Saturday

காவி மயமாகும் கல்வியா?

இன்று தமிழக அரசு பதவியேற்றவுடன் மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் கல்வியில் கை வைத்திருக்கிறது. ஒவ்வெரு ஆட்சியையும் மாறும் போது பாட புத்தங்களை அரசியல் ஆக்கி கொண்டிருக்கிறார்கள். ஒவ்வெரு ஆட்சி வரும் போதும் அவர்களுக்கு தேவையானதை பாட புத்தகங்களில் புகுத்தும் வேலையை செய்து வருகிறார்கள்.




கடந்த ஆட்சியில் கல்வியாளர்கள், மாணவர் நலனில் அக்கறை கொண்டார்கள், இயக்கங்கள் போன்றவற்றின் வலியுறுத்தலாலும்  வேறு வழியின்றி கடந்த திமுக ஆட்சி சமச்சீர் கல்வியை அறிமுக படுத்தியது. திமுக ஆட்சி சமச்சீர் கல்வியை அறிமுக படுத்தியதாலும்   மெட்ரிக் பள்ளிகளின் முதலாளிகள் பயன் பெற வேண்டும் என்பதாலும் ராம கோபாலன் , சோ ராமசாமி போன்ற பாபனர்களின் தூண்டுதலாலும் தான் ஒரு பார்ப்பன் என்பதை நிருபிக்க சமச்சீர் கல்வியை தேவையில்லாத காரணத்தை சொல்லி நிறுத்தி வைக்க சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார் ஜெயலலிதா. 

கல்வியாளர்கள் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்ததின் விளைவாக உயர்  நீதிமன்றம்   சமச்சீர் கல்வியை நிறுத்த கொண்டு வந்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் தமிழக அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஒன்றாம் வகுப்பிற்கும் ஆறாம் வகுப்பிற்கும் இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என உத்தரவிட்டதோடு மற்ற வகுப்புகளுக்கு தொடர்வதை பற்றியும் பாட திட்டம் தயாரிப்பது பற்றியும் ஒரு குழு அமைத்து உயர் நீதிமன்றத்தில் அதன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணை பிறப்பித்தது. 
இந்த நிலையில் தமிழக அரசால் நியமிக்க பட்ட குழு உறுப்பினர்களை பார்க்கும் பொது கல்வி காவி மயமாகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அந்த குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் மெட்ரிக் பள்ளி முதலாளிகளும் பார்ப்பனர்களுமே. சமச்சீர் கல்வியில் திராவிட வரலாறு பற்றியும் திமுக தலைவர் கருணாநிதியின் கவிதையும் இருப்பதாக சொல்லி மாற்றம் செய்ய வேண்டும் என சொல்லுகிறார்கள். அதில் திமுக தலைவர் கருணாநிதியின் கவிதை இடம் பெற கூடாது என்பதில் ஒட்டு மொத்த தமிழகமும் ஒரே நிலைப்பாடை கொண்டிருக்கலாம். தமிழக்ரளுக்கு துரோகம் செய்த கருணாநிதியின் கவிதையை தமிழக மாணவர்கள் படிப்பது அவர்களின் அறிவுக்கு பங்கமாக முடியும் இதில் மாற்று கருத்து இருக்க முடியாது. 

ஆனால் அதே நேரம் திராவிடம் பற்றியும் தமிழக வரலாறு பற்றியும் இருக்கும் பகுதிகளை மாற்ற வேண்டும் என மத வெறியர்கள் கூக்குரலிட்டு கொண்டிருக்கிறார்கள். தந்தை பெரியாரின் கொள்கைகள்  தான் இன்று சமூகத்தில் மிக பெரிய மாற்றத்தை உருவாக்கி மக்களுக்கு பகுத்தறிவை புகட்டியிருக்கு. மூடநம்பிக்கையில் மூழ்கி கிடந்த மக்களை மனிதனாக்கிய பெரியாரையும் பெரியாரின் கொள்கையையும் மதவாதிகள் எதிர்ப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.       

கடந்த பிஜேபி ஆட்சியில் மத்திய பள்ளிகள் காவிமயமானது போல் தமிழக கல்வியும் காவிமயமாக வேண்டும் என மதவாதிகள் கூச்சலிட்டு கொண்டிருக்கும் வேளையில் தமிழக அரசின் உறுப்பினர் நியமனம் மேலும் சந்தேகத்தை எழுப்புகிறது. அடித்தட்டு மக்கள் நல்ல கல்வி கற்று விட கூடாது என்பதில் சிலர் குறியாக இருக்கிறார்கள். மீண்டும் ஒரு அடிமை சாஸ்திரமும் மனு தர்மத்தையும் மக்கள் மத்தியில் புகுத்த சிலர் முயற்ச்சிக்கிறார்கள்.  

தமிழர்களுக்கு எதிராகவும் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும் அமையும் இந்த பாட திட்டங்கள் வருமானால் அது தமிழினத்திற்கே மிக பெரிய வீழ்ச்சியை உருவாக்கும். இந்த நேரத்தில் மேலும் நாம் விழிப்புணர்வோடு செயலாற்றி கல்வியை காப்போம். யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் சுய சிந்தனைகளை கல்வியில் புகுத்தாமல் பொதுவான கல்வி திட்டம் உருவாக்க வேண்டும் அது மாணவர்களின் அறிவு திறனையும் ஆராய்ச்சியையும் வளர்க்கும் விதமாக அமைய வேண்டும். அரசியல் கலப்பில்லாத ஒரு குழு அமைத்து அந்த குழுவின் மூலம் பாட திட்டங்களை செயல் படுத்த வழிவகை செய்ய வேண்டும்.       

4 கருத்துக்கள்:

புகல் said...

/*
தமிழக்ரளுக்கு துரோகம் செய்த கருணாநிதியின் கவிதையை தமிழக மாணவர்கள் படிப்பது அவர்களின் அறிவுக்கு பங்கமாக முடியும் இதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
*/
கலைஞர் ஒருகாலத்தில் இலங்கை போராட்டத்தை தீவிரமாக ஆதரித்தவர்தான் ஆனால் இன்று சுழ்நிலைகைதியாகி விட்டார்.
தமிழக்ரளுக்கு துரோகம் செய்த கருணாநிதியின் குற்றத்தை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள் எனபதில் எந்த மாற்று கருத்து இருக்க முடியாது. அதற்காக அவர் எழுதிய கவிதையை தமிழர்கள் புறக்கணிப்பார்கள் என்பதை எற்க முடியாது.
மேலும் கலைஞரின் கவிதையைகூட எற்றுகொள்ளலாம், ஆனால்
அடிமை சாஸ்திரமும் மனு தர்மத்தையும் தமிழக மக்கள் மண்டையில் புகுத்த நினைக்கும் பார்ப்பன கூட்டத்தை எற்றுகொள்ள முடியாது.

/*
சமச்சீர் கல்வி: 9 உறுப்பினர் குழு
*/
இதில் பாதி பேர் வடநாட்டவர்கள் மிதம் உள்ளவர்கள் பார்ப்பன கூட்டங்கள் இவர்கள்தான் தமிழக மக்களின் கல்வியை தீர்மானிப்பவர்களா என்ன ஒரு கொடுமைடா. தமிழர்கள் வருங்காலத்தில் தன்மானத்துடன் வாழவேண்டும் என்றால் எந்த ஒரு விசயமானாலும் சரி நல்லதோ கெட்டதோ அதை தமிழர்களே தீர்மானிப்பவர்களாய் இருக்க வேண்டும், இறுதி முடிவு அவர்களே எடுக்க வேண்டும்.
பார்ப்பனன், அன்று ஆங்கிலம் படித்து வெள்ளகாரனுக்கு சொம்பு பிடித்தான், இன்று இந்தி படித்துகொண்டு தில்லிகாரனுக்கு சொம்பு பிடிக்கிறான், தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் என்றுமே உண்மையாக இருந்ததில்லை. பல ஆயிரம் எ-டு சொல்லலாம்
கோயில்களில் தமிழை ஒலிக்கவிடுவதில்லை, எல்லோரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று அரசு சட்டத்தை எதிர்ப்பது,
பழங்குடி இலங்கை தமிழர்கள் தங்கள் விடுதலைக்காக போராடினால் வெள்ளைகாரன் காலத்தில் போன தமிழர்கள்தான் தனிநாடு கேட்பதாக திருத்தி பரப்புகிறார்கள்

Suresh Kumar said...

unkal karuththukkalodu oththu pokiren. aanal soolnilai kaithi entru solli karunanithi eduththa nilaippaattai niyaya paduththuvathu sariyillai entre ninaikkiren. nantri

saleem said...

கலைஞர் ஒருகாலத்தில் இலங்கை போராட்டத்தை தீவிரமாக ஆதரித்தவர்தான் அதனால் அவர் ஆட்சி பார்பனால் பரி போனது மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வர முடியவில்லை.
ஜெயலலிதா இலங்கை தமிழர் சிங்கள ராணுவத்தால் கொலை செய்யும் பொது அதற்க்கு ஆதரவ்கா குரல் குடுத்தவர் இந்த பாப்பாத்தி
சும்மாகலைஞர்ரைகுறை சொல்லுவதை விட்டு இந்த பாபத்தி என்ன செய்கின்றார் என்பதை பாரங்கள்.

Suresh Kumar said...

ஒரு காலத்தில் ஆதரித்தார் சரி ? ஏன் இப்போது ஆதரிக்க வில்லை? ஆதரிக்க வில்லை என்றாலும் துரோகம் செய்யாமல் இருக்கலாம் தானே. கருணாநிதியின் துரோகத்தால் சாகடிக்க பட்ட ஒரு லட்சம் தமிழர்களை மறக்க சொல்லுகிறீர்களா ? ஜெயலலிதா கருணாநிதி இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் கட்சி தான் வேறு வேறு என்றாலும் இருவரும் தமிழர்களுக்கு எதிராக உடன்பாடு கொண்டு தான் இருக்கிறார்கள். நமக்கு தேவை மாற்றம். கருணாநிதியை இனியும் தாங்கி பிடிப்பதை விட்டு விட்டு திராவிட இயக்கம் காக்க புதிய தலைமையின் கீழ் அணிவகுப்போம். http://www.sureshkumar.info/2011/06/blog-post_20.html

Post a Comment

Send your Status to your Facebook