Monday

பேச்சு வார்த்தை தொடருமாம் ...அட சீ ...வெட்கம் கெட்டவர்களே

காங்கிரஸ் திமுக உறவு முறிந்து போனது என ஜால்ரா மணி ,தொல் திருமா எல்லோரும் சேர்ந்து கூவி கொண்டிருக்கையில் பேச்சுவார்த்தை இன்னும் தொடரும்னு தயாநிதி மாறன் தெருவித்திருக்கிறார்.  
சுயமரியாதை என்ன விலை என கேட்கும் வீரமணி திமுக இனி இதற்கு மேல் சுயமரியாதை இழக்க கூடாது என அறிக்கை விட , திமுக தலைவர் உயர்நிலை கூட்டத்தை கூட்டி திமுக மந்திரிகள் ராஜினமா செய்வார்கள் என சொல்ல ரண்டு நாளா இவங்க நாடகத்திற்கு கிளைமாக்ஸ் எப்ப வரும் எப்பப வரும்னு மக்கள் எதிர் பார்த்து கொண்டிருந்தார்கள் . 

ராஜினமா செய்யணும்னு முடிவெடுத்தால் அனற்றைக்கே கடிதம் அனுப்பியிருக்கலாம் தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சியில் கடிதம் கிடைக்க நேரமாகாது . முக்கியமான பிரச்சனைகள் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்ல பட்டாலும் . ஈழ தமிழர்கள் சிங்கள படைகளால் கொள்ளப்பட்டாலும் கடிதம் எழுதும் கருணாநிதி மந்திரிகள் ராஜினமா செய்யும் போதும் கடிதம் அனுப்பியிருக்கலாம் . அல்லது அன்றைக்கே விமானம் மூலம் சென்று ராஜினமா கடிதம் கொடுத்திருக்கலாம் . அதையெல்லாம் விட்டு திங்கள் ராஜினமா கடிதம் கொடுக்க படும் என அறிவித்தார்கள் .  சரி ஓகே அப்படி ராஜினமா கடிதம் கொடுக்க போனா கொடுத்து விட்டு வர வேண்டியது தானே . அதை விட்டு விட்டு அவங்க கிட்ட போய் கெஞ்சி இருக்காங்க . இப்போ ஒரு வழியா பேச்சுவார்த்தை நாளை தொடரும் என அறிவித்தும் விட்டார்கள் . அப்போ ராஜினமா கிடையாது . 

ஆட்சிய விட்டு பிடிச்சி தள்ளினாலே அதில ஏதாவது கேப் கிடைக்குமான்னு பார்க்கிற இந்த பதவி வெறியர்களாவது ராஜினமா செய்யவது என்பது நடக்காத காரியம் .  காங்கிரஸ் கட்சியை கருணாநிதி எவ்வளவு கேவல படுத்த முடியுமோ அவ்வளவு கேவல படுத்தியாச்சு. கருணாநிதியை காங்கிரஸ் கட்சியால் எவ்வளவு கேவல படுத்த முடியுமோ அவ்வளவு கேவல படுத்தியாச்சு . இதுக்கு மேல இவங்க  துணிய உருவி விட்டு அம்மணமா நடக்க விடுறதுக்கு எதுவும் இல்ல . இப்பவும் ஏதாவது வாய்ப்பு உண்டானு தான் பார்கிறாங்க. இப்படி ஒரு அதிசய பிறவிகளை தமிழர்கள் எங்கேயும் காண முடியாது . இவன் ரெம்ப நல்லவன்ட எவ்வளவு அடிச்சாலும் தான்கிகிறான் என்ற விடிவேலுவின் சினிமா வசனம் தான் நினைவிற்கு வருகிறது . 


இவர்களால் பதவி இல்லாமல் ஒரு நாள் இல்லி ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது . இவர்கள் செய்த கொடுமைகள் ஏராளம் ஒவ்வெரு கொடுமைகளும் இவர்களை காவு வாங்கும் .     கனிமொழிக்கு மட்டுமல்லாது தயாளு அம்மாவுக்கு சேர்த்து ஏற்கனவே ஜெயிலில் இடம் புக் பண்ணி விட்டதாக செய்திகள் வருகின்றன .   அப்படியிருக்கும் போது எப்படி இவர்களால் ராஜினமா செய்ய முடியும் ......? ஏற்கனவே ஈழ தமிழர்கள் கொல்லப்படும் போது எம்பிக்கள் ராஜினமா செய்வார்கள் என அறிவித்த பின்னர் அனைத்து எம்பிக்களும் கருணாநிதியிடம் ராஜினமா கொடுத்து நாடகமாடியது  ஊரறிந்த கதை ......^^^^^^^^^

சரி அத விடுவோம் இந்த ஜால்ரா மணி ஸாரி வீரமணி திருமாவளவன் எல்லாம் என்ன அறிக்கை எழுதி வச்சிருக்காங்களோ ? ............ ஏதாவது வச்சிருப்பாங்க இவனுங்களுக்கும் வெட்கம், மானம், சூடு ,சொரணை இதில எதுவும் இல்லையே ...........  பாவம் திமுக தொணடர்கள்

20 கருத்துக்கள்:

vaiko doss said...

thalaivaa vaikko paththiyum konjam eluthi irukkalaamae

Suresh Kumar said...

வெட்கம் கேட்டவர்களை பற்றி எழுதும் போது வெட்கம் கேட்டவர்களை பற்றி மட்டும் தான் எழுத வேண்டும் .........

Prakash said...

Pls write about..Jaya's Black Money with Hasen Ali

http://www.mid-day.com/news/2011/mar/040311-Hasan-Ali-Khan-Woman-Politician.htm

வின்னர் said...

இவங்களுக்கு எப்ப தான் மானம் இருந்திருக்கு. இரண்டே இரண்டு முறை டில்லிக்கு சென்றிருக்கிறார் கலைஞர் ஒரு முறை மகனுக்கும் , மருமகனுக்கும் மந்திரி பதவிக்காக இன்னொரு முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு ............ மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் தமிழகம் சீரழியும் அதில் மாற்று கருத்து இல்லை

Suresh Kumar said...

Prakash said...

Pls write about..Jaya's Black Money with Hasen Ali

http://www.mid-day.com/news/2011/mar/040311-Hasan-Ali-Khan-Woman-Politician.htm
/////////////////

கட்டாயம் அதை பற்றியும் எழுதலாம் முதலில் இதை பற்றிய கருத்தை சொல்லுங்கள் .

Anonymous said...

நடப்பது அரசியல். தனிமனித ஒழுக்கம் பற்றிய ஆராய்ச்சியல்ல.

அரசியலில் எதுவும் நிரந்தரமல்ல.

அரசியலைஅ அரசியலாகத்தான் பார்க்கவேண்டும்.

Anonymous said...

நீங்களும் மார்பகத்தை நிமித்திக்காட்டும் பெண்களின் படங்கள் போட்டுத்தானே அழைக்கிறீரகள் /

ஆனால் உங்கள் பதிவில் எழுத்ப்படும் விடயத்திற்குத்தானே வருகிறார்கள் /

அவர்கள் உங்கள் பதிவைத்தானே பார்க்கிறார்கள்.

இதே...இதே..

Suresh Kumar said...

Anonymous said...

நடப்பது அரசியல். தனிமனித ஒழுக்கம் பற்றிய ஆராய்ச்சியல்ல.

அரசியலில் எதுவும் நிரந்தரமல்ல.

அரசியலைஅ அரசியலாகத்தான் பார்க்கவேண்டும் ///////////////////////

அய்யா பெயரிலி அவர்களே இது தனி மனித ஒழுக்கம் பற்றிய பதிவு அல்ல . அறிஞர் அண்ணா துவங்கிய திமுக இன்று காங்கிரஸ் கட்சியினரிடம் சுயமரியாதை இழந்து நிற்கிறது அதை பற்றியது . இந்த வெட்கம் கெட்ட செயலால் திமுகவிற்கு மட்டுமல்ல ஓட்டு மொத்த தமிழகத்திற்கே கேவலம் என்பது புரிகிறதா ? எப்போதோ எடுக்க வேண்டிய முடிவை தேவையற்ற நேரத்தில் எடுத்தது மானக்கேடு . அப்படி முடிவெடுத்த பின்னரும் முடிவிலிருந்து பின்வாங்குவது என்பது வெட்கம் கெட்ட செயல் இல்லையா ?

யாரை ஏமாற்ற இந்த நாடகம் ?

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம் ராசாதான் பாவம்..

Anonymous said...

திமுக தனித்து நின்றாலும் வெற்றிபெறும் காங்கிரஸ் உடன் நின்றாலும் வெற்றி பெறும் . திமுகவிற்கு காங்கிரஸ் தேவையில்லை காங்கிரஸ் கட்சிக்கு திமுக தேவை ...... எங்க வழிக்கு காங்கிரஸ் இறங்கி வந்தால் நாங்கள் சேர்த்து கொள்வோம்

Unmai said...

அரசியலில் யார் தான் நாடகமாடவில்லை ....................................

கந்தசாமி. said...

"அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா" என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான் மக்கள் தலை விதி

tamilbirdszz said...

கருணாநிதியின் அரசியலில இது சாதாரணமப்பா
http://tamilbirdszz-naalikai.blogspot.com/2011/02/blog-post_13.html

ராஜ நடராஜன் said...

முதல் படத்துக்கு மோனையா ஒரு பாட்டு:)

http://pazhankanji.blogspot.com/2011/02/blog-post_06.html

Anonymous said...

கருணாநிதிக்கு நடிப்பு சொல்லித்தரணுமா என்ன ? மானங்கெட்டபய. ஒரு நாள் உண்ணவிரதமிருந்து இலங்கைல போர நிறுத்திட்டு யூஸ் குடிச்சத மறக்கவா முடியும்? எத்தின நாடகமாடினார். இப்போ காங்கிரஸ விட்டு விலகின கனிமொழி உள்ளார போவார் தயாளு அம்மாளும் போகலாம். காங்கிரசுக்கு திமுக தேவை திமுக வுக்கும் காங்கிரஸ் தேவை இப்போதைக்கு நூல் விட்டுப்பாக்கிறாங்க.

அம்மா ஆட்சிக்கு வரணும் இந்த திருட்டுப்பயலுகள் சங்காத்தம் இத்தோட ஒழியணும்.

senthil said...

அவன் என் வீட்டில் இருப்பவங்களை கேவலமா பேசுவான். நான் அவன் குடும்பத்தை மஹா கேவலமா பேசுவேன் . இதல்லாம் ஒரு தமாசு .

முகமூடி said...

ரொம்ப மோசம் இல்லைங்களா?

இனிமேல் இவர் தினமும் தமிழ், தமிழர் சுயமரியாதை, தமிழ்நாடு, தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் பேசுவோர் என்று புது புது வார்த்தை பிரயோகம் செய்து ஜல்லியடி செய்வார் காண தவறாதீர்கள்...

சூடான அரசியல் செய்திகளுக்கு தினமும் இருமுறை புதிய செய்திகளுடன் ஒரு வலை பூ….

http://mugamuddi.blogspot.com

bandhu said...

வீரமணி, திருமா இருவரும் நாளை தலைவரின் ராஜதந்திரம் பற்றி பெருமயடித்துக்கொள்வார்கள்! வெட்கம் கெட்டவர்கள்!

Suresh Kumar said...

முகமூடி said...

ரொம்ப மோசம் இல்லைங்களா?

இனிமேல் இவர் தினமும் தமிழ், தமிழர் சுயமரியாதை, தமிழ்நாடு, தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் பேசுவோர் என்று புது புது வார்த்தை பிரயோகம் செய்து ஜல்லியடி செய்வார் காண தவறாதீர்கள்...

சூடான அரசியல் செய்திகளுக்கு தினமும் இருமுறை புதிய செய்திகளுடன் ஒரு வலை பூ….

http://mugamuddi.blogspot.com
/////////////////

உங்கள் இணைப்பு வேலை செய்யவில்லை. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

Suresh Kumar said...

bandhu said...

வீரமணி, திருமா இருவரும் நாளை தலைவரின் ராஜதந்திரம் பற்றி பெருமயடித்துக்கொள்வார்கள்! வெட்கம் கெட்டவர்கள்!
///////////////

இவர்களுக்கு எப்ப தான் வெட்கம் இருந்திருக்கிறது கெடுவதற்கு . நன்றி

Post a Comment

Send your Status to your Facebook