Saturday

பேயும் நானும்

நடு இரவு வேளை ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. ஆங்காங்கே கடைகளில் வெளியே தொங்கவிடப்பட்ட சீரோ வால்ட் பலப் வெளிச்சம். தெரு விளக்குகள் வெளிச்சம் ஆங்காங்கே கொஞ்சமாக . நகரின் மைய பகுதியாக இருந்தாலும் சாலைகளில்  எந்தவொரு அசைவுகளும் இல்லை .    

நடுஇரவு தாண்டி விட்டது வீட்டிற்கும் செல்ல வேண்டும். காலை ஐந்து மணிக்கு மேல் தான் ஊருக்கு செல்லும் பஸ் வரும் அதுவரை என்ன செய்வது என்று நினைத்து கொண்டே நானும் இன்னும் இரண்டு நண்பர்களாக பேருந்து நிலையம் நோக்கி நடந்தோம்.

மேல்நிலை கல்வி கற்று கொண்டிருந்த நேரம். நாகர் கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் ஆண்டு தோறும் இதோ உங்கள் ராஜா என்று இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றி நாடகம் நடத்தப்படும் . நாங்கள் மூவரும் அதில் நாடக நடிகர்கள். நாடகம் ஒவ்வெரு ஆண்டும் இயேசு சிலுவையில் அறையப்பட்ட அந்த வெள்ளி கிழமை முதல் ஈஸ்டர் பண்டிகை அன்று நிறைவு பெரும் . ஒரு மாதத்திற்கு முன்பே அதற்கான பயிற்சிகள் நடைபெறும் . இதே போல் ஒரு நாள் அந்த பயிற்சி முடிய 12  மணியாகிவிட்டது.    அங்கே தூங்குவதற்கு வசதி செய்ய பட்டது . இருந்தாலும் நாங்கள் தூங்காமல் பஸ் நிலையம் சென்று விடலாம் என நினைத்து நடந்தோம். 

நடக்கும் போதே பேசிக்கொண்டே சென்றோம் . அப்போது பேய் பற்றிய கதைகள் பேசினோம் . ராத்திரி பன்னிரண்டு மணிக்கு முத்து ஆத்தங்கரை வழியாக நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் . தெரு விளக்குகள் எதுவும் இல்லை . நிலா வெளிச்சம் ஓரளவிற்கு இருந்தது . திடீரென்று சிறுநீர் கழிக்க ஆத்தங்கரை ஓரமாக சென்றிருக்கிறார். அவர் சிறுநீர் கழித்து கொண்டிருந்த போது பக்கத்தில் இன்னொருவர் சிறுநீர் கழித்து கொண்டிருக்கிறார். கொஞ்சம் திரும்பி பார்க்கும் போது யாரோ ஒருவர் நிற்பது போல் தெரிகிறது . நாம் நடந்து வரும் போது முன்னாடியோ பின்னாடியோ யாரும் வந்தது போல் இல்லையே என மனசுக்குள் நினைத்து மீண்டும் திரும்பி பார்க்கும் போது பக்கத்தில் யாரும் இல்லை . 


பாதியில் சிறுநீர் கழித்து விட்டு வீட்டை நோக்கி ஓடியிருக்கிறார் . ஓடி வந்த வழியில் அந்த மனிதர் மீண்டும் முத்துவின் முன் தோன்றி முத்துவை தூக்கி ஆற்றிலே வீசியிருக்கிறார். இந்த கதையை சொல்லி முடிந்ததும் மனதிற்குள் ஏதோ ஒரு பதட்டம் . பஸ் நிலையமும் வந்து விட்டது . 

 மனதில் முத்து பற்றிய கதை ஒரு புறம் ஓடி கொண்டிருக்க பஸ் நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது . நாங்கள் வந்ததோ டவுன்  பஸ் நிலையம் கடைகள் எதுவும் திறக்க படவில்லை. எங்களை தவிர வேறு யாரும் இல்லை .  நான் பஸ்நிலையத்தில் இருக்கும் சிறுநீர் கழிக்கும் இடத்திற்கு சிறு நீர் கழிக்க சென்றேன். பக்கத்தில் இன்னொருவர் சிறு நீர் கழித்து கொண்டிருந்தார் . சிறுநீர் கழிக்க தயாராகி கொண்டிருந்த போது அவர் என்னிடம் ஏதோ கேட்டார் . என்னுடைய உடல் முழுவதும் வியர்த்து. அவர் என்ன கேட்டார் என்பது எனக்கு சரியாக கேட்கவில்லை ( கேட்க மனம் இடம் கொடுக்கவில்லை ) அப்படியே மெதுவாக வியர்த்த உடம்போடு சிறுநீர் கழிக்காமலே வெளியே வந்து விட்டேன் . 

 நண்பர்கள் பக்கத்தில் சென்ற போது முகத்தை துடைத்து கொண்டு அங்கே யாரோ நிற்பது போல் இருக்கிறது யார் என்று பாப்போம் என அவர்களையும் அழைத்து கொண்டு மீண்டும் சென்றேன் . அந்த நபர் வெளியே வந்து மதுரைக்கு பஸ் வருமா என எங்களிடம் கேட்டார் . அந்த கணம் பயம் நீங்கி அது இந்த பஸ் நிலையத்தில் வராது என்று அவருக்கு செல்ல வேண்டிய பாதையை காட்டி கொடுத்தோம் . 

2 கருத்துக்கள்:

MANO நாஞ்சில் மனோ said...

அடர் கருப்பா இருக்கு மக்கா உங்க ஸ்கிரீன். படிக்க முடியல கொஞ்சம் செக் பண்ணுங்களேன்...

Suresh Kumar said...

MANO நாஞ்சில் மனோ said...

அடர் கருப்பா இருக்கு மக்கா உங்க ஸ்கிரீன். படிக்க முடியல கொஞ்சம் செக் பண்ணுங்களேன்...
///////////////

பேய் கதைனா ஸ்க்ரீன் கறுப்பா தான் இருக்கும் மக்கா

Post a Comment

Send your Status to your Facebook