இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label 2G அலைவரிசை ஊழல். Show all posts
Showing posts with label 2G அலைவரிசை ஊழல். Show all posts
Thursday
சரி சிதம்பரம் பதவிய எப்ப பறிப்பீங்க?
எழுதியது
Suresh Kumar
Labels:
2G அலைவரிசை ஊழல்,
அரசியல்,
சிதம்பரம்,
தயாநிதி மாறன்
எழுதிய நேரம்
Thursday, July 07, 2011
பொதுவா யாரையாவது கைது செய்தா இரண்டு பேராவது அனுதாப படுவாங்க. ஆனால் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ராஜா திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் பிள்ளை கனிமொழி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்த பின்னர் கருணாநிதியை தவிர யாருமே அனுதாப படவில்லை. ராஜாவை கைது செய்ய போகிறார்கள் என்றவுடன் தலித் அரசியலை முன்னெடுத்தார். இதற்கு எடுபிடியாக வீரமணியும் சேர்த்து கொண்டார் கலைஞர். பின்னர் தனது துணைவியாரின் மகள் கனிமொழிக்கு கம்பி எண்ண வேண்டிய நிலைமை வரும் என்றவுடனே எல்லா தவறும் ராஜா மீது தான் என்று வாதம் வைக்க பட்டது. இதன் மூலம் ஏற்கனவே தலித் என்று சொன்னது அவர்களாலே உடைந்து போனது.
கனிமொழி உள்ளே இருக்கும் போது தயாநிதி எப்படி வெளியே சுற்றலாம் என்று நினைத்து கொண்டிருந்த கருணாநிதிக்கு அல்வா சாப்பிட்டது போல் தயாநிதியும் ஊழல் செய்திருக்கிறார் என்று சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து இன்று தயாநிதியின் அமைச்சர் பதவி பறிக்க பட்டது. தயாநிதி ஊழல் செய்திருக்கிறார் என்பது ஏற்கனவே பலரால் சொல்ல பட்டது தான். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் செய்த ஊழலுக்கு இப்போது தான் பதவி நீக்க பட்டிருக்கிறார் என்பது எவ்வளவு பிந்தைய நடவடிக்கை என்று தான் நினைக்க தோன்றுகிறது.
![]() |
என்னமா சிரிக்கிறாரு இப்போ இவர பார்த்து மக்கள் சிரிக்கிறாங்க |
தயாநிதி மாறன் பிரபல தொழிலதிபர்கள் டாட்டா ஏர்செல் சிவசங்கரன் அவர்களை தன் பதவியை வைத்து மிரட்டினார் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே வைகோ ஆதாரபூர்வமாக தெரிவித்தார். அதே போல் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாஞ்சில் சம்பத் அவர்களின் பேச்சை கேட்போருக்கு இந்த விசயங்கள் அத்து படி . மிகவும் அருமையாக எல்லோரும் புரியும் படியாக நகைச்சுவையாக ஏர்செல் நிறுவனத்தை கைப்பற்ற தொலை தொடர்பு துறை மூலம் அந்த நிறுவனத்திற்கு தயாநிதி மாறனால் கொடுக்க பட்ட நெருக்கடிகளை விளக்குவார். அது இன்றும் என்னை விட்டு அகலாமல் இருக்கிறது. ஏர்செல் சிம் வைத்திருப்பவர் அருகில் நின்றாலும் , நெட்வொர்க் நல்ல நிலையில் இருந்தாலும் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார் என்றே வரும். அந்த அளவிற்கு குறைவான திறன் கொண்ட அலை தான் கொடுக்க பட்டிருந்தது. அந்த நேரங்களில் பலர் ஏர்செல் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கே தொடர்பு கொண்டு உங்கள் நிறுவனத்தை சன்டிவி வாங்க போகிறார்களாம் என்று கிண்டலாக கேட்டவர்கள் கூட உண்டு .
இப்படி தயாநிதி மாறன் தன் பதவியை தவறாக பயன்படுத்துகிறார் என்று தெரிந்த பின்னரும் நடவடிக்கை எடுக்க இத்தனை காலம் ஆகியிருக்கிறது என்றால் இந்திய சட்டத்தில் தான் பிரச்சனை என்று நினைப்பதா இல்லை தங்களை சுத்தமானவர்கள் என்று காட்டி கொள்பவர்கள் தான் சட்டத்தை தங்களுக்கு ஏற்ற வகையில் பயன் படுத்துகிறார்கள் என்று நினைப்பதா? ... ஒரு வழியாக தயாநிதியின் பதவி பறிக்க பட்ட பின்னால் இனி எந்த இடையூறும் இல்லாமல் சட்டம் தனது கடமையை செய்து மிக விரைவில் தீகாருக்கு தயாநிதி செல்வார் அதில் பொதுமக்களாகிய நமக்கு மகிழ்ச்சி தான். இந்த நிலையில் தயாநிதி மாறனை வாழ்த்தி அனுப்ப வேண்டியது நமது கடமை. அங்கு சென்றாவது திருந்துவாரா என்று பார்ப்போம் .
தயாநிதிக்கு, ராஜாவுக்கு, கனிமொழிக்கு 2G ஊழலில் எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதே அளவு பங்கு நிதி துறை அமைச்சராக இருந்த சிதம்பரத்திற்கும் உண்டு. திமுகவினர் மட்டும் தான் ஊழல் செய்தனர் என்று சொல்வது ஏற்க முடியாது. இந்த ஊழல் ஒரு தனி மனிதனால் செய்ய முடியாது. இது ஒரு கூட்டு கொள்ளை இதில் காங்கிரஸ் கட்சியினருக்கும் பங்கு உண்டு. பங்கு பெற வில்லை என்றால் கூட நாட்டிற்கு இவ்வளவு இழப்புகள் ஏற்பட பிரதமரும் நிதி அமைச்சரும் காரணமாக இருந்துள்ளார்கள். இவர்கள் பெறும் தண்டனைகளை அவர்களும் பெற்று ஆக வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த சிதம்பரத்தை வெற்றி பெற வைக்க 100 கோடி ருபாய் வரை கைமாறியதாக செய்திகள் வந்தன. அதே போல் இந்தியாவில் நடைபெறுகிற பெரும்பாலான ஆன்லைன் வர்த்தகத்தில் சிதம்பரத்தின் மகனுக்கு அதிக பங்குகள் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதே போல் சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது வருமான வரிதுறை மூலம் நடவடிக்கை எடுக்க பட்ட தொழிலதிபர்களுக்கு ஆதரவாக நிதி அமைச்சரின் மனைவி நளினி சிதம்பரம் வாதாடி இருக்கிறார். அப்படியென்றால் நளினி மூலம் சிதம்பரம் லஞ்சம் பெற்றார் என்று தானே நினைக்க தோன்றும்.
![]() |
நீங்க எப்ப சார் .......? |
இந்த செய்திகள் எல்லோருக்கும் தெரிந்த செய்திகள் தான். ஆனால் சிபிஐ க்கு தெரிய இன்னும் எவ்வளவு நாட்கள் தேவை படுமோ? என்றாவது ஒரு நாள் தெரியாமல் போகாது அது மட்டும் நிச்சயம். தாயாநிதியின் பதவி பறிக்க பட்டது போல் சிதம்பரத்தின் பதவியும் பறிக்க பட வேண்டும். சிதம்பரத்தையும் நீதி மன்றம் முன் சிபிஐ நிறுத்த வேண்டும்... அந்த நாளை எதிர் நோக்கி மக்கள் ..
Wednesday
கலைஞர் குடும்பத்திற்காக தற்கொலை செய்யும் அடிமைகள்
உலக மகா ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய ராஜாவின் பினாமியும் நண்பனுமான சாதிக் பாட்சா இன்று தற்கொலை செய்து கொண்டது மேலும் பரபரப்பையும் பதட்டத்தையும் உருவாக்கியிருக்கிறது . பல கட்ட விசாரணைகள் நடந்து முடிந்த நிலையில் இந்த ஊழல் கலைஞரின் குடும்பம் தான் சம்மந்த பட்டிருப்பதாக எல்லோருக்கும் தெரிந்து விட்ட நிலையில் சாதிக் பாட்சாவின் தற்கொலை மேலும் பல உண்மைகளை வெளிபடுத்த இருக்கிறது .
இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முக . ஸ்டாலினின் நண்பர் என அறியப்பட்ட ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதும் பிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது . அரசியல் கொலைகளை கேள்வி பட்டிருப்போம் . ஆனால் இந்த மாதிரியான திமுக அரசியல் கொலைகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும் .
தேர்தல் நெருங்கி விட்டதால் எதிர்கட்சிகள் இதையே தேர்தல் பிரச்சாரமாக செய்வார்கள் என்பதால் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது . மாநில அரசு உத்தரவிடாவிட்டாலும் சிபிஐ விசாரிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை தான் . சாதிக் பாட்சா சிபிஐ விசாரணையின் பிடியில் உள்ளவர் . ஏற்கனவே சிபிஐ சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்திருக்கிறது .
உலகையே வியக்க வைத்த ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்த ராஜாவின் நெருங்கிய நண்பர் தான் சாதிக் பாட்சா . இவர் ராஜா மந்திரி ஆனா பின்னர் கிரீன் கவுஸ் ப்ரோமொடேர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார் . இந்த நிறுவனமே ராஜாவிற்கு உள்ளது என்று தான் செய்திகள் தெருவிக்கின்றன . திகார் ஜெயிலில் இருக்கும் ராஜா யாருக்காக இந்த ஊழலை செய்தார் என்பது சமீபத்தில் சிபிஐ - ஆல் விசாரணை செய்ய பட்ட கலைஞரின் ஒரு மனைவியும் இன்னொரு மனைவியின் மகளுக்கும் தான் வெளிச்சம் .
இன்று காலை டில்லி செல்வதற்கு விமான டிக்கெட் எடுத்து வைத்திருந்ததாகவும் , சாதிக் பாட்ச அப்ரூவர் ஆக முடிவெடுத்த நிலையில் இந்த தற்கொலை நடந்திருப்பது மேலும் பல சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது . ஏற்கனவே ஸ்டாலினின் பினாமியாக கருதப்பட்ட ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார் . அதே போல் கனிமொழிக்காக ஊழல் செய்த ராஜாவின் பினாமியாக கருதப்பட்ட சாதிக்கும் இப்போது தற்கொலை செய்துள்ளார் .
யாரை காப்பாற்ற இந்த தற்கொலைகள் என்பது விசாரணைக்கு பின்னர் தான் தெரிய வரும் . நல்ல வேளை ராஜா ஏற்கனவே ஜெயிலுக்கு போய் விட்டார் அதனால் தப்பித்தார் .......... முட்டாள் தனமாக நம்பியிருக்கும் தொண்டர்களை எப்போது தற்கொலை செய்ய வைப்பார்களோ என்ற அச்சம் தான் இப்போது மிச்சம் .
Friday
கனிமொழிய கைது செய்ய போறாங்களா?
எழுதியது
Suresh Kumar
Labels:
2G அலைவரிசை ஊழல்,
அரசியல்,
கனிமொழி,
திமுக கூட்டணி,
தேர்தல் 2011
எழுதிய நேரம்
Friday, March 11, 2011
திடீர்னு நேற்று டுவிட்டர்ல இந்திய அளவில் கனிமொழி டிரெண்டில் இடம் பிடித்திருந்தார். இன்று பார்த்தால் பேஸ்புக் டிரெண்டில் இடம் பிடிக்கிற மாதிரி இருக்கு. நேற்று வடஇந்திய ஊடகங்களில் மார்ச் 31 க்கு முன்னதாக கனிமொழியிடம் சிபிஐ விசாரிக்க போவதாக செய்திகள் வந்தன இதனால் டுவிட்டர் டிரெண்டில் இடம் பிடித்தார் கனிமொழி. மார்ச் 31 வரை கால அவகாசம் கொடுத்திருக்கிரத்தை பார்த்தால் விசாரிக்க கேள்விகள் தயார் செய்ய சிபிஐ க்கு அவகாசம் தேவை படுவதாக நினைத்து இதை நாம் பெருசாக எடுத்து கொள்ளவில்லை.
ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக கனிமொழி கைது செய்ய படுகிறார் என்ற செய்திகள் வருகிறது . அதை உறுதி படுத்தும் விதமாக வழக்கத்திற்கு மாறாக கனிமொழி கருப்பு கலர் காரில் கலைஞர் டிவி அலுவலகத்திற்கு வந்தாராம். படத்திற்கு கிளைமாக்ஸ் சீன் எடுக்குறாங்களா இல்ல தொகுதிகள் அடையாளம் கண்டு முடித்தவுடன் இடைவேளை போட்டு விட்டு விட போறாங்களா ? ஒண்ணுமே புரியல ...........
திமுக காங்கிரஸ் தொகுதிக்ள அடையாளம் காணுவதில் மீண்டும் இழுபறி என்ற செய்தியோடு சேர்த்து கனிமொழி கைது செய்ய போகிறாரா என்ற செய்தியையும் படித்து பாருங்கள் .
கிளைமாக்ஸ் முடியும் என்று நினைக்கும் மக்களுக்கும் தொடரும்னு போட்டு விட்டுடுவாங்க ராஜாவுக்கும் சேர்த்து கம்பி எண்ணுவது தொடரும் என வந்தாலும் வரலாம் . சூது வாது தெரியாத ராஜா பாவம் மாட்டிகிட்டாரு ............
கலைஞர் டிவி அலுவலகத்திற்கு வந்த கனிமொழி , தயாளு அம்மாள் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை தொடக்கி விட்டது . கைது செய்வார்களா இல்லையா எனபது பின்னர் தான் தெரியும் .
கலைஞர் டிவி அலுவலகத்திற்கு வந்த கனிமொழி , தயாளு அம்மாள் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை தொடக்கி விட்டது . கைது செய்வார்களா இல்லையா எனபது பின்னர் தான் தெரியும் .
அவளுக்கென்ன நல்லா சுகிக்கிறாள்! அகப்பட்டவன் நான் அல்லவா ! ராஜா கனிமொழியை பார்த்து பாடும் பாடல் மட்டும் நமக்கு கேட்கிறது.
உலக ஆளுங்கட்சி தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக
எழுதியது
Suresh Kumar
Labels:
2G அலைவரிசை ஊழல்,
அரசியல்,
கலைஞர் குடும்பம்,
திமுக கூட்டணி
எழுதிய நேரம்
Friday, February 18, 2011
கலைஞர் டிவி அலுவலகத்தில் நேற்று இரவு முதலே சிபிஐ சோதனை நடந்து வருகிறது. 2 G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்தி எழுபத்தாறு கோடி ருபாய் ஊழல் நடந்துள்ளது நூறு கோடி மக்கள் மத்தியிலும் மிக பெரிய அதிர்ச்சி அலையை உருவாக்கி இருக்கிறது. தமிழ் நாட்டிற்கு இரண்டு ஆண்டுகள் பட்ஜெட் போடகூடிய பணம் ஊழல் செய்ய பட்டுள்ளது என்றால் யாருக்கு தான் அதிர்ச்சி உருவாகாது.
தமிழ் தொலை காட்சிகள் பொதுவாகவே உலக வரலாற்றில் முதன் முறையாக என்ற வார்த்தைகளை புதிய படங்கள் ஒளிபரப்பும் பொது பயன் படுத்தும். அதே போல இந்த ஊழலும் உலக வரலாற்றில் முதன் முறையாக ஒரு தமிழனால் செய்யபட்டிருக்கு என்னும் போது வெட்க படாமல் வேறு என்ன செய்ய. மிக பெரிய கோடீஸ்வரர்களால் கூட இரண்டு மாதங்களில் உருவாக்க முடியாத தொலைக்காட்சி சேனலை இருபது நாட்களில் கருணாநிதி கலைஞர் டிவி என்று உருவாக்கிய போது எல்லோரும் ஆச்சரிய பட்டார்கள். அதை தொடர்ந்து பல சேனல்கள் உருவாக்க பட்டு அனைவரையையும் ஆச்சச்சரியத்தில் ஆழ்த்தியது கலைஞர் டிவி நிர்வாகம் .
வேறு எந்த வித வருமானமும் இல்லாத கருணாநிதி , கனிமொழி , தயாளு அம்மாள் ஆகியோரால் இத்தனை கோடி பணம் எங்கிருந்து வந்தது? இப்போது தான் ஒவ்வென்றாக வெளிச்சத்திற்கு வருகிறது. இந்தியாவை கொள்ளையடித்து மிக பெரிய ஊழலுக்கு எல்லாம் சவால் விட்டு இமாலய ஊழல் செய்து கலைஞர் டிவி உருவாக்க பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாது இன்னும் பல கோடி ஊழல் பணம் இந்த குடுமத்தில் அங்காங்கே இருக்கும்.
சோனியா தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004 பதவி ஏற்றது முதலே இந்தியா முழுவதும் ஊழல் செய்யும் வழியை ஒவ்வெரு அமைச்சராக தேடி பிடித்தனர். ராஜா ஊழல் செய்துள்ள இதே துறையில் முதலில் அமைச்சராக இருந்த முரசொலி மாறனின் மகனும் கருணாநிதியின் பேரனுமாகிய தயாநிதி மாறன் செய்த ஊழல்கள் இன்னும் விசாரிக்க படவில்லை . காங்கிரஸ் கட்சியும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது போல ஆதர்ஷ் ஊழல் , காமன் வெல்த் ஊழல் , இஸ்ரோ ஊழல் என்று பல ஊழல்களை செய்து மக்களை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்த வலக்கை எப்படியெல்லாம் மூடிவிடலாம் என காங்கிரஸ் கட்சி திட்டமிட்டது. ஆனால் எதிர்கட்சிகளின் நெருக்குதலாலும் , உச்சநீதிமனற்றத்தின் உத்தரவுகளாலும் விசாரிக்க வேண்டிய நிலைக்கு சிபிஐ தள்ள பட்டுள்ளது. ஒரு ஆளுங்கட்சி தொலை காட்சி சிபிஐ விசாரணைக்கு உள்ளாவது இதுவே முதன் முறை என்றே நினைக்கிறேன். இத்தனை கேவலங்களை தாண்டி எந்த முகத்தில் திமுக மக்கள் மத்தியில் வாக்கு கேட்கும் . காங்கிரஸ் கட்சியும் ஊழல் கட்சி தான். திருவாளர் பரிசுத்தம் என்று தன்னை காட்டி கொண்ட சோனியா இப்போது காங்கிரஸ் கட்சியினர் செய்யும் ஊழலால் தலை குனிந்து நிற்கிறார். இந்த இரண்டு ஊழல் கட்சிகளுக்கும் மக்கள் சாட்டையடி கொடுப்பது நிச்சயம்.
ஊழல் பணத்தில் உருவாக்கிய கலைஞர் டிவியை தடை செய்து அதை அரசாங்கம் கைப்பற்ற வேண்டும். மக்கள் காறி துப்ப தொடக்கி விட்டார்கள் கலைஞர் அவர்களே உங்கள் முகத்தில் படுவதற்குள் நீங்களாகவே பதவியை விட்டு இரங்கி செல்வது நல்லது.
சோனியா காந்தியால் ஈழத்திலே கொல்ல பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் ஆவி தான் அதற்கு துணை நின்ற தமிழின துரோகி கருணாநிதியை ஆட்டுவிக்கின்றதோ ?
Wednesday
பலி ஆடு தலைய ஆட்டிடிச்சோ ?
எழுதியது
Suresh Kumar
Labels:
2G அலைவரிசை ஊழல்,
அரசியல்,
இந்தியா,
திமுக கூட்டணி
எழுதிய நேரம்
Wednesday, February 02, 2011
ஒரு படத்தில விஜயும் நண்பனுமாக சேர்ந்து தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க செல்லும் இடத்தில் ஆட்டை பலி கொடுக்க தயாராகி கொண்டிருப்பார்கள் அவங்க கிட்ட விஜய் ஆட்டை பலி கொடுப்பது தவறு என்பது போல பேசுவார். உடனே அந்த ஊரு நாட்டமை சொல்வார் நீங்க இவ்வளவு சொல்றீங்க அதனால நாங்க ஆட்டை பலி கொடுக்க விரும்பல அப்படின்னு சொல்லி முடித்ததும் ஒரு குண்டை தூக்கி போடுவார். ஒரு தவறும் செய்யாத விஜயையும் நண்பனையும் பலி கொடுக்க ஏற்கனவே தயாராக இருந்த கம்பின் மீது கட்டுவார்கள். ( அதற்காக இந்த ஆடு ஒரு தவறும் செய்யவில்லை என அவசர பட்டு முடிவெடுத்திடாதீங்க) அதில ஒரு நியாயம் என்னவென்றால் தலை ஆட்டினால் மட்டும் தான் வெட்டுவார்கள். அப்போ இவங்க ரெண்டு பேரும் தலையே ஆட்ட கூடாதுன்னு முடிவெடுப்பாங்க. எவ்வளவோ முயற்சித்தும் தலை ஆட்ட வைக்க முடியாது. வெட்ட அரிவாள் வச்சிருக்கிறவர் ஏதோ சொல்ல இவரும் ஆமா என தலையாட்ட ஆத்தா அனுமதி தந்துட்டானு சொல்லி வெட்ட போவாங்க ................. இது சினிமா
அதே போல இப்போ இங்க ஒரு பலி ஆடு மாட்டியிருக்கு. இந்த ஆடு கொஞ்சம் வித்தியாசம். இது பலி கொடுக்க வேண்டிய ஆடு என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் இப்போது யாருக்காகவோ பலி ஆடாக்கியிருக்கிரார்கள். அது தாங்க ஸ்பெக்ட்ரம் புகழ் ராஜா இன்று சிபிஐ அதிகாரிகளால் ஊழல் செய்ததற்காக கைது செய்ய பட்டிருக்கிறார். இந்த ஊழல் இன்று நேற்று நடந்தது அல்ல மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே நடந்து மீடியாக்களால் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசபட்டது. கடந்த ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் நடந்த இந்த ஊழல் மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியே ஆட்சிக்கு வந்ததால் மூடி விடலாம் என நினைத்து அதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்தது.
இந்த ஊழலை மறைப்பதற்காகவே ஒரு ஊழல் அதிகாரியை ஊழல் ஒழிப்பு துறைக்கே தலைவராக்கியதும் இதே சோனியாவின் வழிகாட்டலில் இருக்கும் காங்கிரஸ் அரசு தான் . இப்படி பல வழிகளில் மறைக்க முயற்சித்த வேளையில் மத்திய தணிக்கை குழு இந்த ஊழலால் ஒரு லட்சத்தி எழுபத்தாறு கோடி ருபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என அறிக்கை வெளியிட்டது. இதை அடுத்து எதிர் கட்சிகள் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும், ராஜா பதவி விலக வேண்டும் , ராஜா கைது செய்ய பட வேண்டும் , இந்த ஊழலில் யார் யாரெல்லாம் பங்கு வகித்திருக்கிரார்களோ அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாடாளுமன்ற கூட்ட தொடர் முழுவதையும் நடை பெறாமல் செய்தன. இருந்தும் காங்கிரஸ் கட்சி அதற்கு பதிலைக்க்வோ நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு ஒத்துழைக்கவோ செய்ய வில்லை . மாறாக மத்திய அரசின் எடுபிடியான சிபிஐ மூலம் படம் காட்டியது.
இந்த நிலையில் நீரா ராடியாவிடம் தமிழக அரசியல் வாதிகள் குறிப்பாக கனி மொழி பேசிய உரையாடல் வெளியானது. அந்த உரையாடல்கள் மூலம் ராஜா மட்டும் குற்றவாளி அல்ல என்பது உறுதியாகிறது. திமுகவை பொறுத்தவரை கருணாநிதியின் மனைவியின் பிள்ளைகளுக்கு ஏற்கனவே பல இடங்களில் கொள்ளையடிக்க வாய்ப்பு கொடுத்து இன்று அவர்கள் மிக பெரிய கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். ஆனால் துணைவியின் பிள்ளைக்கு பல கோடிகள் இருந்தாலும் இவர்களை போல் இல்லாத காரணத்தால் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை கனிமொழிக்கு ஒதுக்கி கொடுத்தார் கருணாநிதி. அதற்கு எதுவாக ராஜாவை அந்த துறைக்கும் மந்திரி ஆக்கினார். ராஜாவின் மூலமாக கொள்ளை துவங்கியது. இதில் ராஜாவும் பல கொடிகளை சுருட்டி இருக்கிறார்.
இன்னும் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ராஜா ஒருவரால் இத்தனை கொடிகளை அடிக்க முடியாது என கருணாநிதி சொன்னது. அப்படி பார்க்கும் போது இந்த ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கும் மிக பெரிய பங்கு உண்டு. அதனால் தான் இந்த ஊழலை பல வழிகளில் காங்கிரஸ் கட்சி மறைக்க பார்த்தது. அதற்காக தான் விசாரணை நடக்கும் போதே கபில் சிபில் இதில் அரசுக்கு எந்த இழப்பும் வரவில்லை என அறிக்கை விட்டார். இப்போது கபில் சிபிலால் அமைக்க பட்ட விசாரணை கமிட்டியே ராஜா குற்றவாளி என சொல்லி விட்டது. இதற்கு மேல் விசாரிக்க எனக்கு அதிகாரம் இல்லை எனவும் சொல்லி விட்டது.
தலித் அரசியலை கொண்டு வந்து ராஜாவையும் தன்னையும் காப்பாற்றி கொள்ளலாம் என கருணாநிதி திட்டம் போட்டு பார்த்தார் அது நிறை வேற வில்லை. எதிர் கட்சிகளும் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன. சட்ட மன்ற தேர்தல் வரும் நிலையில் ராஜா ஏன் கைது செய்ய பட்டார் என சந்தேகம் எழுகிறது. ஊடகங்கள் இது தொகுதி பங்கீட்டுக்காக திமுகவை காங்கிரஸ் மிரட்டுவதாக இந்த கைது என ஊகங்கள் வெளியிடுகின்றன ஆனால் உண்மை அதுவல்ல. பட்ஜெட் கூட்ட தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. மீண்டும் எதிர்கட்சிகள் நாடாளுமன்ற விசாரணை குழு அமைக்க வேண்டும் என போராட தயாராகி கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு சம்மதிக்க வில்லை என்றால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரை முடக்கவும் தயாராக இருக்கின்றனர். அப்படி நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வந்தால் கருணாநிதி, சோனியா , கனிமொழி மன்மோகன் சிங் , கபில் சிபில் மற்றும் சிபிஐ முதல் அனைவரும் விசாரிக்க படுவார்கள் . அப்படி விசாரிக்கும் பட்சத்தில் இந்த ஊழலில் பங்கு கொண்ட மேற்சொன்ன அனைத்து தலைகளும் ஆட்டம் காணும். அப்படி ஒரு நிலை வரகூடாது என்பதற்காகவும் , எதிர்கட்சிகளை சமாதன படுத்துவதற்காகவும் ராஜா பலி ஆக்க பட்டிருக்கிறார். உண்மையை சொல்ல போனால் கருனாநிதிக்ககவும், கருணாநிதி குடும்பத்திற்காகவும், சோனியாவுக்ககவும் ராஜா இரண்டு கட்சிகளாலும் பேசி ராஜா கைது செய்ய பட்டிருக்கிறார். இந்த நாடகம் நாடாளுமன்ற கூட்டம் முடியும் வரை தொடரும் பின்னர் ராஜா எந்த தவறும் செய்ய வில்லை என விடுவிக்க படலாம் இல்லை ராஜா தான் குற்றவாளி என மீண்டும் ஒரு முறை பலி ஆடு ஆக்கி ஊழலை மறைத்து விடலாம்.
Thursday
இனி எந்த முகத்தில் செய்தி வெளியிடுவீர்கள் நக்கீரன் கோபால் அவர்களே
எழுதியது
Suresh Kumar
Labels:
2G அலைவரிசை ஊழல்,
அரசியல்,
இந்தியா,
தமிழகம்,
நக்கீரன்,
ராஜாவின் பினாமி
எழுதிய நேரம்
Thursday, December 16, 2010
நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே சங்க கால புலவரின் வரிகளோடும் பெயரோடும் தமிழகத்தில் வீறு நடை போட்டு கொண்டிருக்கிறது நக்கீரன் . ஆனால் இந்த நக்கீரனின் உண்மை முகம் பலருக்கு தெரிவதில்லை. பத்திரிக்கையின் விற்பனையை அதிகரிக்க பொய் செய்திகளை போடுவதில் கில்லாடி பத்திரிகை தான் இந்த நக்கீரன் .
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நானும் ஒரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழருமாக பேசி கொண்டிருந்த பொது நக்கீரன் பற்றிய பேச்சு வந்தது . தோழர் சொன்னார் நக்கீரன் நடுநிலை தவறாத பத்திரிகை உண்மை செய்திகளை போடுவதில் நக்கீரன் மட்டுமே இன்று முன்னோக்கி நிற்கிறது, அரசியல் விமர்சனங்கள் மிகவும் நாடு நிலையோடு இருக்கும் என்று என்னோடு சொன்னார் . நான் அவரோடு விவாதம் செய்தேன் நக்கீரன் தன்னுடைய நடுநிலையை இழந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது .இருந்தாலும் அவர் வாதத்தில் விட்டு கொடுக்காமல் நக்கீரனை புகழ்ந்து பேசி கொண்டிருந்தார் . நான் அந்த நிலையில் ஒரு நாள் நீங்களும் புரிந்து கொள்வீர்கள் தோழரே என்று சொல்லி விட்டு அத்தோடு அந்த விவாதங்களை முடித்து கொண்டோம் .
பின்னர் சில ஆண்டுகள் கழித்து நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் ஒரு நாள் பேசி கொண்டிருக்கும் போது நக்கீரன் இப்போது வாங்குகிறீர்களா என்றேன் . இல்லை அதன் விமர்சனங்கள் இப்போது ஒரு பக்க சார்பாக இருக்கிறது . நடுநிலை என்பதே இல்லை என்றார் . உடனே நான் சொன்னேன் நீங்கள் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்த பின்னர் தான் நக்கீரனின் லட்சணம் உங்களுக்கு தெரிந்திருக்கிறது . நக்கீரன் பல ஆண்டுகளுக்கு முன்னரே நடுநிலை இழந்து விட்டது .நீங்கள் திமுக கூட்டணியில் இருந்ததால் சில நேரங்களில் உங்களை புகழ்ந்து எழுதிய நக்கீரன் நீங்கள் கூட்டணியை விட்டு வெளியே வந்தவுடன் நேர்மாறாக உங்களை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் )பற்றி தவறாக எழுதியது அது தான் உண்மை.
எப்போது அரசு பணம் திமுக சார்பாக நக்கீரனுக்கு கைமாறியதோ அப்போதிலிருந்தே நக்கீரன் தடம் மாறி விட்டடது . கூட்டணி மாறும் அரசியல் தலைவர்களை பற்றி தவறான செய்திகளை போடுவதில் மிக முக்கியமான இடத்தில் இருப்பது இந்த பத்திரிகை . பொய்யான தகவல்களை பக்கத்தில் இருந்து பார்த்தது போல் செய்தி வெளியிடுவதில் வல்லவர் தான் இந்த கோபால் . திமுக கூட்டணியை விட்டு யார் வெளியே வந்தாலும் பல கொடிகள் கைமாறியதாக செய்திகள் போட்டு மக்களை குழப்புவதில் முதலிடம் நக்கீரனுக்கு தான் .
ஒவ்வெரு தேர்தலிலும் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் ஒரு புகை படம் இந்த பத்திரிகைகளில் வரும் ஜெயலலிதாவும் சசிகலாவும் சேர்ந்து நின்று ஒரு எஸ்டேட் பார்த்து கை காட்டுவது போல் அதில் இருக்கும் . கீழே செய்தி இப்போது ஜெயா வாங்கிய எஸ்டேட் . நான் மூன்று தேர்தலுக்கு இதே புகை படத்தை நக்கீரன் பத்திரிகையில் பார்த்திருக்கிறேன் . அடுத்த சட்ட மன்ற தேர்தலில் கூட அந்த புகைப்படம் வரலாம் .புலானாய்வு என்ற பெயரில் தலைவர்களை மிகவும் கீழ் தரமாக விமர்சிப்பதில் முதலிடம் வகிக்கும் அதே பத்திரிகை இப்போது 2G அலை வரிசை ஒதுக்கீட்டில் ஊழல் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் பினாமி தான் இந்த நக்கீரன் இணை ஆசிரியர் காம ராஜ். பல நாட்களுக்கு முன்னரே பலருக்கு தெரிந்த இந்த பினாமி கதை சி பி ஐ நடத்திய சோதனை மூலமாக இப்போது தமிழகம் முழுவதும் தெரிந்து விட்டடது . நூறு கோடி ரூபாய்க்கு மேல் காமராஜிடம் ராஜா ஊழல் செய்த பணம் கைமாறியதாக தெரிகிறது .
ஒரு பத்திரிகை வைத்திருந்தால் போதும் அதன் மூலமாக கூட கொள்ளையடிக்கலாம் என்பதை செய்து காட்டியது நக்கீரன். இதன் விளைவாக தான் ராஜாவை அனைத்து பத்திரிக்கைகளும் ஊழல் நாயகன் என்று சொல்லி வந்த போதும் நக்கீரன் மட்டும் ராஜா நல்லவர் என்று திரும்ப திரும்ப சொல்லி வந்தது . மிக வேகமாக செய்திகளை கொடுக்கும் நக்கீரன் நேற்று நடைபெற்ற சோதனையை பற்றி தங்கள் இணைய தளத்தில் எந்த செய்தியும் போடவில்லை . பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என சொல்வார்கள் இவ்வளவு நாளும் வேறு யாரையெல்லாமோ திருடன் என்று சொன்னவனே இன்று மிக பெரிய திருடனாக பிடி பட்டிருக்கிறான் .
இனி எந்த முகத்தில் செய்தி வெளியிடுவீர்கள் நக்கீரன் கோபால் அவர்களே. ஜனநாயகத்தின் நான்காவது பெரிய தூண் பத்திரிகைகள் ஆனால் இன்று பத்திரிகைகள் ஆளும் கட்சிகள் போடு எச்சிலையை பொறுக்கி தின்று ஜால்ரா அடிப்பதாகவே இருக்கிறது . ஏற்கனவே அனைத்து மீடியாக்களும் ஒரு குடும்பத்தின் கையில் இருக்கும் போது நம்பி இருந்த நக்கீரன் பத்திரிக்கையும் இப்படி ஆகி விட்டதே என மக்கள் நக்கீரன் முகத்தில் காரி துப்புகிறார்கள் .
Subscribe to:
Posts (Atom)