இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts
Saturday
கலை உலக போராளி மணிவண்ணன் மாரடைப்பால் மரணம்
பிரபல இயக்குனரும் குணசித்திர நடிகருமான மணிவண்ணன் அவர்கள் இன்று (15-06-2013) மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
59 வயதான மணிவண்ணன் அவர்கள் கோவை மாவட்டத்தை சார்ந்தவர். இவர் 400 க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழி படங்களை தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவரது இயக்கத்தில் 45 படங்கள் வெளிவந்துள்ளன. இயக்குனராகவும், நடிகராகவும் தெரிந்த மணிவண்ணன் பெரியாரிய கொள்கைகளை கடை பிடித்து வந்தவர். நல்ல தமிழ் உணர்வாளர். தமிழ் இன விடுதலைக்கு குரல் கொடுக்கும் சினிமா துறையை சார்ந்த ஒரு சிலரில் இவரும் ஒருவர்.
மணிவண்ணனின் இழப்பு சினிமா துறைக்கு மட்டுமல்லாது தமிழுக்கே இழப்பு என்று கூறலாம்.
மணிவண்ணனை இழந்து வாழும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
மணிவண்ணன் இறப்பு குறித்து வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கலையுலக பகுத்தறிவு போராளி மறைந்தார் என்று தெரிவித்துள்ளார். மேலும் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-வைகோதிராவிட இயக்கத்தில் சோதனைகளை எதிர்கொண்டு நான் போராடியபோது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உருவான தொடக்க காலத்தில், இயக்குநர் மணிவண்ணன் எழுத்திலும், மேடைப் பேச்சிலும், தோள்கொடுத்துத் துணைநின்று, ஆதரித்த பண்பும் பாங்கு, என்றும் என் எண்ணத்தில் நிலைத்து இருக்கும். ஆண்டுகள் பலவாக அவருடன் பழகிய உன்னதமான நாள்களை நான் எப்படி மறக்க முடியும்?
அவரது மறைவு, பகுத்தறிவு இயக்கத்துக்கு, கலை உலகுக்கு, தமிழ் ஈழப் போர்க்களத்துக்கு ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும்.
Thursday
7 ஆம் அறிவு திரை விமர்சனம்
சூர்யா நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 7 ஆம் அறிவு படத்தின்வேறுபட்ட பார்வையிலான விமர்ச்சனம்.
சினிமாவை பொழுது போக்காக பார்ப்பவர்களுக்கு பொழுது போக்காகவும், சூர்யாவுக்காக பார்பவர்களுக்கு கொஞ்சம் வித்தியாச படமாகவும் வெளி வந்துள்ளது இந்த படம். கமல் ஹாசனின் மகள் சுருதி இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
1600 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டிலிருந்து சைனாவுக்கு சென்ற போதி தர்மரால் சைனாவில் லட்ச கணக்கான மக்கள் சாக காரணமாக இருந்த மர்ம நோயை போதி தர்மர் குணப்படுத்துவோதொடு அந்த மக்களுக்கும் அதை சொல்லி கொடுக்கிறார் . அதே போல் மனிதர்களால் வந்த ஆபத்தை தன்னுடைய தற்காப்பு கலை மூலம் தடுத்து இன்று சைனாவில் மிகவும் பிரபலம் வாய்ந்த குங்க்பு கலையை சைனர்களுக்கு கற்று கொடுக்கிறார் போதி தர்மர் .
இதில் முக்கியமாக சொல்லப்பட்டது போதி தர்மர் ஒரு தமிழர். போதி தர்மர் மீண்டும் தமிழகத்திற்கே திரும்ப முயற்சித்த போது அவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுக்கிறார்கள் . விஷம் கலந்திருக்கிறது என்றும் தெரிந்தும் அந்த மக்களின் விருப்பத்திற்கிணங்க தன் உடல் அந்த மண்ணில் அடக்கம் செய்யட்டும் என விசத்தை உண்டு மாண்டு போகிறார் . அந்த போதி தர்மரை சீனர்கள் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவியாகிய சுருதி போதி தர்மரை பற்றியும் தமிழனின் பெருமைகள் பற்றியும் ஆய்வு நடத்துகிறார் . போதி தருமரின் மரபணு கொண்டவர் தான் சூர்யா . சூர்யாவுக்கே தெரியாமல் சூர்யாவை தன் ஆய்வுக்கு பயன் படுத்துகிறார் சுருதி . இந்த நிலையில் சைனா இந்தியாவை தன் வசப்படுத்த ஆறாம் நூற்றாண்டில் சைனாவில் அழிவை ஏற்படுத்திய விச கிருமியை தமிழ் நாட்டில் பரப்ப முனைகிறது . அதே நேரம் போதி தர்மரை ஆய்வின் மூலம் தட்டி எழுப்பி விட கூடாது என நினைத்து ஆய்வு செய்த சுருதியையும், போதி தருமரின் வம்சா வழியான சூர்யாவையும் கொல்லவும் விசா கிருமியை பரப்பவும் எல்லா கலைகளையும் தெரிந்த ஒருவரை இந்தியாவுக்கு சைனா அனுப்பி வைக்கிறது .
எல்லா படத்திலும் வருவது போல் துரோகியாக இங்கேயும் ஒருவர் இருக்கிறார். இந்த நிலையில் சூர்யா எப்படி போதி தர்மராக மாறுகிறார் எப்படி அந்த விச கிருமிகளிடம் இருந்து மக்களை மீட்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை .
படத்தின் நாகயன் சூர்யாவை விட தமிழர்கள் அனைவருக்கும் நாயகனாக இயக்குனர் முருகதாஸ் தெரிகிறார் . தன் மனதின் ஆழத்தில் இருந்த வேதனையை வசனங்கள் மூலம் வெளிபடுத்தியிருக்கிறார்.
"இலங்கையில் தமிழர்களை அழித்து விட்டு இங்கேயும் வந்திருக்கிறான்'
வீரம் வீரம் என்று சொல்லியே பக்கத்து நாட்டில் மக்கள் சாகடிக்க பட்டார்களே என்று சுருதி சொல்லும் போது . அது வீரம் அல்ல "9 நாடுகள் சேர்ந்து செய்த துரோகத்தால் தமிழன் கொல்லப்பட்டான்" என்று சூர்யா சொல்லும் போது ஒவ்வெருவருடைய உணர்வுகளும் தட்டி எழுப்பியது போல் இருந்தது . இந்த வசனத்திற்காகவே ஆயிரம் முறை பார்க்கலாம் .
"கலைக்காக மக்கள் இல்லை மக்களுக்காக தான் கலை " என்று தாமரை பேசியது தான் நினைவுக்கு வந்தது . தமிழன் என்று பெருமை பட்டு கொள்ளும் வகையில் வசனங்கள் எடுக்க பட்டுள்ளது .
கல் தோன்றா மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியான தமிழ் குடி மக்கள் வெறுமனே 800 ஆண்டுகளில் வந்த ஆங்கிலம் பேசுவதை பெருமையாகவும் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்த தமிழை பேச வெட்க படுபவர்களுக்கு சரியான சவுக்கடி வசனம் இடம் பெற்றது வரவேற்க தக்கது .
மசாலா படமாக எடுத்தது தமிழ் உணர்வை ஊட்ட முடியும் என்று சாதித்து காட்டிய முருகதாஸ் வழியில் மற்ற கலைஞர்களும் துணிந்து தமிழ் உணர்வை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
"இன்னும் என்ன தோழா எத்தனை நாளா
நம்மை நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா நம்ப முடியாதா
நாளை வெல்லும் நாளை செய்வோமே"
- என்ற பாடல் வரிகள் தமிழர்களின் நம்பிக்கையை கூட்டுகிறது.
இந்த பாடலை நக்கீரன் இணையதளம் ஈழ போராட்ட காட்சிகளோடு வெளியிட்டிருக்கிறது
மொத்தத்தில் குடுத்த காசுக்கு நம்பி பார்க்கலாம் .
7 ஆம் அறிவை காட்டியதோ இல்லையோ தமிழர்களின் ஆறாம் அறிவை தட்டி எழுப்பும் என்பதில் ஐயமில்லை ............
Wednesday
மங்காத்தா - திரை விமர்ச்சனம்
எழுதியது
Suresh Kumar
Labels:
சினிமா,
திரை விமர்ச்சனம்,
மங்காத்தா
எழுதிய நேரம்
Wednesday, August 31, 2011
தவறு செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் தவறு செய்பவர்களின் மீது நடவடிக்கை எடுத்து அரசுக்கு சேர வேண்டிய பணத்தை தாங்களே சுருட்டி கொள்வது தான் மங்காத்தா கதை.
அஜித்தின் 50 வது படமான மங்காத்தா இன்று திரைக்கு வந்துள்ளது . அஜித் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்போடு திரைக்கு வந்திருக்கிறது. வெங்கட் பிரபு படத்தை இயக்கியுள்ளார். முக.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தயாரிப்பில் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக தமிழ் நாடு முழுவதும் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது.
போலிஸ் வேடத்தில் என்ட்ரி கொடுக்கும் அஜித் பின்னர் படம் முழுக்க வில்லன் போலவே வந்து முடிவில் ஹீரோவாக மாறுகிறார். மற்றொரு நடிகரான அர்ஜுன் படம் முழுக்க போலிஸ் அதிகாரியாக வந்து கடைசியில் காவல் துறையையை எமாற்றுபவராக மாறி விடுகிறார். நாயகியாகிய திரிஷா இரண்டாம் பாதியில் காணாமல் போய் விடுகிறார்.
திரைகதை கிரிக்கெட் சூதாட்டத்தை வைத்து துவங்கி அதன் மூலம் வரும் பணத்தை யார் கைப்பற்றுவது என்பதாக கதை நகருகிறது. நகைச்சுவையாகவும் மசாலா படமாக இருக்கிறது. கதை என்று சொல்லும் அளவிற்கு எந்த கதையும் இல்லை படம் முழுக்க பணம் (Money) பணம் (Money) பணம் (Money) என்றே இருக்கிறது. இன்னொரு நடிகையான லெட்சுமி ராய் துவக்கத்திலும் கடைசியிலும் வருகிறார்.
அஜித்திடம் உங்கள் வயது என்ன என்று கேட்ட போது சளைக்காமல் உண்மையான வயதை சொன்னது அஜித்தை வித்தியாசபடுத்தி காட்டியது. விளையாடு மங்காத்தா பாடல் ரசிகர்களை உற்சாக படவைக்கும். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்டு கொண்டே இருக்கலாம்.
மங்காத்தா "மச்சி ஓபன் தி பாட்டல்"
ஐயோ இன்னும் ஒன்னு சொல்ல மறந்துட்டேன் ........ தயாநிதி அழகிரி தயாரிப்பில் கலாநிதி மாறன் வெளியீட்டில் வந்ததாலோ என்னவோ தவறு செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களே பணத்தை அமுக்கி கொள்வது போல் படம் அமையுது. வெங்கட் பிரபு 2Gயை நினத்து தான் ..............எடுத்தாரோ ?
Friday
எந்து பற்றி நயன் தாராவுக்கு
சில நாட்களாக நயன் தாரா பிரபு தேவா கள்ள காதல் பற்றி ஒரே பரபரப்பாக இருக்கிறது . கள்ளகாதல் ஒரு கட்டத்தில் முற்றி பிரபு தேவாவின் மனைவிக்கும் நயன் தாராவுக்கும் குழாயடி சண்டை போல் நடந்து வருகிறது .

பிரபு தேவாவுக்கும் நயன் தாராவுக்கும் ஏற்பட்டுள்ள கள்ள உறவை சில பத்திரிகைகள் சொல்வது போல் காதல் என்று சொல்லி விட முடியாது . புனிதமான காதல் வார்த்தைகளை இந்த நாய் காதலுக்கெல்லாம் சொல்ல முடியாது . இது ஒரு கள்ள காதல் ஏற்கனவே பிரபு தேவா திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டது . எனக்கு தெரிந்து பிரபு தேவாவுக்கு குறைந்தது நாற்பது வயது ஆகியிருக்க வேண்டும் .
பிரபு தேவாவை பொறுத்த வரையில் ஒரு இளங்கன்று கிடைத்தது என்று தான் இருக்கும் ஆனால் நயனுக்கு ? நல்ல ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்த நயன் தார இந்த செயல்களால் பெயருக்கு களங்கம் ஏற்பட்டது என்றே சொல்லலாம் . ஏற்கனவே சிம்புவுக்கும் நயனுக்கும் காதல் என்று பின்னர் மோதலாகி முடிவுக்கு வந்தது நினைவிருக்கலாம் .

சினிமா நடிகை என்றால் கிசு கிசுக்கள் ஏற்படுவது சகஜம் தான் . ஆனால் நயன் தாராவுக்கு ஏற்பட்டுள்ள கிசு கிசுக்கள் சகிக்க முடியாததாக இருக்கலாம் . சிம்புவுடன் கிசு கிசு ஏற்பட்ட போது இதெல்லாம் சகஜம் என இருக்கலாம் சிம்பு அதுக்குள்ளே வயசு அதுக்குள்ளே பையன் தானே . ஆனால் போயும் போய் பிரபு தேவா கூடவா ? கேட்கவே முடியலப்பா ?
சரி அப்படியே இருந்தா கூட ரகசியமா இருந்து விட்டு பசிக்கு சாப்பிட்டோம்னு நினைத்து ஒதுங்கி விட வேண்டியது தானே எதுக்கு இவ்வளவு சலசலப்பு . ஏற்கனவே கள்ள காதல் மட்டேருல நம்ம நாடு ரெம்ப கேட்டு போய் கிடக்குது . கள்ள காதல் என்பதால கட்டின கணவனை கொலை செய்வது , மனைவியை கொலை செய்வது , பிள்ளைகளை கொலை செய்வது இப்படி நாடே கேட்டு கிடக்கிற நேரத்தில் ரம்லாத் ( பிரபு தேவா மனைவி ) நயன் தாரா சண்டை வேற . எங்க போய் முடிய போகுதோ ?
எவ்வளவு வளர்ந்தும் நல்ல நிலைக்கு வந்தாலும் சிலருக்கு அறிவு மழுங்கியே இருக்கும் என்பதற்கு இவர்களும் ஒரு எடுத்து காட்டு ( காமத்திற்கு முன் எது அறிவு என்ன ? )

பிரபு தேவாவுக்கும் நயன் தாராவுக்கும் ஏற்பட்டுள்ள கள்ள உறவை சில பத்திரிகைகள் சொல்வது போல் காதல் என்று சொல்லி விட முடியாது . புனிதமான காதல் வார்த்தைகளை இந்த நாய் காதலுக்கெல்லாம் சொல்ல முடியாது . இது ஒரு கள்ள காதல் ஏற்கனவே பிரபு தேவா திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டது . எனக்கு தெரிந்து பிரபு தேவாவுக்கு குறைந்தது நாற்பது வயது ஆகியிருக்க வேண்டும் .
பிரபு தேவாவை பொறுத்த வரையில் ஒரு இளங்கன்று கிடைத்தது என்று தான் இருக்கும் ஆனால் நயனுக்கு ? நல்ல ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்த நயன் தார இந்த செயல்களால் பெயருக்கு களங்கம் ஏற்பட்டது என்றே சொல்லலாம் . ஏற்கனவே சிம்புவுக்கும் நயனுக்கும் காதல் என்று பின்னர் மோதலாகி முடிவுக்கு வந்தது நினைவிருக்கலாம் .
சினிமா நடிகை என்றால் கிசு கிசுக்கள் ஏற்படுவது சகஜம் தான் . ஆனால் நயன் தாராவுக்கு ஏற்பட்டுள்ள கிசு கிசுக்கள் சகிக்க முடியாததாக இருக்கலாம் . சிம்புவுடன் கிசு கிசு ஏற்பட்ட போது இதெல்லாம் சகஜம் என இருக்கலாம் சிம்பு அதுக்குள்ளே வயசு அதுக்குள்ளே பையன் தானே . ஆனால் போயும் போய் பிரபு தேவா கூடவா ? கேட்கவே முடியலப்பா ?
சரி அப்படியே இருந்தா கூட ரகசியமா இருந்து விட்டு பசிக்கு சாப்பிட்டோம்னு நினைத்து ஒதுங்கி விட வேண்டியது தானே எதுக்கு இவ்வளவு சலசலப்பு . ஏற்கனவே கள்ள காதல் மட்டேருல நம்ம நாடு ரெம்ப கேட்டு போய் கிடக்குது . கள்ள காதல் என்பதால கட்டின கணவனை கொலை செய்வது , மனைவியை கொலை செய்வது , பிள்ளைகளை கொலை செய்வது இப்படி நாடே கேட்டு கிடக்கிற நேரத்தில் ரம்லாத் ( பிரபு தேவா மனைவி ) நயன் தாரா சண்டை வேற . எங்க போய் முடிய போகுதோ ?
எவ்வளவு வளர்ந்தும் நல்ல நிலைக்கு வந்தாலும் சிலருக்கு அறிவு மழுங்கியே இருக்கும் என்பதற்கு இவர்களும் ஒரு எடுத்து காட்டு ( காமத்திற்கு முன் எது அறிவு என்ன ? )
Thursday
அனைத்து மொழி படங்களுக்கான torrents ஒரே தளத்தில்
இன்று திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சங்களின் ஓன்று ஹாலிவுட் படங்களாக இருந்தாலும் சரி கோலிவுட் படங்களாக இருந்தாலும் சரி பலருக்கும் படங்கள் வெளிவந்தவுடன் பார்க்க வேண்டும் என்றே தோன்றும் .
இணையதளங்கள் வழியாக நமக்கு தேவையான எல்லா அம்சங்களையும் வழங்க பல தளங்கள் பல பெயர்களின் இருக்கின்றன. தமிழ் படங்களுக்கு www.tamiltorrents.net ,www.tamilthunder.com இப்படி பல தளங்கள் பல பெயர்களின் இருக்கின்றன . . இதுவும் Youtube தளங்களை போல் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் பதிவேற்றம் ( Upload) செய்கின்றனர் .
ஹாலிவுட் முதல் அனைத்து மொழி களுக்குமான ஒரு தளம் தான் Mininova . இந்த தளத்தில் www.mininova.org அனைத்து மொழி படங்களும் காணப்படும் மற்றும் E Books , Softwares காணப்படும் . இதில் சென்று நமக்கு தேவையான Torrents தேடி Download செய்து கொள்ளவேண்டும் .
Torrent களின் மூலம் படங்களை எப்படி Download செய்வது?
பொதுவாக Vuze வழியாக Download செய்வது மிகவும் சிறந்தது . இந்த தளத்திற்கு http://www.vuze.com/Download.html சென்று Download செய்து கொள்ளுங்கள் . பின்னர் Instal செய்து ஒரு கணக்கை துவங்கி கொள்ளுங்கள் . மேலே தரவிறக்கி வைத்துக்கொண்ட Torrent டை Open செய்து கொண்டால் போதும் Downloading Vuze - இல் துவங்கிவிடும் . நம் இணைப்பின் வேகத்தை பொறுத்து தரவிறக்கும் நேரம் மாறுபடும் .
Subscribe to:
Posts (Atom)






