• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label படைப்பு. Show all posts
Showing posts with label படைப்பு. Show all posts

Monday

காதலிக்கும் முன்னும் காதலித்த பின்னும்

வாழ்கையில் காதல் ஒரு இனிமையானது சோகங்களும் சுமைகளும் சுகமாவது காதலில் மட்டுமாகத்தான் இருக்க முடியும் . ஒரு வயதை தாண்டி விட்டால் தானாகவே காதல் ஏற்பட்டு விடுகிறது மனிதர்களுக்கு . எந்த ஒரு ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காதலித்திருக்க வேண்டும் அல்லது காதலிக்கப்பட்டிருக்க வேண்டும் .

காதல் தோல்வியில் முடிந்தவர்களும் உண்டு வெற்றியில் முடிந்தவர்களும் உண்டு . காதல் குடும்ப உறவுக்கு வந்த பின்னர் தோல்வியடைந்தவர்களும் உண்டு .பொதுவாகவே காதல் வெற்றியில் செல்கிறதா இல்லை தோல்வியில் செல்கிறதா என்பது ஒரு சாராரை பொறுத்ததில்லை இரு சாராரையும் பொறுத்தது . காதலிக்கும் முன் இவர்களின் மனநிலை எப்படி இருக்கும் காதலித்த பின் எப்படி இருக்கும் என்று பார்த்தல் மிகவும் சுவராஸ்யமாக இருக்கும் .

காதலிக்கும் முன் ஆண் பெண்ணை துரத்தி துரத்தி காதலிப்பார் . ஆனால் பெண்ணோ காதலித்த பின்னர் அந்த ஆணை துரத்தி துரத்தி காதலிப்பார் . ஆணின் மனநிலை எப்போதுமே அந்த பெண்ணை காதலிக்க வேண்டும் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருப்பார் . ஆனால் பெண்ணிற்கோ காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தாலும் வெளியில் காட்டாமல் ஆணை ஓட விட்டு கொண்டேயிருப்பார் . பெண்ணை காதலிக்க வைக்கும் வரை எவ்வளவு ஓட விட்டாலும் சலிக்கவே செய்யாது.

அந்த பெண் காதலை சொன்ன பின்னர் தான் பெண் அந்த ஆணை அதிகமாக காதலிக்க தொடங்குகிறார் . அதை விட முன்னர் எதையெல்லாம் தூரத்தில் இருந்த போது ரசித்தாளோ  அதையெல்லாம் பக்கத்தில் இருந்து ரசிக்க நினைப்பாள். தன்  காதலன் காதலிக்க துரத்திய போது எப்படி இருந்தாரோ அதே போல் இருக்க வேண்டும் என நினைப்பாள் . காதலனோ காதலியிடம் முன்னர் ரசித்த கோபம் குறும்புகளை பார்த்தல் கோபம் வரும் .

காதலிக்க முன்னர் இருந்தது காதலித்த பின்னர் தலைகீழாக மாறிவிடும் . இந்த நேரத்தை அவர்கள் தவறவிடும் போது காதல் தோல்வியில் கூட முடியும் . இருவருக்குமே அவர்கள் பக்கம் நியாயமாக இருக்கும் . பெண்ணுக்கு அவன் மாறிவிட்டான் அவன் என்னை இப்போது காதலிக்கவில்லை என எண்ண தோன்றும் . ஆணுக்கோ இப்பவும் அவள் நான் சொல்வதை கேட்க மாட்டேங்கிறா பழைய போலவே இருக்கிறாள் என எண்ண தோன்றும் . இந்த நேரத்தில் தான் காதலர்கள் விட்டு கொடுத்து யதார்த்தத்தை புரிந்து செயல் பட்டால் தான் காதல் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்லும் .
Read More

Send your Status to your Facebook