக்கள் அங்கீகாரம் பெற்று விட்ட பின்னர் தேர்தல் ஆணைய அங்கீகாரம் என்பது ஒரு பொருட்டே அல்ல .
சுயமரியாதை இழக்க முடியாது என சொல்லி பின்னர் சுயமரியாதையை இழந்து கேவல பட்டு கட்சி நடத்துகிற தலைவர்கள் மத்தியில் வைகோ உயர்ந்து நிற்கிறார் . ஜெயலலிதாவின் அகங்காரம் மதிமுகவிற்கு புதிய வாசலை திறந்து விட்டிருக்கிறது . இனி வரும் காலம் வைகோவின் காலம் . நேர்மையானவர்கள் அரசியலில் வெற்றி பெற முடியாது என்பது தவறான வாதம் வெற்றி தள்ளி போகலாமே தவிர தோல்வி என்பது நிரந்தரம் அல்ல ........................
Saturday
வாக்கு எண்ணும் போது கூட முடிவு தெரிய இவ்வளவு டென்ஷன் இருக்காது ........
நாளைக்கு வாக்கு எண்ணிக்கை என்றால் இன்று முதலே முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடி அந்த இரவு தூக்கமே வராது. அதே போல தான் 19 தேதி என்ன முடிவு வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து விட்டு , இப்போது 19 தேதியும் வந்து விட்டது . ஆனால் முடிவு மட்டும் எப்போ வரும் எப்போ வரும் என்ற எதிர்பார்ப்பு தான் கூடி கொண்டிருக்கிறது.
இன்றைய முடிவுக்காக ஆளுங்கட்சி முதல் எதிர்கட்சிகள் வரை எனைவருமே எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்கள் . இவ்வளவு நேரமும் காத்திருந்து முடிவு தெரிய இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்ற பின்னர் தான் இந்த பதிவை எழுதுகிறேன் .
யார் யாரோ கற்பனையில் என்னெல்லாமோ அவர்கள் பங்கிற்கு எழுதினாலும் யாராலும் கணிக்க முடியாத அளவிற்கு எதிர் பார்ப்பை கூட்டியிருக்கிறது . பத்திரிகைகள் தொலைகாட்சிகள் முடிவை பற்றிய செய்திக்காக காத்திருக்கிறது . எப்போது முடிவு வரும் .............. காத்திருக்கிறோம் நல்ல முடிவாக வரட்டும்.
இன்றைய முடிவு தெரிந்தால் தேர்தல் முடிவையும் தெரிந்து விடலாம் என்ற ஆதங்கம் தான் .
Friday
அதிமுகவையும் திமுகவையும் எதிர் கட்சி வரிசையில் அமர்த்துவோம்
எழுதியது
Suresh Kumar
Labels:
அதிமுக கூட்டணி,
அரசியல்,
திமுக,
தேர்தல் 2011,
மதிமுக
எழுதிய நேரம்
Friday, March 18, 2011
அதிமுகவும் திமுகவும் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து தமிழகத்திற்கு இருண்டகாலத்தை உருவாக்கி விட்டன. உலக மகா ஊழல் செய்து உலகத்திலே எந்தவொரு ஆளுங்கட்சியும் கேவல படாத அளவிற்கு கேவல பட்டிருக்கும் திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க ஓரணியில் திரண்டால் ஊழல் ராணியாக வலம் வந்து தோல்வி கொடுத்த வலியால் திருந்தியிருப்பார் என நினைத்தால் . நான் இப்படி தான் இருப்பேன் திருந்த மாட்டேன் என அடம் பிடிக்கும் ஆணவ ஆதிமுகவையும் எதிர் கட்சி வரிசையில் பார்க்க தமிழக மக்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
119 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவால் தனி பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியாது . மதிமுக இல்லாத அதிமுகவால் வெற்றி பெற முடியது . இதனால் தான் தேமுதிக கம்யூனிஸ்ட் கட்சிகளே அதிமுக கூட்டணியில் தொடர பயப்படுகின்றன. ஒருவேளை இவர்கள் சமரசம் ஆகி போனாலும் மதிமுக தலைமையில் மூன்றாவது அணி அமைவது உறுதியாகி விட்டது .
கருணாநிதி , ஜெயலலிதாவால் தமிழகம் சீரழிந்தது போதும் என்ற நோக்கில் வைகோ தலைமையிலான மூன்றாவது அணியை மக்கள் புரட்சி மூலம் ஏற்படுத்த வேண்டும் . மதிமுகவிற்கு மட்டுமல்லாது மாற்றம் விரும்பும் தமிழக மக்களுக்கு இது ஒரு வாய்ப்பு . அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் அவர்கள் நல்லாட்சி தருவார்கள் என்பதற்காக அதிமுகவை ஆதரிக்கவில்லை . கொடிய விசா கிருமிகளான திமுக மீண்டும் வெற்றி பெற்றால் தமிழகத்தை இந்த விசகிருமிகளால் மீட்க முடியாது என்பதற்காக ஆதரித்தால் . ஜெயலலிதாவும் விசத்தை கக்க தேர்தலுக்கு முன்பே தயாராகி விட்டார் .
இதே நிலையில் ஜெயலலிதாவின் ஆட்சி ஏற்பட்டால் இன்னும் தமிழகம் சீரழிக்க பட்டு விடும் . இரண்டு விசகிரிமைகளையும் அழிக்க வேண்டிய கடமை இப்போது வைகோவிற்கு இருக்கிறது . அதே நேரம் வைகோவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டிய கடமை பொது மக்களாகிய நமக்கு இருக்கிறது .
தமிழின உணர்வாளர்களும் , நாளைய தமிழகம் வளம் மிக்கதாய் மாற வேண்டும் என நினைக்கும் நலம் விரும்பிகளும் வைகோவிற்கு உறுதுணையாய் களம் காண வேண்டும் . ஒருபுறம் திமுகவிற்கு எதிரான மிக பெரிய அலை இன்னொரு புறம் அதிமுக மீதான நம்பக தன்மை இந்த இரண்டிற்கும் நடுவில் மூன்றாவது அணி வரவேண்டும் என எங்கும் எண்ணற்ற மக்கள் இருக்கிறார்கள் .
எல்லா தேர்தலும் ஓன்று போல் இருப்பதில்லை எல்லா தேர்தல்களை விடவும் இந்த தேர்தல் இரண்டு கட்சிகள் மீது நம்பிக்கையற்ற வாக்காளர்கள் சதவீதம் பெருகி விட்டது . இது தான் சரியான தருணம் . மதிமுகவிற்கு இது ஒரு வாய்ப்பு அதே நேரம் தமிழக மக்களுக்கும் இது ஒரு மிக பெரிய வாய்ப்பு . காலம் கடந்து விட்டது என நினைத்து அருமையான சந்தர்ப்பத்தை தவற விட வேண்டாம் .
மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி முதலில் ஆட்சி பிடிக்கும் முன்னர் அப்போதைய ஜனதா தளத்தோடு கூட்டணி உடன்பாட்டி 70 தொகுதிகள் கேட்டு கொடுக்காமல் கூட்டணியை விட்டு வெளியேறி தனி அணியில் போட்டியிட்டு ஆட்சியை பிடித்தது என்பது வரலாறு . அந்த வரலாறு மீண்டும் தமிழகத்தில் திரும்பும் துணிந்து வாருங்கள் கைகொடுக்க மக்கள் இருக்கிறார்கள் .
Thursday
மூன்றாவது அணிக்கு தேமுதிக கம்யூனிஸ்ட் கட்சிகள் வருமா?
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
தேர்தல் 2011,
மூன்றாவது அணி
எழுதிய நேரம்
Thursday, March 17, 2011
சாதிக் பாட்சா (தற்) கொலையை மக்கள் மறக்கும் விதமாக சன் டிவி , கலைஞர் டிவி இன்று முழுவதும் மூன்றாவது அணியை பற்றி பரபரப்புகளை ஏற்படுத்தி விட்டன. காலையில் மூன்றாவது அணி ஏற்படும் என்ற பரபரப்புகள் மாலையில் கொஞ்சம் கொஞ்சமாக மாறி விட துவங்கி விட்டன.
ஆனால் இன்றைய காலத்தின் கட்டாயமாக மூன்றாவது அணி உருவாக வேண்டும் என்பது தான் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு. அப்படி உருவாகும் பட்சத்தில் கவுரவமான வெற்றிகளை மூன்றாவது அணி பெறும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
இமாலய ஊழலை செய்த காங்கிரஸ் திமுக ஒரு அணியிலும் , நான் இன்னும் திருந்த மாட்டேன் என்னுடைய ஆணவம் குறையாது என்று திமிரோடு இருக்கும் அதிமுக ஒரு அணியிலும் போட்டியிடுகிறது. மதிமுகவிற்கு தொகுதிகளை குறைத்து தருவதாக சொன்ன பின்னர் கேட்ட தொகுதிகள் தரவில்லைஎன்றால் கூட்டணி ஒப்பந்தத்திற்கு வரமுடியாது என வைகோ மறுத்து விட்ட நிலையில் நேற்று 160 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்து தொகுதி ஒப்பந்தம் செய்து கொண்ட கட்சிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் ஜெயா .
தேமுதிக கட்சி அலுவலகத்தில் அதிமுக தவிர மற்ற கூட்டணி கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தியிருக்கின்றன. அதில் எல்லோருமாக சேர்ந்து அதிமுக தலைமையிடம் பேசுவதாக அறிவித்திருக்கின்றனர். இந்த செய்திகளை பரபரப்பை உண்டு பண்ணும் விதமாக திரித்து வெளியிட்டு பரபரப்பை செய்து விட்டார்கள். இப்போது அதிமுக தலைமை சமரசம் செய்து கொள்ள பேச்சுவார்த்தைக்கு வர தயாராக உள்ளதாக செய்திகள் தெருவிக்கின்றன .
தொகுதிகள் பற்றி பேசிகொண்டிருக்கும் போதே கூட்டணி கட்சிகள் கேட்ட தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர் அறிவித்து கூட்டணி கட்சிகளை கேவல படுத்தி விட்டார். மீண்டும் இவர்கள் சேர்ந்து பிரச்சாரம் செய்தால் எப்படி ஒற்றுமையாக தேர்தல் பணி செய்ய முடியும். தேமுதிக இப்போது தன கட்சியை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளது . தேமுதிக இரண்டாம் கட்ட தலைவர்களின் வற்புறுத்தலால் தான் விஜயகாந்த் கூட்டணிக்கு ஒத்து கொண்டதாகவும் தெரிகிறது . ஆனால் அதே இரண்டாம் கட்ட தலைவர்களுக்கே ஆப்பு வைக்கிற மாதிரி ஜெயா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் . அதனால் இப்போது தேமுதிக கட்சிக்குள் பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மதிமுக கூட்டணியில் இல்லை என்றவுடனே அதிமுக தொண்டர்கள் முதல் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கே தோல்வி பயம் வந்து விட்டது.
கம்யூனிஸ்ட் கட்சிகளை பொறுத்தவரையில் மார்க்சிஸ்ட் தோழர்கள் அதிமுக கூட்டணி உடைந்து விட்டதாகவே பேசி வருகிறார்கள் . ஆனால் கடைசி நேரத்தில் தா . பாண்டியன் மூலம் அதிமுகவோடு இவர்களும் சமரசம் செய்ய வாய்ப்பு இருக்கிறது . தோல்வி பயத்தின் காரணமாக ஜெயாவும் சில தொகுதிகள் இரங்கி வந்து தேமுதிக கம்யூனிஸ்ட் கட்சிகளை சமரசம் செய்யலாம் . ஆனால் இதில் பெரும்பாலும் பாதிக்க படுவது புதிய தமிழகம் , மற்றும் குடியரசு கட்சி , பார்வார்ட் பிளாக் கட்சிகள் .
மதிமுகவை பொறுத்த வரையில் மூன்றாவது அணி அமைக்க வேனித்யா ஆயத்த பணிகள் துவங்கி விட்டன. அதில் எந்தெந்த கட்சிகள இணையும் என்பது இன்னும் இரு நாளில் தெரிய வரும் . இந்த தேர்தலில் மூன்றாவது அணி உருவாகுவது காலத்தின் கட்டாயம் . ஒரு புறம் ஊழல் திமுக கட்சியும் தமிழின இனபடுகாவ்லைக்கு காரணமான திமுக காங்கிரஸ் சேர்ந்தும் இன்னொருபுறம் எத்தனை தோல்விகள் வந்த பொது திருந்தாத ஜெயலலிதா இவர்களை எதிர்த்து மூன்றாவது அணி களம் காணும் பொது பொது மக்கள் மத்தியில் மூன்றாவது அணிக்கான ஆதரவு பெருகும் என்பதில் சந்தேகம் இல்லை. வரலாற்றில் இல்லாத அளவிற்கு திமுக மீது எதிர்ப்பு அலை இந்த தேர்தலில் உருவாக்கி இருக்கிறது . அதே போல் இப்போது ஜெயலலிதாவின் வறட்டு ஆணவத்தால் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி நடக்காது என்று வெறுப்பு ஏற்பட்டு உள்ளது .
இதையடுத்து மக்கள் மூன்றாவது அணியை ஆதரிக்க தயாராகி விட்டனர் . மானம் தான் பெருசு என தேமுதிக கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவோடு எந்த சமரசத்திற்கும் செல்லாமல் இருந்தால் மூன்றாவது அணி மேலும் வலுபெறும் . தேமுதிக கம்யூனிஸ்ட் கட்சிகள் மூன்றாவது அணிக்கு வராத பட்சத்திலும் மதிமுக தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் .
அதிமுக திமுகவை எதிர்க்கட்சி வரிசையில் மக்கள் பார்க்க கூட வாய்ப்பு இருக்கிறது .
Wednesday
விரக்தியில் விஜயகாந்த் கட்சி தலைவர் ஆஸ்டின்
எழுதியது
Suresh Kumar
Labels:
அதிமுக கூட்டணி,
அரசியல்,
ஆஸ்டின்,
தேமுதிக,
தேர்தல் 2011
எழுதிய நேரம்
Wednesday, March 16, 2011
கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என அறிவிக்கும் முன்னரே அதிமுக தொகுதிகள் பட்டியலோடு வேட்பாளர்களையும் அறிவித்து விட்டது . இதில் பெரும்பாலும் பல தேமுதிக தலைவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேமுதிகவை பொறுத்தவரையில் தலைவர்கள் என்று சொல்லும் போது முன்னர் அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தான். அதிமுகவிலிருந்து சென்றவர்களை குறி வைத்து அவர்களுக்கு தொகுதி கிடைத்து விட கூஆட்து என்பதில் அதிமுக உறுதியாக இருப்பது தெரிகிறது.
குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் தேமுதிகவின் தலைவர் என்று சொன்னால் ஆஸ்டின் தான் . தேமுதிக மாநில தலைவராக இவர் இருக்கிறார் . ஆஸ்டினை தெரியாத அதிமுகவினர் இருக்க முடியாது. இளம் வயதிலேயே எம்ஜிஆரால் ஆதிமுகவிற்கு வந்து இளம் வயதிலேயே பல பதவிகளை வகித்தவர். 1991 - 1996 காலவாக்கிலேயே மேல்சபை எம்பியாகவும் ஓன்று சேர்ந்து குமரி மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்தார் . மிகவும் சுறுசுறுப்பான ஒரு தலைவராக இளம் வயதிலேயே செயல் பட்டவர் . பின்னர் திருநாவுகரசால் துவங்க பட்ட எம்ஜிஆர் ஆதிமுகவில் இணைந்து நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க பட்டார் .
முதல் கூட்டத்திலேயே ஜெயலலிதாவோடு வாக்குவாதத்தில் ஈடு பட்டார் . பின்னர் திருநாவுகரசர் பாரதிய ஜனதாவில் இணைந்தவுடன் ஆஸ்டின் தாய் கழகமான அதிமுகவில் மீண்டும் இணைந்தார் . அப்போது தான் அடுத்த கட்ட உள் அரசியல் அதிமுகவில் ஏற்பட்டது . ஆஸ்டினுக்கும் தளவாய் சுந்தரத்திற்கும் போட்டி ஏற்பட்டது . ஆஸ்டின் எந்த நேரமும் மக்களை சந்திக்க கூடியவர் . தளவாய் சுந்தரம் ஆஸ்டின் விட்ட இடத்தை முதலில் ஆஸ்டின் அதிமுகவிலிருந்து பிரிந்தவுடன் பிடித்து கொண்டார் . மேலும் குமரி மாவட்டத்திலிருந்து வேறு எந்த தலைவர்களும் அதிமுகவில் உருவாகாதவாறு பார்த்து கொண்டார் . இந்நிலையில் கடந்த தேர்தலில் ஆஸ்டினுக்கு நாகர் கோவில் தொகுதி கொடுக்க கூடாது என்பதற்காகவே கூட்டணி கட்சிக்கு ஒதுக்க பட்டது . அந்த தேர்தலில் ஆஸ்டின் சுயேட்சையாக போட்டியிட்டு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார் .
பின்னர் தேமுதிகவில் இணைந்து மாநில தலைவராக செயல் பட்டு கொண்டிருக்கிறார் . இந்நிலையில் மீண்டும் அரசியல் விளையாடி விட்டது . பாரதிய ஜனதாவில் திருநாவுகரசருக்கு தொகுதி ஒதுக்க கூடாது என்பதில் எப்படி ஜெயலலிதா உறுதியாக இருந்தாரோ அதே போல் ஆஸ்டினுக்கும் தொகுதி ஒதுக்கி விட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பது மீண்டும் ஒரு முறை நிருபிக்க பட்டுள்ளது . இதன் பின்னணியில் தளவாய் சுந்தரம் செயல் பட்டதாக தேமுதிகவினர் கருதுகின்றனர்.
தற்போது அவரிடம் தொடர்பு கொண்ட போது பார்ப்போம் நாளை தெரியும் என்ற பதில் தான் வருகிறது. கன்னியா குமரி அல்லது நாகர்கோவில் இரண்டில் எதாவது ஒன்றை எதிர்பார்த்தார் ஆஸ்டின் . இந்த முடிவிலிருந்து ஜெயலலிதா மாற மாட்டார் என்பதை உணர்ந்த ஆஸ்டின் அடுத்த கட்டம் பற்றி விரைவில் முடிவெடுப்பார் என தெரிகிறது . கடந்த முறை போல் சுயேட்சையாகவும் போட்டியிடலாம் என தெரிகிறது . இதே போல் மேலும் பல அதிமுகவிலிருந்து சென்ற தேமுதிக தலைவர்களுக்கு ஜெயா செக் வைத்துள்ளதால் அவர்களும் விரக்தியில் இருப்பதாக தெரிகிறது . நாளை அதிமுக கூட்டணியில் மேலும் சில மாற்றங்கள் ஏற்படும் அல்லது தேமுதிகவில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது .
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆஸ்டின் கன்னியாகுமரி தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிட தக்கது
Tuesday
யார் ராஜ தந்திரி ? ஜெயலலிதாவா ? கருணாநிதியா ?
எழுதியது
Suresh Kumar
Labels:
அதிமுக கூட்டணி,
அரசியல்,
தேர்தல் 2011,
மதிமுக
எழுதிய நேரம்
Tuesday, March 15, 2011
ஸ்பெக்ட்ரம் ஊழலை மக்கள் மறக்கும் விதமாக கடந்த பதினைந்து நாட்களாக இரு கூட்டணி கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட தொகுதி பங்கீடு இழுபறிகள் தினசரி பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தை கவர்ந்தது . ஒவ்வெரு பத்திரிக்கைகளும் ஆளாளுக்கு தொகுதி பங்கீடை பல ரவுண்டுகள் முடித்த பின்னரும் அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடுகள் இன்னும் முடிவடையவில்லை . இதனால் பத்திரிக்கைகள் மீண்டும் தொகுதி பங்கீடு பற்றிய ஆருடங்களை வெளியிட துவங்கியுள்ளனர் .
கடந்த நாடாளுமன்ற தேர்தல் துவங்கும் நேரத்தில் வெளிவந்த கணிப்புகள் அனைத்தும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று வந்தது . தேர்தல் முடிந்த பின்னர் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது . அப்போது அதிமுக கூட்டணி தோற்க இருந்த சில காரணங்களில் குறிப்பிடும் படியான காரணம் தொகுதி பங்கீடு இழுபறி . கடைசிவரை கூட்டணி தலைவர்கள் மத்தியில் ஒரு ஒருங்கிணைப்பு இல்லாதது . அதை தான் தேர்தல் முடிந்த பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தமிழ் நாட்டில் மூன்றாவது அணி தோற்க காரணம் அதிமுக தான் என்றார் .
அந்த தேர்தலில் அதுவரை திமுக கூட்டணியில் இருந்து வந்த பாமகவிற்கு 7 தொகுதிகளை ஒதுக்கி எல்லோரையும் ஆச்சரிய படுத்தி மதிமுக , கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறியை ஏற்படுத்தினார் . அதே போல் இந்த முறையும் இதுவரை திமுக அதிமுக கட்சிகளை விரும்பாத வாக்களர்களின் வாக்குகளின் மூலம் எட்டு சதவீதம் வாக்குகள் பெற்ற தேமுதிகவிற்கு முதலிலேயே 41 தொகுதிகளை ஒதுக்கி விட்டு மதிமுக , கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இழுபறியை ஏற்படுத்தினார் . ஒரு வழியாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தகுதிகள் ஒதுக்க பட்ட நிலையில் . தொடர்ந்து மதிமுகவிற்கு இழுபறியிலேயே இருக்கிறது.
மதிமுக தொண்டர்கள் மத்தியில் மிக பெரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது . மதிமுக தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி தொகுதி ஒதுக்கீடுகள் முடிந்த பின்னர் போய் விடும் . ஆனால் வைகோவையும் மதிமுகாவையும் அலட்சிய படுத்தும் அதிமுக தலைமை மீது பொது மக்களுக்கே ஒரு வெறுப்பு ஏற்பட்டு விடுவது போல் இருக்கிறது . கடந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக மட்டும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வில்லையென்றால் இன்று அதிமுக என்ற ஒரு கட்சியே சிதறியிருக்கும் .
அதிமுக வெற்றி பெற்ற 60 தொகுதிகளில் 40 தொகுதிக்கு மேல் மதிமுகவின் தயவில் தான் ஜெயிக்க முடிந்தது . அதே போல் மதிமுகவின் பிரச்சாரம் மக்கள் மத்தியில் அதிமுக மீது இருந்த வெறுப்பு மாற வழி கோலியது . தமிழக தேர்தல் பிரசாரங்களில் வைகோவிற்கு என்று ஒரு தனி இடம் உண்டு . திமுகவும் அதிமுகவும் பல விசயங்களில் ஒற்றுமையாக இருப்பது போல் மதிமுகவை வளர விட கூடாது என்பதிலும் ஒற்றுமையாக இருக்கின்றது .
இவ்வளவு நாட்கள் மதிமுகவிற்கு தொகுதி ஒதுக்காமல் இருப்பதே மக்கள் மத்தியில் ஜெயலலிதாவிற்கு வெறுப்பை உண்டு பண்ணியிருக்கிறது . ஜெயாவின் ஆணவம் இன்னும் குறையவில்லை என்றே மக்கள் பேசும் வண்ணம் ஆகி விட்டது . தமிழர்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் துரோகம் இளைத்த திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே மதிமுக அமைதியாக இருக்கிறது . அதையே தனக்கு சாதகமாக பயன் படுத்துகிறார் ஜெயலலிதா .
ஆனால் யாருக்கு சாதகம் என்பது தேர்தல் முடிந்த பின்னர் தான் தெரியும் . கடந்த முறையும் இதே போல் இழுபறி ஏற்பட்ட போது தேர்தல் முடிந்த பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக தான் வைகோவை ஓரம் கட்டுகிறார் என்ற செய்திகள் வந்தது . அதே போல் இப்போதும் வருகிறது . கடந்த தேர்தல்களில் இதையே திமுகவினர் இணையம் வாயிலாக தெரிவித்தனர் . அது கூட திமுக மீது தமிழ் மக்களுக்கு இருக்கும் வெறுப்பை காங்கிரஸ் மீது மட்டும் காட்டவும் அதிமுக மீது ஆதரவு அலை ஏற்படாமல் இருக்க திமுகவே திட்டமிட்டு செய்யும் சதியாக தான் இருக்கிறது .
இதில் யார் ராஜ தந்திரி ? ஜெயலலிதாவா ? கருணாநிதியா ? மதிமுக இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை . ஆனால் அதிமுகவால் இன்னொரு முறை தோல்வியை தாங்கி கொள்ள முடியாது என்பது மட்டும் உண்மை . மதிமுக தனித்து போட்டியிட்டாலோ இந்த இழுபறி நீடித்தாலோ மதிமுகவிற்கு கவுரவமான தொகுதிகள் கிடைக்காமல் இருந்தாலோ அதிமுக தோல்வி பெறுவது உறுதி .
Monday
மதிமுக தனித்து போட்டியா ?நாளை முடிவு
அதிமுக கூட்டணியில் ஒரு வாரத்திற்கும் மேல் தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழுபறியில் இன்று இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை மதிமுகவிற்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில் மதிமுக தனித்து போட்டியிட தயாராகி வருவதாக தெரிகிறது.
இதை உறுதி படுத்தும் வகையில் மதிமுக போட்டியிடும் என எதிர்பார்க்க பட்ட தொகுதிகளில் மதிமுக சார்பில் எந்தவொரு கூட்டணி கட்சிகளின் பெயர்கள் இல்லாமல் தனியாக மதிமுக சார்பாக சுவர் விளம்பரங்கள் செய்ய மதிமுகவினர் துவங்கி விட்டனர் . எல்லா தேர்தலிலும் கூட்டணி கட்சிகளால் மதிமுக வஞ்சிக்க படுவது வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில் நாளை மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தாயகத்தில் நாளை நடைபெறுகிறது . இதில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இதை பற்றி மதிமுகவினரிடம் கேட்ட போது குறைந்தது 23 தொகுதிகள் தந்தால் அதிமுக கூட்டணியில் தொடருவோம் இல்லைஎன்றால் தனியாக களம் காணுவோம் என்ற மனநிலையே பெரும்பாலான தொண்டர்களிடம் காணப்படுகிறது.
2001 ஆம் ஆண்டில் திமுகவால் மதிமுகவிற்கு ஏற்பட்ட நிலைமை இப்போது அதிமுகவால் ஏற்பட்டிருப்பதாக கருதுகின்றனர் . இந்த தேர்தலை பொறுத்த வரையில் அதிமுகவ்ரிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்கள் விரும்பி வாக்களிக்க போவதில்லை. திமுக காங்கிரஸ் தோற்க வேண்டும் என்றே வாக்காளர்கள் வாக்களிக்க தயாராகி கொண்டிருக்கின்றனர். கடந்த தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்குகள் என்பது திமுக , அதிமுக கட்சிகளை பிடிக்காத வாக்காளர்களின் வாக்குகள் தான் . அந்த வாக்குகள் அனைத்தும் அதிமுக கூட்டணிக்கு வர போவதில்லை.
மக்களை பொறுத்த வரையில் அதிமுக திமுக இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் . மதிமுகவை வளர விட கூடாது என்பதில் இரண்டு கட்சிகளும் ஒரு நோக்கம் கொண்டவை தான் . இந்த நிலையில் நாளைய முடிவு பெரும்பாலும் மதிமுக தனித்து போட்டியிடுவதாக இருக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது.
அவ்வாறு மதிமுக தனித்து போட்டியிடும் பட்சத்தில் திமுகவிற்கு எதிரான வாக்குகள் சிதற வாய்ப்புகள் இருக்கிறது . நடுநிலை வாக்காளர்கள் மதிமுகவிற்கு ஆதரவளிப்பார்கள் . அது மட்டுமல்லாது திமுக அதிமுக வை விரும்பாத வாக்குகள் மதிமுகவிற்கு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது . சில தொகுதிகளில் மதிமுக தனித்து போட்டியிட்டாலும் வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கிறது . பல தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்க கூடிய பலமும் இருக்கிறது .அப்படி மதிமுக தனித்து போட்டியிடும் பட்சத்தில், இதுவரை எளிதாக வெற்றி பெற்று விடலாம் என இருந்த அதிமுக கூட்டணியின் வெற்றி கேள்வி குறியாகலாம்.
அதிமுக வெற்றியை உறுதி செய்து கொள்ளுமா ? இல்லை மதிமுக தனித்து போட்டியிடுமா? நாளை தெரியும் ......
Sunday
பெருகும் சாதி கட்சிகள் - நாளைய தமிழகம் ......?
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
சாதிக்கட்சிகள்,
தேர்தல் 2011
எழுதிய நேரம்
Sunday, March 13, 2011
ஒரு தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் சாதி கட்சிகள் இரு கூட்டணிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. வருணாசிரம சித்தாந்தங்களால் சாதி ஒடுக்குமுறைகள் உயர் சாதியினரால் கீழ் சாதியினரின் மீது ஏவ பட்டது. காலங்கள் மாற மாற ஒரே சாதியால் அனைத்து மக்களும் தீண்டதகாதவர்களாக பார்க்க பட்டு பின்னர் படிப்படியாக தீண்டாமை கொடுமையிலிருந்து ஒவ்வெரு சாதியாக மீண்டு வந்த பின்னர் தனக்கு அடுத்தபடியாக இருப்பவர்களை தான் அனுபவித்த அதே கொடுமைகளை அனுபவிக்க வைத்து கொண்டிருப்பது தான் மிக பெரிய கொடுமை .
தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும் ஒடுக்க பட்ட மக்கள் முன்னேற வேண்டும் என்று சாதிகள் பெயரால் யாரும் ஒடுக்க படகூடாது என்று பெரியார் பிரசாரங்களை முன்னெடுத்து சாதிகளுக்கு எதிராக கடுமையாக போராடினார் . பெரியாரால் உருவாக்க பட்ட திராவிடர் கழகம் தான் இன்று தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்யும் திராவிட கட்சிகளின் தாய் கழகம் .
திராவிட கழகத்தின் வழி தோன்றல்களான அதிமுக , திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் தலைமையில் மிக பெரிய கூட்டணி கட்சிகள் இந்த சட்ட மன்ற தேர்தலை சந்திக்கின்றன. ஏற்கனவே ஒவ்வெரு தொகுதி வாரியாக எந்த சாதியினர் எந்த மதத்தினர் அதிகம் இருக்கின்றனரோ அவர்களுக்கு தான் இந்த கட்சிகள் போட்டியிட அனுமதிக்கின்றன. ஆனால் இந்த தேர்தலில் அந்த இடங்களை நிரப்ப முதன் முதலாக சாதி கட்சிகளுக்கு போட்டியிட இரு கூட்டணியும் இடம் கொடுத்திருக்கிறது.
எந்த கட்சியும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்ற நிலையில் இரு கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு சாதி கட்சிகளை கூட்டணிக்குள் சேர்த்து கொள்கின்றன. முதன் முதலில் சாதி கட்சியாக தமிழகத்தில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி எந்தவொரு கொள்கையோ லட்சியமோ இல்லாமல் யார் அதிகம் தொகுதி தருவார்கள் என்று அந்த கூட்டணியில் ஒவ்வெரு தேர்தலிலும் சேர்ந்து கொள்வது வாடிக்கையாகி வருகிறது . அதே போல் விடுதலை சிறுத்தைகள் .
இந்த தேர்தல்களில் புதிதாக கொங்கு நாடு முன்னேற்ற கழகம் இது கோவை பகுதியை மையமாக கொண்ட ஒரு குறிப்பிட்ட சாதி கட்சி இது திமுகவுடன் கூட்டணியில் போட்டியிடுகிறது . அதே பகுதியை சேர்ந்து கொங்கு இளைஞர் பேரவை அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. மூவேந்தர் முன்னேற்ற கழகம் , வாண்டையார் கட்சி , குடியரசு கட்சி , புதிய தமிழகம் போன்ற சாதியை மையமாக கொண்ட கட்சிகள் பல திமுக அதிமுக கூட்டணிகளில் மாறி மாறி போட்டியிடுகின்றன மேலும் பல சாதி சங்கங்கள் இந்த கட்சிகளுக்கு அதரவு கொடுத்திருக்கின்றன. மேலும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறது . இதில் பெரிய கூத்து என்னவென்றால் அதிமுக கூட்டணியுடன் தொகுதி பங்கீடு முடிய ஒரு நாளுக்கு முன்னர் தான் நாடார் சங்கங்கள் சேர்ந்து சரத்குமாரை தலைவராக கொண்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி ஒன்றை ஆரம்பித்தார்கள் . ஆரம்பித்த மறுநாளே சரத்குமாரை கட்சியிலிருந்து நீக்கி விட்டார்கள் .
பெருந்தலைவர் மக்கள் கட்சி திமுக கூட்டன்னியில் ஒரு தொகுதி வாங்கி போட்டியிட போகிறது. தன்னை ஒரு சாதியின் பெயரால் முன்னிலை படுத்தாமல் அனைத்து மக்களுக்காகவும் உழைத்த பெருந்தலைவரை சாதி கட்சிக்கு சூட்டியதே மிக பெரிய கொடுமை . இன்னும் சில நாட்களில் பெரியார் பெயரில் கூட சாதி கட்சிகள் தோன்றலாம் . இதே நிலை நீடித்தால் சாதிகளுக்குள்ளான உள் அமைப்புகளுக்கென கட்சிகள் உருவாகும் . இன்னும் பல சாதி கட்சிகள் உருவாகும் . இந்த சாதி கட்சிகளுக்கெல்லாம் தொகுதி ஒதுக்கி விட்டால் திராவிட கட்சிகள் போட்டியிட தொகுதிகளே இருக்காது.
சாதி கட்சிகள் வளருவதால் மக்கள் மத்தியில் சாதி வேற்றுமைகள் உருவாகும் . வழியில் காணும் நபர்களிடம் உன் சாதி என்ன என்று மாறி மாறி விசாரிக்க தோன்றும். மக்கள் மத்தில் சாதி வெறி உருவாகும் . சில சாதி சங்க பண பட்டுவாடாக்களிலேயே ஊழல் இல்லாத நிர்வாகம் கொடுக்க முடியாத சாதி சங்கங்களால் நல்ல மக்கள் பிரதிநிதியாக செயல் பட முடியுமா?
நாளை சாதி கட்சிகளின் மூலம் தேர்ந்தெடுக்க படும் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு உண்மையாக பணியாற்றுவார்களா ? சாதி என்ன என்று கேட்டு மக்கள் நலனில் செயல்பட மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் .
எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைத்து சாதி சங்கங்களையும் சாதி கட்சிகளையும் இணைத்து கொள்ளும் திராவிட கட்சிகளே இந்த தேர்தல் உங்கள் முடிவுக்கு நீங்கள் எழுதும் முன்னுரை என்பதை மறந்து விடாதீர்கள் .
Friday
கருத்து கணிப்புகள் திட்டமிட்டு வெளியிடபடுகிறதா ?
எழுதியது
Suresh Kumar
Labels:
அதிமுக கூட்டணி,
அரசியல்,
திமுக கூட்டணி,
தேர்தல் 2011,
மூன்றாவது அணி
எழுதிய நேரம்
Friday, March 11, 2011
தேர்தல் வந்தாலே கருத்து கணிப்புகள் வருவது சகஜம். அதே போல் வருகின்ற சட்ட மன்ற தேர்தலுக்கான கருத்து கணிப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. இப்போது வருகின்ற பெரும்பாலான கருத்து கணிப்புகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் என வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதிமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடுகள் முடிவடையாமல் தொடர்ந்து இழுபரியிலேயே காணப்படுகிறது.
ஓரளவிற்கு கூட்டணி முடிவானாலும் இன்னும் முழுமை பெறவில்லை. திமுக கூட்டணி பெரிய இழுபறிக்கு பின்னர் முடிவடைந்திருக்கிறது. போட்டியிடும் தொகுதிகள் இனம் காணுவதில் மட்டும் தான் இழுபறி நீடிக்கிறது . அதுவும் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக தான் தெரிகிறது. இந்நிலையில் இப்போது வெளிவரும் கருத்து கணிப்புகள் பற்றி நாம் பார்த்தாக வேண்டும் .
ஆனந்த விகடனில் வெளியிடப்பட்ட கருத்து கணிப்பு என்பது கடந்த தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்கு சதவீதத்தை அடிப்படையாக வைத்து வெளியிடப்பட்டது . கடந்த தேர்தலை ஒப்பிட்டு பார்க்கும் போது கூட்டணிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தால் அந்த கணிப்புகள் இந்த தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புகள் இருக்கிறது. கருத்து கணிப்புகளால் பயனும் உண்டு அதே நேரம் பாதிப்புகளும் உண்டு . ஒருபுறம் கட்சியினரை சுருசுறுப்பாக்கவும் நடுநிலையாக இருக்கும் வாக்காளர்கள் ஒருப்பகமாக மாறவும் கருத்து கணிப்புகள் பயன் படலாம் .
அதே நேரம் வெற்றி மிதப்பில் சோம்பல் உருவாக்கவும் செய்யும் . கருத்து கணிப்புகள் நமக்கு சாதகமாக வருகிறதே என்ற ஆணவமும் திமிர் தனமும் கூடவும் வாய்ப்புகள் இருக்கிறது . இப்படி ஆணவம் திமிரதம் கூடும் போது விவேகம் இழந்து வெற்றிக்கான திட்டமிடலில் தோற்று போகவும் வாய்ப்புகள் இருக்கிறது . அந்த வகையில் வெளிவரும் கருத்து கணிப்புகள் ஒருவித ஆணவ போக்கை உருவாக்குவதற்காக வெளியிடபடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது . அதற்கு வலுவூட்டும் வகையில் எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் அதிமுக 200 இடங்களில் வெற்றிபெறும் என்ற கணிப்புகளும் வந்து கொண்டிருக்கிறது .
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியால் எடுக்கப்பட்ட சர்வேயில் அதிமுக 150 க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது . இதையெல்லாம் பார்க்கும் போது அதிமுக தலைமைக்கு வெற்றி பெற்று விடலாம் என்ற மிதப்பை காட்டி கட்சி தொண்டர்களை சோர்வடைய செய்வதும் ஒரு வித தந்திரமாக கூட இருக்கலாம். ஒரு சில கட்சிகள் இல்லாமலே வெற்றி பெற்று விடலாம் என்ற ஆணவ போக்கில் அதிமுக தலைமையை மிதக்க வைத்து கூட்டணி கட்சிகளை அவர்கள் மூலமாகவே பிரித்து விடலாம் என்ற நோக்கோடு இப்படி பட்ட கணிப்புகள் வெளியிடப்படலாம் . அதை உறுதி படுத்தும் விதமாக அதிமுக தேமுதிக மற்றும் ஒரு சில ஜாதி கட்சிகளோடு தொகுதி பங்கீட்டை முடித்து கொண்டது .
ஒரு வேலை அதிமுக தலைமை மதிமுக , சிபிஐ , சிபிஎம் போன்ற கட்சிகள் இல்லாமலே தேர்தலை சந்தித்தால் கூட வெற்றி பெற்று விடலாம் என்ற நினைப்பில் கூட இருக்கலாம் . அதனால் கூட இந்த கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதிலும் தொகுதிகளை குறைத்து ஒதுக்குவதிலும் நோக்கமாக இருத்தே தகுதி பங்கீடுகளை காலம் தாழ்த்துகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது .
எதிரியை தோற்கடிக்க வேண்டும் என்றால் முதலில் நமது பலவீனத்தை உணர வேண்டும் . எப்போது எதிரி நம்மை விட பலம் குறைந்தவன் என்ற நினைப்பு மனதில் வருகிறதோ அப்போதே நாம் தோல்வி பெற்று விட்டோம் . எதிரி நம்மை விட பலம் வாய்ந்தவன் என நினைத்து அதற்குரிய வேலைகளை நாம் செய்ய வேண்டும் . வெற்றி பெற்று விடலாம் என்ற ஆணவத்தில் மதிமுக , சிபிஐ , சிபிஎம் போன்ற காட்சிகளில் ஒரு கட்சி பிரிந்தாலும் அது வெற்றிக்கு பாதிப்பாக முடியும் .
தொகுதி பங்கீடுகளில் எதாவது பிரச்னை ஏற்பட்டு மூன்றாவது அணி என்று ஓன்று உருவாகினால் அது அதிமுகவிற்கே பாதிப்பை உருவாக்கும் . திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் சிதறும். இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று எல்லோரும் அதிமுகவிற்கு வாக்களிக்க போவதில்லை , மாறாக திமுக காங்கிரஸ் தோற்க வேண்டும் என்பதற்காகவே அதிமுகவிற்கு வாக்களிக்க பலர் தயாராக உள்ளனர் . இந்த நிலையில் மூன்றாவது அணி வந்தால் திமுக எதிர்ப்பு வாக்குகள் இரண்டாக பிரிய வாய்ப்பு இருக்கிறது . கடந்த தேர்தல்களில் தேமுதிகாவால் எப்படி அதிமுக வெற்றி பாதிக்க பட்டதோ அதே போல் மூன்றாவது அணி ஏற்பட்டால் இந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பாதிக்க படும் .
அதற்காகவே உளவு துறையால் இப்படி கருத்து கணிப்புகள் திட்டமிட்டு உருவாக்க படுவதாக தெரிகிறது . வீரத்தோடு விவேகம் முக்கியம் ........... நாட்கள் போக போக தான் சரியான கணிப்புகள் சொல்ல முடியும் .
கனிமொழிய கைது செய்ய போறாங்களா?
எழுதியது
Suresh Kumar
Labels:
2G அலைவரிசை ஊழல்,
அரசியல்,
கனிமொழி,
திமுக கூட்டணி,
தேர்தல் 2011
எழுதிய நேரம்
Friday, March 11, 2011
திடீர்னு நேற்று டுவிட்டர்ல இந்திய அளவில் கனிமொழி டிரெண்டில் இடம் பிடித்திருந்தார். இன்று பார்த்தால் பேஸ்புக் டிரெண்டில் இடம் பிடிக்கிற மாதிரி இருக்கு. நேற்று வடஇந்திய ஊடகங்களில் மார்ச் 31 க்கு முன்னதாக கனிமொழியிடம் சிபிஐ விசாரிக்க போவதாக செய்திகள் வந்தன இதனால் டுவிட்டர் டிரெண்டில் இடம் பிடித்தார் கனிமொழி. மார்ச் 31 வரை கால அவகாசம் கொடுத்திருக்கிரத்தை பார்த்தால் விசாரிக்க கேள்விகள் தயார் செய்ய சிபிஐ க்கு அவகாசம் தேவை படுவதாக நினைத்து இதை நாம் பெருசாக எடுத்து கொள்ளவில்லை.
ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக கனிமொழி கைது செய்ய படுகிறார் என்ற செய்திகள் வருகிறது . அதை உறுதி படுத்தும் விதமாக வழக்கத்திற்கு மாறாக கனிமொழி கருப்பு கலர் காரில் கலைஞர் டிவி அலுவலகத்திற்கு வந்தாராம். படத்திற்கு கிளைமாக்ஸ் சீன் எடுக்குறாங்களா இல்ல தொகுதிகள் அடையாளம் கண்டு முடித்தவுடன் இடைவேளை போட்டு விட்டு விட போறாங்களா ? ஒண்ணுமே புரியல ...........
திமுக காங்கிரஸ் தொகுதிக்ள அடையாளம் காணுவதில் மீண்டும் இழுபறி என்ற செய்தியோடு சேர்த்து கனிமொழி கைது செய்ய போகிறாரா என்ற செய்தியையும் படித்து பாருங்கள் .
கிளைமாக்ஸ் முடியும் என்று நினைக்கும் மக்களுக்கும் தொடரும்னு போட்டு விட்டுடுவாங்க ராஜாவுக்கும் சேர்த்து கம்பி எண்ணுவது தொடரும் என வந்தாலும் வரலாம் . சூது வாது தெரியாத ராஜா பாவம் மாட்டிகிட்டாரு ............
கலைஞர் டிவி அலுவலகத்திற்கு வந்த கனிமொழி , தயாளு அம்மாள் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை தொடக்கி விட்டது . கைது செய்வார்களா இல்லையா எனபது பின்னர் தான் தெரியும் .
கலைஞர் டிவி அலுவலகத்திற்கு வந்த கனிமொழி , தயாளு அம்மாள் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை தொடக்கி விட்டது . கைது செய்வார்களா இல்லையா எனபது பின்னர் தான் தெரியும் .
அவளுக்கென்ன நல்லா சுகிக்கிறாள்! அகப்பட்டவன் நான் அல்லவா ! ராஜா கனிமொழியை பார்த்து பாடும் பாடல் மட்டும் நமக்கு கேட்கிறது.
Wednesday
அதிமுக கூட்டணி திமுக கூட்டணி வடம் இழுத்தல்
எழுதியது
Suresh Kumar
Labels:
அதிமுக கூட்டணி,
அரசியல்,
திமுக கூட்டணி,
தேர்தல் 2011
எழுதிய நேரம்
Wednesday, March 09, 2011
கிராமங்களில் திருமணம் ஆனவர்களுக்கும் திருமணம் ஆகாதவர்களுக்கும் வடம் இழுத்தல் போட்டி நடைபெறும் அதே போல் யானையும் 30 பெரும் என்றும் வடம் இழுத்தல் போட்டிகள் நடைபெறும்.
தமிழ் நாட்டிலேயும் ஏற தாள வடம் இழுத்தல் போட்டி போல தான் இரண்டு அணிகள் தேர்தலில் களம் காண இருக்கின்றனர். ஏப்ரல் 13 ஆம் தேதி போட்டி நடத்தி முடிவுகளை மே 13 இல் தெரிவிக்க இருக்கிறார்கள் . அதுவரை யாருக்கு தான் பொறுமை இருக்கும் இப்பவே முடுவு தெரிஞ்சிக்கணும் போல இருக்கும் . ஆனால் தெரிஞ்சாலும் நல்லா இருக்காது . ஆளாளுக்கு கணிப்பு போடுறாங்க . நானும் என் பங்குக்கு கணிப்பு போடலனா வரலாறு மன்னிக்காது .
ஆனந்த விகடன் கருத்து கணிப்பை துவங்கியது முதல் காங்கிரஸ் கட்சியின் உளவு தகவல் மூலம் வெளிவந்த கருத்து கணிப்பு வரை வந்து விட்டது . அதை தொடர்ந்து பதிவாளர் வட்டங்களில் கருத்து கணிப்புகள் பரவலாக வந்து கொண்டிருக்கிறது . இந்த தேர்தல் முடிவுகளை சரியாக கணிக்க வேண்டும் என்றால் கடந்த சட்ட மன்ற தேர்தல் , நாடாளுமன்ற தேர்தல் போன்றவற்றை அலசி பார்க்க வேண்டும் . தேவை பட்டால் அதற்கு முந்திய நாடாளுமன்ற தேர்தலையும் பார்க்கலாம் .
கடந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வியடைந்து திமுக கூட்டணி வெற்றி பெற்று திமுக தனிபெரும்பான்மை இல்லாத ஒரு ஆட்சியை அமைத்து . அதற்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக ,காங்கிரஸ் ,மதிமுக , கம்யூனிஸ்ட்கள் , பாமக போன்ற கட்சிகள் போட்டியிட்டு எதிரணியில் இருந்த அதிமுக பிஜேபி கூட்டணியை பூஜ்ஜியம் வாங்க வைத்து . இது ஒருவகையில் அதிமுக மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு அலை . அதே அலையில் தான் கடந்த சட்ட மன்ற தேர்தலை திமுக எதிர் கொண்டது . அப்போது திமுக கூட்டணியிலிருந்து மதிமுக பிரிந்து அதிமுகவோடு கூட்டணி அமைத்து . அதுவரை திமுக மிக பெரிய வெற்றி பெரும் 200 க்கு மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெரும் என இருந்தது . மதிமுக கூட்டணி மாறிய பின்னர் அதிமுக பக்கம் வெற்றி காற்று வீசுவது போல் இருந்தது . பின்னர் திமுக தனிபெரும்பான்மை இல்லாத ஒரு ஆட்சியை தமிழக வரலாற்றில் முதன் முறையாக அமைத்து .
மிக பெரிய கூட்டணி என்று சொன்னவர்கள் எல்லாம் தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் ஆடி போனது என்னவோ உண்மை . இந்த இரண்டு கூட்டணிகளுக்கும் வாக்கு வித்தியாசம் வெறும் 3 சதவீதம் தான் . பாதிக்கு மேல் தொகுதிகளில் 1000 வாக்கு வித்தியாசத்தில் திமுக அணி வெற்றி பெற்றது . பெரும்பாலான தொகுதிகளில் திமுக அணிக்கு போஸ்டல் ஓட்டுகளே கைகொடுத்து .
அடுத்து நாடாளுமன்ற தேர்தல் அந்த நேரம் ஸ்பெக்ட்ரம் ஊழல் இருந்தாலும் இப்போது மக்களுக்கு தெரிந்த அளவில் பிரபலம் ஆகவில்லை . நாடாளுமன்ற தேர்தல் என்பதால் மக்கள் தேசிய அளவில் அணிகளை மதிப்பீடு செய்வார்கள் அதன் படி காங்கிரஸ் அணிக்கு எதிரான அணி எல்லா மாநிலங்களிலும் உருவாக வில்லை . தமிழகத்தில் போட்டியிட்ட அணி தேசிய அளவில் மூன்றாவது அணியாக இருந்தது . மூன்றாவது அணி ஆட்சிக்கு வராது என்பது பாமரனுக்கும் தெரியும் . அந்தவகையில் தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது . இருந்தும் வாக்கு சதவீதத்தில் பெரிய மாற்றம் இல்லை .
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது திமுகவிற்கு எதிரான வாக்குகளை தேமுதிக கணிசமாக பெற்றது அதிமுகவிற்கு தோல்வியில் முடிந்தது . இப்போது திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் சிதறாத வண்ணம் தேமுதிக அதிமுக கூட்டணியில் சேர்ந்து விட்டது . இப்போது நடைபெறுவது சட்டமன்ற தேர்தல் எனவே இரண்டு அணிகள் தான் எனபது முடிவாகி விட்டது . ஸ்பெக்ட்ரம் ஊழல் , விலைவாசி உயர்வு , மின் வெட்டு போன்ற பல பிரச்சனைகளுக்கு திமுக அணி முகம் கொடுக்க வேண்டியது இருக்கிறது .
திமுகவுடன் எவ்வளவு கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் திமுக 40 சதவீதத்திற்கு மேல் வாக்கு வாங்க முடியாது. அப்படிஎன்றால் எதிர்ப்பு வாக்குகள் 60 சதவீதம் இருக்கிறது இதில் 10 சதவீத வாக்குகள் பிற கட்சிகளுக்கு சென்றாலும் அதிமுகாவே முன்னணியில் இருக்கிறது . அது மட்டுமல்லாது கடந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவோடு மதிமுக மட்டும் கூட்டணி வைத்தே 3 சதவீத வாக்குகள் தான் வித்தியாசம் . இப்போது கூடுதலாக தேமுதிக கம்யூனிஸ்ட் இரண்டு கட்சிகள் மற்றும் சில கட்சிகள் வந்துள்ளன .
இவ்வாறு பல விதத்திலும் அலசும் போது அதிமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது . ..................
Tuesday
திமுகவிற்கு 121 தொகுதிகளை ஒதுக்கி சுயமரியாதையை காத்த சோனியாவுக்கு கலைஞர் பாராட்டு
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
திமுக கூட்டணி,
தேர்தல் 2011,
நகைச்சுவை,
மொக்கை
எழுதிய நேரம்
Tuesday, March 08, 2011
ஒரு வழியாக ராஜினமா செய்வேன் என மிரட்டிய திமுகவிற்கு அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக தொகுதிகளாக 121 தொகுதிகளை கொடுத்து திமுகவின் சுயமரியாதைக்கு இழுக்கு வராமல் பார்த்து கொண்ட சோனியாவிற்கு திமுக தொண்டர்கள் சார்பாகவும் , கலைஞரின் குடும்பம் சார்பாகவும் பாராட்டுகளை கலைஞர் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்லாது குட்ட குட்ட குனிய கூடாது என சொல்லி உறங்கி கிடந்த திமுகவின் சுயமரியாதையை தட்டி எழுப்பி 121 தொகுதிகள் கிடைக்க காரணமான திராவிடர் கழக பொதுச்செயலாளர் கீ . வீரமணியும் சோனியாவை பாராட்டி சுயமரியாதை காத்த வீராங்கனை என்ற பட்டம் கொடுத்திருக்கிறார் .
தெருவெங்கும் திமுக தொண்டர்கள் கூடி தலைவரின் ராஜ தந்திரத்திற்கு கிடைத்த வெற்றி தான் 121 தொகுதிகள் என தலைவர் கருணாநிதியை பாராட்டி இனிப்பு வழங்கியும் பட்டாசு கொளுத்தியும் வெற்றியை கொண்டாடி வருகின்றானர் . தமிழகம் முழுவதும் விழாகோலம் பூண்டிருக்கிறது . விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் அறிவாலயத்திற்கே சென்று கலைஞருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் . இவர் தான் காங்கிரஸ் கட்சியை விளக்கியவுடன் ராஜதந்திர ரீதியில் காய் நகர்த்தி கம்யூனிஸ்ட் கட்சிகளை அழைத்து கலைஞரின் சுயமரியாதை காக்க உதவி செய்தவர் .
இதில் முக்கியமாக கலைஞரின் சுயமரியாதை மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழரின் சுயமரியாதையை இத்தாலி சோனியா காந்தி காத்திருப்பதை நினைத்து ஒட்டு மொத்த தமிழக மக்களும் மகிழ்ச்சி கடலில் மூழ்கியிருக்கின்றனர் . திமுக தொண்டர்கள் அனைவரும் சட்டை காலரை தொக்கி விட்டு இத்தாலி ராஜதந்திரம் எங்ககிட்ட பலிக்க நாங்க என்ன டீனா......... டூனாவா என கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . அதே நேரம் காங்கிரஸ் தொண்டர்கள் கருணாநிதியிடம் இத்தாலி ராஜதந்திரம் பலிக்கவில்லையே என சோகத்தில் ட்ஸாமாக் கடையிலிருந்து குவார்டர் போட்டு குப்புற படுத்து விட்டார்கள் .
நாமும் மகிழ்ச்சியை கொண்டாட வேண்டாமா ? ................ திமுகாவின் சுயமரியாதையை காத்த சோனியா வாழ்க!
தமிழகத்தின் சுயமரியாதையை ராஜதந்திர ராஜினாமாவால் காத்த கலைஞர் வாழ்க!
இத கூட சொல்லலைனா நாளைய வரலாறு நம்மை மன்னிக்காது
Monday
பேச்சு வார்த்தை தொடருமாம் ...அட சீ ...வெட்கம் கெட்டவர்களே
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல் காங்கிரஸ்,
திமுக கூட்டணி,
தேர்தல் 2011
எழுதிய நேரம்
Monday, March 07, 2011
காங்கிரஸ் திமுக உறவு முறிந்து போனது என ஜால்ரா மணி ,தொல் திருமா எல்லோரும் சேர்ந்து கூவி கொண்டிருக்கையில் பேச்சுவார்த்தை இன்னும் தொடரும்னு தயாநிதி மாறன் தெருவித்திருக்கிறார்.
சுயமரியாதை என்ன விலை என கேட்கும் வீரமணி திமுக இனி இதற்கு மேல் சுயமரியாதை இழக்க கூடாது என அறிக்கை விட , திமுக தலைவர் உயர்நிலை கூட்டத்தை கூட்டி திமுக மந்திரிகள் ராஜினமா செய்வார்கள் என சொல்ல ரண்டு நாளா இவங்க நாடகத்திற்கு கிளைமாக்ஸ் எப்ப வரும் எப்பப வரும்னு மக்கள் எதிர் பார்த்து கொண்டிருந்தார்கள் .
ராஜினமா செய்யணும்னு முடிவெடுத்தால் அனற்றைக்கே கடிதம் அனுப்பியிருக்கலாம் தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சியில் கடிதம் கிடைக்க நேரமாகாது . முக்கியமான பிரச்சனைகள் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்ல பட்டாலும் . ஈழ தமிழர்கள் சிங்கள படைகளால் கொள்ளப்பட்டாலும் கடிதம் எழுதும் கருணாநிதி மந்திரிகள் ராஜினமா செய்யும் போதும் கடிதம் அனுப்பியிருக்கலாம் . அல்லது அன்றைக்கே விமானம் மூலம் சென்று ராஜினமா கடிதம் கொடுத்திருக்கலாம் . அதையெல்லாம் விட்டு திங்கள் ராஜினமா கடிதம் கொடுக்க படும் என அறிவித்தார்கள் . சரி ஓகே அப்படி ராஜினமா கடிதம் கொடுக்க போனா கொடுத்து விட்டு வர வேண்டியது தானே . அதை விட்டு விட்டு அவங்க கிட்ட போய் கெஞ்சி இருக்காங்க . இப்போ ஒரு வழியா பேச்சுவார்த்தை நாளை தொடரும் என அறிவித்தும் விட்டார்கள் . அப்போ ராஜினமா கிடையாது .
ஆட்சிய விட்டு பிடிச்சி தள்ளினாலே அதில ஏதாவது கேப் கிடைக்குமான்னு பார்க்கிற இந்த பதவி வெறியர்களாவது ராஜினமா செய்யவது என்பது நடக்காத காரியம் . காங்கிரஸ் கட்சியை கருணாநிதி எவ்வளவு கேவல படுத்த முடியுமோ அவ்வளவு கேவல படுத்தியாச்சு. கருணாநிதியை காங்கிரஸ் கட்சியால் எவ்வளவு கேவல படுத்த முடியுமோ அவ்வளவு கேவல படுத்தியாச்சு . இதுக்கு மேல இவங்க துணிய உருவி விட்டு அம்மணமா நடக்க விடுறதுக்கு எதுவும் இல்ல . இப்பவும் ஏதாவது வாய்ப்பு உண்டானு தான் பார்கிறாங்க. இப்படி ஒரு அதிசய பிறவிகளை தமிழர்கள் எங்கேயும் காண முடியாது . இவன் ரெம்ப நல்லவன்ட எவ்வளவு அடிச்சாலும் தான்கிகிறான் என்ற விடிவேலுவின் சினிமா வசனம் தான் நினைவிற்கு வருகிறது .
இவர்களால் பதவி இல்லாமல் ஒரு நாள் இல்லி ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது . இவர்கள் செய்த கொடுமைகள் ஏராளம் ஒவ்வெரு கொடுமைகளும் இவர்களை காவு வாங்கும் . கனிமொழிக்கு மட்டுமல்லாது தயாளு அம்மாவுக்கு சேர்த்து ஏற்கனவே ஜெயிலில் இடம் புக் பண்ணி விட்டதாக செய்திகள் வருகின்றன . அப்படியிருக்கும் போது எப்படி இவர்களால் ராஜினமா செய்ய முடியும் ......? ஏற்கனவே ஈழ தமிழர்கள் கொல்லப்படும் போது எம்பிக்கள் ராஜினமா செய்வார்கள் என அறிவித்த பின்னர் அனைத்து எம்பிக்களும் கருணாநிதியிடம் ராஜினமா கொடுத்து நாடகமாடியது ஊரறிந்த கதை ......^^^^^^^^^
சரி அத விடுவோம் இந்த ஜால்ரா மணி ஸாரி வீரமணி திருமாவளவன் எல்லாம் என்ன அறிக்கை எழுதி வச்சிருக்காங்களோ ? ............ ஏதாவது வச்சிருப்பாங்க இவனுங்களுக்கும் வெட்கம், மானம், சூடு ,சொரணை இதில எதுவும் இல்லையே ........... பாவம் திமுக தொணடர்கள்
Saturday
சேர்ந்திருந்த துரோகிகள் தனிதனியாகி இருக்கிறார்கள்
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
காங்கிரஸ்,
திமுக,
தேர்தல் 2011
எழுதிய நேரம்
Saturday, March 05, 2011
பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்துள்ளதாக திமுக உயர்நிலை கூட்டத்தில் முடிவெடுக்க பட்டுள்ளது . இந்த இரண்டு கட்சிக்களுமாக சேர்ந்து தமிழகத்திற்கு எவ்வளவு கெடுதல் செய்ய முடியுமோ அவ்வளவு செய்து வந்தனர் .
முல்லை பெரியாறு அணையில் காங்கிரஸ் கட்சிக்காக தமிழகத்திற்கு பாதகாமான செயல் பாடுகளில் ஈடு பட்டது. காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தையே ஒத்தி போட்டவர் தான் இந்த கலைஞர் . மக்களின் குடிநீர் வாழ்வாதாரம் எதுவும் முக்கியமில்லை காங்கிரஸ் கட்சி தான் முக்கியம் என்று இருந்தார் .
ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் திமுக இரண்டுமே சேர்ந்து கூட்டு கொள்ளையடித்தது. அந்த ஊழல் பணத்திற்காக தமிழகத்தையே காங்கிரஸ் கட்சிக்கு விலை பேச துணிந்தவர் தான் இந்த கலைஞர் . பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பது கருணாநிதிக்கு சரியாக இருக்கும் .
என்றும் தமிழகர்கள் மத்தியில் ரத்த கறைகளோடு வலம் வந்தது தான் தன் வாழ்க்கையில் செய்த மிக பெரிய துரோகம் . காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஈழத்திலே சிங்கள இனவெறி அரசால் மேற்கொள்ளப்பட்ட இன படுகொலைக்கு சரியான பாதையை ஏற்படுத்தி கொடுத்தவர் . தன்னை தமிழின தலைவனாக காட்டி கொண்டு தமிழர்கள் கொல்ல பட்ட பொது கடிதம் எழுதியும் , காலை உணவை முடித்து மதிய உணவிற்கு முன்னர் ஒரு உண்ணாவிரதம் நடத்தி மக்கள் மத்தியில் பல நாடகங்களை அரங்கேற்றி முள்ளி வாய்க்காலில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொல்ல காரணமாக அமைந்தார் கருணாநிதி .
ஸ்பெக்ட்ரம் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக தமிழ் இனத்தையே கருவறுக்க துணிந்தவர் தான் கருணாநிதி . பைபிளில் 30 வெள்ளி காசுக்காக இயேசுவை யூதாஸ் காட்டி கொடுத்தாக இருக்கிறது . அதே போல் நிகழ் கால யூதசாக கருணாநிதி 175000 கோடி பணத்திற்காக லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட காரணமாகி விட்டார். தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்ல பட்ட போதும் கடிதம் எழுதினார் . ஆனால் மகனுக்கு மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக டில்லி சென்று போராடினார் .
தெரிந்து திருடுகிறவனை இன்னொரு திருடன் முதலில் திருட விட்டு பின்னர் பிளாக்மெயில் செய்வது போல் காங்கிரஸ் கட்சி திமுகவை செய்தது . பொறுக்க முடியாமல் வேறு வழியின்றி இப்போது காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டிருக்கிறது திமுக . ஈழ போராட்டடம் நடைபெற்று கொண்டிருந்த பொது சிங்கள இனவெறி படை ஈழ சகோதரர்களை சிறு குழந்தைகள் என்றும் கூட பார்க்காமல் கொன்று குவித்த பொது அனைவராலும் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கும் ஆதரவை விலக்கி கொள்ளுங்கள் என கருனாநிதியிடம் கேட்க பட்டது . ஆனால் அந்த நேரமெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு உறுதுணையாக இருந்து விட்டு இப்போது தங்கள் ஆட்சியமைக்க பெரும்பான்மை பலம் இல்லாமல் போய்விடுமோ என்று காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்திருக்கிறது .
ஐயா கலைஞரே இதே முடிவை நீங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்திருந்தால் ஈழத்து சகோதர சகோதரிகள் காப்பற்ற பட்டிருப்பார்கள் . உங்களையும் மனிதம் வாழும் வரை உலகம் போற்றியிருக்கும் . அதை விட்டு விட்டு உங்கள் குடும்ப சுயநலத்திற்காக நீங்கள் எடுத்திருக்கிற இந்த முடிவால் மக்கள் காறி துப்ப தான் செய்வார்கள் .
வாக்காள பெருமக்களே இப்போது துரோகியையும் எதிரியையும் தோற்கடிக்க வாய்ப்பு சரியாக வந்திருக்கிறது . காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனியாக நிற்கட்டும் அவர்கள் தானாகவே அழிந்து போவார்கள் . துரோகி திமுகாவை முழு மூச்சோடு எதிர்த்து தோற்கடிக்க பட வேண்டும் . இந்த தோல்வி வாழ்வில் மறக்க முடியாத மரண அடியாக கலைஞருக்கு இருக்க வேண்டும் .
Subscribe to:
Posts (Atom)























