Saturday

திருச்சி மண்டல மாநாடு வைகோவின் வெற்றி

திருச்சியில் நடைபெற்ற மதிமுக மண்டல மாநாடு பற்றி துக்ளக் வார ஏட்டில் வந்த செய்தி .


கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு விழா தொடக்கத்தை மதுரை மண்டல மாநாடாக நடத்திய மதிமுக இந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு விழாவை திருச்சி மண்டல மாநாடாக நடத்தியது .

கடந்த ஆண்டு மதுரை மாநாட்டில் ஊர் முழுக்க அண்ணாவின் படம் மற்றும் அண்ணாவின் பொன் மொழிகள் மட்டுமே கொண்ட பிளெக்ஸ் போர்டுகள் வைத்து பலரையும் கவர்ந்த மதிமுக இந்த முறையும் திருச்சியிலும் அண்ணாவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பேனர்கள் மற்றும் போர்டுகளை வைத்திருந்தது .

மாலையில் துவங்கி , இரவில் முடிந்த பொதுக்கூட்டம் தான் என்றாலும் கொடியேற்றம் , படங்கள் திறப்பு , புகைப்படக் கண்காட்சி , மலர் வெளியீடு , தீர்மானங்கள் போன்றவை மூலம் அது மாநாடாக அடையாளம் காட்டப்பட்டது . அரங்கத்திற்கு மறைந்த திருமங்கலம் எம் எல் வீர இளவரசனின் பெயர் சூட்டப்பட்டிருந்தது . கப்பல் வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்த கோடி மேடையும் மலைக்கோட்டை வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடை முகப்பும் கண்ணை கவரும் விதத்தில் இருந்ததன .

திறக்கப்பட்ட பாடங்களில் அன்பில் தர்மலிங்கம் படமும் ஓன்று , திமுக வை சேர்ந்த அன்பில் தர்மலிங்கம் படத்தை மதிமுக திறப்பது குறித்து சிறிய சர்ச்சை எழுந்த போதும் , அவரது படம் மாநாட்டில் திறக்கப்பட்டு , அவரது புகழும் அதிகம் பேசப்பட்டது . வைகோவை கருணாநிதி கட்சியிலிருந்து ஓரம்கட்ட முனைந்த போதெல்லாம் , அன்பில் தர்மலிங்கம் வைகோவிற்கு உறுதுணையாக இருந்த சம்பவங்கள் விவரிக்கப்பட்டன .நாஞ்சில் சம்பத் மாநாட்டு தீர்மானங்களை வாசிக்க தொடங்கியதுமே மழை தூர ஆரம்பித்தது . தூறல் படிப்படியாகப் பெருமழையாக மாறிய போதும் தொண்டர்கள் பெரிதாக கலையாமல் நாற்காலியை குடையாக பிடித்தபடி அங்கேயே நின்றது ஆச்சரியம் தான் . மற்றவர்கள் பேச்சை நிறுத்தி விட்டு வைகோவை பேசும் படி சிலர் ஆலோசனை கூறினார்கள் . ஆனால் வைகோ அதற்கு மறுத்து எல்லோரும் பேசட்டும் என்று கூறி விட்டார் . மாநாட்டுக்கு வந்திருந்த வைகோவின் தாயார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரும் மலையில் நனைந்தபடி அமர்ந்திருந்தனர் .

அதிமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளரும் முன்னால் அமைச்சருமான . பன்னீர் செல்வம் கலந்து கொண்டார் . அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா , மதிமுக மாநாடு வெற்றிபெற அனுப்பிய வாழ்த்து செய்தியை வாசித்து விட்டு தனது பேச்சை தொடங்கினார் பன்னீர் செல்வம் .

" வைகோ நாடாளுமன்றத்தில் ஈழ தமிழர்குறித்து உரையாற்றிக் கொண்டிருந்த போது , அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி ஏதோ வேலையாக வெளியேற முற்பட்டார் . அதை பார்த்த வைகோ , பேச்சை நிறுத்தி விட்டு , மிஸ்டர் ராஜிவ் , நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இதை பேசுகிறேன் . முழுமையாக கேட்டு விட்டு செல்லுங்கள் ' என்றால் அதிரடியாக . அந்தளவிற்கு தைரியம் மிக்கவர் வைகோ . இப்படி ஒரு நபர் இருந்தால் தனது வாரிசுகளை மேலே கொண்டு வர முடியாது என்ற பயத்தில் தான் கருணாநிதி இவரை வெளியேற்றி விட்டார் . " என்று பன்னீர் செல்வம் குறிப்பிட்டார் .

மணி 10:30 தாண்டிய பிறகு தான் வைகோ பேச வந்தார் . காத்திருந்த தொண்டர்கள் மத்தியில் லேசான சலிப்பு ஏற்பட்டு போனது உண்மை .

வைகோவின் பேச்சில் முதலமைச்சர் நடத்தும் குடும்ப அரசியல் மற்றும் தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனைகள் விச்திரமாக இடம் பெற்றதோடு , ஈழ விவகாரமும் முக்கிய பங்கு வகித்தது . பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் . புலிகளின் போராட்டம் தொடரும் . தமிழ் ஈழம் மலரும் ' என்று தனது பேச்சில் குறிப்பிட்டார் வைகோ . வந்திருந்த மதிமுக தொண்டர்கள் பலர் , வழக்கம் போல் விடுதலை புலி பிரபாகரனின் படங்களை சட்டையில் குத்திக் கொண்டும் , கைகளில் ஏந்திக் கொண்டும் வந்திருந்தனர் . " மதிமுக கூடாரம் காலியாகி விட்டது " என்று திமுகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் வேளையில் , நல்ல கூட்டத்தை கூட்டி , நல்ல மழையிலும் , நள்ளிரவு வரையிலும் அந்தக் கூட்டத்தை காப்பாற்றிக் கொண்டது வைகோவின் வெற்றி என்றே கூறலாம் .
8 கருத்துக்கள்:

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா

S.A. நவாஸுதீன் said...

நல்ல பகிர்வு நண்பா

Suresh Kumar said...

Blogger ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா

October 3, 2009 1:21 PM
Delete
Blogger S.A. நவாஸுதீன் said...

நல்ல பகிர்வு நண்பா //////////////


நன்றி S.A. நவாஸுதீன் ,ஆ.ஞானசேகரன்

மதிபாலா said...

:)

மக்களும் , தமிழகமும் மறந்த வைகோவை மக்களும் , தமிழகமும் புறக்கணித்த துக்ளக் கட்டுரை எழுதி பாராட்டுவது பொருத்தமே.

Suresh Kumar said...

மதிபாலா said...

:)

மக்களும் , தமிழகமும் மறந்த வைகோவை மக்களும் , தமிழகமும் புறக்கணித்த துக்ளக் கட்டுரை எழுதி பாராட்டுவது பொருத்தமே.///////////////////////

நீங்களும் தான் நல்லா நினைக்கிறீங்க வைகோவை மக்கள் மறக்க வேண்டும் என்று அது தான் நடக்க வில்லை என்ற வருத்தம் தானே ...........

துக்ளக்கில் உள்ள படபிடிப்பு மட்டும் தான் இது மற்றபடி முராசொலிய தவிர எல்லா பத்திரிக்கைகளும் நடுநிலையா தான் திருச்சி மாநாட்டை பற்றி எழுதியது

Suresh Kumar said...

Hi suresa,

Congrats!

Your story titled 'திருச்சி மண்டல மாநாடு வைகோவின் வெற்றி' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 4th October 2009 09:30:01 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/120609

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team /////////////


நன்றி தமிளிஷ் வாசகர்களுக்கு

சங்கொலி said...

மதிமுகவின் திருச்சி மாநாடு அண்ணாவை முன்னிறுத்தி அண்ணா அவர்களுடன் அரசியல் செய்த திருச்சி மலர் மன்னன் பொழிச்சலூர் நடராஜன் மற்றும் ஹக்கீம் பாய் போன்றவர்களால் நடத்தப்பட்டது.

நான்கு லக்ஷம் பேர் கூடி இருந்த , அந்த மக்கள் திரளுக்கு மத்தியில் திருமதி எலீஷா சாண்டர் அவர்களின் ஈழ ஆதரவு உரை ஒளி பரப்பப்பட்டது.

ஆயிரம் பேரோ அல்லது ஐந்தாயிரம் பேரோ கூடும் பொது கூட்ட நிகழ்ச்சிக்கிகூட சட்டம் ஒழுங்கை காக்க நூறு இருநூறு காவலர்களை அனுப்பும் அரசு , மதிமுக கூட்டங்களுக்கு லக்ஷம் பேர்கள் வந்தாலும் , எப்போதும் அதிகபடியான காவலர்களை அனுப்பாது. எனென்றால் அது தேவையில்லை. காவல் துறைக்கும் அது நன்றாய் தெரியும்.

மதிமுக தொண்டனால் இதுவரை பொது மக்களுக்கு கடுகளவேனும் தொந்தரவு இருந்ததில்லை. வைகோ தொண்டர்களை அவ்வளவு பக்குவப்படுத்தி வளர்த்துள்ளார்கள்.

மதிமுக தொடங்கி கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஆகிறது. பேருந்தின் மீதோ அல்லது பொதுமக்களின் மீதோ இதுவரை ஒரு கல் வீச்சு சம்பவம் அல்லது அராஜக சம்பவம் என்று எதையும் யாரும் சுட்டிக்காட்ட முடியாது.


மதிபாலா அவர்களுக்கு :
அடுத்த மாநாடுக்கு உங்களுக்கு அழைப்பு அனுப்புகிறேன். லக்ஷ கணக்கில் கூடும் இளைஞர் அல்லது மாணவர் கூட்டத்தை பார்க்க உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

இந்த கூட்டங்கள் திமுக காஞ்சிவரத்தில் , செய்ததை போல , பிரியாணி பொட்டணம் கொடுத்தோ அல்லது லாரி வாடகைக்கு காசு கொடுத்து மற்றும் ஒரு நாள் சம்பளம் கொடுத்து அழைத்து வந்த கூட்டம் அல்ல.

'கூட்டம்' காட்ட வேண்டிய அவசியம் மதிமுக விற்கு இல்லை.
செயற்கையான போலியான அரசியலில் மதிமுகவிற்கு விருப்பம் இல்லை.

உண்மையாய் இருக்கும் ஒருவன் , ஊருக்கெல்லாம் நடிக்கும் ஆயிரம் பேரை விட பலமானவன்.
ஆனால் அத்தகைய பலசாலிகலே மதிமுகவில் லக்ஷகனக்கானோர் உள்ளனர்.சுரேஷ்குமார் அவர்களுக்கு நன்றி.

Muniappan Pakkangal said...

Vaiko,nalla vaaivpuhalai nazhuva vitta manithar.

Post a Comment

Send your Status to your Facebook