Thursday

இலங்கைப் பிரச்சினை தொடர்பாக சொல்ஹெய்ம் நடேசனுடன் தொலைபேசியில் உரையாடினார்;


நோர்வேயின் சர்வதேச  அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்  நேற்று மாலை வன்னியில் உள்ள மக்களின் நிலை தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனுடன் தொலைபேசியின் ஊடாக உரையாடியுள்ளார்.

இந்த உரையாடல் சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் சமாதான செயலக பிரதானி புலித்தேவன் இது தொடர்பில் கருத்துரைக்கையில்,
தமிழர் பிரச்சினையின் தற்போதைய நிலை தொடர்பாகவும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில், இலங்கையின் நிலவரம் தொடர்பாக பேசப்பட்ட பிந்திய நிலைகள் தொடர்பாகவும் உரையாடப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த உரையாடலின் போது, இலங்கை நிலவரம் தொடர்பில் சர்வதேசத்தின் நிலை குறித்து, சொல்ஹெய்ம் விளக்கமளித்தார்.
சர்வதேச சமூகம் இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சொல்ஹெய்ம் இதன் போது தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நடேசனும் தமிழர் படுகொலைகள் குறித்து தகவல்களை வழங்கியதாக புலித்தேவன் இன்று காலை குறிப்பிட்டார்.
நாள்தோறும் வன்னியில் சிறிய நிலப்பரப்புக்குள் கட்டுண்டுள்ள சிறுவர்கள் பெண்கள் உட்பட்ட 100 பொதுமக்கள் வரை படையினரின் தாக்குதல்களில் கொல்லப்படுவதாக நடேசன் இதன் போது குறிப்பிட்டார்.
இந்தநிலையில், கொலைகளை நிறுத்தி உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என நடேசன், சொல்ஹெய்ம்மிடம் வலியுறுத்தினார். 

அத்துடன் தமிழர்கள், இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறையின் கீழ் வாழ விரும்பவில்லை என்றும், அவர்கள், தமிழ்தேசம் என்ற அபிலாசையுடன் வாழ விரும்புகிறார்கள் எனவும் தெரிவித்த நடேசன், இதற்கு சர்வதேச முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என சொல்ஹெய்மிடம் தெரிவித்தார்.

நன்றி : தமிழ்வின்

4 கருத்துக்கள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

எரிக் போனதும், தமிழ்ச்செல்வன் இழப்பும் தற்போது நடந்திருக்கும் நிகழ்வுகளுக்கு முக்கிய காரணமாக கருதுகிறேன்.

Suresh Kumar said...

சரியாக சொன்னீர்கள் நடுவராக இருக்க வேண்டிய நார்வே சிங்கள அரசுக்கு துணை போனதே காரணம் . விடுதலை புலிகளை இன்னும் சில நாட்களில் அளித்து விடுவோம் என சொன்ன சிங்கள அரசை நம்பி ஆயுதத்தை கீழே போடா சொன்னதும் இதே எரிக் சொல்கைம் தான் .

ராஜ நடராஜன் said...

//சரியாக சொன்னீர்கள் நடுவராக இருக்க வேண்டிய நார்வே சிங்கள அரசுக்கு துணை போனதே காரணம் . விடுதலை புலிகளை இன்னும் சில நாட்களில் அளித்து விடுவோம் என சொன்ன சிங்கள அரசை நம்பி ஆயுதத்தை கீழே போடா சொன்னதும் இதே எரிக் சொல்கைம் தான் .//

இனி பழைய கதைகள் பேசி நொந்து கொள்வதில் பயனில்லை.பிரச்சினைகளின் தீர்வுக்கு வழியுள்ளதா என ஆராய்வதே நல்லது.

Suresh Kumar said...

இனி பழைய கதைகள் பேசி நொந்து கொள்வதில் பயனில்லை.பிரச்சினைகளின் தீர்வுக்கு வழியுள்ளதா என ஆராய்வதே நல்லது.///////////////

பழையவற்றை நினைவு படுத்துவதில் தவறிலை என்றே நினைக்கிறேன் . நன்றி நட ராஜன்

Post a Comment

Send your Status to your Facebook