• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label செய்தி ஆய்வு. Show all posts
Showing posts with label செய்தி ஆய்வு. Show all posts

Tuesday

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பேச்சில் நாம் சிந்திக்க வேண்டியது என்ன ?

தமிழக வெற்றியே மத்திய ஆட்சியை நிர்ணயிக்கும் மத்திய உள்துறை மந்திரி ப . சிதம்பரம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஐந்து ஆண்டு கால சாதனை விளக்க பொதுகூட்டத்தில் இவ்வாறு பேசினார் .

இந்த செய்தியில் சிதம்பரம் தமிழக மக்களுக்கு ஒரு செய்தியை சொல்லி இருக்கிறார் . இந்த நேரத்தில் நாம் கடந்த நாடாளுமன்ற தேர்தல் தேர்தல் குறித்த வெற்றியை பார்ப்போமானால் தமிழகம் மற்றும் புதுவையில் தொகுதிகளையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பரிசாக தந்தார்கள் தமிழக மக்கள் .

திமுக மற்றும் தமிழக காங்கிரஸ் காட்சிகளுக்கு தேவைக்கு அதிகமான மிகவும் பலம் வாய்ந்த மந்திரி பதவிகளை போராடி மிரட்டி வாங்கினார்கள் . இதனால் இந்த மந்திரிகளும் சரி எம்பிக்களும் சரி தமிழக மக்களின் உணர்வுகளுக்கு என்ன மதிப்பளித்தார்கள் .

வாரம் தோறும் சிங்கள இனவெறி ராணுவத்தால் சுட்டு கொல்லப்படும் தன் நாட்டு மீனவர்களை காக்க நடவடிக்கை எடுத்தார்களா ?

தமிழனுக்காக ஜப்பான் அரசு உதவியோடு வரவேண்டிய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு தடுத்த போது அதை செயல் படுத்த நடவடிக்கை எடுத்தார்களா ?

முல்லை பெரியாறு ஆணை நீர்மட்டம் உயர்த்த உச்சநீதி மன்றம் விதித்த ஆணையை செயல் படுத்த நடவடிக்கை எடுத்தார்களா ?

இதை போலவே காவிரி பிரச்னை .

இதையும் தாண்டி தமிழகத்தில் மின்வெட்டு , விலைவாசி உயர்வு போன்ற அத்தியாவசிய பிரச்சனைகள் இருந்த  போதும் அதை பற்றி கூட கவலை படாத தமிழக மக்கள் தங்கள் தொப்பிள் கோடி உறவுகள் இலங்கை தீவிலே சிங்கள இனவெறி அரசால் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்படும் போது பொங்கி எழுந்தார்களே . அப்போது இந்த மத்திய அரசு தமிழக மக்களின் கோரிக்கைக்கு எப்படி செவி சாய்த்தது .

இந்தியா சிங்கள அரசுக்கு செய்யும் உதவியை நிறுத்தவும் , போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் தமிழக மக்களின் பதினொன்று பேர் தன்னையே தீக்கிரை யாகினார்களே . அவர்கள் குரலுக்கு மதிப்பளித்ததா ?

தமிழகமே கொந்தளித்த போது  அடக்கு முறையால் தமிழின உணர்வாளர்களை கைது செய்து சிறையில் அடித்ததை விட இந்த அரசு தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்ததா ?

தமிழன் தான் மத்திய அரசை ஆட்டி படைத்தான் தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த எம்பிக்களால் தான் மத்திய அரசு ஐந்து ஆண்டுகள் கவிழாமல் நின்றது . அந்த தமிழக மக்களுக்கு நீ செய்த நன்றி கடன் என்ன ?

தமிழக் மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்து விட்டு மீண்டும் தமிழக மக்களை நோக்கி வாக்குகள் கேட்க எப்படி மனம் வருகிறது .

தமிழக வெற்றியே மத்திய ஆட்சியை நினயிக்கும் எனபது தமிழக மக்களுக்கும் தெரியும்.
மீண்டும் ஒரு முறை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் நாளை நீ சொல்வாய் ஈழ தமிழர்களை கொலை செய்ய தமிழக மக்கள் அங்கிகாரம் தந்து விட்டார்களென்று .

தமிழ் உறவுகளை கொலை செய்யும் சிங்கள இனவெறி அரசுக்கு உதவி புரியும் காங்கிரஸ் கட்சியையும் அதனுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் திமுகவையும் இந்த தேர்தலில் தோற்கடிப்போம்  தமிழக மக்களை காப்போம் .

தமிழக வெற்றியே மத்திய ஆட்சியை நிர்ணயிக்கும் . தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியடையும் பட்சத்தில் மத்தியில் ஆட்சிக்கு வரமுடியாது  இதை உணர்ந்து நாம் செயல் படுவோம் .  இந்த தேர்தல் தமிழனுக்கும்  தமிழின துரோகிகளுக்கும் நடைபெறும் தேர்தல் . யார் வெல்ல வேண்டும் என்பதை நாம் முடிவு செய்வோம் .

Read More

Send your Status to your Facebook