Saturday

இனி என்ன செய்ய போகிறது இந்தியா ?

சிங்கள இனவெறி அரசின் இனவெறிக்கு விடுதலை புலிகள் மீதான கோபத்தால் தீனி போட்ட இந்திய அரசானது தமிழர்கள் மீதான இனபடுகொலையை கண்டித்து மக்கள் போராட்டங்களை நடத்திய போது நாங்கள் அங்கே வாழும் தமிழ் மக்கள் மீது மட்டும் தான் அக்கறை காட்ட முடியும் என்று பதிலளித்தது .

இன்று விடுதலை புலிகளையும் ஒழித்து விட்டாச்சு கூடவே இந்தியா உட்பட ஏழு நாடுகள் உதவியோடு 35000  மேற்பட்ட அப்பாவி மக்களையும் இன படுகொலை செய்து விட்டார்கள் . அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் இலங்கை அரசின் மீதான போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கையில் நடைபெறுவது உள் நாட்டு பிரச்சனை என்று சொல்லி தோற்கடித்துமாயிற்று .

இப்போது சிங்கள நாடு எந்த நாடும் கேள்வி கேட்க முடியாது என்று திமிரோடு இருக்கிறது . சொந்த மக்கள் என்று சொல்லி அந்த மக்களையே கொலை செய்து அதற்காக விழா எடுக்கும் ஒரே நாடு உலகத்திலே சிறிலங்காவாக தான் இருக்க முடியும் . இப்படி மக்களை கொலை செய்ததற்காக விழா எடுக்கிறது என்றால் அந்த மக்கள் எப்படி அந்த நாட்டின் குடிமகன்களாக இருக்க முடியும் . வரலாற்றில் ஒரு அரசன் இன்னொரு நாட்டில் படையெடுத்து சென்று அந்த மக்களை சிறை பிடிப்பது போல் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இரும்பு வேலிகளின் உள்ளே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் .

உலகத்தில் எந்த நாடுமே இந்த மனித அவலத்தை பற்றி உண்மையாக பேசவில்லை . விடுதலை புலிகள் அழிந்த பின்னர் மக்களுக்கு தீர்வை முன் வைப்போம் என்று சொன்ன இந்திய அரசையும் கேவல படுத்தி விட்டது சிங்களம் . இந்திய வெளியுறவு துறை மந்திரியை யார் உனக்கு இங்கே என்ன வேலை என்று கேட்குமளவிற்கு இருக்கிறது . ராஜிவ் காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட 13 வது சட்ட திருத்தமே மக்கள் உரிமையை முழுமையாக பெற்று தராததாலும் , அந்த சட்ட திருத்தத்தையே சிங்களம் நடைமுறை படுத்த தவறியதாலுமே அன்று விடுதலை புலிகளுக்கும் இந்திய ராணுவதிற்குமிடையில் போர் வெடித்தது .

இன்று சிங்களம் அந்த சிறிய உரிமைகளை கூட தமிழர்களுக்கு கொடுக்க தயாரில்லை . இந்தியாவை சிங்களம் எச்சரித்தாயிற்று . இலங்கை தலைமை நீதிபதியும் 13 வது சட்ட திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்த முடியாது என்று சொல்லுகிறார் . யார் தான் அப்படிஎன்றல் தமிழர்களின் உரிமையை பெற்று தருவார்கள் . இந்தியா இனி என்ன செய்ய போகிறது .

6 கருத்துக்கள்:

ttpian said...

congress party busy in hair cuts

Suresh Kumar said...

ttpian கூறியது...
congress party busy in hair cuts //////////////

நிலைமைகளை பார்க்கும் போது அப்படி தான் இருக்குமோ என நினைக்க தோன்றுகிறது

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சிங்களவன் இந்தியாவின் மீது இப்பதான் மலம் கழிக்க ஆரம்பித்திருக்கிறான்!
இனிமேல் தொடரும். பட்டால் தான் தெரியும்!
என்னா! மிஞ்சி மிஞ்சி போனா கிருஷ்ணா பதவிய புடுங்கிட்டு மலத்தை பெற்றுக் கொண்டு மண்டியிடுவார்கள். வேறு என்ன செய்யப் போகிறார்கள்?

ரங்குடு said...

அதனால் என்ன? மீதி இருக்கும் தமிழர்களையும் கொன்றுவிட்டால் எல்லாத்தமிழர்களுக்கும் ஒரே (மேலே போகும்) உரிமையைக் கொடுத்து விட்டதாக இலங்கை விழா எடுக்கலாம். இந்திய அரசுத் தரப்பில் மன் மோஹனும், கருணா நிதியும் கலந்து கொள்ளலாம்.

Suresh Kumar said...

ஜோதிபாரதி கூறியது...

சிங்களவன் இந்தியாவின் மீது இப்பதான் மலம் கழிக்க ஆரம்பித்திருக்கிறான்!
இனிமேல் தொடரும். பட்டால் தான் தெரியும்!
என்னா! மிஞ்சி மிஞ்சி போனா கிருஷ்ணா பதவிய புடுங்கிட்டு மலத்தை பெற்றுக் கொண்டு மண்டியிடுவார்கள். வேறு என்ன செய்யப் போகிறார்கள்? //////////////////////////


அப்போ கச்ச தீவை கொடுத்தாங்க இப்போ இன்னும் ஏதாவது கொடுத்து இலங்கைக்கு சோப்பு போடுவாங்க கேவலமா இருக்கு நன்றி ஜோதி பாரதி

Suresh Kumar said...

ரங்குடு கூறியது...

அதனால் என்ன? மீதி இருக்கும் தமிழர்களையும் கொன்றுவிட்டால் எல்லாத்தமிழர்களுக்கும் ஒரே (மேலே போகும்) உரிமையைக் கொடுத்து விட்டதாக இலங்கை விழா எடுக்கலாம். இந்திய அரசுத் தரப்பில் மன் மோஹனும், கருணா நிதியும் கலந்து கொள்ளலாம்./////////////////////////

இந்தியாவிற்கு இந்திய தமிழர்கள் மீதே அக்கறையில்லை . நம்ம தலைவர்கள் யார் செத்த வீட்டில உட்கார்ந்து பாயாசம் கேட்பவர்களாக தானே இருக்கிறார்கள்

Post a Comment

Send your Status to your Facebook