Monday

திராவிட இயக்கத்தை காக்க வைகோ பின்னால் அணி திரள வேண்டும்

திராவிட இயக்கம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு எதிராக உருவாக்க பட்ட இயக்கம். அடிமை தனம் ஒழியவும் சுயமரியாதையை காக்கவும்  உருவான இயக்கம். இன்று மீண்டும் ஆதிக்க சக்திகளுக்கு இரையாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட துவங்கியிருக்கிறது.  பெரியார்  பகுத்தறிவு சிந்தனைகளை வளர்ப்பதிலும் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதிலும் மக்கள் மத்தியில் மிக பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சாதி ஒழிப்பின் மூலம் மேல் சாதி கீழ் சாதி என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் ஒரே சாதி என்ற நிலையை உருவாக்கவும் மேல் சாதியினரால் அடிமையாக்க படும் கீழ் சாதி மக்களின் விடுதலைக்காவும் திராவிட இயக்கம் வாயிலாக போராடினார்.


அடிமை தனமும்  ஆதிக்க சக்திகளும் காங்கிரஸ் கட்சியின் மூலதனமே காங்கிரஸ் கட்சி தான் என்பதால் காங்கிரஸ் கட்சியை தீவிரமாக எதிர்த்தார் பெரியார். காங்கிரஸ் கட்சியை தமிழகத் திலிருந்தே ஒழிக்க வேண்டும். திராவிடர்கள் கையில் ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்று திராவிட முன்னேற்ற கழகம் துவங்கினார் அண்ணா.    இடையறாத பிரச்சாரம் விழிப்புணர்வு மூலம் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்றது அண்ணா முதல்வரானார். இந்திய வரலாற்றிலேயே ஒரு மாநில கட்சி ஆட்சியை பிடித்தது முதலில் தமிழகத்தில் தான். இந்த வரலாற்று பெருமைக்கு காரணம் தமிழக மக்கள் மத்தியில் உருவாகியிருந்த திராவிட இயக்க உணர்வுகள். திராவிட இயக்கத்தின் விடுதலை வேட்கை பல காலமாக அடங்கியிருந்த உணர்வுகள் வெளிப்பட்டது. இந்தி மொழியை கட்டாய படுத்தி தமிழ் நாட்டில் திணிக்க நினைத்த போது மாணவர்கள் கிளர்ந்தெழுந்தது இந்திய வரலாற்றிலேயே மிக பெரிய கிளர்ச்சியாக அமைந்தது.

இப்படி பலரின்   தியாகத்தோடு வளர்ந்த திராவிட இயக்கம் காலத்தின் கோலத்தால் மிக விரைவிலேயே இயற்கை அண்ணாவை எடுத்து விட்டதால் திராவிட இயக்க தலைவர்கள் வரிசையில் 17  வது இடத்தில் இருந்த கருணாநிதி கட்சியை சூழ்ச்சியின் மூலம் கைப்பற்றினார்.    ஆட்சியை கைப்பற்றிய அன்றிலிருந்தே தமிழகத்தை பற்றியோ திராவிட இயக்கத்தை பற்றியோ சிந்திக்காத கருணாநிதி தன்  குடும்பம் பற்றியே சிந்தித்தார். தன் குடும்ப வளர்ச்சிக்காக திராவிட இயக்கத்தையும் தமிழியை பயன் படுத்த துவங்கினார். அதன் விளைவாக தன் மகனுக்கு போட்டியாக எம்ஜிஆர் வந்து விடுவார் என கருதி எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கினார். முதல் முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்ற போதே ஊழல் செய்து சர்க்காரிய கமிசனால் விஞ்ஞான கள்ளன் என்று அழைக்க பட்டார். 

எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரை எம்ஜிஆரின் அண்ணா  திராவிட   முன்னேற்ற கழகம் ஆட்சியை தக்கவைத்து கொண்டது. எந்த காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என அண்ணா கருதி திமுகவை தோற்றுவித்தாரோ அந்த நோக்கத்தை அடியோடு குப்பையில் போட்டு விட்டு பதவி ஆசைக்காக இரு கழகங்களும் மாறி மாறி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தன. 

எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் திராவிட யக்கம் திராவிட கொள்கைகள் அடிபட்டு போயின. எந்த ஆதிக்க சக்தியை எதிர்த்து திராவிட இயக்கம் செயல் பட்டதோ அதே திராவிட இயக்கத்தின் வழியாக ஆதிக்க சக்திகள் புகுந்தன. அன்று முதல் இன்றுவரை தமிழக அரசியலை ஆதிக்க சக்திகள் ஆட்டி படைக்கின்றன. தமிழ் திராவிடம் என்று எந்நேரமும் சொல்லும் கருணாநிதி மீண்டும் குடும்ப கட்டுபாட்டுக்குள் கட்சியை கொண்டு வர வைகோவை இல்லாத ஒரு பழியை சொல்லி கட்சியை விட்டு நீக்கினார்.        

அந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க ஆதிக்க சக்திகளின் உதவியை நாடியும் காங்கிரஸ் கட்சி தலைவர் மூப்பனாரால் துவங்க பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியை பிடித்தார். ஒவ்வெரு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் கட்சியை வளர்த்து விட்டும் தானும் பலனடைந்து கொண்டன இரண்டு கழகங்களும். கருனாநிதியாலோ ஜெயலளிதாவாலோ  திராவிட இயக்க  கொள்கைகளை தூக்கி பிடிக்க முடியவில்லை . அண்ணா துவங்கிய திமுகவை இந்திய அளவில் கெட்ட பெயரை   உருவாக்கும் விதமாக தன் பிள்ளைகள் மூலம் ஊழல் செய்தார். திமுகவின் ஐம்பெரும் தலைவர்களாக கருணாநிதி , கருணாநிதியின் பிள்ளைகள் , பேரன் ஆகியோர் விஸ்வரூபம் எடுத்தனர். அதன் விளைவாக இன்று இரண்டு லட்சம் கோடி ஊழல் ஊழலுக்கு பரியாகரமாக ஈழ தமிழர்களை கொல்ல காங்கிரஸ் கட்சிக்கு செய்த உதவிகள் ஏராளம். ஆனால் இன்று தமிழகத்தில் யாருமே அனுதாப பட முடியாத அளவிற்கு கனிமொழி ஜெயிலில் இருக்கிறார். 

இந்த நிலையில் கருணாநிதி மற்றும் குடும்ப உறுப்பினர்களால் லட்சோப லட்சம் உறுதி மிக்க தொண்டர்கள் கொண்ட திராவிட இயக்கத்தையும்  திமுகவையும் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இன்றும் திமுக என்ற பெயருக்காக உறுதிமிக்க தொண்டர்கள் திமுகவில் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களின் ஒரே கவலை திமுக அழிந்து விடுமோ என்பது தான். இந்த நிலையில் திராவிட இயக்கத்தில் மாற்றம் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். பெரியாரின் பகுத்தறிவு கொள்கையில் அண்ணாவின் வழியில் இன்றுவரை பயணித்து வரும் வைகோ பின்னால் ஒவ்வெருவரும் அணி திரள வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. திமுகவின் தற்போதைய தலைவரால் தன் மகளை எப்படி வெளியே எடுப்பது என்ற கவலை தானே தவிர தமிழகம் பற்றியோ திராவிட இயக்கம் பற்றா எந்த கவலையும் இல்லை. இந்த நிலையில் அதிமுகவிற்கு மாற்று சக்தியாக செயல்படும் தகுதியை திமுக இழந்ததால் அந்த பணியை வைகோ தலைமையில் மதிமுக செய்யும். சுயரியாதையை இழந்து கருணாநிதி இருக்கும் வேளையில் சுயமரியாதை தான் முக்கியம் என்று தேர்தலையை துணிந்து புறக்கணித்த தலைவன் வைகோ தலைமையில் கீழ் திராவிட இயக்கத்தை காக்கவும் தமிழினத்தை காக்கவும்  திராவிட இயக்கம் பயணிக்க வேண்டும்! செயல் படுவோம்.             

8 கருத்துக்கள்:

வின்னர் said...

இந்த நிலையில் அதிமுகவிற்கு மாற்று சக்தியாக செயல்படும் தகுதியை திமுக இழந்ததால் அந்த பணியை வைகோ தலைமையில் மதிமுக செய்யும். சுயரியாதையை இழந்து கருணாநிதி இருக்கும் வேளையில் சுயமரியாதை தான் முக்கியம் என்று தேர்தலையை துணிந்து புறக்கணித்த தலைவன் வைகோ தலைமையில் கீழ் திராவிட இயக்கத்தை காக்கவும் தமிழினத்தை காக்கவும் திராவிட இயக்கம் பயணிக்க வேண்டும்! செயல் படுவோம்.///////////////////////




சரியாக சொல்லியிருக்கிறீர்கள் காலத்தின் கட்டாயத்தை புரிந்து திராவிட இயக்க தோழர்கள் செயல் பட வேண்டும்.

Suresh Kumar said...

உண்மை தான் வின்னர் திராவிட இயக்கம் காக்க பட வேண்டும். அதற்கு ஒரே வழி வைகோ தலைமையை ஏற்பது தான்.நன்றி உங்கள் கருத்திற்கு

Anonymous said...

எத வச்சி சொல்றீங்க ............?

Anonymous said...

Super Anne..... unkal eluththukkal arumai. by vincent

vijayan said...

ஊழலை தமிழ்நாட்டில் அறிமுகபடுத்தியதே அண்ணாதுரையின் கீழ் இருந்த தி.மு.க தான்.சென்னை மாநகராட்சியை 1960 களில் கைபற்றிய தி.மு.க பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த ஊழல் குப்பை லாரி வாங்கிய ஊழல்.அப்போதைய மேயர் முனுசாமி ஆவார்.அப்புறம் மஸ்டர் ரோல் ஊழல் வந்தது,இன்று அது லட்சம் கோடிகளை நெருங்கி உள்ளது.தி.மு.க வினால் தமிழ் நாட்டிற்க்கு கிடைத்த நன்மைகள் 1 .சாராயம்,கட்டை பஞ்சாயத்து,அப்பப்போ லாட்டரி,தனியார் ஆங்கில பள்ளிகள் ,பழைய பாளையகாரர்களை போல மாவட்ட மந்திரிகள் அவர் குடும்பத்தினர்,தமிழனின் தணியா சினிமா மோகம்.தி.மு.க இனி தலை எடுக்காது,கோர்ட்க்கு போகத்தான் இனி நேரம்.அடுத்து ஒழிக்க வேண்டியது admk .வை.கோ பேசாமல் மீசைக்கு சாயம் விக்கும் தொழில் செய்யலாம்.

Suresh Kumar said...

@Vijayan ///

ஒ உங்க ஐடியா நல்லா இருக்கு ஈழ தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் அழித்தது போல் எல்லோரையும் அழிக்க வேண்டும்.அப்படியென்றால் காங்கிரஸ் வர வேண்டும் அப்படி தானே.

நீங்கள் மேலே சொல்லியுள்ள எல்லாமே அண்ணா ஆட்சிக்கு பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் தான் சாராய கடை திறந்ததும் , கட்ட பஞ்சாயத்து இவைகள் அனைத்தும் கருணாநிதி காலத்தில் எற்பட்டவைகள். அதை தான் நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். கருணாநிதி திராவிடத்தை சொல்லியே தமிழகத்தை சீரளித்ததொடு தன் குடும்பத்தை வளர்த்தார் அதற்காக காலம் முழுவதும் நீதிமன்றம் செல்லலாம்.

கருணாநிதி செய்த தவறுக்காக திராவிட இயக்கம் இல்லையென்று சொல்ல முடியுமா? அண்ணா அரசியல் நடத்தியதை போல் மக்களையும் தொண்டர்களையும் நம்பி எந்தவொரு தொழிலதிபர்களிடமும் கட்சி நடத்த கையேந்தாமல் தொண்டர்களின் காசின் கட்சி நடத்தி மக்களை நேரடியாக தினமும் சந்தித்து எதிர்கட்சியினர் ஓய்வெடுத்து கொண்டாலும் ஓயவேடுக்காலம் நாள் முழுதும் மக்களுக்கு உழைத்து கொண்டிருக்கும் வைகோவின் செயல்பாடும் மீடியா பலம் இல்லாத காரணத்தால் வெளியில் தெரியாமல் போகலாம். ஆனால் காலம் மாறும் போது மக்களுக்கு உண்மை தெரியும் போது எந்த மீடியாவின் சக்தியும் இல்லாமல் திராவிட இயக்கம் வைகோ தலைமையில் மீண்டு எழும்.

திராவிட இயக்கம் காக்க படவேண்டியது காலத்தின் கட்டாயம் அப்போது அண்ணா போன்று சுயநலம் இல்லாத தனிமனித ஒழுக்கம் உடைய வைகோ போன்ற தலைவர் தலைமையேற்க வேண்டும்.

Anonymous said...

hello vijayan unkalathu karuthu ovvoru tamilanaium kevalapaduthura maathiri irukku... anna avarkal illaiyendraal kongress'in athikaarathil tamilagam irunda maanilam aaghirukkum....

Anonymous said...

hai suresh anna.... thiraavida varalaru theriyathavarkalukku ungalai pondravarkalum, vaiko avrkalal mattume puriya vaikka mudium.. unkalathu muyarchikku ennaipondra thambikalin aatharavu endrume irukkum

Post a Comment

Send your Status to your Facebook