Tuesday

திமுகவிற்கு 121 தொகுதிகளை ஒதுக்கி சுயமரியாதையை காத்த சோனியாவுக்கு கலைஞர் பாராட்டு

ஒரு வழியாக ராஜினமா செய்வேன் என மிரட்டிய திமுகவிற்கு அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக தொகுதிகளாக 121  தொகுதிகளை கொடுத்து திமுகவின் சுயமரியாதைக்கு இழுக்கு வராமல் பார்த்து கொண்ட சோனியாவிற்கு திமுக தொண்டர்கள் சார்பாகவும் , கலைஞரின் குடும்பம் சார்பாகவும் பாராட்டுகளை கலைஞர் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்லாது குட்ட குட்ட குனிய கூடாது என சொல்லி உறங்கி கிடந்த திமுகவின்  சுயமரியாதையை தட்டி எழுப்பி 121  தொகுதிகள் கிடைக்க காரணமான திராவிடர் கழக பொதுச்செயலாளர் கீ . வீரமணியும் சோனியாவை பாராட்டி சுயமரியாதை காத்த வீராங்கனை என்ற பட்டம் கொடுத்திருக்கிறார் .

தெருவெங்கும் திமுக தொண்டர்கள் கூடி தலைவரின் ராஜ தந்திரத்திற்கு கிடைத்த வெற்றி தான் 121  தொகுதிகள் என தலைவர் கருணாநிதியை பாராட்டி இனிப்பு வழங்கியும் பட்டாசு கொளுத்தியும் வெற்றியை கொண்டாடி வருகின்றானர் . தமிழகம் முழுவதும் விழாகோலம் பூண்டிருக்கிறது . விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் அறிவாலயத்திற்கே சென்று கலைஞருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் . இவர் தான் காங்கிரஸ் கட்சியை விளக்கியவுடன் ராஜதந்திர ரீதியில் காய் நகர்த்தி கம்யூனிஸ்ட் கட்சிகளை அழைத்து கலைஞரின் சுயமரியாதை காக்க உதவி செய்தவர் . 
இதில் முக்கியமாக கலைஞரின் சுயமரியாதை மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழரின் சுயமரியாதையை இத்தாலி சோனியா காந்தி காத்திருப்பதை நினைத்து ஒட்டு மொத்த தமிழக மக்களும் மகிழ்ச்சி கடலில் மூழ்கியிருக்கின்றனர் . திமுக தொண்டர்கள் அனைவரும் சட்டை காலரை தொக்கி விட்டு இத்தாலி ராஜதந்திரம் எங்ககிட்ட பலிக்க நாங்க என்ன  டீனா.........  டூனாவா என கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . அதே நேரம் காங்கிரஸ் தொண்டர்கள் கருணாநிதியிடம் இத்தாலி ராஜதந்திரம் பலிக்கவில்லையே என சோகத்தில் ட்ஸாமாக் கடையிலிருந்து குவார்டர் போட்டு குப்புற படுத்து விட்டார்கள் . 

நாமும் மகிழ்ச்சியை கொண்டாட வேண்டாமா ? ................ திமுகாவின் சுயமரியாதையை காத்த சோனியா வாழ்க!
தமிழகத்தின் சுயமரியாதையை ராஜதந்திர ராஜினாமாவால் காத்த கலைஞர் வாழ்க!

இத கூட சொல்லலைனா நாளைய வரலாறு நம்மை மன்னிக்காது 

18 கருத்துக்கள்:

Anonymous said...

கலைஞரின் முடிவை உலக தமிழர்கள் பாராட்டுகிறார்கள் - வீரமணி

ஹலோ ஹலோ அய்யா வீரமனிங்களா............ என்ன போன் கட் ஆகிடிச்சி

ஜீவன்சிவம் said...

தமிழன் மானம் காத்த தனிப்பெரும் தலைவர்
வாழ்க வாழ்க

Suresh Kumar said...

Anonymous said...

கலைஞரின் முடிவை உலக தமிழர்கள் பாராட்டுகிறார்கள் - வீரமணி

ஹலோ ஹலோ அய்யா வீரமனிங்களா............ என்ன போன் கட் ஆகிடிச்சி
//////////

என்ன வீரமணிக்கா டிரை பண்றீங்க ......... போன் அவுட் ஆப் ஆர்டர்ல இருக்காம் ஹஹ்ஹஹஹா

Suresh Kumar said...

ஜீவன்சிவம் said...

தமிழன் மானம் காத்த தனிப்பெரும் தலைவர்
வாழ்க வாழ்க
/////////////

வாழ்க வாழ்க

Anonymous said...

பாக்குத் தூள் என காங்கிரசை திட்டிய அபிஅப்பா போன்ற திமுக அன்பர்கள் தங்கள் முகத்தை எங்கே கொண்டுபோய் வைக்கபோகின்றார்கள்.

Anonymous said...

அரசியல் என்பது ஏற்ற தாழ்வுகள் இருக்க தான் செய்யும் . சில நேரங்களில் சில சமரசங்கள் செய்து தான் ஆக வேண்டும்.

ரமேஷ் said...

Anonymous said...

பாக்குத் தூள் என காங்கிரசை திட்டிய அபிஅப்பா போன்ற திமுக அன்பர்கள் தங்கள் முகத்தை எங்கே கொண்டுபோய் வைக்கபோகின்றார்கள்.
////////////


கொஞ்ச நாளுக்கு திமுக காரங்க இந்த பக்கம் வரமாட்டாங்க

Anonymous said...

சுயமரியாதை காத்த சிங்கமே வாழ்க

வெ. தனஞ்செயன் said...

சுயமரியாதை இயக்கம் நல்லாத்தான் வளர்ந்து இருக்கு,..

ramalingam said...

தலைவருக்கு குடும்பம் பெருசா, தொண்டர்கள் பெருசா. நீங்க வேற.

Suresh Kumar said...

வெ. தனஞ்செயன் said...

சுயமரியாதை இயக்கம் நல்லாத்தான் வளர்ந்து இருக்கு,..
/////////////////

உலகத்திற்கே சுயமரியாதை கற்று கொடுத்தவர் இல்ல

Suresh Kumar said...

ramalingam said...

தலைவருக்கு குடும்பம் பெருசா, தொண்டர்கள் பெருசா. நீங்க வேற.


///////////////// ஒரு அப்பாவா அவருக்கு குடும்பம் தாங்க பெருசு

ராஜ நடராஜன் said...

தலைவர் இமயம் மாதிரி 2 இன்ஞ் உயர்ந்து நிற்கிறார்-திருமா

Churchil said...

எப்படி தல டைமிங் பார்த்து போட்டோ போட்டிருக்கீங்க

Arun Ambie said...

'வ'னா 'பு'னா 'அ'னா நல்லா இருக்கு..

Shajahan.S. said...

வாழ்க தமிழ்மொழி! வாழ்க செம்மொழி!! வாழ்க கனிமொழி!!!
வெட்கம் கெட்ட ஜென்மங்கள்.

முகமூடி said...

பின்னுரீங்க போங்க

Suresh Kumar said...

உங்கள் பொன்னான நேரங்களை செலவிட்டு வருகை தந்து சுயமரியாதை காத்த சிங்கங்களை பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி! நன்றி

Post a Comment

Send your Status to your Facebook