இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label தமிழ் நாடு. Show all posts
Showing posts with label தமிழ் நாடு. Show all posts
Friday
தலித் அரசியல்! ராஜா கைது செய்ய பட கூடும் ?
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
இந்தியா,
சிறுபான்மையினர்,
தமிழ் நாடு,
தலித்,
தலித் கிறிஸ்தவர்கள்
எழுதிய நேரம்
Friday, December 24, 2010
கிறிஸ்தவ விழாக்களில் பங்கு பெறும் ஒவ்வெரு அரசியல் தலைவர்களும் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். நேற்று குமரி மாவட்டம் அருமனையில் ஜெயலலிதா பங்கேற்ற கிறிஸ்தவ விழாவில் பல வாக்குறுதிகளை கிறிஸ்தவ மக்கள் மத்தியில் கொடுத்திருக்கிறார். அதில் கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கும் மற்ற ஆதி திராவிடர்களுக்கும் வழங்கும் அதே சலுகைகளை நடை பெற போகும் கழக ஆட்சியில் நிறைவேற்றுவேன் என்றிருக்கிறார் .அதே போல் கருணாநிதி பங்கேற்ற கிறிஸ்தவ விழாவிலும் பல வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார் .
சிறுபான்மை மக்கள் மத்தியில் செல்வாக்கை கூட்ட வேண்டும் என்று ஒவ்வெரு கட்சியும் வாக்குறுதிகளை கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள் . கருணாநிதி ஒரு படி மேலே சென்று நாடாளுமன்றத்தில் கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கும் மற்ற ஆதி திராவிடர்களுக்கு வழங்கும் அதே சலுகையை வழங்க திமுக குரல் கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறார் .
ஆதி திராவிடர் கிறிஸ்தவர்களுக்கு மற்ற ஆதி திராவிடர்களை போல் சலுகைகள் இல்லை. இதனால் அரசுக்கு தெரியாமல் பல ஆதி திராவிடர்கள் மறைமுக கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள் . இத்தனை காலம் ஆட்சி செய்த பின்னும் இந்த கோரிக்கைகள செயல் படுத்தசிறுபான்மை மக்களுக்கு பயன்படும் வகையில் எந்த திட்டங்களையும் நிறைவேற்ற வில்லை . மத்திய அரசால் அமைக்க பட்ட கமிசன் பரிந்துரைத்த முஸ்லிம்களுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடும் கிறிஸ்தவர்களுக்கு ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசோ மாநில அரசோ இதுவரை ஒதுக்கீடு செய்ய வில்லை. வில்லை . பல ஆண்டுகளாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்கின்றான்ர் ஆனால் இது வரை இந்த கோரிக்கைகளுக்கு ஒரு தீர்வு ஏற்பட வில்லை. இதே போல் தான் மத்திய காங்கிரஸ் அரசும் இதுவரை
தேர்தல் வந்தாலே ஒவ்வெரு கட்சியும் சிறுபான்மை மக்களுக்கு நன்மை செய்வதை போலகாட்டி பல வாக்குறுதிகளை அள்ளி வீசு கின்றனர் . உமா சங்கர் என்ற தலித் ஐ ஏ எஸ் அதிகாரியை மத மாற்றத்தை காரணம் காட்டி தற்காலிக பதவி நீக்கியது கருணாநிதி தலைமையிலான இந்த அரசு . ஆட்சியில் இருக்கும் போது செய்ய வேண்டியது எதையும் செய்யாமல் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள். இப்போது கருணாநிதி , வீரமணி போன்றோர் பார்வையில் 2G அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் செய்து சிக்கிய ராஜா மட்டும் தான் தலித். ஏனெனில் ராஜ செய்த ஊழல் ராஜாவுக்காக இல்லை கனிமொழிக்காக என்பது தான். கனிமொழி கருணாநிதியின் மகளாகி விட்ட்டதால் தன் மகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தலித் அரசியலை கையில் எடுக்கிறார் . இன்று சி பி ஐ முன்பு விசாரணைக்கு ஆஜர் ஆகும் ராஜ கைது செய்ய படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றனார் .............
Subscribe to:
Posts (Atom)

