Friday

மூன்றாவது அணி அமைந்தால் வைகோ தலைமையேற்க வேண்டும்

கூட்டணியில் இருந்து விலக்கியதன் மூலம் மதிமுகவுக்கு புதிய வாசலைத் திறந்து வைத்துள்ளார் ஜெயலலிதா என்றார் மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத்.  


திருச்சியில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:  "அதிமுக கூட்டணியில் இருந்து விலக்கியதன் மூலம் மதிமுகவுக்கு புதிய வாசலைத் திறந்து வைத்த அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இல்லாத அரசாக வருவதற்கு மதிமுகதான் காரணம்.

வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் மதிமுக உள்ளது. நாங்கள் ஜாதி கட்சி அல்ல. கட்டுமானத்தில் திமுக, அதிமுகவைவிட பலமாகவே உள்ளோம். கூட்டணியில் இருந்தாலும், தனித்து இருந்தாலும் தனித்தன்மையை நாங்கள் இழக்கவில்லை.

எதிர்காலத்தில் தமிழக முதல்வராக வைகோ வருவார். அவரை முதல்வராக முன்னிறுத்தும் வாய்ப்பு எங்களுக்கு இப்போது கிடைத்துள்ளது. மதிமுகவை வெளியேற்றியதன் மூலம் அதிமுக தொண்டர்கள் சோர்வுக்கு ஆளாகியுள்ளனர்.

கூட்டணியில் பல கட்சிகளை வைத்துக் கொண்டு அவர்களை கலந்தாலோசிக்காமல் வேட்பாளர் பட்டியலை அறிவித்தன் மூலம் தன்னுடைய முடிவை தானே தேடிக்கொண்டுள்ளார்.  இதனால், மதிமுக களைத்துப் போகாது. நாங்கள் வெண்கலப் பானை. கீழே விழும் சப்தம் கேட்கும்; ஆனால், உடையாது. வைகோவின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்கக் கூடாது என்பதற்காகவே, எங்களை கூட்டணியில் இருந்து விலக்கியுள்ளார் ஜெயலலிதா.  திமுக ஆட்சியை அகற்றவும், அதிமுக ஆட்சி வராமல் தடுக்கவும் நாங்கள் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வோம். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம்.

மூன்றாவது அணி அமைந்தால் நாங்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது. ஆனால், அந்த அணிக்கு வைகோவை தலைமையேற்ற வைக்க வேண்டும். மற்றவர்கள் தலைமையில் நாங்கள் கூட்டணியில் இடம் பெற முடியாது.

மதிமுகவின் பயணம் எந்தத் திசையை நோக்கி இருக்க வேண்டும் என்பது குறித்து சனிக்கிழமை (மார்ச் 19) சென்னையில் நடைபெறும் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுப்போம்' என்றார் அவர்.

10 கருத்துக்கள்:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

கரெக்டா சொன்னிங்க...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

See.,
http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_18.html

Anonymous said...

WHAT ABOUT THE SETHU CANAL PROJECT MR. NANJIL SAMPATH?. VAIKO , THE TAMIL TRAITOR HAS BEEN SHUTTING HIS MOUTH REGARDING THE LIFE LINE PROJECT OF TAMILNADU FOR THE PAST 5 YEARS ,BECAUSEOF JAYA .NOW JAYA PAID HIM HEAVILY.PLEASE TAMIL PEOPLE DONT SUPPORT TELUGU POLITICIANS VAIKO AND VIJAYKANTH .AND IMPORTANTLY THE KANNADIGA JAYA.THESE PEOPLE NEVER SUPPORT PROJECTS FOR TAMILNADU .BECAUSE THEY ARE NON-TAMILS .THEY NEVER LIKE THE DEVELOPEMENT OF TAMILNADU.

Suresh Kumar said...

Anonymous said...

WHAT ABOUT THE SETHU CANAL PROJECT MR. NANJIL SAMPATH?. VAIKO , THE TAMIL TRAITOR HAS BEEN SHUTTING HIS MOUTH REGARDING THE LIFE LINE PROJECT OF TAMILNADU FOR THE PAST 5 YEARS ,BECAUSEOF JAYA .NOW JAYA PAID HIM HEAVILY.PLEASE TAMIL PEOPLE DONT SUPPORT TELUGU POLITICIANS VAIKO AND VIJAYKANTH .AND IMPORTANTLY THE KANNADIGA JAYA.THESE PEOPLE NEVER SUPPORT PROJECTS FOR TAMILNADU .BECAUSE THEY ARE NON-TAMILS .THEY NEVER LIKE THE DEVELOPEMENT OF TAMILNADU.
////////////////////////

சேது சமுத்திர திட்டத்தை பற்றி திமுக காங்கிரஸ் கட்சியினர் பேச என்ன அருகதை இருக்கு. சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று முழு மூச்சாக வைகோ செயல் பட்டு கடந்த பிஜேபி ஆட்சியில் அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்க பட்டது .

வைகோ எப்போதுமே சேது சமுத்திர திட்டம் செயல் பட வேண்டும் என்றும் தமிழ் நாட்டிற்கு பயனுள்ள திட்டம் என ஊர் முழுக்க பிரச்சாரம் செய்ததால் தான் உங்களுக்கே அந்த திட்டத்தின் மகத்துவம் தெரிந்திருக்கிறது . கடந்த எட்டு ஆண்டுகளாக திமுக காங்கிரஸ் ஆட்சி தான் நடந்து வருகிறது . கோடி கோடியாக கொள்ளையடித்த பணத்தை எல்லாம் எப்படி சிபிஐ க்கு தெரியாமல் மறைக்க தெரிந்த கலைஞருக்கு சேது சமுத்திர திட்டத்தை எப்படி செயல் படுத்த வேண்டும் என தெரியாதா ? ஏன் இவ்வளவு ஆண்டுகளாக தமிழகத்தின் மத்திரிகள் தான் கப்பல் துறைக்கு பொறுப்பு வகித்திருக்கிறார்கள் . அவர்கள் ஏன் இந்த திட்டத்தை செயல் படுத்த வில்லை . மக்களுக்கு மந்திரி பதவி என்றால் எப்படி எல்லாம் யோசிக்கும் உங்கள் தலைவரால் தமிழ் நாட்டிற்கு பயனுள்ள திட்டத்தை பற்றி ஏன் யோசிக்க முடியவில்லை . சேது சமுத்திர திட்டத்தின் மூலம் கோடி கோடியாய் கொள்ளையடித்த திமுகவால் மந்திரி பதவி மாறிய பின்னர் கொள்ளையடிக்க முடியாது என்று அந்த திட்டத்தை பற்றி இதுவரை பேசவில்லை .

Anonymous said...

HELLOW PLEASE GO AND STUDY THE REASONS FOR PUTTING THIS PROJECT INTHE DUSTBIN. AND THEN COME TO ARGUE. JAYA AND THE HINDU FANATIC POLITICAL JOKER SUBRAMANIYA SWAMY FILED ACASE AGAINST THE PROJECT IN THE SUPREMECOURT ONTHE GROUND OF RAMAR BRIDGE AND THE COURT SANCTIONED STAY ORDER AND THE PROJECT WAS STOPPED IN THE MIDDLE OF ITS INPLEMENTATION .YOUR AMMA AND VAIKO ARE NON- TAMILS ." ullaththil ondrum vuthattil ondrum vaiththu pesubavarkal.

Suresh Kumar said...

பெயரிலி அவர்களே ஒரு அரசு எடுத்திருக்கும் கொள்கை முடிவோ அல்லது நாட்டுக்கு பயனுள்ள திட்டத்தையோ எதிர்த்து யாராவது வழக்கு தொடர்ந்ததால், அந்த திட்டம் உண்மையிலேயே செயல் படுத்த வேண்டும் என அரசு நினைத்தால் இந்த வழக்குகளை உடைப்பதற்கு ரெம்ப நேரம் ஆகாது . அரசுக்கு வழக்கு நடத்த தெரியவில்லையா ? இல்லை வேண்டுமென்றே அரசு வழக்கை நடத்த வில்லையா என்பதை சிந்திக்க வேண்டும் . தன்னுடைய இயலாமைக்காக அடுத்தவர் மீது பழி போட கூடாது.

கருணாநிதியை போல் சோனியாவுடன் கூட்டணி சேர்ந்தவுடன் ஈழ தமிழர்களை கொல்ல திட்டம் தீட்டியும் தமிழக மீனவர்களை கொல்ல திட்டம் தீட்டவில்லை வைகோ .

அதிமுக கூட்டணியில் இருந்த போது சேது சமுத்திர திட்டத்தை ஆதரித்து வந்தவர் தான் . தேவை பட்டால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவின் தேர்தல் அறிக்கை என்ன என்று பார்த்து விட்டு பேசுங்கள் .

காங்கிரஸ் கட்சிக்காக மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தையே ஒத்தி போட்டவர் தானே கருணாநிதி

Anonymous said...

HELLOW WHER IS MY COMMENT? I HAVE REPLIED MR. SURESHKUMAR'S COMMENT .IT WAS VISIBLE SECONDS AGO AND IAM WAITTING FOR HIS REPLY. BUT NOW IT HAS GONE.ARE YOU HIDING MY COMMENTS .CANT YOU ANSWER ME?

Suresh Kumar said...

Anonymous said...

HELLOW WHER IS MY COMMENT? I HAVE REPLIED MR. SURESHKUMAR'S COMMENT .IT WAS VISIBLE SECONDS AGO AND IAM WAITTING FOR HIS REPLY. BUT NOW IT HAS GONE.ARE YOU HIDING MY COMMENTS .CANT YOU ANSWER ME?
//////////////////

Hello where you commented. If you comment means it will visible. We dont wat hide ur comment. First u should come ur original name . Why you hiding your name like karunaanithi .........

வின்னர் said...

வைகோ தலைமையில் மூன்றாம் அணி அமைய வாழ்த்துக்கள்

Anonymous said...

IT IS USELESS TO COME HERE. FULL OF " ARAIVEKKADUKAL'

Post a Comment

Send your Status to your Facebook