Wednesday

திரைக்கதைகளை பத்திரிக்கைகளுக்கு கொடுக்கும் கலைஞர் .

ஈழ தமிழர்களை காக்கவும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி தமிழக அனைத்து கட்சி கூட்டத்தில் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க ஒரு முடிவு எடுக்கப்பட்டது . உலக தமிழர்கள் எல்லாம் கலைஞர் கருணாநிதியை வாழ்த்தினார்கள் . நீங்கள் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் உயிரோடிருந்து இந்த தமிழ் இனத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றார்கள் .

இரண்டு வாரத்திற்குள் போரை நிறுத்த வில்லை என்றால் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்களும் ராஜினமா செய்வோம் என்று முடிவு எடுக்கப்பட்டது . தமிழினத்திற்காக பதவி வெறி பிடித்த கருணாநிதி ராஜினமா செய்கிறாரா ? என அனைவரும் ஆச்சரிய பட்டனர் . என்றும் இல்லாத அளவு தமிழகத்தில் ஈழ அதரவு எழுச்சி ஏற்பட்டது .

இரண்டு வாரம் என்று நாள் கொடுத்து விட்டு மறுநாளே தனது மகளும் மேல்சபை எம்பியுமான கனிமொழி ராஜினமா கடிதம் கொடுத்தார் என பத்திரிகைகளில் செய்தி வந்தது .  அனைவரும் மனதார பாராட்டினர் . கலைஞரின் குடும்பமே தமிழின மக்களுக்காக உழைக்கிறதே என்று புகழ்ந்தனர் .  பின்னர் தான் தெரிந்தது ராஜினமா கடிதம் கொடுத்தது தன் தந்தையிடமென்று.

புகழ் மழையில் நனைந்த கலைஞர் உணர்ச்சி வசப்பட்டு மனித சங்கலி என்று அறிவித்தார் . அங்கே ஈழ தமிழன் மழை என்றும் பாராமல் சிங்கள இனவெறி அரசின் குண்டுகளுக்கு இரையாகி கொண்டிருக்கும் போது மழை என்பதால் மனித சங்கிலி வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது இங்கே .

இந்த இடைவெளியில் விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்காக தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர் . பின்னர் கொட்டும் மழையில் மனித சங்கிலி நடந்தது . இந்த நிலையில் திமுக எம்பிக்கள் அனைவரும் கருணாநிதியிடம் ராஜினமா கடிதம் கொடுத்தனர் . என்னடா இது ராஜினாமா கடிதம் கொடுத்தா அது சபாநாயகரிடமல்லவா கொடுக்க வேண்டும் கருணாநிதி எப்போது சபாநாயகர் ஆனார் என கேள்விகள் எழுந்தன .

கெடு முடிந்தது பிரணாப் முகர்ஜி கலைஞரை தேடி வந்தார் . மத்திய காங்கிரஸ் அரசுக்கு எந்த பாதிப்புமில்லை என்றார் . என்னடா இது போர் நிறுத்தம் பற்றி பேசுவாருன்னு நினைத்தோம் இவரு ஆட்சிக்கு பாதிப்பில்லை என்கிறார் . கொட்டும் மழையில் முட்டாள் ஆனான் தமிழன் . கொட்டும் மழையில் ஒவ்வெரு தமிழனையும் நனைய வைத்து முட்டாள் ஆக்கினார் கலைஞர் . ராஜினமாவும் இல்லை இன்று வரை போர் நிறுத்தமும் இல்லை .

கருணாநிதியின் ராஜினமா நாடகத்தின் பின்னர் தான் இந்திய இலங்கை ராணுவத்திற்கு அதிகமாக ஆயுதங்களையும் , படையணிகளையும் கொடுத்ததாக தெரிகிறது . தமிழினத்திற்கு துரோகம் செய்து விட்டு அப்போது எழுதிய நாடகத்தின் திரை கதையில் பாதியை தினமும் வாசித்து கொண்டிருக்கிறார் . மக்கள் என்ன மீண்டும் ஏமாறுவார்களா ?

2 கருத்துக்கள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கெடு முடிந்தது பிரணாப் முகர்ஜி கலைஞரை தேடி வந்தார் . மத்திய காங்கிரஸ் அரசுக்கு எந்த பாதிப்புமில்லை என்றார் . என்னடா இது போர் நிறுத்தம் பற்றி பேசுவாருன்னு நினைத்தோம் இவரு ஆட்சிக்கு பாதிப்பில்லை என்கிறார் . கொட்டும் மழையில் முட்டாள் ஆனான் தமிழன் . கொட்டும் மழையில் ஒவ்வெரு தமிழனையும் நனைய வைத்து முட்டாள் ஆக்கினார் கலைஞர் . ராஜினமாவும் இல்லை இன்று வரை போர் நிறுத்தமும் இல்லை .//

நாடகம் முடிந்தது.
ஆட்டம் காலி
படுதா காலி
இப்ப ஒட்டு கேட்டு வர்றோம்
போடுங்க!

ttpian said...

தம்பி பிரபாவின் பென்சில்,நோட்டு,கர்சிப்...அப்புறம்.....சட்டை...
ஆனால் ஒன்று...ப்ரபா விரைவில்,35,000 சிங்கள படைகளை பெட்டியில் போட்டு கொடுத்து விடுவார்!
சொனிஆ& கம்பனி இலவசமாக அடக்கம் செய்யும்

Post a Comment

Send your Status to your Facebook