இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label தமிழ் ஈழம். Show all posts
Showing posts with label தமிழ் ஈழம். Show all posts
Tuesday
ஒரு பெரிய மனிதரின் புதிய நாடகம்! வைகோ:
தமிழ் ஈழ முகமூடியை மறுபடியும் தாங்கி வலம் வரத் தொடங்கி விட்டார் கருணாநிதி. நேரத்துக்கும் ஆளுக்கும் தகுந்த மாதிரி வேடம் தாங்குவது அவருக்கு வழக்கமானதுதான். ஆனால், அதற்குத் தமிழ் இனத்தையும் தமிழ் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட உடல்களையும் பணயம் வைக்க அவர் முடிவு எடுத்திருப்பதுதான் வேதனையானது.
இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு ஈவு இரக்கம் இன்றி, தமிழ் இனப்படுகொலையை நடத்தியதற்கும், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளைப் போர்க்களத்தில் முறியடிப்பதற்கும், இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ராடார்களும், ஆயுதங்களும் தந்ததுதான் அடிப்படைக் காரணம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாயும் வழங்கி, இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் அவ்வப்போது அனுப்பிவைத்து, சிங்களவன் நடத்திய இனக்கொலை யுத்தத்தை இயக்கியதற்கு அசைக்க முடியாத ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன. இந்த மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்த இந்திய அரசின் அமைச்சரவையில் பங்கு ஏற்று உடந்தையாகச் செயல்பட்டார் கலைஞர் கருணாநிதி.
![]() |
| நடித்தே ஈழ தமிழர்கள் ஒரு லட்சம் பேரை கொன்ன கருணாநிதியின் நாடகத்தில் ஒரு பகுதி கால் பக்கம் மனைவியும் தலை பக்கம் துணைவியும் துணைக்கு இருக்கிறார்கள் |
'தமிழ் இனப்படுகொலைக்கு இவரும் ஒரு காரணம்’ என்று உலகத் தமிழர்கள் உள்ளங்களில் ஏற்பட்டுள்ள பழியில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவும், தடுமாறித் தத்தளிக்கும் தி.மு.கழகத்தின் தொண்டர்களை ஏமாற்றுவதற்காகவும், தமிழ் ஈழ விடுதலை முகமூடியை அணிந்துகொண்டு, தமிழர் தரணியில் இப்போது பவனி வரத் துடிக்கிறார்.
2004-ம் ஆண்டு, சோனியாவின் ஆளுமையில், டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தவுடன், இலங்கையோடு இந்தியா ராணுவ ஒப்பந்தம் செய்ய இருக்கிறது என்ற செய்திகள் வெளியானபோது, அதைத் தடுப்பதற்குக் கருணாநிதி, ஒரு துரும்பையாவது தூக்கிப் போட்டாரா? ஆட்சேபணை தெரிவித்தாரா? எடுத்ததற்கெல்லாம் கடிதங்கள் எழுதினேன் என்று பட்டியல் போடுகிறவர், இதுகுறித்து ஏதாவது ஒரு கடிதம் எழுதியதாகச் சொல்ல முடியுமா?
சிங்கள அரசுக்கு, இந்திய அரசு ராடார்கள் கொடுக்க இருக்கின்ற செய்தி வந்தபோது, அது தமிழர்களைக் குண்டு வீசிக் கொல்வதற்குத்தான் பயன்படும் என்று பதறித் தடுக்க முனைந்தாரா? 2007-ல் இந்தியா இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்தபோது, இவர் அதைக் கண்டித்தது உண்டா?
இந்திய அரசு, ஈழத் தமிழர்களை அழிக்க, சிங்கள அரசுக்குச் செய்து வந்த உதவிகளை, மேற்கொண்ட நடவடிக்கைகளை, எழுத்து மூலமாகக் குறிப்பிட்டு, இந்திய அரசைக் கண்டித்து, இந்தத் துரோகத்தைத் தமிழ் இனமும், வருங்காலத் தலைமுறையும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று எச்சரித்தும், பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை, நேரடியாகப் பலமுறை சந்தித்துத் தந்த கடிதங்களைத் தொகுத்து, குற்றம் சாட்டுகிறேன் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும், நூலாக நான் வெளியிட்டதற்காக என் மீது, கருணாநிதி அரசு தேசத்துரோக வழக்கைத்தானே பதிவு செய்தது.
தமிழ் ஈழம் என்ற உயிர் மூச்சான லட்சியத்துக்காக, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், 'ஈழத்தில் நடப்பது என்ன?’ என்று நான் பேசியதற்காக, அதே தேசத் துரோகக் குற்றச்சாட்டைத் தொடுத்து என்னைக் கைது செய்து புழல் மத்தியச் சிறையில் அடைத்தவர் அவர்.
1993-ம் ஆண்டு தி.மு.கழகத்தில் இருந்து என்னை நீக்க வேண்டும் என்று அவர் முடிவு எடுத்தபோது, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீதுதான் பழியைச் சுமத்தினார். எனது அரசியல் முன்னேற்றத்துக்காக, கலைஞர் கருணாநிதியை விடுதலைப் புலிகள் கொலை செய்யத் திட்டமிட்டார்கள் என்ற ஊர்ஜிதமாகாத, மத்திய அரசின் உளவுப்பிரிவுத் தகவலைக் குற்றச்சாட்டாக ஆக்கி, என்னைத் தி.மு.கழகத்தில் இருந்து நீக்கினார்.
விடுதலைப்புலிகள் மீது அல்லவோ அன்று கொடும் பழியைச் சுமத்தினார்?
எதற்கெடுத்தாலும், சகோதர யுத்தம்தான் ஈழத் தமிழர் வீழ்ச்சிக்குக் காரணம் என்று, ஒரு நாடக ஒப்பாரி வைக்கிறாரே, கோடிக்கணக்கான மக்கள் நெஞ்சில், அண்ணாவின் இயக்கத்தைச் சுடராக ஏற்றிய, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை இவர் சகித்தாரா? விளக்க அறிக்கைக்கான கெடு முடிவதற்கு உள்ளாகவே, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அல்லவா அவரை நீக்கச் செய்தார்?
கட்சியை, தலைமையை, உயிருக்கும் மேலாக நேசித்து, சர்வபரித் தியாகத்துக்கும் சித்தமாக இருந்த என் மீது கொலைப் பழி சுமத்தியபோது, அதை உண்மை என்று தொண்டர்கள் நம்பி இருந்தால் என்ன ஆகும்? 'எத்தகைய துன்பத்துக்கு அவன் ஆளாவான்? எத்தனைத் தலைமுறைகளுக்கு, அவனும் அவனது குடும்பமும் இந்தப் பழியைச் சுமக்க நேரும்?’ என்று கடுகு அளவேனும் கருதியது உண்டா? மனிதாபிமானமோ, மனிதநேயமோ, அவர் மனதில் நிழலாடியது உண்டா?
புரட்சி அமைப்புகளில் விடுதலை இயக்கங்களில் எதிர்ப் புரட்சியாளரை, ஊடுருவல் துரோகிகளை எப்படி நடத்தினார்கள் என்பதற்கு, சரிதத்தில் ஏராளமான சாட்சியங்கள் உண்டு. மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களின் உயிர் குடிக்கச் சதி செய்த மாத்தையாவை, மாவீரன் என்றும், கிழக்கு மாகாணத்தில் சிங்களவர் கைக்கூலியான கருணாவை, வீரத் தளபதி என்றும் இவர்களையெல்லாம் பிரபாகரன் அழித்துவிட்டார் என்றும் வசை பாடியது யார்? அதைவிடக் கொடுமை என்னவென்றால், 'லட்சியத்துக்காகப் போராடும் வேளையில், களத்தில் இறந்த வீரர்களுக்குக் கல்லறைகள், துயிலகங்கள், கட்டுவதில் சக்தியையும் நேரத்தையும் வீணாக்கினார்கள்’ என்று புலிகளை ஏகடியம் செய்தவர் யார்?
தமிழ் இனத்தின் ஒளி விளக்காம் பிரபாகரனைத் தன் மணிவயிற்றில் சுமந்த அன்னை பார்வதி அம்மையார், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறத் தமிழகம் வந்தபோது, தமிழ்நாட்டு மண்ணில் அவர் கால் எடுத்துவைக்கவும் அனுமதிக்காமல், வந்த விமானத்திலேயே, மேலும் நான்கு மணி நேரம் திரும்பிப் பயணிக்கின்றபோது, அந்தத் தாயின் உயிருக்கே ஆபத்து விளையக்கூடுமே என்ற அபாயத்தைப் பற்றியும் எள் அளவும் எண்ணிப் பார்க்காமல் விரட்டி அடித்த குற்றவாளி கலைஞர் கருணாநிதி.
உலகில் எங்கும் நடைபெற்று இராத இக்கொடுமையைக் கண்டித்து, இலங்கைத் தூதரகத்துக்கு முன்னால் போராட்டம் நடத்த முனைந்த என்னையும், அண்ணன் பழ.நெடுமாறன், விடுதலை இராசேந்திரன், ஆவடி மனோகரன், பாவலர் இராமச்சந்திரன், எம்.நடராசன் உள்ளிட்ட அனைவரையும், கைது செய்தது மட்டும் அல்ல, தனித்தனியாக நான்கு மத்தியச் சிறைகளுக்குப் பிரித்து அனுப்ப உத்தரவிட்டவரும் இந்தப் பெரிய மனிதர்தான்.
தமிழர் மனமெல்லாம் அணையாத சுடராக ஒளி வீசிக்கொண்டு இருக்கின்ற தியாக தீபங்களாம் முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர், ஈழத் தமிழரைக் காக்க, யுத்தத்தை நிறுத்த, இந்திய அரசின் துரோகத்தைத் தடுக்க, தீக்குளித்து மடிந்தபோது இவர் இரங்கல் தெரிவித்தது உண்டா? தனது மகன் பிறந்த நாளை, பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, பட்டுப் பீதாம்பரத்துடன் இவர் கொண்டாடிக்கொண்டு இருந்தபோது தியாகச்சுடர் முத்துக்குமாரின் உயிர் அற்ற சடலம், கொளத்தூரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் வீர வணக்கத்தை ஏற்றுக்கொண்டு இருந்தது. ஈழத் தமிழருக்காகப் பள்ளப்பட்டி ரவி தீக்குளித்தபோது, 'குடும்பச் சண்டையால் செத்தான்’ என்று கொச்சைப்படுத்தி அறிக்கை வெளியிட வைத்தவரும் இவர்தான். ஈழத் தமிழர்க்காகப் போராடிய வழக்கறிஞர்களுக்கு எதிராக லத்தியைத் தூக்கியதும் இவரே.
சென்னைக் கடற்கரையில், அண்ணா சதுக்கத்தில் சாக முடிவு எடுத்து உண்ணாவிரதம் இருந்தேன் என்று, எந்தக் கூச்சமும் இல்லாமல் இன்றைக்கு எழுதுகிறார்.
முதல் நாள் இரவு, வெளிநாடுகளில் இருந்து வந்த தொலைபேசிகளில், ஈழத் தமிழர்கள் பதற்றத்தோடு, விம்மலும், புலம்பலுமாக, ''நாளை மாலைக்குள் தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிரை முடித்துவிடுவார்கள் என்று செய்தி வருகிறதே? தமிழ்நாடு முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதியிடமும் இதுபற்றி நாங்கள் முறையிட்டு உள்ளோம்'' என்று என்னிடம் சொன்னார்கள். அப்படி ஒன்று நடந்தால், பழிக்கும் வெறுப்புக்கும் தானும் ஆளாக நேரும் என்று கருதித்தான் இவர் கடற்கரை உண்ணாவிரத நாடகத்தைப் போட்டார்.
ஆனால், தில்லி ஜன்பத் சாலை, 10-ம் எண் வீட்டில் இருந்து, மிரட்டல் தொனியில் எதிர்ப்பு முக்கிய நபர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டதால், உண்ணாவிரதத்தை மூன்று மணி நேரத்திலேயே முடித்துக்கொண்டு, மதிய உணவுக்கு வீட்டுக்குப் போய்விட்டார். இவரது சாகும் வரை உண்ணாவிரதம் அன்று சந்தி சிரித்தது.
'இனி பலத்த தாக்குதல் எதுவும் நடக்காது’ என்று கருணாநிதி சொன்னதால், அன்று மாலையில் பதுங்கு குழிகளில் இருந்து தமிழர்கள் வெளியே வந்தார்கள். அவர்கள் மீதும் ராஜபக்ஷே குண்டு வீசினான்.
அதுபற்றிக் கேட்டதற்கு, 'மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்று அலட்சியமாகச் சொன்னவர் கருணாநிதி.
தமிழகத்திலும், தரணியெங்கும் தமிழர்கள் வேதனையில் துடித்தபோது, 'இலங்கைத் தமிழர் பிரச்னையில், மத்திய அரசின் கொள்கைதான் என் கொள்கை’ என்று திட்டவட்டமாக அல்லவோ சொன்னார்? அப்படியானால், இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தில், நடத்தப்பட்ட இனப் படுகொலையிலும், தானும் கூட்டுக் குற்றவாளி என்பதுதானே இவரது ஒப்புதல் வாக்குமூலம். 'ராஜபக்சேவை விமர்சிப்பது, அவருக்கு ஆத்திரத்தை மூட்டிவிடும். அதனால், தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடும். எனவே, அவரைக் குறை சொல்லக் கூடாது’ என்று கீதோபதேசம் செய்தவர்.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்குப் பொருளாதாரத் தடை விரித்தபோது, அதை உடைப்பதற்காக டெல்லிக்கு வந்தார் ராஜபக்சே. அவருக்கு, இவர் முட்டுக்கொடுக்கும் மத்திய அரசுதான் கோலாகல வரவேற்புக் கொடுத்தது. அதை கருணாநிதி விமர்சித்தது உண்டா? திருப்பதி கோயிலில் கொலைகாரன் ராஜபக்சேவை வரவேற்றுப் பூரண கும்ப மரியாதை செய்ததை, இவர் விமர்சித்தது உண்டா?
2008-ம் ஆண்டில், ஈழத் தமிழ் இளைஞர்கள் எட்டுப் பேரை, அம்மணமாக்கி கண்களைக் கட்டி, கைகளைப் பின்புறமாகக் கட்டி, மிருகங்களான சிங்களச் சிப்பாய்கள் காலால் எட்டி மிதித்து, மண்டியிடச் செய்து, பிடறியில் சுட்டு, ரத்த வெள்ளத்தில் அவர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை, லண்டனின் சேனல் 4 தொலைக்காட்சி, ஆவணப் படமாகவே வெளியிட்டது. அதைக் கண்டு, அகிலமே அதிர்ச்சியுற்றது. ஆனால், இது போலிப் படம் என்று சொன்னார்கள் இருவர். ஒருவர், மகிந்த ராஜபக்சே. ''இது ஏதோ பழைய படம் போலத் தெரிகிறது'' என்று ஏளனமாகப் பரிகசித்தவர் கலைஞர் கருணாநிதி.
ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் பான் கி மூன், மார்சுகி தாருஸ்மன் தலைமையில் மூவர் குழுவை அமைத்தார். அந்த மூவர் குழு, இலங்கைத் தீவில், தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை, இதயத்தைப் பிளக்கும் வகையில் ஆதாரங்களோடு அறிக்கையாகத் தந்தார்களே. அந்த அறிக்கையைப் படிக்கும்போதே நெஞ்சம் நடுங்கும், கண்ணீர் கொட்டுமே. பக்கம் பக்கமாக எதற்கெல்லாமோ அறிக்கைகளும் மடல்களும் தீட்டுகின்ற கலைஞர் கருணாநிதி, இந்த மூவர் குழு அறிக்கையைப் பற்றி இதுவரை ஏதாவது எழுதியது உண்டா? கிடையாது.
ஈழத் தமிழ் இனத்தைக் கருஅறுக்க, சிங்களவனுக்கு இந்திய அரசு செய்த உதவிக்கு, முழுக்க முழுக்கத் துணையாக இருந்து, தமிழகம் கொந்தளித்து எழாமல் தடுக்கின்ற மாய்மால வேலைகள் செய்து, அவ்வப்போது நீலிக்கண்ணீர் அறிக்கைகளையும் வழங்கி ஏமாற்றியதைத் தவிர இவர், இதுவரை உருப்படியாக எதையும் செய்யவில்லை.
தந்தை செல்வா வெற்றி பெற்ற காங்கேசன் துறை இடைத்தேர்தல், 1975-ல் சுதந்திரத் தமிழ் ஈழத்துக்குக் கட்டியம் கூறிற்று. 1976 மே 16-ல், வட்டுக்கோட்டை பண்ணாகத்தில், தந்தை செல்வா தலைமையில், தமிழர் அமைப்புகள் கூடி, சுதந்திரத் தமிழ் ஈழப் பிரகடனம் செய்தன. ''இனி, இளந்தலைமுறை இதை முன்னெடுத்துச் செல்லட்டும்'' என்றார் தந்தை செல்வா. ஈவு இரக்கம் அற்ற கொலை வெறியுடன், தமிழ் இனத்தை அழிக்க முப்படைத் தாக்குதல் நடத்திய சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்து, பிரபாகரன், ஆயுதம் தாங்கிய போர் நடத்தினார். உலகம் இதுவரை கண்டும் கேட்டுமிராத வீர சாகசங்களை, யுத்தக் களத்தில் செய்து, வெற்றி மேல் வெற்றியும் குவித்தார்.
ஓர் அரசுக்கான அனைத்துத் துறைகளையும் அமைத்தார். தரைப் படை, கடற் படை, வான் படை நிறுவினார். மலரும் தமிழ் ஈழத்துக்கு இனி உலகம் ஒப்புதல் அளிக்க வேண்டிய சூழலில்தான், இந்தியா முழு ஆயுதப் பலத்தையும் தந்து, பல வல்லரசுகளின் ஆயுத உதவிகளையும் சிங்களவன் பெறுவதற்கு உடன்பட்டு, யுத்தக் களத்தில் விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவையும் சரிவையும் ஏற்படுத்தியது.
'இந்த யுத்தத்தை நடத்தியதும் இயக்கியதும் இந்திய அரசுதான்’ என்று, இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகச் சொன்னார் ராஜபக்சே. அவரது அமைச்சர்களும் சொன்னார்கள். இதைக் கருணாநிதியால் மறுக்க முடியுமா?
கடந்த ஆண்டு ஜூன் 1-ம் நாள், பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்சில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற அரங்கத்தில், ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்னை மாநாட்டில் நான் உரையாற்றியபோது, அந்த அமர்வில் அதிக நேரம் எனக்கு ஒதுக்கப்பட்டது. ஈழப்பிரச்னைக்கு ஒரே ஒரு தீர்வு. அதுதான், சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் என்றேன்.
தமிழர் தாயகமான, தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்து, சிங்கள ராணுவமும், போலீஸும் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும். சிங்களக் குடியேற்றங்கள் அடியோடு அகற்றப்பட வேண்டும். சிறையில் உள்ள தமிழர்களை விடுவிக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக சுதந்திரத் தமிழ் ஈழம் அமைக்க, தமிழர் தாயகத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதில் உலகத்தின் பல நாடுகளில் வாழுகின்ற ஈழத் தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே பொது வாக்கெடுப்பில் பங்கேற்க ஐ.நா.மன்றமும், அனைத்துலக நாடுகளும் தக்க வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். பொது வாக்கெடுப்பு என்பதையும், உலகம் முழுவதையும் பல நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் அதில் பங்கேற்க வழி செய்ய வேண்டும் என்பதையும், ஈழத் தமிழர் பிரச்னையில் நான் முதன்முதலாகப் பதிவு செய்தேன்.
இப்படி நான் முன்வைத்த கருத்தை, உலகெங்கும் உள்ள தமிழ் ஈழச் சொந்தங்கள், எல்லையற்ற மகிழ்ச்சியோடு வரவேற்று மனதாரப் பாராட்டியதோடு, ''இதுதான் நமது இலக்கு, இந்த இலக்கை நோக்கி முன்னெடுத்துச் செல்வோம்'' என்றனர். என் வாழ்நாளில், மன நிறைவாக ஆற்றிய கடமைகளுள் இதுவும் ஒன்று என எண்ணி, அந்த இரவில் நான் நிம்மதியுற்றேன். ஆனால், திடீரென்று கலைஞர் கருணாநிதி, பொதுவாக்கெடுப்பு, சுதந்திரத் தமிழ் ஈழம் என்கிறார். இவரது மாய்மாலத்தை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்.
தமிழர்கள் சிந்திய செங்குருதியும், தரப்பட்ட உயிர்ப் பலிகளும், தமிழ் இனத்துக்கு எவரெல்லாம் துரோகம் இழைத்தார்களோ, அவர்களுக்குச் சவுக்கடி கொடுத்துக் கொண்டே இருக்கும். தமிழர்களின் மறதியை முதலீடாக நினைத்து கருணாநிதி தனது புதிய அறுவடையைத் தொடங்குகிறார். அதை முளையிலேயே முறிக்க வேண்டும்!
கொடுந்துயரில் தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு உரிமை வாழ்வு கிடைக்க... சுதந்திரத் தமிழ் ஈழம் மலரட்டும்!
Sunday
ஜெயலலிதாவின் அராஜகம் எல்லை மீறுகிறது .
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
சர்வாதிகாரம்,
தமிழகம்,
தமிழ் ஈழம்,
மாவீரர் நாள்
எழுதிய நேரம்
Sunday, November 27, 2011
இன்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தி.நகரில் நடக்க இருந்த மாவீரர் நாள் பொதுக் கூட்டம் அதிமுக அரசின் அராஜகத்தால் நிறுத்தப் பட்டுள்ளது. காவல் துறை அனுமதியோடு நடக்கவிருந்த பொதுக்கூட்டத்தை ஆதிமுக அரசு தடை செய்திருக்கிறது. இந்த மாவீரர் நிகழ்வில் வைகோ சிறப்புரை வழங்க இருந்தார்.
இந்நிலையில் மதியம் முதலே கூட்ட ஏற்பாடுகளை செய்து வந்த மதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோரை கைது செய்திருக்கிறது காவல் துறை. மக்களாட்சியில் அவரவர் கருத்தை சொல்ல உரிமை இருக்கும் போது ஜனநாயக ரீதியாக பொதுக் கூட்டம் நடத்த ஜெயலலிதா தலைமையிலான அரசு அனுமதிக்கவில்லை என்றால் இதை விட காட்டு மிராண்டி தனம் வேறு என்ன இருக்க முடியும்.
பூனை கண்ணை மூடி கொண்டு பால் குடிக்குமாம் அப்படி குடிக்கும் பூனை நினைக்கும் நம்மை யாரும் பார்க்க வில்லை என்று. அப்படி தான் இருக்கிறது அதிமுக அரசின் நடவடிக்கைகள் மாவீரர் நிகழ்வை நடத்த விடாமல் இருந்தால் மாவீரர்களை யாரும் நினைவு கூற மாட்டார்கள் என்று ஒரு வேளை ஜெயா நினைக்கலாம்.
ஆண்டுதோறும் உலக தமிழர்களின் ஒப்பற்ற தினமான நவம்பர் 27 யார் தடுத்தாலும் தமிழ் ஈழ விடுதலைக்காக உயிரை கொடுத்த எங்கள் உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் மாவீரர்களை நினைக்காமல் இருக்க முடியாது.
ஒவ்வெரு முறை ஆட்சிக்கு மாறி மாறி வரும் கட்சிகளால் தமிழினத்திற்கு எதிராக தான் செயல் படுகிறார்கள். கடந்த முறை தமிழ் ஈழத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தியா துணையோடு கொலை செய்ய பட்ட பொது தமிழின தலைவர் என்று சொல்லும் கருணாநிதியால் கொலைக்கு துணை போக தான் முடிந்தது. தமிழ் உணர்வாளர்களை சிறையில் அடிப்பதை கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி செய்து வருகின்றனர்.
தமிழகத்தை கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி ஆட்சி அமைப்பது தான் தமிழகத்திற்கு சாபக்கேடு. தமிழர்களின் உரிமைக்கு பேச முடியவில்லை . ஜெயலலிதா இதையெல்லாம் ஜெயித்து வந்தால் செய்வார் என்பது வைகோவை எப்போது கூட்டணியிலிருந்து நீக்கினாரோ அப்போதே தெரிந்து விட்டது தான். அன்றிலிருந்தே இதே ஜெயா திருந்த வில்லை என்பதை சொல்லியிருக்கிறோம். ஆனால் என்ன செய்வது கருணாநிதி என்னும் விச பாம்பை விரட்ட இன்னொரு விச பாம்பிற்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் பாம்பின் விஷம் இப்போது வெளியேறுகிறது.
மாற்றம் ஓன்று உருவாக வேண்டும் கருணாநிதி ஜெயலலிதாவுக்கு எதிராக ஓட்டு மொத்த தமிழ் உணர்வாளர்கள் ஒரே கொள்கை கொண்ட கட்சியினர் ஓன்று பட்டு நிற்க வேண்டும். மாற்று அணிக்கான தலைமை நேர்மையாகவும் கொள்கை உறுதி கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
தமிழருவி மணியன் சொன்னதை போல் மாற்று அரசியலுக்கான துவக்கம் இன்றே துவங்கட்டும். இந்த மாவீரர் நாளில் தமிழின விடுதலைக்காக உயிரை விட்ட மாவீரர்களுக்கு நாம் செய்யும் கடமையாக மாற்று அரசியல் துவங்கட்டும்.
ஓன்று பட்டு ஜெயாவின் அராஜக ஆட்சியை எதிர்ப்போம்.......
தமிழ் விடுதலைக்கு தங்கள் உயிரை கொடுத்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !
Saturday
நீங்கள் தான் தமிழீழத்தின் இந்திய அம்பாசிடர்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாடாளுமன்றக் கட்டடத்துக்குள், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காகவே வந்தார் வைகோ .
நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் வந்த வைகோவைப் பார்த்த மத்திய அமைச்சர் சரத் பவார், 'எப்ப நீங்க உள்ளே வரப்போறீங்க?' என்று அரவணைத்தார். இதே மாதிரி , மத்திய அமைச்சர்கள் பலரும் தங்கள் பாசத்தைத் தெரிவிக்க ... பூரித்த மனோநிலையில் பிரதமரது அலுவலகத்துக்குள் நுழைந்தார் வைகோ!
"நான் உங்களைக் குற்றம்சாட்டிக் கடிதங்கள் கொடுப்பதற்காகவே உங்களை சந்திக்கிறேன். நீங்களும் நான் நேரம் கேட்டதும், உடனடியாக நேரம் ஒதுக்குகிறீர்கள். அதற்காக எனது நன்றிகள்!" என்று வைகோ சொல்ல ... "உங்கள் உயர்ந்த கொள்கைக்காகவே நீங்கள் என்னை சந்திக்கிறீர்கள். அதை நான் மதிப்பதால், உங்களை சந்திக்கிறேன்! என்று பதில் சொன்னாராம் பிரதமர்.
மூன்று கோரிக்கை மனுக்களை பிரதமரிடம் வைகோ கொடுத்தார். "முல்லை பெரியாறு அணையை உடைத்துவிட்டு புதிய அணை ஒன்றைக் கட்ட கேரள அரசு முயற்சித்து வருவது, தமிழக மக்களுக்கு எதிரானது. தமிழர்களுக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே, அந்த அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரள அரசு பொய் சொல்கிறது!" என்று வைகோ சொன்ன போது, அந்த அணை கட்டி ௧௦௦ ஆண்டுகள் ஆகி விட்டதே. அது பலவீனம் அடைந்து இருக்காதா?" என்று பிரதமர் கேட்டாராம்.
"௧௦௦௦ ஆண்டுகள் ஆனாலும் அந்த அணை வலுவாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு அணையை வலுப்படுத்துவதற்கான பணிகளை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தமிழகம் செய்து வருகிறது. மத்திய அரசின் நீர் வள ஆணையம் நியமித்த வல்லுநர் குழுவும், முல்லை பெரியாறு அணை வலுவாக இருப்பதாகவே சொல்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வலு இழக்கச் செய்வதற்காகவே கேரள அரசு ஒரு சட்டத்தை இயற்றி உள்ளது. சட்டத் திருத்தவும் கொண்டுவந்து உங்களுக்கு அனுப்பி உள்ளது. இப்படி ஒவ்வெரு மாநிலமும், 'அணைகள் எல்லாம் தங்களுக்குத்தான் சொந்தம்' என்று சொன்னால் என்ன ஆகும்? எங்கள் மாநில முதலமைச்சர் உங்களுக்கு இதுபற்றி விரிவாக ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறாரே.." என்று ஜெயலலிதாவின் கடிதத்தையும் வைகோ ஞாபகபடுத்தினாராம். "இவை அனைத்துமே எனக்கு தெரியும். நான் இதில் கவனம் செலுத்துகிறேன்!" என்றாராம் பிரதமர்.
இரண்டாவதாக வைகோ சொன்ன பிரச்சனை, ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளனைப் பற்றியது. "கொலை சதியைப்பற்றி பேரறிவாளனுக்கு எதுவுமே தெரியாது. அவர் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிரிஷ்னையரே சொல்லி இருக்கிறார். பேரறிவாளனைக் கடுமையாக துன்பபடுத்தித் தான் வாக்குமூலம் வாங்கி இருக்கிறார்கள். இளம் வயதில் கைதான அவர், ௨௦ ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார். அவரது வாழ்க்கையே அழிந்துவிட்டது. ஏற்கனவே நளினிக்கு மரண தண்டனையை ரத்து செய்துவிட்டீர்கள். அதுபோல, பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும்." என்று வைகோ சொன்னது அனைத்தையும் உற்றுக் கவனித்த பிரதமர், "உங்கள் கோரிக்கையை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கிறேன்!" என்றாராம் " நானே இதுபற்றி அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சந்திக்க இருக்கிறேன்.." என்று சொல்லி விட்டு மூன்றாவதாக ஈழப் பிரச்சினைபற்றி பேசி இருக்கிறார்.
"தொடர்ந்து உங்களுக்கு நான் எழுதிய கடிதங்கள் அனைத்திலும் 'இலங்கைப் படுகொலைக்கு பொறுப்பாளியாகி பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்படும்' என்று சொல்லி இருந்தேன். ஆனால், அதைத்தான் இந்தியா தொடர்ந்து செய்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, ஜெனீவா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கையை ஆதரித்து கியூபா கொண்டு வந்த தீர்மானத்தை, இந்தியா ஆதரித்துள்ளது. உலகமே இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று சொல்லும் சூழலில் இந்தியா மட்டும் இப்படி நடப்பது சரியா? இந்தியா இனியாவது இலங்கைக்குத் தரும் உதவிகளை நிறுத்தி, தனது கறையை கழுவ வேண்டும். அனைத்துப் பொருளாதார, நிதி உடன்படிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும்..." என்று வைகோ சொன்னபோது, "இலங்கைக்கு நாம் உதவி செய்யவில்லை என்றால், சீனா இலங்கைக்குள் வந்துவிடும்!" என்றாராம் பிரதமர். "சீனா வந்துவிட்டது இலங்கைக் கடற்படை படகுளில் வந்து தமிழக மீனவர்களைத் தாக்குவது சீனக் கப்பற்படை வீரர்கள் தான். இந்தியா எத்தகைய உதவிகளைச் செய்தாலும் இலங்கை நாடு, சீனாவுக்குத்தான் நண்பனாக இருக்கும். சீனாவையும் பாகிஸ்தானையும்தான் நட்பு நாடாக அவர்கள் நினைப்பார்கள். நம்மை சேர்க்க மாட்டார்கள்!" என்று வைகோ சொன்ன போது சீரியஸாகக் கேட்டார் பிரதமர். இந்த சந்திப்புக்குப் பிறகு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேரறிவாளன் விடுதலை குறித்து வைகோ பேசினாராம்.
ஈழத்தமிழர் படுகொலை குறித்து, தமிழில் தான் வெளியுட்டுள்ள சி.டி-களின் ஆங்கிலப் பிரதியை டெல்லி பத்திரிக்கையாளர்களுக்குப் பிரத்தியோகமாகப் போட்டுக் காண்பித்தார் வைகோ. அந்த உருக்கமான சி.டி-யை பார்த்த பல பத்திரிக்கையாளர்கள், "கொழும்புவில் இவ்வளவு கொடுமைகள் நடந்துள்ளது எங்களுக்கே தெரியாது!" என்று பகிரங்கமாகப் பேசிக்கொண்டனர். வைகோவை சந்தித்த டெல்லி வாழ் தமிழ் மாணவர்கள், "நீங்கள் தான் தமிழீழத்தின் இந்திய அம்பாசிடர்! என்று சொன்னதை நெகிழ்வுடன் கேட்டார் வைகோ!
-சரோஜ் கண்பத்
இந்த வார ஜூனியர் விகடனில் வெளிவந்தது. நன்றி ஜூனியர் விகடன்.
Wednesday
இலங்கை உள்ளாட்சி தேர்தலும் தமிழக மார்க்சிஸ்ட் கட்சியும்
எழுதியது
Suresh Kumar
Labels:
இலங்கை,
தமிழகம்,
தமிழ் ஈழம்,
மார்க்சிஸ்ட்
எழுதிய நேரம்
Wednesday, July 27, 2011
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழ் ஈழ மக்கள் சிங்கள இனவெறியன் ராஜ பக்ஷேவுக்கும் , தமிழின துரோகிகள் டக்லஸ் , கருணா போன்றவர்களுக்கும் , சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்த வரையில் அந்த செய்தி தமிழக மார்க்சிஸ்ட்களுக்கும் தமிழ் ஈழ மக்களால் சொல்ல பட்ட செய்தி.
பொதுவுடைமை கட்சி என்று தங்களை அடையாளம் காட்டி கொள்வதும் , புரட்சி மூலம் தான் நல்லாட்சி கொடுக்க முடியும் போராட்டத்தின் மூலமாக தான் உரிமைகளை பெற முடியும் என்று சொல்லும் மார்க்சிஸ்ட் தோழர்கள் ஏனோ தெரியவில்லை தமிழ் ஈழ மக்கள் விசயத்தில் நேர் எதிராக இருக்கிறார்கள்.
சிறுபான்மையினருக்கு ஆதரவாக போராட வேண்டும் என்று இங்கே சொல்லும் மார்க்சிஸ்ட்கள் இலங்கையில் மட்டும் பெரும்பான்மையினரோடு ஒத்து போங்கள் என்று சொல்லுகிறார்கள். கியூபா, ரசியா , சைனா போன்ற நாடுகளில் ஏற்பட்ட ஆயுத புரட்சியை ஆதரிப்பார்கள். அதே போல் பாலஸ்தீனத்தில் நடைபெறுகிற ஆயுத புரட்சியை ஆதரித்து இங்கே போராட்டம் செய்வார்கள். ஆனால் தொப்பிள் கோடி உறவு கொண்ட தமிழ் ஈழ மக்கள் போராடினால் மட்டும் கொச்சை படுத்துவார்கள்.
மிக தீவிரமாக ஈழ போர் நடைபெற்ற நேரத்தில் போரை நிறுத்த வேண்டும் என்று தமிழகத்தில் குரல் ஓங்கி ஒலித்த பொது மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் சொல்வார் மக்கள் வேறு புலிகள் வேறு என்று . நாம் கேட்டதோ போரை நிறுத்த வேண்டும் என்று அதை தானே அவர்களும் வலியுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தார்கள். துருக்கியில் இருவர் கொல்ல பட்டால் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தும் இவர்கள் தமிழ் ஈழத்தில் ஒரு லட்சத்தி நாற்பதாயிரம் மக்கள் கொல்ல பட்ட போது பெயருக்காவது போராட்டம் நடத்தினார்களா ?
ஐக்கிய நாடுகள் மூவர் குழு அறிக்கை வந்தவுடன் தீர்மானம் நிறைவேற்றினார்கள். இலங்கையில் நடைபெற்ற ஆயுத மோதலில் போர்குற்றம் விளைவைத்தவர்களை குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டும் என்பதாக. அவர்களின் தீர்மானத்தில் இனபடுகொலை என்றோ சுதந்திரத்திற்காக ஆயுதமேந்தி போராடுபவர்கள் என்றோ குறிப்பிடவில்லை. அதே விட ஓன்று பட்ட இலங்கை என்று ராஜ பக்ஷே போட வேண்டிய தீர்மானத்தை இவர்கள் போட்டார்கள்.
ஓன்று பட்ட இலங்கையா இல்லையா என்பதை அங்கு வாழும் தமிழ் மக்கள் முடிவு செய்வார்கள் அதை முடிவு செய்ய இவர்கள் யார் ? இது தான் நமது கேள்வி .....
தமிழக சட்டமன்றத்தில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் போசும் போது கூட அங்கு வாழும் தமிழ் மக்கள் பாதிக்க படுவார்கள் என்று பேசிய மார்க்சிஸ்ட் கட்சிக்கு தமிழ் ஈழ மக்கள் சாட்டையடி கொடுத்திருக்கிறார்கள். மாக்சிஸ்ட் கட்சியினரோ தமிழர்கள் சிங்களர்களோடு கையேந்தி வாழ வேண்டும் என்று சொல்லுகிறார்கள் . வர்க்க போராட்டம் கூட ஒரு உரிமைக்கான போராட்டம் தான் அந்த போராட்டங்களை நடத்தும் மார்க்சிஸ்ட்களுக்கு ஏனோ தமிழர்களின் உரிமை போராட்டம் கசக்கிறது.
நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தமிழர்களின் உரிமை முக்கியமா இல்லை தமிழர்களின் பொறாதார முன்னேற்றம் முக்கியமா என்ற நிலையில் தான் தேர்தல் நடைபெற்றது. விடுதலை புலிகளால் ஒன்றிணைக்க பட்ட பல்வேறு கட்சிகளை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் உரிமைக்கான குரலாகவும், மகிந்தா அணியோ தமிழின துரோகிகளின் ஆதரவோடு பல ஆசைகளை காட்டி தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து போட்டியிட்டது. ஆனால் தமிழ் மக்களோ தங்களுக்கு உரிமை சுதந்திரம் தான் முக்கியம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றி பெற செய்துள்ளனர்.
இந்த தேர்தல் முடிவில் நாம் ஒன்றை முக்கியமாக பார்க்க வேண்டும் . சிங்களர்கள் பகுதியில் மகிந்தா ராஜ பக்ஷேவின் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது ஏன் ? சிங்களர்கள் தமிழர்கள் அடிமையாவதை விரும்புகிறார்கள் அடிமை படுத்த வேண்டும் என்று துடிக்கிறார்கள். ........ இது ஒன்றே போதும் தமிழர்களும் சிங்களர்களும் சேர்ந்து வாழ முடியாது என்று.
கடைசியாக ஓன்று பட்ட இலங்கை என்று சொல்லும் அனைவருக்கும் ஒன்றை சொல்லி கொள்கிறேன் தமிழ் ஈழ மக்களுக்கு தேவை சுதந்திரம். அது கிடைத்தால் அவர்களின் அடிப்படை தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்து விடுவார்கள். இனியாவது மார்சிஸ்ட்கள் திருந்துவார்களா?
புலிகள் வேறு மக்கள் வேறு அல்ல தமிழர்கள் அனைவரும் புலிகள் தான் , எங்களுக்கு தேவை சுதந்திரம் என்று உலகிற்கு காட்டிய தமிழ் ஈழ மக்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ......
Thursday
தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல...
எழுதியது
Suresh Kumar
Labels:
இனபடுகொலை,
தமிழ் ஈழம்,
போர் குற்றம்
எழுதிய நேரம்
Thursday, April 28, 2011
இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது.
இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறது.
நம் ஒற்றுமையைக் காட்டும் விதமாக மே முதல் தேதி ஐ.நா. அறிக்கைக்கு எதிரான விளக்கம் தருவதாக மே தின ஊர்வலம் அமையட்டும் என்று அறைகூவல் விடுகிறார் அதிபர் ராஜபட்ச. இந்த அளவுக்கு இலங்கை எனும் சிறிய நாட்டுக்குத் தைரியம் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தியா தரும் துணிவும், ஆதரவும்தான் என்றால் மிகையில்லை. துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்கிறது நீதிநூல். ராஜபட்சவின் வழித்துணை இந்தியா.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்ப்பதும், சர்வதேச நிதியத்தில் நிதிபெற்றுத் தருவதும் என எப்போதும் அன்பு காட்டி ஆதரவு தந்துகொண்டிருப்பது இந்தியாதான்.
இலங்கை நடத்திய தாக்குதல், போர்ப்பயிற்சி, ஆயுத சப்ளை, கண்ணிவெடி அகற்றம் என எல்லாவற்றிலும் இந்திய அரசின் நேரடியான - மறைமுகமான உதவிகள் இருந்துள்ளது என்கிற குற்றச்சாட்டுகள் மறுக்கப்படவே இல்லை.
இந்த ஆதரவு தரும் மனவலிமையால், இப்போதும் எங்களை ஐ.நா. ஒரு போர்க் குற்றவாளியாகச் சித்திரிக்குமானால், இந்தியா தடுத்துக் காப்பாற்றும் என்று வெளிப்படையாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்றால், இந்தியா குறித்து அவர்களது மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்பது வெளிப்படை.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இடம்பெற்றிருக்கிறது. உறுப்பு நாடுகள் கேட்டுக்கொண்டால்தான், இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல் மற்றும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்கிறார் ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ மூன். இந்தியாவோ மெüனம் காக்கிறது. இந்திய அரசின் சார்பில் ஐ.நா. குழுவின் அறிக்கை பற்றி அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிறார். தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என்று காங்கிரஸ் தவிர, ஏனைய கட்சிகள் அனைத்துமே ஐ.நா. குழுவின் அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பி இருக்கின்றன.
ஆனால், மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூடியது. விவாதித்தது. தமிழினத்தின்மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை எதிர்த்துச் சிலிர்த்தெழ வேண்டிய இயக்கம், தயக்கத்துடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது.
""(ஐ.நா. குழு) விசாரணை இன்னும் அதிகாரப்பூர்வமாக, முழுமையாக வெளியிடப்படவில்லை. நமது இந்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரமும் வரவில்லை'' என்று அதற்குக் காரணம் கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.
இலங்கைத் தமிழருக்காக இவர் நடத்திய 2 மணி நேர உண்ணாவிரதத்தை ஜெயலலிதா கபடநாடகம் என்று சொன்னதைத் தமிழருக்கு நினைவூட்டத் தவறாத முதல்வர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ""இப்போதாகிலும் செயல்படுங்கள்'' என்று நினைவூட்டினாரா என்றால் இல்லை. பிரதமரிடமும் சோனியாவிடம் நினைவூட்டுவதற்குத் தமிழினத்தைப் பாதிக்கும், தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. குழு விசாரணையைவிடத் தனது குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருவதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.
இந்திய அரசும், தன்னைத் தமிழினத் தலைவர் என்று அழைத்துப் பெருமை தட்டிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதி கூறுவதைப்போல, இன்னும் அறிக்கை முழுமையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்று சொல்லக்கூடும். அதைவிட ஒருபடி மேலேபோய், போர்க் குற்றங்களில் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டனர், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, நடுநிலை வகிப்பதற்குக் காரணம் தேடக்கூடும்.
இந்த வாதங்களை இந்திய அரசு முன்வைக்கும்போது அதை மறுக்கவோ எதிர்க்கவோ துணிவில்லாத கூட்டணிக் கட்சியாக, தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும், தமிழர்களும் இந்தியர்கள்தான் என்றும் தமிழர் நலனைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியும் என்றும் மத்திய அரசுக்கு உணர்த்தும் கட்சியாக இன்றைய தி.மு.க. தலைமை இல்லை என்பதுதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு.
தமிழர் குரல் தில்லியில் ஒலியிழந்து போனதற்குக் காரணம் தமிழினத்துக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் தங்கள் சுயநலத்துக்காகக் கைகட்டி, வாய்பொத்தி, தலைகுனிந்து நிற்பதால்தானே? இலங்கை அதிபர் ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று களத்தில் இறங்கிப் போராட வேண்டிய நேரத்தில், இவர்கள் சம்பந்தப்பட்ட வேறு விசாரணை நடந்து கொண்டிருக்கிறதே, இவர்கள் அதைப்பற்றித்தானே கவலைப்படுவார்கள்.
இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது?
தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல...
நன்றி :தினமணி
Tuesday
வரலாற்றை மாற்றி பதிவு செய்யும் தமிழ் லீடர்
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
கருணாநிதி,
தமிழ் ஈழம்,
வைகோ
எழுதிய நேரம்
Tuesday, March 29, 2011
தமிழ் லீடர் என்ற இணையத்தில் ஒரு கவர்ச்சிகரமாக பெயரிட பட்ட ஒரு கட்டுரையை பார்த்தேன். அந்த தலைப்பிற்கும் கட்டுரைக்கும் எந்தவொரு ஒற்றுமையும் இல்லாமல் எழுத பட்டிருக்கிறது. கட்டுரையின் தலைப்பு "ஈழம் அழிந்து போனதுக்கு வைகோ காரணம்!" ஆனால் கட்டுரை வைகோவின் வாழ்க்கை வரலாறாக வருகிறது.
ஏதோ கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத பட்ட கட்டுரையாகவும் இருக்கலாம் . அல்லது தமிழ் உணர்வாளர்களிடையே குழப்பங்களை உருவாக்கும் நோக்கத்திலும் இப்படி தலைப்பு வைத்திருக்கலாம் . பொதுவாக இல்லத்திற்கு எதிரானவர்கள் முதலில் கை வைப்பது யார் ஈழம் விடுதலை புலிகள் இந்த கொள்கைகளில் உறுதியாக இருக்கிறார்களோ அவர்களுக்கு கேட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் . அதன் மூலம் அவர்களை செல்வாக்கற்றவர்களாக மாற்ற வேண்டும் . அந்த நோக்கத்தில் கூட சில இணையங்கள் கட்டுரைகள் எழுதுகின்றன.
அதில் தெரிவிக்க பட்டுள்ள சில பகுதிகள் "1989ம் ஆண்டு வரை வைகோவுக்கு எல்லாமே ஏறுமுகம்தான். ஆனால், யாருக்கும் தெரியாமல், ஏன் கலைஞருக்கே தெரியாமல் தமிழ் ஈழத்துக்கு ரகசியமாக பாஸ்போர்ட் இல்லாமல், கள்ளத்தோணி மூலம் சென்றார். 23 நாட்கள் அவர் அங்கே தங்கி இருந்தார். அவர் சென்ற பிறகே, கலைஞருக்கு தகவல் கிடைக்கச் செய்தார். அதுதான் கலைஞருக்கு வைகோ மீது ஏற்பட்ட முதல் கசப்பு. வைகோ ஈழத்திலிருந்து வெளியே வரும் வரை கலைஞரும், வைகோ பயணத்தை வெளியிடாமல் இருந்தார்."
இவ்வாறு கட்டுரையாளர் தெரிவித்துள்ளார் . இதில் பல உண்மைகள் மறைக்க பட்டுள்ளது. வைகோ கலைஞருக்கு தெரியாமல் கள்ள தோணி மூலம் ஈழம் சென்றது உண்மை தான் . வைகோ செல்லும் முன்னர் தன்னுடைய நண்பரிடம் ஈழம் செல்லும் பயணம் குறித்த பல பக்கங்கள் அடங்கிய கடிதத்தை கொடுத்து கலைஞரிடம் நான் போன பின்னர் கொடுத்து விடுங்கள் என்று தெரிவித்து விட்டு சென்றார் . அதை அந்த நண்பரும் கொடுத்தார் .
கலைஞர் வைகோ வரும் வரை பயணத்தை வெளியிடாமல் இருந்தார் என குறிப்பிட பட்டுள்ளது தவறான தகவல். வைகோ கடிதத்தில் நான் ஈழம் செல்கிறேன் , அங்கு செல்வதால் என் உயிருக்கு ஏதாவது நிகழ்ந்து கட்சிக்கு என்னால் கெட்ட பெயர் உருவாகிற சூழ்நிலை வந்தால் இந்த கடிதத்தை வெளியிடுங்கள் . அப்போது கட்சிக்கும் என்னுடைய பயணத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது நாட்டிற்கு தெரியும் இவ்வாறு வைகோ கடிதத்தில் எழுதியிருந்தார் . ஆனால் வைகோ திரும்பி வரும் முன்னால் கடிதம் கலைஞர் கையில் கிடைத்தவுடன் வெளியிட்டு கட்சிக்கும் வைகோ சென்றதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிவித்து கொண்டவர் தான் .
அவரை நீக்க வேண்டும் என்று குரல்களும் எழுந்தன. இந்த நிலையில், எல்லா பிரச்னைக்கும் மன்னிப்பு கேட்கிறேன் என்று கருணாநிதியிடம் விழுந்தார் வைகோ.
இந்த பகுதியிலும் வரலாறு திரிக்க பட்டுள்ளது . திமுக தலைவர் கருணாநிதியால் வைகோவை கட்சியிலிருந்து மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வர பட்டத்து . ஆனால் பொதுக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களால் அந்த தீர்மானம் தோற்கடிக்க பட்டது இது தான் உண்மை . பின்னர் வைராக்கியத்தோடு போலியாக ஒரு உளவு துறை தகவலை காட்டி செயற்குழு மூலமாக வைகோவை கட்சியை விட்டு நீக்கினார் கலைஞர் . அந்த தருணம் என்பது வைகோவை கட்சியை விட்டு நீக்கியது மட்டுமல்ல . கருணாநிதியை விடுதலை புலிகள் மூலமாக வைகோ கொலை செய்ய பார்கிறார் என்ற பொய்யால் விடுதலை புலிகள் மீதான தடையை உறுதி படுத்தும் விதமாக கருணாநிதி செயல் பட்டார் என்பது தான் உண்மை .
இந்த கட்டுரை எதற்காக எழுத பட்டுள்ளது என்பதன் நோக்கம் கடைசியில் நமக்கு சரியாக தெரிய வருகிறது . தமிழின துரோகியாக வலம் வந்து கொண்டிருக்கும் கருணாநிதிக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்க முடியுமா என நினைப்பது தெரிகிறது ..... அந்த வரிகள் .......
காங்கிரஸின் காலில் விழுந்து கருணாநிதி, “நீங்கள் கவலையேபடாதீர்கள். தமிழர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சோனியாவுக்கு கருணாநிதி தைரியம் சொல்லும் அளவுக்கு கருணாநிதி மாறியது ஏன்?
"ஒரே ஒரு காரணம்.
தி.மு.க. மைனாரிட்டி அரசாக தமிழ்நாட்டில் ஆண்டுக் கொண்டிருப்பதுதான்.
ஒருவேளை, தி.மு.க. மெஜாரிட்டியாக இருந்தால், ஆளும் மத்திய காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறி இருப்பார். இல்லையென்றால், கூட்டணியில் இருந்து கொண்டே மிரட்டிக்கூட இருப்பார்."
திமுக மைனாரிட்டி அரசாக இருந்த காரணத்தால் தான் காங்கிரஸ் கட்சியை கருணாநிதியால் மிரட்ட முடியவில்லையாம் . இதை சின்ன பிள்ளைகளிடம் கேட்டால் கூட சொல்லுமே 1 ,76 ,௦௦௦௦ கோடி பணத்திற்காக ஒரு இனத்தையே கருவறுத்தார் கருணாநிதி என்று . இதே திமுக மைனாரிட்டியாக இருந்த போது தான் மத்தியில் காங்கிரஸ் கட்சியும் மைனாரிட்டியாக இருந்தது . அந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினமா செய்வார்கள் என்று தீர்மானம் போட்டது என்ன வாயிற்று . அந்த தீர்மானம் போட்டவுடன் எல்லோருமே கருணாநிதியை புகழ்ந்தோமே (இப்போ திருமாவளவன் , வீரமணி நம்பி புகழ்ந்த மாதிரி ) ஆனால் எட்டு கோடி மக்களுக்கும் அல்வா தந்தாரே .
அன்று மட்டும் கலைஞர் பதவியை விட தமிழ் இனம் முக்கியம் என்று நினைத்திருந்தால் தமிழ் இனம் கலைஞர் வாழும் வரை கலைஞரை மெஜாரிட்டி அரசாக வைத்திருக்குமே . ஏன் செய்யவில்லை? முடிந்தும் செய்யாமல் ஏன் விட்டார் . பதவிக்காகவும் ஸ்பெக்ட்ரம் பணத்திற்காகவும் தமிழ் இனத்தை அளிக்க துணை போன கருணாநிதியை நீங்கள் எத்தனை வடிவில் திரித்து எழுதினாலும் இந்த வரலாறு மாறாது .
Sunday
தமிழச்சிக்கு சீமான் மேல என்ன கடுப்போ ?
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
சீமான்,
தமிழகம்,
தமிழச்சி,
தமிழ் ஈழம்
எழுதிய நேரம்
Sunday, January 16, 2011
இணையதளத்தில் பெரியாரின் கருத்துக்களை பரப்புரை செய்வதில் முன்னணியில் இருப்பவர் தான் தமிழச்சி. முகநூலில் பெரியாரின் கருத்துக்களை பார்க்க வேண்டும் என்றால் தமிழச்சியின் பக்கம் சென்றால் போதும் . தமிழச்சியின் பக்கத்திலிருந்து பெரியாரின் சில கருத்துக்களை நானும் தெரிந்து கொண்டவன் என்ற முறையில் தமிழச்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் . பெரியாரின் கருத்துக்களை மேலும் மேலும் பரப்பி இளைய சமுதாயமும் இனி வரும் தலைமுறைக்கும் பயன் படும் வகையில் நீங்கள் மேலும் மேலும் சமூக சேவைகள் செய்ய வேண்டும் என் மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன்.
சில நாட்களாக தமிழச்சியை கவனித்து வருகிறேன் அவரின் கருத்துக்கள் அருவெறுக்க தக்கதாக இருக்கிறது . ஒரு பெண் இந்த ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் துணிச்சலாக தன் கருத்துக்களை எடுத்து வைக்கிறார் என்று சில நேரங்களில் தமிழச்சியை நினைத்து பெருமை பட்டிருக்கிறேன் . ஆனால் பெரியாரில் கருத்துக்கள் மட்டும் இல்லைஎன்றால் நீங்கள் சீரோ என்பது மட்டும் தெரிகிறது. ஏன் தமிழச்சிக்கு சீமானின் மீது இவ்வளவு கடுப்பு என்பது தான் எனக்கு புரியவில்லை . சினிமா காரர் தான் சீமான் ஆனால் அந்த சினிமாகாரர்களில் துணிந்து தன் கருத்தை சொல்லி சிறைக்கு சென்றவர்கள் வேறு யாரும் இல்லை . சீமானிடம் தமிழ் தேசியம் என்ற கொள்கை இருக்கிறது அதே நேரம் தமிழச்சியிடம் என்ன கொள்கை இருக்கிறது .
சீமான் இருந்தால் தப்பு நின்னால் தப்பு அப்படியே சொல்லி சொல்லி அத கேக்குற எங்களுக்கும் ஒரு சலிப்பு வருது . சும்மா இருக்க சங்க ஊதி பெருசாக்குவது போல சீமானை பெரிய தலைவராக வேண்டும் என ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா ? இல்லை சீமானை திட்டியே நிறைய எதிர் கமெண்ட் வாங்கி நீங்க பிரபலம் ஆகணும்னு நினைக்கிறீங்களா? எதுவுமே புரியல இல்லை உங்களுக்கும் சீமானுக்கும் ஏதாவது தனிப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறதா?
இதெல்லாம் ஏன் கேக்குறேனா? நீங்கள் ஒரு ஈழத்து பெண் வெளிநாட்டில் இப்போது இருக்கிறீர்கள் சீமான் முதல் மற்ற தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஈழ தமிழர்களுக்காக தான் பேசுகிறார்கள் அவர்கள் எடுக்கும் முடிவுகளும் ஈழ தமிழர்கள் நலனோடு சேர்ந்த முடிவாக தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது எதன் அடிப்படையில் விமர்சிக்கிறீர்கள். இலங்கையிலும் அரசியல் நடக்கிறது இதுவரை இலங்கை அரசியலை விமர்சிப்பதை விட அதிகமாக தமிழக அரசியலை விமர்சிக்கிறீர்கள் . அதில் ஒன்றும் தப்பு இல்லை யார் யாரோ விமர்சிக்க வேண்டிய அளவிற்கு தமிழக அரசியல் மாறி விட்டது அது வேறு கதை . தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்கள் அல்லாத பல தலைவர்கள் இருக்கிராக்றல் அவர்களுக்கு எதிராக உங்கள் கருத்துக்கள் பலமாக வந்ததை பார்த்ததில்லை.
பிரபலமாக இருக்கும் ஒரு நபாரால் ஒரு சமூகத்திக்கு வேண்டிய பரப்புரையை செய்தால் அந்த சமூகத்திற்கு அது பயனாக இருக்கும் அப்படி இந்த தமிழ் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால் இலங்கையின் இனபடுகொலையை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லலாம் . ஈழ விடுதலை பற்றியும் அதற்கான தேவை பற்றியும் உங்கள் விஸ்ரிகளிடம் எடுத்து சொல்லி அதற்கான ஆதரவை பெறலாம் . இப்படி எவ்வளவோ செய்யலாம் ஆனால் ஒன்றும் செய்ய வில்லை . எனக்கு தெரிந்து தமிழச்சி நீங்கள் ஏதோ உங்களுக்கு பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக பெரியாரின் கருத்துக்களையும் காலத்தை கடத்த வேண்டும் என்பதற்காக சில விமர்சனங்களை வைக்கிறீர்கள் என நினைக்கிறேன் . ஏனெனில் உங்களிடம் இதுவரை தெளிவான நிகழ் காலத்திற்கு ஏற்ற கொள்கைகள் எதுவும் இல்லை .
சரி விடுங்க கேக்க மறந்துட்டேன் உங்களுக்கு சீமான் மேல என்ன கடுப்பு ? சும்மா சொல்லுங்க அப்புறம் ஈழ விடுதலையை பற்றி உங்ககிட்ட ஏதாவது கருத்துக்கள் இருந்தாலும் சொல்லுங்க .
Friday
சோனியாவிற்கு வேண்டுமென்றால் மகிழ்ச்சியாக இருக்கலாம்
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
இந்தியா,
இலங்கை,
சோனியா,
தமிழ் ஈழம்,
தமிழ்நாடு
எழுதிய நேரம்
Friday, December 03, 2010
மனசாட்சினா என்ன விலை எந்த கடையில கிடைக்கும் என்று கேட்கும் அளவிற்கு இன்றைய சமூக சூழ்நிலை மனிதர்களை மாற்றி இருக்கிறது. நான் நன்றாக இருந்தால் போதும் என் குடும்பம் நன்றாக இருந்தால் போதும் என்ற மனநிலையே இன்று எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது . மற்றவர்களை கடவுள் பார்த்து கொள்வார் என்று அந்த இடத்திலிருந்து கடவுள் மீது பழியை போட்டு தப்பித்து கொள்கிறார்கள் .
அரசன் ஏழையாக இருந்தால் தான் மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று சொல்வார்கள் ஆனால் இன்று மக்களை ஆளுகிறவர்கள் கோடீஸ்வரராக இருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது மக்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் . அறிவியல் வளர வளர மனித குலமும் தங்கள் அறிவில் வளர்ந்து தன்னம்பிக்கையோடு மற்றவர்களை கையேந்தாமல் சுய உழைப்பில் வாழ வேண்டும் ஆனால் இன்றோ சூழ்நிலை மாறி விட்டது . ஏதோ ஒன்றுக்கு அடிமையாவது போல் தமிழக மக்கள் இலவசங்களுக்கு அடிமையாகி விட்டனர் . அரசும் மக்களை கவுரவ பிச்சைகாரர்கள் ஆக்கி விட்டது . பிச்சைக்காரனுக்கு பிச்சை போட்டால் அவன் எப்படி நமக்கு அடிமையாக இருப்பானோ அதே நிலை போல் ஓட்டு மொத்த தமிழகமும் மாறி விட்டதோ என தோன்றுகிறது .
ஜனநாயகத்தின் ஒரு தூணாக விளங்குகின்ற பத்திரிகைகள் இன்று நடிகைகளின் கவர்ச்சி படங்களோடு தங்கள் வருமானத்தை ஈட்டி கொள்கின்றனர் . தமிழக பத்திரிகைகள் கள்ள காதலனால் காதலி கொலை என்ற சம்பவங்கள் இருந்தால் முதல் பக்கத்தில் போட்டு ஐந்து பத்தி வரை அவன் அவளை முதலில் சந்தித்த போது அப்படி உறவு நடந்தது , பின்னர் அங்கெ உறவு நடந்தது என்று பலனா புத்தகங்களுக்கு ஈடாக கதை எழுதுவார்கள் . அதை படிப்பவர்களுக்கோ கொலை செய்த குற்றம் தெரிவதை விட எப்படி அவன் அவளோடு தொடர்பு கொண்டான் என்ற சிந்தனை தான் இருக்கும் . உரிமை மீறல்கள் போர் குற்றங்கள் இவற்றை பதிவு செய்து மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை உண்டாக்கும் எண்ணம சற்றும் இல்லாமல் இருக்கின்றன .
இப்போது சானல் 4 தொலைக்காட்சியில் இலங்கை ராணுவத்தால் கற்பழித்து கொலை செய்த காணொளிகள் ஒளிபரப்ப பட்டன . கற்பிற்கு மரியாதை கொடுக்கும் தமிழ் சமூகத்தில் இப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கிறது என்றால் அதை செய்தவர்கள் மனித பிறவிகளாக இருக்க முடியுமா . கோவையில் இளம் பெண்ணை கடத்தி கற்பழித்து கொலை செய்த கொடூரன் மீது ஏற்பட்ட கோபம் ஏழு தமிழ் பெண்களை உடம்பில் ஒரு துணி இல்லாமல் கொடூரமான முறையில் கொலை செய்த சிங்கள இனவெறியர்கள் மீது ஏன் வர வில்லை . காசுக்க்காகவும் பதவிக்காகவும் தமிழ் இனத்தையே காட்டி கொடுத்து என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என காட்டும் அரசியல் தலைவர்களும் தமிழ் சமுதாயத்தில் மட்டும் தான் இருக்க முடியும் .
உலகத்திலே மிக பெரிய அரக்கனாகவும் போர் குற்றவாளியாகவும் திகழும் மனித குலத்திலே சேர்க்க முடியாத சிங்கள இனவெறியன் ராஜபட்சே செல்லும் இடமெல்லாம் விரட்ட புலம் பெயர் தமிழர்கள் தயாராகி விட்டனர் . அதன் எதிரொலி தான் எதற்காக லண்டனுக்கு இந்த அரக்கன் சென்றானோ அதை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . இங்கிலாந்தில் புலி கொடியேந்தி போராட அந்நாட்டு காவல் துறை அனுமதி கொடுக்கிறது . ஆனால் தமிழர் பிரச்சனைக்காக தமிழர்கள் போராடினால் கைது செய்கிறது தமிழக அரசு மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசு என்ன அரசு .
உலக மக்கள் பார்வையில் தூக்கிலிட பட வேண்டியவன் தான் இந்த ராஜ பட்சே . ஆனால் இந்திய அரசோ அவனை கவுரவ படுத்துகிறது . இங்கிலாந்து காவல் துறை ராஜ பக்சேவை கைது செய்யலாமா என ஆராய்ந்து வருகிறது . ஹிட்லர் , முசோலினி , இடி அமின் போன்ற சர்வாதிகாரிகளுக்கு அடுத்த படியாக அதை விட பல மடங்கு போர் குற்றங்கள் புரிந்த போர் குற்றவாளியை இந்தியாவில் கவுரவ படுத்தியது இந்தியாவிற்கே அவமானம் . சோனியாவிற்கு சோனியாவிற்கு வேண்டுமென்றால் மகிழ்ச்சியாக இருக்கலாம் . ஏனெனில் முசோலினி பிறந்த மண்ணில் பிறந்தவள் தானே. தமிழர்களின் கலாசாரம் கற்பு பற்றி என்ன தெரியும் .
புலம் பெயர் தமிழர்களோடு தமிழக தமிழர்களும் ஓன்று பட்டு போராடினால் இன்னும் சில காலங்களில் தமிழ் பெண்களை கற்பழித்தும் போர் குற்றங்கள் புரிந்த சிங்கள இனவெறியர்களை தண்டிக்க முடியும் அதற்கான உதாரணம் தான் ராஜபட்சேவிற்கு தமிழர்களால் லண்டனில் ஏற்பட்ட அவமானம் . ஓடாத மானும போராடாத இனமும் நிம்மதியாய் வாழ முடியாது . இதே நிலை நாளை நமக்கும் வரலாம் . ஏன் காங்கிரஸ் தோழர்களுக்கு கூட வரலாம் .....
தமிழர்களின் தன்னிகரற்ற தலைவனுக்கு இன்று பிறந்த நாள்
எழுதியது
Suresh Kumar
Labels:
உலக தமிழர்கள்,
தமிழர்,
தமிழ் ஈழம்,
மாவீரன் பிரபாகரன்
எழுதிய நேரம்
Friday, November 26, 2010
தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசின் காட்டுமிராண்டி தனமான இன படுகொலைகளை கண்டு தன் சிறு வயதிலிருந்து ஆயுதமேந்தி சிங்கள இனவெறி அரசுகளை ஒவ்வெரு கட்டத்திலும் எதிர் கொண்டு வீர தமிழர்களை எதிரியின் கோட்டையில் சென்று தாக்கும் புலி படைகளை உருவாக்கியவன். துயருற்ற தமிழர்கள் ஒடுங்கி கிடந்த நேரத்தில் புயலாய் புறப்பட்ட வீர தமிழன். ஒவ்வெரு கால வரலாற்றிலும் ஒவ்வெரு சிறுபான்மை இனத்தை பெரும்பான்மை இனங்கள் அடக்கி ஒடுக்கி அவர்கள் மீது போர் தொடுத்து கொண்டே வந்திருக்கின்றன . அந்த அதில் ஒரு தலைவன் தோன்றி அந்த மக்களை மீட்பதை வரலாற்றில் படித்திருக்கின்றோம் . அந்த வரலாறை நாம் நிகழ் காலத்தில் தமிழர்கள் வாழ்வில் எற்பட்ட்த்தை கண்டு கொண்டிருக்கிறோம் .
ஒவ்வெரு கால கட்டத்திலும் காட்டி கொடுப்புகள் துரோகங்கள் இருந்தது போல் நம் இந்த காலகட்டங்களிலும் துரோகங்களின் மத்தியில் தான் தமிழினம் போராடி கொண்டிருக்கிறது . ஒவ்வெரு போராட்டங்களிலும் ஒரு சில நாடுகள் உதவி புரிந்திருக்கிறது . ஆனால் தமிழ் ஈழ போராட்டத்தில் மட்டும் தான் உலக நாடுகள் அனைத்துமே சிங்கள இனவெறிக்கு ஆதரவாக செயல் பட்டு கொண்டிருக்கிறது . எந்த உலக நாடுகளின் உதவியும் இல்லாமல் உலக வரலாற்றில் முப்படைகளையும் கொண்ட ஓர் விடுதலை போராட்ட அமைப்பு என்றால் அது தமிழ் ஈழ விடுதலை புலிகள் தான் . தமிழர்களை உலகமே ஆச்சரியத்தோடு பார்க்க, தமிழர்களின் பெருமையை உலகம் முழுமைக்கும் கொண்டு சென்ற பெருமை மாவீரன் பிரபாகரனையே சாரும் .
இந்திய ராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் நடை பெற்ற போரில் தலைமை இந்திய ராணுவ தலைமை தளபதி எழுதிய புத்தகத்தில் பிரபாகரன் மட்டும் இந்திய ராணுவத்திற்கு தலைமை தளபதியாக இருந்தால் உலகத்திலே இந்திய ராணுவம் தான் மிக பெரிய ராணுவமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார் .ஒரு மிக பெரிய நாட்டின் ராணுவ தளபதியே வியக்கும் வண்ணம் விடுதலை ரானுவத்தையை கட்டமைத்த பெருமை ஒரு தமிழனுக்கு சார்ந்தது.
தமிழ் ஈழ தமிழர்களை மட்டுமல்லாது உலக தமிழர்களை தன்மானத்தோடு வாழ வைத்து, உலக தமிழர்களின் பெருமையை உலகுக்கு உணர்த்திய தமிழ் தலைவன் மாவீரன் பிரபாகரனுக்கு இன்று பிறந்த நாள். இன்று பிறந்த நாள் காணும் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம் நாங்கள் .
அரசனை நம்பி புருசனை கைவிட்ட திமுக
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
இந்தியா,
கலைஞர்,
தமிழகம்,
தமிழ் ஈழம்,
திமுக
எழுதிய நேரம்
Friday, November 19, 2010
தமிழகத்தில் திமுகவின் நான்காண்டு சாதனைகளை சொல்லி கொண்டே போகலாம் என உடன் பிறப்புகள் தங்களுக்குள் மகிழ்ச்சி பொங்க பேசி கொண்டிருக்கிறார்கள் . கடந்த ஒரு வார காலமாக உடன் பிறப்புகளுக்கு எங்கு சென்றாலும் என்ன உங்களை இந்த பக்கம் காணவே இல்லை அந்த குரல்களோடு சிலர் அழைத்து என்னையா இது ஒன்னு ரெண்டு கோடியா ....................? எவ்வளவுயா? உனக்கு ஏதாவது ......? இப்படியே தான் மக்களின் பேச்சுக்கள் இருக்கின்றன .
நான்கு ஆண்டுகளில் திமுக என்ன சாதித்தோ இல்லையோ அதுவல்ல ஆனால் இந்தியாவில் மட்டுமல்லாது உலகத்திலே மிக பெரிய ஊழலாக கருத படும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலால் ஒரு கெட்ட பெயர் உருவானது என்னவோ உண்மை . பதவி வேண்டும் என்றால் யார் காலிலும் விழுந்து யாரை வேண்டுமானாலும் காட்டி கொடுத்து வாழும் காலமாக இந்த காலம் மாறிவிட்டது . மனிதாபிமானமோ ,கொள்கையோ , இரக்கமோ , தொலைநோக்கு பார்வையோ சிறிதும் இல்லாமல் போய்விட்டது . தமிழகம் உணர்வற்ற மாநிலமாக மாறிவிட்டது . அதன் விளைவு உலகத்திலே மிக பெரிய ஊழல் செய்தவன் தமிழன் என்ற பெயர் கிடைத்திருக்கிறது . மக்களின் எண்ணங்களோ சில்லறைக்கு ஆசைப்பட்டு ருபாய் நோட்டுகளை தொலைப்பதை போலாகி விட்டது . சிந்திக்கும் ஆற்றல அற்று போய் விட்டது .
திமுகவின் இந்த நான்கு ஆண்டு காலங்களில் தமிழர்கள் தங்கள் உரிமைகளை தொலைத்தது ஏராளம் . அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கையை பதவிக்காக விலை பேசி விட்டது . காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியில் அமைச்சர் பதவி மட்டும் போதும் அதன் மூலம் நாங்கள் பிழைத்து கொள்ளலாம் என இருந்த விளைவு தான் . முல்லை பெரியாறு மீதான நமது உரிமை பறி போய் கொண்டிருக்கிறது . காவிரியில் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் போகிறது . காங்கிரஸ் தலைமையிலான அரசின் மூலம் திட்டமிட்டு நடத்த பட்ட தமிழர்கள் அழிப்பின் போது கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது தான் திமுக அரசு .
மீனவர்கள் நலனை பாதிக்கும் சட்டங்கள் கொண்டு வந்த போதும் ஆதரவளித்து கொண்டிருந்தது . சிங்கள கடற்படையினால் தமிழக மீனவர்கள் சுட பட்ட போது தடுக்க்கவுமில்லை தட்டி கேட்கவுமில்லை . ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் என்ன ஆனது என்றே இதுவரை தெரியவில்லை . ரேசன் கடைகளில் அரிசி ஒரு ருபாய் மற்ற அனைத்து அடிப்படை பொருட்களும் பல மடங்கு விலையேற்றம் . இன்று நடுத்தர மக்களே வீடு கட்ட முடியாதவாறு கட்டுமான பொருட்களின் விலையேற்றம் இருக்கும் போது ஏழை மக்களின் நிலை என்ன?
பதவி சுகங்களை தவிர மக்கள் நலனில் சிறிதும் அக்கறையற்ற ஒரு ஆட்சி இன்று மக்களால் புறக்கணிக்க கூடியதாக இருக்கிறது . ராஜாவின் ஊழலால் ஓட்டு மொத்த தமிழகமே தலை குனிய வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசோ இத்தனை நாளும் கலைஞரால் என்ன சாதிக்க முடியுமோ அதை சத்தமின்றி நாய்க்கு பிஸ்கட் கொடுத்தது மாதிரி மந்திரி பதவிகளை கொடுத்து விட்டு காரியத்தை சாதித்து விட்டார் . எல்லாம் முடிந்த பின்னர் ராஜாவையும் கழற்றி விட்டு விட்டார் . இன்று கலைஞரின் ஒரே நினைவுகள் காங்கிரஸ் நம்மை விட்டு பிரிந்து விடுமோ ? என்பது தான் அதை தான் செல்லுமிடமெல்லாம் தன் ஏக்கங்களை பதிவு செய்து கொள்கிறார் . மக்கள் மீது அக்கறையின்றி நடக்கும் இந்த அரசு அரசனை நம்பி புருசனை கை விட்ட கதை போலாகி விட்டது .
கைது செய்ய கூடும் என்ற அச்சத்தால் லண்டன் பயணம் ரத்து செய்த ராஜபக்சே
எழுதியது
Suresh Kumar
Labels:
இலங்கை,
இனபடுகொலை,
உலக தமிழர்கள்,
ஐக்கிய நாடுகள்,
தமிழ் ஈழம்
எழுதிய நேரம்
Friday, November 05, 2010
லண்டன் பயணத்தின் போது கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தால் லண்டன் பயணத்தை ரத்து செய்துள்ளதாக தெரிகிறது. இலங்கையில் சிங்கள இனவெறியர்களால் நடத்தப்பட்ட இன படுகொலையில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். இதில் ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பலர் ஈவு இரக்கமின்றி சர்வதேச போர் விதிகளை மீறி ஒரு மிக பெரிய இன படுகொலையை திட்டமிட்டு நடத்தியது.
உலகம் முழுவதும் இலங்கை ராணுவத்தின் போர் விதி மீறலுக்கு எதிராகவும் இனபடுகொலைக்கு எதிராகவும் புலம் பெயர் தமிழர்களால் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சிங்கள இனவெறியன் ராஜபக்சே வை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் அமைப்புகள் முன்னெடுத்து போராடுகின்றனர் .

இந்த நிலையில் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபை தலைவர் பாண் கீ மூன் அவர்களால் இலங்கை மீதான போர் குற்றங்கள் விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது . தமிழ் அமைப்புகளாலும் ராஜபக்ஷேவை கைது செய்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என தமிழர் அமைப்புகளால் வழக்கு தொடர பட்டிருக்கிறது. தமிழர் அமைப்புகள் ராஜபக்சே லண்டன் வந்தால் நீதிமன்றத்தை அணுகவும் தீர்மானித்துள்ளதாக உளவு துறை தகவல் கொடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் லண்டன் சென்றால் லண்டன் காவல் துறை மூலம் கைது செய்ய கூடும் என்ற அச்சத்தால் லண்டன் பயணத்தை ரத்து செய்துள்ளதாக தெரிகிறது. தப்பு செய்தவன் தண்டனை பெற்று தான் தீர வேண்டும் . இது தான் நியதி காலம் தாண்டினாலும் தண்டனை தாண்டாது . உலக தமிழர்கள் ஒற்றுமையுடன் ஒரே பாதையில் இலங்கை இனவெறியனுக்கு எதிராக போராடும் பட்சத்தில் சிங்கள இனவெறியர்களுக்கு தண்டனையும் கிடைக்கும். தமிழர்களின் உரிமையும் வெற்றி பெறும் . நம்பிக்கையோடு போராடுவோம் .
உலகம் முழுவதும் இலங்கை ராணுவத்தின் போர் விதி மீறலுக்கு எதிராகவும் இனபடுகொலைக்கு எதிராகவும் புலம் பெயர் தமிழர்களால் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சிங்கள இனவெறியன் ராஜபக்சே வை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் அமைப்புகள் முன்னெடுத்து போராடுகின்றனர் .

இந்த நிலையில் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபை தலைவர் பாண் கீ மூன் அவர்களால் இலங்கை மீதான போர் குற்றங்கள் விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது . தமிழ் அமைப்புகளாலும் ராஜபக்ஷேவை கைது செய்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என தமிழர் அமைப்புகளால் வழக்கு தொடர பட்டிருக்கிறது. தமிழர் அமைப்புகள் ராஜபக்சே லண்டன் வந்தால் நீதிமன்றத்தை அணுகவும் தீர்மானித்துள்ளதாக உளவு துறை தகவல் கொடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் லண்டன் சென்றால் லண்டன் காவல் துறை மூலம் கைது செய்ய கூடும் என்ற அச்சத்தால் லண்டன் பயணத்தை ரத்து செய்துள்ளதாக தெரிகிறது. தப்பு செய்தவன் தண்டனை பெற்று தான் தீர வேண்டும் . இது தான் நியதி காலம் தாண்டினாலும் தண்டனை தாண்டாது . உலக தமிழர்கள் ஒற்றுமையுடன் ஒரே பாதையில் இலங்கை இனவெறியனுக்கு எதிராக போராடும் பட்சத்தில் சிங்கள இனவெறியர்களுக்கு தண்டனையும் கிடைக்கும். தமிழர்களின் உரிமையும் வெற்றி பெறும் . நம்பிக்கையோடு போராடுவோம் .
Sunday
கார்த்திகை பூ தமிழ் ஈழ தேசிய மலர்
எழுதியது
Suresh Kumar
Labels:
கார்த்திகை பூ,
தமிழ் ஈழ தேசிய மலர்,
தமிழ் ஈழம்,
மாவீரர் நாள்
எழுதிய நேரம்
Sunday, October 17, 2010
மாலத்தீவில் நான் தங்கியிருந்த அறையிலிருந்து வெளியே செல்லலாம் என கிளம்பிய நேரத்தில் திடீரென என்னுடைய கண்ணில் பட்டது அழகிய மலர். இந்த மலர் என்னை கவர்ந்தது உடனடியாக என்னுடைய கைபேசியில் படம் எடுத்து கொண்டேன் . படம் எடுத்து கொண்ட பின்னர் எனக்கு ஒரே குழப்பம் இந்த பூவை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்பது தான். ஆனால் நான் இதற்கு முன்னர் நேரடியாக இந்த பூவை பார்த்ததில்லை. ஆனால் பார்த்த நியாபகம். பின்னர் நினைவுக்கு வந்தது இணையத்தில் பார்த்ததாக. பின்னர் தான் தெரிந்தது இது தான் தமிழ் ஈழ தேசிய மலர் என்று.

அந்த மலரை பார்த்ததும் தமிழ் ஈழத்தில் இன ஒடுக்குமுறைக்கு எதிராக, இன விடுதலைக்காக களத்தில் மடிந்த ஆயிரகணக்கான மாவீரர்களை நினைவு கூறும் மாவீரர் நாள் அடுத்த மாதம் என்பதும் நினைவில் வந்தது. ஈழ தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நினைவு கூற வேண்டிய நாள் தான் நவம்பர் 27 .

நினைவு கூர்ந்து அதை ஒரு தமிழர்களின் எழுச்சி நாளாக கடை பிடிக்க வேண்டும் . எந்த இலட்சியத்திற்காக ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் மடிந்தார்களோ அந்த லட்சியத்தை அடைய நாம் உறுதி கூற வேண்டும்.
அந்த மலரை பார்த்ததும் தமிழ் ஈழத்தில் இன ஒடுக்குமுறைக்கு எதிராக, இன விடுதலைக்காக களத்தில் மடிந்த ஆயிரகணக்கான மாவீரர்களை நினைவு கூறும் மாவீரர் நாள் அடுத்த மாதம் என்பதும் நினைவில் வந்தது. ஈழ தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நினைவு கூற வேண்டிய நாள் தான் நவம்பர் 27 .
நினைவு கூர்ந்து அதை ஒரு தமிழர்களின் எழுச்சி நாளாக கடை பிடிக்க வேண்டும் . எந்த இலட்சியத்திற்காக ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் மடிந்தார்களோ அந்த லட்சியத்தை அடைய நாம் உறுதி கூற வேண்டும்.
Wednesday
தமிழர்களை கொன்று குவித்த இனவெறியனுக்கு பொன்னாடையா ?
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
இந்தியா,
இலங்கை,
இனபடுகொலை,
தமிழகம்,
தமிழ் ஈழம்
எழுதிய நேரம்
Wednesday, October 14, 2009
இலங்கையில் தமிழ் ஈழ மக்கள் சுமார் ஒரு லட்சம் பேரை கொன்று குவிக்க உறுதுணையாக இருந்து விட்டு இப்போது சுற்றுலா சென்றிருக்கிற தமிழக திமுக கூட்டணி நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் தமிழர்களை கொன்று குவித்த நவீன கிட்லர் ராஜ பக்ஷேவுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டியிருக்கிறார்கள் .
உலக நாடுகள் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச நீதி மன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என குரல் கொடுத்து வரும் இந்த வேளையில் தமிழக குழு இலங்கை சென்று பிணம் தின்னி மகிந்தாவுக்கு பொன்னாடை போர்த்தியது தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது .

திமுக , காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே உருவாக்கி கொண்டு சென்ற அறிக்கையை தமிழகத்தில் சமர்பிக்க இருக்கின்றனர் . இதுவரை முகாம்களை சென்று பார்த்த அனைத்து வெளி நாட்டவர்களும் மக்களுக்கான அடிப்படி தேவைகள் இல்லை , இது ஒரு திறந்த வெளி சிறைச்சாலை என்று சொல்லியிருக்கிற வேளையில் காங்கிரஸ் எம்பி சுதர்சன நாச்சியப்பன் முகாம்கள் சர்வதேச அளவில் தரம் வாய்ந்ததாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் . சர்வதேச தரம் என்பது என்ன என்று தெரியுமா என்பது தெரியவில்லை .
தங்களுடைய சொந்த நாட்டை சிங்கள அரசு ஆக்கிரமித்து சொந்த நாட்டிலேயே சிங்கள இனவெறி அரசால் சிறை பிடிக்க பட்டுள்ளனர் . எந்த தவறுமே செய்யாத மக்களை சிறை பிடித்து அந்த மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள இனவெறி அரசு சர்வதேச தரத்திற்கு முகாம் அமைத்திருக்கிறது என்றால் எப்படி இருக்கும் . தப்பு செய்யாத ஒருவனை சிறையில் அடைத்து சிறையில் வசதிகள் செய்து கொடுத்தால் அது சுதந்திரமா ?

வேலியே பயிரை மேய்ந்த கதையை கேள்வி பட்டிருப்போம் . இங்கே பயிரை மேய்ந்தவனையே விட்டு பாதிப்பு எவ்வளவு என பார்க்க சொல்கிறார்கள் . அங்கெ இன்று சிறையில் அடைபட்டிருக்கும் ஈழ தமிழனாக இருந்தாலும் சரி சிங்கள இனவெறி அரசால் கொல்லப்பட்ட ஈழ தமிழனாக இருந்தாலும் சரி அவனின் இத்தனை நிலைமைக்கும் காரணம் மத்திய மாநில அரசுகள் தானே . சிங்கள இனவெறி தலைவனை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டிய நேரத்தில் நீங்கள் பொன்னாடை அணிவித்தது நியாயமா ? நீங்கள் பொன்னாடை அணிவித்து இனபடுகொலையை அங்கீகரிக்க தான் சென்றீர்களா ?
பசில் ராஜ பக்சேவை டி ஆர் பாலு ஆற தழுவி கொண்டார்
உலக நாடுகள் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச நீதி மன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என குரல் கொடுத்து வரும் இந்த வேளையில் தமிழக குழு இலங்கை சென்று பிணம் தின்னி மகிந்தாவுக்கு பொன்னாடை போர்த்தியது தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது .

தங்களுடைய சொந்த நாட்டை சிங்கள அரசு ஆக்கிரமித்து சொந்த நாட்டிலேயே சிங்கள இனவெறி அரசால் சிறை பிடிக்க பட்டுள்ளனர் . எந்த தவறுமே செய்யாத மக்களை சிறை பிடித்து அந்த மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள இனவெறி அரசு சர்வதேச தரத்திற்கு முகாம் அமைத்திருக்கிறது என்றால் எப்படி இருக்கும் . தப்பு செய்யாத ஒருவனை சிறையில் அடைத்து சிறையில் வசதிகள் செய்து கொடுத்தால் அது சுதந்திரமா ?

வேலியே பயிரை மேய்ந்த கதையை கேள்வி பட்டிருப்போம் . இங்கே பயிரை மேய்ந்தவனையே விட்டு பாதிப்பு எவ்வளவு என பார்க்க சொல்கிறார்கள் . அங்கெ இன்று சிறையில் அடைபட்டிருக்கும் ஈழ தமிழனாக இருந்தாலும் சரி சிங்கள இனவெறி அரசால் கொல்லப்பட்ட ஈழ தமிழனாக இருந்தாலும் சரி அவனின் இத்தனை நிலைமைக்கும் காரணம் மத்திய மாநில அரசுகள் தானே . சிங்கள இனவெறி தலைவனை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டிய நேரத்தில் நீங்கள் பொன்னாடை அணிவித்தது நியாயமா ? நீங்கள் பொன்னாடை அணிவித்து இனபடுகொலையை அங்கீகரிக்க தான் சென்றீர்களா ?
பசில் ராஜ பக்சேவை டி ஆர் பாலு ஆற தழுவி கொண்டார்
Saturday
இலங்கை செல்லும் குழுவால் தமிழர்களுக்கு நன்மையா ?
எழுதியது
Suresh Kumar
Labels:
இலங்கை,
தமிழகம்,
தமிழ் ஈழம்,
வதை முகாம்கள்
எழுதிய நேரம்
Saturday, October 10, 2009
இன்று திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் குழு இலங்கை சென்று முகாம்களில் சிறை படுத்த பட்டுள்ள மக்களை பார்வையிட செல்கிறது . சிங்கள இனவெறி அதிபர் ராஜ பக்ஷேவையும் சந்திக்கும் நிகழ்ச்சி நிரல் தயாரிக்க பட்டுள்ளது .
ஐந்து நாட்கள் சுற்று பயணம் செல்லும் இந்த எம்பிக்கள் குழு வதை முகாம்களில் உள்ள மக்களை நேரில் பார்வையிடுகிறது . இதன் மூலம் தமிழர்களுக்கு நன்மை ஏற்படுமா ? ஏற்கனவே காங்கிரஸ் ,திமுக கட்சிகளால் அங்கே அமைதி நிலவி விட்டது மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என பிரசாரங்கள் முன்னெடுக்க பட்ட நிலையில் இந்த பயணம் தமிழர்களுக்கு சாதகமாக இருக்குமா ?

புலம் பெயர் தமிழர்களால் அனுப்பப்பட்ட வணக்காமன் கப்பல் பொருட்கள் பல மாதங்களாக கொழும்பிலே நிற்கிறது . அதையும் எங்கள் முயற்சியால் தமிழர்களுக்கு அனுப்பி விட்டோம் என பிரச்சாரம் செய்த தமிழக அரசு அது உரியவர்களிடம் போய் சேர்ந்ததா என்பதை பற்றி கவலை பட வில்லை . ஆனால் இன்று வரை அந்த பொருட்கள் உரிய மக்களுக்கு இன்னும் சென்று சேரவில்லை .
அதிகமான உலக நாடுகள் இலங்கை முகாம்களை பற்றிய தவறான செய்திகளை தெரிவித்து இலங்கை அரசுக்கு கண்டனம் செய்த போதும் இந்தியாவோ தமிழக அரசோ இலங்கையை புகழ்வதிலேயே குறியாக இருந்தது . தமிழகத்தில் உள்ள எம்பிக்கள் குழு செல்வதில் எதிர் கட்சிகளை சேர்ந்த ஒரு எம்பிக்கள் கூட இல்லை. இவர்கள் அங்கே நடை பெறுகின்ற உண்மை நிலையை மக்களுக்கும் இந்திய அரசுக்கும் தெரிவித்து மக்களின் மீள் குடியேற்றம் , தமிழர்களின் சுய நிர்ணய உரிமை போன்றவற்றிற்கு நடவடிக்கை எடுப்பார்களா ? இல்லை இலங்கையை சுற்றி பார்த்தோம் வந்தோம் என்று இருந்து விடுவார்களா ?
ஏற்கனவே போர் நடந்து கொண்டிருக்கும் போது மழை நின்றும் துவானம் விடவில்லை என சொன்னதை போல் தான் சொல்வார்களா ? சட்ட மன்றத்திலே நிறைவேற்றிய தீர்மானங்களை போல் செல்லாத காசாக்குவார்களா ? என்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் வருகின்றன .
ஐந்து நாட்கள் சுற்று பயணம் செல்லும் இந்த எம்பிக்கள் குழு வதை முகாம்களில் உள்ள மக்களை நேரில் பார்வையிடுகிறது . இதன் மூலம் தமிழர்களுக்கு நன்மை ஏற்படுமா ? ஏற்கனவே காங்கிரஸ் ,திமுக கட்சிகளால் அங்கே அமைதி நிலவி விட்டது மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என பிரசாரங்கள் முன்னெடுக்க பட்ட நிலையில் இந்த பயணம் தமிழர்களுக்கு சாதகமாக இருக்குமா ?
புலம் பெயர் தமிழர்களால் அனுப்பப்பட்ட வணக்காமன் கப்பல் பொருட்கள் பல மாதங்களாக கொழும்பிலே நிற்கிறது . அதையும் எங்கள் முயற்சியால் தமிழர்களுக்கு அனுப்பி விட்டோம் என பிரச்சாரம் செய்த தமிழக அரசு அது உரியவர்களிடம் போய் சேர்ந்ததா என்பதை பற்றி கவலை பட வில்லை . ஆனால் இன்று வரை அந்த பொருட்கள் உரிய மக்களுக்கு இன்னும் சென்று சேரவில்லை .
அதிகமான உலக நாடுகள் இலங்கை முகாம்களை பற்றிய தவறான செய்திகளை தெரிவித்து இலங்கை அரசுக்கு கண்டனம் செய்த போதும் இந்தியாவோ தமிழக அரசோ இலங்கையை புகழ்வதிலேயே குறியாக இருந்தது . தமிழகத்தில் உள்ள எம்பிக்கள் குழு செல்வதில் எதிர் கட்சிகளை சேர்ந்த ஒரு எம்பிக்கள் கூட இல்லை. இவர்கள் அங்கே நடை பெறுகின்ற உண்மை நிலையை மக்களுக்கும் இந்திய அரசுக்கும் தெரிவித்து மக்களின் மீள் குடியேற்றம் , தமிழர்களின் சுய நிர்ணய உரிமை போன்றவற்றிற்கு நடவடிக்கை எடுப்பார்களா ? இல்லை இலங்கையை சுற்றி பார்த்தோம் வந்தோம் என்று இருந்து விடுவார்களா ?
ஏற்கனவே போர் நடந்து கொண்டிருக்கும் போது மழை நின்றும் துவானம் விடவில்லை என சொன்னதை போல் தான் சொல்வார்களா ? சட்ட மன்றத்திலே நிறைவேற்றிய தீர்மானங்களை போல் செல்லாத காசாக்குவார்களா ? என்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் வருகின்றன .
Sunday
உயிரோடில்லாத பிரபாகரனை கண்டு ஏன் பயப்படவேண்டும் ?
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
தமிழகம்,
தமிழ் ஈழம்,
பிரபாகரன்,
விடுதலை புலிகள்
எழுதிய நேரம்
Sunday, August 23, 2009
தமிழ் ஈழத்தை உருவாக்கியெடுத்த தேசிய தலைவர் பிரபாகரனின் படங்களை தமிழகத்தில் வைக்க கூடாது என்றும் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேச கூடாது என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது .

விடுதலை புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டோம் , விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனையும் கொன்று விட்டோம் என சிங்கள இனவெறி அரசு கொக்கரித்து கொண்டிருக்கிறது . அதை நினைத்து பெருமை பட்டு கொண்டது இந்திய காங்கிரஸ் அரசு . தமிழக காங்கிரஸ் கட்சியினரோ பிரபாகரனை கொன்ற சோனியாவிற்கு நன்றி என சுவரொட்டிகள் அடித்து மகிழ்ச்சி கண்டனர் . இல்லாத பிரபாகரனுக்காகவும் இல்லாத விடுதலை புலிகளுக்காகவும் எதற்கு பயப்பட வேண்டும் .
இலங்கை அரசோ மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை முள் வெளி கம்பிகளில் அடைத்து வைத்திருக்கிறது போர் முடிவுற்றதாக அறிவித்து பல மாதங்கள் ஆன பின்னரும் விடுவிப்பதாக இல்லை . சிங்கள அரசால் கொண்டுவரப்பட்ட அவசர கால சட்டம் போர் முடிந்த பின்னரும் கைவிட படுவதாக இல்லை . அதே நிலை தான் இங்கே தமிழக அரசும் செய்கிறது . தீவிர போர் நடைபெற்ற காலகட்டங்களில் ஈழ தமிழர்களுக்காக எழுந்த எழுச்சியை அரச இயந்திரங்களை கொண்டு காட்டு மிராண்டி தனமாக ஒடுக்கியது . கடைசி கட்ட ஈழ போரில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் சாவதற்கு கருணாநிதி தலைமையிலான திமுக அரசும் ஒரு காரணமாக ஆகி போனது .
இந்நிலையில் தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு நம்பிக்கையிழந்த தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக தமிழகத்தில் எழுச்சி கூட்டங்கள் நடைபெறுவதை பொறுக்க முடியாத தமிழக அரசு மீண்டும் தமிழ் உணர்வாளர்களையும் தமிழ் ஈழ ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முனைகிறது . மக்கள் மனதிலிருந்து மாவீரன் பிரபாகரனை மற்ற முடியாது என நினைத்த தமிழக அரசு பொது இடங்களில் படங்கள் வைக்க கூடாது என எச்சரிக்கிறது .
பிரபாகரனோ விடுதலை புலிகளோ இனி வரமுடியாது என தினமும் தமிழர்களுக்கு எதிராகவே எழுதிவரும் தின மலர் கூட தமிழக அரசுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் செயல் படுகிறார்கள் என காட்டி கொடுக்கிறது . தினமலருக்கு என்ன பயம் உயிரோடில்லாத பிரபாகரனை கண்டு ஏன் பய பட வேண்டும் .
எழும் தமிழ் ஈழம் என தட்டி வைத்தால் காவல் துறையினர் அதில் உள்ள ஈழத்தை அழித்து விடுகிறார்கள் . தமிழ் ஈழத்திற்கான உலக தமிழர் பிரகடனம் வெளியிட்டால் வழக்கு போடுகிறார்கள் . விடுதலை புலிகள் இயக்கம் அழிக்க பட்ட பின்னரும் எதற்காக இந்த பயம் . தமிழ் ஈழம் என்பது விடுதலை புலிகளின் லட்சியம் மட்டுமில்லை தமிழர்களின் லட்சியமும் கூட . இங்கே விடுதலை புலிகளின் பெயர்களையோ பிரபாகரனின் படத்தையோ பயன் படுத்தினால் நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு அங்கே முள் வேலிக்குள் சிறைபிடிக்க பட்ட தமிழர்களை விடுவிக்க ஆக்க பூர்வமான நடவடிக்கையை மேற கொள்ளுங்கள் .
விடுதலை புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டோம் , விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனையும் கொன்று விட்டோம் என சிங்கள இனவெறி அரசு கொக்கரித்து கொண்டிருக்கிறது . அதை நினைத்து பெருமை பட்டு கொண்டது இந்திய காங்கிரஸ் அரசு . தமிழக காங்கிரஸ் கட்சியினரோ பிரபாகரனை கொன்ற சோனியாவிற்கு நன்றி என சுவரொட்டிகள் அடித்து மகிழ்ச்சி கண்டனர் . இல்லாத பிரபாகரனுக்காகவும் இல்லாத விடுதலை புலிகளுக்காகவும் எதற்கு பயப்பட வேண்டும் .
இலங்கை அரசோ மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை முள் வெளி கம்பிகளில் அடைத்து வைத்திருக்கிறது போர் முடிவுற்றதாக அறிவித்து பல மாதங்கள் ஆன பின்னரும் விடுவிப்பதாக இல்லை . சிங்கள அரசால் கொண்டுவரப்பட்ட அவசர கால சட்டம் போர் முடிந்த பின்னரும் கைவிட படுவதாக இல்லை . அதே நிலை தான் இங்கே தமிழக அரசும் செய்கிறது . தீவிர போர் நடைபெற்ற காலகட்டங்களில் ஈழ தமிழர்களுக்காக எழுந்த எழுச்சியை அரச இயந்திரங்களை கொண்டு காட்டு மிராண்டி தனமாக ஒடுக்கியது . கடைசி கட்ட ஈழ போரில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் சாவதற்கு கருணாநிதி தலைமையிலான திமுக அரசும் ஒரு காரணமாக ஆகி போனது .
இந்நிலையில் தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு நம்பிக்கையிழந்த தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக தமிழகத்தில் எழுச்சி கூட்டங்கள் நடைபெறுவதை பொறுக்க முடியாத தமிழக அரசு மீண்டும் தமிழ் உணர்வாளர்களையும் தமிழ் ஈழ ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முனைகிறது . மக்கள் மனதிலிருந்து மாவீரன் பிரபாகரனை மற்ற முடியாது என நினைத்த தமிழக அரசு பொது இடங்களில் படங்கள் வைக்க கூடாது என எச்சரிக்கிறது .
பிரபாகரனோ விடுதலை புலிகளோ இனி வரமுடியாது என தினமும் தமிழர்களுக்கு எதிராகவே எழுதிவரும் தின மலர் கூட தமிழக அரசுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் செயல் படுகிறார்கள் என காட்டி கொடுக்கிறது . தினமலருக்கு என்ன பயம் உயிரோடில்லாத பிரபாகரனை கண்டு ஏன் பய பட வேண்டும் .
எழும் தமிழ் ஈழம் என தட்டி வைத்தால் காவல் துறையினர் அதில் உள்ள ஈழத்தை அழித்து விடுகிறார்கள் . தமிழ் ஈழத்திற்கான உலக தமிழர் பிரகடனம் வெளியிட்டால் வழக்கு போடுகிறார்கள் . விடுதலை புலிகள் இயக்கம் அழிக்க பட்ட பின்னரும் எதற்காக இந்த பயம் . தமிழ் ஈழம் என்பது விடுதலை புலிகளின் லட்சியம் மட்டுமில்லை தமிழர்களின் லட்சியமும் கூட . இங்கே விடுதலை புலிகளின் பெயர்களையோ பிரபாகரனின் படத்தையோ பயன் படுத்தினால் நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு அங்கே முள் வேலிக்குள் சிறைபிடிக்க பட்ட தமிழர்களை விடுவிக்க ஆக்க பூர்வமான நடவடிக்கையை மேற கொள்ளுங்கள் .
Saturday
கே பி கைது ( கடத்தல் ) மௌனம் காட்டும் தமிழினம்
எழுதியது
Suresh Kumar
Labels:
கே பி,
தமிழ் ஈழம்,
விடுதலை புலிகள்
எழுதிய நேரம்
Saturday, August 08, 2009
விடுதலை புலிகளுக்கான சர்வதேச விவகாரங்களுக்கான தலைவரும் சமீபத்தில் விடுதலை புலிகளால் அறிவிக்கப்பட்ட தலைவருமான செல்வராஜா பத்மநாதனை சிங்கள இனவெறி அரசு மலேசியாவிலிருந்து கடத்தியிருக்கிறது .
முதலில் தாய்லாந்தில் கைது செய்ததாக சொல்ல பட்டு பின்னர் தாய்லாந்து பிரதமரால் மறுக்க பட்டது . மிக பெரிய சூழ்ச்சியின் மூலம் பத்மநாதனை கைது செய்திருக்கிறது சிங்கள அரசு . விடுதலை புலிகள் ராணுவ ரீதியாக தோற்கடிக்க பட்ட பின்னர் அமைதி வழியில் போராடுவோம் என அறிவித்தார் பதமநாதன் . தமிழர்களின் போராட்ட வடிவம் தான் மாறியிருக்கிறது லக்கு மாறவில்லைஎன்று நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அமைக்க முழு மூச்சுடன் செயல் பட்டு வந்தார் .

மூன்று லட்சம் மக்களை முட்கம்பிகளின் பின்னால் அடைத்து வைத்திருக்கும் சிங்கள இனவெறி அரசு அவர்களை மீள் குடியமர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழர்கள் ஓரணியில் திரண்டு விட கூடாது . தமிழர்களுக்கு சம உரிமை வழங்க கூடாது என்ற இனவெறி மனப்பான்மையோடு சிங்கள அரசு நடந்து வருகிறது . போர் முடிந்து இரண்டு மாதங்கள் ஆன பின்னரும் தமிழர்களுக்கு சரியான ஒரு தீர்வு திட்டத்தை முன் வைக்காமல் தமிழர்களை ஒடுக்குவதிலேயே குறியாக இருக்கிறது சிங்கள இனவெறி அரசு .
சரணடைந்த போராளிகளை துன்புறுத்துவதும் கொலை செய்வதுமாக சிங்கள இனவெறி அரசு நடத்தி வரும் கொடுரங்களுக்கு மத்தியில் பத்தமநாதனை கைது செய்தது மிக பெரிய கொடுரம் . தமிழர்களுக்கு தலைவர்களே இருக்க கூடாது என்று திட்டமிட்டு சிங்கள அரசு செயல் பட்டு வருகிறது . இத்தனை கொடூரங்களுக்கு மத்தியிலும் தமிழினம் மௌனமாகவே இருந்து வருகிறது .
ஐக்கிய நாடுகள் சபையும் , உலக நாடுகளும் தமிழர்களை கைவிட்ட நிலையில் தமிழர்களாகிய நாம் தான் ஓன்று பட்டு போராட வேண்டும் . முத கம்பிகளுக்குள் அடிபட்டு கிடக்கின்ற மக்களை விடுவிக்க கோரியும் சரணடைந்த போராளிகளை விடுவிக்க கோரியும் விடுதலை புலிகளின் தலைவரை விடுவிக்க கோரியும் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும் .
சோகமே வாழ்க்கையாகி போன தமிழினமே
சோம்பலை முறித்து எழு
விடியல் வரவில்லையென்று
இருட்டே வாழ்க்கையென்று படுத்து விடாதே
போராடு விடியல் வரும் ஒரு நாள்
முதலில் தாய்லாந்தில் கைது செய்ததாக சொல்ல பட்டு பின்னர் தாய்லாந்து பிரதமரால் மறுக்க பட்டது . மிக பெரிய சூழ்ச்சியின் மூலம் பத்மநாதனை கைது செய்திருக்கிறது சிங்கள அரசு . விடுதலை புலிகள் ராணுவ ரீதியாக தோற்கடிக்க பட்ட பின்னர் அமைதி வழியில் போராடுவோம் என அறிவித்தார் பதமநாதன் . தமிழர்களின் போராட்ட வடிவம் தான் மாறியிருக்கிறது லக்கு மாறவில்லைஎன்று நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அமைக்க முழு மூச்சுடன் செயல் பட்டு வந்தார் .

மூன்று லட்சம் மக்களை முட்கம்பிகளின் பின்னால் அடைத்து வைத்திருக்கும் சிங்கள இனவெறி அரசு அவர்களை மீள் குடியமர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழர்கள் ஓரணியில் திரண்டு விட கூடாது . தமிழர்களுக்கு சம உரிமை வழங்க கூடாது என்ற இனவெறி மனப்பான்மையோடு சிங்கள அரசு நடந்து வருகிறது . போர் முடிந்து இரண்டு மாதங்கள் ஆன பின்னரும் தமிழர்களுக்கு சரியான ஒரு தீர்வு திட்டத்தை முன் வைக்காமல் தமிழர்களை ஒடுக்குவதிலேயே குறியாக இருக்கிறது சிங்கள இனவெறி அரசு .
சரணடைந்த போராளிகளை துன்புறுத்துவதும் கொலை செய்வதுமாக சிங்கள இனவெறி அரசு நடத்தி வரும் கொடுரங்களுக்கு மத்தியில் பத்தமநாதனை கைது செய்தது மிக பெரிய கொடுரம் . தமிழர்களுக்கு தலைவர்களே இருக்க கூடாது என்று திட்டமிட்டு சிங்கள அரசு செயல் பட்டு வருகிறது . இத்தனை கொடூரங்களுக்கு மத்தியிலும் தமிழினம் மௌனமாகவே இருந்து வருகிறது .
ஐக்கிய நாடுகள் சபையும் , உலக நாடுகளும் தமிழர்களை கைவிட்ட நிலையில் தமிழர்களாகிய நாம் தான் ஓன்று பட்டு போராட வேண்டும் . முத கம்பிகளுக்குள் அடிபட்டு கிடக்கின்ற மக்களை விடுவிக்க கோரியும் சரணடைந்த போராளிகளை விடுவிக்க கோரியும் விடுதலை புலிகளின் தலைவரை விடுவிக்க கோரியும் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும் .
சோகமே வாழ்க்கையாகி போன தமிழினமே
சோம்பலை முறித்து எழு
விடியல் வரவில்லையென்று
இருட்டே வாழ்க்கையென்று படுத்து விடாதே
போராடு விடியல் வரும் ஒரு நாள்
Sunday
‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’ உருவாக்கம் உலகத் தமிழினத்துக்கு வலிமை சேர்க்கும் – விடுதலை இராசேந்திரன்
சென்னையில் நடந்த நிகழ்வொன்றில் ‘ஈழப் பிரச்சினையில் ஊடகங்கள் போக்கு’ என்ற தலைப்பிலும், தகவல் தொழில் நுட்பத் துறையினர் லயோலா கல்லூரியில் நடத்திய ஈழத் தமிழர் கருத்தரங்கிலும் பங்கேற்ற தமிழகத்திலுள்ள இதழியலாளரும் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆகிய விடுதலை இராசேந்திரன் அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசுக் குறித்து ஆற்றிய உரையிலிருந்து:
உலக வரலாற்றில் விடுதலைப் போராட்டத்தில் புதிய அத்தியாயங்களை எழுதிய இயக்கம் – விடுதலைப் புலிகள் இயக்கம் என்பதை உலக நாடுகளின் பல்வேறு விடுதலைப் போராளிகள் இயக்கங்களே பெருமையுடன் கூறுகின்றன. உலகத்தின் எந்த ஒரு நாட்டின் ஆதரவுமின்றி – எந்த ஒரு நாட்டின் உதவியை எதிர்பாராமல் தங்களுக்கான ராணுவ கட்டமைப்புகளை அவர்களே உருவாக்கிக் கொண்டு தங்களது சுய சார்பில் உறுதியாக நின்றார்கள். தெற்காசியப் பகுதியில் இந்தியப் பெருங்கடலில் உரிமை கோருவதற்கு 47 நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு நிற்கும் போது ஒரு போராளி இயக்கம் கடற்பரப்பின் ஒரு பகுதியை தங்கள் ஆளுகையின் கீழ் வைத்திருந்ததை எந்த ஒரு ‘அரசும்’ – ஏற்கத் தயாராக இல்லை. உலகில் விமானப் படை வைத்திருந்த ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் தான். அந்த விமானப் படையின் செயலாற்றலை முறியடித்திட துடித்த இந்திய பார்ப்பனிய ஆட்சி, ஓடோடிச் சென்று – ராடார் கருவிகளையும், அதனை இயக்கும் தொழில்நுட்ப வியலாளர்களையும் இனப்படுகொலை நடத்தும் சிங்களப் பேரினவாத ஆட்சிக்கு வழங்கி உதவியது இந்தியப் பார்ப்பனிய ஆட்சி.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வலிமையான ராணுவ கட்டமைப்பும் எந்த ஒரு நாட்டையும் சார்ந்திடாத சுயசார்பும் தான் அவர்களுக்கு எதிராகவே திரும்பி விட்டது. தமிழர்க ளாகிய நாம் – இதில் பெருமையடைந்தோம்; உணர்வு பெற்றோம்; உதவிட துடித்தோம்; இயக்கங்கள் நடத்தினோம்; இந்திய அரசே, இனப் படுகொலைக்கு துணை போகாதே என்று போராடினோம். ஆனால், இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி – தமிழர்களின் குரலை திரும்பிப் பார்க்கக்கூட தயாராக இல்லை. நம்மை – இந்தியா அந்நியர்களாகவே கருதியது. நாமும் இந்தியக் குடிமக்கள் என்பதை இந்திய தேசிய ஆட்சி அங்கீகரிக்கத் தயாராக இல்லை. நம்முடைய உணர்வுகளை அவமதித்தது; புறக்கணித்தது. இந்த அவமதிப்புக்கும் புறக்கணிப்புக்கும் அங்கீகாரம் தேடித் தரவே தி.மு.க.வும் அதனுடன் கூட்டணி வைத்துக் கொண்ட கட்சிகளும் முயற்சித்தன. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்த அதே நேரத்தில் ஈழத்தில் தமிழினம் இருந்த பகுதி கொலைக்களமாகியது. இங்கே தேர்தல் முடிவுகள் துரோக காங்கிரசுக்கும் அதன் கூட்டணிகளுக்கும் வெற்றிகளை அறிவித்த அதே காலகட்டத்தில் அங்கே தமிழினப் படு கொலையை நடத்தி முடித்த சிங்களம் வெற்றிப் பரணி பாடியது. காலம் உள்ளவரை இந்த இனத்துரோகத்தை அதற்கு துணை நின்ற சக்திகளை வரலாறு மன்னிக்கவே போவதில்லை. எல்லாமுமே முடிந்துவிட்டது. இப்போது என்ன நிலைமை? மறந்து விடாதீர்கள்!
இனத்துக்கான விடுதலைப் போராட்டம் எப்போதுமே ஓய்ந்துவிடாது. விடுதலைப் போராட்டத்துக்கான நியாயங்கள் உயிர்த்துடிப்புடன் இருக்கும்வரை, விடுதலைப் போராட்டமும் உயிர்த்தெழுந்து கொண்டே இருக்கும். அணுகுமுறைகள் மாறலாம் போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் – இலக்கு நோக்கிய பயணம் மாறாது.
இப்போது ஆயுதப் போராட்டம் அங்கே தற்காலிகமாக முடிவுக்கு வந்துவிட்டது. உண்மைதான். ஆனால், ஆயுதப் போராட்டத்தின் விளைவால் மேலெழுந்த அரசியல் – அரசில் நகர்வை நோக்கி நகர்த்தக்கூடிய சூழலை, அதற்கான அடித்தளத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை தங்களது நிர்வாகப் பகுதியாக விடுதலைப்புலிகள் இயக்கம் – மக்கள் பேராதரவோடு வைத்திருந்த காலத்தில்கூட சர்வதேசத்தின் அரசியல் கவனம் ஈழப் பிரச்சினையில் திரும்பவில்லை. அய்.நா.மன்றத்தின் விவாதத்துக்கும் உள்ளாக்கப்படவில்லை.
ஆனால், எல்லாவற்றையும் இழந்த நிலையில் அய்.நா.வில் ஈழத் தமிழர் பிரச்சினை விவாதத்துக்கு வந்துவிட்டது. உலக நாடுகள் சிங்களத்தின் மனித இனப்படுகொலையைக் கண்டிக்கத் தொடங்கி விட்டன. மேற்கு உலக நாடுகள் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களத்தை வெளிப்படையாகக் கண்டிக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் இடதுசாரி கொள்கையாளர்களாக நாம் மதித்த நாடுகள் – கியூபாவானாலும், சீனாவானாலும் அவை எல்லாம் இந்தியா, பாகிஸ்தானோடு கைகோர்த்துக் கொண்டு இனப்படுகொலை நடத்தும் சிங்களத்துக்கு ஆதரவாகவே நிற்கும் அவலத்தைப் பார்க்கிறோம்.
இந்த நிலையில் நல்ல சேதிகள் வருகின்றன. உலகம் முழுதும் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் வலிமையோடு ஒன்று திரளத் தொடங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே ஒவ்வொரு நாட்டிலும் தமிழ் ஈழத்துக்கு ஆதரவான அமைப்புகள் வலிமையான கட்டமைப்புகளோடு செயல்பட்டு வருகின்றன.
அந்தந்த நாடுகளில் இயங்கிய தலைமையகங்கள் தமிழ் ஈழத்துக்கான தூதரகங்களாகவே கருதப்பட்டன. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் மீது இப்போது ஒரு வரலாற்றுக் கடமை சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் ஈழ லட்சியத்தை நகர்த்திச் செல்லக்கூடிய வரலாற்றுக்கடமையை, முன்னெடுத்தாக வேண்டும்.
தோழர்களே! தமிழ் ஈழ தேசியத் தலைவர், வரலாற்று நாயகன் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?இல்லையா என்ற வாதத்துக்குள் நம்மை முடக்கி கொண்டு விடக்கூடாது. இதில் நாம் எச்சரிக்கையாக விழிப்புடன் செயலாற்ற வேண்டிய தருணம் இது.அந்த வாதங்களின் வலைகளுக்குள் நாம் சிக்கிக்கொள்ள வேண்டும் என்பதே. இந்திய சிங்கள உளவு நிறுவனங்கள் விரும்புகின்றன. எனவே தான் உளவு நிறுவனங்கள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாகக் கூறியதோடு மட்டுமல்ல; மரணத்தைப் பற்றி அவ்வப்போது புதிய புதிய கற்பனைகளைகதைகளாக உருவாக்கிப் பரப்பி வருகின்றன.
தலைவர் பிரபாகரன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத செய்தியைத்தான் நாட்டுக்கு நமக்கு விடுத்துள்ளார். அதே வேளையில் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்று பரப்பப்பட்டு வரும் கருத்துக் களத்தின் ஊடாக நாம் பயனளிக்க வேண்டியுள்ளோம். இந்தப் பின்னணியில் தமிழ் ஈழ விடுதலையை முன்னெடுக்கக்கூடிய செயல் உத்திகளை வகுக்க வேண்டிய அவசியமிருக்கிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பற்றிய கருத்து ஒன்று சர்வதேச அரங்கில் புலம் பெயர்ந்த தமிழர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதைநாம் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். பல நாடுகள் தன்னிச்சையாக தங்களை சுதந்திர நாடுகளாக அறிவித்து, நிழல் அரசுகளை நடத்தியதை வரலாறுகள் நமக்கு உணர்த்துகின்றன. ஸ்காட்லாந்து, லத்தீன், அமெரிக்க நாடுகள், மத்திய அமெரிக்க நாடுகள், எஸ்தோனியா, பின்லாந்து, கினியா பிசாவு, ஹைட்டி,அமெரிக்கா, இந்தோனேசியா, கொரியா, லிதுவேனியா – இப்படிப் பல நாடுகள் தன்னிச்சையாகதங்கள் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தன. இவை அய்.நா. மன்றம் உருவாவதற்கு முன்பே வெளிவந்த பிரகடனங்கள். அய்.நா. உருவான பிறகு, வியட்நாம், இஸ்ரேல், பாலஸ்தீனம், கிழக்கு திமோர் போன்ற நாடுகள், ஒரு சார்பாக தங்கள் விடுதலையை அறிவித்தன. பிறகு, அய்.நா.வில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இப்போது, விடுதலையை அறிவித்துவிட்டு அங்கீகாரத்துக்காக காத்திருக்கக்கூடிய நாடுகளும் இருக்கின்றன. சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள திபெத் – தனது சுதந்திரத்தைப் பிரகடனம் செய்துள்ளது. ஆனால், இப்படி ஒரு சார்பு சுதந்திரப்பிரகடனத்துக்கு ஏதேனும் ஒரு நாட்டின் ஆதரவு அவசியமாகிறது.
இந்த நிலையில் ஒரு சார்பு சுதந்திர பிரகடனம் என்பதற்கு பதிலாக, ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ (Trans national Government) என்ற கருத்து முன்வைக்கப்பட்டு, அதற்காக சட்ட நிபுணர்கள் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சார்பாக சுதந்திரப் பிரகடனம் செய்து,நிழல் அரசு அமைப்பதிலிருந்து (Govt. in Exile) மாறுபட்டது. இரண்டும் வெவ்வேறானவை; நாடு கடந்த தமிழீழ அரசு பிரகடனத்துக்கு எந்த ஒரு நாட்டின் ஆதரவு வேண்டும் என்ற அவசியமில்லை.
இப்படி ஒரு அரசு அறிவிப்பு என்பது – இதுவே முதல்முறை. இதற்கு முன் உலகில் முன் உதாரணம் இல்லை. தமிழர்களுக்கு என்று ஒரு அரசு இல்லை என்றாலும் கூட – இன்று சர்வதேசம் தமிழர்கள் தனித் தேசிய இனம் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறது. சிங்களம் – இந்தியா, சீன உதவியோடு நடத்திய இனப்படுகொலையை சர்வதேச சமூகம் உணர்ந்து, சிங்களத்துக்கு எதிராக அய்.நா.வில் தீர்மானம் கொண்டு வரும் நிலை கூட வந்துவிட்டது. சர்வதேச சமூகம் முழுமையான நியாயங்களையோ, நியாயத்திற்கான செயல்பாடுகளையோ தமிழர்களுக்கு வழங்கிடவில்லை என்பது உண்மைதான்.என்றாலும் – ஒரு தனித்த தேசிய இனத்தை சிங்களப்பேரினவாதம் அழித்தொழிக்கும் செயல்பாடுகளிலிருந்து சர்வதேசம் – கண்களை முழுமையாக மூடிக்கொண்டு விடவில்லை. இலங்கையின் உள்நாட்டுப்பிரச்சினையாக கைகழுவிடவும் இல்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சர்வதேச நாடுகளுக்குஅந்தந்த நாட்டின் புலம் பெயர்ந்த தமிழர்கள் தொடர்ச்சியான அழுத்தத்தைத் தந்து, அந்தநாடுகளை செயல்படுத்த வைக்க வேண்டிய நிலையில்தமிழினம் இருக்கிறது.
இந்த செயல்பாட்டுக்கான அரசியல் தளத்தை‘நாடு கடந்த தமிழீழ அரசு’ உருவாக்கித் தருவதாகவே நாம் கருதுகிறோம். இந்த தனித்துவமான புதிய யுக்தியைப் பயன்படுத்தி, தமிழர்களின் அடையாளம்,மாண்பு, உணர்வுகள், நலன்களைக் காப்பாற்றும் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். தமது ராணுவ வலிமை மூலம் தமிழர்கள் அடையாளத்தை முற்றாக ஒழித்து, சிங்கள அடையாளத்துக்குள் திணிக்க முயற்சிக்கும் சிங்களத்தையும், அதற்கு துணை போகும் பார்ப்பனிய இந்தியாவையும் சர்வதேச சமூகத்தின் முன் அம்பலப்படுத்த வேண்டும்.
புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களின் அமைப்புகளுக்கு இணையாக ‘தமிழ் ஈழ அரசு’ உருவாக்கத்தை படிப்படியாக வளர்த்தெடுக்கவேண்டும். (உதாரணமாக இப்போது பிரான்சிலுள்ள 35க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் தங்களின் அமைப்புப் பிரதிநிதிகளைக் கொண்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்தி, ஈழத் தமிழர்களுக்கு, தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்று அறிவித்திருக்கிறது) புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒவ்வொரு நாட்டிலும் ‘தமிழ் ஈழ அரசை’ உருவாக்கிடும்போது அதன் வழியாகக் குரல் கொடுப்பதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினையை சிங்களமோ, பார்ப்பனிய இந்தியாவோ, தனது மைதானத்தில் பந்தாக உருட்டி விளையாடிக்கொண்டிருக்கவும் முடியாது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவுக் கரங்களாக பல்வேறு தளங்களில் ஊக்கத்துடன் செயல்பட்ட அனுபவங்களைக் கொண்டுமிளிருகின்றன. புலம் பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள். இதற்கான உத்வேகத்தையும், செயலாற்றலையும், நிர்வாகத் திறனையும் வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறது விடுதலைப்புலிகள் இயக்கம். இந்த அனுபவங்களும்,ஆற்றல்களும் ஒருங்கிணைப்பும், உந்தும் சக்தியும் வீணாகிப் போய்விடக் கூடாது.
உலகின் பல நாடுகளில் விடுதலைப்புலிகள் தடை செடீநுயப்பட்ட நிலையிலும், அந்தத் தடைகளைக் கடந்தும் இந்த தமிழர் அமைப்புகள் செயல்பட்டபோது, ‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’ உருவாக்குவது என்பது இயலாத ஒன்றும் அல்ல.
ஏற்கனவே 1976 ஆம் ஆண்டு வட்டுக் கோட்டையில் தமிழர் தலைவர்கள் தமிழ் ஈழத்தைப் பிரகடனம் செய்து, அந்த ஒற்றைக் கோரிக்கையை மட்டுமே முன் வைத்து, தமிழர் பிரதேசமான வடக்கு கிழக்குப் பகுதியில் தேர்தல் களத்தில் நின்று, அந்தக் கோரிக்கைக்கு மக்களின் பேராதரவை வாக்குகளாகப் பெற்று, இலங்கை நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த வரலாற்றுப் பதிவு இப்போதும் அப்படியே நீடிக்கிறது. அதே கோரிக்கையை இப்போது சர்வதேச சமூகத்துக்கு ‘நாடு கடந்த தமிழீழ அரசுகள் வழியாகக் கொண்டு செல்வதற்கான நியாயமான உரிமைகள் இருக்கின்றன. இந்த முயற்சிகளுக்கு பயங்கரவாத முத்திரை குத்த முடியாது; பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் படையணிகளைத் திரட்டி, இன அழிப்பை நடத்த முடியாது. இந்த கோரிக்கை வலிமை பெறும் போது, எதிரிகளை அது குலை நடுங்கச்செய்யும். எதிரியின் இனவாத இனஒழிப்பு நடவடிக்கைகளின் முகத்திரையும் கிழித்தெறியப்படும். நாம் ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும்.
நிழல் அரசு அமைத்துள்ள திபேத்தியர்களுக்கு இந்தியாவில் அகதிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. உலகம் முழுதும் திபேத்திய அகதிகள் கவுரவத்துடன் நடத்தப்படுகிறார்கள். தங்களுக்கான கூட்டுறவு சங்கங்களை நடத்துகிறார்கள். சீனா – திபேத்தியர் நிழல் அரசை எதிர்த்தாலும், உலக நாடுகள் -திபேத்தியர்களை கவுரவத்துடன் அங்கீகரிக்கிறார்கள். அதே நேரத்தில் திபேத்திய அகதிகளுக்கு வழங்கும் கவுரவத்தையோ, மரியாதையையோ, இந்தியா ஈழத் தமிழ் அகதிகளுக்கு வழங்குகிறதா என்றால் இல்லை.
‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’ உருவாகும் போது, ஒவ்வொரு நாட்டிலும் வாழும் தமிழர்கள் சர்வதேச தமிழர் சமூகம் என்ற அடையாளத்தைத் தழுவுகிறார்கள். ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ ஒன்று உருவாகும் போதே நாடு கடந்த தமிழினம் என்ற உருவாக்கமும் நிகழ்கிறது. இனத்தின் அடையாளத்தோடு எல்லைகளைக் கடந்து நிற்கும் இந்த இனத்தின் ஒருமைப்பாடு தமிழினத்தின் குரலுக்கு உலக அரங்கில் வலிமை சேர்க்கும்; வலிமையை சேர்க்க வைப்போம். அதற்கான உறுதி ஏற்போம். எல்லைகளைக் கடந்த – எல்லைகளைப் பற்றி கவலைப்படாத கலைஞர்கள், இது போல் சர்வதேச கலைஞர்களுக்கான குடியரசு ஒன்றை 1996 இல் ஜெர்மன் மூனிச் நகரில் அறிவித்தனர். ஒத்த சிந்தனை, ஒத்த உணர்வு என்ற அடித்தளத்தில் நாட்டின் எல்லைகளைப் புறந்தள்ளி உருவாக்கப்பட்டஇந்த நாடு கடந்த கலைஞர் குடியரசில் 4300 பேர் குடிமக்களாக பதிவு செடீநுதுள்ளனர். இந்த அமைப்பு, சர்வதேச நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதே போல் நாடுகளைக் கடந்த தொண்டு நிறுவனங்கள், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு அமைப்புகள் பலவும் செயல்படுகின்றன. அடீநு.நா.வின் பல்வேறு தளங்களில் இவைகள் அங்கீகாரம் பெற்றுள்ளன. ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ என்பது இனத்தின் அடையாளத்தோடு – ‘தமிடிந ஈழம்’ என்ற தேசியத்தை, தேசிய இனத்துக்கான சுயநிர்ணய உரிமையின் கீழ் முன் வைக்கிறது.
யூதர்கள் மீது நமக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு; பாலத்தீனர்களின் தாயகத்தை அவர்கள் ஆக்கிரமித்து, இ°ரேல் நாட்டை உருவாக்கிக்கொண்டார்கள். ஆனாலும்கூட, உலக நாடுகளில் வாடிநந்த யூதர்களின் ஒற்றுமையை நாம் படிப்பினையாகக் கொள்ள வேண்டும். உலகத்திலே நாடற்ற இனங்களாக இருந்தவர்கள் யூதர்களும், பார்ப்பனர்களும் தான். யூதர்கள் இஸ்ரேலை உருவாக்கிக் கொண்டார்கள். ஆனால் பார்ப்பனர்களோ, இந்தியா என்ற தேசியத்தை தனது அதிகாரத்தின் கீடிந கொண்டு வந்து, இந்தியாவில் திணிக்கப்பட்டுள்ள தேசிய இனத்தின் உரிமைகளை அதன் வழியாக நசுக்கிக் கொண்டு, அண்ணா சொன்னது போல் ‘விதைக்காது விளையும் கழனிகளாக’உழைக்காது சுரண்டும் சக்திகளாக, பன்னாட்டு ஏகபோக சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு வாழ்கிறார்கள். அதே பார்ப்பனிய இந்திய தேசியம் தான் பார்ப்பனர்கள் ஆதிக்கம் இல்லாத ஈழத் தமிழர் தேசிய இனத்தின் வலிமையை, அதன் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை நசுக்கியிருக்கிறது. தமிழ்நாட்டின் பார்ப்பனரல்லாத தமிழர்களுக்கு வலிமை சேர்த்து விடும் என்ற அச்சத்தில், ஈழத்தமிழினப் படுகொலைக்கு உதவிடும் சக்தியாக செயல்பட்டுள்ளார்கள். ஈழத் தமிழர்களும் இந்தப் படிப்பினையை நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் அரசியல் முன் நகர்த்தலில் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
நன்றி :http://www.sankamam.com/
Subscribe to:
Posts (Atom)


















