அவரது பேச்சிலிருந்து
பஞ்சாபில், காலிஸ்தான் கோரிக்கை எழுந்தபோது, ஏஎஸ்எஸ்எப் மாணவர் அமைப்பு நடத்திய போராட்டமே டெல்லி ஏதேச்சதிகாரத்தை தட்டிக் கேட்டது. தமிழக மாணவர்களும் இதற்கு முன்வர வேண்டும்.
இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், டெல்லியில் தமிழகத்தின் தூதரகம் அமைய வேண்டிய நிலை ஏற்படும்.
பாகிஸ்தான் பிரிவினை குறித்து பேச்சு எழுந்த போது, கற்பனை என்று கூறிய நேரு, உண்மையாகவே பிரிந்தபின், வாழ்த்துச்செய்தி அனுப்பினார். இதுவும் கற்பனை அல்ல. டெல்லியில் தமிழக தூதரகம் அமைய நேரிடும். அப்போது, வாழ்த்து அனுப்ப வேண்டிய இடத்தில் நாங்கள் இருப்போம்.
இத்தாலியில், சர்வாதிகாரி முசோலினி இறந்து விட்டான். ஆனால், அவன் சேலை கட்டி சோனியா காந்தி ரூபத்தில் இந்தியா வந்துள்ளான். தன்னைப் பிடிக்காத, தனக்குப் பிடிக்காத மாமியார் இந்திரா காந்தியை கொன்ற சீக்கியர்களுக்கு அவர் பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை கொடுத்துள்ளார்.
கணவன் இறந்து விட்டதற்காக அவர் என்ன கைம்மை நோன்பா இருக்கிறார். கட்டாந்தரையில் படுக்கிறாரா... சுகபோகமாக ராணியாகத்தானே வலம் வருகிறார். மன்மோகன் சிங் வாயில்லாதவர். வெறும் குரங்கு. சோனியா தான் குரங்காட்டி. இந்தியாவின் உள்துறை அமைச்சராக சிதம்பரம் என்ற தமிழர் இருக்கிறார். அதனால் என்ன பயன்?.
நாங்கள் என்ன "ஸ்பெக்ட்ரம்' ஊழலில் பங்கு கேட்டோமா, சொத்தில் பங்கு கேட்டோமா, விருந்துக்கு அழைக்கச் சொன்னோமா, மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு அழைக்கச் சொன்னோமா, ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுக்கத்தானே சொன்னோம்.
வக்கீல்கள், மாணவர்கள் என இலங்கை தமிழர்களுக்கான போராட்டம் சீராக போய் கொண்டிருந்தது. அதை திசை திருப்ப வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தி, போலீசை கட்டவிழ்த்து விட்டு விட்டார்.
தமிழகத்தில் 12 மத்திய அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் தேவையில்லாமல் பிறந்தவர்கள். உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூத்தாண்டவர் கோவிலுக்கு போக வேண்டியவர். இவர்களின் கல்லறைக்கு கூட தமிழகத்தில் இடம் கொடுக்கக் கூடாது.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக திரைப்பட இயக்குனர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள் . அதேபோல் பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணியும் கைது செய்யப்பட்டார் . இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் .
சோனியா காந்தி என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா? கைது செய்வதால் மக்கள் மனதில் நீங்கள் ஏற்படுத்திய காயங்களை அகற்றிவிடமுடியுமா ? கைதுசெய்வதனால் நவீன உலகின் ஹிட்லர் . மகிந்தாவுடன் சேர்ந்து நீங்கள் நடத்தும் இனபடுகொலைகள் இல்லையென்று ஆகிவிடுமா? Tweet
5 கருத்துக்கள்:
சூழ்ச்சி வலையில் சிக்கி விட்டார் நாஞ்சில்! ஒரு விழிப்புணர்ச்சி ஐ உண்டாக்க வேண்டிய முக்கியமான ஒரு காலகட்டத்தில் , விட்டில் பூச்சியாய் சிறைக்கு போய் மாட்டிக் கொண்டாரே ! இன்றைய கால கட்டத்தில் சாமர்த்தியமாக பேச வேண்டியதும் அவசியமே !
என்ன தான் நடக்கப் போகுதோ?
பிளாகர் greatlover கூறியது...
சூழ்ச்சி வலையில் சிக்கி விட்டார் நாஞ்சில்! ஒரு விழிப்புணர்ச்சி ஐ உண்டாக்க வேண்டிய முக்கியமான ஒரு காலகட்டத்தில் , விட்டில் பூச்சியாய் சிறைக்கு போய் மாட்டிக் கொண்டாரே ! இன்றைய கால கட்டத்தில் சாமர்த்தியமாக பேச வேண்டியதும் அவசியமே !
நன்றி நண்பரே கருத்துக்கள் சொன்னதற்கு பொட சட்டத்திலே நீதிமன்றம் கருத்துரிமை வழங்கியிருக்கிறது . கலைஞருக்கு தெரியும் இந்த வழக்கு நிற்காது என்று . நாஞ்சில் சம்பத்திற்கு இது ஒன்றும் முதல் வழக்குமில்லை அவர் பல வழக்குகளை சந்தித்தவர் . இந்த கைதுகளின் மூலம் வாயை அடக்கலாம் என அரசு நினைத்திருக்கலாம் .
pukalini கூறியது...
என்ன தான் நடக்கப் போகுதோ?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தமிழினத்திற்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பது மட்டும் நிஜம் . இந்த துரோகத்தை மக்கள் மத்தியில் எடுத்து செல்ல பிரசார பீரங்கி நாஞ்சில் சம்பத்து தேவை . இதை கருதி விரைவில் பிணையிலாவது வெளியில் வர வாழ்த்துக்கள் s
Post a Comment