இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label திரை விமர்ச்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்ச்சனம். Show all posts
Thursday
7 ஆம் அறிவு திரை விமர்சனம்
சூர்யா நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 7 ஆம் அறிவு படத்தின்வேறுபட்ட பார்வையிலான விமர்ச்சனம்.
சினிமாவை பொழுது போக்காக பார்ப்பவர்களுக்கு பொழுது போக்காகவும், சூர்யாவுக்காக பார்பவர்களுக்கு கொஞ்சம் வித்தியாச படமாகவும் வெளி வந்துள்ளது இந்த படம். கமல் ஹாசனின் மகள் சுருதி இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
1600 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டிலிருந்து சைனாவுக்கு சென்ற போதி தர்மரால் சைனாவில் லட்ச கணக்கான மக்கள் சாக காரணமாக இருந்த மர்ம நோயை போதி தர்மர் குணப்படுத்துவோதொடு அந்த மக்களுக்கும் அதை சொல்லி கொடுக்கிறார் . அதே போல் மனிதர்களால் வந்த ஆபத்தை தன்னுடைய தற்காப்பு கலை மூலம் தடுத்து இன்று சைனாவில் மிகவும் பிரபலம் வாய்ந்த குங்க்பு கலையை சைனர்களுக்கு கற்று கொடுக்கிறார் போதி தர்மர் .
இதில் முக்கியமாக சொல்லப்பட்டது போதி தர்மர் ஒரு தமிழர். போதி தர்மர் மீண்டும் தமிழகத்திற்கே திரும்ப முயற்சித்த போது அவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுக்கிறார்கள் . விஷம் கலந்திருக்கிறது என்றும் தெரிந்தும் அந்த மக்களின் விருப்பத்திற்கிணங்க தன் உடல் அந்த மண்ணில் அடக்கம் செய்யட்டும் என விசத்தை உண்டு மாண்டு போகிறார் . அந்த போதி தர்மரை சீனர்கள் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவியாகிய சுருதி போதி தர்மரை பற்றியும் தமிழனின் பெருமைகள் பற்றியும் ஆய்வு நடத்துகிறார் . போதி தருமரின் மரபணு கொண்டவர் தான் சூர்யா . சூர்யாவுக்கே தெரியாமல் சூர்யாவை தன் ஆய்வுக்கு பயன் படுத்துகிறார் சுருதி . இந்த நிலையில் சைனா இந்தியாவை தன் வசப்படுத்த ஆறாம் நூற்றாண்டில் சைனாவில் அழிவை ஏற்படுத்திய விச கிருமியை தமிழ் நாட்டில் பரப்ப முனைகிறது . அதே நேரம் போதி தர்மரை ஆய்வின் மூலம் தட்டி எழுப்பி விட கூடாது என நினைத்து ஆய்வு செய்த சுருதியையும், போதி தருமரின் வம்சா வழியான சூர்யாவையும் கொல்லவும் விசா கிருமியை பரப்பவும் எல்லா கலைகளையும் தெரிந்த ஒருவரை இந்தியாவுக்கு சைனா அனுப்பி வைக்கிறது .
எல்லா படத்திலும் வருவது போல் துரோகியாக இங்கேயும் ஒருவர் இருக்கிறார். இந்த நிலையில் சூர்யா எப்படி போதி தர்மராக மாறுகிறார் எப்படி அந்த விச கிருமிகளிடம் இருந்து மக்களை மீட்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை .
படத்தின் நாகயன் சூர்யாவை விட தமிழர்கள் அனைவருக்கும் நாயகனாக இயக்குனர் முருகதாஸ் தெரிகிறார் . தன் மனதின் ஆழத்தில் இருந்த வேதனையை வசனங்கள் மூலம் வெளிபடுத்தியிருக்கிறார்.
"இலங்கையில் தமிழர்களை அழித்து விட்டு இங்கேயும் வந்திருக்கிறான்'
வீரம் வீரம் என்று சொல்லியே பக்கத்து நாட்டில் மக்கள் சாகடிக்க பட்டார்களே என்று சுருதி சொல்லும் போது . அது வீரம் அல்ல "9 நாடுகள் சேர்ந்து செய்த துரோகத்தால் தமிழன் கொல்லப்பட்டான்" என்று சூர்யா சொல்லும் போது ஒவ்வெருவருடைய உணர்வுகளும் தட்டி எழுப்பியது போல் இருந்தது . இந்த வசனத்திற்காகவே ஆயிரம் முறை பார்க்கலாம் .
"கலைக்காக மக்கள் இல்லை மக்களுக்காக தான் கலை " என்று தாமரை பேசியது தான் நினைவுக்கு வந்தது . தமிழன் என்று பெருமை பட்டு கொள்ளும் வகையில் வசனங்கள் எடுக்க பட்டுள்ளது .
கல் தோன்றா மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியான தமிழ் குடி மக்கள் வெறுமனே 800 ஆண்டுகளில் வந்த ஆங்கிலம் பேசுவதை பெருமையாகவும் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்த தமிழை பேச வெட்க படுபவர்களுக்கு சரியான சவுக்கடி வசனம் இடம் பெற்றது வரவேற்க தக்கது .
மசாலா படமாக எடுத்தது தமிழ் உணர்வை ஊட்ட முடியும் என்று சாதித்து காட்டிய முருகதாஸ் வழியில் மற்ற கலைஞர்களும் துணிந்து தமிழ் உணர்வை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
"இன்னும் என்ன தோழா எத்தனை நாளா
நம்மை நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா நம்ப முடியாதா
நாளை வெல்லும் நாளை செய்வோமே"
- என்ற பாடல் வரிகள் தமிழர்களின் நம்பிக்கையை கூட்டுகிறது.
இந்த பாடலை நக்கீரன் இணையதளம் ஈழ போராட்ட காட்சிகளோடு வெளியிட்டிருக்கிறது
மொத்தத்தில் குடுத்த காசுக்கு நம்பி பார்க்கலாம் .
7 ஆம் அறிவை காட்டியதோ இல்லையோ தமிழர்களின் ஆறாம் அறிவை தட்டி எழுப்பும் என்பதில் ஐயமில்லை ............
Wednesday
மங்காத்தா - திரை விமர்ச்சனம்
எழுதியது
Suresh Kumar
Labels:
சினிமா,
திரை விமர்ச்சனம்,
மங்காத்தா
எழுதிய நேரம்
Wednesday, August 31, 2011
தவறு செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் தவறு செய்பவர்களின் மீது நடவடிக்கை எடுத்து அரசுக்கு சேர வேண்டிய பணத்தை தாங்களே சுருட்டி கொள்வது தான் மங்காத்தா கதை.
அஜித்தின் 50 வது படமான மங்காத்தா இன்று திரைக்கு வந்துள்ளது . அஜித் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்போடு திரைக்கு வந்திருக்கிறது. வெங்கட் பிரபு படத்தை இயக்கியுள்ளார். முக.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தயாரிப்பில் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக தமிழ் நாடு முழுவதும் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது.
போலிஸ் வேடத்தில் என்ட்ரி கொடுக்கும் அஜித் பின்னர் படம் முழுக்க வில்லன் போலவே வந்து முடிவில் ஹீரோவாக மாறுகிறார். மற்றொரு நடிகரான அர்ஜுன் படம் முழுக்க போலிஸ் அதிகாரியாக வந்து கடைசியில் காவல் துறையையை எமாற்றுபவராக மாறி விடுகிறார். நாயகியாகிய திரிஷா இரண்டாம் பாதியில் காணாமல் போய் விடுகிறார்.
திரைகதை கிரிக்கெட் சூதாட்டத்தை வைத்து துவங்கி அதன் மூலம் வரும் பணத்தை யார் கைப்பற்றுவது என்பதாக கதை நகருகிறது. நகைச்சுவையாகவும் மசாலா படமாக இருக்கிறது. கதை என்று சொல்லும் அளவிற்கு எந்த கதையும் இல்லை படம் முழுக்க பணம் (Money) பணம் (Money) பணம் (Money) என்றே இருக்கிறது. இன்னொரு நடிகையான லெட்சுமி ராய் துவக்கத்திலும் கடைசியிலும் வருகிறார்.
அஜித்திடம் உங்கள் வயது என்ன என்று கேட்ட போது சளைக்காமல் உண்மையான வயதை சொன்னது அஜித்தை வித்தியாசபடுத்தி காட்டியது. விளையாடு மங்காத்தா பாடல் ரசிகர்களை உற்சாக படவைக்கும். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்டு கொண்டே இருக்கலாம்.
மங்காத்தா "மச்சி ஓபன் தி பாட்டல்"
ஐயோ இன்னும் ஒன்னு சொல்ல மறந்துட்டேன் ........ தயாநிதி அழகிரி தயாரிப்பில் கலாநிதி மாறன் வெளியீட்டில் வந்ததாலோ என்னவோ தவறு செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களே பணத்தை அமுக்கி கொள்வது போல் படம் அமையுது. வெங்கட் பிரபு 2Gயை நினத்து தான் ..............எடுத்தாரோ ?
Subscribe to:
Posts (Atom)





