Thursday

மதிமுக அதிமுக கூட்டணியில் நீடிக்குமா ?

அதிமுக கூட்டணியில் மதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்தே இருந்து வருகிறது . கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் , பாமக ஆகிய கட்சிகள் உட்பட மதிமுகவும் சேர்ந்து ஒரு பெரிய கூட்டணியே தேர்தலில் போட்டியிட்டது . எதிரணியில் அதிமுக பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன . 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வியை தழுவியது .

வைகோவை பொடா சட்டத்தில் சிறையில் அடைத்ததும் ,அதன் மூலம் ஏற்பட்ட எழுச்சியும் வைகோவின் தமிழ் நாடு முழுவதுமான பிரசாரமும் திமுக கூட்டணி வெற்றி பெற காரணமாக இருந்தது . தேர்தலுக்கு பின்னர் திமுகவின் செயல் பாடுகள்  மாதிமுகவின் செயல் பாடுகளை முடக்குவதை போல் இருந்த காரணத்தால் மதிமுக அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டியதாயிற்று . அதிமுகவும் மதிமுகவும் சேர்ந்து சட்ட மன்ற தேர்தலை சந்தித்தது . எதிரணியில் ஒரு பலமான கூட்டணி இருந்த போதும் வராலற்று சிறப்புமிக்க வகையில் திமுக தனி பெரும்பான்மை இல்லாமல் போயிற்று .

இந்த தேர்தல் முடிந்த பின்னர் முதல்வரான கலைஞர் டெல்லியில் சென்ற போது ஒரு நிருபர் கேட்டார் மதிமுக தானே உங்கள் தோல்விக்கு காரணம் என்று அதற்கு கலைஞர்  கோபத்துடனும் எரிச்சலுடனும் மதிமுக ஒன்று இல்லை என்று சொன்னார் . அன்றிலிருந்தே மதிமுகாவை இல்லாமல் ஆக்குவதே தன் குறிக்கோளாக நினைத்து செயல் பட்டு கொண்டிருக்கிறார் .

இந்த நிலையில் சில மதிமுக பதவி வெறி பிடித்தவர்களையும் பண வெறி பிடித்தவர்களையும் திமுக அதிகாரம் , பதவி , பணம் போன்றவற்றை காட்டி தன்னகத்தே இழுத்து கொண்டது . அதன் உச்சகட்டம் தான் பொள்ளாச்சி மதிமுக எம்பி கிருஷ்ணனுக்கு 15 கோடி தருகிறோம் என்றது .

இந்த வேளையில் அதிமுக கூட்டணியில் பாமக , கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்து சேர்ந்தது இந்த கூட்டணியும் ஒரு பலமான கூட்டணியாக இருந்தது . அதிமுகவுடன் கூட்டணி அமைத்த போது தன் கொள்கைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத அதிமுகவுடன் எப்படி மதிமுக கூட்டணி வைக்கிறது என பலரும் கேள்வி எழுப்பினர் . அந்த கேள்வியின் பதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சில கட்சிகளை போல் பதவிக்காக தன் கட்சியின் கொள்கைகளை எள்ளளவும் விட்டு கொடுக்காமல் தன் நிலைப்பாட்டிலே இருந்தார் . இது தான் வைகோவின் பலமும் பலவீனமும் என பத்திரிகைகள் எழுதுகின்றன .

திமுக கூட்டணியில் இரண்டு கட்சிகளே இருக்கிற காரணத்தினால் தொகுதி பங்கீடுகள் மிக விரைவில் முடிந்து விட்டது . ஆனால் அதிமுக கூட்டணியில் இன்னும் முடியவில்லை . இழுபறி நிலையில் இருப்பதை செய்திகள் தெளிவு படுத்து கின்றன . காரணம் என்ன பாமக தனக்கு வேண்டிய தொகுதியை கூட்டணிக்கு வந்தவுடனே கேட்டு பெற்று கொண்டது . அதே போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தன் தொகுதிகளை கேட்டு பெற்று கொண்டது . மதிமுக , கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையில் இன்னும் தொகுதி பங்கீடு முடியவில்லை .

அதிமுக இதில் இரண்டு கட்சிகளையுமே கூட்டணியை முறித்து கொள்ள விரும்பவில்லை ஒரு கட்சி கூட்டணியை விட்டு போனாலும் அது அதிமுகவின் வெற்றியை பாதிக்கும் , கடந்த தேர்தல்களில்  திமுக  மதிமுகவை கடைசி நேரத்தில் பிரித்து விட்டதால் அதன் வெற்றி பாதித்திருக்கிறது . அதே போல் மதிமுகவும் தன் சுயமரியாதையை விட்டு கொடுப்பதாக இல்லை என்றே தொன்றுகிறது   . எப்போது தான் தொகுதி பங்கீடுகள் முடியுமோ. மதிமுக அதிமுக கூட்டணியிலே இருந்து  கொண்டு திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என நினைக்கிறது . தொகுதி பங்கீடுகள் விரைவில் முடிந்தால் மட்டுமே தேர்தல் பிரசார வேலைகளையும் பார்க்க முடியும் . தொகுதி பங்கீடு  எப்போது முடியும் இதுவே அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்றாகி விட்டது .

3 கருத்துக்கள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வைகோவை ஜெயலலிதாவும், கலைஞரும் இந்தளவுக்கு வேதனைப் படுத்தக் கூடாது!

Anonymous said...

கலைஞரும், ஜெயலலிதாவும் வைகோவை அழிக்கவே நினைபார்கள். கலைஞருகு பெறகு வைகோவின் வளர்ச்சியை எண்ணி தான் இவ்வாறு இருவருமே செய்கிறார்கள் .

Suresh Kumar said...

கலைஞரும், ஜெயலலிதாவும் வைகோவை அழிக்கவே நினைபார்கள். கலைஞருகு பெறகு வைகோவின் வளர்ச்சியை எண்ணி தான் இவ்வாறு இருவருமே செய்கிறார்கள் ./////


இருக்கலாம்

Post a Comment

Send your Status to your Facebook