ஒரு படத்தில விஜயும் நண்பனுமாக சேர்ந்து தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க செல்லும் இடத்தில் ஆட்டை பலி கொடுக்க தயாராகி கொண்டிருப்பார்கள் அவங்க கிட்ட விஜய் ஆட்டை பலி கொடுப்பது தவறு என்பது போல பேசுவார். உடனே அந்த ஊரு நாட்டமை சொல்வார் நீங்க இவ்வளவு சொல்றீங்க அதனால நாங்க ஆட்டை பலி கொடுக்க விரும்பல அப்படின்னு சொல்லி முடித்ததும் ஒரு குண்டை தூக்கி போடுவார். ஒரு தவறும் செய்யாத விஜயையும் நண்பனையும் பலி கொடுக்க ஏற்கனவே தயாராக இருந்த கம்பின் மீது கட்டுவார்கள். ( அதற்காக இந்த ஆடு ஒரு தவறும் செய்யவில்லை என அவசர பட்டு முடிவெடுத்திடாதீங்க) அதில ஒரு நியாயம் என்னவென்றால் தலை ஆட்டினால் மட்டும் தான் வெட்டுவார்கள். அப்போ இவங்க ரெண்டு பேரும் தலையே ஆட்ட கூடாதுன்னு முடிவெடுப்பாங்க. எவ்வளவோ முயற்சித்தும் தலை ஆட்ட வைக்க முடியாது. வெட்ட அரிவாள் வச்சிருக்கிறவர் ஏதோ சொல்ல இவரும் ஆமா என தலையாட்ட ஆத்தா அனுமதி தந்துட்டானு சொல்லி வெட்ட போவாங்க ................. இது சினிமா
அதே போல இப்போ இங்க ஒரு பலி ஆடு மாட்டியிருக்கு. இந்த ஆடு கொஞ்சம் வித்தியாசம். இது பலி கொடுக்க வேண்டிய ஆடு என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் இப்போது யாருக்காகவோ பலி ஆடாக்கியிருக்கிரார்கள். அது தாங்க ஸ்பெக்ட்ரம் புகழ் ராஜா இன்று சிபிஐ அதிகாரிகளால் ஊழல் செய்ததற்காக கைது செய்ய பட்டிருக்கிறார். இந்த ஊழல் இன்று நேற்று நடந்தது அல்ல மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே நடந்து மீடியாக்களால் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசபட்டது. கடந்த ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் நடந்த இந்த ஊழல் மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியே ஆட்சிக்கு வந்ததால் மூடி விடலாம் என நினைத்து அதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்தது.
இந்த ஊழலை மறைப்பதற்காகவே ஒரு ஊழல் அதிகாரியை ஊழல் ஒழிப்பு துறைக்கே தலைவராக்கியதும் இதே சோனியாவின் வழிகாட்டலில் இருக்கும் காங்கிரஸ் அரசு தான் . இப்படி பல வழிகளில் மறைக்க முயற்சித்த வேளையில் மத்திய தணிக்கை குழு இந்த ஊழலால் ஒரு லட்சத்தி எழுபத்தாறு கோடி ருபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என அறிக்கை வெளியிட்டது. இதை அடுத்து எதிர் கட்சிகள் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும், ராஜா பதவி விலக வேண்டும் , ராஜா கைது செய்ய பட வேண்டும் , இந்த ஊழலில் யார் யாரெல்லாம் பங்கு வகித்திருக்கிரார்களோ அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாடாளுமன்ற கூட்ட தொடர் முழுவதையும் நடை பெறாமல் செய்தன. இருந்தும் காங்கிரஸ் கட்சி அதற்கு பதிலைக்க்வோ நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு ஒத்துழைக்கவோ செய்ய வில்லை . மாறாக மத்திய அரசின் எடுபிடியான சிபிஐ மூலம் படம் காட்டியது.
இந்த நிலையில் நீரா ராடியாவிடம் தமிழக அரசியல் வாதிகள் குறிப்பாக கனி மொழி பேசிய உரையாடல் வெளியானது. அந்த உரையாடல்கள் மூலம் ராஜா மட்டும் குற்றவாளி அல்ல என்பது உறுதியாகிறது. திமுகவை பொறுத்தவரை கருணாநிதியின் மனைவியின் பிள்ளைகளுக்கு ஏற்கனவே பல இடங்களில் கொள்ளையடிக்க வாய்ப்பு கொடுத்து இன்று அவர்கள் மிக பெரிய கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். ஆனால் துணைவியின் பிள்ளைக்கு பல கோடிகள் இருந்தாலும் இவர்களை போல் இல்லாத காரணத்தால் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை கனிமொழிக்கு ஒதுக்கி கொடுத்தார் கருணாநிதி. அதற்கு எதுவாக ராஜாவை அந்த துறைக்கும் மந்திரி ஆக்கினார். ராஜாவின் மூலமாக கொள்ளை துவங்கியது. இதில் ராஜாவும் பல கொடிகளை சுருட்டி இருக்கிறார்.
இன்னும் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ராஜா ஒருவரால் இத்தனை கொடிகளை அடிக்க முடியாது என கருணாநிதி சொன்னது. அப்படி பார்க்கும் போது இந்த ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கும் மிக பெரிய பங்கு உண்டு. அதனால் தான் இந்த ஊழலை பல வழிகளில் காங்கிரஸ் கட்சி மறைக்க பார்த்தது. அதற்காக தான் விசாரணை நடக்கும் போதே கபில் சிபில் இதில் அரசுக்கு எந்த இழப்பும் வரவில்லை என அறிக்கை விட்டார். இப்போது கபில் சிபிலால் அமைக்க பட்ட விசாரணை கமிட்டியே ராஜா குற்றவாளி என சொல்லி விட்டது. இதற்கு மேல் விசாரிக்க எனக்கு அதிகாரம் இல்லை எனவும் சொல்லி விட்டது.
தலித் அரசியலை கொண்டு வந்து ராஜாவையும் தன்னையும் காப்பாற்றி கொள்ளலாம் என கருணாநிதி திட்டம் போட்டு பார்த்தார் அது நிறை வேற வில்லை. எதிர் கட்சிகளும் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன. சட்ட மன்ற தேர்தல் வரும் நிலையில் ராஜா ஏன் கைது செய்ய பட்டார் என சந்தேகம் எழுகிறது. ஊடகங்கள் இது தொகுதி பங்கீட்டுக்காக திமுகவை காங்கிரஸ் மிரட்டுவதாக இந்த கைது என ஊகங்கள் வெளியிடுகின்றன ஆனால் உண்மை அதுவல்ல. பட்ஜெட் கூட்ட தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. மீண்டும் எதிர்கட்சிகள் நாடாளுமன்ற விசாரணை குழு அமைக்க வேண்டும் என போராட தயாராகி கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு சம்மதிக்க வில்லை என்றால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரை முடக்கவும் தயாராக இருக்கின்றனர். அப்படி நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வந்தால் கருணாநிதி, சோனியா , கனிமொழி மன்மோகன் சிங் , கபில் சிபில் மற்றும் சிபிஐ முதல் அனைவரும் விசாரிக்க படுவார்கள் . அப்படி விசாரிக்கும் பட்சத்தில் இந்த ஊழலில் பங்கு கொண்ட மேற்சொன்ன அனைத்து தலைகளும் ஆட்டம் காணும். அப்படி ஒரு நிலை வரகூடாது என்பதற்காகவும் , எதிர்கட்சிகளை சமாதன படுத்துவதற்காகவும் ராஜா பலி ஆக்க பட்டிருக்கிறார். உண்மையை சொல்ல போனால் கருனாநிதிக்ககவும், கருணாநிதி குடும்பத்திற்காகவும், சோனியாவுக்ககவும் ராஜா இரண்டு கட்சிகளாலும் பேசி ராஜா கைது செய்ய பட்டிருக்கிறார். இந்த நாடகம் நாடாளுமன்ற கூட்டம் முடியும் வரை தொடரும் பின்னர் ராஜா எந்த தவறும் செய்ய வில்லை என விடுவிக்க படலாம் இல்லை ராஜா தான் குற்றவாளி என மீண்டும் ஒரு முறை பலி ஆடு ஆக்கி ஊழலை மறைத்து விடலாம்.
12 கருத்துக்கள்:
எல்லாமே நாடகம்தான் போல.....
இவர்கள் எல்லோருமே மிக பெரிய நாடக நாடிகர்கள். இவர்கள் ஏமாற்ற நினைப்பது நூறு கோடி மக்களையும் எதிர் கட்சிகளையும். பாப்போம் எதிர் கட்சிகள் ஏமாறுகிறார்களா என்பதை
ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைப்பதற்கான கபட நாடகம் தான் இந்த கைது நடவடிக்கை .... கைது செய்யப்பட்ட எந்த அரசியல் வாதியும் தண்டனை பெற்றதில்லை நம் திரு நாட்டில் ......
shibi said...
ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைப்பதற்கான கபட நாடகம் தான் இந்த கைது நடவடிக்கை .... கைது செய்யப்பட்ட எந்த அரசியல் வாதியும் தண்டனை பெற்றதில்லை நம் திரு நாட்டில் //////////////////
உண்மை தான் சிபி இந்த நாடகம் முழு பூசணிக்காவை சோற்றில் மறைக்க கூடிய நாடகம். கைது செய்ய பட வேண்டியவர்கள் ஊழலில் முக்கிய பங்கு வைத்தவர்கள் அனைவரும் வெளியில் தொகுதி பங்கீடு குறித்து பேசும் போது ராஜா மட்டும் ஏன் கைது செய்ய பட்டார்?
அப்படி என்றால் ராசா வை கட்சியிலிருந்து நீக்க வேண்டியது தானே ........ இன்னைக்கு திமுக, காங்கிரஸ் இரண்டு பேரும் ராசா கையில மூணாவதா நம்ம கனி வேற .. போற நிலைமையில் ராசாவின் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் என தோன்றுகிறது
shibi said...
அப்படி என்றால் ராசா வை கட்சியிலிருந்து நீக்க வேண்டியது தானே ........ இன்னைக்கு திமுக, காங்கிரஸ் இரண்டு பேரும் ராசா கையில மூணாவதா நம்ம கனி வேற .. போற நிலைமையில் ராசாவின் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் என தோன்றுகிறது
////////////////
அந்த நாடகத்தை கூட நடத்த வாய்ப்பு இருக்கிறது. இது ஒன்றும் திமுகவிற்கு புதிது அல்ல ஏற்கனவே என்.கே.பி.கே ராஜாவை கட்சியிலிருந்து நீக்கி பின்னர் சேர்த்து கொண்டார்கள்.
இது ஆரிய திராவிட போர்
தப்பு செய்திருந்தால் ராஜா கட்சியிலிருந்து நீக்க படுவார். அதற்காக ஓட்டு மொத்த திமுகவையும் குற்றம் சொல்ல முடியாது
தி மு க ராஜாவை கை கழுவ வாய்ப்புகள் அதிகம். இதற்க்கு மேலும் ராஜாவை பிடித்து தொங்கிக்கொண்டிருந்தால் சேதாரம் அதிகம் என்று தி மு க விற்கு தெரியாதா?
//தலித் அரசியலை கொண்டு வந்து ராஜாவையும் தன்னையும் காப்பாற்றி கொள்ளலாம் என கருணாநிதி திட்டம் போட்டு பார்த்தார்//
கழக குண்டர்கள் இன்னும் திருந்தவில்லை.
ஒரு பிரபல அல்லக்கை பதிவர் கூட ரொம்ப பீபீபீல்ல் பண்ணி பதிவு போட்டார். அந்த ஜென்மங்கள் இப்ப என்ன சொல்லும்.
யார் ஆட்சிக்கு வருகிறார்களோ, இல்லையோ தி.மு.க மட்டும் வரவே கூடாது
bandhu said...
தி மு க ராஜாவை கை கழுவ வாய்ப்புகள் அதிகம். இதற்க்கு மேலும் ராஜாவை பிடித்து தொங்கிக்கொண்டிருந்தால் சேதாரம் அதிகம் என்று தி மு க விற்கு தெரியாதா?
////////////////////
அது தான் திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி விட்டார்களே . அந்த தீர்மானத்தில சரியா சொல்லி விட்டார்கள் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு எதிர் கட்சிகள் கோர கூடாது என்பதற்காக தான் இந்த கைது என்று .
Post a Comment