Friday

கலைஞரின் அயராத உழைப்பிற்கு மீண்டும் ஒரு விருது

தன்னுடைய தள்ளாத வயதிலும் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் உழைக்க கூடிய ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது கலைஞர் மட்டும் தான் . சிறு வயது முதலே தமிழ் மீது கொண்ட காதலால் தொடர் வண்டி ஏறி சென்னைக்கு வந்து தமிழ் வளர்த்த பெருமை கலைஞரையே சாரும் . அப்படி பட்ட பெரும் தலைவருக்கு எத்தனை விருதுகள் கொடுத்தாலும் தமிழுலகம் கொண்ட கடனை தீர்க்க முடியாது .

கோவில் படத்தில் வடிவேல் ஊரில் நானும் ரவுடி தான் என்று சொல்லி ஒவ்வெரு போட்டியாக பங்கு பெற்று அதில் தோற்று போய் விடுவார் . பின்னர் கடைக்கு சென்று நல்ல வெற்றி கோப்பையாக வாங்கி நான்கு பேரோடு ஊர்வலம் வருவார் நான் வெற்றி பெற்று விட்டேன் என . ஆனால் கலைஞரோ கொஞ்சம் வித்தியாசம் . ஏற்கனவே பல நூறு டாக்டர் பட்டங்கள் கையில் இருக்கிறது . அதே போல் அவருடைய சகாக்கள் மூலமாக அவர் வாங்கி கொண்ட விருதுகள் பல இருந்தாலும் விருது வாங்குவதில் அவரை போல் மகிழ்ச்சியடைய வேறு யாரும் இருக்க முடியாது .

நல்ல தலைவருக்கு எது அழகு மற்றவர்களை வளர்க்க வேண்டும் . நமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் . வளரும் தலைமுறையினருக்கு விருதுகள் கொடுத்து அவர்களை உற்சாக படுத்த வேண்டும் என தான் நினைப்பார்கள் . ஆனால் இவருக்கு மட்டும் என்ன சந்தோசமோ தானே விருதுகள் எல்லாவற்றையும் வைத்து கொள்வதில் . அண்ணா நூற்றாண்டு விழா துவக்கத்தில் ஒரு அண்ணா விருது , இப்போது ஒரு அண்ணா விருது என இரண்டு அண்ணா விருதுகள் ஆகி விட்டது . இப்படி அவங்களாகவே ஒரு அரக்கட்டலைய துவக்கி அவங்களுக்கே விருது கொடுப்பதை உலகத்திலே முதன் முதலா இங்க தான் பார்கிறேன் .

இந்த அண்ணா விருதை மற்ற்வார்களுக்கு கொடுக்கும் பொது கிடைக்கும் சந்தோசம் தெரியாதவராகவே வாழ்கிறார் கலைஞர் . ஏற்கனவே அண்ணாவிடம் மோதிரத்தை வாங்கி கொடுத்து தன் கையில் போட்டு விட வேண்டும் என்று சொல்லி போட்டு கொண்டவர் தான் என்று சொல்வதை நம்பாமல் இருக்க முடியாது . அதைவிட மிக பெரிய கேவலம் தமிழக அரசு கொடுக்கும் சினிமா விருதுகளை கூட தனக்கே வாங்கி கொண்டார் . அந்த விருதை வேறு ஒரு இளைய தலைமுறைக்கு கொடுத்தால் அந்த தலைமுறை எவ்வளவு உற்சாகமாக இருக்கும் .




மேற் சொன்ன விருதுகள் அனைத்துமே அவராலும் அவர் சகாக்களாலும் கொடுக்க பட்டது இனி அப்படி ஏதும் இல்லாமல் வலையுலகில் கொடுக்க படுகிற அனைத்து விருதுகளிலும் ஓன்று வலைப்பதிவாளர்கள் சார்பாக கொடுக்க பட வேண்டும் என அன்போடு கேட்டு கொள்கிறேன் . அதை துவக்கி வைக்கும் விதமாக சிறந்த வலை பதிவர் விருதை கொடுக்கிறேன் .



குறிப்பு : யாரும் கலைஞர் வலை பதிவு எழுதவில்லையே அப்புறம் எதுக்கு விருது என்று கேட்க கூடாது



21 கருத்துக்கள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எருமைமாட்டில் பெய்த மழையே! இதுவும்
அவருக்குத் தோல் மரத்துவிட்டது.

Anonymous said...

லஞ்சம் வாங்குபவர்கள் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவு.

http://ulalmannargal.blogspot.com/

ஆ.ஞானசேகரன் said...

//இப்படி அவங்களாகவே ஒரு அரக்கட்டலைய துவக்கி அவங்களுக்கே விருது கொடுப்பதை உலகத்திலே முதன் முதலா இங்க தான் பார்கிறேன் .//

அட ஆமா!!!!!!!!!!!

ஆ.ஞானசேகரன் said...

//குறிப்பு : யாரும் கலைஞர் வலை பதிவு எழுதவில்லையே அப்புறம் எதுக்கு விருது என்று கேட்க கூடாது//

நான் கேட்கவில்லைபா!!!

Anonymous said...

//இப்படி அவங்களாகவே ஒரு அரக்கட்டலைய துவக்கி அவங்களுக்கே விருது கொடுப்பதை உலகத்திலே முதன் முதலா இங்க தான் பார்கிறேன்//



:)


அன்புடன்,

அம்மு.

கலையரசன் said...

கடைசியா வச்ச உள்குத்து எனக்கு பிடிச்சிருக்கு!!

raja said...

muthalmatrum yella.. thavarum tamizh makkal meedhuthaan.... ivarai oru thalaivaraga angikarithathu ...athai vida thavaru ivarai muthalvarakkiyathu..miga mosamaana pugazh bothai ullavar.. veru enn solla..

சவுக்கடி said...

இன இரண்டகர் - பச்சை இனத் துரோகி - எனப் பட்டந் தந்து கழிப்பறைக் கோப்பையைப் பரிசளிக்கத் தமிழர்கள் பெரு விருப்பத்தோடு உள்ளனர்.

வேண்டுமானால் விழா ஏற்பாடு செய்வோம்.

வாங்கிப் போகச் சொல்லுங்கள்.

Suresh Kumar said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எருமைமாட்டில் பெய்த மழையே! இதுவும்
அவருக்குத் தோல் மரத்துவிட்டது.//////////

சரி தான் என்ன பண்ணுவது

Suresh Kumar said...

ஆ.ஞானசேகரன் said...

//இப்படி அவங்களாகவே ஒரு அரக்கட்டலைய துவக்கி அவங்களுக்கே விருது கொடுப்பதை உலகத்திலே முதன் முதலா இங்க தான் பார்கிறேன் .//

அட ஆமா!!!!!!!!!!! ////


நன்றி ஆ.ஞானசேகரன்

Suresh Kumar said...

ஆ.ஞானசேகரன் said...

//குறிப்பு : யாரும் கலைஞர் வலை பதிவு எழுதவில்லையே அப்புறம் எதுக்கு விருது என்று கேட்க கூடாது//

நான் கேட்கவில்லைபா!!! ///////////////

அட கேட்க கூடாது தான் சொன்னேங்க

Suresh Kumar said...

Ammu Madhu said...

//இப்படி அவங்களாகவே ஒரு அரக்கட்டலைய துவக்கி அவங்களுக்கே விருது கொடுப்பதை உலகத்திலே முதன் முதலா இங்க தான் பார்கிறேன்//



:)
நன்றி அம்மு

அன்புடன்,

அம்மு. //////////

Anonymous said...

தேர்தலுக்கு முன்பு நீங்கள் எழுதிய பதிவுகள் அருமை

Suresh Kumar said...

கலையரசன் said...

கடைசியா வச்ச உள்குத்து எனக்கு பிடிச்சிருக்கு!! /////////

கலை அது உள் குத்து இல்ல அது தான் உண்மை

Suresh Kumar said...

raja said...

muthalmatrum yella.. thavarum tamizh makkal meedhuthaan.... ivarai oru thalaivaraga angikarithathu ...athai vida thavaru ivarai muthalvarakkiyathu..miga mosamaana pugazh bothai ullavar.. veru enn solla..////////////

உண்மை தான் ராஜா

Suresh Kumar said...

சவுக்கடி said...

இன இரண்டகர் - பச்சை இனத் துரோகி - எனப் பட்டந் தந்து கழிப்பறைக் கோப்பையைப் பரிசளிக்கத் தமிழர்கள் பெரு விருப்பத்தோடு உள்ளனர்.

வேண்டுமானால் விழா ஏற்பாடு செய்வோம்.

வாங்கிப் போகச் சொல்லுங்கள். ///////////


அப்படியெல்லாம் தமிழர்கள் இருப்பதாக தெரியவில்லை

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அநியாயாயம்பா! அநியாயாயம்பா!

எனக்கு ஜக்கு கொடுத்த விருத வருஷம் வாரதுக்குள்ள அவருக்கு புடுங்கி குடுத்திட்டியளே!? இது நியாயமா?

இருந்தாலும் கன்னித் தமிழ் கலைஞருக்கு வாழ்த்துகள்!

இன்னும் ஆயிரம் விருது பெற்று அபூர்வ சிந்தாமணியாக பல்லாண்டு வாழ வேண்டும்!

Suresh Kumar said...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அநியாயாயம்பா! அநியாயாயம்பா!

எனக்கு ஜக்கு கொடுத்த விருத வருஷம் வாரதுக்குள்ள அவருக்கு புடுங்கி குடுத்திட்டியளே!? இது நியாயமா?

இருந்தாலும் கன்னித் தமிழ் கலைஞருக்கு வாழ்த்துகள்!

இன்னும் ஆயிரம் விருது பெற்று அபூர்வ சிந்தாமணியாக பல்லாண்டு வாழ வேண்டும்! ///////////

கலைஞர் ஒரு ஆள் தான் அந்த விருது பெற தகுதியுள்ளவர் ........ நானும் ஒரு முறை கூட வாழ்த்துகிறேன்

பித்தன் said...

நானும் ரவுடிதான்னு சொல்லி வாண்டடா வந்து வண்டியில ஏறுவது கலைஞ்சரின் காமடிகளில் ஒன்று.

Anonymous said...

ஐயா,
தயவு செய்து தாங்கள் கலைஞருக்கு வழங்கிய விருதை,"அண்ணா பெரியார் திராவிட சிறந்த வலைப்பதிவர்" விருது என்று பெயரிட்டு கொடுங்கள்.இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

Unknown said...

தனக்கு தானே
கலைஞர் என்று பெயரிட்டு
ஊழல் கலைஞர் என்ற பட்டமும் பெற்றார்
அத்தோடு
தன் மகள் ளை வெளி மாநில கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள திகார் ஜெயிலுக்கு அனுப்பிய முத்தமிழ் வித்தகர்,
கூடா நட்பு என்று கூறிக் கொண்டே
கூடி கூடி குலாவும் தமிழின ஆசான் கலைஞர்
பலிக்கடா..... பபீக்கட்
போதும் கை வலிக்கிறது கலைஞரின் வீர. தீர பிராதாபம்

Post a Comment

Send your Status to your Facebook