• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label காவிமயம். Show all posts
Showing posts with label காவிமயம். Show all posts

Saturday

காவி மயமாகும் கல்வியா?

இன்று தமிழக அரசு பதவியேற்றவுடன் மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் கல்வியில் கை வைத்திருக்கிறது. ஒவ்வெரு ஆட்சியையும் மாறும் போது பாட புத்தங்களை அரசியல் ஆக்கி கொண்டிருக்கிறார்கள். ஒவ்வெரு ஆட்சி வரும் போதும் அவர்களுக்கு தேவையானதை பாட புத்தகங்களில் புகுத்தும் வேலையை செய்து வருகிறார்கள்.




கடந்த ஆட்சியில் கல்வியாளர்கள், மாணவர் நலனில் அக்கறை கொண்டார்கள், இயக்கங்கள் போன்றவற்றின் வலியுறுத்தலாலும்  வேறு வழியின்றி கடந்த திமுக ஆட்சி சமச்சீர் கல்வியை அறிமுக படுத்தியது. திமுக ஆட்சி சமச்சீர் கல்வியை அறிமுக படுத்தியதாலும்   மெட்ரிக் பள்ளிகளின் முதலாளிகள் பயன் பெற வேண்டும் என்பதாலும் ராம கோபாலன் , சோ ராமசாமி போன்ற பாபனர்களின் தூண்டுதலாலும் தான் ஒரு பார்ப்பன் என்பதை நிருபிக்க சமச்சீர் கல்வியை தேவையில்லாத காரணத்தை சொல்லி நிறுத்தி வைக்க சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார் ஜெயலலிதா. 

கல்வியாளர்கள் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்ததின் விளைவாக உயர்  நீதிமன்றம்   சமச்சீர் கல்வியை நிறுத்த கொண்டு வந்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் தமிழக அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஒன்றாம் வகுப்பிற்கும் ஆறாம் வகுப்பிற்கும் இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என உத்தரவிட்டதோடு மற்ற வகுப்புகளுக்கு தொடர்வதை பற்றியும் பாட திட்டம் தயாரிப்பது பற்றியும் ஒரு குழு அமைத்து உயர் நீதிமன்றத்தில் அதன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணை பிறப்பித்தது. 
இந்த நிலையில் தமிழக அரசால் நியமிக்க பட்ட குழு உறுப்பினர்களை பார்க்கும் பொது கல்வி காவி மயமாகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அந்த குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் மெட்ரிக் பள்ளி முதலாளிகளும் பார்ப்பனர்களுமே. சமச்சீர் கல்வியில் திராவிட வரலாறு பற்றியும் திமுக தலைவர் கருணாநிதியின் கவிதையும் இருப்பதாக சொல்லி மாற்றம் செய்ய வேண்டும் என சொல்லுகிறார்கள். அதில் திமுக தலைவர் கருணாநிதியின் கவிதை இடம் பெற கூடாது என்பதில் ஒட்டு மொத்த தமிழகமும் ஒரே நிலைப்பாடை கொண்டிருக்கலாம். தமிழக்ரளுக்கு துரோகம் செய்த கருணாநிதியின் கவிதையை தமிழக மாணவர்கள் படிப்பது அவர்களின் அறிவுக்கு பங்கமாக முடியும் இதில் மாற்று கருத்து இருக்க முடியாது. 

ஆனால் அதே நேரம் திராவிடம் பற்றியும் தமிழக வரலாறு பற்றியும் இருக்கும் பகுதிகளை மாற்ற வேண்டும் என மத வெறியர்கள் கூக்குரலிட்டு கொண்டிருக்கிறார்கள். தந்தை பெரியாரின் கொள்கைகள்  தான் இன்று சமூகத்தில் மிக பெரிய மாற்றத்தை உருவாக்கி மக்களுக்கு பகுத்தறிவை புகட்டியிருக்கு. மூடநம்பிக்கையில் மூழ்கி கிடந்த மக்களை மனிதனாக்கிய பெரியாரையும் பெரியாரின் கொள்கையையும் மதவாதிகள் எதிர்ப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.       

கடந்த பிஜேபி ஆட்சியில் மத்திய பள்ளிகள் காவிமயமானது போல் தமிழக கல்வியும் காவிமயமாக வேண்டும் என மதவாதிகள் கூச்சலிட்டு கொண்டிருக்கும் வேளையில் தமிழக அரசின் உறுப்பினர் நியமனம் மேலும் சந்தேகத்தை எழுப்புகிறது. அடித்தட்டு மக்கள் நல்ல கல்வி கற்று விட கூடாது என்பதில் சிலர் குறியாக இருக்கிறார்கள். மீண்டும் ஒரு அடிமை சாஸ்திரமும் மனு தர்மத்தையும் மக்கள் மத்தியில் புகுத்த சிலர் முயற்ச்சிக்கிறார்கள்.  

தமிழர்களுக்கு எதிராகவும் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும் அமையும் இந்த பாட திட்டங்கள் வருமானால் அது தமிழினத்திற்கே மிக பெரிய வீழ்ச்சியை உருவாக்கும். இந்த நேரத்தில் மேலும் நாம் விழிப்புணர்வோடு செயலாற்றி கல்வியை காப்போம். யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் சுய சிந்தனைகளை கல்வியில் புகுத்தாமல் பொதுவான கல்வி திட்டம் உருவாக்க வேண்டும் அது மாணவர்களின் அறிவு திறனையும் ஆராய்ச்சியையும் வளர்க்கும் விதமாக அமைய வேண்டும். அரசியல் கலப்பில்லாத ஒரு குழு அமைத்து அந்த குழுவின் மூலம் பாட திட்டங்களை செயல் படுத்த வழிவகை செய்ய வேண்டும்.       
Read More

Send your Status to your Facebook