இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label சிதம்பரம். Show all posts
Showing posts with label சிதம்பரம். Show all posts
Thursday
சரி சிதம்பரம் பதவிய எப்ப பறிப்பீங்க?
எழுதியது
Suresh Kumar
Labels:
2G அலைவரிசை ஊழல்,
அரசியல்,
சிதம்பரம்,
தயாநிதி மாறன்
எழுதிய நேரம்
Thursday, July 07, 2011
பொதுவா யாரையாவது கைது செய்தா இரண்டு பேராவது அனுதாப படுவாங்க. ஆனால் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ராஜா திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் பிள்ளை கனிமொழி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்த பின்னர் கருணாநிதியை தவிர யாருமே அனுதாப படவில்லை. ராஜாவை கைது செய்ய போகிறார்கள் என்றவுடன் தலித் அரசியலை முன்னெடுத்தார். இதற்கு எடுபிடியாக வீரமணியும் சேர்த்து கொண்டார் கலைஞர். பின்னர் தனது துணைவியாரின் மகள் கனிமொழிக்கு கம்பி எண்ண வேண்டிய நிலைமை வரும் என்றவுடனே எல்லா தவறும் ராஜா மீது தான் என்று வாதம் வைக்க பட்டது. இதன் மூலம் ஏற்கனவே தலித் என்று சொன்னது அவர்களாலே உடைந்து போனது.
கனிமொழி உள்ளே இருக்கும் போது தயாநிதி எப்படி வெளியே சுற்றலாம் என்று நினைத்து கொண்டிருந்த கருணாநிதிக்கு அல்வா சாப்பிட்டது போல் தயாநிதியும் ஊழல் செய்திருக்கிறார் என்று சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து இன்று தயாநிதியின் அமைச்சர் பதவி பறிக்க பட்டது. தயாநிதி ஊழல் செய்திருக்கிறார் என்பது ஏற்கனவே பலரால் சொல்ல பட்டது தான். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் செய்த ஊழலுக்கு இப்போது தான் பதவி நீக்க பட்டிருக்கிறார் என்பது எவ்வளவு பிந்தைய நடவடிக்கை என்று தான் நினைக்க தோன்றுகிறது.
![]() |
என்னமா சிரிக்கிறாரு இப்போ இவர பார்த்து மக்கள் சிரிக்கிறாங்க |
தயாநிதி மாறன் பிரபல தொழிலதிபர்கள் டாட்டா ஏர்செல் சிவசங்கரன் அவர்களை தன் பதவியை வைத்து மிரட்டினார் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே வைகோ ஆதாரபூர்வமாக தெரிவித்தார். அதே போல் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாஞ்சில் சம்பத் அவர்களின் பேச்சை கேட்போருக்கு இந்த விசயங்கள் அத்து படி . மிகவும் அருமையாக எல்லோரும் புரியும் படியாக நகைச்சுவையாக ஏர்செல் நிறுவனத்தை கைப்பற்ற தொலை தொடர்பு துறை மூலம் அந்த நிறுவனத்திற்கு தயாநிதி மாறனால் கொடுக்க பட்ட நெருக்கடிகளை விளக்குவார். அது இன்றும் என்னை விட்டு அகலாமல் இருக்கிறது. ஏர்செல் சிம் வைத்திருப்பவர் அருகில் நின்றாலும் , நெட்வொர்க் நல்ல நிலையில் இருந்தாலும் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார் என்றே வரும். அந்த அளவிற்கு குறைவான திறன் கொண்ட அலை தான் கொடுக்க பட்டிருந்தது. அந்த நேரங்களில் பலர் ஏர்செல் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கே தொடர்பு கொண்டு உங்கள் நிறுவனத்தை சன்டிவி வாங்க போகிறார்களாம் என்று கிண்டலாக கேட்டவர்கள் கூட உண்டு .
இப்படி தயாநிதி மாறன் தன் பதவியை தவறாக பயன்படுத்துகிறார் என்று தெரிந்த பின்னரும் நடவடிக்கை எடுக்க இத்தனை காலம் ஆகியிருக்கிறது என்றால் இந்திய சட்டத்தில் தான் பிரச்சனை என்று நினைப்பதா இல்லை தங்களை சுத்தமானவர்கள் என்று காட்டி கொள்பவர்கள் தான் சட்டத்தை தங்களுக்கு ஏற்ற வகையில் பயன் படுத்துகிறார்கள் என்று நினைப்பதா? ... ஒரு வழியாக தயாநிதியின் பதவி பறிக்க பட்ட பின்னால் இனி எந்த இடையூறும் இல்லாமல் சட்டம் தனது கடமையை செய்து மிக விரைவில் தீகாருக்கு தயாநிதி செல்வார் அதில் பொதுமக்களாகிய நமக்கு மகிழ்ச்சி தான். இந்த நிலையில் தயாநிதி மாறனை வாழ்த்தி அனுப்ப வேண்டியது நமது கடமை. அங்கு சென்றாவது திருந்துவாரா என்று பார்ப்போம் .
தயாநிதிக்கு, ராஜாவுக்கு, கனிமொழிக்கு 2G ஊழலில் எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதே அளவு பங்கு நிதி துறை அமைச்சராக இருந்த சிதம்பரத்திற்கும் உண்டு. திமுகவினர் மட்டும் தான் ஊழல் செய்தனர் என்று சொல்வது ஏற்க முடியாது. இந்த ஊழல் ஒரு தனி மனிதனால் செய்ய முடியாது. இது ஒரு கூட்டு கொள்ளை இதில் காங்கிரஸ் கட்சியினருக்கும் பங்கு உண்டு. பங்கு பெற வில்லை என்றால் கூட நாட்டிற்கு இவ்வளவு இழப்புகள் ஏற்பட பிரதமரும் நிதி அமைச்சரும் காரணமாக இருந்துள்ளார்கள். இவர்கள் பெறும் தண்டனைகளை அவர்களும் பெற்று ஆக வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த சிதம்பரத்தை வெற்றி பெற வைக்க 100 கோடி ருபாய் வரை கைமாறியதாக செய்திகள் வந்தன. அதே போல் இந்தியாவில் நடைபெறுகிற பெரும்பாலான ஆன்லைன் வர்த்தகத்தில் சிதம்பரத்தின் மகனுக்கு அதிக பங்குகள் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதே போல் சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது வருமான வரிதுறை மூலம் நடவடிக்கை எடுக்க பட்ட தொழிலதிபர்களுக்கு ஆதரவாக நிதி அமைச்சரின் மனைவி நளினி சிதம்பரம் வாதாடி இருக்கிறார். அப்படியென்றால் நளினி மூலம் சிதம்பரம் லஞ்சம் பெற்றார் என்று தானே நினைக்க தோன்றும்.
![]() |
நீங்க எப்ப சார் .......? |
இந்த செய்திகள் எல்லோருக்கும் தெரிந்த செய்திகள் தான். ஆனால் சிபிஐ க்கு தெரிய இன்னும் எவ்வளவு நாட்கள் தேவை படுமோ? என்றாவது ஒரு நாள் தெரியாமல் போகாது அது மட்டும் நிச்சயம். தாயாநிதியின் பதவி பறிக்க பட்டது போல் சிதம்பரத்தின் பதவியும் பறிக்க பட வேண்டும். சிதம்பரத்தையும் நீதி மன்றம் முன் சிபிஐ நிறுத்த வேண்டும்... அந்த நாளை எதிர் நோக்கி மக்கள் ..
Subscribe to:
Posts (Atom)