• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label பொய். Show all posts
Showing posts with label பொய். Show all posts

Wednesday

திமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் கூடவேயில்லை நம்புங்கப்பு

ஒரே பொய்யை பலமுறை சொல்லி அதையே சட்டமன்ற அவை புத்தகத்திலும் பதிய வைப்பதில் திமுக மந்திரிகள்  யாருமே சளைத்தவர்கள் இல்லை . இன்று நடந்த போக்குவரத்து மானிய துறை மீதான விவாதத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் கே . என் . நேரு மீண்டும் மீண்டும் சத்திய பிரமாணம் எடுத்து கொள்வது போல் பேருந்து கட்டணத்தை உயர்த்த வில்லை என சொல்லுகிறார் .



சரி ஏதோ பணத்தை வாங்கி ஒட்டு போட்டோம் என்பதற்காக இந்த பொய்ய எல்லாம் சகிக்கணுமா அப்படீன்னு கொஞ்சமாவது மானம் ரோசம் உள்ளவர்களால் கேட்கிறார்கள்  . கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி வந்தவுடனே பேருந்து கட்டணத்தை உயர்த்த வில்லை இப்படியே சொல்லி சொல்லி ஏமாற்றி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது .

பேருந்திற்கு வண்ணம் பூசி மறைமுகமாக டிக்கெட் விலையை அதிக படியாக கூட்டியது திமுக அரசு . சிவப்பு வண்ணத்திற்கு 4 ருபாய் கூட்டினார்கள் என்றால் பச்சை வண்ணத்திற்கு 5 ருபாய் என பேருந்து கட்டணத்தை மறைமுகமாக ராக்கெட் வேகத்திற்கு உயர்த்தியது  . பல முறை எதிர் கட்சிகள் சொல்லி காட்டி போராட்டத்தை நடத்தினால் தவறான தகவல் பரப்புபவர்கள் மீது கடுமையான சட்டம் பாயும் எனவும் மிரட்டியது .  கேட்டால் நாங்கள் டிக்கெட் விலையை கூட்டவே  இல்லை என்பார்கள் .

கடந்த ஆட்சி கடைசி கட்டத்தில் நாகர் கோவிலிலிருந்து சென்னைக்கு 260 ருபாய்  மட்டுமே . ஆனால் இப்போது 450 ரூபாய்க்கு குறைந்த பேருந்து கிடையாது . அப்படியென்றால் எவ்வளவு ருபாய் கூடியிருக்கிறது என்பதை நீங்களே பார்த்து கொள்ளுங்கள் . இப்படி ஒவ்வெரு வழி தடங்களிலும் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள் . நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் விழித்து கொள்வார்களோ என பயந்து கூட்டிய கட்டணங்களை எந்த ஒரு முன்னறிவிப்பின்றி குறைத்தார்கள் . அப்போதும் இதே கே . என் . நேரு நாங்க டிக்கெட் கட்டணத்தை குறைக்கவில்லை என்றால்  . தேர்தல் கமிசன் தலைமை செயலாளரை கூப்பிட்டு கண்டித்த பின்னர் குறைத்த கட்டணத்தை ரத்து செய்தார்கள் .

இப்போது தேர்தல் முடிவடைந்து விட்டது இப்போ தேர்தல் கமிசன் தலையிட முடியாது உங்கள் விருப்பத்திற்கு கட்டணத்தை குறைக்கலாம் என்றால் மீண்டும் பொய் சொல்லுகிறார்கள் நாங்கள் கட்டணத்தை உயர்த்தவே இல்லை என்று நம்புக்கப்பு . 
Read More

Send your Status to your Facebook