• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Friday

எப்போது வருவாய்? காண துடிக்கிறேன் !

வசந்த காலத்தில் ஒன்றிணைந்து இருந்தோம் ஊரெல்லாம் சுற்றினோம் இருண்ட காலம் ஏனோ நம்மை பிரித்து விட்டது . ஆம் நண்பா 2006  உனக்கும் எனக்கும் இருண்ட காலம் . வாழ்வில் ஏதோ ஒரு லட்சியத்தில் சிகரம் தொட முனைந்து கொண்டிருந்த நாம் எங்கேயோ நாம் விட்ட தவறுகளால் சதிக்க நேரம் பார்த்தவர்களுக்கு சாதகமாகி ஊரை விட்டு செல்ல வேண்டிய நிலைக்கு வந்தோம் . இப்போது நீ எங்கோ நான் எங்கோ நான்கு ஆண்டுகள் கடந்து விட்டது நம் நட்பிற்கு பிரிவு ஏற்பட்டு காண துடிக்கிறேன் . 

காதலர் தினமும் வருகிறது உன்னுடைய பிறந்த நாளும் வருகிறது நண்பா ஆம் பெப்ரவரி 14 ஒரு புறம் காதலர்கள் காதலர் தினம் கொண்டாடி கொண்டிருப்பார்கள் நாம் உன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி கொண்டிருப்போம் . நினைவிருக்கிறதா 2003   ஆம் ஆண்டு உன்னுடைய பிறந்த நாளுக்கு காலை பத்து மணி முதல் நாம் கொண்டாட்டத்தை துவக்கினோம்  அதில் எத்தனை மகிழ்ச்சி அன்று காதலர் தினம் என்பதால் பேருந்து நிலையங்களில் காவல் துறையினர் இல்லாத நேரம் யாரும் எந்த பெண்ணுக்கும் காதலை சொல்ல காவல் துறையினர் அன்று ஒரு நாள் தான் வாய்ப்பு கொடுத்தனர் . நானும் இன்னொரு நண்பனுமாக பேருந்து நிலையம் சென்ற அந்த நினைவுகள் நெஞ்சில் இப்போதும் நீந்தி கொண்டேயிருக்கிறது . 

எப்போது என்ன உதவி வேண்டும் என்று கேட்டாலும் செய்து கொண்டிருந்தாய் ஆனால் உனக்கு உதவி தேவை பட்ட போது என்னால் எதுவும் செய்ய முடியாமல் ஆகி விட்டதே . ஏதோ ஒரு மூலையில் இருந்து நீ இணையத்தை பயன் படுத்தலாம் பயன் படுத்துவாய் இணையம் முழுவதும் தேடி கொண்டிருக்கிறேன் தொடர்பை ஏற்படுத்தி கொள்ளலாம் என முடியவில்லை . 
ஏனோ தெரியவில்லை மகிழ்வின் உச்சத்திலும் லட்சிய உறுதியிலும் இருந்த நமக்கு ஒரே நேரத்தில் இருண்ட காலம் ஏற்பட்டது . அப்போது தான் தெரிந்தது வாழ்வின் இருண்ட பக்கம் எப்படி இருக்கும் என்று நேரில் பார்க்கும் போது பார்த்து சிரித்தவர்களும் புகழ்ந்தவர்களும் ஏன் சில நேரம் நண்பர்களாக இருந்தவர்கள் கூட நாம் திரும்பி வரவே மாட்டோம் என நம்மை இகழ்ந்து பேசினார்கள் உன்னை இப்போதும் பேசுகிறார்கள் . என் இருண்ட காலம் முடிந்து நான் மீண்டு வந்த போது இழந்தவர்கள் எல்லாம் மீண்டும் புகழ தொடங்கினார்கள் .

நட்பு என்பது ஆபத்தில் உதவ வேண்டும் ஆனால் உனக்கு தேவை பட்ட போது என்னால் உதவ முடியவில்லை . உனக்கு உன் அளவிற்கு பிரச்சனைகள் இருந்தது என்றால் எனக்கு என் அளவிற்கு பிரச்சனைகள் இருந்தது அது தான் உண்மை அது உனக்கும் தெரியும் . எதிர்பார்கிறேன் மீண்டும் உன்னை சந்திப்பேன் . மீண்டும் நம் நட்பு தொடரட்டும் . இன்னும் சில நாட்களில் பிறந்த நாள் காணும் நீ உனக்கு ஏற்பட்ட எல்லா சிக்கல்கல்களிளிருந்தும் மீண்டும் கரம் பிடித்த காதலியையும் உன் அழகிய குழந்தையுடனும் உன் வாழ்வு இனிதாய் அமைய மன பூர்வமாய் வாழ்த்துகிறேன் . 

பெப்ரவரி 14  பிறந்த நாள் காணும் உயிர் நண்பன் ஜெனில்க்கு என் பிறந்த நாள் கடிதம் .


Read More

Send your Status to your Facebook